Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக்கூறும் பொறிமுறையை தாமதிக்கும் இலங்கை அரசு!

Featured Replies

இலங்கை அரசு நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகின்றது.

பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையைத் தாமதிக்கின்றது. ஆனால், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றது. இவ்வாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் 70 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அறிக்யைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 17 மாதங்கள் கடந்துள்ளன.

ஆனாலும், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. இதில் எந்த முன்னேற்றமும் காணப்படாமை குறித்து எமது ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.

தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாசாரம் காரணமாக இலங்கையில் மீண்டும் மீண்டும் வன்முறைகள் இடம்பெறுகின்றன.

இக்கலாசாரத்துக்கு முடிவு காணப்படாமல், நிலைமாறுகால மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் வெற்றியளிப்பது கடினம். இலங்கை அரசு காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

பெருமளவானோர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு சுயாதீனமான நம்பகத்தன்மை மிக்க அமைப்பு அவசியம். அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.

எனினும், இந்த முயற்சிகளில் அரசு வெளிப்படைத் தன்மையைப் பேணவில்லை. பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் கலந்தாலோசிக்காமல் இந்த விடயங்களை முன்னெடுப்பது குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்.

இலங்கை அரசு நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் தவறான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றது. பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறையை தாமதிக்கின்றது.

ஆனால், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றது. பொறுப்புக்கூறுதல் மற்றும் இழப்பீடுகள் தொடர்பில் அர்த்தபுஷ்டியான உத்தரவாதங்கள் எதுவும் இல்லை.

இவ்வாறான நிலையில் இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபடுகின்றது. அரசு தான் வழங்கிய உறுதிமொழிகள் குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நீதிப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதன்மூலமே இலங்கை அரசு நிலைமாற்றுக்கால நீதிக்கான தனது முழுமையான அர்பணிப்பை வெளிப்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/108621

  • தொடங்கியவர்

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் குறித்து எனக்கும் பிரச்சினையுண்டு! ராஜித

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் குறித்து தமக்கும் பிரச்சினையுண்டு என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த அரசாங்கத்தை தோற்கடித்து புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தினால் இழைத்த தவறுகள் மீளவும் ஏற்படக் கூடாது என்னும் நோக்கிலேயே புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

விசேடமான ஓர் அரசாங்கமாக அமைய வேண்டுமென கருதப்பட்டது.எனினும் அரசாங்கம் மாறியுள்ள போதிலும் அரச இயந்திரத்தில் மாற்றம் ஏற்படாவிட்டால் புதிய அரசாங்கத்தில் பயனில்லை.

அரசாங்கத்தை நியமித்த சிவில் அமைப்புக்களின் நிலைப்பாட்டையே நானும் கொண்டுள்ளேன். அரசாங்கத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல இந்த அனைத்து தரப்பினரும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/108627

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.