Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைப்பது பொருத்தமானது?

Featured Replies

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் இலகுவான போக்கு வரத்தை மேற்கொள்ளக்கூடியதும், அதிகமான மக்கள் பயனடையக்கூடியதுமான இடத்தில் அமைய வேண்டும் என்பதே வடக்கு மக்களில் எதிர்பார்ப்பகும்.

வட மாகாணத்தின் மத்திய பகுதி என நோக்கும்போது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம் பகுதி காணப்படுகின்றது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் இலகுவான போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடிய ஐந்து மாவட்டங்களின் பிரதான போக்குவரத்து வீதிகள் சங்கமிக்கும் இடமாக (இரண்டாவது மையமாக) பரந்தன் சந்தி காணப்படுகின்றது. அத்துடன், சனத்தொகையில் அதிக மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அண்மையாகவும் காணப்படுகின்றது.

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வடமாகாண மக்கள் பயனடையக்கூடியதாக மக்கள் விருப்பப்படியே அமைக்கப்பட வேண்டும். மக்களது விருப்புக்கு மாறாகவும் தூர நோக்கற்ற முறையிலும், அரசியல் நோக்கம் கருதியும் அமைக்கப்படுமானால் மக்கள் நன்மையடைவார்கள் என்பது கேள்விக்குரியதாகும்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களை இணைக்கும் ஏ9 வீதியும், மன்னார் மாவட்டத்தை இணைக்கும் ஏ32 வீதியும், முல்லைத்தீவு மாவட்டத்தை இணைக்கும் ஏ35 வீதியும் சந்திக்கும் முக்கிய இடமாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்தி காணப்படுகின்றது.

வட மாகாணத்தில் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் போன்றோரது தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையிலும், அவர்களது வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையிலும் பொருளாதார மத்திய நிலையம் அமைந்து வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.

வட மாகாணத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமக்குள்ளே தீர ஆராய்ந்து மக்களுக்காக சரியான முடிவெடுத்து, பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களது கோரிக்கையாகக் காணப்படுகின்றது. அவ்வாறு செய்தால் மட்டுமே அது, வடமாகாண பொருளாதார மத்திய நிலையம். எனவே இது வட மாகாணத்தின் மத்திய பகுதியில்தான் அமையப்பெற வேண்டும்.

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் வடமாகாணத்தின் மத்திய பகுதியாகக் கருதப்படுகின்ற மாங்குளம் பகுதியில் அமைய வேண்டும். அல்லது இரண்டாவது மையமாகவுள்ள வடமாகாணத்தின் முக்கிய சந்தியாகவுள்ள கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் அமைய வேண்டும்.

இதுவே, வடமாகாண மக்கள் பலரது கருத்தாகவும் கோரிக்கையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/development/01/109938

  • தொடங்கியவர்

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம்! முல்லை மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கம் எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல்வாதிகள் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க ஓமந்தையை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதிக விவசாயிகள் கொண்ட வன்னி மாவட்டத்தில் அவர்கள் பாரிய பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத் தலைவர் எஸ்.சிவபாதம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மத்திய நிலைய இழுபறி நிலை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடம் தொடர்பில் ஆராய்கிறார்கள். அதில் தாண்டிக்குளம், ஓமந்தை, மாங்குளம் என பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கு 99 வீதமான விவசாய அமைப்புக்கள், விவசாய மக்கள் ஓமந்தை என்ற இடத்தில் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனை அரச அதிகாரிகளுக்கும், எமது அரசியல் தலைமைகளிடமும் மக்கள் முன்வைத்து வருகிறார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் இதனை தனிநபர் முரண்பாடு காரணமாக செயற்படுகிறார்கள். விக்கினேஸ்வரன் ஐயா இவ்வாறு கூறுகிறார். அதனால் அவருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக தெரிகிறது. இது தமிழினத்திற்கு பாராதூரமான ஒரு விளைவைத் தரும்.

தாண்டிக்குளம் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கு விவசாய பண்ணை, விதை உற்பத்தி பண்ணை, விவசாய கல்லூரி என்பன இருக்கிறது. இந்த விவசாய கல்லூரி பல ஆண்டுகளாக பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் அவ்விடத்திற்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் தெற்கு பகுதியில் உள்ள விவசாய கல்லூரிகள் சென்று தான் எமது வடபகுதி மாணவர்கள் கற்றல் மற்றும் விவசாய ஆய்வுகளில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பல இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தார்கள். அதனால் ஒரு கட்டத்தில் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் தென்பகுதியில் சென்று கல்வி கற்காத, அங்கு போகாத நிலை இருந்தது. இதனால் முன்னைய அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் கடும் போராட்டம் நடத்தியதன் விளைவாக தான் வவுனியாவில் விவசாய கல்லூரியை அரசாங்கம் அமைத்தது. அந்த விவசாய கல்லூரிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது எந்தவகையிலும் பொருந்தாது.

அந்த பகுதியில் உள்ள சத்தியலிங்கம் ஐயா, சிவமோகன் ஐயா அவர்களும் தாண்டிக்குளத்தில் தான் அமைக்க வேண்டும் என கோருகிறார்கள். உண்மையில் தாண்டிக்குளம் பொருத்தமில்லை. ஆனால், ஓமந்தையில் அமைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அங்கு போதியளவு காணி இருக்கிறது. வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் வரை வருகிறது. தாண்டிக்குளத்திற்கு அப்பால் ஓமந்தையில் இருந்து கனகராயன்குளம் வரை மாங்குளம் சந்தி நோக்கி நிறைய காணிகள் இருக்கிறது. அவ்வாறான இடத்தை தெரிவு செய்வதை விடுத்து தாண்டிக்குளத்தை தெரிவு செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லை. இதனை செய்பவர்களது அரசியல் வாழ்க்கை கூட கேள்விக் குறியாகத் தான் இருக்கும்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை பெறாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விருப்பத்தை பெற்று அதனை அமைக்கவுள்ளதாக சம்மந்தன் ஐயா தெரிவித்திருக்கிறார். ஆனால் மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். அதற்கேற்ப தான் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். ஆனால் அதைவிடுத்து ஒரு தனிநபர் போராட்டம் நடத்துவது மாதிரி தெரிகிறது. ஒரு சிலர் மீது கோபத்தை வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் இடத்தில் அமைக்க கூடாது என அவர்கள் கூறுவது போல் தான் போய் கொண்டு இருக்கிறது. ஆனால், எங்களுடைய அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும். விவசாயிகளுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும். அதற்காக எமது அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு ஓமந்தைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என விவசாய அமைப்புக்கள், விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அதிக விவசாயிகளைக் கொண்ட வன்னி மாவட்டத்தில் அவர்கள் பாரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களிடமும் விவசாய அமைப்புக்கள் பல ஓமந்தையை தெரிவு செய்யுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/economy/01/109962

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தனிமனித கட்சி மற்றும் சங்கங்கள் என்று பிரிந்து நிற்காது பொதுக்கருத்தோடும் திறந்த மனதோடும் முடிவெடுக்க வேண்டியது அவசியமானது. இங்கு பிரதேச பிராந்திய வாந்திகளுக்கு இடமளிக்கக்கூடாது. அனைத்து பகுதிகளுக்கும் மத்தியாகவும் இணைப்பாக அமையவேண்டும். அதுதான் பொருத்தமானது. மாங்குளம் முதலாவது தெரிவாக அமைதல் நல்லது. பொதுவாக மாகாணசபை வளாகம், செயலகம், அமைச்சுகள், என அனைத்துமே மாங்குளத்திலே அமையவேண்டும். கிழக்கு மேற்காகவும் வடக்குத் தெற்காகவும் பார்க்கும்போது அண்னளவாக மத்தியிலே வருகிறது. யாழ்ப்பாணம் 93கி.மீற்றரிலும் மன்னார் 96கி.மீற்றரிலும் இருக்கிறது. வீதிகள் மேலும் அபிவிருத்தி செய்யும்போது அல்லது புதிய தூரத்தைக் குறைக்கும் வீதிகளை அமைக்குபோது பயண நேரங்கள் மேலும் குறையலாம். ஏன் இந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை ஒரு புலமைசார் குழுவை அமைத்து ஆய்வு செய்து தீர்க்கமான முடிவைத் தலைமைகள் கூடி எடுப்பதே நன்று.


ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையே அமைக்க முடியாதவர்கள் எப்படித் தமிழினத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுத்துத் தரப்போகிறார்கள் என்று பாமரத் தமிழர் கொடுப்புக்குள் சிரிக்கும் நிலைக்குச் செல்லாதிருப்பதே உங்களுக்கு நல்லது.

  • தொடங்கியவர்

இது எனது கருத்து இல்லை!

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாய, வர்த்தக அமைப்புகளின் கருத்து.

On 5/7/2016 at 11:02 AM, போல் said:

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம்! முல்லை மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கம் எச்சரிக்கை

விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடம் தொடர்பில் ஆராய்கிறார்கள். அதில் தாண்டிக்குளம், ஓமந்தை, மாங்குளம் என பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கு 99 வீதமான விவசாய அமைப்புக்கள், விவசாய மக்கள் ஓமந்தை என்ற இடத்தில் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனை அரச அதிகாரிகளுக்கும், எமது அரசியல் தலைமைகளிடமும் மக்கள் முன்வைத்து வருகிறார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் இதனை தனிநபர் முரண்பாடு காரணமாக செயற்படுகிறார்கள். விக்கினேஸ்வரன் ஐயா இவ்வாறு கூறுகிறார். அதனால் அவருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக தெரிகிறது. இது தமிழினத்திற்கு பாராதூரமான ஒரு விளைவைத் தரும்.

தாண்டிக்குளம் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கு விவசாய பண்ணை, விதை உற்பத்தி பண்ணை, விவசாய கல்லூரி என்பன இருக்கிறது. இந்த விவசாய கல்லூரி பல ஆண்டுகளாக பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் அவ்விடத்திற்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் தெற்கு பகுதியில் உள்ள விவசாய கல்லூரிகள் சென்று தான் எமது வடபகுதி மாணவர்கள் கற்றல் மற்றும் விவசாய ஆய்வுகளில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பல இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தார்கள். அதனால் ஒரு கட்டத்தில் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் தென்பகுதியில் சென்று கல்வி கற்காத, அங்கு போகாத நிலை இருந்தது. இதனால் முன்னைய அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் கடும் போராட்டம் நடத்தியதன் விளைவாக தான் வவுனியாவில் விவசாய கல்லூரியை அரசாங்கம் அமைத்தது. அந்த விவசாய கல்லூரிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது எந்தவகையிலும் பொருந்தாது.

அந்த பகுதியில் உள்ள சத்தியலிங்கம் ஐயா, சிவமோகன் ஐயா அவர்களும் தாண்டிக்குளத்தில் தான் அமைக்க வேண்டும் என கோருகிறார்கள். உண்மையில் தாண்டிக்குளம் பொருத்தமில்லை. ஆனால், ஓமந்தையில் அமைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அங்கு போதியளவு காணி இருக்கிறது. வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் வரை வருகிறது. தாண்டிக்குளத்திற்கு அப்பால் ஓமந்தையில் இருந்து கனகராயன்குளம் வரை மாங்குளம் சந்தி நோக்கி நிறைய காணிகள் இருக்கிறது. அவ்வாறான இடத்தை தெரிவு செய்வதை விடுத்து தாண்டிக்குளத்தை தெரிவு செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லை. இதனை செய்பவர்களது அரசியல் வாழ்க்கை கூட கேள்விக் குறியாகத் தான் இருக்கும்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை பெறாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விருப்பத்தை பெற்று அதனை அமைக்கவுள்ளதாக சம்மந்தன் ஐயா தெரிவித்திருக்கிறார். ஆனால் மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். அதற்கேற்ப தான் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். ஆனால் அதைவிடுத்து ஒரு தனிநபர் போராட்டம் நடத்துவது மாதிரி தெரிகிறது. ஒரு சிலர் மீது கோபத்தை வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் இடத்தில் அமைக்க கூடாது என அவர்கள் கூறுவது போல் தான் போய் கொண்டு இருக்கிறது. ஆனால், எங்களுடைய அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும். விவசாயிகளுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும்..

http://www.tamilwin.com/economy/01/109962

தாண்டிக்குளத்திற்கு அப்பால் ஓமந்தையில் இருந்து கனகராயன்குளம் வரை மாங்குளம் சந்தி நோக்கி நிறைய காணிகள் இருக்கிறது. அவ்வாறான இடத்தை தெரிவு செய்வதை விடுத்து தாண்டிக்குளத்தை தெரிவு செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.