Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு 2ஆவது தென்னை முக்கோண வலயம் நேற்று பிரகடனம்

Featured Replies

10839.jpg

இலங்கையின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களை பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார். 
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் முடிபுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட் டார்கள். 

இதன்போது எனது தந்தையாரான காமினி திசாநாயக்கவும் கொல்லப்பட்டிருந்தார். இவ்வாறு பலர் உறவுகள் இல்லாமல் இப்போதும் உள்ளதனை நான் அறிவேன்.
யுத்தத்தினால் மனிதர்கள் மட்டுமல்ல வளம் தரும் மரங்களும்தான் அழிக்கப்பட்டன. குறிப்பாக தென்னை மரங்கள் இங்கு நடைபெற்ற யுத்தத்தினால் பெரிதும் அழிவடைந்துள்ளது. நாங்கள் இவற்றை எல்லாம் மீள கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றோம். 

இதன் முதற்கட்டமாக தான் இலங் கையின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை பிரகடனப்படுத்தி உள்ளோம்.
இந்த மூன்று மாவட்டங்களி லும் தேயிலை, இறப்பர் ஆகிய பயிர்கள் பயிரிட முடியாவிட்டாலும், தென்னை பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும். கடந்த கால அரசாங்கம் இவை தொடர்பில் கவனம் செலுத்தாத போதிலும் தற்போது பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், இவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்திட்டங்களை நடை முறைப்படுத்தியும் வருகின்றது.

நாடு முழுவதும் எண்பதாயிரம் தென்னை மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதே வேளை, வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 45 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யுத்தம் முடிவடைந்து விட்டது. அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் இன்னமும் முடிவடையவில்லை. நான் எனது தந்தையை இழந்தது போன்று,

நீங்களும் உங்கள் உறவு களை பிரிந்துள்ளீர்கள் என்பது எமக்கு நல்லாகவே தெரியும், அந்த வழிகளில் இருந்து மீள்வதற்கு நாம் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. இந்த வேலைத் திட்டமும் அதனோடு ஒன்றிணைந்த ஒன்று தான். 

எதிர்வரும் காலங்களில் இந்த திட்டங்களில் மூலம் அனைத்து நாட்டு மக்களும் ஒன்றிணைந்து சமாதானம் நிறைந்த அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரி வித்தார்.            

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10839&ctype=news

மிக நல்ல விடயம்!

ஆனால் இது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் வட மாகாணத்தில் தமிழரிடம் அபகரிக்கப்பட்ட சில ஆயிரம் ஏக்கர் தென்னங் காணிகளை மீள ஒப்படைப்பது மிக முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கட்சிகளின் தமிழ்ப்பிரதிநிதிகள்  சிந்திக்க வேண்டிய விடயம். தமிழர் நிலங்களை வளங்களை சிதை;துச் சின்னாபின்னமாக்கியதில் மிகவும் தந்திரோபாய நகர்வுகளை 1956முதல் தீவிரமாகச் செய்து திட்டமிட்ட இனஅழிப்பை அனைத்துலக ஆதரவைப்பெற்றுச் செய்வதோடு, தமிழரைக்காட்டி அனைத்துலக நிதியைப் பெற்று இப்படியான சித்துவளையாட்டுகளைத் சிங்களக் கட்சிகள் தமிழ்ப்பெயர்கொண்ட தமது பிரதிநிதிகளை வைத்துக் காட்டுவதைத் தமிழனம் பார்த்து இன்னும் எவளவு காலத்துக்கு ஏமாறப்போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.