Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளக்குடியேற்றப்பட்ட சம்பூர் மக்களின் அவலநிலையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய அடிப்படைத்தேவைகளும்

Featured Replies

மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­ட ­சம்பூர் மக்­க­ளின் ­அ­வ­ல­நி­லையும்
ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வேண்­டி­ய­ அ­டிப்­ப­டை­த்தே­வை­களும்

மீளக்­கு­டி­ய­ம­ர்த்­தப்­பட்ட சம்பூர் மக்­களின் தேவைகளை உடன் நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன­விற்கு கடி­த­மொன்றை இங்­குள்ள கிரா­மிய அமைப்­புக்கள் பல ஒப்­ப­மிட்டு அனுப்­பி­வைத்­துள்­ளன. மழை­காலம் தொடர்­வ­தனால் பல அடிப்­ப­டைத்­தே­வைகள் இன்னும் நிறை­வேற்­றப்­ப­டா­மை­யினால் தமது மக்கள் பெரும்­சி­ர­மப்­ப­டு­வ­தாக தமது கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இதன் முழு விபரம் வரு­மாறு, திரு­கோ­ண­மலை­ மா­வட்­டத்தில் உள்­ள­ சம்பூர் பிர­தே­சத்தில் பூர்­வீ­க­மா­க­ வாழ்ந்து வந்­த ­மக்கள் கடந்த 2006.04.26 அன்­று­ ஏற்­பட்­ட­ மி­க­மோ­ச­மா­ன­ யுத்­த­நி­லை­மை­களின் கார­ண­மாக தங்­க­ள­து ­சொந்த வதி­வி­ட­மான சம்பூர் பிர­தே­சத்­தி­னை­ விட்­டு ­வெளி­யே­றி­யி­ருந்­தமை தாங்கள் அறிந்­த ­வி­ட­ய­மாகும்.

இவ்­வாறு இடம்­பெ­யர்ந்த எம­து ­மக்கள் உயிர்­களை மாத்­திரம் காப்­பாற்­றி­ய­போதிலும் தாம் ­கஷ்டப்­பட்டு உழைத்­து­ அ­மைத்­த ­வீடுகள், சொத்­துக்கள், கால்­ந­டைகள், உட­மை­கள்­ எ­ன­ அ­னைத்­தையும் இழந்­து­ நிர்க்கதி­ நிலை­யி­னை­ அ­டைந்­துள்­ளனர்.

இவ்­வாறு 2006ஆம் ஆண்டு இடம்­பெயர்ந்­த மக்கள் தங்­களின் நல்­லாட்­சி­ அ­ரசின் (2015.01.08)பின்னர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இரண்டு தட­வை­களில் (19.08.2015, 25.03.2016) எது­வி­த­ அ­டிப்­ப­டை­ வ­ச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடு­படா­த­ நி­லையில் சொந்த காணி­களில் மீள்­குடி­யே­றினர்.

இவ்­வா­று­ மு­தற்­கட்­ட­மாக சம்பூர் கிரா­மத்­திற்­கு­ மீ­ளக்­கு­டி­யே­றிய 365 குடும்­பங்­களில் அநேக­மா­ன ­கு­டும்­பங்­க­ளுக்­கு­ அ­ர­ச­ மானியக் கொடுப்­ப­னவுத் தொகையும் அரை ­நி­ரந்­த­ர ­வீடு­களும் முடிந்­த­ள­வு ­கு­டிநீர் மற்றும் சுகா­தாரம் போன்­ற­ அ­டிப்­ப­டை ­வ­ச­தி­க­ளும்­ அ­ர­சாலும் அர­ச­சார்­பற்­ற ­நி­று­வ­னங்­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தை­யிட்­டு­ ம­கிழ்ச்­சி­ அடைகின்றோம்.

இந்­த­ ந­ட­வ­டிக்­கையில் தாங்கள் எடுத்த­ அ­தி­க­க­ரி­ச­னைக்கும் முயற்­சிக்கும் எம­து ­நன்­றி­க­ளையும் பாராட்­டு­க­ளையும் தெரிவிக்­கின்றோம்.

அதே­வேளை இறு­தி­யாக 2ஆம் கட்­ட­மாக 25.03.2016ஆம் திக­தியன்­று­ தங்­க­ள­து­ சொந்­த­ நி­லங்­க­ளுக்­கு­ மீ­ளக்­கு­டி­யே­றிய மக்கள் மிகவும் சிர­மப்­ப­டு­கின்­றனர். 3 மாதங்கள் கடந்­த­நிலையில் உள்ள 575இற்­கு­ மேற்­பட்ட­ கு­டும்­பங்­க­ளுக்­கு­மா­ன ­அ­டிப்­ப­டை­ வ­ச­திகள் முக்­கி­ய­மா­க­ உ­ணவு, உறையுள், குடிநீர் மற்றும் சுகா­தாரம் போன்­றவை இன்­று­வரை 90 வீத­மான ­மக்­க­ளுக்­கு ­வ­ழங்­கப்­ப­டா­த­தை­யிட்­டு­ ம­ன­வே­த­னை­ அ­டை­கின்றோம்.

எம­து ­சம்பூர் பிர­தே­ச­ மக்­கள் ­க­டந்த 10 வரு­ட­ கா­ல­மா­க­ அ­க­தி­மு­காம்­க­ளில் ­ந­ர­க­வாழ்க்கை­ வாழ்ந்­த­து­போல,சொந்­த­ சம்பூர் பிர­தே­சத்­திலும் அக­தி­க­ளா­க­வே­ வா­ழ­வேண்­டி­ய துர்ப்­பாக்­கி­ய­ நி­லையில் வாழ்­கின்­றனர்.

என­வே, ­கு­றிப்­பா­க ­பெண்கள், சிறு­வர்­கள்­மற்றும் முதி­ய­வர்­களின் பாது­காப்­பினைக் கருத்தில் கொண்டும் கடந்த 10 வரு­ட­கா­ல­மா­க ­யுத்­த­வ­டு­வினால் பாதிக்­கப்­பட்­டு ­தங்­க­ள­து­ சொந்­த­நி­லத்தில் குடி­யே­றி­ய­ எ­ம­து­ மக்­க­ளுக்கு உத­விகள் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

ஐ.நா.வின் பரிந்­து­ரைக்­கு­ அ­மை­வாக இலங்கை­ அ­ர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வரும் நிலை­மா­று­ கா­ல ­நீதி (உண்மை, வழக்­கா­டுதல், இழப்­பீ­டு ­மற்றும் மீள ­நிகழா­மை­யை­ உ­று­திப்­ப­டுத்தல் அல்­ல­து­ உத்­த­ர­வா­தம்­ அ­ளித்தல்) தொடர்­பா­ன­ வே­லைத்­திட்­டங்­களில் இழப்­பீ­டு­ வ­ழங்கல் எனும் பொறி­மு­றைக்­கு­ அ­மை­வா­கவும் தாங்கள் கடந்த 19.08.2015 அன்­று­ மு­தற்­கட்­ட ­கு­டி­யேற்ற­ நி­கழ்வில் சம்பூர் பிர­தே­சத்­தி­னை ஓர் மாதிரிக் கிரா­ம­மா­க ­உ­ரு­வாக்­குவேன் என்­ற ­வாக்­கிற்கு இணங்­கவும் நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ள வேண்டும்.

இழந்­த­வற்­றை ­மீ­ள­வ­ழங்கல் அல்­ல­து­ சீ­ர­மைத்தல் பணி­க­ளை­ து­ரி­த­மாக எம­து ­கி­ரா­ம­மக்­க­ளுக்­கு ­வ­ழங்­க­ வேண்டும் என ­தங்­களை இரு கரம் கூப்­பி­ வ­ணங்கி கோரிக்­கை­க­ளையும் தங்­களின் மேலா­ன­ பார்­வைக்கு இத்தால் முன்­வைக்­கின்றோம்.

கடந்த 2006ஆம் ஆண்­டு ­முழுச் சொத்­து­ட­மை­க­ளையும் இழந்து இடம்­பெ­யர்ந்­த­ அ­னைத்­து­ கு­டும்­பங்­க­ளுக்கும் (அர­ச­ உத்­தி­யோ­கத்­தர்கள் என­ வே­று­பா­டின்றி) அடிப்­படைத் தேவை­க­ளை ­நி­றை­வேற்­றுதல் (குறிப்­பா­க­ வீடு, குடிநீர், மல­சலகூடம் மற்­று­ வாழ்­வா­தாரம்) வேண்டும்

2006 ஆண்­டிற்­கு­ப் பின்னர் திரு­ம­ண­மான­ கு­டும்­பங்­க­ளுக்கும் (புதி­ய ­கு­டும்­பங்கள் என்­ற ­வே­று­பா­டின்றி) மேற்­ப­டி­ அ­டிப்­படைத் தேவை­க­ளை­ பூர்த்­தி­செய்தல்.

குறிப்­பாக 2ஆம் கட்­ட­மா­க­ மீ­ளக்­குடி­யே­றி­ய ­அ­னைத்­து­ கு­டும்­பங்­க­ளுக்கும் மழை­காலம் தொடங்­கு­வ­தற்­கு ­முன்னர் (செப்­டெம்­ப­ருக்கு­ முன்னர்) அரை­ நி­ரந்­த­ர­ வீ­டு­க­ளை ­உடன் வழங்கல்.

இல. 2 இல் குறிப்­பி­டப்­பட்­ட ­கு­டும்­பங்­க­ளுக்­கா­ன ­கு­டி­யி­ருப்­புக்­கா­ணி­ மற்றும் தோட்­டக்­கா­ணி­க­ளை ­வ­ழங்­கல்.

யுத்­த­ கா­லத்தில் மர­ணித்­த­வர்கள், காயப்­பட்­ட­வர்கள் ஆகி­யோ­ருக்­கு­ இ­ழப்­பீ­டு­க­ளை­ வ­ழங்கல்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கு­ என்­ன­ந­டந்­தது என்­ற­ உண்­மை­யி­னை ­உ­ரி­ய­ நீ­திப்­பொறி­மு­றை­யூ­டா­க­ வகை கூறல்.

2006 முன்னர் காணி­ அ­னு­ம­திப்­பத்­திரம் மற்றும் அழிப்­பிற்­கு­ விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்­கா­ன­ ஆ­வ­ணங்­க­ளை­ வ­ழங்கல்.

புதி­ய­ விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கா­ன ­கா­ணி ­ந­ட­மாடும் சேவை­யி­னை­ ந­டத்­தி­ அ­னு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளை­ வ­ழங்கல்.

2006ஆம் ஆண்­டு­ இ­டம்­பெ­யர்ந்­து­ சென்­ற­ குறிப்­பிட்­ட­ள­வு­ அ­ர­ச ­உத்­தி­யோ­கத்­தர்­கள்­தாங்கள் இடம்­பெ­யர்ந்­து­ சென்­ற­ இ­டங்­க­ளில் ­கடந்த 10 ஆண்­டு­க­ளா­க­ ப­ணி­யாற்றி­வ­ரு­கின்றார். இவ் அர­ச ­ஊ­ழி­யர்­களின் குடும்­பங்கள் சம்பூர் கிரா­மத்­திற்­கு ­மீளக் குடி­யே­றி­யுள்­ளனர். இவ் அர­ச ­ஊ­ழி­யர்கள் தாமா­க­வே ­வி­ரும்பும் பட்­சத்தில் உடன் இட­மாற்­றத்­தி­னை ­வ­ழங்­க­ சி­பாரிசு ­செய்தல்.

560 குடும்­பங்­க­ளுக்கு ஒரு மாத­கா­லத்­திற்குள் அரை­நி­ரந்­த­ர ­வீ­டு­க­ளையும் நிரந்­த­ர­வீ­டு­க­ளையும் அமைத்தல்

புதி­ய­தா­க ­சம்பூர் கடற்­ப­டை­யினர் தங்­களின் தேவை­க­ளுக்­கெ­ன­ கோரும் 32 காணி­க­ளை­ விடு­வித்­து­ மக்கள் வாழவும் தொழில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வைத்­தலும் குறிப்­பா­க ­சம்பூர் நீலக்­கே­ணி­ ஸ்ரீ­மு­ருகன் ஆல­யத்­தை­ வ­ழி­பாட்­டுக்­கா­க­ மக்­க­ளிடம் ஒப்­ப­டைத்தல்.

46 குளங்கள் புன­ருத்­தா­ர­ணம்­செய்தல்.

இரண்டாம் கட்­ட­மா­க­ கு­டி­யேற்­றப்­பட்­ட ­மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளக வீதிகளை செப்பனிடல்.

சம்பூர் பிரதேசத்தில் அமைக்க தீர்மானித்­துள்ள அனல் மின் நிலையத்திற்கான வேலைத் திட்டங்களை முழுமையாக நிறுத்துதலும் குறிப்பிட்ட 505 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் மக்களை இயல்பானசெயற்பாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கல்.

சம்பூரில் அமைந்துள்ள 2 மயானங்­களையும் துப்புரவு செய்வதுடன், பாதுகாப்பு வேலிகளை அமைத்துக் கொடுத்தலும், மரணச் சடங்குகளை மேற்கொள்வதற்கான 2 கட்டடங்களை அமைத்துக் கொடுத்தலும்.

தி/மூ/சம்பூர் மகா­வித்­தி­யா­ல­யத்­திற்­கான ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­தலும் தேவை­யான கட்­டு­மா­னங்கள் மற்றும் தொழில்­நுட்ப உப­க­ர­ணங்­களை வழங்கல்.

அர­ச ­மற்றும் அர­ச­சார்­பற்ற அமைப்­புக்­களால் முன்­னெ­டுத்­து­வரும் உட்­கட்­டு­மா­ன­வே­லைத்­திட்­டங்­களை மழைக்­கா­லத்­திற்கு முன்னர் நிறை­வு­பெ­று­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை வழங்கல்.

எனவே, மேற்­ப­டி­ எ­ம­து ­மக்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வீர்கள் என்ற நம்­பிக்­கை­யுடன் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்டு இயங்கும் கீழ் குறிப்­பி­டப்­படும் சிவில் அமைப்­புக்­க­ளா­கிய நாங்கள் ஒப்­ப­மிட்டு இம் ­ம­க­ஜரை­ தங்­க­ளுக்­கு ­கை­ய­ளிக்­கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 12 உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்த மகஜரில் ஒப்பங்களையும் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=02/08/2016

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.