Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை மதிக்காத மங்கள பதவி விலகவேண்டும்!.

Featured Replies

ஜனாதிபதியை மதிக்காத மங்கள பதவி விலகவேண்டும்!.
 
 
ஜனாதிபதியை மதிக்காத மங்கள பதவி விலகவேண்டும்!.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை சவாலுக்கு உட்படுத்திய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலக வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
 
 நடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவோ, அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி ஒன்றை வகிக்கவோ தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.
1467969450_download%20%287%29.jpg
 
 ஜனாதிபதியின் கருத்தை மறுதலிக்கும் வகையில் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில்  மங்கள கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஒரு ஜனநாயக நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவரது கருத்துக்கு மதிப்பளிக்காது வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தானது ஜனாதிபதியின் கருத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தினேஸ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.
 
 வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது, உள்ளக பொறிமுறை விசாரணை தொடர்பிலான விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை என்று கூறியிருந்ததுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கருத்துக்கள் இறுதியான முடிவாகக் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

http://onlineuthayan.com/news/14777

வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை சர்ச்சை! மங்களவுக்கு எதிராக போர் கொடி

ஜனாதிபதியின் கருத்துக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பின் தினேஸ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்ற வாளகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

யுத்தக்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தனது முடிவில் நிலையாகவும், உறுதியாவுகம் இருக்கின்றார். எனினும், ஜனாதிபதியின் கூற்றை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.

இது அமைச்சரவை சட்டம், மற்றும் சம்பிரதாயம் போன்றவற்றை மீறும் செயல் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், இந்த செயற்பாடனது பாரிய பிழையான ஒன்றாகும். எனவே, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக்குற்ற விசாரணைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதே நீதிபதிகளை கோரியுள்ளனர். எனினும் ஜனாதிபதி அதற்கு பகிரங்கமாகவே மறுப்பு வெளியிட்டுள்ளார். யார் என்ன கூறினாலும் அரசியலமைப்பின் படி எந்தவொரு வெளிநாட்டு நீதிபதியையும் நியமிக்க இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பில் உள்ள விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/110385

அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சித்த சுயாதீனத்துடன் இருக்கின்றாரா என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிக்கியுள்ளார். அமெரிக்கா, வெளிவிவகார அமைச்சரை முடக்கி கேள்வி கேட்கின்றது.

அமெரிக்காவின் பிரேரணையில் அமைச்சர் மங்கள சமரவீரவும் கையெழுத்திட்டுள்ளார்.

இதனை நிறைவேற்றுமாறு அமெரிக்கா தற்பொழுது அவருடைய கழுத்தை நெரிக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்குள் வெளிவிவகார அமைச்சர் சிக்கியுள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை மீறி கருத்து வெளியிட அவருக்கு அனுமதி வழங்க முடியாது.

அரச தலைவரின் கருத்தையும் திரிபுபடுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் செயற்படுகின்றார்.

மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளினால் மத்திய வங்கியின் ஆளுனரை எம்மால் நீக்க முடிந்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தினால் பிரதமர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/110388

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.