Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கிசுகிசு செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

மாடி வீட்டு ஏழை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எம்.பி. மேர்வினுக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தாராம்...

"என்ன மேர்வின் எப்படி சுகம் எனது நண்பர் ஒருவருக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது.... கொஞ்சம் அனுப்பி விடுங்களேன்... புதுக் கட்சி எல்லாம் ஆரம்பித்திருக்கிறீர்கள்.... நல்ல வளமாக இருக்கிறீர்கள் எனக் கேள்விப்பட்டேன்'' என்று மேர்வினிடம் நக்கலாகக் கேட்டாராம் மஹிந்த....

"ஐயோ சேர்....எவனோ ஒருவன் நான் சொகுசாக வாழ்கிறேன் என கதையைக் கட்டி விட்டிருக்கிறான்... நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்... செலவுக்குக்கூட மனைவியிடம்தான் வாங்கிக்கொள்கிறேன்...கட்சி ஆரம்பித்ததுகூட நண்பர் ஒருவரின் உதவியால்தான்.... நான் மாடி வீட்டு ஏழை'' என்று அழாத குறையாகச் சொன்னாராம் மேர்வின்.

இதனைக் கேட்டு சத்தமாக சிரித்த மஹிந்த ""நான் சும்மா தமாஸுக்கு கேட்டேன் ...பயப்பட வேண்டாம். நான் எவ்.சி.ஐ.டி. எல்லாம் போகமாட்டேன்'' என்று கூறி அரசியல் குறித்துப் பேசினாராம்...

இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பலதும் பத்தும் பேசிக்கொண்டதாகக் கேள்வி...

http://www.sudaroli.com/

  • Replies 56
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ரணிலுக்குத் தொலைபேசி அழைப்பு

காலி, கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னாராம். இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றபோது மஹிந்த கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட ஷங்கிரி லா ஹோட்டலில் இரவுநேர விருந்துபசாரத்தில் இருந்தாராம். (மஹிந்தவுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஹோட்டல் நிர்வாகம் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தது.)

இந்த நிகழ்வில் இருந்தபடியே பிரதமர் ரணிலுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மஹிந்த, 'காலி தாக்குதல் நிலைமை என்ன? என்ன செய்திருக்கிறீர்கள்? நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர விசேட அதிரடிப்படையை களத்தில் இறக்குங்கள்" என்று ஆலோசனை சொன்னாராம்..

அதற்குப் பதிலளித்த பிரதமரோ, 'நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. சாகலவை அங்கு அனுப்பியுள்ளேன். பிரச்சினையில்லை" என்று கூறினாராம்.

பின்னர் அந்த முஸ்லிம் வர்த்தகரோடு தொடர்புகொண்ட மஹிந்த நிலைமையை விளக்கிக் கூறியதாக தகவல்.

இன ரீதியான முறுகல்களைக் கட்டுப்படுத்தத் தவறும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து தனக்கு அருகே இருந்தவர்களிடம் கூறிக் கவலைப்பட்டாராம் மஹிந்த. (அளுத்கம பாதிப்பிலிருந்து அவர் இன்னமும் மீளவில்லை போலும்)

https://www.sudaroli.com/

  • தொடங்கியவர்

கண்காணிப்பு

 
அரசியலில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் அரச தலைமைப்பீடத்தினால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகத் தகவல்.
 
அரச தலைவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படலாமென செய்திகள் கசிந்துள்ள நிலையிலேயே இந்தக் கண்காணிப்பு இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது.
 
இப்படி கண்காணிப்பு நடப்பதாக முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அரச புலனாய்வுத் துறையிலிருந்து தகவல் சென்றுள்ளதால் பலர் மிகவும் கவனமாக இருக்கின்றனராம்.
 
புலனாய்வு வேலைகளுக்காக முன்னைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட லேட்டஸ்ட் உபகரணங்கள் கூட இப்போது பயன்படத் துவங்கியுள்ளனவாம்.
 
 

தலைவருக்கு தகவல்

 
பிரதமர் ரணில் பிணைமுறி ஆணைக்குழுவுக்கு வந்தது, இறங்கியது, சென்றது, சாட்சியமளித்தது, திரும்பிச்சென்றது என அனைத்து தகவல்களையும் நேற்றையதினம் பிணைமுறி ஆணைக்குழு வளாகத்திலிருந்து அரச தலைமைக்கு நேரடியாக ரிப்போர்ட் நடந்து கொண்டிருந்ததாம். ஆணைக்குழு முன்பாக பிரதமர் என்ன சொல்லப்போகிறார், அது அரசுக்கு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து செயற்படுவதற்காக அரச தலைமை நேற்றைய விசாரணையை அறிய ஆவலில் இருந்ததாம்.
 
இதற்காக ஒரு முக்கிய அரசியல் புள்ளி நேற்று படு பிஸியாக செயற்பட்டதாகக் கேள்வி.
 
 

ஹோட்டல் இராஜதந்திரம்

ஷாங்கிரியா ஹோட்டல் நிர்வாகம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கிய விருந்துபசாரம் குறித்து அரச உயர்மட்டம் கடும் விசனம் அடைந்துள்ளதாம்.
 
முதல் நாள் ஹோட்டல் திறப்பு விழாவில் ஜனாதிபதி, பிரதமர் என முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டபோதும் ஒரு கேக் கூட வெட்டப்படவில்லையாம். ஆனால், மறுநாள் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பிறந்த தினத்தன்று அழைத்த ஹோட்டல் நிர்வாகம் கேக் வெட்டி, தாராளமாக சோமபானங்களை வழங்கி  கிட்டத்தட்ட ஹோட்டல் அன்றைய தினமே திறந்து வைத்தது போல செயற்பட்டதாம்.
 
இதனை அறிந்த அரச உயர்மட்டம் கடுப்படைந்தது மட்டுமல்லாமல், ஹோட்டல் நிர்வாகத்தின் ராஜதந்திரம் குறித்தும் கோபமடைந்துள்ளதாம்.
 

தெரியாத ஆயுதங்கள்

 
கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் சந்தித்தார் அல்லவா... அப்போது கருத்துத் தெரிவித்த கட்சித் தலைவர்கள் அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியை இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி அதற்கு ஆதரவாக தீவிரமான கருத்துக்களைத் தெரிவித்தனராம் புதிய வியூகங்களை வகுக்க வேண்டும் என்றனராம்...
 
அப்போது பலமாகச் சிரித்த ஜனாதிபதி, 'யுத்தத்துக்குப் போகும்போது ஆயுதங்களை வெளியில் காட்டிக்கொண்டு போக மாட்டார்கள்... பொறுங்கள் பொறுங்கள்..." என்று சொன்னாராம்...
 
எப்படியோ மஹிந்த ராஜபக்ஷ அணியுடன் பேசுவதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம்... எம்.பிக்களான ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் எம்.பிக்களான அதாவுல்லா, டியூ குணசேகர ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். சுதந்திரக் கட்சி அமைச்சர் ஒருவரும் இதில் உள்ளடக்கப்படுவார் எனச் சொல்லப்படுகின்றது.
 
 
 

தலைவரின் யாத்திரை

மலையகத்தின் அந்த ஐயப்ப பக்தரான மான் தலைவரும் அவரின்  பின்னால்  உள்ள ஐயப்ப (ஆமாம்) சாமிமாரும் இன்று சபரிமலைக்கான யாத்திரையை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளனராம்...
 
திருவனந்தபுரத்திற்குச் செல்லும் இந்த டீம் அங்கிருந்து சபரிமலைக்கு நேராக செல்லவுள்ளதாம்...
 
அமைச்சர் ஒருவர் மான் தலைவருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ள நிலையில்... அமைச்சுப் பதவியை மான் தலைவர் எதிர்பார்த்துள்ள நிலையில்... காங்கிரஸிலிருந்து செய்திகளை வெளியே யார் கொடுப்பது என்று தலைவரே தேடித் திரியும் நிலையில்...
 
தலைவரின் வேண்டுதல்களை பகவான் ஐயப்பன்  ஏற்கவேண்டுமென வேண்டி நிற்கின்றனராம் தொண்டர்கள்...

தலைவரின் டோஸ்

இந்தியா சென்றுள்ள சட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சரைத் தொடர்புகொண்ட அந்த உயர்மட்டத் தலைவர் அவரை தொலைபேசியில் வறுத்தெடுத்ததாகக் கேள்வி.
 
'என்ன நீங்கள் புதுக்கதையெல்லாம் விடுகிறீர்கள். தேவையில்லாத கதைகளை யார் பரப்புவது என்று எனக்குத் தெரியும். கோட்டாபயவை கைதுசெய்ய நான் உத்தரவிட்டதாகக் கூறித்திரியாதீர்கள். பிரதமருக்கு சொல்லுங்கள் எனது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு"  - என்று அதிரடியாகக் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்ததாம் அரச தலைமை.
 
எல்லே குணவங்ச தேரர், இத்தேபான தம்மாலங்கார தேரர் ஆகியோர் கொடுத்த அழுத்தத்தின் பின்னரே அரச தலைவர் இந்தத் தொலைபேசி ~டோஸை| கொடுத்ததாகக் கேள்வி.

 

 

எனக்கும் தெரியும்

 
”சிறி” தலைவரின் சகோதரர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேசினாராம்.
 
'உங்களது தம்பி கைதுசெய்யப்படுவாரா என்பது பற்றி தெரியவில்லை. நானும் மேலிடங்களில் கேட்டேன். ஆனால், அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனது சகோதரர் பக்கம்கூட கேட்டேன். அப்படி ஒன்றும் விவரங்கள் வெளிவரவில்லையே" -
என்றும் குறிப்பிட்டாராம் அரச பெரியவரின் தம்பி. அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, 'தம்பி, இங்கே வாரும். நானும் உந்தப் பதவியில் 11 வருடங்கள் இருந்தேன்...
 
எனக்கும் அந்தக் கதிரையின் பவர் தெரியும். அங்கு என்ன நடக்கிறது என்றும் எனக்கு தெரியும். என்னிடம் கதை சொல்லவேண்டாம்" - என்றாராம் காட்டமாக. அரச தலைவரின் சகோதரர் அத்தோடு அமைதியாகிவிட்டதாகத் தகவல்.
 

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்

உங்களிடமே வருவோம்

 
அமைச்சர்களான ஜோன் செனவிரட்னவும், சுசில் பிரேம்ஜயந்தவும் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினார்கள் அல்லவா? அப்போது அவர்கள் ஒரு முக்கிய விடயத்தைச் சொன்னார்களாம்.
 
'சேர் யு.என்.பியுடனான எமது கட்சியின் உறவு எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் அந்தக் கூட்டணி தொடருமா முறியுமா என்பது பற்றி எமக்குத் தெரியாது. ஆனால் என்ன நடந்தாலும் அந்தத் திகதிக்குப் பின்னர் ஒரு நிமிடம்
கூட நாங்கள் அங்கே இருக்கமாட்டோம். உங்களிடம் வந்துவிடுவோம். இது உறுதி" - என்றனராம் இந்த இரு அமைச்சர்மாரும்.
 
அமைச்சர்மாரின் இந்த உறுதியை பாராட்டினாராம் மஹிந்தர்.
 

நிமல் வேண்டாம்

 
மைத்திரி - மஹிந்த அணியை இணைக்க இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன அல்லவா? மைத்திரி சார்பு குழுவில் நிமால் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, லசந்த அழகியவண்ண ஆகியோரும், மஹிந்த அணியில் மஹிந்த யாப்பா அபேவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரட்னாயக்க ஆகியோரும் உள்ளனர்.
 
பேச்சுகள் நடந்துவரும் நிலையில் மஹிந்த அணி திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளதாம். 'எமக்கு அமைச்சர் நிமல் சிறிபாலவின் மீது நம்பிக்கையில்லை. அவர் விடயங்களைக் குழப்புவார். அமைச்சர் ஜோன் செனவிரட்னவை நிமலுக்குப் பதிலாக நியமியுங்கள். அப்போதே எல்லாம் சுமுகமாக நடக்கும்||- என்று அதிரடியாக சொல்லியுள்ளதாம் மஹிந்த குழு.
 
இப்போது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதா என்பது குறித்து சுதந்திரக் கட்சியின் தலைமை தீவிரமாக யோசித்து வருகிறதாம்.

https://www.sudaroli.com

 

  • தொடங்கியவர்
நுவரெலியாவில் தனிவழி!
 

முற்போக்கான கூட்டணி, நுவரெலியா மாவட்டத்தில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் யானையோடு இணைந்தும் போட்டியிடவுள்ளதாக கட்சி சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.

முடிந்தால் தனித்து வென்று காட்டுங்கள் என, சேவல் தலைவர் அண்மையில் சவால் விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனித்துப் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சின்னம் என்னவென்பதுதான்.

வாள் சின்னத்தில் போட்டியிடுவோம் என சங்கத்தின் தலைவர் விடாப்பிடியாக இருக்கிறாராம். ஆனால், மண்வெட்டியை மக்கள் மறந்துவிடவில்லை என முன்னணியின் தலைவர் கூறியிருக்கிறாராம். 

இது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஏனைய மாவட்டங்களில் சேவல் தனிவழி போகும் பட்சத்தில் அவர்களுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு பற்றியும் பேசப்படுகிறதாம். 

எது எப்படியோ, நுவரெலியாவில் தனித்தே களமிறங்குவோம் என்பதில் ஒத்தகருத்து நிலவுகிறது. இம்முறை போட்டி கொஞ்சம் சூடுபிடிக்கும் போல!

http://www.tamilmirror.lk/tm-gossip-news/நுவரெலியாவில்-தனிவழி/356-207937

  • தொடங்கியவர்

திடீர் மைத்திரி

கொஹ{வல மயானத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால திடீரெனச் சென்றமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மினுவாங்கொடை அமைப்பாளர் ருவான் ரணதுங்கவின் (அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர்) மாமியாரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி அதிரடியாக அங்கு சென்றுள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி, முன்னறிவித்தலின்றி சென்ற ஜனாதிபதியை கண்ட அமைச்சர் அர்ஜுன 'சேர் நீங்கள் வருவீர்களென எதிர்பார்க்கவேயில்லை" என்றாராம். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதியோ 'கேள்விப்பட்டேன்... அதுதான் வந்தேன்" என்றாராம்.

ஜனாதிபதியின் இந்த எளிமையான சுபாவம் குறித்து அங்குள்ள பலரும் தங்களுக்குள் பெருமையாகப் பேசிக்கொண்டனராம்.

 

அரச மீடியாக்களுக்கு கன்டரோல்

அரச ஊடகங்கள் ஜனாதிபதியின் செய்திகளுக்கும் அவரின் உரைகளுக்கும் உரியவகையிலான முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லையென ஜனாதிபதியிடம் சிலர் முறையிட்டுள்ளதாகக் கேள்வி.

இதனால் அரச ஊடகங்களை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டுமென அவர்கள் ஜனாதிபதியிடமே வலியுறுத்தியுள்ளனராம்.

அரச ஊடகங்கள் ஜனாதிதியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது என்றாலே அதில் ஆயிரம் அரசியல் உள்ளர்த்தங்கள் இருப்பதாக விமர் சகர்கள் சொல்கின்றனர்.

 

கைவிரித்த ஜனாதிபதி

சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியும், மஹிந்த அணியும் இணையப்போவதாக வரும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள அமைச்சர் மலிக் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தாராம்.

'என்ன சேர்.... செய்திகள் பலவாறு வருகின்றனவே..... உண்மைதானா?"- எனக் கேட்டாராம் மலிக். 'மலிக்... ஏதோ பேச்சுகள் நடக்கின்றன. எனது கட்சியில் பெரும்பாலான ஆட்கள் மஹிந்த அணியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட விரும்பினால் நான் என்ன செய்வது? பார்ப்போம்...பார்ப்போம்"- என இராஜதந்திரமாக சிரித்தபடி பதிலளித்தாராம் ஜனாதிபதி.

மஹிந்தவுடன் கூட்டுச் சேர்வேன் என்கிறாரா...... இல்லை என்கிறாரா... ஒரே குழப்புகிறாரே ஜனாதிபதி என்று தனக்கு நெருக்கமானவரிடம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் அமைச்சர் மலிக்.

 

டக்ளஸின் செல்வாக்கு!

தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.பிக்கள் இருவருக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற நேரம் தேவைப்பட்டதாம். ஆனால் எவரும் அவர்களுக்காக தமக்கு வழங்கப்பட்ட நேரத்தை விட்டுக்கொடுக்கவில்லையாம்.

அதில் ஒருவர் சொன்னாராம், 'எங்களுக்கு உவை நேரம் தராமல் இழுத்தடிக்கின....அங்க மறுபக்கம் உந்தாள் டக்ளஸ், எல்லா அமைச்சுகளின்ர விவாதங்களிலையும் மக்கள் சார்பா பேசிக்கொண்டே போகுது..... இப்படியே போனா அந்த மனுசனுக்கு இவயளே செல்வாக்க எடுத்துக்கொடுத்துவிடுவினம் போல" - என்றாராம்.

எப்படியோ டக்ளஸ் பேசுறார் என்பதற்காகவாவது கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு பேசுவதற்கு பேச அனுமதி கிடைத்தால் சரி.

ராஜபக்ஷவை சந்தித்த ராஜபக்ஷ

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மிக இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் எனத் தகவல்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து இருவரும் பேசிக்கொண்டனராம்.

"சேர் நீங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முன்வாருங்கள். என்னுடன் மேலும் பலர் இருக்கின்றனர். அவர்களையும் கூட்டிக்கொண்டு நான் வருவேன்'' என்று கூறினாராம் விஜயதாஸ எம்.பி. இதன்படி விரைவில் அரசியல் அதிரடிகள் இடம்பெறலாம் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்
சிவப்புத் தலைவரின் இரகசியப் பயணம்!

image_f4d128ceee.jpgஅண்மையில் அலரி மாளிகைக்கு முச்சக்கரவண்டியொன்று வேகமாக வந்துள்ளதாம். பிரதமரது அலுவலகம் என்பதால் அங்கு முச்சக்கர வண்டியில் அநேகமாக யாரும் வருவதில்லை.

அதனால் யார் இவ்வாறு முச்சக்கர வண்டியில் வந்தார்கள் என்பதை அறிய பாதுகாப்புப் பிரிவினரும் ஆவல் கொண்டிருந்தார்களாம். அவ்வாறு வந்தவர் சிவப்புக் கட்சியின் தலைவராம்.

பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒரே ஆச்சரியமாம். “நானும் சாதாரண பொதுமகன் தானே” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றிருக்கிறார் அவர். அங்கு பிரதமரோடு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் இரகசியமான முறையில் அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

http://www.tamilmirror.lk

தூக்கப்பட்டார் அந்த அறிவிப்பாளர்

 

பலம்மிக்க அந்த வானொலியிலிருந்து பிரபல அறிவிப்பாளர் ஒருவர் பதவியிலிருந்து திடீரென தூக்கப்பட்டுள்ளாராம். முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பெயரை ஒத்த பெயர்கொண்ட இந்த அறிவிப்பாளர் இரவுநேர நிகழ்ச்சியில் பிரபலமானவர்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட "தலைநகர்' வானொலியுடன் இரகசியத் தொடர்புகளை வைத்திருந்தார் என்பதுடன், அந்த வானொலிக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கியதாகவும் இந்த அறிவிப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாம்.

அவர் பாவித்த அலுவலக கணினியை அக்குவேர் ஆணிவேராக ஆராய்ந்த நிர்வாகம் அதில் பல உண்மைகளைக் கண்டறிந்தே இந்த அதிரடி முடிவை எடுத்து அவரைப் பதவியிலிருந்து தூக்கியுள்ளதாகத் தகவல்.

 

இணக்கமில்லா மீட்டிங்

 

அரச தலைவரின் சகோதரருக்கும் முன்னாள் அரச தலைவரின் தம்பியார் ஒருவருக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடந்துள்ளதாம்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் மஹிந்த மைத்திரி இணைப்பு குறித்து இந்தச் சந்திப்பின்போது விரிவாகப் பேசப்பட்டுள்ளதாம். ஆனாலும் இணக்கப்பாடின்றி இந்தச் சந்திப்பு முடிவடைந்திருப்பதாகத் தகவல்.

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்

எனது பிரதிநிதி நீங்கள்

 

எதிர்க்கட்சியிலிருந்து அரசுக்கு வரவுள்ள வீரமான எம்.பி. ஒருவர் ஜனாதிபதியைச் சந்தித்தாராம். இந்தப் பேச்சின்போது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படுமென அந்த எம்.பிக்கு சொல்லப்பட்டதாம்.

உடனே பதறியடித்த அந்த எம்.பி. ""ஐயோ சேர் அந்த அமைச்சு மட்டும் வேண்டாம். அந்த அமைச்சர் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறார். நான் போய் ஏதாவது செய்ய எனக்கும் வினை வந்துவிடும்'' என்றாராம்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதியோ ""நீங்கள் ஏன் அதனைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்...... அவர் பிரதமரின் ஆளாக இருக்கட்டும். நீங்கள் என்னுடைய ஆளாக இருந்துவிட்டுப் போங்கள்'' என்றாராம் கூலாக. ஒரே சிரிப்பலை எழுந்ததாம் அந்த இடத்தில்.

அமைச்சரின் ஓய்விடங்கள்

 

சிரேஷ்ட நிமலமான அந்த அமைச்சர் தனது பதுளை ஊருக்குச் செல்லும் வழியில் தேநீர் குடிக்க இரண்டு ஹோட்டல்களில் இறங்குவதை வழக்கமாக வைத்துள்ளாராம். அப்படி இறங்கி ஹோட்டலுக்குச் செல்லும் அவர் நீண்ட நேரம் வெளியே வருவதில்லையாம்.

அப்படி என்னதான் அமைச்சர் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவரது மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஆவலில் உள்ளனராம்.

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்

தலைவரின் சகுனம்

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டாட்சி ஒப்பந்தங்களை கைச்சாத்திட சுபநேரம் பார்த்து அதன்படியே செயற்பட்டு வருகிறாராம் மலையகத்தின் அந்த மான் தலைவர்.

இந்தியாவிலிருந்து நல்ல நேரம் கணிக்கப்பட்டு அதன்படியே ஏற்பாடுகள் நடப்பதால் தைரியமாக முழு நம்பிக்கையுடன் களத்தில் குதித்திருக்கிறாராம் தலைவர்.

சோதிடத்தை நம்பி ஏற்கனவே மோசம்போன முன்னாள் தலைவரை இவர் மனதில் நினைத்துக்கொண்டால் சரி.


* * *

எதிர்க்கூட்டணிக்குள் வீரமானவரின் கோபம், குத்துவெட்டு தீவிரமடைந்துள்ளதாம். தேர்தலில் தொகுதிப்பங்கீடு கேட்கும் கூட்டு எதிர்க்கட்சியின் வீரவம்சத்தைச் சேர்ந்தவர் முன்னாள் பெரியவரின் சால்வை போடும் தம்பியை திட்டித்தீர்த்திருக்கிறாராம்.

"சேர் உங்களின் முகத்திற்காகத் தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். கோட்டா, பசில், நாமல் ஆகியோருக்காக நாங்கள் இங்கே இல்லை. எங்களை மட்டந்தட்ட நினைக்காதீர்கள்'' என்று முன்னாள் தலைவரின் முகத்திற்கு நேராகவே பொரிந்து தள்ளினாராம் வீரமானவர்.

 

ஜனாதிபதி மனதில்

 
 

தேர்தல் கூட்டு மற்றும் இதர அரசியல் விடயங்கள்குறித்து கட்சித் தலைவர்மாருடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தி வரும் ஜனாதிபதி மைத்திரி நேற்றுமுன்தினம் இரவு ஈ.பி.டி.பியை சந்தித்தாராம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய பேச்சும் எழுந்ததாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் பொறுப்புடன் செயற்படவேண்டுமென ஜனாதிபதி கூறிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட டக்ளஸ் எம்.பி., ""ஓம் சேர் அவர்கள் வைக்கோல் பட்டடை நாய்கள் போல... சில வேலைகளைத் தாங்களும் செய்யமாட்டார்கள்...

மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள்'' என்று கூறியபோது ஜனாதிபதி சத்தமாக சிரித்தே விட்டாராம்.

ஜனாதிபதியும் இப்படித்தான் கூட்டமைப்பை எடைபோட்டிருந்தாரோ... யாருக்குத் தெரியும் மனதின் ஆழம்...!

 

 

மீட்டிங் கட்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பதுளையில் நடந்த கூட்டத்தை கூட்டு எதிர்க்கட்சியின் பல முக்கியஸ்தர்கள் திட்டமிட்டுப் புறக்கணித்திருக்கின்றனர் எனக் கேள்வி.

முக்கியஸ்தர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, சி.பி. ரட்ணாயக்க, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரே இவ்வாறு புறக்கணிப்பைச் செய்ததாகத் தகவல்.

வேட்புமனு தயாரிப்பு வேலைகளில் பிஸியாக இருப்பதாக இவர்கள் கூறினாலும் அப்படி எதுவும் இல்லையென்றும், மஹிந்தவின் சகோதரர் ஒருவருடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளே இதற்கான காரணமென்றும்  சொல்லப்படுகிறது.

 

 

ராஜபக்சாக்கள் அப்படித்தான்

 

பஸில் ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி மைத்திரி தொலைபேசியில் உரையாடியபோது கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குறித்தும் பேசப்பட்டதாம்.

அப்போது பஸில், ""ஜனாதிபதி அவர்களே.... கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் குழு என்ன முடிவு எடுக்குமோ அதன்படியே செய்வோம்'' என்றாராம். சரி என போனை வைத்த ஜனாதிபதி, பக்கத்தில் இருந்த

உயர்மட்ட பிக்கு ஒருவரைப் பார்த்து ""எனக்குத் தெரியாத ராஜபக்ஷாக்களா... அவர்கள் என்றைக்கு கட்சிக் குழுக் கூட்டத் தீர்மானத்தின்படி செயற்பட்டார்கள்?'' என்று சத்தமாக சிரித்தபடி சொன்னாராம்.

பாம்பின்கால் பாம்பறியும் என்பார்களே...

 

பிரதமரின் பார்வை

தேர்தல் கூட்டு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து நடக்கும் பேச்சுகளில் முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவர் ஆர்வமின்றி பங்கேற்பதைக் கவனமாக அவதானித்திருக்கிறாராம் பிரதமர்.

இப்படி பேச்சுகள் நடக்கும்போது சிலசமயம் தாமதமாக வரும் அந்தத் தலைவர், ""எங்களையெல்லாம் எங்கே கூட்டுச் சேர்க்கப் போகிறீர்கள்'' என்று கூறியபடி வந்து ""தனியே தேர்தலுக்குப் போகவுள்ளேன்''

என்று சொல்வாராம். சிலசமயம் சரியான நேரத்துக்கு கூட்டத்திற்கு வந்து இடைநடுவில் செல்வாராம் அந்தத் தலைவர்.

இதனை சில நாட்களாகவே கவனித்த பிரதமர், ""இவர் டிமாண்ட் பண்ணி சில விளையாட்டுகளை காட்டப்பார்க்கிறார். புதியவர்களுடன் கிழக்கில் தனிக்கூட்டு என இவர் நடத்தும் நாடகம் எனக்கும் தெரியும்'' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தாராம்.

 

 

https://www.sudaroli.com/

  • தொடங்கியவர்

நோ ஐ.ஜி.பி.

 

சட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சரைச் சந்திக்கச் சென்ற பௌத்த பிக்கு ஒருவர், அவரை விழா ஒன்றுக்கு தலைமைதாங்குமாறு அழைப்பு விடுத்தாராம்.

இதனை ஏற்ற அமைச்சர்,

"யார் இந்த விழாவில் உரையாற்றப்போவது?'' என்று கேட்டாராம். ""பொலிஸ் மா அதிபரும் இதற்கு வருவார்; உரையாற்றுவார்'' என்று பிக்கு கூறியதும் அமைச்சரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததாம்.

"பொலிஸ் மா அதிபர் உரையாற்றுவாராயின் நான் அங்கு பேசமாட்டேன். நீங்களே தீர்மானியுங்கள்'' என்று ஒரேயடியாக சொல்லி கதையை முடித்தாராம் அமைச்சர்.

 

மஹிந்த அதிர்ச்சி

 

மைத்திரி அணியுடன் சேர்வதா இல்லையா என்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சியான மஹிந்த அணி இறுதிப் பேச்சு நடத்தியதல்லவா?

அந்தப் பேச்சில் விமல் வீரவன்ஸவும், உதய கம்மன்பிலவும் கலந்துகொள்ளவில்லையாம்.

உடனே பதறியடித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூட்டத்துக்கு வராத காரணத்தை வினவினாராம்.

அவர்களோ "அரசுடன் இணையும் பேச்சுகளுக்கு நாங்கள் ஏன் வரவேண்டும்'' என்று கூறினராம். மைத்திரி அணியுடன் இணைவது பிடிக்காத காரணத்தினால்தான் இந்தப் பேச்சுக்கு அவர்கள் வரவில்லையென்ற விடயம் தெரிந்தபின்னரே மஹிந்தவின் டென்ஷன் குறைந்ததாம்.

 

பஸில் மீது குறை

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் எம்.பியுடன் நாடாளுமன்றத்தில் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியதாகக் கேள்வி.

வடக்கு அரசியல் நிலைவரம் குறித்த பேச்சு வந்தபோது பஸில் ராஜபக்ஷ வடக்கில் பிடித்திருக்கும் ஆட்கள் மற்றும் அமைப்பாளர்கள் குறித்து அதிருப்தியைத் தெரிவித்தாராம் டக்ளஸ்.

"ஆமாம்... சில விடயங்களில் அவசரப்படாமல் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவேண்டும். பஸில் தொடர்பில் பலர் என்னிடம் குறைகளைச் சொல்கின்றனர்.

நான் அவரை இன்னும் அறிவுறுத்த வேண்டும்'' என்றாராம் மஹிந்த.

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்

காலில் விழுந்த கம்மன்பில

 

வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் உதய கம்மன்பிலவுக்கும் பந்துல குணவர்தனவுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

எப்படியோ அந்தப் பிரச்சினை சுமுகமான முறையில் தீர்த்துவைக்கப்பட்டதாம். என்றாலும் உதய கம்மன்பில வாக்குவாதம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரி பந்துல குணவர்தனவின் காலில் விழுந்தாராம். என்னடா இது எனப் பார்த்தால் பின்னர்தான் விவரம் புரிந்ததாம்.

பந்துல குணவர்தன எம்.பி. அரசியலுக்கு வர முதல் வணிகவியல் ஆசிரியராக இருந்தவர். அப்போது உதய கம்மன்பில அவரிடம் மாணவராக இருந்தார்.

போயும் போயும் படிப்பித்த ஆசிரியரை அரசியலுக்காக திட்டித் தீர்த்துவிட்டோமே என்று கவலைப்பட்டே பந்துலவின் காலில் விழுந்தாராம் உதய கம்மன்பில எம்.பி.

 

கோட்டாவின் கோபம்

 

எதிர் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணி மைத்திரி அணியுடன் இணைந்தே போட்டி யிட்டிருக்கவேண்டுமெனக் கூறி தனது சகோதரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய.

மைத்திரியுடன் இணையாமல் தனியே போய் நின்று வம்பை விலைக்கு வாங்க அண்ணன் மஹிந்த, பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையைக் கேட்டு தயாராவதாகத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் பறந்து விட்டாராம் கோட்டா. இப்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் ராஜபக்ஷ குடும்பம்.

 

திட்டமிட்ட சதி

 

மலையகத்தின் அந்த காங்கிரஸ் கட்சியின் இளைய தளபதியை கைதுசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருக்கிறதாம்.

கைது ஏற்பாடுகளைச் செய்த பொலிஸ் நிலையத்தின் முக்கிய அதிகாரிகள் மலையக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் களாம்.

அரசியல்வாதியாக வரவுள்ள ஒருவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தால் அவரது மவுசு கூடித்தான் போகும். குறையாது. இதுகூட அந்த அமைச்சருக்குத் தெரியாதா?

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்

சினிமா நடிகர்களும் தேர்தலில்

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன அல்லவா?

மலையகத்தின் அரசியல் கட்சியொன்று தேர்தல் காலத்தில் மக்களின் ஆதரவைப் பெற தமிழகத்தின் சினிமா நடிகர்கள் சிலரைக் களமிறக்க முயற்சிகளை எடுத்து வருகிறதாம்.

தேர்தல் காலத்தில்

சினிமா நடிகர் நடிகைகளை களமிறக்கினால் மக்களின் ஆதரவு அதிகமாகக் கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறதாம்.

வைகைப்புயல் வடிவேலு வரலாம் என்பது அட்வான்ஸ் தகவல்.

 

அடம்பிடிக்கும் கோட்டா....

 
 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அண்ணன் மஹிந்தவுக்கோ அல்லது பஸிலுக்கோ ஆதரவாகப் பேசுவதற்கு அரசியல் மேடைகளில் ஏறப்போவதில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளாராம்.

ஆனாலும் அவரை தேர்தல் மேடைகளில் ஏற்ற பௌத்த பிக்குகள் மற்றும் மஹிந்தவின் நண்பர்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றனராம்.

ஜனாதிபதி மைத்திரியுடன் இணையாமல் தனித்து தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கடும் அதிருப்தியுடன் இருக்கும் கோட்டாபய, ""தேர்தல் முடியும்வரை நாடு திரும்பமாட்டேன்'' என அடம்பிடிப்பதாகக் கேள்வி.

 

இது அரசியல் “டொபி”

 

 

நாடாளுமன்றத்தில் நித்திரை கொள்ளும் அரசியல்வாதிகள் யார் என்பது பற்றி இரகசிய ஆய்வொன்று நடத்தப்பட்டதாம். அந்த ஆய்வின்போது பல அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சபைக்குள் அமர்ந்தவாறே நித்திரையடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது இந்த அரசியல் பிரமுகர்கள் நித்திரை கொள்வதைத் தடுக்க புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாம். நித்திரை கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் சபைக்கு வரும்போது "டொபி' ஒன்று இனிமேல் வழங்கப்படவுள்ளதாம். அந்த டொபியை சுவைத்துக்கொண்டிருந்தால் நித்திரையே வராதாம். இந்த "டொபி' வழங்கும் செயற்பாடு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் உள்ள ஆய்வுகூடத்தில் இப்படி "டொபி' வழங்கப்படுகிறதாம்.

அங்கு பணிபுரிவோர் நித்திரை கொள்ளாதிருக்க செய்யப்பட்ட ஏற்பாடு அங்கு வெற்றியளித்துள்ளதால் அந்தத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி, கறுவா, ஏலம், மிளகு அடங்கிய இந்த "டொபி' உடல்நலத்திற்கு ஏற்றதுடன் பக்கவிளைவுகள் அற்றதாம்.

(பல அலுவலகங்களுக்கும் இந்த "டொபி' எதிர்காலத்தில் தேவைப்படலாம்.)

 

பஸிலிடமே செல்லுங்கோ!

 

கிழக்கில் கூட்டணி அமைத்துள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேட்புமனுக்களை இறுதி செய்வது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி செயலாளருடன் கடுமையாக விவாதித்தாராம்.

ஒரு கட்டத்தில் விவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ""நாங்கள் முன்னைய காலங்களில் அரசுக்கு ஆதரவு வழங்கச் சென்றால் பஸில் ராஜபக்ஷ போன்றவர்கள் எங்களை எப்படிப் பாதுகாத்தார்கள் தெரியுமா? அவ்வளவு தூரம் மரியாதை எங்களுக்கு இருந்தது'' என்றாராம் அந்த முஸ்லிம் அமைச்சர்.

அதற்குப் பதிலளித்த ஐ.தே.க. செயலாளரோ, "அப்படியானால் நீங்கள் பஸிலிடமே செல்லுங்கள்'' என்று ஒரேயடியாகக் கூறிவிட்டாராம்.


யாரையும் காட்டி எங்களை மிரட்ட விட்டுவிடக்கூடாது என்று ஐ.தே.க. செயலாளர் கட்சித் தலைவரிடமும் கறாராகக் கூறிவிட்டதாகக் கேள்வி.

 

 

பல்டிகள் நடக்கும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை தேர்தலுக்கு முன்னர் தாமரைமொட்டு பக்கம் வளைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவும், பஸில் ராஜபக்ஷவும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனராம்.

தேர்தல் மேடைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைகளைக் கொண்டுவரவே இந்த முயற்சி நடக்கிறதாம். மறுபுறம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பான இரத்தினபுரி எம்.பி. ஒருவர் மைத்திரியிடம் சரணடையவுள்ளாராம்.

 

 

 

 

https://www.sudaroli.com

j8zeoi.jpg

  • தொடங்கியவர்

கே.பி. எங்கே?

தனக்கு நெருக்கமான முக்கியமான அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் கடந்த வாரம் பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அமைச்சர் கயந்த கருணாதிலக்க "சேர்... கே.பி. எங்கே இருக்கிறார்?'' என்று கேள்வி எழுப்பினாராம். என்னடா இது புதுக் கேள்வி என சுதாரித்த ரணில் "ஏன்?'' எனக் கேட்டாராம்.

"இல்லை... அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடுகளில் மட்டுமல்ல, பல்வேறு சந்தர்ப்பங்களில் கே.பி. எங்கே இருக்கிறார் என செய்தியாளர்கள் கேட்கின்றனர்... அதற்கு சரியான பதிலை சொல்லவேண்டும். எப்போதும் அதை இதைக் கூறி சமாளித்துக்கொண்டிருக்க முடியாது'' என்றாராம் அமைச்சர் கயந்த.

"ஓ அப்படியா... கே.பி. இருக்கவேண்டிய இடத்தில் இருப்பார்...

நீங்கள் பாதுகாப்பு அமைச்சை தொடர்புகொண்டு உரிய விவரங்களைப் பெறுங்கள்'' என்று சிரித்தபடி சொன்னாராம் பிரதமர்.

 

 

மனோவை வாழ்த்திய தலைவர்கள்

தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனுக்கு நேற்று பிறந்தநாள்.

(அவர் என்றும் 16 ஆக இருப்பதால் வயதை சொல்ல விரும்பவில்லை)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலையிலேயே வாழ்த்துக் கூறி அரசியல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் விசாரித்தாராம்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் மனோவை வாழ்த்தினாராம்...

தேர்தல் பணிகளில் பிசியாக இருந்த மனோவை தொலைபேசியில் தொடர்புகொள்ள மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் முயற்சித்தும் முடியாமல் இருந்ததாம்...

பின்னர் கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகளுக்குச் சென்ற மஹிந்த அங்கிருந்தே தொடர்புகொண்டு வாழ்த்தினாராம்...

"சரியோ பிழையோ மனோ எதையும் துணிச்சலாகச் சொல்லும் ஒருவர். யாருக்காகவும் தனது அரசியல் கொள்கையை மாற்றியதில்லை. ஒவ்வொரு வருடமும் அவரை நான் வாழ்த்துவது வழக்கம். இம்முறையும் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. சம்பந்தனுக்கு அடுத்தபடியாக மனோ மீது நான் மரியாதை வைத்துள்ளேன்.

அதுதான் வாழ்த்தினேன்'' என்று கதிர்காமத்தில் தனது அருகில் இருந்த அரசியல் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தாராம் மஹிந்த.

 

கட்சியும் மலேஷிய விமானமும்

கொழும்பு வந்துள்ள மலேஷிய பிரதமருக்கான உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை வெளிவிவகார அமைச்சும் கொழும்பிலுள்ள மலேஷியத் தூதரகமும் திக்குமுக்காடிப் போயுள்ளதாகத் தகவல்...

ஏனெனில், இது தேர்தல் காலமென்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்மார் கொழும்புக்கு வெளியே உள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் பல கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இன்று ஆரம்பிக்கும் வேட்புமனுத் தாக்கலை சரியாகச் செய்யவேண்டுமென கட்சிகளின் முக்கியஸ்தர்களும் விழிப்புடன் இருப்பதால் அவர்கள் முழு பிஸி... இந்த நேரத்தில் அவர்கள் எப்படி இவ்வாறான சந்திப்புகளுக்கு வரமுடியும்....?

மலேஷிய பிரதமரைச் சந்திக்க ஆசைதான்... முக்கியமான தலைவர் அவர்... ஆனால், இப்போ இருக்கும் நிலையில் கட்சி வேலைகளை விட்டுவிட்டு அவரைச் சந்தித்தால் கட்சியும் மலேஷிய விமானம்போல் காணாமல்போய்விடுமென்று பகிடியாக சொல்லிச் சிரித்தார் அரசியல் பிரமுகர் ஒருவர். வாஸ்தவம்தான்.

 

 

அமைச்சருக்கு எச்சரிக்கை

கிழக்கில் உருவாகியுள்ள புதிய அரசியல் கூட்டணியின் அலியானவர் தனது கட்சியின் அமைச்சரையே மட்டந்தட்டும் வகையில் செயற்படுவதாக கட்சிக்குள் புகார்கள் எழுந்துள்ளனவாம்.

தனக்கு நெருக்கமான வர்த்தகர்கள், தொழிலதிபர்களை வேட்பாளராக இறக்கியுள்ள இவர் உள்ளூராட்சி சபைகளில் தனது ஆட்கள் பதவியில் இருந்தால் எதிர்காலத்தில் அது தனது அரசியலுக்கு உதவுமெனக் கருதுகிறாராம்.

கட்சியின் தலைமைப்பதவியின் மீது அவர் கண்வைத்துள்ளதாக கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் சிலர் அமைச்சரிடம் எடுத்துக்கூறியுள்ளனராம்.

 

 

முதல்வரின் கோரிக்கை நிராகரிப்பு

 

கொழும்பு வந்த மலேசியப் பிரதமரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவர வடக்கு முதலமைச்சர் எடுத்த முயற்சி கைகூடவில்லையாம்.

மலேசியப் பிரதமரின் நிகழ்ச்சி ஒழுங்குகளை செய்த ஓர் அமைச்சுக்கு கிடைத்த மேலிடத்து உத்தரவின் காரணமாகவே வடக்கு முதல்வரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்.

மலேசியப் பிரதமரைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் வேலை காரணமாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கொழும்பு வரமுடியாத நிலையில் அந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை.

 

 

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்

நண்டு அமைச்சு

இலங்கை வந்திருந்த மலேஷிய பிரதமருக்கு விசேடமாக தயாரிக்கப்பட்ட நண்டு உணவு வழங்கப்பட்டதாம். நீர்கொழும்பு மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்த நண்டுகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உண்டு அந்த ருசியில் மயங்கிப் போனாராம் மலேஷிய பிரதமர்.

"மலேஷியாவிலும் இப்படி கடல் உணவு சாப்பாட்டுக்கான உணவகங்கள் இருக்கின்றன. ஆனால், இப்படியான பெரிய நண்டுகளை நான் கண்டதில்லை. நீங்கள் கோலாலம்பூரில் இந்த உணவகத்தின் கிளையொன்றை திறவுங்களேன்'' என்று இந்த விருந்தை ஒழுங்குசெய்திருந்த மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் முஸம்மிலிடம் கேட்டாராம் மலேஷிய பிரதமர்.

மலேஷிய பிரதமருக்கு நண்டு உணவை வழங்கிய அந்த உணவகம் பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்குச் சொந்தமானது. "நண்டு அமைச்சு' என்ற பெயரிலான இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேர்தலுக்கு முன் தாவத் தயார்

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசின் சிரேஷ்ட அமைச்சரொருவர் பொது எதிரணி பக்கம் தாவ இருக்கிறாராம்.

சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த இந்த அமைச்சர் இது தொடர்பான பேச்சுகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவை பெரும்பாலும் வெற்றியைத் தந்திருப்பதாகவும் அமைச்சரே தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளாராம். முக்கியமான அமைச்சுப் பொறுப்பை வகித்துவரும்
நீங்கள் இப்படி சொல்வது உங்கள் அரசியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா என நண்பரொருவர் கேட்டபோது அமைச்சர் இப்படி பதிலளித்தாராம்...

"யாழுவா.... முதலில் ஹோம் மினிஸ்ட்ரியை (மனைவி) சமாளிக்க வேண்டும். பிறகுதான் மற்ற மினிஸ்ட்ரி. அரசில் இருக்கவேண்டாம். மக்கள் செல்வாக்கு போய்விடும் என ஹோம் மினிஸ்டரி சொல்கிறது. அதைத்தான் முதல் கவனிக்கவேண்டியுள்ளது'' என்றாராம் அமைச்சர் சிரித்தபடி...

 

சீப்பை ஒழித்தல்...

கொழும்பு மாநகர சபைக்கான வேட்புமனுத்  தாக்கல் இறுதித் தினமன்று ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்புமனுக்களை நிராகரிக்கச்செய்ய சில காரணங்களை எடுத்துக் கூறியபடி அங்குமிங்கும் பிசியாக இருந்தனராம்  மாற்றுக்  கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர்.

அப்போது அமைச்சரும் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசனின் அருகில் இருந்த விக்கிரமபாகு கருணாரத்ன, என்னதான் நடக்கிறதென மனோவிடம் வினவினாராம் ...

""இல்லை பாகு தோழர்... அவர்கள் தலை சீவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் எனப்பார்க்கின்றனர்... அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்...''  என்று சத்தமாக சிரித்தபடி சொன்னாராம் மனோ...

 

இதுதான் அரசியல்...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருக்கு வலதுகரமாய்  திகழ்ந்த அந்த  ஜவுளிக்கடை வர்த்தகரான ரொபின்ஹூட் குமாரர் தனது மருமகனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்திருக்கிறாராம்.

கொழும்பிலுள்ள யானை கட்சியின் முக்கிய புள்ளியுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாகவே இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததாகத் தகவல். அப்படியானால் அவர் ஏன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இந்தச் சீட்டைப் பெற்றுக்கொடுக்கவில்லை என நீங்கள் கேட்பது புரிகிறது...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

 

பறக்குமா மயில்..?

மயில் மருதமுனையில் பறக்கத் தடுமாறிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. அமைச்சர் ரிஷாட் அணி, அமீர் அலி அணி என இரண்டு அணிகள் உருவாகியுள்ளதால் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.

கல்முனை மாநகர சபையின் போனஸ் ஆசனத்துக்கு மருதமுனை "பூமி'யைச் சேர்ந்த முஸ்லிம்  ஊடகவியலாளர் ஒருவரை அமைச்சர் ரிஷாத் தேர்ந்தெடுத்தாலும் அமீர் அலி அணி அதனை வெட்டி விளையாடியுள்ளதாம். இதனால் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்.

தனிப்பட்ட நண்பர்களுக்கு போட்டியிட வாய்ப்பும் கொடுத்து போனஸ் ஆசனத்தையும் வழங்கினால் மயிலில் ஏறிப்  பறப்பதைவிட சும்மா இருக்கலாம் எனக்கூறி  புலம்புகின்றனராம்  கட்சிக்காரர்கள்...

 

மனோவுக்கு எஸ்.ரீ.எவ். பாதுகாப்பு

 

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்.

தேர்தல் தொடர்பில் நடந்த பேச்சுகளின்போது முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் அமைச்சர் மனோவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்திருப்பதால் இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.

கொழும்பில் முக்கிய கட்சியொன்றில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் பலர் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடையவர்களென அரச உயர்மட்டத்துக்கு தகவல் கிடைத்தமையும் மனோவின் பாதுகாப்பு அதிகரிக்கக் காரணமாம்.

 

 

https://www.sudaroli.com/

  • தொடங்கியவர்

புதிய தமிழ்ப் பத்திரிகை

 

புதிய தமிழ்ப் பத்திரிகையொன்று தேசிய ரீதியில் வெளிவரவுள்ளதாக தகவல். முதலில் வாராந்த வெளியீடாக வரவுள்ள இந்தப் பத்திரிகை பின்னர் தினசரிப் பத்திரிகையாக வெளிவரவுள்ளதாம்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னணி பத்திரிகை நிறுவனமொன்றில் வாராந்த வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்தவருமான "ராஜா' ஒருவரே இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. முக்கியமான பத்திரிகையாளர்கள் பலரும் இதில் இணைந்துகொள்ளவுள்ளனராம் .

பிரபலமான தேசிய பத்திரிகை ஒன்றிலிருந்து முக்கிய ரிப்போர்ட்டர்மார்கள் சிலரும் இந்தப் புதிய பத்திரிகையுடன் கைகோக்கவுள்ளதாக உள்வீட்டுச் செய்திகள் சொல்கின்றன.

 

தேர்தலுக்கு முன் தாவத் தயார்

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசின் சிரேஷ்ட அமைச்சரொருவர் பொது எதிரணி பக்கம் தாவ இருக்கிறாராம்.

சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த இந்த அமைச்சர் இது தொடர்பான பேச்சுகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவை பெரும்பாலும் வெற்றியைத் தந்திருப்பதாகவும் அமைச்சரே தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளாராம். முக்கியமான அமைச்சுப் பொறுப்பை வகித்துவரும்
நீங்கள் இப்படி சொல்வது உங்கள் அரசியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா என நண்பரொருவர் கேட்டபோது அமைச்சர் இப்படி பதிலளித்தாராம்...

"யாழுவா.... முதலில் ஹோம் மினிஸ்ட்ரியை (மனைவி) சமாளிக்க வேண்டும். பிறகுதான் மற்ற மினிஸ்ட்ரி. அரசில் இருக்கவேண்டாம். மக்கள் செல்வாக்கு போய்விடும் என ஹோம் மினிஸ்டரி சொல்கிறது. அதைத்தான் முதல் கவனிக்கவேண்டியுள்ளது'' என்றாராம் அமைச்சர் சிரித்தபடி...

 

 

விசாரணைக்கு உத்தரவு

கொழும்பு போர்ட்சிட்டி துறைமுக நகரத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நட்டுவைத்த அடிக்கல்லை சிலர் அகற்றியிருப்பதாக வெளிவந்த செய்திகள் குறித்து கவனம் செலுத்துமாறு அரச தலைமை பாதுகாப்புத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

தேர்தல் காலமென்பதால் எதிர்க்கட்சியினருக்கு நன்மை பயக்கும் விதத்திலும் ஆளுங்கட்சியினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் மறைமுகமாக சதிவேலையொன்றை யாரும் செய்திருக்கிறார்களா என்பது பற்றி ஆராயப்படுகிறதாம்.

கொழும்பில் ஷங்கிரி லா ஹோட்டல் நிர்மாணிக்கப்படும்போது கோல்பேஸிலுள்ள அமரர் பண்டாரநாயக்கவின் சிலையை அகற்றப்போவதாகவும் கூறினார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.

இதிலெல்லாம் அரசியல் செய்யமாட்டோமென அரச தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறினாராம்.

இருட்டில் மொட்டு கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தாமரைக் கோபுரத்தில் இரவுநேர மின்விளக்குகள் எரிவதை தேர்தல் முடியும் வரை நிறுத்திவைக்குமாறு முக்கிய அரசியல்வாதியொருவர் உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

தாமரை மொட்டு இரவுநேரம் ஒளிர்வது பொது எதிரணியான மஹிந்த அணிக்கு மறைமுக பிரசாரமாக அமைந்துவிடும் என்பது அந்த அரசியல்வாதியின் வாதமாம்.
கொழும்பு மாவட்டத்தின் பச்சைக் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரே இப்படி பணிப்புரை விடுத்துள்ளார் எனத் தகவல்.

 

https://www.sudaroli.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிக்கிய அதிகாரி

 

பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் இருந்தபோது அவரை ஆஸ்பத்திரிக்கு மாற்ற உதவிய, ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரியொருவர் தொடர்பில் முழு விபவரங்களும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றுள்ளதாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பஸில் ராஜபக்ஷவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படி பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த அந்த அதிகாரி மிக விரைவில் பதவியிலிருந்து தூக்கப்படவுள்ளதாவும் ஒரு செய்தி சொல்லுகிறது.

 

குழப்புவது யார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது கூட்டு எதிர்க்கட்சி பற்றிய பேச்சும் வந்ததாம். ""நான் எவ்வளவோ இறங்கிவந்தேன். ஆனால், அவர்கள் நிறைவேற்றமுடியாத கோரிக்கைகளை முன்வைத்தனர்'' என்றாராம் ஜனாதிபதி.

""ஆமாம் சேர்... மஹிந்த எங்களுடன் இணையவே இருந்தார். ஆனால், நாமலும் பஸிலும்தான் எல்லாவற்றையும் குழப்புகின்றனர்... அவர்கள் இருக்கும்வரை எதுவும் உருப்படப்போவதில்லை'' என்று அங்கிருந்த அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் கூறினாராம்.

 

 

சிம்பிள் ப்ரெசிடென்ட்

காலஞ்சென்ற ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் இறுதிக்கிரியைகளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு பன்னீரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார் அல்லவா... அப்போது பன்னீர் தனது இறுதிக்காலத்தில் மருத்துவ தேவைகளுக்காக எதிர்நோக்கிய சிரமங்கள் குறித்து அறிந்து மிகவும் கவலைப்பட்ட ஜனாதிபதி, பன்னீரின் இறுதிக்கிரியைகளுக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்குமாறு தனது அலுவலகத்துக்குப் பணிப்புரை விடுத்தாராம்.

அத்துடன், இறுதிக்கிரியைகள் நடந்து முடிந்த பின்னர் தம்மைச் சந்திக்க வருமாறு குடும்பத்தினருக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பும் விடுத்தாராம் ஜனாதிபதி.

தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இறந்தவுடன் நாட்டின் தலைவரான ஜனாதிபதி நடந்துகொண்ட விதம் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்கள் மத்தியிலும் மிக ஆச்சரியமாகப் பேசப்படுகின்றது. அதிலும் ஜனாதிபதியின் எளிமையான அந்தக் குணம்தான் ப்ளஸ் பொயின்ட்.

 

அதிருப்தியில் தலைவர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (தாமரை மொட்டு) கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றதல்லவா...அதில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களுக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்படவில்லையாம். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டதால் இதர கட்சிகளின் தலைவர்கள் மனம் நொந்து புலம்பிக்கொண்டிருப்பதாகத் தகவல்.

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கோட்டாபயவின் நண்பர்கள் என்பதால் அவர்களின் உரை தேவையில்லையென தாமரை மொட்டை இயக்கும் ராஜபக்ஷ ஒருவர் உத்தரவிட்டிருந்தாராம்.

இதற்கிடையில் கட்சித் தலைவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வைக்கும் நிகழ்வின்போது மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் பெயர் சொல்லப்படும்போது யாருமே கரகோஷம் செய்யவில்லையாம். அது ஏன்? அதற்குப் பின்னால் இருந்தது யார்? என்பது மர்மமாம்.

 

கைகழுவும் எம்.பி.

 

பார்லிமென்ட் எம்.பி. ஒருவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. குறித்த எம்.பி. பொதுமக்களை சந்தித்துவிட்டு வாகனத்தில் ஏறியவுடன் டெட்டோல் இட்டு கையை துடைத்துக்கொள்வாராம். இதற்காக விசேடமான ஏற்பாடுகள் வாகனத்தில் உள்ளதாம்...

நீண்ட நாட்களாக இதனை அவதானித்த எம்.பியின் நண்பர் ஒருவர் இதனை மற்றவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டாராம். மக்களிடம் பரிதாபமாகப் பேசும் அரசியல் பிரமுகரான இந்த எம்.பி. மக்களை மனதுக்குள் எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் இப்போது பேசப்படுகிறது. இந்த எம்.பி. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெயரை மட்டும் கேட்டுவிடாதீர்கள்... "மய'ங்கிப் போவீர்கள்..

 

காத்துக் கிடந்த ஐ.ஜி.பி.

 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர புதுவருடப் பிறப்பன்று கண்டி தலதா மாளிகையின் விசேட பிரமுகர்கள் செல்வதற்கான வாயிலின் ஊடாக உள்ளே செல்ல எடுத்த முயற்சிகள் தொடர்பில் உயர்மட்ட பிக்குகள் சிலர் பிரதமரிடம் முறையிட்டுள்ளனராம்.

எவ்வித முன் அனுமதியின்றி முதலாம் திகதி தலதா மாளிகைக்கு வந்த பொலிஸ்மா அதிபர் அதிமுக்கிய பிரமுகர்கள் செல்லும் வாசலிலுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட கதவை நீண்டநேரம் தட்டிக்கொண்டு இருந்தார் என்றும், முன் அனுமதியில்லாமல் அந்தக் கதவை திறக்கமுடியாதென்றாலும் பொலிஸ்மா அதிபரின் கௌரவத்தைக் கருத்திற்கொண்டு அந்தக் கதவை திறந்துவிட தலதா மாளிகை நிர்வாகம் முடிவெடுத்தது என்றும் உயர்மட்ட பிக்கு ஒருவர் பிரதமரிடம் விசனத்துடன் சொன்னதாகக் கேள்வி.

எப்படியோ அரை மணிநேரம் காக்க வைத்துவிட்டே பொலிஸ்மா அதிபரை உள்ளே அனுப்பியிருக்கிறதாம் தலதா மாளிகை நிர்வாகம்.

 

https://www.sudaroli.com

 

2my0xhz.jpg

 

  • தொடங்கியவர்

தனி அரசு

 

 

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி தனித்துநின்று ஆட்சியமைக்கலாமென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனராம். இப்போதிருக்கும் நிலையில் தனித்துநின்று செயற்படுவதே நல்லதென அவர்கள் காரணங்களுடன் ஜனாதிபதியிடம் சொல்லியுள்ளனராம்.

தேர்தல் முடிந்த பின்னர் உள்ளூராட்சி சபைகளில் மஹிந்த அணியுடன் இணைந்து இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தி பின்னர் அரசியலில் ஒன்றாக செயற்படலாமென அந்த அமைச்சர்கள் கூறினராம். பொறுத்திருந்து பார்ப்போம் .

 

அறிக்கையொன்றின் பிரதி

 

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை கிடைத்தால் அதனை வாசித்துவிட்டு உரிய பதில்களை வழங்கலாமெனக் கருதிய ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் அறிக்கையொன்றின் பிரதியைத் தருமாறு கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரினராம்.

அப்போது, ""எனக்கே அந்த அறிக்கை கிடைக்கவில்லை. நானும் பிரதியொன்றை எடுக்க முயற்சித்துப் பார்க்கிறேன். ஆனால், முடியவில்லை'' என்றாராம் பிரதமர்.

பிரதமருக்கே அதன் பிரதிகளை எடுக்கமுடியாவிட்டால் சாதாரண பிரஜை ஒருவருக்கு அது எப்படி கிடைக்கும் எனக் கவலைப்பட்டனராம் அந்த ஐ.தே.க. எம்.பிக்கள்.

 

வெற்றிலை கொடுத்து வரவேற்க வேண்டாம்

 

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும்போது அவரை வெற்றிலை கொடுத்து வரவேற்கவேண்டாமென கூட்டு எதிர்க்கட்சி தனது தொண்டர்களுக்கு இரகசிய உத்தரவு விடுத்துள்ளதாம்.

அப்படி மஹிந்த வெற்றிலை வாங்கும் படம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மறைமுக விளம்பரமாக போய்விடும் என்பதால்தான் இந்த உத்தரவாம்.

இதனால் பலர் தாமரை மொட்டுகளைக் கொடுத்து மஹிந்தவை வரவேற்கத் தயாராகி வருகின்றனராம்....

 

கலகல கல்யாணம்

 

மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் முஸம்மிலின் மகனது திருமணம் நேற்றுமுன்தினம் ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜனாதிபதியும் பிரதமரும் முன்னைய காலங்களைபோல் சுவாரஸ்யமாக
பேசிக்கொள்ளவில்லை எனத் தகவல்.

ஜனாதிபதி கொழும்புக்கு வெளியில் இருப்பதாகவும், சீரற்ற காலநிலை காரணமாக அவரது வருகை தாமதமாக இருக்குமென அறிவிக்கப்பட்டாலும் ஜனாதிபதி எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் உள்ளே நுழைந்தாராம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் பிரதமர் ரணிலும் திருமணத்துக்குச் சென்றாலும் பேசிக்கொள்ளவில்லையாம்.

அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என திருமணத்துக்கு முக்கிய பிரமுகர்கள் பட்டாளமே வந்திருந்ததாம். முஸம்மில் கொழும்பு மாநகர மேயராக இருந்த காலத்தில்தான் ஷாங்கிரிலா ஹோட்டலைக் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனவே, அவர் மீது மதிப்புவைத்துள்ள ஹோட்டல் நிர்வாகம் இந்த வைபவம் சிறப்பாக நடைபெற பெரிதும் ஒத்துழைத்ததாம்.

https://www.sudaroli.com

  • தொடங்கியவர்

அலரி மாளிகையில் தைப்பொங்கல்

 

தைப்பொங்கல் விழா அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது பிரதமர் ரணில், அமைச்சர் மனோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் எம்.பி. ஆகியோர் ஒரு மேசையிலிருந்து உரையாடிக்கொண்டிருந்தனராம் .""ஏன் வடக்கு முதல்வரை இதற்கு அழைக்கவில்லையா?'' என்றாராம் மனோ.

"இல்லை அதுதான் சாமும் சுமாவும் வந்திருக்கின்றனரே'' என்றாராம் ரணில்.

"வடக்கு முதலமைச்சர் மனோவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்... ஆனால், எங்களுக்கு சப்போர்ட் பண்ணாமல் இருக்கிறார்'' என்று சிரித்தபடியே சொன்னாராம் சுமந்திரன் எம்.பி. இப்படி இவர்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போது வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நிகழ்வுக்கு வந்தாராம். ""பார்த்தீர்களா நாங்கள் வடக்கைப் புறக்கணிக்கவில்லை... இதோ ஆளுநரே வந்துவிட்டார்'' என்றாராம் ரணில் சத்தமாக சிரித்தபடி...

இந்த உரையாடல்கள் அனைத்தையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்தாராம் சம்பந்தன்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தராமை அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்ததாம்.

 

அரசுக்கு எதிராகச் சதி

 

பெண்களுக்கு மதுபான விற்பனை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கமர்த்த அனுமதி வழங்கிய அரசின் தீர்மானத்துக்குப் பின்னால் அரசுக்கு எதிரான சில சக்திகள் இருப்பதாக தேசிய புலனாய்வுச் சேவை அரச தலைமையை எச்சரித்துள்ளது எனக் கேள்வி.

இதனையடுத்தே நிதி அமைச்சின் அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு அரச தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். தேர்தல் நெருங்கும் காலத்தில் இப்படியான தீர்மானமொன்றை அறிவித்தால் அரசுக்கு அபகீர்த்தி வரும் என்பதால் சில தீய சக்திகளின் மறைமுக தூண்டுதலால் இப்படி தீர்மானம் அறிவிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளதாம்.

இப்படி தேசிய முக்கிய தீர்மானங்களை எதிர்காலத்தில் அறிவிக்கும்போது தன்னிடம் கேட்காமல் செய்யவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால பிரதமருக்கு அறிவித்ததும் இதன் பின்னணியில்தானாம்.

 

 

"மிஸ் ஆன புக்'

 

 

பிணைமுறி மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமொன்று வருமாயின் அதனை எதிர்கொள்ள தயாராகிய கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் அதற்கு ஆதாரங்களை திரட்ட ஆரம்பித்தனராம்.

இதற்காக பிணைமுறி மோசடி நடக்கவேயில்லை என சுஜீவ சேனசிங்க எம்.பி. எழுதிய புத்தகம் தேவைப்பட்டதாம். கூட்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொழும்பிலுள்ள அனைத்து புத்தகக் கடைகளையும் அலசிப் பார்த்தனராம். ஆனால், ஒரு கடையில் கூட அந்தப் புத்தகம் கிடைக்கவில்லையாம்.

புத்தகங்கள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டனவா? அல்லது அவை பதிப்பகத்தாரால் மீளப் பெறப்பட்டுவிட்டனவா? என்பது பற்றி தெரியவில்லையாம். பிணைமுறி விவகாரத்தில் மோசடி ஒன்றும் நடக்கவேயில்லை என்று அந்தப் புத்தகத்தில் சுஜீவ எம்.பி. குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.

https://www.sudaroli.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தூதுவரைக் காப்பாற்ற முயற்சி

ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க இலங்கைக்குத் திருப்பி அழைக்கப்படவுள்ள விவகாரம் குறித்து சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் சிங்கள அமைப்புகள் பல ஜனாதிபதியிடம் முறையிடத் தயாராகி வருகின்றனவாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகளில் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க இலங்கையை பல முக்கியமான சந்தர்ப்பங்களில் காப்பாற்றியிருப்பதால் அவரை பதவியிலிருந்து நீக்க எடுத்த முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு மேற்படி சிங்கள அமைப்புகள் ஜனாதிபதியிடம் கோரவுள்ளனவாம்.

எவ்வாறாயினும் ஜெனிவாவுக்குப் புதிய தூதுவர் ஒருவரை நியமிக்க தீர்மானமாகியுள்ளதால் சிங்கள அமைப்புகள் ஜனாதிபதியைச் சந்தித்தாலும் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லையென உள்வீட்டுத் தகவல்கள் சொல்கின்றன.

 

 

வியாபாரிகள் மகிழ்ச்சியில்

 

தேர்தல் காலம் இது என்பதால் ஊர்வழியே வெற்றிலை மற்றும் தாமரை மொட்டுக்களுக்கு மவுசு கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்...

கூட்டு எதிர்க்கட்சியினர் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு தாமரை மொட்டுக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல வெற்றிலையும் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் தாமரை மொட்டுக்கள் மற்றும் வெற்றிலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் அவற்றுக்குத் தட்டுப்பாடும் நிலவுகிறதாம்.

இதனால் பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்குத் தாமரை மொட்டுக்களை விற்கும் சிறு வர்த்தகர்கள் மற்றும் வெற்றிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகத் தகவல்.

https://www.sudaroli.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
’என்னடி முனியம்மா?’
 

கண்ணம்மா: அப்பாடா, இனிதான் அக்கா நிம்மதி. ஒரு மாதிரியா எல்லாம் முடிஞ்சிருச்சி.

முனியம்மா: என்னாப்புள்ள ஒரு மாசமா ஆளையே காணோம். இப்படி பேயடிச்ச மாதிரி, வந்திருக்க.

கண்ணம்மா: எலக்ஸன் மீட்டிங்குக்கு போயிருந்தேன் அக்கா. ஒங்கல தேடுனேன். ஆளையே காணோம்.

முனியம்மா: என்னமோ, வேட்பாளர் மாதிரி, சொல்லுற. நம்பள தொந்தரவு பண்ணுவாங்கனுதான், வீட்ட பூட்டிக்கிட்டு, வீட்டுக்குள்ளேயே நான் இருந்துட்டேன்.

image_180328b529.jpgகண்ணம்மா: இல்லக்கா, மீட்டிங்குக்கு போனால்தானே, யார், யார், என்னா, என்னா செய்து இருக்காங்க, என்னா? என்னா? செய்யப்போறாங்கனு தெரியும்.

இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு, புள்ளடி அடிச்சிட்டா, வெற்றிப்பெற்றவர்கள், இந்த பக்கமே இன்னும் 5 வருசத்துக்கு தல வைச்சு பார்க்கவே மாட்டாங்க.

முனியம்மா: நீ, கொஞ்சம் வெவரமான ஆள்தான் புள்ள. ஒகே, ஒகே. எது எப்படியோ, ஓட்டு போடுறது நம்முடைய உரிமை. அத கட்டாயம் செய்யனும். காலையிலேயே போட்டுடமுனுனா, பிரச்சினை இல்ல.

 
 
 
 
யார் அந்த போதைப்பொருள் வியாபாரி?
 

image_a00cfbf8fd.jpgஅரசாங்கத்தின் அமைச்சரொருவர், மலையகப் பகுதியொன்றில் வைத்து, காரசாரமான  உரையொன்றை ஆற்றினாராம். வாயாடி அமைச்சரான இவர், அவரது வாயாலேயே பல பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டவராவார்.

தேர்தலுக்கான நடந்த இந்தக் கூட்டத்துக்கு, கையின் தலைவரும் வந்திருந்தார். அவருக்கு முன்னால் பேசிய வாயாடி அமைச்சர், தோட்டப்புறங்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் அரசியல் தலைவரொருவரை, கடுமையாகத் தாக்கிப் பேசினாராம்.

இதன் பின்னர், பதவியை வைத்துக்கொண்டு போதைப்பொருள் விநியோகிப்பவர் யாரென்பது பற்றி, பலரும் விசாரிக்கத் தொடங்கினார்கள்.

போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அரசாங்கத்தில் இருந்துகொண்டு, போதைப்பொருள் விற்பவர் யாரென, மேடையில் அமர்ந்திருந்தவர்களும் முனுமுனுத்துக்கொண்டனராம்.

இதன்போது, தோட்டப்புறத்தைச் சேர்ந்த சிரேஷ்டர் ஒருவர், மேற்படி வாயாடி அமைச்சர் யாரைப்பற்றிச் சொன்னாரென்பதை, இரகசியமாக போட்டுடைத்துள்ளார். பார்க்கப்போனால், அந்த போதைப்பொருள் வியாபாரியும், அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஒரே குடையில் நிழலை அனுபவிப்பவரென்று தெரியவந்துள்ளது.

 
 
யார் அந்த இருவர்?
 

image_297b618bf5.jpgபிணைமுறி அறிக்கையும் பாரிய ஊழல் மோசடி அறிக்கையும், தியவன்னாவையில் தான் இப்போது இருக்கின்றன. இதுகள் பற்றி விவாதம் நடத்த வேண்டுமென்று, ஒன்றிணைந்த எதிரணியினர் தான் முதலில் சத்தம் போட்டனர். பின்னர், கதிரைக் கூட்டமும் கத்தியது.

இது இவ்வாறிருக்க, விவாதத்தை தேர்தலுக்குப் பின் நடத்துவதற்கான சூழ்ச்சியொன்று இடம்பெற்றதாக, நாட்டின் தலைவர், பிரசார மேடையொன்றில் அறிவித்தார்.

அவரது அந்த அறிவிப்புக்குப் பின்னர், பொரளையில் உள்ள வீடொன்றில் கூடிய இருவர், இதுபற்றிக் கலந்துரையாடினார்களாம். ஆனால், யார் இந்த இருவர் என்ற செய்தி மட்டும் வெளியாகவில்லை.

அவ்விருவர் பற்றித் தேடிப் பார்த்தபோது, ஒருவர் மொட்டின் மூளைக்காரரென்றும் அடுத்தவர், யானைக் கூட்டத்தில் சிறகு வெட்டப்பட்டவரென்றும் தெரியவந்துள்ளது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

திசை மாறிய பேச்சு

 

கல்கிஸையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டமொன்று நடைபெற்றதாம். அதில் கலந்து கொண்ட உதய கம்மன்பில எம்.பி, சிறுபான்மை இனங்களுக்கு எதிராக விளாசித் தள்ளிக் கொண்டிருந்தாராம்.

அப்போது கூட்டத்தில் இருந்த முஸ்லிம் அன்பர் ஒருவர், ""என்னய்யா நீங்கள்.... இன்னமும் திருந்தவில்லையா? அப்போது இப்படிப் பேசிப் பேசியே மஹிந்தவை பதவியில் இருந்து தூக்கினீர்கள்? இப்போது இப்படிப் பேசிப்பேசி தேர்தலில் அவரை மண்கவ்வச் செய்யப் போகிறீர்கள்...'' என்றாராம் ஆத்திரமாக.

அப்போது உடனே சுதாகரித்த மஹிந்த ராஜபக்ஷ கை சைகையைக் காட்டி உதய கம்மன்பிலவை பார்த்து ஏதோ கூற பேச்சு வேறு பக்கம் திசை திரும்பியதாம் .... எல்லா அரசியல் தலைவர்களும் கவிழ்வது பக்கத்தில் இருக்கும் நட்புகளால்தான்....

 

அலோசியசுக்கு பாதுகாப்பு

 
 

பிணைமுறி மோசடி விவகாரத்தால் சிறைவாசம் அனுபவித்துவரும் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது நண்பருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம். அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்கள் வீட்டிலிருந்தே தருவிக்கப்படுகிறதாம்.

பிணைமுறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்பான தகவல்கள் இவர்களிடம் இருப்பதால் அந்த முக்கியஸ்தர்களால் ஆபத்து ஏற்படலாம் என்ற காரணத்தால் இப்படி உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் சொல்கின்றன.

அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டுவரும் அரச தலைவர் ஒருவரே இதற்கான உத்தரவை விடுத்துள்ளார் எனக் கேள்வி.

 

https://www.sudaroli.com

  • 1 month later...
  • தொடங்கியவர்
முன்னாள் தலைவர் குறித்த இரகசிய அறிக்கை
 

image_54e091e188.jpgமத்திய வங்கியின் நிதி மோசடியில் ஈடுபட்டுவிட்டு, தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள முன்னாள் தலைவர் தொடர்பில், அரசாங்கத்தின் உயர் இல்லமொன்றின் போது, இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, புலனாய்வுப் பிரிவினர் தான் தயாரித்து உள்ளார்களென்றுத் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்னமும் நாடு திரும்பாமல் மறைந்திருக்கும் இடங்கள் பற்றியும் அங்கு அவர் அன்றாடம் செய்யும் நடவடிக்கைகள் குறித்து, அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி முன்னாள் தலைவர், இதுவரை நாட்களும் தங்கியிருந்த நாட்டிலிருந்து, மலேசியா ஊடாக, சிங்கப்பூரை அடைந்துள்ளாரென்றும் யானைக் கூட்டத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 
 
 
அழகிக்கு அதிர்ஷ்டம்
 

image_17f2fa9078.jpgஅரசியலில், அழகிகள் சம்பவந்தப்படுவதுண்டு. இந்தக் ககையிலும், அழகியொருவர் சம்பந்தப்படுவதோடு, அரசியல்வாதியொருவரும் தொடர்புபட்டுள்ளார்.

குறித்த அழகியின் தந்தை, மேல்மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றமொன்றை நிர்வகிக்கிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், 150 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகன அதிர்ஷ்டமொன்று, இந்த அழகிக்கு கிட்டியுள்ளது. இந்நாட்டு அரசியலில் பிரசித்திபெற்ற ஒருவரே, இந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தூக்கத்துக்குப் பெயர்போன இந்த அரசியல்வாதி, தனது சகாக்களின் உதவியுடன், இந்த வாகனத்தை, மேற்படி அழகிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளாராம்.

http://www.tamilmirror.lk

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
காக்கிச்சட்டை வைத்தியர்

image_a994395f67.jpg

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கலவரங்கள் இடம்பெற்ற பிரதேசத்தில், காக்கிச்சட்டை அணிந்த உயரதிகாரி ஒருவர் இருக்கிறார்.

ஏக்கநாயக்கர்கள் அதிகமாக உள்ள இந்தப் பிரதேசத்தில், இவரும் நல்ல தலைவராகவே இருக்கிறார்.

இந்த நாட்டில், காக்கிச்சட்டை அணிந்துள்ளவர்கள், வேறு சில வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

அந்த வகையில், மேலே நாம் சொன்ன காக்கிச் சட்டைக்காரர், ஒரு நாளில் அதிக நேரத்தை, ஆயுர்வேத மருத்துவத்தில் தான் ஈடுபடுகிறாராம்.

அரசாட்சி அல்லது மருந்தாட்சி என்ற கதைக்கிணங்க, ஆயுர்வேத மருத்துவத்தையும், இந்தக் காக்கிச் சட்டைக்காரர் தொழிலாகள் கொண்டுள்ளாராம்.

’கை’ கூட்டத்துக்கு வெட்டு
 

image_622e408cc9.jpg

ஒன்றிணைந்த எதிரணியினர் கைச்சாத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க முடியாதென்று கூறும் “கை” சின்னத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டிக் குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பட்டியலில், மலைநாட்டின் துமி, களுத்துறை மஹி, கண்டி சரத் ஆகியோரும் அடங்குகிறார்களாம்.

எது எவ்வாறாயினும், ஒன்றிணைந்த எதிரணியினர், தாம் செய்ய வேண்டியதைச் செய்துள்ளார்கள். யானைக் கூட்டத்தைச் சேர்ந்த சிலரும், இதற்கு உதவியுள்ளார்களாம். எவ்வாறாயினும், அந்த எண்ணிக்கை, நான்கு ஐந்தைக் கூடத் தாண்டவில்லையாம்.

http://www.tamilmirror.lk

கடிக்க...

 

*சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரும் பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதூஸ்

                                   - –செய்தி

   பாதாள உலகமாயிருந்தாலும் தலைவர் தானே?

*பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது அரச சேவையாளர்களின் கடமையாகும்

                                 - –செய்தி

            அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

*இனவாதிகள் தண்டிக்கப்பட வில்லையாயின் பிரதமருக்கு சிறுபான்மை ஆதரவு கிடையாது

                      - –தௌபீக் (பா.உ)

            தண்டித்தால் பெரும்பான்மை ஆதரவு கிடையாதே!

*நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல

                        - –பந்துல

   எந்தத் தீர்வாயிருந்தாலும் நாட்டைப் பிரிப்பதாகத் தானே

               உங்களுக்குத் தெரிகிறது?

*வன்முறைகள் மீள் நிகழாமைக்கு மதத் தலைவர்களுடன் பேசுங்கள்

              - –ஐரோப்பிய ஒன்றியம்

       காரணமே அங்குதான் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறியுமா?

*இரத்தினபுரி மாநகர சபையில் மொட்டை மலரச் செய்த ஐ.தே.க.

              - –செய்தி

         எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மொட்டைகள் தான்.

*இந்தியா, ஜப்பானை சீனாவுக்கு சமாந்தரமாக நாடுகிறது இலங்கை - –பிரதமர்

     அதுதானே சீனாவுக்கு பிடிக்கல.

*ஐ.தே.க. எமக்கு துரோகமிழைத்தாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்போம் - –மனோ

                உதைத்த காலையே முத்தமிடும் நன்றி!

*பாதுகாப்பு வாகனங்கள் கடலில் மூழ்கடிப்பு -

                                          –செய்தி

           பழைய இரும்பு வியாபாரிகள் வயிற்றில அடிச்சிக்கிறாங்க.

*இரண்டாம் தலைமுறை தமிழ்த் தலைவர்கள் நாட்டிற்குத் தேவை - –நாமல்

     மூத்த தலை முறைக்குப் புரியலையே.

* ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கும் முயற்சிகளைத் தோற்கடிப்போம் - –ஸ்ரீல.சு.க.

             நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் நெருக்கடி இல்லை?

*பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

    –வணிக கைத்தொழில் அமைச்சு

             அதிகரிக்காது ஆனால், அதிகரிக்கும்

*பரீட்சை எழுத முன் வினாத்தாளை வாசிப்பதற்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும் -

       –செய்தி

   அப்பவாவது வாசிப்பாங்களா?

* பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் வெறுமனே தீர்மானங்கள் எடுக்கின்ற ஒன்றுகூடலாக இருக்கக் கூடாது

                                   - செய்தி

                அடிதடியுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்?

*நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்தவின் வியூகம் புரியவில்லை - –தலைப்பு

        போகப் போகத் தெரியும் இந்த மொட்டின் வாசம் புரியும்.

*நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்த பின் சிறந்த ஆட்சி - –-ராஜித

   இதுவரை இருக்கவில்லை.

*இ.தொ.கா. பெண் உறுப்பினர்கள் எவருக்கும் விலை போக மாட்டார்கள் -

                                        – செய்தி

    ஆண் உறுப்பினர்கள் போவார்கள்

http://epaper.virakesari.lk

  • 1 month later...
  • தொடங்கியவர்
தீக்கிரையான சாஸ்திர நிலையம்
 

image_ccbd45bfd9.jpg

 

எதிர்காலக் கணிப்புகளைக் கூறி, நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட பெண்ணொருவரின் சாஸ்திரம் கூறும் நிலையம், சிலரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தைப் போன்று, எதிரணியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அடிக்கடி சென்றுவரும் இந்த நிலையத்தின் ஊடாக, காலை முதல் மாலை வரை, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு சாஸ்திரம் கூறப்பட்டு வந்தது. இங்கு கூறப்படும் அரசியல் எதிர்காலக் கணிப்புகள், மிகவும் பிரசித்தமானவை.

இந்நிலையில், எதிர்காலத்தில் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும், அந்தப் பெண் அண்மையில் சில விடயங்களைக் கூறியிருந்தாராம். எதிர்கால அரசாங்கத் தலைவர் தொடர்பிலும் அவர் கூறியிருந்ததாகக் கூறப்பட்டது.

அப்பெண்ணின் இவ்வாறான எதிர்காலக் கணிப்புகள் காரணமாக, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தனவாம். இந்நிலையில் தான், அப்பெண்ணின் நிலையம், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

 

 

காரசாரத்துக்குக் காரணம்
 

image_7d2d5791c1.jpg

 

யானைச் சினத்திலிருந்து, தியவன்னாவுக்கு முதன்முறையாக நுழைந்த இளவயது எம்.பி ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில், அவர் மிகவும் காரசாரமாகக் கதைக்கத் தொடங்கினார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, புதிய கேம் ஒன்றுக்கு அவர் சம்பந்தப்பட்டு இருந்தாரென, சிலர் கூறி வருகின்ற நிலையில், கட்சியின் பதவியொன்றை எதிர்பார்த்து தான், அவர் இவ்வாறு காரசாரமாகப் பேசினாரெனக் கூறப்பட்டது.

 

 

தட்டிவிடப்பட்ட பதவிகள்
 

image_df75bcc3af.jpg

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, கையைச் சேர்ந்த எம்.பிகளுக்கு, இராஜாங்கமோ அல்லது பிரதியமைச்சோ எனும் எந்தவொரு பதவியுயர்வும் கிடைக்கவில்லை.

சிரேஷ்டத்துவம் கொண்ட சிலருக்கேனும், அமைச்சுப் பதவிகள் கிட்டுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வாறு கிடைக்கவில்லை.

வெற்றிடங்கள் இருக்கும் நிலையிலும், கைச் சின்னத்தைச் சேர்ந்த எவருக்கும் பதவியுயர்வு கிடைக்காமை தொடர்பில், சிலர் தேடிப்பார்க்கத் தொடங்கினார்களாம். நாட்டின் மஹா மந்திருக்கும் டெலஸ்கோப் பொறுத்தித் தேடிப்பார்க்கத் தொடங்கினார்களாம். அப்போது தான், உண்மைக் கதை, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்ததாம்.

கையைச் சேர்ந்த சிலருக்கு, அமைச்சுப் பொறுப்பு கொடுத்தால் நல்லதென, யானைச் சின்னத்தின் தலைமைகளிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாம். அத்துடன், சிலரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாம். இதனால், யானையிலும் கையிலும் தலையைப் புகுத்திக்கொண்டிருப்போருக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டுமென எண்ணிய கையின் தலைவர் எடுத்த முடிவால் தான், கையைச் சேர்ந்த சிலருக்குப் பதவியுயர்வு கிட்டவில்லையாம்.

  •  

 

வீட்டிலேயே கடமை பொறுப்பேற்றத் தலைவர்
 

image_68c02fa645.jpg

 

அமைச்சரவை அமைச்சுப் பொறுப்பொன்று கிடைத்த போதிலும், அதில் சந்தோஷப்படாத அமைச்சரொருவர் இருக்கின்றாராம். மணலில் சேறு கலந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அவ்வமைச்சருக்கு, முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது, காட்டுப் பொறுப்பு கையளிக்கப்பட்ட நிலையில், அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, தொழிலாளர் விவகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர், அப்செட்டாகி உள்ளாராம்.

காடு, வனவிலங்குகள் கிடைத்ததும், புதிதாக நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென தனது அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளதால், அந்த அமைச்சர் குழம்பிப்போய் உள்ளாராம். அத்துடன், கட்சியின் சிரேஷ்டரான தனது அமைச்சை, பொனிக்கு வழங்கியமை தொடர்பில், அரசியல் தலைமைகளிடம் கூறி ஆதங்கப்பட்டும் வருகிறாராம்.

அப்போது, “கட்சி என்பது மரம். அதன் உச்சி தான் நீங்கள். புதியவர்கள் அனைவரும், அந்த மரத்தின் இலைகள். அந்த இலைகள், கொஞ்ச காலத்துக்குத் தான் இருக்கும். அதனால், உங்களுக்கு வழங்கிய தொழிலாளர் விவகாரத்தை, சந்தோஷமாகவும் பிரயோசனமாகவும் செய்துகொண்டு இருங்கள்” என்று, உயரிடங்களிலிருந்து அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாம்.

எவ்வாறாயிகும், இந்தப் பதிலால் திருப்திகொள்ளாத அமைச்ர், தனக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் செல்லவில்லையாம். கடமை பொறுப்பேற்கும் கடிதத்தைத் தயாரித்து, வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கூறியுள்ள அமைச்சர், வெலிமடையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

அமைச்சரின் கடிதத்தைத் தயாரித்த அதிகாரிகள், அதை ஃபைல் ஒன்றில் இட்டு, கொழும்பிலிருந்து வெலிமடைக்குச் செல்லும் பஸ் ஒன்றின் ஊடாக அனுப்பி வைத்தார்களாம். பஸ்ஸில் வந்த கடமை பொறுப்பேற்கும் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், வீட்டில் இருந்துகொண்டே, அமைச்சின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாராம்.

 

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்
பொது வேட்பாளராகவுள்ள நட்சத்திரம்
 

image_1efd6d5a16.jpgஇன்னும் ஒன்றரை வருடத்தில் நடைபெறவுள்ள நாட்டின் பெரிய கதிரைக்கான போட்டியில், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான வேலைகளில், சிலர் களமிறங்கி இருக்கிறார்கள். இதற்கு, தூதுவர் ஒருவரும் சம்பந்தப்படுத்தப்பட்டு உள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

யானைக் கூட்டத்தின் பின் வரிசை இளம் வயதினர், இந்த வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம். அதேபோன்று, தற்போதுன்ன இரண்டாம் தலைவரை வேட்பாளராக்கும் முயற்சியில் தான், கூட்டத்தின் சிரேஷ்டர்களும் ஈடுபட்டு வருகிறார்களாம்.

இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் அன்னத்தைக் கூட்டி, பிரசித்தப் பிரபலமொன்றைப் போட்டியில் ஈடுபடுத்த வேண்டுமென, பொது வேட்பாளர் தொடர்பில் சிந்திக்கும் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, 34 இலட்சம் பேஸ்புக் நண்பர்களைக் கொண்டுள்ள ஒருவர், இவர்களது கண்களில் பட்டுள்ளாராம். ஆனால் அவர், அரசியல்வாதி இல்லையாம். அரசியல் தொடர்பு கூட, அவருக்கு இல்லையாம். ஆனால், நாட்டில் மிகவும் பிரசித்தமான குமாரர் என்றுக் கூறப்படுகிறது.

இவர், இந்நாட்டில் பிரசித்தமான விளையாட்டுத் துறையிலிருந்து வந்தவராவார். இலங்கையில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் இவருக்கு, நல்ல வரவேற்பு உள்ளது.

மொட்டிலிருந்து வரப்போகும் கோட்டாவுக்குப் போட்டியாக, இவரைப் போன்றவர் தான் வேண்டுமென, பலர் கூறி வருகின்றார்களாம். ஆனால் அந்த நட்சத்திரம், இதுவரை தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை என்று டிதான் கூறப்படுகிறது.

இவர், தன்னோடு விளையாடிய மற்றொரு நண்பருடன் இணைந்து, ஒருவகை மினிஸ்ட்ரி (அமைச்சு) ஒன்றை நடத்தி, வெற்றிகரமான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றாராம். இவ்வளவு காலமும், அரசியலுக்கு அப்பால், விளையாட்டில் மாத்திரம் அக்கறையுடன் இருந்த இவரை, தேர்தல் போட்டியில் களமிறக்கத்தான் இப்போது முயற்சிக்கப்பட்டு வருகிறதாம். இந்த முயற்சி பயனளித்தால், வடக்கு, கிழக்கிலிருந்து மாத்திரமல்ல, அனைத்து இடங்களிலிருந்தும் ஆதரவைத் திரட்டிக்கொள்ளலாமென்று கூறப்படுகிறதாம்.

இதற்காக, தூதுவராலயங்கள் பல, வியர்வை சிந்தி வேலை செய்துகொண்டு இருக்கின்றனவாம்

 

 

 

நாட்டு வைத்தியரைப் பாதுகாத்தல்
 

image_17e70fcd87.jpgஇந்நாட்களில், காக்கிச்சட்டைத் திணைக்களத்தின் செயற்பாடுகள், முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவாம்.

ஒருவரது சேவைக்காலம் முடியும் போது, அந்தச் சேவைக்காலத்தை நீடித்துக்கொள்வதாயின், சேவைக்காலம் முடியும் நாளிலிருந்து, நீடிப்பு வழங்கப்படுவதே, சாதாரண நடைமுறையாகும்.

ஆனால் இந்தத் திணைக்களத்தில், மிகவும் வித்தியாசமான முறையில், சேவைக்கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாம். சேவைக்காலத்தை நீடிக்க வேண்டுமாயின், ஒரு மாதமேனும், ஓய்வு பெற்றுவிட்டு வருமாறு, முன்னாள் ரவி ஐயாவுக்கு, அரசாங்கம் பணித்திருந்ததாம்.

இந்தப் புதினமான ஓய்வு தொடர்பில் தேடிப்பார்த்த போது, காக்கிச்சட்டைத் திணைக்களத்திலுள்ள பிரசித்த நாட்டு வைத்தியருக்கு பதவியுயர்வு வழங்குவதற்காகத் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

மத்திய மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ் உயரதிகாரி ஒருவர், சிறந்த நாட்டு வைத்தியராகவும் விலங்குகிறார். இவர், இன்னும் ஒரு மாதத்தில், ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளாராம். அதற்கு முன்னர், அவருக்குப் பதவியுயர்வு வழங்குமாறு, மத்தியிலுள்ள பெரிய விகாரையொன்றிலிருந்து, அரசாங்கத்திடம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாத பட்சத்தில், அதனால், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு, உரிய நேரத்தில் ஓய்வைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, பொலிஸ் நாட்டு வைத்தியருக்கு, புரமோஷன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

அதன் பின்னர், நாட்டு வைத்தியர் வீட்டுக்குப் போய்விடுவாராம். அதற்குப் பிறகு தான், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர், மீண்டும் சேவை நீடிப்போடு, பதவிக்கு வருவாராம். இது தான் இந்தப் பிரச்சினை. விளங்கியதோ...?

http://www.tamilmirror.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.