Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்! முதலமைச்சர்

Featured Replies

வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாகாணத்துக்கென முன்மொழியப்பட்டு வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய வலயம் எவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சில காலமாக சரச்சைக்குரியதாகவிருந்ததை சகலருமறிவீர்கள். பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.இன்னும் சிலர் தாண்டிக்குளத்தில் விவசாய பண்ணையில் அமைய வேண்டுமென அடம் பிடித்தார்கள்.

இதனால் இவ்வமைவிடம் எங்கு அமைய வேண்டுமென்பதை தீர்மானிப்பதற்காக 03.07.2016ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கௌரவ இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் வடமாகாண சபையின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் எடுக்க முடியாத காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தி தீர்மானம் எடுக்குமாறு முதலமைச்சர் அவர்களை இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

இவ் வழிகாட்டலின் அடிப்படையில் 30 மாகாணசபை உறுப்பினர்கள், 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட்டு நேற்று 11.07.2016ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வாக்குச்சீட்டுக்கள் பெறப்பட்டன. இவ் வாக்குச்சீட்டுக்களின் முடிவுகளின் படி 30 மாகாண சபை உறுப்பினர்களில் 21 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களில் 18 பேர் ஓமந்தைக்கும் 03 பேர் தாண்டிக்குளத்திற்கும் வாக்களித்துள்ளனர்.

09 மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரில் 05 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 03 பேர் ஓமந்தைக்கும் 02 பேர் தாண்டிக்குளத்துக்குமாக வாக்களித்துள்ளனர். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதனடிப்படையில் ஓமந்தைக்கு சார்பாக 21 வாக்குகளும் தாண்டிக்குளத்திற்கு சார்பாக 05 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ் வாக்குச் சீட்டுக்கள் பதிவுத்தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் அனுப்பப்பட்டன.

இவ் வாக்கெடுப்பின் மூலம் ஆரம்பத்திலிருந்தே பலரும் விருப்பம் தெரிவித்த படி ஓமந்தை தான் பொருத்தமான அமைவிடம் என்பது உறுதியாகியுள்ளது. இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

அத்துடன் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு தூண்டு கோலாக தமது கருத்துக்களை அச்சமின்றியும் எந்த விதமான எதிர்பார்ப்புக்களின்றியும் வெளியிட்ட பொதுமக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், விவசாய அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

குறிப்பாக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராசா அவர்களுக்கும், கௌரவ உறுப்பினர் வை.தவநாதன் அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டமைக்கு முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

இது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டும், நிபுணர்களின் கட்டுரைகளை வெளியிட்டும், கேலி சித்திரங்கள் மூலம் கருத்துக்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவை ஏற்படுத்திய சகல பத்திரிகைகள், இணையத்தளங்கள், சகல ஊடகங்களுக்கும் முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

http://www.tamilwin.com/development/01/110669

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.இன்னும் சிலர் தாண்டிக்குளத்தில் விவசாய பண்ணையில் அமைய வேண்டுமென அடம் பிடித்தார்கள்.

முதலமைச்சர் தெளிவாத்தான் இருக்கார். பாராட்டுக்கள் விக்கி ஐயா. 

இதில் பாராட்டு என்பது.... சில அரசியல் சக்திகள்... தங்களின் சுயலாபங்களுக்காக.. சிக்கல்களை வேண்டுமென்றே எழுப்பும் சூழலில்.. அதனை நிபுணத்துவ உதவியோடு மக்கள் கருத்தறிவோடு இணைத்து நீண்ட கால ஒழுங்கில் நன்மை எது என்று சிந்தித்து அமுலாக்குவது தான்.

அண்மைய சில ஆண்டுகளில் பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கவும்.. நிறைவேறாமல்.. பணம்.. மீள திரும்பப்படுவதற்கும்.. வெளிநாட்டு உதவிகள் பெறப்படுவது தாமதமாகவும்..  அரசியல் கட்சிகள் சார்ந்து செல்வாக்குள்ளவர்கள் சிலரின் அடாவடி சார்ந்து.. முடிவுகள் எடுக்கப்படுவது தான் முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது.

எனி அப்படி ஒரு நிலை வராது இருக்க.. இந்த சம்பவம் நல்ல படிப்பினையை வழங்கி இருக்கும் என்றும் நம்புகிறோம். tw_blush:

Edited by nedukkalapoovan

 

 

பொருளாதார மையம் தாண்டிக்குளத்தில் அமைய வேண்டும் என்ற ரெலோவின் நிலைப்பாட்டிற்கான காரணங்கள்

HTTP://TELO.ORG/?P=167707&LANG=TA

11 JULY, 2016

இந்த வர்த்தக மையம் வவுனியா மாவட்டத்திற்கு அரசாங்கம் வழங்குகின்ற விடயத்தில் தனிப்பட்ட அரசியலுக்கோ, கட்சிபேதத்தித்கோ, பிரதேச வாதத்திற்கோ, கௌரவப் பிரச்சனைகளுக்கோ அல்லது வீர வசனங்களுக்கோ இடமில்லை என்பதில் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் தெளிவாக உள்ளது.

பாரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இவ் விடயத்தின் பின்னணியை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல் படுத்தப்படுகின்ற பொழுது எமது பிரதேச மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும்அபிவிருத்தியையும் வளப்படுத்துகின்ற திட்டங்களை அவதானமாக கையாள்வது தமிழ்த் தலைமைகளின் அத்தியாவசியம் என்பதைரெலோ வலியுறுத்துகின்றது.

முதலாவதாக இதன் பின்னணி என்னென்று பார்க்கும் போது இவ் வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இடவசதி மற்றும் நிதிவசதி இல்லாத காரணத்தினால் பல வருடங்கள் பிற்போடப்பட்டு வந்தவிடயம் தற்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ரூபா இருநூறு கோடி நிதி உதவியோடு முன்னெடுக்கத்தீர்மானிக்கபட்டுள்ளது.

இதன் பிரகாரம் அடுத்த கட்டமாக இட வசதி கோரப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏற்கனவே கருத்திற் கொள்ளப்பட்ட ஓமந்தையும்புதிதாக அடையாளம் காணப்பட்ட தாண்டிக்குளம் பிரதேசமும் ஒப்பிடப்பட்டு இடச் சொந்தக்காரரை தேடியபோது ஓமந்தைக் காணிதனியாருக்குச் சொந்தமானதும் தாண்டிக்குளம் காணி விவசாயப் பண்ணைக்குச் சொந்தமான மாகாணசபை அதிகாரத்திற்குஉட்பட்டதாகவும் காணப்பட்டது.

தமிழ் மக்கள் இன்னும் முழுமையான முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் எவ்வகையான காணி சுவீகரிப்பிற்கும்இடமளிக்க முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபையின் கூற்றாக இருக்கிறது.

மேலும் சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் காணி சுவீகரிப்புச் செய்ய சில மாதங்களாகும். ஆனால் நிதியொதுக்கீட்டில் இருக்கும் பாரியநெருக்கடி என்னவென்றால் இவ்வருட இறுதிக்குள் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் இருநூறு கோடி ரூபாயில்இருநூறு மில்லியனாவது செலவு செய்யப்படவேண்டும். இல்லையேல் நிதி மீளப்பெற்றுக் கொள்ளப்படும்.
இந்த சூழலில் தனியார் பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டு அதன் அருகில் அமைந்துள்ள பாவனைக்கு உட்படுத்தப்படாத,வடமாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான தாண்டிக்குளம் பகுதி காணிஅடையாளப்படுத்தப்பட்டது.
இவற்றை பார்வையிட்ட மத்திய அமைச்சரும் அதிகாரிகளும் தாண்டிக்குளத்தை தீர்மானித்தனர். இதற்கு பல காரணங்களும்உள்ளன.

பொருளாதார நிலையம் நகரத்தை அண்டிய பகுதிகளில் அமைவது அவசியமானது. போக்குவரத்து, வங்கிகள், பாதுகாப்பு, தங்குமிடவசதிகள் என்பவற்றையும் கருத்திற்கொண்டே அமைவிடம் தீர்மானிக்கப்படுகிறது. இதில் இரு மார்க்க போக்குவரத்துஅமையப்பெற்ற இடம் தாண்டிக்குளம். இதன் பிரகாரம் தாண்டிக்குளம் வவுனியா நகரத்தில் இருந்து 02 Km தொலைவில்அமைந்துள்ளது. ஓமந்தையோ 12 Km தொலைவில் அமைந்துள்ளது.

உள்ளூர், வெளியூர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த நுகர்வோர் கூடஇலகுவாக வந்து போகக்கூடிய இடமாக தாண்டிக்குளம் உள்ளது.

இந்தக் காணி மாகாணசபையினால் உடனடியாக வழங்கப்பட கூடியது. எனவே உடனடியாக நிதியைப் பாவனைக்கு உட்படுத்தமுடியும்.

அடுத்ததாக பாரிய முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் வெற்றியளிக்க வேண்டும். இந்தப் பொருளாதார மையத்தைபலரும் அணுகுதல், பாவனைக்கு உட்படுத்தல் தான் இதன் வெற்றியை உறுதி செய்யும். இல்லையேல் பல்வேறுபட்டவிமர்சனங்களுக்கு அமைச்சும் அதிகார சபையும் உள்ளாக நேரிடும். மத்தள விமான நிலையம் இதற்கு உதாரணமாகும்.

ஓமந்தை நகரிலே ஏற்கனவே அமைக்கப்பட்ட பாற்பண்ணை மற்றும் உழவர் சந்தை போன்றவை பாவனை அற்று புதர்மண்டிக்கிடப்பதும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தை விளைவித்தன.
மேலாக வவுனியா பிரதேசத்தை சேர்ந்த பாராளுமன்ற , மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட வர்த்தகர்கள் பொதுஅமைப்புக்கள் விவசாய சங்கங்கள் தாண்டிக்குளத்திற்கான தமது விருப்பத்தை குறித்த அமைச்சருக்கு தெரிவித்தமையும் ஒருகாரணமாகும்.

மிக முக்கியமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் இத்திட்டத்துக்கான வரைமுறைகளைக் கருத்திற் கொண்டால் தாண்டிக்குளம்தெரிவிற்கு ஏற்றதாகிறதுகுறிப்பாக நிதி வழங்கும் அமைச்சு தமது நிதியினால் உருவாக்கப்படும் திட்டம் விரிவான பலனைகொடுக்க வேண்டும். மற்றும் எதிர்கால விமர்சனங்களைத் தவிர்க்க முயல்வதும் இயல்பானதே. இதன் பிரகாரம் மத்திய அமைச்சர்தாண்டிக்குளத்தைத் தேர்வு செய்திருந்தார்.

இப்பிரச்சனை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவதாக வடமாகாண சபையினால் 24 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உட்படதாண்டிக்குளத்தை தெரிவு செய்து அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் அனுமதியோடு தவிசாளர் ஊடாக மத்திய அமைச்சருக்குகடிதமூலம் தெரிவிக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட காரணங்களை கருத்திற் கொண்டும் இருநூறு கோடி ரூபாய் நிதியை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும், இந்தவேலைத்திட்டம் பாரிய வெற்றியையும் பலனையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக் தரவேண்டும் என்ற நோக்கோடு தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தின் தலைமைக் குழுவினர் நிபுணர்களின் பல்வேறுபட்ட கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு தாண்டிக்குளம் சிறப்பானஇடமென்று தீர்மானம் எடுத்தனர். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் முதலமைச்சருக்கும் எழுத்துமூலம்தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நாடத்தப்பட்ட கூட்டத்தில் தாண்டிக் குளத்திற்கேபலரும் ஆதரவு தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாக இருப்பினும் வவுனியா மாவட்டத்திற்கான இந்த வேலைத்திட்டத்தினை மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றபோது எதிர்ப்புத் தெரிவித்தோ சர்ச்சைகளைக் கிளப்பியோ நிதியை திருப்பி அனுப்பாமல் மக்களுக்கான அந்தத் திட்டத்தைவரவேற்று விரைவாக நடாத்தி முடிப்பதே சாலச் சிறந்தது. இதுவே

 

மொக்கேனப்பட்டுப்போகும் செயலைச் செய்கிறீர்கள்!

வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா? தாண்டிக் குளத்தில் அமைப்பதா என்ற வாதப்பிரதிவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் வாக்கெடுப்பு மூலம் இடத்தெரிவை செய்யலாம் என்று கூறிவிட, வாக்கெடுப்பு மூலம் இடத் தெரிவு நடத்துவது பொருத்தமற்றது. மாறாக அறிவியல் ரீதியாக சிந்தித்து செயற்படுவதே நல்லது. 
 
அந்தவகையில் ஓமந்தையே பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கான  தக்க இடம் என்று தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கூட்டப்பட்டதுறை சார்ந்தவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு வெளிப்படுத்தப்பட்டது. 
 
இந் நிலையிலும் வாக்கெடுப்பு என்பது அமுல் படுத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஓமந்தையே பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடம் என்று தெரிவாகியது.
 
வாக்கெடுப்பு நடத்துவது தவறென்றிருந்த நிலைமை  தக்க இடத்தெரிவினால் தணிந்து கொண்டது. அந்தவகையில் கட்சித் தலைமை, பதவி ஆசை என் பவற்றுக்கு இடம் கொடாமல் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமான தென்ற சரியான முடிவுக்கு வாக்களித்தவர்களின் மன உணர்வு பாராட்டுக்குரியது. 
 
அதேநேரம் சிலர் வாக்களிக்காமல் அமைதி காத்தனர். ஒரு 5 பேர் மட்டும் தாண்டிக்குளத்தை தெரிவு செய்து வாக்களித்தனர். அதற்காக அவர்கள் மீது குறைகூற நாம் ஒருபோதும் தயாரில்லை. 
ஜனநாயகம்,  வாக்கெடுப்பென்று வந்து விட்டால்  எந்த பக்கம் வாக்களித்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே சான்றாண்மைப் பண்பு.
 
அதேநேரம் யார்? யார்? எந்தெந்த பக்கம் வாக்களித்தனர் என்பதை தமிழ் மக்கள் அறிந்து அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதையும் எவரும் தடுக்க முடியாது என்பது ஏற்புடையது.
 
இப்போது வாக்கெடுப்பின் முடிவு துறைசார்ந்த நிபுணர்கள் எடுத்த முடிவோடு ஒத்திருப்பது மனத்திருப் தியை தந்தாலும் இவை தொடர்பில் நாம் புளுகு கொள்ள முடியும் என்று யாரேனும் நினைத்தால் அது மிகப்பெறும் அறியாமை என்று உரைப்பது சாலப் பொருத்துடையது.
 
ஏனெனில் மண் மீட்புப் போரில் எத்தனையோ இளைஞர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த இந்த மண்ணில், தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எங்கள் இனத்தையே விற்றுப் பிழைக்கத் தலைப்பட்டனர் என்ற உண்மையை நினைக்கும் போது, நெஞ்சம் வெடிக்கும் போல் உள்ளது.
 
ஓமந்தைதான் என்று தெரிவு செய்வதற்குக் கூட எங்களால் முடியவில்லை. அதற்குள்ளும் ஒரு அரசி யலை நடத்தி வாக்கெடுப்பு என்று கூறி; மக்களின் மனநிலையை திசைதிருப்பி வாக்கெடுப்பில் வெற்றி என்று ஒரு குட்டிப்புளுகை ஏற்படுத்தி... 
 
அப்பாடா இப்படி ஒரு துரோகத்தனத்தை ஏன் தான் இவர்கள் செய்கின்றனர் என்பது தெரியவில்லை. 
செய்ய வேண்டிய எத்தனையோ கடமைகள் காத்திருக்க தமிழ் மக்களின் சிந்தனையை யாருக்காக திசை திருப்ப இவர்கள் முற்படுகின்றனர் என்பது தெரியவில்லை. 
 
இருந்தும் இதைச் செய்பவர்கள் மிக மோசமாக மொக்கேனப்படுகின்றனர் என்பது மட்டும் தெரிந்த உண்மை.

 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10855&ctype=news

3 hours ago, போல் said:

இவ் வாக்குச்சீட்டுக்களின் முடிவுகளின் படி 30 மாகாண சபை உறுப்பினர்களில் 21 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களில் 18 பேர் ஓமந்தைக்கும் 03 பேர் தாண்டிக்குளத்திற்கும் வாக்களித்துள்ளனர்.

09 மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரில் 05 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 03 பேர் ஓமந்தைக்கும் 02 பேர் தாண்டிக்குளத்துக்குமாக வாக்களித்துள்ளனர். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதனடிப்படையில் ஓமந்தைக்கு சார்பாக 21 வாக்குகளும் தாண்டிக்குளத்திற்கு சார்பாக 05 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ் வாக்குச் சீட்டுக்கள் பதிவுத்தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் அனுப்பப்பட்டன.

 

http://www.tamilwin.com/development/01/110669

இதில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறீதரன், சித்தார்த்தன் வட மாகாண சபை அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்களான விந்தன், கஜதீபன், சர்வேஸ்வரன், அரியரட்ணம், குணசீலன், அன்ரனி ஜெகநாதன், ரவிகரன், சிவனேசன், இந்திரராசா, தியாகராசா, பசுபதிப்பிள்ளை, சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன், சிவயோகன், தர்மலிங்கம் ஆகிய 21 பேர் வாக்களித்திருந்தனர். 

தாண்டிக்குளத்தில் அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், ஆனோல்ட், அஸ்மின், சிராய்வா, கமலேஸ்வரன், சார்ல்ஸ், சயந்தன், லிங்கநாதன் ஆகியோர் வாக்களிக்கவில்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.