Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் கால அவகாசம் கோரிய மங்கள!

Featured Replies

இலங்கை ஐ.நா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையில் ஜெனிவாவில் இன்று கூட்டம் இடம்பெறுகின்றது.

இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்ட இலங்கை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த 10 வருட ஆட்சியில் பல விடயத்தை சாதித்துள்ளதாகவும், தொடர்ந்தும் மனித உரிமை மீறல், நீதி விசாரணைகளில் கண்ணும் கருத்துமாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் மனோ ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரில், பேராசிரியர் போல் நியூமேன், செந்தில் குமரன், பொன்னம்பலம், திரு முருகன், ச.வி கிருபாகரன் உட்பட வேறு பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது ,இனப்படுகொலை, இராணுவம், அரசியல் கைதிகள், தீர்வுத்திட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் வழங்கிய மங்கள, தங்களின் அரசை நம்புமாறும், தங்களுடன் இணைந்து வேலை செய்யுமாறும், கால அவகாசம் தேவை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நிகழ்வில் செயற்பாட்டாளர்கள் உட்பட பல நாட்டு தூதுவர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/109267

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு தனது வழமையான ஏமாற்று நாடகத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது. உறுதிமொழிகளை வழங்கி காலத்தை கடத்துவது, உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் காலத்தைக் கடத்திக் கொண்டே, புதிய புதிய முகமூடிகளைப் போட்டபடி தமிழின அழிப்பை மேற்கொள்வது காலம் காலமாய் நடக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத யுக்தி.

மேலும் கால அவகாசத்தை கோரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு பின்வரும் நிபந்தனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேசம் கட்டளையிட  வேண்டும்.

நல்லிணக்கம் ஏற்படும் வரையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையும் காலத்தை இழுத்தடிக்கும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு (1) பாதிக்கப்பட்ட 4ம் 4க்கு குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் மாதம் ஒரு இலட்சம் ரூபாயும், (2) 4க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் மாதம் இரண்டு இலட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் (3) மேலும் காணிகளை இழந்த மக்களுக்கும் மாதம் மாதம் மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும்.

காலத்தை இழுத்தடிக்கும் பௌத்த இனமதவெறி அரசு இந்த ஓகஸ்ட் மாதம் முதல் இதை முழுமையாக நிறை வேற்றாவிட்டால், 2016 செப்டெம்பர் முதல் வடக்கு-கிழக்கு தனியான நாடு (தமிழீழம்) என்பதை ஐக்கிய நாடுகள்  சபை அங்கீகரித்து சர்வதேச படைகள் மூலம் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளை அப்புறப்படுத்தி தமிழீழத்தை நிறுவ வேண்டும்.

 

இராணுவ ஆயுதக் கிடங்கு வெடிப்பு விபத்தால் வீடிழந்த கொஸ்கம-சலாவ பிரதேச சிங்கள மக்களுக்கு இது போன்ற உதவிகளை உடனடியாக (3 நாட்களில்) வழங்க முடியுமானால் ஏன் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.