Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்கி வெறியாட்டம்: 19 பேர் படுகொலை, 45 பேர் காயம்

Featured Replies

ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் குறிப்பிட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 20 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கைதான நபர் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் அந்த ஊனமுற்றவருக்கான மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் எனவும், வெளியே இருந்து வந்து இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலின் இடையே அந்த நபர் தாம் சாதித்துவிட்டதாக குரல் எழுப்பியதாக நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த குறிப்பிட்ட பகுதியானது அமெரிக்க ராணுவ தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/112134

 

இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஜப்பானில் இடம்பெற்ற பாரிய கொலை சம்பவம்

 

ஜப்பான் நாட்டில் கனகவா மாகாணத்தில் உள்ள சகமிஹரா நகரில் முதியோர் இல்லமொன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர்.

369702CF00000578-3707721-image-a-77_1469

குறித்த இல்லம் மாற்றுத் திறனாளிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாலை 2.30 மணியளவில் குறித்து இல்லத்தின் நிர்வாகி, 20 வயதுமிக்க இளைஞரே தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார்.

இதனையடுத்து அதிகாலை 3.00 மணியளவில் குறித்த இளைஞன் தானாகவே கனகவா மாகாண பொலிஸாரிடம் சரணடைந்தார்.

3696F62F00000578-3707721-image-a-75_1469

குறிந்த இளைஞன் அம்முதியோர் இல்லத்தின் முன்னாள் பணியாளர் என்று கூறப்படுகிறது.

 

இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஜப்பானில் இடம்பெற்ற பாரிய கொலை சம்பவம் இதுயென்பது குறிப்பிடத்தக்கது.

3696E66B00000578-3707721-image-a-72_1469

36969D4200000578-3707721-Television_foot

3696610A00000578-3707721-The_attacker_we

369668E600000578-3707721-Police_were_cal

36965A5A00000578-3707721-National_state_

3696793400000578-3707721-image-a-65_1469

36967AA500000578-3707721-Japanese_newspa

36968C7100000578-3707721-Details_are_sti

36964D1600000578-3707721-Armed_police_en

36964F0100000578-3707721-The_centre_offe

http://www.virakesari.lk/article/9414

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.