Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாசிக்குடாவில் மீனவர்களின் காணிகளை அபகரிக்க முயற்சி

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையில் மிகவும் பிரபல்யமான கல்குடா, பாசிக்குடா பகுதியில் உள்ள மீனவர்களின் வாடி அமைக்கப்பட்டுள்ள இடங்களை அரசாங்கம் சுற்றுலாத் துறைக்காக அபகரிக்க முயற்சி செய்வதாக அங்குள்ள மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பாக பாதிக்கப்படவுள்ள மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சியாளர் காலங்களில் இருந்து சுற்றுலாத் துறைக்காக தங்களது தொழில் செய்வதற்கு உகந்ததாக இருந்த கடல் வள காணிகளை அபகரித்து இறுதியாக ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தங்களது கடல் வள காணிகளை விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்களது தொழில் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளனர் .

தற்போது மிகுதியாக உள்ள இந்த இடத்தையும் விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தெரிவித்துள்ளமை மிகவும் வேதனை அழிப்பதாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது எங்களை தொழில் இல்லாமல் ஆக்குவதற்கான நடவடிக்கையா?

நாங்கள் எங்கு சென்று தொழில் செய்வது என்று தெரியாமல் இருக்கின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பட்சத்தில் நாங்கள் எங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 5 வருடங்களில் பல இடங்களுக்கு எங்களை மாறி மாறிப் போக கூறி இனி எங்களுக்கு போவதற்கு இடம் இல்லாமல் போயுள்ளது.

மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடி ஒரு சுற்றுலாத்துறை தேவையா?

கிழக்கு மாகாண அரசியல்வாதிகளே! எங்கே இருக்கின்றீர்கள் என தங்களது ஆதங்கங்களை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.

http://www.tamilwin.com/lifestyle/01/109695

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.