Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லையில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பெரும்பான்மையின அபகரிப்பால் போரால் நொந்த மக்கள் பாதிப்பு!

Featured Replies

முல்லையில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பெரும்பான்மையின அபகரிப்பால் போரால் நொந்த மக்கள் பாதிப்பு!

 

முல்லையில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பெரும்பான்மையின அபகரிப்பால் போரால் நொந்த மக்கள் பாதிப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பெரும்பான்மையின அபகரிப்பால் இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முள்ளிவாயக்கால் போர் எனப்படும் ஈழத்தின் இறுதிப்போர் நடைபெற்ற இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் ஆதிக்கப் போரினால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

முல்லைத்தீவு இலங்கையிலேயே பின்தங்கிய மாவட்டம் என்றும் அங்கு வசதி வாய்ப்புக்கள் எதுவுமில்லை என்றும், பெண்களின் நிலை, தொழில், கல்வி எனப் பல்வேறு விடயங்களும் மிக பின்தங்கிய நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தன் கணக்கெடுப்பு ஒன்றில் கூறியது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் சுனாமியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைகள் அரங்கேறி மக்கள் பல்வேறு பாதிப்புக்களை சுமந்த இந்த மண்ணில் இன்று மக்கள் இராணுவ மற்றும் அபகரிப்பு அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட, பின்தங்கிய பகுதியில் உள்ள மக்களை மேல் எழச் செய்வதில் இந்தப் பிரச்சினைகள் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்தறியும் அமர்வொன்று, சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம உள்ளிட்ட 11 பேர் அடங்கிய குழுவினர் தலைமையில்   முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

இராணுவத்தின் கையில் வட்டுவாகல் பாலம்

வட்டுவாகல் பாலத்தின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு மக்கள் இராணுவ முகாம் மற்றும் சிங்களக் குடியேற்றங்களால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இறுதி யுத்தத்தின்போது பெரும் துயரை சந்தித்து மக்கள் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்த வட்டுவாகல் கடலின் மத்தியில் உள்ள வட்டுவாகல் பாலம் போரால் சிதைவடைந்தது. அதன் இரு மருங்களிலும் அந்த இரு மருங்கின் இரு புறத்திலும் இராணுவ முகாங்களே உள்ளன. இதனால் மீனவர்களின் தொழில், போக்குவரத்து என்பன பாதிக்கப்படுகிறது.

இதேவேளை வட்டுவாகல் பாலத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றினாலேயே முகத்துவாரத்திற்குச் செல்ல முடியும் என்றும் ஆனால் படையினர் அங்கு தொடர்ந்து நிலைகொண்டுள்ளதாகவும் குறித்த இராணுவ முகாமை  அகற்றுமாறும் மீனவர்கள் கோரியுள்ளனர். முள்ளிவாய்க்கால் போர் எனப்படும் இறுதி யுத்தம் நடைபெற்ற அப் பகுதியில் தமது அனைத்து சொத்துக்கள் அனைத்தையும் இழந்த நிலையில் இந்த மீனவர்கள் வாழ்கின்றனர்., ஆனால் இந்த மீனவர்களின்  வாழ்வாதாரத்திற்கு பெரும்பான்மையின மீனவர்களும் இராணுவத்தினரும் ஊறு விளைவிக்கின்றனர்.

வட்டுவாகல் ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இறால் பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். இவர்கள் சுதந்திரமாக தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் வட்டுவாகல் பாலத்தின் இரு மருங்கிலும் இராணுவ முகாம் உள்ளமையால் காட்டு வழியினூடாக முகத்துவாரத்திற்கு சென்று மீன்பிடியில் ஈடுபடவேண்டிய அசெகரியத்திற்கு இவர்கள் ஆளாகியுள்ளனர்.

பாரிய கோத்தபாய கடற்படை முகாம்

இதேவேளை வட்டு வாகல் பாலத்தை அண்டியிருக்கும் கோத்தபாய கடற்படை முகாம் அப்பகுதி மக்களின் பல நூறு ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அப் பகுதியை விடுவித்து மக்களை மீள்குடியேற்றுமாறு மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் கூறியபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த காணிகளை கடற்படையினர் தமது வசம் வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அகதிகளாக அலைகின்றனர். இந்த நிலையில்
குறித்த பகுதியில் கடற்படை விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பெறுமதிமிக்க பனைமரங்களை அழித்திருந்தனர். சாதாரணமாக முள்வேலி அமைக்கப்பட்டிருந்த பகுதியில் தற்போது பலம்மிக்க பாதுகாப்பு வேலியை அமைக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

பயிர்ச்செய்கை நடவடிக்கையை விஸ்தரித்தல் மற்றும் கடற்படையினரின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் கடற்படையினரால் தற்போது அபகரிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு கடற்படையால் அப் பகுதி அழகுபடுத்தப்பட்டு பயன்படுத்தபடவுள்ளது. இதற்காகவே அண்மையில் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வட்டுவாகல், செல்வபுரம், கோவில்குடியிருப்பு, மண்ணாங்குளம், கள்ளப்பாடு, தீர்த்தக்கரை ஆகிய இடங்களில் உள்ள ஆறுகளில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம்  பெரும்பான்மையின மீனவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக  மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப் பகுதியை சேர்ந்த தமிழ் மீனவர்களின் வள்ளங்கள், வலைகள் மேல் பெரும்பான்மை இனத்தவர்கள் தமது வலைகளைப் போடுவதனால் தமிழ் மீனவர்களின் வலைகள் அறுந்து நாசமாகியுள்ளன. இதனால் போரால் பாதிக்கப்பட்ட வட்டுவாகல் பகுதி மீனவர்கள் மேலும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியெ நிலமை ஏற்பட்டுள்ளது.

35 வருடங்களாக ஆக்கிரமிப்பில்

இது தவிர முல்லைத்தீவின் கடல் வளம் மிக்க பகுதிகள் பலவற்றை பெரும்பான்மையின மக்கள் அபகரிப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கரநாட்டுக்கேணி, நாயாறு, போன்ற பகுதிகளில்  இராணுவத்தினரின் உதவியுடன் மீன் பிடியில் ஈடுபடுவதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொக்கிளாய் போன்ற பகுதிகளில் 1980களில் இராணுவத்தினரின் உதவியுடன் அப் பகுதியின் பூர்வீக மக்களான தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அப் பகுதியில் பெரும்பான்மையினர் மீன்பிடியில் ஈடுபடத் தொடங்கினர். போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் ஆகியும் அப் பகுதி பூர்வீக மக்களிடம் அவர்களின் பூர்வீக தொழிலிடங்கள் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டமும் முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் வட்டுவாகலும் உலகில் இன்று அதிகம் பேசப்படும் இடங்கள். தமிழ் மக்கள் இனப்படுகொலையை சந்தித்த, இறுதிப்போரை சுமந்த, வடுக்கள் நிறைந்த பகுதி. இந்தப் பகுதிகளிலேயே ஆக்கிரமிப்பை விஸ்தரித்து போரால் நொந்து போன மக்களை மீள் வாழ்வில் மேம்படுவதை தடுப்பது நல்லிணக்கமா? இன ஒடுக்குமுறையா?

இராணுவத்தினரின் உதவியுடன் நிறைவேற்றப்படும் இந்தச் செயல்கள் குறித்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தவண்ணமுள்ளனர். அத்துடன் இப் பகுதிக்கு வருகை தரும் தென்னிலங்கை அரசியல் தலைவர்களுக்கும் இது தொடர்பில் எடுத்துரைந்திருந்தனர். ஆனால் இந்தப் பகுதி மக்கள் தீர்வின்றி, தொடர்ந்தும் நெருக்கடியை சந்தித்த வண்ணமேயுள்ளனர். எது எதுவரை தொடரும்? எத்தகைய விளைவுகளைத் தரும் என சம்பந்தப்பட்டவர்கள் சந்திப்பார்களா?

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134436/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.