Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொத்த பணப்பரிசு 28.1 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பம்

Featured Replies

மொத்த பணப்பரிசு 28.1 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பம்
 

17589serena-williams-and-novak-djokovic.சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் தூய்­மையின் அடை­யா­ள­மாக விளங்­கு­வதும் வரு­டத்தின் மூன்­றா­வது மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் போட்­டி­யாக அமை­வ­து­மான விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டிகள் இன்று முதல் ஜூலை 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன.

 

விம்­பிள்டன் டென்னிஸ் வர­லாற்றில் இவ்வருடம் 130ஆவது அத்­தி­யா­ய­மாக நடை­பெறும் போட்­டி­களில் 28.1 மில்­லியன் யூரோக்கள் மொத்த பணப்­ ப­ரி­சாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

 

இவ் வருடம் முதல் தட­வை­யாக ஒற்­றை­ய­ருக்­கான சக்­கர இருக்கை டென்னிஸ் போட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

 

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க, பிரெஞ்சு பகி­ரங்க, ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் வீர, வீராங்­க­னைகள் பல வர்­ணங்­க­ளி­லான ஆடை­களை அணிந்து விளை­யாடி வரு­கின்­ற ­போ­திலும் விம்­பிள்­டனில் வெள்ளை ஆடைகள் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றது.

 

விம்­பிள்­டனில் ஒற்­றையர் மற்றும் இரட்­டையர் போட்­டிகள் சீமான்கள், சீமாட்­டி­க­ளுக்­கான போட்­டிகள் என கௌர­வ­மாக அழைக்­கப்­ப­டு­கின்­றது.
சீமான், சீமாட்­டி­க­ளுக்­கான இரட்­டையர் போட்­டிகள் மற்றும் கலப்பு இரட்­டையர் போட்­டி­களும் நடை­பெ­ற­வுள்­ளன.

 

இவற்­றை விட கனிஷ்ட பிரிவு (ஆண்கள், பெண்கள்), சக்­கர இருக்கை டென்னிஸ், இரட்­டை­ய­ருக்­கான அழைப்பு டென்னிஸ் ஆகிய போட்­டி­களும் நடை­பெ­ற­வுள்­ளன.

 

சீமான்கள் மற்றும் சீமாட்­டிகள் ஒற்­றையர் போட்­டி­களில் சம்­பி­ய­னாகும் இரு­வ­ருக்கும் தலா 2 மில்­லியன் யூரோக்­களும் இரண்டாம் இடத்தை பெறு­ப­வர்­க­ளுக்கு தலா ஒரு மில்­லியன் யூரோக்­களும் பணப் ­ப­ரி­சாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

 

இப் போட்­டி­களில் முதலாம் சுற்­றுடன் தோல்­வி­யு­று­ப­வர்­களும் வெறுங்­கை­யுடன் செல்­வ­தில்லை. அவர்­க­ளுக்கும் தலா 30,000 யூரோக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றது.

 

இவ்­வா­றாக ஒவ்­வொரு சுற்­றிலும் தோல்வி அடை­ப­வர்­க­ளுக்கும் அந்­தந்த சுற்­றுக்கு ஏற்ப பங்­கு­பற்­ற­லுக்­கான கட்­டணம் வழங்­கப்­படும்.

 

விம்­பிள்­டனில் பிர­தா­ன­மா­ன­தாக கரு­தப்­படும் சீமான்­க­ளுக்­கான (ஆண்கள்) ஒற்­றையர் பிரிவில் நடப்பு சம்­பி­யனும் 3 தட­வைகள் சம்­பி­ய­னு­மான நொவாக் ஜோகோவிச் (சேர்­பியா), ஏழு தட­வைகள் சம்­பி­ய­னான சம்­பியன் ரொஜர் ஃபெடரர் (சுவிட்­ஸர்­லாந்து), 2013இல் சம்­பி­ய­னான அண்டி மறே (பெரிய பிரித்­தா­னியா), ஸ்டன் வொரின்கா (சுவிட்­ஸர்­லாந்து), கெய் நிஷி­கோரி (ஜப்பான்) ஆகியோர் நிரல்­ப­டுத்­தலில் முதல் ஐந்து இடங்­களை வகிக்­கின்­றனர்.

 

முன்னாள் சம்­பியன் ரஃபாயல் நடால் (ஸ்பெய்ன்) உபாதை கார­ண­மாக இவ்வருடப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வில்லை.

 

சீமாட்­டி­க­ளுக்­கான ஒற்­றையர் பிரிவில் ஆறு தட­வைகள் சம்­பி­ய­னா­ன­வரும் நடப்பு சம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (ஐக்கிய அமெரிக்கா), கார்பின் முகுருஸா (ஸ்பெய்ன்), அக்னியெஸ்கா ரட்வான்ஸ்கா (போலந்து), ஏஞ்சலிக் கேர்பர் (ஜேர்மனி), சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகியோர் நிரல்படுத்தலில் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17589#sthash.H3xcZxcf.dpuf
  • தொடங்கியவர்
விம்பிள்டன் இரண்டாம் சுற்றில் முன்னணி வீர, வீராங்கனைகள்
2016-06-29 11:54:05

லண்டன், ஆல் இங்க்லண்ட் லோன் டென்னிஸ் அண்ட் குரொக்கெட் க்ளப் அரங்குகளில் நடைபெற்று வரும் 130 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆரம்ப சுற்றில் முன்னணி வீர, வீராங்கனைகள் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

1766523.jpg

கார்பின் முகுருஸா 

 


சீமான்களுக்கான முதலாம் சுற்று ஓற்றையர் போட்டிகளில் நடப்பு சம்பியன் நோவாக் ஜோகோவிச் (சேர்பியா), முன்னாள் சம்பியன் ரொஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து), கெய் நிஷிகோரி ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் வோர்டை எதிர்த்தாடிய நொவாக் ஜோகோவிச் 3 நேர் செட்களில் (6–0, 7–6, 6–4) வெற்றிபெற்றார். நான்காவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்திற்கு குறிவைத்து ஜோக்கோ விச் இவ் வருடம் பங்குபற்றுகின்றார்.

 

ஏழு தடவைகள் விம்பிள்டனின் சம்பியனான ரொஜர் ஃபெடரர் தனது போட்டியில் ஆர்ஜன்டீனாவின் கய்டோ பெல்லாவை 3 நேர் செட்களில் (7–6, 7–6, 6–3) வெற்றிகொண்டார். 

 

அவுஸ்திரேலியாவின் சாம் க்ரொத்தைமுதல் சுற்றில் சந்தித்த கெய் நிஷிகோரியும் 3 நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

 

சீமாட்டிகள் பிரிவு
சீமாட்டிகளுக்கான (பெண்கள்) முதலாம் சுற்றுப் போட் டிகளில் கார்பின் முகுருஸா (ஸ்பெய்ன்), ஏஞ்சலிக் கேர்பர் (ஜேர்மனி), சிமோனா ஹாலெப் (ருமேனியா), சமன்தா ஸ்டோசர் (அவுஸ்திரேலியா) ஆகிய பிரபல வீராங் கனைகள் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டனர்.
இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியிடம் முதலாம் சுற்றில் கடும் சவாலை எதிர்கொண்ட கார்பின் முகுருசா 2–1 என்ற நேர் செட்களில் (6–2, 5–7, 6–4) வெற்றிபெற்றார்.
பெரிய பிரித்தானியாவைச் சேர்ந்த லோரா ரொப் சனை முதல் சுற்றில் சந்தித்த ஏஞ்சலிக் கேர்பர் மிக இலகு வாக இரண்டு நேர் செட்களில் (6–2, 6–2) வெற்றி கொண்டார்.
சிமோனா ஹாலெப், சமந்தா ஸ்டோசர் ஆகியோர் தத் தமது போட்டிகளில் இரண்டு நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17665#sthash.vw9nsSs8.dpuf
  • தொடங்கியவர்
அண்டி மறே, செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றுகளில் வெற்றி
2016-06-30 10:46:53

17687653320-01-02.jpgலண்­டனில் நடை­பெற்­று­வரும் விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­களில் சீமான்­க­ளுக்­கான ஒற்­றையர் முதலாம் சுற்றில் பிரித்­தா­னி­யாவின் அண்டி மறே இல­கு­வாக வெற்­றி­பெற்ற அதே­வேளை சுவிட்­ஸர்­லாந்தின் ஸ்டான் வொரின்கா கடும் சவா­லுக்குப் பின்னர் வெற்­றி­யீட்­டினார்.

 

தனது சொந்த நாட்­ட­வ­ரான லியாம் ப்ரோடியை முதல் சுற்றில் சந்­தித்த அண்­டி மறே 6 – 2, 6 – 3, 6 – 4 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் 3 நேர் செட்­களில் வெற்­றி­பெற்றார். 

 

அமெ­ரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்­ஸிடம் முதல் சுற்றில் கடும் சவாலை எதிர்­கொண்ட ஸ்டான் வொரின்கா 3 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

 

முதல் செட்டில் 7 க்கு 6 எனவும் இரண்டாம் செட்டில் 6 – 1 எனவும் வெற்­றி­பெற்ற வொரின்கா 3ஆவது செட்டில் 6 க்கு 7 என தோல்வி அடைந்தார்.

 

எனினும் 4ஆவது செட்டில் திற­மையை வெளிப்­ப­டுத்­திய வொரின்கா 6 – 4 என  வெற்­றி­பெற்று இரண்டாம் சுற்­றுக்கு செல்­வதை உறுதி செய்­து­கொண்டார்.

 

17687653082-01-02.jpgசெரீனா  வில்லியம்ஸ் வெற்றி 
கனே­டிய வீராங்­கனை அம்ரா சடி­கொ­விக்கை சீமாட்­டி­க­ளுக்­கான முதல் சுற்று ஒற்­றையர் போட்­டியில் எதிர்­கொண்ட நடப்பு சம்­பியன் செரீனா வில்­லியம்ஸ் மிக இல­கு­வாக இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­பெற்று இரண்டாம் சுற்­றுக்குள் நுழைந்தார்.

 

செரீனா 6 – 2, 6 க்கு 4 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

 

டென்மார்க் வீராங்­கனை கரோலின் வொஸ்­னி­யாக்­கி­யு­ட­னான போட்­டியில் ரஷ்­யாவின் ஸ்வெட்­லானா குஸ்­நெட்­சோவா இரண்டு நேர் செட்­களில் (7 – 5, 6 – 4) வெற்­றி­பெற்றார்.

 

அமெ­ரிக்­காவின் கிறிஸ்­டினா மெக்ஹேல் அனு­ப­வ­சா­லி­யான ஸ்லோவேக்கியாவின் டெனியெலா ஹன்டுச்சோவாவை 2 நேர்  செட்களில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தார்.

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17687#sthash.ksPVdKmF.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்....!

  • தொடங்கியவர்
மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், ஃபெடரர்; இரண்­டா­வது சுற்றில் ரட்­வான்ஸ்கா
2016-07-01 11:49:53

லண்­டனின் நடை­பெற்­று­வரும் விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­களில் சீமான்கள் ஒற்­றையர் பிரிவில் நடப்பு சம்­பியன் நொவாக் ஜோகோவிச், முன்னாள் சம்­பியன் ரொஜர் ஃபெடரர் ஆகியோர் மூன்றாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளனர்.

 

17718Untitled-8.jpg

 

 

புதன்­கி­ழமை நடை­பெற்ற சீமான்கள் ஒற்­றையர் இரண்டாம் சுற்றுப் போட்­டியில் பிரான்ஸ் வீரர் ஏட்­ரியன் மன்­னா­ரி­னோவை சந்­தித்த ஜோகோவிச்         6 – 4, 6 – 3, 7 – 6 என்ற புள்­ளி­களைக் கொண்ட 3 நேர் செட்­களில் இல­கு­வாக வெற்­றி­கொண்டார்.

 

தகு­திகாண் சுற்றில் வெற்­றி­பெற்று பிர­தான சுற்­றுக்கு தகு­தி­பெற்­றி­ருந்த பிரித்­தா­னி­யாவின் மார்க்கஸ் வில்­லிஸை இரண்டாம் சுற்றில் எதிர்­கொண்ட ரொஜர் ஃபெடரர் சிர­ம­மின்றி 3 நேர் செட்­களில் (6 – 0, 6 – 3, 6 – 4) வெற்­றி­கொண்டு மூன்றாம் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்றார்.

 

இரண்­டா­வது சுற்றில் ரட்­வான்ஸ்கா

17718P-22-4.jpgசீமாட்­டி­க­ளுக்­கான ஒற்­றையர் முதலாம் சுற்று போட்­டிகள் தொடர்ந்தும் நடை­பெற்­ற­வண்­ண­மி­ருந்­தன.

 

நிரல்­ப­டுத்தல் வரி­சையில் மூன்றாம் இடத்­தி­லுள்ள போலந்தின் அக்­னி­யஸ்கா ரட்­வான்ஸ்கா புத­னன்று நடை­பெற்ற ஒற்­றையர் போட்­டியில் வெற்­றி­பெற்று இரண்டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்ளார். 

 

இவர் ரஷ்­யாவின் 22 வய­து­டைய கெத்­த­ரனா கொஸ்­லோ­வாவை 2 நேர் செட்­களில் வெற்­றி­ கொண்டார்.

 

மற்­றொரு ஒற்­றையர் போட்­டியில் பல்­கே­ரி­யாவின் ஸ்வெட்­டானா பிரொன் ­கோ­வாவை எதிர்­கொண்ட சுவிட்­சர்­லாந்தின் பென்சிக் பெலிண்டா 2 நேர் செட்­களில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்றார்.

 

கன­டாவின் இயூஜின் பௌச்சார்ட், பிரித்­தா­னி­யாவின் ஜொஹான கொன்டா, ரஷ்­யாவின் அனஸ்டாசியா பௌலுசுன்கோவா ஆகியோரும் தத்தமது ஒற்றையர் போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17718#sthash.kzn7u2wm.dpuf
  • தொடங்கியவர்
41 ஆவது நிலை வீரர் சாம் குவேரியிடம் தோல்வியுற்று விம்பிள்டனிலிருந்து வெளியேறினார் நடப்புச் சம்பியன் நோவாக் ஜோகோவிச்
2016-07-02 22:22:13

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் நடப்புச் சம்பியனான நோவாக் ஜோகோவிச், மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

 

17735_Novak-Djokovic---Sam-Querrey-wimbl

நோவாக் ஜோகோவிச்


 


இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டமொன்றில் அமெரிக்க வீரர் சாம் குவேரி,  7-6(6), 6-1, 3-6, 7-6(5) விகிதத்தில் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

 

17735_Sam-Querrey.jpgசாம் குவேரி

 


 

சேர்பிய வீரரான நோவாக் ஜோகோவிச் தரவரிசையில் உலகின் முதல் நிலை வீரர் ஆவார். 29 வயதான சாம் குவேரி தரவரிசையில் உலகின் 41 அவது நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

17735Novak-Djokovic---Sam-Querrey.jpg

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17735#sthash.3A75lRi1.dpuf
  • தொடங்கியவர்

விம்பிள்டன்: ஜோகோவிச்சை வீழ்த்திய குயரி!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் செர்பிய வீரர் ஜோகோவிச் வெளியேற்றப்பட்டார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் 3–வது சுற்றில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரநிலையில் 41–வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் சாம் குயரியை சந்தித்தார். வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்த ஜோகோவிச்சின் வீறுநடைக்கு சாம்குயரி முற்றுப்புள்ளி வைத்தார். இரண்டு முறை மழை குறுக்கிட்ட இந்த ஆட்டத்தில் சாம் குயரி 7–6 (8–6), 6–1, 3–6, 7–6 (7–5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வெளியேற்றி 4–வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 57 நிமிடங்கள் நீடித்தது. 31 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குயரியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக 30 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார். அவரது வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது. 2011, 2014, 2015–ம் ஆண்டுகளில் இங்கு கோப்பைக்கு முத்தமிட்டிருந்த ஜோகோவிச்சுக்கு, விம்பிள்டனில் 2008–ம் ஆண்டுக்கு பிறகு மோசமான தோல்வியாக இது அமைந்தது.

13438810_1169145946477527_40233503972586

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 4-வது சுற்றில் செரினா வில்லியம்ஸ்

 
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அன்னிகா பெக்குக்கு எதிரான போட்டியில் பந்தை திருப்பியடிக்கும் செரினா வில்லியம்ஸ். படம்:ஏஎப்பி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அன்னிகா பெக்குக்கு எதிரான போட்டியில் பந்தை திருப்பியடிக்கும் செரினா வில்லியம்ஸ். படம்:ஏஎப்பி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கள் லண்டன் நகரில் நடந்து வருகி றது. இதில் நேற்று நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனி யின் அன்னிகா பெக்கை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

முன்னதாக மகளிர் பிரிவில் நேற்று நடந்த மற்றொரு 3-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் கோகோ வேண்டவேகி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ராபர்டா வின்சியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆண்களுக்கான பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக் தோல்வியடைந்தார். அமெரிக்க வீரரான சாம் குர்ரே 7 6, 6 1, 3 6, 7 6 என்ற செட்கணக்கில் அவரை வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 6 3, 7 5, 6 2 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை வென்றார்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-போட்டி-4வது-சுற்றில்-செரினா-வில்லியம்ஸ்/article8806507.ece?homepage=true

  • தொடங்கியவர்

விம்பிள்டனில் ரத்வன்ஸ்கா அதிர்ச்சி தோல்வி

 
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 49-வது இடத்தில் உள்ள ஜப்பானின் மிசாகிக்கு எதிராக பந்தை ஆவேசமாக திருப்புகிறார் 4-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர். படம்: கெட்டி இமேஜஸ்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 49-வது இடத்தில் உள்ள ஜப்பானின் மிசாகிக்கு எதிராக பந்தை ஆவேசமாக திருப்புகிறார் 4-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர். படம்: கெட்டி இமேஜஸ்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

19-வது இடத்தில் உள்ள சுலோவேக்கியாவின் சிபுல் கோவா 6-3, 5-7, 9-7 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி ரத்வன்ஸ்காவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத் தில் 4-ம் நிலை வீராங்கனை யான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் 49-வது இடத்தில் உள்ள ஜப்பானின் மிசாகியை எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஒருதரப்பாக அமைந்த இந்த ஆட்டம் 64 நிமிடங்களில் முடிவடைந்தது.

ஆடவர் சுற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 6-3, 7-5 என்ற நேர்செட் டில் தரவரிசையில் 29-வது இடத் தில் உள்ள அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை தோற் கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-0 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹாலே, லத்வியாவின் ஜெலினா ஓஸ்டெபன்கோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனி யாவின் புளோரியன் மெர்ஜியா ஜோடி 6-2, 3-6, 4-6, 7-6, 6-8 என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் போராடி பின்லாந்தின் கோன்டினேன், ஆஸ்திரேலியாவின் பீர்ஸ் ஜோடியிடம் தோல்வி யடைந்தது.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டனில்-ரத்வன்ஸ்கா-அதிர்ச்சி-தோல்வி/article8810441.ece?homepage=true

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறினார் ரொஜர் பெடரர்

 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், அமெரிக்காவின் சாம் கியூரி, குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

roger-federer-tennis-wimbledon_3493742.j

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற  ஆடவர் ஒற்றையர் 4ஆவது சுற்றில் ரொஜர் பெடரர் 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை தோற்கடித்தார். 

இதன்மூலம் விம்பிள்டனில் 14ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் பெடரர். இதுதவிர கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 306ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.

 

இதன்மூலம் ‘ஓபன் எரா’வில் அதிக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றவரான மார்ட்டினா நவரத்திலோவாவின் சாதனையை சமன் செய்துள்ளார். காலிறுதியில் மரின் சிலிச்சை சந்திக்கிறார் பெடரர்.

 

அமெரிக்காவின் சாம் கியூரி 6-4, 7-6 (5), 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹத்தை வீழ்த்தினார்.

 

மகளிர் ஒற்றையர் 4ஆவது சுற்றில் ஸ்லோவாக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-3, 5-, 9 - என்ற செட் கணக்கில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

 

ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-7 (5), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தினார். ஜேர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6- 3, 6-1 என்ற நேர் செட்களில் ஜப்பானின் மிசாகிடாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருந்த ஜப்பானின் நிஷிகோரி விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

 

நிஷிகோரி தனது 4ஆவது சுற்றில், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடினார். அதில் சிலிச் 6 -1, 5-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயத்தால் போட்டியிலிருந்து விலகினார் நிஷிகோரி.

http://www.virakesari.lk/article/8600

  • தொடங்கியவர்
வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்த வில்லியம்ஸ் சகோதரிகள் வீனஸ், செரீனா
2016-07-06 15:40:13

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றிவரும் வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ், செரீனா ஆகிய இருவரும் கால் இறுதிகளுக்கு தகுதிபெற்றதன் மூலம் விளையாட்டுப் போட்டிக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்துள்ளனர். 

 

17823-aaaa.jpg

வீனஸ் -செரினா

 


 

 

சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவில் கடந்த 22 வருடங்களில் அதி கூடிய வயதில் கால் இறுதியில் விளையாடும் வீராங்கனை என்ற பெருமையை 36 வயதுடைய வீனஸ் பெற்றுக்கொண்டுள்ளார். 

 

இதற்கு முன்னர் மார்ட்டினா நவ்ரட்டிலோவா 1994இல் தனது 37ஆவது வயதில் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம் அதி கூடிய வயதில் விம்பிள்டனில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளார்.

 

ஸ்பானிய வீராங்கனை கார்லா சுவாரெஸ் நவாரோவுக்கு எதிராக திங்களன்று நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 7–6, 6–4 என்ற புள்ளிகளைக் கொண்ட இரண்டு நேர் செட்களில் வெற்றிபெற்று கால் இறுதியில் விளையாடத் தகுதிபெற்றார்.

 

ஐந்து தடவைகள் விம்பிள்டனில் சம்பியான வீனஸின் சகோதரி செரீனா தனது 34ஆவது வயதில் கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.

 

ஏழாவது விம்பிள்டன் பட்டத்திற்கு குறிவைத்துள்ள செரீனா, தனது நான்காம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் ஸ்வெட்லான குஸ்நெட்சோவாவை 7–5, 6–0 என்ற புள்ளிகளைக் கொண்ட இரண்டு நேர் செட்களில் வெற்றிபெற்றார்.

 

இவர்களைவிட ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கேர்பர், ஸ்லோவேக்கியாவின் டொமினிக்கா சிபுல்கோவா, ரஷ்யாவின் எலெனா வெஸ்னீனா, கஸக்ஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பௌலியூசென்கோவா ஆகியோர் கால் இறுதிகளில் விளையாடத் தகுதிபெற்றுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17823#sthash.hDGWhms7.dpuf
  • தொடங்கியவர்

விம்பிள்டன்: கடைசி 3 செட்களில் மாரின் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதியில் பெடரர்

 

 
மாரின் சிலிச்சை காலிறுதியில் போராடி வென்ற பெடரர். | படம்: ராய்ட்டர்ஸ்.
மாரின் சிலிச்சை காலிறுதியில் போராடி வென்ற பெடரர். | படம்: ராய்ட்டர்ஸ்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு சுவிஸ் நட்சத்திர ரோஜர் பெடரர் தகுதி பெற்றார்.

இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் குரேஷியா வீரர் மாரின் சிலிச்சை, ரோஜர் பெடரர் 6-7, 4-6, 6-3, 7-6, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக பெடரர் கனவு காணும் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் இவருக்கு முட்டுக்கட்டை போடும் நொவக் ஜோகோவிச் இம்முறை தோற்று வெளியேறியது பெடரருக்கு வாய்ப்பை அளித்துள்ளது.

முதல் செட்டில் இருவரும் 1-1, 2-2 என்று பிரேக் செய்ய முடியாமல் 6-6 என்று டை பிரேக்கிற்குச் சென்றனர். முதல் செட்டிலேயே பெடரர் 7 ஏஸ் சர்வ்களை அடித்தார். டை பிரேக்கரில் வலை அருகே சென்று சிலிச் நெருக்கடி கொடுக்க பெடரர் தவறு செய்ய பிரேக் செய்து பிறகு தன் சர்வின் மூலம் 3-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு 2 பெரிய சர்வ்களை அடித்த சிலிச் 5-0 என்று அசைக்க முடியா நிலைக்குச் சென்றார். பிறகு இன்னொரு ஏஸ் சர்வையும் அடிக்க 4 செட் பாயிண்ட்களை பெற்றார் சிலிச். இதில் 2-ஐ வெற்றிகரமாக தடுத்த பெடரர் கடைசியில் ஃபோர்ஹேண்ட் ஷாட் ஒன்று வெளியே செல்ல முதல் செட்டை 7-6 என்று கைப்பற்றினார் சிலிச்.

2-வது செட்டில் பெடரர் முதல் சர்வீஸை எடுத்தார். ஒரு தவறான பேக் ஹேண்ட் ஷாட்டினால் 30-30 என்று சிலிச்சுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் வலையருகே வந்து ஒரு ஃபோர்ஹேண்ட் ஸ்லைஸ் ஷாட் ஆட முதல் கேமை பெடரர் வென்று 1-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு சிலிச் தனது ஆக்ரோஷமான சர்வினால் தனது கேமை தக்க வைக்க 2-வது செட்டும் 1-1 என்று தொடங்கியது.

அடுத்த பெடரர் சர்வின் போது சிலிச்சின் தரை ஷாட்களை பெடரரால் ஒன்றும் செய்ய முடியாமல் போக தன் சர்விலேயே அவர் 0-30 என்று பின் தங்கினார். இதனையடுத்து சிலிச் ஒரு ஆக்ரோஷ பேக்ஹேண்ட் ஷாட்டை ஆட பெடரர் சர்வை பிரேக் செய்தார் சிலிச். அதன் பிறகு அடுத்த தனது சர்வில் சிலிச் டபுள் பால்ட் செய்ய பெடரர் 30-0 என்று முன்னிலை வகித்தார். ஆனால் சிலிச் விடவில்லை சில அபாரமான ஷாட் மற்றும் சர்வில் 40-30 என்று பெடரரை விஞ்சினார், ஆட்டம் டியூஸுக்குச் சென்றது பெடரர் போர்ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க சிலிச் தனது சர்வை பிரேக்கிலிருந்து காப்பாற்றினார். இந்த வாய்ப்பையும் நழுவ விட இந்த செட்டிலும் பெடரர் 4-6 என்று தோல்வி தழுவினார்.

இன்னும் ஒரு செட்டில் தோற்றால் பெடரர் விம்பிள்டனிலிருந்து வெளியேறி விடுவார் என்ற நிலையில் 3-வது செட் தொடங்கியது. முதலில் தனது சர்வில் பெடரர் எளிதில் வென்றார். அடுத்து சிலிச் ஒரு இறுதி ஏஸ் சர்வ் மூலம் தனது சர்வை தக்க வைத்தார். 1-1. அடுத்த சர்வில் பெடரர் பெரிய சர்வ்களை அடித்து 2-1 என்று முன்னிலை வகித்தார். தற்போது பிரேக் முனைப்புடன் இருந்த பெடரருக்கு சிலிச் சர்வை அடித்தார். இம்முறை பெடரர் இரண்டு சர்வ்களை முறியடித்து டியூஸ் வரை கொண்டு சென்றார் ஆனால் சிலிச் விடவில்லை, ஆட்டம் 3-வது செட்டில் 2-2 என்று சமநிலையே வகித்தது. பெடரர் தனது ஆக்ரோஷமான சர்வினால் தனது சர்வ் கேமை வெல்ல 3-2 என்று இருந்தது. அடுத்த சிலிச் சர்வில் பெடரர் ஒரு அபாரமான ஷாட்டை தனக்கு பின்புறமாக எடுத்தார், ஆனால் சிலிச்சின் ஃபோர்ஹேண்ட் பெடரருருக்குப் போக்குக் காட்ட சிலிச் வென்றார் மீண்டும் 3-3 என்று சமநிலையிலேயே ஆட்டம் இருந்தது. அடுத்த சர்வை பெடரர் வீச சிலிச் ஒரு அபாரமான் போர்ஹேண்ட் ஷாட்டினால் 40-0 என்று 3 பிரேக் பாயிண்ட்களைப் பெற்றார். ஆனால் சிலிச் அந்த நிலையிலிருந்து நெட்டில் ஒரு பந்தை அடிக்க, பெடரர் இரண்டு சர்வ்களில் வெல்ல தனது சர்வை தக்க வைத்து 4-3 என்று முன்னிலை வகித்தார். சிலிச் அருமையான வாய்ப்பைக் கோட்டை விட்டார்.

3-வது செட் திருப்புமுனை:

4-3 என்று பெடரர் முன்னிலை பெற்ற நிலையில் சர்வை வீசிய சிலிச் தனது ஃபோர்ஹேண்ட் ஷாட்டை நெட்டில் அடித்தும் பிறகு ஒரு தவறையும் இழக்க பெடரர் 30-0 என்று முன்னிலை பெற்றார். மீண்டும் பந்தை சிலிச் நெட்டில் அடித்து, பிறகு ஒரு டபுள் பால்ட்டையும் செய்ய பெடரர் பிரேக் செய்து 5-3 என்று முன்னிலை பெற்றார், இது தனது வெற்றியையே புரட்டிப் போடும் என்று சிலிச் அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை. அடுத்த சர்வை செட் வெற்றிக்காக வீசினார் பெடரர் முதலில் எளிதில் 30-0 என்று முன்னிலை பெற்ற பெடரர் பிறகு சிலிச்சின் அருமையான நெட் அருகே வந்து ஆடிய வாலி மூலம் 30-30 என்று சமன் ஆனதும் துணுக்குற்றார். ஆனால் கடைசியில் ஒரு அற்புதமான பேக்ஹேண்ட் ஷாட்டில் அந்த செட்டை 6-3 என்று கைப்பற்றி ஆட்டத்தை 4-வது செட்டுக்குக் கொண்டு சென்றார்.

3-வது செட்டில் டபுள் பால்ட் உட்பட தரைஷாட்களிலும் ஏகப்பட்ட தவறுகளைச் செய்த சிலிச் சற்றே நடுக்கம் காண தொடங்கிய நிலையில் 4-வது செட் தொடங்கியது. 4-வது செட்டில் முதல் சர்வை நடுக்கம் இல்லாமல் தக்க வைத்தார் சிலிச். இப்போது சிலிச்சின் நகர்தல்களை துல்லியமாகக் கணித்திருந்த பெடரர் அவருக்கு ஆட்டம் காண்பித்து தனது சர்வைத் தக்கவைக்க 4-வது செட்டில் 1-1. சிலிச் தற்போது எழுச்சியுற்ற பெடரர், அவருக்கு ஆதரவான ரசிகர் பெருமக்கள் குரல்கள் என்ற நெருக்கடியிலிருந்து மீண்டது போல் அபாரமான சர்வ்கள் மூலம் சர்வை தக்க வைத்து 2-1 என்று முன்னிலை பெற்றார். அடுத்த பெடரர் சர்வில் சிலிச்சுக்கு பிரேக் செய்ய இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது, காரணம் ஃபோர்ஹேண்ட் ஷாட்டை பெடரர் வெளியே அடிக்க, மீண்டும் ஒரு ஃபோர்ஹேண்ட் ஷாட்டையும் பெடரர் சரியாக அடிக்க முடியாமல் 15-40 என்று பின் தங்கினார், பிரேக் செய்ய சிலிச்சுக்கு அருமையான வாய்ப்பு. ஆனால் பெடரர் சர்வ் ஒன்று சிலிச்சின் உடலைக் குறிவைக்க ஒன்றும் செய்ய முடியவில்லை, இன்னொரு சர்வை திரும்ப அடிக்கும் போது வெளியே அடித்தார் சிலிச். மீண்டும் பிரேக் வாய்ப்பை தவற விட்டார் சிலிச், பெடரர் ஒரு ஏஸ் மூலம் தனது சர்வை மீட்டு தக்கவைத்தார். 4-வது செட் ஆட்டம் 2-2.

அடுத்ததான சிலிச் சர்வில் பெடரர் தொடக்கத்தில் ஒரு அருமையான பேக்ஹேண்ட் ஷாட்டை ஆட அதனை சிலிச்சினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு சிலிச் மேலும் ஒரு தவறு செய்ய 15-30 என்று பின் தங்கினார். ஆனால் சிலிச் சர்வை எதிர்கொண்ட பெடரர் மீண்டும் தனது சிக்னேச்சர் பேக்ஹேண்ட் ஷாட் மூலம் நேராக அடிக்க 15-40 என்று இரண்டு பிரேக் பாயிண்ட்கள் கிடைத்தது பெடரருக்கு. ஆனால் சிலிச் விடவில்லை தனது சர்வ் எனும் ஆயுதத்தை நம்பிய அவருக்கு அது கைகொடுக்க 40-40 என்று ஆட்டம் டியூஸுக்குச் சென்றது. பிறகு இன்னொரு ஏஸ், பிறகு இன்னொரு பெரிய சர்வ் போராடி தன் சர்வைக் காப்பாற்றினார் சிலிச், 3-2 என்று முன்னிலை வகித்தார். தனது அடுத்த சர்வை பெடரர் ஒரு கடைசி ஏஸ் மூலம் வெல்ல 3-3. அடுத்து சிலிச் தனது பெரிய சர்வ்களை ஏஸ்களுடன் அடிக்க சிலிச் 4-3 என்று முன்னிலை பெற்றார். அடுத்து பெடரர் சர்வை அவர் அருமையான பேக்ஹேண்ட் மூலம் தக்கவைக்க 4-4. அடுத்த சிலிச் சர்வில் பெடரர் 30-40 என்பது வரை வந்தும் பிரேக் வாய்ப்பில்லாமல் போனது.

மேட்ச் பாயிண்ட் வரை சென்று வெல்ல முடியாத சிலிச்:

தற்போது பெடரர் தனது சர்வில் தோற்றால் சிலிச் அரையிறுதிக்கு முன்னேறி விடுவார் என்ற நிலையில் 4-5 என்ற நிலையில் சர்வை அடிக்கத் தொடங்கினார். இதில் முதல் சர்வில் சரியாக வீசாததால் 2-வது சர்வுக்குச் சென்ற போது சிலிச் பளார் என்று போர்ஹேண்ட் ஷாட் ஆட பெடரர் ஒன்றும் செய்ய முடியவில்லை பெடரர் 0-15. ஆனால் ஒரு ஏஸ் மூலம் அடுத்த 2 பாயிண்ட்களை எடுத்த பெடரர் 30-30 என்று விரைவில் சமன் செய்தார். அதன் பிறகு சிலிச் அடித்த ரிடர்னை பெடரரால் ஒன்றும் செய்ய முடியவில்லை சிலிச்சுக்கு மேட்ச் பாயிண்ட். இப்போது பதற்றம் அடைந்த சிலிச் இரண்டு ரிடர்ன்களிலும் சொதப்ப பெடரர் தக்க வைத்தார் தன் சர்வை. செட் 5-5 என்று சிலிச்சின் சர்வுக்குச் சென்றது. முதலில் பெடரர் அருமையான பேக்ஹேண்ட் மூலம் பாயிண்ட் எடுக்க பிறகு ஒரு போர்ஹேண்ட் ஷாட் மூலம் 30-15 என்று முன்னிலை வகித்தார். பிறகு ஒரு அருமையான ரேலியின் முடிவில் சிலிச் பேக்ஹேண்ட் ஷாட் ஒன்றில் தனது சர்வை போராடி தக்கவைத்தார். செட் 5-6 என்ற நிலையில் பெடரர் சர்வுக்குச் செல்ல பெடரர் தவறுகளை இழைத்து மீண்டும் 0-15 என்றும் பிறகு 15-30 என்றும் பின் தங்கினார்.

ஆனால் ஒரு ஏஸ் பெடரரைக் காப்பற்றிய அதே வேளையில் ஒரு ரிடர்னை நீளமாக வெளியே அடிக்க சிலிச் மேட்ச் பாயிண்டை பெற்றார். இந்த வாய்ப்பையும் சிலிச் நெட்டில் அடித்துக் கோட்டை விட செட் 6-6 என்று டைபிரேக்கருக்குச் சென்றது. டைபிரேக்கரில் இருவரும் பெரும் சவாலாகத் திகழ கடைசியில் சிலிச் தனது போர்ஹேண்டை வெளியே அடிக்க, பிறகு மீண்டும் ஒரு போர்ஹேண்டை நெட்டில் அடிக்க 11-9 என்று பெடரர் வெற்றி பெற்று செட்டை 7-6 என்று கைப்பற்றினார். இதன் மூலம் ஆட்டம் 6-7, 4-6, 6-3, 7-6 என்று ஆளுக்கு 2 செட்கள் என்று சமநிலைக்குச் சென்றது சிலிச் தான் கோட்டை விட்ட வாய்ப்புகளை நினைத்து நிச்சயம் அழுதிருக்க வேண்டும்.

5-வது செட்டிலும் கடும் போட்டிகளுக்கு இடையே ஆட்டம் 4-3 என்று சிலிச் சர்வுக்குச் சென்றது. இதில் ராக்கெட்டை மாற்றிய பெடரர் சில அருமையான ஷாட்களை ஆடி சிலிச்சுக்கு ஆட்டம் காட்டினார் சிலிச் செட்டைக் கோட்டை விட 5-3 என்று பெடரர் தனது மேட்ச் பாயிண்ட் சர்வை வீச ஆயத்தமானார். கடைசி சர்வில் ஆதிக்கமாக ஆடிய பெடரர் வென்று 6-3 என்று செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-கடைசி-3-செட்களில்-மாரின்-சிலிச்சை-வீழ்த்தி-அரையிறுதியில்-பெடரர்/article8816362.ece?homepage=true

  • தொடங்கியவர்
 

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் செரீனா

 
ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவுக்கு எதிராக பந்தை திருப்புகிறார் செரீனா வில்லியம்ஸ். படம்: கெட்டி இமேஜஸ்
ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவுக்கு எதிராக பந்தை திருப்புகிறார் செரீனா வில்லியம்ஸ். படம்: கெட்டி இமேஜஸ்

விம்பிள்டன் டென்னிஸில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று நடை பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், 50-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவை 6-2, 6-0 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார் செரீனா. இந்த ஆட்டம் வெறும் 48 நிமிடங்களில் முடிவடைந்தது.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் செரீனா - கெர்பர் மோதுகின்றனர்.

மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 2-6, 4-6 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் ஷேவ்டோவா, ஹங்கேரியின் டிமியா பபோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-இறுதிப்போட்டியில்-செரீனா/article8823028.ece

  • தொடங்கியவர்

ரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி! விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ரவோனிக் (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-07-09 12:06:51

 

இங்கிலாந்தின் லண்டனில் இடம்பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

b_federer_080716_1164_ek.jpg

நேற்று (08) இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் தரவரிசைப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கும் பெடரர் மற்றும் 7 ஆவது இடத்தை வகிக்கும் கனடாவின் ரவோனிக் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் முதல் செட்டை ரவோனிக் 6-3 என கைப்பற்றினார்.

பின்பு சிறப்பாக விளையாடிய பெடரர் 7-6 மற்றும் 6-4 என இரண்டு செட்களை அடுத்தடுத்து கைப்பற்றினார்.

எனினும் அடுத்த இரண்டு செட்களையும் ரவோனிக் 7-5 மற்றும் 6-3 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.

பெடரர் அதிர்ச்சி தோல்வியுடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ரவோனிக் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள முதல் கனேடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

b_raonic_080716_1261_fe.jpgb_federer_080716_1268_jm.jpgb_raonic_080716_1162_jb.jpgb_federer_080716_1165_tl.jpg

http://www.virakesari.lk/article/8723

b_raonic_080716_1178_jm.jpg

  • தொடங்கியவர்

பெண்களுக்கான விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்ஸ் வெற்றி

 

பெண்களுக்கான விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்ஸ் வென்றுள்ளார்

160709153911_serena_kerber_wimbledon_1_6
 

அவர் ஜெர்மனியைச் சேர்ந்த அஞ்சலிக்கு கெர்பரை 7-5,6-3 என்ற கணக்கில் ஒற்றையர் பிரிவில் ஏழாவது விம்பிள்டன் பட்டத்தை பெற்றுள்ளார். அவர் தனது சகோதரி வீனசுடன் பெண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடவுள்ளார்.

இந்த அமெரிக்க வீராங்கனை தற்போது 22 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ஸ்டெபி க்ராபின் சாதனைக்கு சமமான இடத்தை அடைந்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sport/2016/07/160709_sport

  • தொடங்கியவர்

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

 

விம்பிள்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் நேற்று ஜெர்மன் வீராங்கனை ஆங்கெலிக் கெர்பரைத் தோற்கடித்து , கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்தார் செரினா வில்லியம்ஸ்.

 

160709163446_serena_williams_512x288_afp

22வது கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்று சாதனை படைத்தார் செரினா வில்லியம்ஸ்

நேற்று லண்டனின் விம்பிள்டனில் நடந்த பெண்கள் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தன்னை எதிர்த்து ஆடிய , ஜெர்மனியின் ஆங்கெலிக் கெர்பரை, 7-5, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்து, தனது 7வது விம்பிள்டன் கோப்பையை வென்றார்.

160709153911_serena_kerber_wimbledon_1_6

 

 வென்ற செரினாவும், இரண்டாவதாக வந்த கெர்பரும்

இது விம்பிள்டன், பிரெஞ்சு ஒப்பன் போன்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செரினா வெல்லும் 22வது கோப்பையாகும். ஏற்கனவே ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் மட்டுமே 22 முறை இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்றிருந்தார். அவரது சாதனையை செரினா வில்லியம்ஸ் சமன் செய்துள்ளார்.

செரினாவும் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸும், பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியிலும் நேற்று வென்றுள்ளனர். 6-3 , 6-4 என்ற கணக்கில் வில்லியம்ஸ் சகோதரிகள், டிமியா பேபோஸ் மற்றும் யரோஸ்லேவா ஷ்வெடோவா ஆகியோரைத் தோற்கடித்தனர்.

http://www.bbc.com/tamil/sport/2016/07/160710_tennis

  • தொடங்கியவர்
மரேக்கு 3ஆவது கிரான்ட் ஸ்லாம்
 
10-07-2016 10:42 PM
Comments - 0       Views - 1

article_1468170933-mURRAY-2.jpg

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக, பிரித்தானியாவின் அன்டி மரே தெரிவாகியுள்ளார். கனடாவின் மிலோஸ் றாவோனிஸை எதிர்கொண்ட மரே, நேர் செட்டில் வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

நம்பிக்கையுடன் களமிறங்கிய அன்டி மரே, 6ஆம் நிலை வீரரான மிலோஸ் றாவோனிஸைச் சிறப்பாக எதிர்கொண்டார். முதலாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் அடுத்த இரண்டு செட்களையும் 7-6, 7-6 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றிய மரே, இவ்வாண்டின் சம்பியனாகத் தெரிவானார்.

இது, விம்பிள்டன் போட்டிகளில் அவரது இரண்டாவது சம்பியன் பட்டமென்பதோடு, மூன்றாவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/176696/மர-க-க-ஆவத-க-ர-ன-ட-ஸ-ல-ம-#sthash.33BBSdbJ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.