Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கி நகரவேண்டும்: சிறீதரன்

Featured Replies

வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கி நகர்ந்து மாங்குளம் அல்லது ஓமந்தை பகுதியிலேயே அமைக்கப்படவேண்டும். அதற்காக நாம் முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திற்கு என அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கியே நகர்த்தப்பட வேண்டும். அதுவே எமது இருப்பையும் தக்க வைக்க உதவும். இன்று தென்பகுதியில் தம்புள்ள பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் காரணமாக எமது வடபகுதி வளங்கள் தென்பகுதி நோக்கி நகர்ந்து சென்றுள்ளது.

எமது மக்கள் தம்புள்ளைக்கு சென்று தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இந்நிலையில் வடபகுதிக்கு ஒரு பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ள நிலையில் அது வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் மையப்படுத்தியதாக மாங்குளம் பகுதியிலேயே அமையப்பெறுவது சிறந்ததாகும். அதுவே வடக்கின் மையம். வடபகுதியின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து எமது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், மீன்பிடிப்பாளர்கள், வர்த்தகர்கள் என பலரும் வந்து செல்ல இலகுவான பகுதி ஆகும். வடமாகாண சபையின் செயற்பாடுகள் கூட எதிர்காலத்தில் மாங்குளத்தை மையமாகக் கொண்டே அமையப்பெறவுள்ளது.

முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் காலப்பகுதியில் கூட மாங்குளமே வடக்கு, கிழக்கின் மையமாக விளங்கியிருந்தது. வடக்கிற்கான பொருளாதார மையம் இது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் வவுனியா மக்கள் அதனை தமது பகுதிக்கு வரவேண்டும் என விரும்புவது தவறல்ல. அது தான் அவர்களது விருப்பமாக இருந்தால் இந்த மையத்தை வடக்கு நோக்கி நகர்த்தி ஓமந்தையில் அமைப்பது தான் சிறந்தது. அதன் மூலம் ஓமந்தைப் பகுதியை உபநகரமாக அபிவிருத்தி அடையச் செய்ய முடியும்.

எமது நிலங்களையும் பாதுகாக்க அது உதவும். எமது எதிர்கால இருப்பையும், அபிவிருத்தியையும், மண்ணையும் பாதுகாக்கும் வகையில் அபிவிருத்திகள் அமைய வேண்டும். அதற்கேற்ப நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்.

வடக்குக்கான திட்டத்தை அவரது விருப்பத்தின் படி அமைக்க வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே, வடக்கு மாகாண முதல்வருக்கு பொருளாதார மத்திய நிலைய விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி எமது மக்களுக்கான பொருளாதார வளத்தை பெற்று அபிவிருத்தி நோக்கி நகர அனைவரும் உதவவேண்டும் எனத் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/politics/01/109132

  • தொடங்கியவர்

தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமைந்தால் வட மாகாணத்தின் ஒரேயோரு விவசாய பாடசாலை பாதிக்கும்!

தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமைந்தால் வட மாகாணத்தின் ஒரேயோரு விவசாய பாடசாலை பாதிக்கும் என வவுனியா மாவட்ட விவசாயிகளின் சம்மேளனத்தலைவர் ரங்கன் தெரிவித்தார்.

வவுனியாவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் 253 விவசாய அமைப்புக்களும் 8 கமநல கேந்திர நிலையங்களும் உள்ளன. இந் நிலையில் விவசாயிகளின் பிரச்சினையை தீர்மானிப்பது யார் என்பது தெளிவாக்கப்படவேண்டும்.

அந்த அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பே எமது அமைப்பு. பொருளாதார மத்திய நிலையமொன்று வவுனியாவில் அமைவதற்கான இடப்பிரச்சினையொன்று இடம்பெற்று வருகின்றது. ஒரு சிலர் நகரத்திற்கு அண்மையில் இந்நிலையம் அமையவேண்டும் என்பதனை முன்வைக்கின்றனர்.

ஆனால் யுத்தத்தின் காரணமாக இடப்பெயர்வுகளை சந்தித்த பின்னர் வவுனியா மாவட்டத்தின் நகர் புறம் சனநெரிசல் மிக்கதாக காணப்படுகின்றது. இந் நிலைமைகள் காரணமாக பல்கலைக்கழகம் வவுனியா நகரில் இருந்து 8 கிலோமீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்படடுள்ளது.

அதேபோல் தொழில்நுட்பக் கல்லூரி, ஆயுர்வேத வைத்தியசாலை என்பனவும் வவுனியாவிற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் அரச குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும்போதும் கூட ஏ9 வீதியில் ஓமந்தைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந் நிலையில் வட பகுதியில் அமைந்துள்ள ஒரேயொரு விவசாய பாடசாலைக்கு முன்பாகவே தற்போது பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தினை தருமாறு கோருகின்றர்.

இப்பாடசாலையில் 30 இருந்து 80 ஆக மாணவர்களை அதிகரிப்பதற்கான வேலைப்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. எனவே இப்பாடசாலை மற்றும் இப்பிரதேசத்தின் சுற்றுச்சூழலில் 1500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசிக்கின்றன. எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

ஆகவே இவ்விடத்தில் வரக்கூடிய வாகன நெரிசல் மற்றும் வவுனியாவில் தற்போது ஏற்பட்டு வரும் விபத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். ஆகவே வவுனியாவிற்கு வரும் அபிவிருத்தி திட்டங்கள் நகருக்கு அருகில் வரவேண்டும் என எண்ணுவது சிறந்ததாக அமையாது.

அத்துடன் நெடுங்கேணி பிரதேசம் அதிகளவான விவசாயிகளை கொண்ட பிரதேசமாகும். ஆகவே அப்பகுதி விவசாயிகளுக்கும் கனகராயன்குளம் விவசாயிகள் உட்பட அதிகளவான விவசாயிகளை கொண்டமைந்த கிராமங்களுக்கு இலகுவான ஓர் இடமாக ஓமந்தை காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற உண்ணாவிரதப்போராட்டத்திற்கு விவசாயிகள் எத்தனைபேர் கலந்துகொண்டனர் என்பது கேள்வியே. ஆகவே அனைத்து விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க ஓமந்தைப்பகுதிக்கே பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/economy/01/109162

வவுனியா வர்த்தகர்களின் சுயநலக் கோரிக்கைகள் முறியடிக்கப்பட்டு மாங்குளத்தில் பொருளாதார மையத்தை நிறுவுவதே சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.