Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGTI) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ளது

Featured Replies

இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறு­வனம் (SLGTI) கிளி­நொச்­சியில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது
 

இலங்கை அர­சாங்­கத்­து­ட­னான பங்­காண்மை அடிப்­ப­டையில் ஜேர்மன் அபி­வி­ருத்தி கூட்­டாண்மை (GIZ) அமைப்­பினால் செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறு­வனம் கிளி­நொச்­சியில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

 

953SLGTI-1.jpg

 

இது தொடர்­பாக கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் திறன் விருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க, இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான ஜேர்மன் உயர்ஸ்­தா­னிகர் கலா­நிதி. ஜுவெர்ஜென் மொர்ஹார்ட் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

 

கிளி­நொச்­சியில் நிறு­வப்­பட்­டுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறு­வனம் ஜுலை 18 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் உத்­தி­யோ­க பூர்வமாக அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.


ஜேர்­ம­னியின் பொரு­ளா­தார கூட்­டாண்மை மற்றும் அபி­வி­ருத்தி அமைச்சின் சார்­பாக Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH மற்றும் Kreditanstalt für Wiederaufbau (German Development Bank- KfW) ஆகி­ய­வற்­றினால் முன்­னெ­டுக்­கப்­படும் இலங்­கையின் வடக்கு கிழக்கு பகு­தியில் செயற்­ப­டுத்­தப்­படும் தொழிற்­ப­யிற்சி செயற்­றிட்­டத்தின் ஒரு அங்­க­மாக இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறு­வனம் அமைந்­துள்­ளது.

 

இந்த செயற்­றிட்­டத்­துக்கு இணை நிதி உதவி சுவிட்­ஸர்­லாந்து அர­சாங்­கத்தின் குடி­பெ­யர்வு செய­லாளர் நாய­கத்­தினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. வாகன தொழில்­நுட்பம், நிர்­மாண தொழில்­நுட்பம், உணவு பதப்­ப­டுத்தல் தொழில்­நுட்பம், எந்­தி­ர­வியல் பொறி­யியல் மற்றும் மின்­சார மற்றும் மின் தொழில்­நுட்பம் போன்ற துறை­களில் உயர் தரம் வாய்ந்த தொழிற் பயிற்­சிகள் வழங்­கப்­படும்.

 

ஆங்­கில மொழியில் சகல பயிற்சி செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­படும். திறன் விரு த்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க கருத்து தெரி­விக்­கையில், “இந்த துறை­களில் அதி­க­ளவு வாய்ப்­புகள் காணப்­ப­டு­வ­தாக இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­த­துடன், அவர்­க­ளுக்கு உயர்ந்த பயிற்­சி­களைப் பெற்று ஆளுமை படைத்த ஊழி­யர்­க­ளாக திக­ழக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

இலங்­கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நாட்டின் ஏனைய பாகங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கும் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறு­வ­னத்தின் மூல­மாக பெறு­மதி வாய்ந்த துறைசார் அறிவை பெற்றுக் கொள்­ளவும் சந்தை அடிப்­ப­டை­யி­லான அறிவை பெற்றுக் கொள்­ளவும் வாய்ப்­புகள் வழங்­கப்­படும்.

 

போட்­டி­க­ர­மான தொழில் சந்­தையில் அவர்­க­ளுக்கு தொழில் கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்­பு­களை இது பெரு­ம­ளவில் அதி­க­ரிக்கும்” என்றார். வரு­டாந்தம் 200 மாண­வர்கள் உள்­வாங்­கப்­பட்டு பயிற்­சிகள் வழங்­கப்­ப­ட ­வுள்­ள­துடன், அவர்­க­ளுக்கு தேசிய தொழிற்­ப­யிற்சி தகைமை (NVQ) கட்­ட­மைப்­புக்­க­மைய NVQ Level 4 4 முதல் 6 வரை­யான பயிற்­சிகள் வழங்­கப்­படும்.


க.பொ.த. சாதா­ரண தரம், க.பொ.த. உயர் தரம் மற்றும் NVQ Level 3 மற்றும் 4 தகை­மை­களைக் கொண்­ட­வர்­க­ளுக்கு இலங்கை – ஜேர்­மனி பயிற்சி நிறு­வனம் கற்­கை­களை வழங்கும்.


அறி­முக நிகழ்வில், இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான ஜேர்­மனி உயர்ஸ்­தா­னிகர் கலா­நிதி. ஜுவெர்ஜென் மொர்ஹார்ட் கருத்து தெரி­விக்­கையில், “இலங்கை மற்றும் ஜேர்­மனி ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பரஸ்­பர உறவை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான சிறந்த ஆரம்­பப்­ப­டி­யாக இந்த இலங்கை – ஜேர்­மனி பயிற்சி நிறு­வனம் அமைந்­தி­ருக்கும். நாட்டின் அபி­வி­ருத்தி செயற்­பாட்­டுக்கு தொடர்ச்­சி­யான முத­லீ­டுகள் மற்றும் அர்ப்­ப­ணிப்பு ஆகியன ஜேர்மனியால் காண்பிக்கப்படுகிறது” என்றார்.

- See more at: http://www.metronews.lk/business.php?business=953&display=0#sthash.0Xn7Vfn7.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.