Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு அதிகாரமில்லை

Featured Replies

உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு அதிகாரமில்லை

 


மாகாண சபை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாகாண முதலமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது ?, அதற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றனவா ? அவ்வாறு இருந்தாதல் அதனை எனக்கு  காட்டுங்கள் ,   என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் சபையில் ஆவேமாக கருத்து தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை  கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

அந்த அமர்வில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் பல்வேறுவகையான குற்றசாட்டுகள் தனக்கு வந்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடாத்த இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரி ஆகியோரை உள்ளடக்கி குழு ஒன்றினை நியமித்து விசாரணை நடாத்த வேண்டும் என கோரி முதலமைச்சரால் பிரேரணை ஒன்று சபையில் முன் மொழியப்பட இருந்தது.

முதலமைச்சர்  சுகவீனம் காரணமாக சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதனால் , தனது பிரேரணையை கல்வி அமைச்சரை முன் மொழிய கோரி இருந்தார்.

அதன் பிரகாரம் பிரேரணை முன் மொழியப்பட இருந்த வேளை பல உறுப்பினர்கள் இந்த பிரேரணை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் பிரேரணை இதனை சபையில் எடுக்க கூடாது என தெரிவித்தனர்.

அதனை அடுத்து அந்த பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளபப்டவில்லை.

பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்படாத போதிலும், முதலமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க , அந்த அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கியது என சபையில் கோபத்துடன் ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மீன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அதான் பிரேரணை எடுத்துக் கொள்ளப்படவில்லையே பிறகு எதற்காக  தாங்கள் கருத்து கூறுகின்றீர்கள் என கூறி அவரை அமரும் மாறு கோரினார்.

அதேவேளை வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை விசாரணை செய்ய சுயாதீனமான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் பரம்சோதி பிரேரணை ஒன்றினை முன் மொழிவதற்காக கடந்த இரண்டு மாத காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அவருடைய பிரேரணை சபையின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் கடந்த நான்குக்கு மேற்ப்பட்ட அமர்வுகளில் ஏதோ ஒரு காரணம் முன் வைக்கப்பட்டு பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.

இந்த அமர்விலும் அந்த பிரேரணை சபையின் நிகழ்சி நிரலில் சேர்க்கப்பட்டு இருந்த போதிலும் இந்த அமர்வில் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் இல்லாத காரணத்தால் அதனை சபையில் எடுத்துக் கொள்ளவில்லை என பிரேரணையை முன் மொழிய இருந்த ஆளும் கட்சி உறுப்பினர் பரம்சோதி தனது பிரேரணையை இந்த சபை அமர்வில் இருந்து வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

நீதிபதிகள் என்பதற்காக அனைவரும் நீதியானவர்கள் அல்ல.


முறை கேடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தும் குழுவில் நியமிக்கப்படும் நீதிபதிகள் நீதியான நேர்மையான நீதிபதிகளாக இருக்க வேண்டும் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் ,

கடந்த காலத்தில் வல்வெட்டித்துறை நகர சபையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க என முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி தேவையற்ற விடயங்களில் தலையீடு செய்ததுடன் என்னை பற்றியும் அவைத்தலைவர் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார்.

நீதிபதி என்பதற்காக எல்லோரும் நீதியானவர்களாகவும் , திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்று இல்லை எனவே விசாரணைக்குழுக்கள் அமைக்கும் போது தனியே நீதிபதி என்பதற்காக ஒருவரை அந்த குழுவில் உள்வாங்காமல் அவர் திறமையானவரா நீதியானவரா என அறிந்து கொண்டு விசாரணைக்குழுவில் உள்வாங்குங்கள் என கோரினார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133982/language/ta-IN/article.aspx

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரேரணைக்கு சபையில் கடும் எதிர்ப்பு!

வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சபை அனுமதியை கோரும் வகையில் முதலமைச்சரினால் கொண்டு வரப்பட்டு பதில் முதலமைச்சரினால் சபைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த பிரேரணை ஒன்று உறுப்பினர்களின் எதிர்ப்பினால் சபைக்கு சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற மாகாணசபையின் 56ம் அமர்வில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் முதலமைச்சர் சார்பில் பிரேரணை ஒன்று அவை குறிப்பில் இடம்பெற்றிருந்தது.

அந்த பிரேரணை வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மீது பொதுமக்கள், அமைப்புக்கள் மற்றும் சக உறுப்பினர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு ஊடாக விசாரிப்பதற்காக நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக சபை அனுமதியை கோரும் பிரேரணையாகும்.

அதனை முதலமைச்சர் இல்லாமையினால் பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராஜா சபையில் எடுத்தக் கொள்ள இருந்த நிலையில் உறுப்பினர்களில் சிலர் இது தமது சிறப்புரிமையை மீறும் பிரேரணை என சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக அதனை தாம் முதலமைச்சருடன் மீள பேசி சபையில் எடுத்துக்கொள்ளவுள்ளதாக கூறியதுடன், இன்றைய அமர்வில் அதனை பரிசீலிக்கபோவதில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் எழுந்து உறுப்பினர்களை விசாரிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளதா? அப்படியாயின் சட்டத்தை காட்டுங்கள் என கேட்டார். தொடர்ந்து பேசிய அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் உறுப்பினர்கள் தொடர்பாக விசாரிக்கும் உரித்து கட்சிக்கே உள்ளது. மாகாண அவைக்கு கூட ஒழுங்குசார் சிபார்சுகளை வழங்கும் அதிகாரமே உள்ளது.

இந்நிலையில் என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி இந்த விடயத்தில் முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதியரசர் என்ற வகையில் முதலமைச்சரே விசாரிப்பதுதான் பொருத்தம் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுந்து ஓய்வு பெற்ற நிதிபதிகள் சிலர் முன்னர் சில விடயங்களுக்கு விசாரணைக்கு அமர்த்தப்பட்டபோது மிக கேவலமாக நடந்து கொண்டார்கள் என குறிப்பிட்டார்.

எனினும் முதலமைச்சரின் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/110745

வட மாகாணசபை விசாரணைகளில் நேரத்தை வீணாக்க முடியாது.

தவறு செய்பவர்களை, குற்றச்சாட்டுக்களை உரிய விசாரணை அமைப்புகளுக்கே அனுப்ப வேண்டும். விசாரித்து குற்றங்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்.

மறுபக்கம், உறுப்பினர்கள் "சிறப்பு உரிமை" என்ற பெயரில் தாம் செய்த திருகுதாளங்களில் இருந்து தப்பிவிட முடியாது என்ற நிலைமையும் வேண்டும்.

நேர்மையாக, நீதியாக நடப்பவர்கள் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயங்கமாட்டார்கள். தாம் செய்தவற்றுக்கு (சரியோ, தவறோ) பொறுப்பை ஏற்றுக்கொள்ள பின்னடிக்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சபை அனுமதியை கோரும் வகையில் முதலமைச்சரினால் கொண்டு வரப்பட்டு, பதில் முதலமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணை  உறுப்பினர்களின் எதிர்ப்பினால் சபைக்கு சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சபை அனுமதியை கோரும் வகையில் முதலமைச்சரினால் கொண்டு வரப்பட்டு, பதில் முதலமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணை உறுப்பினர்களின் எதிர்ப்பினால் சபைக்கு சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

   

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற மாகாணசபையின் 56வது அமர்வில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் சார்பில் பிரேரணை ஒன்று அவை குறிப்பில் இடம்பெற்றிருந்தது.

அந்த பிரேரணை வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மீது பொதுமக்கள், அமைப்புக்கள் மற்றும் சக உறுப்பினர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு ஊடாக விசாரிப்பதற்காக நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக சபை அனுமதியை கோரும் பிரேரணையாகும். அதனை முதலமைச்சர் இல்லாமையினால் பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராஜா சபையில் எடுத்தக் கொள்ள இருந்த நிலையில் உறுப்பினர்களில் சிலர் இது தமது சிறப்புரிமையை மீறும் பிரேரணை என சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக அதனை தாம் முதலமைச்சருடன் மீள பேசி சபையில் எடுத்துக்கொள்ளவுள்ளதாக கூறியதுடன், இந்த அமர்வில் அதனை பரிசீலிக்கபோவதில்லை. எனவும் கூறினர்.

இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் எழுந்து உறுப்பினர்களை விசாரிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளதா? அப்படியாயின் சட்டத்தை காட்டுங்கள் என கேட்டார். தொடர்ந்து பேசிய அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் உறுப்பினர்கள் தொடர்பாக விசாரிக்கும் உரித்து கட்சிக்கே உள்ளது. மாகாண அவைக்கு கூட ஒழங்குசார் சிபார்சுகளை வழங்கும் அதிகாரமே உள்ளது. இந்நிலையில் என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி இந்த விடயத்தில் முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதியரசர் என்ற வகையில் முதலமைச்சரே விசாரிப்பதுதான் பொருத்தம் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் முன்னர் சில விடயங்களுக்கு விசாரணைக்கு அமர்த்தப்பட்டபோது மிக கேவலமாக நடந்து கொண்டார்கள். என குறிப்பிட்டார். இந்நிலையில் முதலமைச்சரின் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=161398&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.