Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓ.. உவரின்டை நல்லிணக்கத்துக்குப் பரிசை தமிழ் சனம் குடுத்ததுதானே! யாழ்ப்பாணத் தம்பி:

Featured Replies

ஓ.. உவரின்டை நல்லிணக்கத்துக்குப் பரிசை தமிழ் சனம் குடுத்ததுதானே! யாழ்ப்பாணத் தம்பி:

 
ஓ.. உவரின்டை நல்லிணக்கத்துக்குப் பரிசை தமிழ் சனம் குடுத்ததுதானே! யாழ்ப்பாணத் தம்பி:



யுத்தத்திலை மனித உரிமைகள் பற்றின நன்னெறிக் கோட்பாடுகளைப் பின்பற்றினான் எண்டு மகிந்த ராஜபக்ச முந்தி ஒருக்கால் சொன்னது நினைவிருக்கே? நாங்களும் அதென்னடா? யுத்தத்திலை மனித உரிமை நன்னெறிக் கோட்பாடு எண்டு கேட்டம்... ஏனென்டால் மகிந்த ராஜபக்ச நடத்தின யுத்தம் எப்பிடியானது எண்டு மறக்க ஏலுமே?

போரிலை, அப்பாவிச் சனங்களிலை குண்டுகளை கொட்டி, பாதுகாப்பு வலயங்களை அறிவிச்சு, அதிலை செல் அடிச்சு, சரணடைஞ்சதுகளை சுட்டுக் கொண்டு, பெண்களை வன்கொடுமை செய்து, காணாமால் போகச் செய்து எண்டு ஏகப்பட்ட அநியாங்கள் எத்தினை? உதெல்லாம் மனித உரிமை நன்னெறிக் கோட்பாடுகளின்டை அடிப்படையிலைதான் செய்தவராம்..

சாத்தன் வேதம் ஓதுறது ஒண்டும் புதிசில்லையே? இப்ப திரும்பவும் யுத்தப் புராணம் பாடத் தொடங்கிட்டார். தன்டை போர் வெற்றி பற்றின வரலாறு, இல்லாமல் செய்யப்படுதாம்.. அடக்குமுறைக்கு எதிராய், தங்கட உரிமைய கேட்டுப் போராடின ஒரு இனத்த மிகக் கொடிய போர்க்குற்றங்கள செய்து இனப்படுகொலை செய்ததை, நெடுக வீரப் பாடலமாய் பாடவேணுமாம்..

இன்னொரு வர்ணணையை இப்ப விட்டிருக்கிறார். நல்லிணக்கத்துக்காகத்தான்தான் யுத்தம் நடத்தி முடிச்சவராம். உலகத்திலை நல்லிணக்கத்திற்கு சண்டை செய்த ஒரே ஆள் மகிந்தர் தான். அடக்கோதாரி... யுத்தம் செய்தால் நல்லிணக்கம் வராது. இன முரண்பாடுதான் வரும். எங்கடை சனங்கின்டை இதயங்களை கீறிப் பிளந்து போட்டு அதை நல்லிணக்கம் எண்டு இவர் சொல்லுறாரே?

தமிழ் மக்கள் தங்கடை உரிமைக்காய் போராடினவையள். அவையின்டை உரிமையை மறுத்து, அந்த மக்களை அழிச்சு, அவையின்டை போராட்ட சக்தியை அழிச்சுப் போட்டு, அதை, நல்லிணக்கத்துக்குச் செய்தனான் எண்டால் எப்பிடி? அதுதான் எங்கடை சனங்கள் அவரின்டை நல்லிணக்கத்துக்குப் பரிசு குடுத்து வீட்டுக்கு அனுப்பினதுள் கண்டியளோ.... பாவம்... ஓய்வாம் இருக்கட்டும் எண்டு வீட்டுக்கு அனுப்பினதுகள்...

இலங்கையை ஆள்கிறவையள் எல்லாரும் இன முரண்பாட்டை, தேசிய பிரச்சினையை இன்னும் இன்னும் பெரிசாக்கினம்... மகிந்த, பொல்லாத இனப்படுகொலை சண்டையை நடத்தி, தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையிலான பென்னாம் பெரிய இடைவெளியை உருவாக்கிப்போட்டார். தமிழ் மக்களுக்கு மகிந்தர் செய்த அநீதியளை ஏற்றுக்கொண்டு, அவையளின்டைஉரிமையை அவையளிட்ட குடுக்கிறதிலைதான் நல்லிணக்கம் தங்கியிருக்கு..

குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி
000000000000000000000000000000000000000000000000000
வலி.வடக்கில் மக்கள்  மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னர் இருந்த பல இந்து ஆலயங்கள் இழித்தழிக்கப்பட்டு  உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி  வைத்திருந்த பகுதிகளில் சனிக்கிழமை 201 ஏக்கர் நிலபரப்பில் மக்கள் மீள குடியமர அனுமதித்தனர்.

அதனை அடுத்து அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் விடுவிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டு வருகின்றார்கள்.

அதன் போது தமது பரம்பரை ஆலயங்கள் குல தெய்வ ஆலயங்களை மக்கள் தேடிய போது பல ஆலயங்கள் இருந்த இடம் தெரியாது இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு உள்ளன.

காங்கேசன்துறை வீதியில் தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் இருந்த இடத்திற்கு எதிரே  அருகருகே இருந்த மூன்று கோவில்களில்  பிள்ளையார் கோவில் அம்மன் கோவில் என்பன முற்றாக இடித்தழிக்கப்பட்டு உள்ளன.  அவற்றுக்கு அருகில் இருந்த வீரபத்திர் கோவில் பகுதிகளவில் சேதமாக்கப்பட்டு உள்ளன.

அதேபோன்று குரும்பசிட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி அம்மன் ஆலயம் விடுவிக்கப்படாத பகுதியில் இராணுவ முகாமினுள் காணப்படுகின்றது. குறித்த ஆலயம் இருக்கின்றதா ? அதுவும் இடித்தழிக்கப்பட்டு விட்டனவ  என்பதனை அறிய மக்கள் இராணுவத்தினரை கேட்ட போதிலும் இராணுவ தரப்பால் அது தொடர்பில் ஏதேனும் கூறப்படவில்லை.

குறித்த காசி அம்மன் ஆலயத்தின் வீதியோர பாதையில் ஆலய உண்டியல் வைக்கப்பட்டு  அம்மன் திருவுருவ சிலை ஒன்றும் உண்டியல் மேல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மேல் இருந்த அம்மன் திருவுருவ சிலை முற்றாக  சேதமாக்கப்பட்ட போதிலும் அம்மனின் முகம் சேதமடையாமல் இருந்தமையால் அதனை கல் ஒன்றின் மீது வைத்து மக்கள் வழிபடுகின்றார்கள்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133528/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.