Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி, பிரதமருடன் ‘போடோ சூட்’ செய்யவா கொழும்பு வந்தார்கள்?

Featured Replies

வடக்கு ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி, பிரதமருடன் ‘போடோ சூட்’ செய்யவா கொழும்பு வந்தார்கள்?

 

வடக்கு ஊடகவியலாளர்களே மனோ கணேசனின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

 

 

கடந்த காலத்தில் வடக்கு ஊடவியலாளர்களுக்காக போராடியவர்களை சந்திக்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் போட்டு சூட் செய்துகொள்ள மாத்திரமா வடக்கு ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

வடக்கு ஊடகவியலாளர்களின் கொழும்பு பயணம் தொடர்பில் முக நூலில் இட்ட பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு, 

இந்த நொடியில் என் மனதில் - 09/07/16

வந்தார்கள்;கண்டார்கள்;போனார்கள், என்பதாக திடீரென வடக்கில் இருந்து தமிழ் ஊடக நண்பர்கள் (படத்தில் பார்த்தால் நிறைய பேர்) கொழும்பு வந்து போனதாக ஒருநாள் செய்திகளில் கண்டேன். அதற்கு முதல்நாள் முற்பகல் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பில், சில மணி நேர இடைவெளியில், அன்று மாலையே இலங்கை மன்ற கல்லூரியில், வடமாகாண ஊடகவிலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கின்றது, வாருங்கள் என்று சொல்லப்பட்டது.

அன்று மாலை, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இருந்ததால், என்னால் அதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

அவ்வளவுதான். இது ஏதோ ஒருநாளுக்குள் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பயணமோ? அப்படியானால் அது ஏன்? ஏனப்பா இந்த அரைகுறை அவசர விஜயம்?

இதற்கு முன் இங்கே இருந்து ஒரு ஊடக குழுவினர் அங்கே வந்தார்கள். என்னையும் யாழ் வரும்படி ஒரு ஏற்பாட்டாளர் அழைத்தார். வேறு வேலை இருந்ததால் நான் வரவில்லை. ஆனால், என்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கினேன்.

 

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், ஊடக அமைச்சர் ஆகியோரை சந்தித்தது மிக நல்ல விடயம். ஆனால், இவை மாத்திரம் போதும் என்று நினைத்து விட்டீர்களோ? தலைநகர மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ கட்சியாக ஒரு அமைச்சரவை அமைச்சர், அதுவும் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாகாணசபை உறுப்பினர்கள் இருவர், மாநகரசபை உறுப்பினர்கள் ஆறு பேர் என்போரை கொண்ட நமது கட்சி இங்கே இருக்கிறது. கட்சி அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், எங்களது தொலைபேசி இலக்கங்கள், முகநூல் உள்பெட்டிகள், நிலையான விலாசங்கள், என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. ஊடகவியாளர்களுக்கு இவை தெரியாமல் இருக்கவும் முடியாது.

 

தலைநகரம் வந்த உங்களை உடன்பிறப்புகளாக மகிழ்வுடன், அழைத்து, விருந்தோம்பல் செய்து, அனுப்பி வைக்க எம்மால் முடியாது என எண்ணி விட்டீர்களோ? முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தால், எத்தனையோ அரசியல், சமூக, கலாச்சார, ஊடக தலைப்புகளில் எவ்வளவோ விஷயங்களை மனம் விட்டு கலந்து உரையாடி, இருக்கலாமே? பல சிக்கல்களுக்கு விடை தேடியும் இருக்கலாமே?

 

அன்று கடந்த ஆட்சியில் அங்கே நீங்கள் கொல்லப்பட்ட போது, தாக்கப்பட்ட போது, கடத்தப்பட்ட போது, இங்கே இருந்து, அங்கே வந்து, என்னுடன் இணைந்து போராடி, வடக்கு ஊடக அடக்குமுறைபற்றி கொழும்பில் ஆர்ப்பரித்து பேசிய, சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகிய சிங்கள முற்போக்காளர்களையாவது சந்தித்தீர்களா என்றால் அதுவும் இல்லை. சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகியோரிடம் விசாரித்த போது, இல்லையே, அப்படியா வந்தார்களா? எப்போ? ஏன் எங்களை இவர்கள் சந்திக்கவில்லை என்று இருவரும் என்னிடம் வருத்தப்பட்டார்கள்.

 

ஆக, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை குசலம் விசாரிக்க வந்தீர்களோ? அதற்கு மொழிபெயர்ப்பாவது கிடைத்ததா? அல்லது அவர்களுடன் ‘போடோ சூட்’ செய்து படம்பிடிக்கதான் கொழும்பு வந்தீர்களோ? பிடித்த படங்களையாவது பத்திரமாக வீடுகளில் மாட்டி வைத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் வீடுகளுக்கு ஆமிக்காரன் வந்தால் எடுத்து காட்டலாம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133875/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

மனோகணேசன் அவர்களே உங்கள் கேள்விக்கான பதிலை வழங்கியிருக்கிறார்கள் வடக்கு ஊடகவியலாளர்கள்:-

 

 

மனோகணேசன் அவர்களே உங்கள் கேள்விக்கான பதிலை வழங்கியிருக்கிறார்கள் வடக்கு ஊடகவியலாளர்கள்:-

கௌரவ மனோ கணேசன்
சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர்
இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு.
 
வடக்கு ஊடகவியலாளர்களது தெற்கு பயணம்


பனையோலையும் எழுத்தாணியும் சேர்ந்ததோர் நட்புறவு பயணம் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் சுமார் 125 தெற்கு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக வடக்கிலிருந்து 54 ஊடகவியலாளர்கள் தெற்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். போக்குவரத்திலிருந்து அனைத்து நிகழ்ச்சி நிரல்களும் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சே திட்டமிட்டிருந்ததுடன் நிதி ஏற்பாட்டையும் அதுவே செய்திருந்தது. வடக்கு ஊடகவியலாளர்களை ஒருங்கிணைப்பதனை யாழ்.ஊடக அமையமும் தெற்கினில் ஒருங்கிணைக்க ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழுவும் முன்னின்றிருந்தன.

அவ்வகையில் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சருடனான சந்திப்பு பற்றி ஏதும் தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை. அத்துடன் அவர்களது நெருக்கமான நிகழ்ச்சி நிரலால் தங்களை தனிப்பட்ட வகையிலும் சந்திக்க எமக்கு நேரம் குறித்த இரு நாட்களில் கிட்டியிருக்கவில்லை.

ஜனநாயக செயற்பாட்டாளர் மனோ கணேசன் தொடர்பில் எமக்கு என்றுமே பெருமதிப்பு உண்டு.பெரும்பாலும் தங்களுடன் இணைந்து போராடிய நிகழ்வுகள் எமது மனதில் மாற்றமின்றி நினைவிலுள்ளது. அதனை மதிக்கின்றோம். இவற்றிற்கப்பால் படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவாக யாழில் பெரும் சிரமங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட அந்த நினைவு தூபியில் தங்களது பங்களிப்பு வெளித் தெரியாதவொன்றாகவே இருந்து வருகின்ற போதும் நாம் அனைத்தையும் அறிந்தே இருக்கின்றோம்.

ஜனாதிபதி, பிரதமர், ஊடக அமைச்சர் சந்திப்பில் என்ன பேசப்பட்டது, என்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட மகஜரில் என்ன இருந்ததென்பதை தாங்கள் செய்திகள் வழியாகவேனும் அறிந்திருக்காமை கவலையை தருகின்றது. தங்களிற்கும் மற்றவர்களிற்குமாக பங்கெடுத்த ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தலுடன் பேசப்பட்ட விபரங்கள்,கையளிக்கப்பட்ட மகஜர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களது நினைவுகள், கனவுகளது சாட்சியங்களாக எஞ்சி வாழும் நாம் தெளிவாகவே இருக்கின்றோம். சலுகைகளிற்காகவோ பதவிகளிற்காகவோ நாம் சோரம்போனவர்களாக இருக்கப்போவதில்லை. அல்லது எமதோ அல்லது பிள்ளைகளதோ பிறந்த நாளிற்கு அழைப்பு விடுக்கவோ சந்திப்பில் நாம் பங்கெடுக்கவில்லை என்பதும் தங்களிற்கு தெரியும்.

வடக்கு ஊடகவியலாளர்களுடன் குழு புகைப்படம் பிடிக்க கூட ஜனாதிபதி ஊடகப்பிரிவே அழைப்பு விடுத்திருந்தது. அவற்றினை பிரசுரித்ததும் அவ்வலுவலகமே. அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றில் நடைபெற்ற சந்திப்பில் பங்கெடுக்க சென்ற எவரும் புகைப்படகருவிகளையோ தொலைபேசிகளையோ  கொண்டு செல்ல அனுமதிக்கப்படாதென்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச ஊடக அமைப்புகளது கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரிக்கையை நாம் உரத்து வலியுறுத்தியமை தொடர்பில் தாங்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் நீங்கள் முடிந்தால் கேட்டறிந்து கொள்ளுங்கள். எமது கோரிக்கைகளிற்கான பதிலை அவர்களிடம் கேட்டறிந்து அறிவித்தால் இன்னமும் மகிழ்ச்சி.

நிற்க தாங்கள் சார்ந்த அமைச்சான சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அழைப்பு விடுக்குமிடத்து நல்லிணகத்தை தோற்றுவிக்க வடக்கு ஊடகவியலாளர்கள் தங்களை சந்திக்கவும் விருந்தோம்பலை தரிசிக்கவும் கொழும்பிற்கு மீண்டும் வருகை தர தயாராக உள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

தங்களது அன்புடனான அழைப்பினை எதிர்பார்த்து காத்துமிருக்கின்றோம்.

இ.தயாபரன்
இணைப்பாளர்,யாழ்.ஊடக அமையம்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133904/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

மனோகணேசனுக்கு ஓர் அன்பு மடல் - யாழ் ஊடகவியலாளர் மயூரப்பிரியன்:-

 
மனோகணேசனுக்கு ஓர் அன்பு மடல் - யாழ் ஊடகவியலாளர் மயூரப்பிரியன்:-

 

கௌரவ மனோ கணேசன்
சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு.
 
ஐயா ,
 
நான் நலம்  அதேபோல  தாங்களும் நலமாக  இருக்க இறைவன் அருள் புரிவாராக , 
 
தங்களை கடந்த  ஆட்சி  காலத்தின் போது வடக்கில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் பலதில் தங்களை கண்டுள்ளேன். தாங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிடினும் , தங்களின் பிரதிநிதியாக ஒருவர் போராட்டத்தில் கலந்து கொள்வார். ஆனால் இந்த  ஆட்சியில் தங்களையும் தங்கள் பிரதி நிதியையும் மக்கள் போராட்டங்களில் காண முடியவில்லை. நீண்ட  நாள்  ஆகிவிட்டது தங்களை கண்டு. நீங்கள்  என்றுமே  நலத்துடன் இருப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் கடிதம் ஒன்றினை தங்களுக்கு எழுதுகிறேன். 
 
வடக்கில் இருந்து தெற்குக்கு  வருகைதந்த ஊடகவியலாளர்கள் யாருமே உங்களை சந்திக்காது  தொடர்பில், தங்கள் முகநூலில் பதிவிட்டு இருந்தீர்கள். அதில்,  உங்களை நாங்கள் சந்திக்காமல்  சென்றமை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது. என்பதனை அந்த பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன். எனக்கும்   உங்களை சந்திக்காமல்  சென்றது மிக மனவருத்தமாக  தான்  இருக்கின்றது. 
 
ஐயா , நாங்கள் தெற்குக்கு அழைக்கப்பட்டது ஊடக துறை அமைச்சின் ஏற்பட்டிலையே, வாகன ஏற்பாடுகளில் இருந்து உணவு தங்குமிடம் என அனைத்துமே ஊடக அமைச்சின் ஏற்பாடே ,
 
அந்த வகையிலையே ஊடக அமைச்சின் ஏற்பாட்டிலையே வியாழக்கிழமை நாங்கள் இலங்கை பாராளுமன்ற அமர்வினை பார்வையிட  வந்தோம். 
 
அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வினை நேரில் பார்வையிட முடியும் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்ககளை சந்திக்க முடியும் என ஆவலுடன் தான் பாராளுமன்றத்திற்கு வந்து இருந்தோம். 
 
ஆனால் அன்றைய தினம் என்ன நடந்ததோ தெரியவில்லை 50க்கும் குறைவானவர்களே அன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு இருந்தார்கள் (நாங்கள் பாராளுமன்ற அமர்வை பார்வையிட்ட நேரம்  மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை ) அதில் நாங்கள் எங்களுக்கு தெரிந்த உறுப்பினர்கள் இருக்கின்றார்களா ?  என தேடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் இ சாள்ஸ் ஆகியோரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையே கண்டோம். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எங்களை கண்டு கைகளை மட்டும் காட்டி விட்டு அமர்ந்து இருந்தார். ஏனைய எவரும் எங்களை காணவில்லை. சிறிதரன் எங்களுடன் வந்து கதைக்கவும் இல்லை. 
 
அடுத்து ஜனாதிபதி , பிரதமர் , ஊடகத்துறை அமைச்சர் , மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஆகியோர் எங்களை பாராளுமன்றத்தினுள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறி எங்களை அங்குள்ள மண்டபம் ஒன்றினுள் அழைத்து சென்று இருந்தனர். அங்கு சந்திப்பு இடம்பெற்றது. 
 
அந்த சந்திப்பில் எங்களுக்கு சலுகை தாருங்கள்  என்றோ அல்லது எங்களுக்கு உதவி தேவை என்றோ நாம் கேட்கவில்லை கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவே கோரி இருந்தோம். 
 
அந்த நேரம் அந்த சந்திப்பில் வடக்கில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் தவிர பாராளுமன்ற செய்தியாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பில் அவர்கள் தமது ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றார்கள்.  அதனை தாங்கள் அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றோம். 
 
அடுத்து தங்களுக்கு முதல் நாள்  முற்பகலே நாம் இங்கிருந்து தெற்குக்கு வருவதாக ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியதாகவும் , அதனால் மறுநாள் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வு இருந்ததால் அன்றைய தினம் கலந்து கொள்ள முடியவில்லை என உங்கள் பதிவில் குறிப்பிட்டு உள்ளீர்கள். 
 
தலைநகரம் வந்த உங்களை உடன்பிறப்புகளாக மகிழ்வுடன், அழைத்து, விருந்தோம்பல் செய்து, அனுப்பி இருப்பேன் எனவும்  முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தால், எத்தனையோ அரசியல், சமூக, கலாச்சார, ஊடக தலைப்புகளில் எவ்வளவோ விஷயங்களை மனம் விட்டு கலந்து உரையாடி இருக்கலாமே? பல சிக்கல்களுக்கு விடை தேடியும் இருக்கலாமே? எனவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். 
 
மிக்க சந்தோசம் நாங்களும் அவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும் விரும்புகின்றோம்.. 
 
ஆனால் ஐயா , உங்களுடன் தொடர்பு கொண்ட ஏற்பாட்டாளரிடம் நீங்கள் கூறி இருக்கலாமே , வடக்கு ஊடகவியலாளர்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது. ஆனால், அதன் பின்னர் ஒரு சில மணி நேரம் வடக்கு ஊடகவியலாளர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டு நீங்கள் சொன்ன விடயங்களை கலந்துரையாட ஏற்பாடு பண்ண சொல்லி , அப்படி நீங்கள் சொல்லி இருந்தால் நிச்சயம் ஏற்பாட்டாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருப்பார்கள் தானே , 
 
மற்றது ஐயா அந்த பதிவில் " ‘போடோ சூட்’ செய்து படம்பிடிக்கதான் கொழும்பு வந்தீர்களோ? பிடித்த படங்களையாவது பத்திரமாக வீடுகளில் மாட்டி வைத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் வீடுகளுக்கு ஆமிக்காரன் வந்தால் எடுத்து காட்டலாம்." எனவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். 
 
ஐயா  நாங்கள் போட்டோ சூட் பண்ணலை அங்கே போட்டோ சூட்  பண்ணினது ஜனாதிபதி ஊடக பிரிவு மாத்திரமே. மற்றது ஐயா " பிடித்த படங்களையாவது பத்திரமாக வீடுகளில் மாட்டி வைத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் வீடுகளுக்கு ஆமிக்காரன் வந்தால் எடுத்து காட்டலாம்." என குறிப்பிட்டு உள்ளீர்கள்.
 
ஐயா  நீங்கள்  கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் கிளிநொச்சிக்கு  விஜயம் செய்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது " கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் மற்றும் அரச பயங்கரவாதம் இரண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இது மகிந்த ஆட்சியல்ல மைதிரி ரணில் மணோகனேசன் ஆட்சி, இது நல்லாட்சி இந்த ஆட்சியில் மக்களுக்கு நல்லதே நடக்கும் 
 
 
இந்த ஆட்சியில் வெள்ளைவான் இல்லை, காணமல்போதல் இல்லை, கடத்தல் இல்லை, ஊடகவியலாளார்கள் நீங்கள் எங்களிடம் கேள்விகள் கேட்டுவிட்டு செல்லும் போது உங்களை புலனாய்வாளர்கள் பின் தொடரமாட்டார்கள், எனவே இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு நன்மைகளே இடம்பெற்று வருகிறது. என தெரிவித்து இருந்ததை மறந்து இருக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம். 
 
அப்படி  இருக்கையில் எதற்கையா எங்கள்  வீடுகளுக்கு ஆர்மிக்காரன் வர  போறான்  நாங்கள்  ஏன்  இந்த  படத்தை அவனிடம் காட்ட  வேண்டும்.
 
தமிழ் திரைப்பட காமடி  நடிகர் வடிவேல்  சொன்ன  மாதிரி  " அது  போன  வருஷம்  இது  இந்த வருஷம் " என சொல்ல மாட்டீர்கள்  என நம்புகின்றேன். 
 
சரி ஐயா, நடந்தது நடந்ததாக இருக்கட்டும். ஏன்  ஐயா உங்கள் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் இவ்வாறான நிகழ்வு ஒன்றினை நீங்கள் ஏற்பாடு செய்யலாம் தானே , 
 
வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்க ஊடகத்துறை அமைச்சு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. அதேபோன்று உங்கள் அமைச்சின் கீழ் வடக்கு கிழக்கு மற்றும் மலையாக ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாமே .  
 
மலையாக தமிழ் உறவுகளின் "லயன்" வாழ்க்கை அவர்களின் கஷ்டங்கள் , துன்பங்களை வடக்கு , கிழக்கு ஊடகவியலாளர்கள் நேரில் பார்த்தும் , அந்த உறவுகளிடம் நேரில் கேட்டு அறிந்து கொள்ள ஏற்பாடுகளை செய்ய கூடாது. அங்குள்ள மலையாக ஊடகவியலாளர்கள்  வடக்கு மற்றும் கிழக்கு ஊடகவியலாளர்கள் ஒன்றிணைய நீங்கள் ஏன் முயற்சிக்கலாமே ஐயா , 
 
மற்றது  ஐயா , கடந்த  ஆட்சி  காலத்தில் தாங்கள் வடக்கு மக்களின் மீள் குடியேற்ற பிரச்சனை , காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்சனை , மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சனைகள் தொடர்பில் குரல் கொடுத்து வந்தீர்கள் , வடக்கில் நடைபெற்ற போராட்டங்களிலும் கலந்து கொண்டு இருந்தீர்கள். 
 
ஆனால் இன்னமும் அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை இன்றும் வடக்கு மக்கள் அதற்காக போராடிக்கொண்டே இருக்கின்றார்கள். கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடுகின்றார்கள் , முல்லைத்தீவில் கேப்பப்பிளவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகின்றார்கள்.  அதேபோன்று யாழிலும் வலி.வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட தயாராகி வருகின்றார்கள். எனும் விடயத்தை தாங்கள் அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். 
 
கடந்த ஆட்சி காலத்தில் தாங்கள் பாராளுமன்றம் செல்லாததால் நிறையவே நேரம் இருந்தது. தாங்கள் மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள. இந்த ஆட்சியில் தாங்கள் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர் ஆனதால் தங்களுக்கு வேலை பளு கூடி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அந்த மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். 
 
ஐயா  , என்னை  விட்டால்  நான்  இப்படியே  நிறைய  கதைத்துக்கொண்டே இருப்பேன். தாங்கள் இப்பொழுது அமைச்சர்  ஆகி இருப்பதனால் தங்களுக்கு நேரம் கிடைப்பதும் குறைவும் கடிதம் நீண்டு கொண்டே  சென்றால் அதனை வாசிப்பதற்கு தங்களுக்கு நேரம் போதாமையாகி விடும். என்பதனால்  என்  கடிதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 
 
தங்களின் பதில் கடிதத்தை மிக  ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். அத்துடன் வடக்கு கிழக்கு மற்றும் மலையாக ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு ஒன்றினை தங்கள் அமைச்சு மிக விரைவில் ஏற்பாடு செய்யும் எனவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 
 
அந்த  நிகழ்வில் தங்கள் விரும்பிய விடயம் தொடர்பில் கலந்துரையாடுவோம் அத்துடன் சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகிய சிங்கள முற்போக்காளர்களையும் சந்திப்போம் அவர்களுடனும் கலந்துரையாடுவோம். 
 
நன்றி.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133915/language/ta-IN/article.aspx

மனோகணேசன் நாற்காலி சுகத்தில் இருந்துகொண்டு நிலை தடுமாறக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.