Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் கையூட்டு: பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினர் குற்றச்சாட்டு

Featured Replies

போரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் கையூட்டு: பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினர் குற்றச்சாட்டு

 

இலங்கையில் காணமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்றீள் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.

151216044013_sp_child_sexual_abuse_624x3

 ஆவணப்படம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது அமைப்புக்களிடம் கருத்துக்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதற்காக நடத்தப்பட்ட அமர்வொன்றில் காணாமல் போயுள்ள தமது உறவுகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளின் போது, தங்களிடம் கையூட்டாக பணம் கோரப்பட்டதாகவும், பணம் இல்லாத நிலையில் பாலியல் கையூட்டு கோரப்பட்டதாகவும் காணாமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக ஸ்றீன் ஸரூர் கூறியுள்ளார்.

150929113254_sexual_abuse_protest_srilan  

இத்தகைய சுமார் முன்னூறு பெண்களிடம், அவர்கள், காணாமல் போயுள்ள தமது உறவுகளைத் தேடிக் கண்டறிய முற்பட்டபோது எதிர்நோக்கிய சவால்கள் குறித்த தகவல்களைத் தங்களிடம் கூறியதாகவும், அதில் ஒரு விடயமாக இவ்வாறு கையூட்டு கோரப்பட்டமை தொடர்பான விபரங்களும் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக ஸ்ரீன் ஸரூர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அரச படையினரின் புலானய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் மீதும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்றார் ஸ்றீன் ஸரூர்.

அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் இ;வவாறு பெறப்பட்ட கையூட்டு பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாலியல் கையூட்டு கோரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தமது விண்ணப்பத்தில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினர் கோரியிருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சம் மற்றும் சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினரிடமோ அல்லது மனித உரிமைகள் அமைப்புக்களிடமோ முறையிடவில்லை.

இந்தத் தகவலைப் பெற்றுக்கொண்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பானது, இது குறித்து அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளது என அந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்றீன் ஸரூர் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160709_sexual_bribe_srilanka

இது உண்மையில் மிகவும் பாரதூரமான குற்றம். 2009, 2010, 2011, 2012, 2013, 2014 வரை பல சம்பவங்கள். வருடங்கள் செல்ல இந்த பாலியல் வன்முறைகள் பின்னர் குறைந்தாலும், நல்லிணக்கம் என்ற பெயரில் இவற்றை புறக்கணிக்க முடியாத பாரதூரமான குற்றம்.

இவை பற்றியும் நடுநிலையான விசாரணைகள் (சர்வதேச நீதிபதிகள், மனித உரிமை அமைப்புக்களின் பங்களிப்புடன்) நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகளும் பாதுகாப்பும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் இவர்களிடம் பறிக்கப்பட்ட பெரும் தொகை பணமும் மீள அளிக்கப்பட வேண்டும்.   

உண்மையில் பணம் பறிக்கப்பட்ட பின்னரும், இலஞ்ச ரீதியான வறுபுறுத்தல் பாலியல் சித்திரவதைகள் இடம்பெற்ற பின்னரும், சுமார் 80% க்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்களின் உறவுகள் விடுவிக்கப்படவில்லை என்பது இன்னொரு கொடுமை. அலைக்கழிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள்.

இந்தக் கொடுமைகளில் சிங்கள-பௌத்த பாதுகாப்பு தரப்பு (இராணுவம், போலீஸ், புலனாய்வு, .....) பயங்கரவாதிகளுடன் ஒட்டுக்குழுக்களாக இருந்த டக்ளஸ் கும்பலில் பலரும், சித்தார்த்தன் கும்பலில் சிலரும், முஸ்லிம் காடையனான ரிஷாட் பதியுதீன் கும்பலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் பல உண்டு.

ஒரு நடுநிலையான விசாரணை (சர்வதேச நீதிபதிகள், மனித உரிமை அமைப்புக்களின் பங்களிப்புடன்) நடைபெறும் போது மட்டுமே இதுபோன்ற பாரிய குற்றங்கள், பாரிய வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது தடுக்கப்படும். பன்முகப் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரங்கள் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.