Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் ரவீந்திரநாத் குடும்பம் மீண்டும் விடுக்கும் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் ரவீந்திரநாத் குடும்பம் மீண்டும் விடுக்கும் வேண்டுகோள்

[15 - January - 2007] [Font Size - A - A - A] (தினக்குரல்)

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு இன்றுடன் சரியாக ஒருமாதம் கடந்து விட்டது. பேராசிரியரின் நிலை குறித்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களும் அவரின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்ட கல்விச் சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் அவர் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை. அவரின் கடத்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. இந்நிலையில், பேராசிரியரின் குடும்பத்தினர் அவரை விடுவிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குடும்பத்தினர் சார்பில் வேண்டுகோளை விடுத்த அவரது மருமகன் டாக்டர் எம்.மலரவன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் பதவி விலகுவதை குடும்பத்தினர் உறுதி செய்து கொள்வர் என்று உத்தரவாதமும் அளித்திருக்கிறார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் கொழும்பு -7 வித்யா மந்திரயவில் விஞ்ஞான முன்னேற்றத்துக்கான இலங்கைச் சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காகச் சென்றவேளையிலேயே கடந்த மாதம் 15 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டிருந்தார். கடத்தல் சம்பவம் இடம்பெற்ற சில தினங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த குடும்பத்தினர் பேராசிரியரின் பதவிவிலகலை ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் தெரியவந்தது. குடும்பத்தினரைப் பொறுத்தவரை, பேராசிரியரின் பதவியைப் பற்றி கிஞ்சித்துமே அக்கறை கிடையாது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பேராசிரியர் பத்திரமாக தங்களுடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதைத் தவிர, வேறு ஒன்றுமேயில்லை.

பேராசிரியர் ரவீந்திரநாத் கடந்த அக்டோபரிலேயே தனது பதவி விலகல் கடிதத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்தபோதிலும், அக்கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழக உபவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மானிய ஆணைக்குழுவுக்கு உரியதல்ல என்பதே பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கு கூறப்பட்ட காரண மாகும். ஜனாதிபதியிடமே பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிவிலகல் கடிதத்தை கையளிக்க வேண்டும் என்றால், பேராசிரியர் ரவீந்திரநாத் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், அவர் பதவியிலிருந்து விலகுவதை உறுதிசெய்வதாகக் கூறியிருக்கும் குடும்பத்தினர் தங்கள் உத்தரவாதத்தின் பிரகாரம் செயற்படுவார்கள் என்பது நிச்சயம். தனது பதவிவிலகல் கடிதம் மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் கொழும்பில் இருந்தவாறே கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்குரிய பணிகளை (மானிய ஆணைக்குழுவின் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க) பேராசிரியர் ரவீந்திரநாத் செய்துகொண்டிருந்தமை தான் அவர் கடத்திச் செல்லப்பட்டதற்கான காரணமாக இருக்குமானால், இனிமேலும் அவரை விடுவிக்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான கல்விமான்களில் ஒருவர் தலைநகரில் பலத்த பந்தோபஸ்துடன் கூடிய பகுதியொன்றில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு ஒருமாதம் கடந்துவிட்ட நிலையிலும்கூட, அவரின் நிலை குறித்து எந்தவொரு தடயத்தையுமே அறியமுடியாதவர்களாக பொலிஸார் இருக்கிறார்கள். உபவேந்தர் என்றவகையில் தனது உயிருக்கு அடிக்கடி விடுக்கப்பட்டுவந்த அச்சறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு பேராசிரியர் ரவீந்திரநாத் முறைப்பாடுகளை செய்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் பேராசிரியர் தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து கடிதமூலம் முறைப்பாடு செய்ததாக குடும்பத்தவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு இருந்தும்கூட, அவருக்கு உகந்த பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. அதுவே அவரின் இன்றைய நிலைக்கும் அதன் விளைவாக குடும்பத்தவர்களின் கலக்கத்துக்கும் காரணமாகும். மீண்டும் அவர்கள் விடுத்திருக்கும் உருக்கமான வேண்டுகோளுக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் செல்வமான கல்வி இன்று பலவழிகளிலும் சீரழிந்து போகிறது. அன்று தரப்படுத்தலுக்கு எதிராக தமிழர்களின் திறமை போராட வைத்தது. இன்று தமிழர்களின் திறமை தரங்கெட்டு நிற்கிறது..!

வன்முறைவாதிகளே இராணுவ தீர்வாளர்களே...கல்வி மீது கைவைப்பதை நிறுத்துங்கள்..! :)

கிழக்கு பல்கலைக் கழக துணை வேந்தர் திரு ரவீந்திரநாத் கடத்தப்பட்டது கொழும்பிலேயே மிகப் பாதுகாப்பான இடத்தில். ரூபவாகினி, வானொலி நிலையம், BMICH, ... அமைந்திருக்கும் இடத்தில். இவைகள் அமைந்திருக்கும் இடத்தில் எவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் இருக்குமென்று சொல்லத் தேவையில்லை. இவ்வாறான பாதுகாப்பான இடத்தில் வாகனத்தில் வந்து கடத்துவதென்பது இலங்கை அரச நிர்வாகத்திற்கு தெரியாமல் நடந்திருப்பதென்பது "முழுப் பூசனிக்காயை, ஒரு கோப்பை சோற்றினுள் புதைப்பதைப் போலானது".

திரு ரவீந்திரநாத்தின் குடும்பத்தை ஒரு ஊடகவியலாளருடன் அண்மையில் லண்டனில் சந்தித்தேன். அல்லல் படுகிறார்கள். திரு ரவீந்திரநாத் இளமைப் பருவத்திலேயே மட்டுநகர் சென்று வாழ்த்தொடங்கியவராம். அம்மண்ணுக்காக அவர் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை. அவர் கடத்தப்படும் இறுதி நிமிடம் வரை மட்டுநகர் மைந்தனாகவே வாழ்ந்தவர்.

இவரது கடத்தலில் கிழக்குபல்கலைக் கழகத்தினுள் பதவிகளுக்கு ஆசைப்பட்ட சிலரின் பின்னணிகள் இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது. இவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்தவர்கள் இன்று "எடுப்பார் கைப்பிள்ளையாக" உலாவும் கருணா கும்பலேதான்!

இந்த "எடுப்பார் கைப்பிள்ளைகளாகிய" "கிழக்கின் மைந்தர்கள்" என்று கூறும் இந்தக் கணவாண்களைக் கொண்டே கிழக்கின் கல்வி, வாழ்வு எல்லாவாற்றையும் சிங்களம் இலகுவாக சீரளிக்கின்றது. இது இந்த எச்சிலிலை மன்மதக்கூட்டத்துக்கு மட்டுமல்ல, புலத்தில் இவ் எடுப்பார் கைப்பிள்ளைகளின் திடீர் ஆதரவு அன்புக் குரல்களுக்கும் புரியப் போவதில்லை.

கிழக்கு பல்கலைக் கழக துணை வேந்தர் திரு ரவீந்திரநாத் கடத்தப்பட்டது கொழும்பிலேயே மிகப் பாதுகாப்பான இடத்தில். ரூபவாகினி, வானொலி நிலையம், BMICH, ... அமைந்திருக்கும் இடத்தில். இவைகள் அமைந்திருக்கும் இடத்தில் எவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் இருக்குமென்று சொல்லத் தேவையில்லை. இவ்வாறான பாதுகாப்பான இடத்தில் வாகனத்தில் வந்து கடத்துவதென்பது இலங்கை அரச நிர்வாகத்திற்கு தெரியாமல் நடந்திருப்பதென்பது "முழுப் பூசனிக்காயை, ஒரு கோப்பை சோற்றினுள் புதைப்பதைப் போலானது".

திரு ரவீந்திரநாத்தின் குடும்பத்தை ஒரு ஊடகவியலாளருடன் அண்மையில் லண்டனில் சந்தித்தேன். அல்லல் படுகிறார்கள். திரு ரவீந்திரநாத் இளமைப் பருவத்திலேயே மட்டுநகர் சென்று வாழ்த்தொடங்கியவராம். அம்மண்ணுக்காக அவர் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை. அவர் கடத்தப்படும் இறுதி நிமிடம் வரை மட்டுநகர் மைந்தனாகவே வாழ்ந்தவர்.

இவரது கடத்தலில் கிழக்குபல்கலைக் கழகத்தினுள் பதவிகளுக்கு ஆசைப்பட்ட சிலரின் பின்னணிகள் இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது. இவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்தவர்கள் இன்று "எடுப்பார் கைப்பிள்ளையாக" உலாவும் கருணா கும்பலேதான்!

இந்த "எடுப்பார் கைப்பிள்ளைகளாகிய" "கிழக்கின் மைந்தர்கள்" என்று கூறும் இந்தக் கணவாண்களைக் கொண்டே கிழக்கின் கல்வி, வாழ்வு எல்லாவாற்றையும் சிங்களம் இலகுவாக சீரளிக்கின்றது. இது இந்த எச்சிலிலை மன்மதக்கூட்டத்துக்கு மட்டுமல்ல, புலத்தில் இவ் எடுப்பார் கைப்பிள்ளைகளின் திடீர் ஆதரவு அன்புக் குரல்களுக்கும் புரியப் போவதில்லை.

மனித உரிமை அமைப்பாளர் திரு.கேதீஸ்வரன் அவர்களை கொலை செய்தவர்கள் தான் இவரையும் கடத்தி வைத்திருப்பார்கள்.பாஸிச அரசே பதில் சொல்லு! உனக்கும் விரைவில் அமெரிக்கா தூக்கு கயிறு மாட்டும்.இப்போ தான் பாகிஸ்தான் பாம்பு புத்துக்கு பால் வார்த்த விசயம் வெளிச்சமாகியுள்ளதாம் .அங்கே தகர்கேக்கை இங்கையும் அதிரும் தானே.

I am writing this to challenge the YARL community to act on the matter of the recent spate of abductions that are often with the complicity of forces within military. Further extortion of money by rackets that are operating with genuine CID ID cards is also on the increase.The disappearance of the VC of Eastern university about three weeks ago has now largely forgotten and we need to act on all these issues. Facts on the VCs kidnapping: It is highly likely that he was kidnapped by the Karuna faction. The second in command of this group 'pillaiyan' a notorious torturer had been calling the VC and no action has been taken by the government despite the mobile phone no from which the earlier threatening phone calls were made had been given to the authorities. On an earlier incident this no had been traced to a tower near Mannampitiya where Karuna carders have a large complex within the government controlled area. The VC was a man who would not bow down to threats from the Karuna group and I wish that all Tamils including me were as brave. Although the batticaloa population is made to understand that the VC was an LTTE man as the reason for his capture- we must remember that the UGC had confidence in the man. Even if he had done certain things that were requested by LTTE it does not still justify non judicial kidnapping/torture. Having folllowed this incident I feel that the primary reason is that the VC looked right at the Karuna group and defied them knowing that his life was on line.We have remained silent over all these issues around us- it is time at least to speak when a prominent academic/ VC is kidnapped and is likely tortured and killed. Can we act ?????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.