Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

Featured Replies

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

 
110919172253_srilanka304_02.gif
 

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது.

வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.

எனினும், அதனை அங்கு அமைக்க முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு சாரரும், நகருக்கு வெளியில் ஓமந்தையிலேயே அதனை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் உட்பட மற்றுமொரு சாரரும் வாதிட்டு வருகின்றனர்.

160710162731_srilanka_vavuniya_640x360_b  

இது தொடர்பில் எதிரும் புதிருமாக ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் இரண்டு இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறார்.

ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான காணி ஒதுக்கீட்டில் பிரச்சினைகள் இல்லை.எனவே, அந்த அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

160710162853_srilanka_vavuniya_640x360_b  

ஆயினும், ஓமந்தை காணியை எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா 200 மில்லியன் ரூபாய் நிதியை உடனடியாகப் பயன்படுத்தப்படாவிட்டால், திரும்பிச் செல்லும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக தாண்டிக்குளத்தில் அதனை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விஷயம் ஒரு விவகாரமாகத் தொடர்ந்தும் முடிவின்றி நீடித்துக் கொண்டிருக்கின்றது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160710_srilanka_vavuniya_story

சொந்தமாக, நேர்மையாக சிந்திக்கும் வலுவற்ற மாவை சேனாதிராஜா போன்றவர்கள் பொறுப்பில் எது இருந்தாலும் அது குரங்கின் கையில் மாலையைக் கொடுத்ததற்கு சமனாகும் என்பது கடந்த 10 வருடங்களாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.