Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை - ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது:-

Featured Replies

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை - ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது:-

 

வ.ஐ.ச. ஜெயபாலன்:-

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை - ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது:-

 

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை - ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது:
வ.ஐ.ச. ஜெயபாலன்

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது என்று ஈழக் கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் கூறுகிறார்.

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை குறித்து தனது முகநூலில் பதிவிட்ட கருத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது குறிப்பு.

1977 இனக்கலவரம் வரைக்கும் யாழ்பாணம் மாவட்ட சந்தைகளுக்கு நேரடியாகவே சிங்களப் பகுதிகளில் இருந்து லொறிகளில் பொருட்கள் தங்கு தடையின்றி வந்தன.

1977க்கு பின் சந்தை மையம் சாவகச்சேரி கிளிநொச்சி என தெற்கு நோக்கி நகர்ந்தன. 1983 இனக்கலவரத்துக்குப் பின் சந்தை கிளிநொச்சியென்று ஆகினது. தொடர்த யுத்தம் சந்தையை மேலும் தெற்க்கு நோக்கித் தள்ளியது. இறுதியில் வவுனியாவே தென்பகுதிச் சந்தைப் பொருட்களை வடக்குக்கு மாற்றும் பெருஞ்சந்தையாக உருவாகியது.

போர் காரணமாக ஆரம்பத்தில் கொழும்பு, நீர்கொழும்பு, புத்தளம் என்று தென்னிலங்கைக்குப் பெயர்ந்த மக்கள் பின்னர் வவுனியாவில் குடியமர ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம், முல்லைதீவில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் ஒருபகுதியினரும் வவுனியாவில் குடி யேறினார்கள்.

இன்றைய வவுனியா நகர வளற்ச்சிக்கும் யுத்ததுக்கும் உள்ள சம்பந்தம் விரிவாக ஆரயப்பட வேண்டியது அவசியம். இப்ப உள்ள சூழலில் மீண்டும் வர்த்தகமும் மக்களும் வடக்கு நோக்கிய பெயர ஆரம்பிப்பார்கள் என்றே கருதுகிறேன்.

மேற்படி பின்னணியில் வவுனியா நகரம் மதவாச்சி மாவட்டத்துக்குள் தெற்காக வளராமல் வடக்கு நோக்கி வளருவது ஊக்குவிக்கப் படுதல் வேண்டும்.

வட மாகாண பொருளாதார "மத்திய" நிலையம் ஓமந்தை பொருத்தமான தெரிவு. குறைந்த பட்சம் ஓமந்தை தாண்டிக்குள பகுதிகளுக்குள் விவசாய பள்ளியை பாதிக்காமல் அமையலாம்.

ஓமந்தையில் அமைவதில் உள்ள நன்மை வவுனியாவும் ஓமந்தையும் வடக்கு நோக்கி இரட்டை நகரங்களாக வளர்ந்து மேன்மைபெறும்.

ஓமந்தையில் மையம் அமைவது தொடர்பாக முஸ்லிம் வர்தகர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், அதனை வடமாகாண சபையும் முஸ்லிம் வர்த்தகர்களும் நேரடியாகவும் தமிழ் முஸ்லிம் தலைவர்களூடாகவும் பேசி சமரசமாகவும் நீதியாகவும் தீர்க்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட பணம் திட்டங்களில் முதலிடப்படாமல் திரும்பிச் செல்வது தலைவர்களின் அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையின்மையாகவே கருதப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133841/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்படவேண்டும்.

omanthaiவவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பாக வாதங்கள், பிரதி வாதங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் வவுனியாவில் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்களின் எதிர்காலம், பிரதேச பொருளாதார கட்டமைப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முதலியவற்றை கருத்தில் கொண்டு அமைவிடம் தொடர்பான முடிவை முன்வைக்க வேண்டுமென சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட செயலாளர் சு.டொன்பொஸ்கோ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வடமாகாண முதலமைச்சர் முன்மொழியும் ஓமந்தையா அல்லது மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் கூறும் தாண்டிக்குளமா உகந்தது என சீர்தூக்கிப் பார்க்கும்போது ஒமந்தையே சிறப்பானது என எமது அமைப்பு கருதுகின்றது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு

பாலமோட்டை, கனகராயன்குளம், மாமடு, நெடுங்கேணி, நட்டாங்கண்டல் போன்ற வவுனியா மாவட்ட விவசாய பிரதேசங்களின் போக்குவரத்து வலையமைப்பின் மத்திய நிலையமாக ஓமந்தையே காணப்படுகின்றது. யுத்த காலத்தின் முன் உப நகரமாக வளர்ச்சியுற்று வந்த இந்நகரை மீளக்கட்டியெழுப்பவும், வவுனியா நகரின் சன நெருக்கடியைக் குறைக்கவும், நகர விஸ்தரிப்பிற்கான வசதியை பெருமளவில் கொண்டிருக்கின்ற இவ்விடம், மத்திய கல்லூரி, வங்கிச் சேவை, மருத்துவ நிலையம், புகையிரத நிலையம், ஏ9 போக்குவரத்துப் பாதை என்பவற்றை ஏற்கனவே கொண்டிருக்கின்றது. மக்கள் செறிவு குறைவாகவும், இடவசதி அதிகமாகவும் ஓமந்தை காணப்படுவதால் கழிவகற்றலை இலகுவாக செய்யவும், வாகன நெரிசல், ஓசை எழுப்புதல் போன்ற சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பராமரிப்பது என்பன இலகுவாகின்றது. மேலும் தாண்டிக்குளத்தில் இந்நிலையம் அமையுமானால் பின்வரும் பாதிப்புக்கள் ஏற்படும். திட்டமிடப்படாத வகையில் வவுனியா நகரம் உருவாகியுள்ளதால், போக்குவரத்து நெருக்கடியும், சனச்செரிவு அதிகமாகவும் காணப்படுகின்றது. நிலையம் இங்கு அமையுமானால் மேலும் நெருக்கடி ஏற்படும். சூழல் மாசடைதலும், கழிவகற்றலில் இடர்பாடுகளும் ஏற்படும்.

வடமாகாணத்தில் தமிழ்மொழி மூலமான விவசாயக் கல்லூரிச் செயற்பாடுகளிலும், அபிவிருத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு விவசாய விதை உற்பத்தி ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே இவ்விடயம் மாகாண சபைக்குரியதாக இருப்பதால் மாகாணசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து நாட்டின் அபிவிருத்தி, மக்களின் நலன், சூழல் பாதிப்பு முதலியவற்றை கருத்தில்கொண்டு ஒருமித்த முடிவைக் காணவேண்டும் என்பதுடன் இவ்விடயத்தில் வட-கிழக்கில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராபட்சமாக இருப்பதன் மூலம் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த வரலாற்றுத் தவறினை விட்டுவிட வேண்டாம் என்பதையும் எமது அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது என அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

http://inioru.com/vavuniya-district-economic-center/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.