Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த இறுமாப்பு அரசியல் தலைவர்களின் கதி அரசுக்கு பாடம்! - விக்னேஸ்வரன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த இறுமாப்பு அரசியல் தலைவர்களின் கதி அரசுக்கு பாடம்! - விக்னேஸ்வரன் 
[Thursday 2016-06-23 19:00]
தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனை நன்கு அறிய வேண்டும். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என்று பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும்என்று  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனை நன்கு அறிய வேண்டும். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என்று பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும்என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், தேசிய விதவைகள் பட்டயத் தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

"சலாவ ஆயுதக்கிடங்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு இடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு விரைந்து உதவிகளை நல்க வந்திருப்பது பாராட்டப்படக்கூடியது. இது அரசின் கடமையுமாகும். எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான உதவிகள் விரைந்து வழங்கப்படவேண்டும். ஆனால், வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சோப இலட்சம் மக்கள் உறவுகளை இழந்து, உடல் அங்கங்களை இழந்து, வீடுகளை இழந்து,வாசல்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, இன்னல்படுகின்றார்கள்.

அடிப்படைத் தேவையாகக் கருதப்படக்கூடிய உணவுத் தேவைக்கு கூட எந்தவொரு உதவியையும் அரசு வழங்காது தாமதித்து வருவதை நாம் ஏற்க முடியாது. மாறாக எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தான்தோன்றித் தனமாக இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனையும் அவர்கள் நன்குஅறிவார்கள்" என்றார்.http://www.seithy.com/breifNews.php?newsID=160118&category=TamilNews&language=tamil

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.