Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினர் சுட்டனர்; கிளிவெட்டி படுகொலை வழக்கில் சாட்சியம்

Featured Replies


இராணுவத்தினர் சுட்டனர்; கிளிவெட்டி படுகொலை வழக்கில் சாட்சியம்
 
 

article_1467969049-gunfire.jpgபொன் ஆனந்தம்

'தனலெட்சுமி என்பவரும் நானும்  கிளிவெட்டிக்கு ரியூசனுக்கு சென்றுகொண்டிருந்தபோது,  இராணுவத்தினர் சுட்டுக்கொண்டே வீதியால் வந்தார்கள். இதன்போது, அருகில் இருந்த முத்து அண்ணனின் கடைக்குள் சென்று நான் ஒழிந்தேன். என்னோட வந்த தனெலெட்சுமியும்; மேலும் பலரும் சுடப்பட்டு இறந்ததை நான் நான் பின்னரே அறிந்தேன்' என  ஜோசப் மோசஸ் அன்ரனி (வயது 30) என்பவர் சாட்சியமளித்தார்.

திருகோணமலை, கிளிவெட்டிப் பிரதேசத்தில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில்  நடைபெற்றுவருகின்றது.

ஜூரிகள் சபையின் முன்னிலை, எட்டாவது நாளாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின்போதே  அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.  

இன்றைய விசாரணைக்காக  சம்பவத்தைக் கண்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்கள் அழைக்கப்பட்டனர். இதன்படி பத்து பேர் சாட்சியமளித்தனர்.  

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், 'சம்பவம் நடந்தபோது எனக்கு பத்து வயது. என்னோடு வந்த அருமைத்துரை தனலெட்சுமிக்கு பதினாறு வயது. இருவரும் சைக்கிளில் பாரதிபுரம் கிராமத்தில் இருந்து ரியூசனுக்கு போய்வந்தனாங்க . என்னை தனலெட்சுமி ஏற்றி செல்வார். அன்றையதினம் நாம் வீடுவர நேரம் சற்று தாமதமாகிவிட்டது. அப்போது குமாரபுரம் பகுதியில் நாம் வரும்போது இராணுவத்தினர் வெடி சுட்ட வண்ணம் ஓடிவந்தனர்.

அதைக்கண்ட நாங்கள் பயத்தின் காரணமாக வீதிக்கருக்கில் இருந்த தேனீர் கடையான முத்து அண்ணனின் கடைக்குள் சென்றோம். என்னுடன் மேலும் பலரும் சென்றனர.; பின்னர் இராணுவத்தினர் சுற்றி நின்று கூப்பிட்டனர். பலர் வெளியே போனார்கள.; ஆனால் நான் போகவில்லை. உள்ளே புகுந்து படுத்துவிட்டேன். அப்போது இராணுவத்தினர் சுட்ட வெடியெல்லாம் எனது காலில் பட்டது. இதனால்  வெடிசத்தம் மற்றும் காயம் காரணமாக நான் மயங்கி விட்டேன்.

பின்னர் அடுத்த நாள் தான் தெரிந்தது என்னை ஏற்றி வந்த  அருமைத்துரை தனலெட்சுமியும் கெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று. அத்துடன் கிராமத்தில் பலர் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரியவந்தது.  எனது கால் காயத்தை ஆற்ற நான் பின்னர் மிகுந்த சிரமப்பட்டேன். ஆனாலும் அது முறையாக சீராக வில்லை' என்றார்.

இவருடன்  மாரிமுத்த மகேஸ்வரன்(58),மகேஸ்வரன் சுகந்தினி (24),ஜே.ஜெயநாதன்(46),? சிவகுணம் புவிதரன்(42),இராசதுரை  சத்தியபாமா(37),கணபதிப்பிள்ளை குமதினி(45) நந்தகோபால் நாக நந்தினி (32), அழகுதுரை புவனேந்தினி 23),திருப்பதி மஞ்சுளாதேவி (24) என்பவர்களும் சாட்சியமளித்தனர். பலர் காயம்பட்டதுடன் பலர் நேரடியாக சம்பவங்களைக்கண்டவர்களுமாக இருந்தனர.; மேலும் 13 பேருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விசாரணைகளில் கிளிவெட்டி நெல் சந்தைப்படுத்தல் கட்டிடத்திலஹெலிகொப்டரில்  இராணுவத்தினர் வந்து இறங்கியதை தாம் கண்டதாகவும் தெரிவித்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/176548/இர-ண-வத-த-னர-ச-ட-டனர-க-ள-வ-ட-ட-பட-க-ல-வழக-க-ல-ச-ட-ச-யம-#sthash.xbEWGz0T.dpuf

கடைக்கு சென்றபோது வீதியால் வந்த இராணுவத்தினரே துப்பாக்கியால் சுட்டனர் என திருகோணமலை குமரபுரம் படுகொலை வழக்கு குறித்து சாட்சியம் வழங்கிய ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு குறித்த பகுதியில் இடம்பெற்ற இப்படுகொலையின் போது சுமார் 26 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இது குறித்த வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இன்று ஒன்பதாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன் போது சாட்சியமளித்த 49 வயதான லட்சுமி என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். ”இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததும் அந்தக் கடைக்குள் புகுந்து விட்டோம்.

இராணுவ வீரர்களில் ஒருவர், என்னை அழைத்து தப்பி ஓடுமாறு கூறினார். எனினும், கடைக்குள் இருந்த பலரையும் இராணுவத்தினர் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதுடன், சிலர் வெடி காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் சாட்சியம் வழங்கிய இராசையா நாகேஸ்வரி என்பவர் குறிப்பிடுகையில், நான் வீதியால் சென்று கொண்டிருந்தேன்.

அந்த வீதியால் வந்த முஸ்லிம் நபர்கள் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என கூறி அவசரமாக ஓடினார்கள்.

செய்வதறியாத நான், அருகில் இருந்த அழகுதுரை லட்சுமி என்பவரது வீட்டிற்குள் புகுந்தேன். அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், லட்சுமி உயிரிழந்தார். அதனை நான் நேரில் கண்டேன். எனினும், சம்பவத்தின் போது பதற்றத்திலிருந்தமையால் சுட்டவர் யாரென அடையாளம் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நான்கு பேர் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/110386

 

குமரபுரம் படுகொலை! இன்றும் 10 பேர் சாட்சியம்

திருகோணமலை குமரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் இன்றும் 10 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இப்படுகொலையின் போது சுமார் 26 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இது குறித்த வழக்கு விசாராணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம், நீதிமன்றில் முன்னிலையான, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்கள் என 10 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் மேலும் 13 பேருக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகளில் தற்போது வரை 32 பேர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/110275

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.