Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரையோஜெனிக் இயந்திர சோதனை

Featured Replies

கிரையோஜெனிக் இயந்திர சோதனை

வரும் ஜனவரி 19 நாள்,2007ல் , திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் அருகில் அமைந்துள்ள மகேந்திரமலையில் அமைந்துள்ள திரவ எரிபொருள் செலுத்துவிசை மையத்தில் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் , இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ, மற்ற நாடுகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சோதனையில்,கிரையோஜெனிக் இயந்திரம் 720 செகண்ட் வரை இயங்க, பற்ற வைக்கப்படும்.மேலும் 12 டன் செலுத்துவிசையும்(propellants),7.5 டன் தள்ளு விசையும்(thrust) கூடிய பறக்கும் சக்தியும் பரிசோதிக்கப்படும்.இம்முறைய

  • கருத்துக்கள உறவுகள்

பரி சோதனை வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

இந்திய முதல் இலகுரக ஜெற் தாக்குதல் விமானமான "தேஜாஸ்" இந்த ஆண்டு 2007ல் பாவனைக்கு வருக்கிறது அதுக்கும் சேர்த்து வாழ்த்துவோம்...

lca.jpg

Type: Tejas / LCA

Country: India

Function: fighter

Crew: 1

Engines: 1 (83.4 kN GTRE GTX-35VS augmented turbofan)

Wing Span: 8.20 m

Length: 13.20 m

Empty Weight: 5500 kg

Ceiling: 16400 m

Range: 850 km

Armament: GSh-23 twin-barrel 23mm cannon (220 rounds);

7 hardpoints, max external load over 4000 kg

Unit cost: 21 million USD

வாழ்த்துவோம் > கவலைப்படுவோம் > தூற்றுவோம்

இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ ஏற்பாடு செய்யும் போது வாழ்த்துவோம்.

எர்ணாவூரில் மலிவு விற்பனையில் ரூ.40 ஆயிரத்திற்கு கிட்னியும், ரூ.500 இற்கு தலைமுடி விற்று சாதனை படைக்கும் போது கவலைப்படுவோம்.

ஏவிய செய்மதியால் தமிழீழத்தில் இலங்கை ராணுவத்திற்காக உளவுபார்க்கும்போது தூற்றுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிரையோஜெனிக் சோதனை தோல்வி?!

ஜனவரி 20, 2007

சென்னை: இஸ்ரோ திட்டமிட்டிருந்த கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜினின் முழு அளவிலான சோதனை திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கு பயன்படும் சக்தி வாய்ந்த கிரையோஜெனிக் என்ஜின்களை தற்போது ரஷ்யாவிடமிருந்து பெற்று இந்தியா பயன்படுத்தி வருகிறது.

சுயமாக நாமே கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கும் ஆய்வு நெல்லை மாவட்டம் மகேந்திரகி>யில் உள்ள திரவ எரிபொருள் ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது.

இந்த ஆய்வில் படிப்படியாக கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதிக்கப்பட்டு வந்தது. முதலில் 10 வினாடிகளுக்கு இந்த என்ஜின் சோதிக்கப்பட்டது. பின்னர் 60 வினாடிகளுக்கு என்ஜின் இயக்கிப் பார்த்து சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 720 வினாடிகளுக்கான முழுமையான பரிசோதனையை நேற்று மாலை நடத்த திட்டமிடப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த தேவைப்படும் நேரம் 720 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நேற்றைய சோதனை முடிவை இந்திய விஞ்ஞானிகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த சோதனை வெற்றி பெற்றால், அமெ>க்கா, ரஷியா, ஜப்பான், சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் வ>சையில் இந்தியாவும் இணையும். மேலும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த சோதனை.

நேற்றைய சோதனையைப் பார்வையிடுவதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திரவ இயக்க எரிபொருள் திட்ட இயக்குனர் பெருமாள், இணை இயக்குனர்கள் எம்.கே.ஜி.நாயர், முகம்மது முஸ்லீம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுமியிருந்தனர்.

மாலை 6.20 மணிக்கு சோதனை தொடங்கியது. என்ஜின் ஓடத் தொடங்கி 30 வினாடிகள் கழிந்த நிலையில் திடீர் என சோதனை நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள் முகத்தில் ஏமாற்றமும், சோகமும் நிலவியது.

சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முறைப்படி சோதனை தொடங்கப்பட்டது. இந்த என்ஜினில் மொத்தம் 200 அளவைகள் (பாராமீட்டர்ஸ்) உள்ளன. அதில் 3 அளவைகள் சோதனை தொடங்கிய பிறகு சரியாக இல்லை என்பது தெரிய வந்தது.

குறிப்பாக வெப்பமானி, திரவ ஆக்ஜிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவேதான் சோதனை நிறுத்தப்பட்டது.

இதை தோல்வி என்று கூற முடியாது. இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் இதேபோல ஒரு சோதனை நடத்தப்படும். இந்த சோதனை வெற்றி பெறும் என நம்புகிறோம்.

இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜி.எஸ்.எல்.வி. விண்ணில் செலுத்தப்படும் என்றார் நாயர்.

http://thatstamil.oneindia.in/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.