Jump to content

சித்தூர் இறால் ஃப்ரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13466484_1034679979912391_1098245420687913427919_1034679996579056_31699155384861

இந்த உணவு ஆந்திரா பகுதிகளான சித்தூர், நமது தமிழக எல்லையான காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் மிகவும் பிரசித்தம்.

சித்தூர் ஆந்திரா பகுதியாக இருந்தாலும் இங்கு தமிழ் மக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அவர்களிடம் நமது தமிழ் வாடையோடு பின்னியுள்ள ஆந்திர கலாசாரத்தை காணலாம்.

அதை நாம் இந்த உணவிலும் காணலாம்.

தேவையான பொருட்கள்

இறால் ஊற வைப்பு

இறால் 500 கிராம் ( 35 எண்)
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 தேக்கரண்டி 
உப்பு 1/2 தேக்கரண்டி 
எலுமிச்சைச் சாறு 2 தேக்கரண்டி

ஃப்ரை செய்ய 
வெங்காயம் 2 பெரியது 
பூண்டு 5 மிகவும் பொடியாக நறுக்கியது 
வெந்தய கீரை 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 3 தேக்கரண்டி 
மல்லித்தூள் 1 தேக்கரண்டி 
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு 
வெண்ணை 3 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி 
இஞ்சி-பூண்டு விழுது 1 தேக்கரண்டி 
உளுந்து பருப்பு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை சிறிது 
தேங்காய் துருவல் 1/4 கப்

செய்முறை

1. இறாலை சுத்தம் செய்து கொள்ளவும், அவற்றை அதன் ஓட்டை நீக்கி சதைபகுதியை சேகரித்து கொள்ள வேண்டும்.

2. இறாலில் உள்ள கருப்பு பகுதியை நீக்கி விட்டு அதனுள் உப்புத்தூளை பிரட்டி , நன்கு தண்ணீரில் அலசி நீரை வடித்து விட்டு இறாலை உளற வைக்கவும்.

3. இறாலில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, எலுமிச்சை சாறு ,இஞ்சி- பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு கலந்து ஊறவைக்கவும்.

4. இந்த பிரட்டலை 40 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

5. இப்பொழுது அந்த பிரட்டலை பாத்திரத்தில் இட்டு சூடு படுத்தவும். அந்த இறால் தண்ணீரை வெளியேற்றும் , அந்த தண்ணீரே போதுமானது இறாலை வேக வைப்பதற்கு.

6. அந்த தண்ணீர் முழுவதும் சுண்டும் வரை இறாலை வேக விடவும். இப்பொழுது இறால் வளைந்து காணப்படும்.

7. இப்பொழுது ஒரு வடைச்சட்டியை அடுப்பில் வைத்து வெண்ணை சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

8. பிறகென்ன நறுக்கிய வெங்காயத்தையும், பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும்சேர்த்து நன்கு வதக்கவும்.

9. பிறகு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் வெந்தய கீரையை சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு இறாலை சேர்க்கவும்.

10. பின்னர் அதில் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் , உஉப்புத்தூளையும் சேர்த்து நன்கு கிளறவும், பின்னர் தண்ணீரை தெளித்து நன்கு பிரட்டவும்.

11. கடைசியாக தேங்காய் துருவலை சேர்க்கவும் நன்கு கிளறவும், 5 நிமிடத்திற்கு வேக விடவும். பிறகு பரிமாறவும்.

 
FB
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.