Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்

Featured Replies

குமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்

 

குமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஊடகங்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு வந்தன. இப்போது தீர்ப்பளிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஊடகங்களில் அதன் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை. குமாரபுரம் கொலைச் சம்பவமும், அது பற்றிய வழக்கு விசாரணையும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தன. அத்துடன் சமூகத்தில் உணர்வுபூர்வமானதோர் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தமையே அதற்கு முக்கிய காரணமாகும்.

குமாரபுரம் கொலைச் சம்பவம் கடந்த 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றது. அன்றைய தினம் குமாரபுரத்தின் அயல் கிராமமாகிய தெஹிவத்த இராணுவ முகாமில் இருந்து கிளிவெட்டி இராணுவ முகாமுக்கு உணவு கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் மீது சி ஐ டி பாலம் என அழைக்கப்படும் பாலத்தில் மறைந்திருந்த விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் அந்த இருவரும் கொல்லப்;பட்டனர். 

இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் குமாரபுரம் கிராமத்திற்குள் தப்பியோடினார்கள் என கிடைத்ததாகத் தெரிவிக்கப்படும் தகவலையடுத்து. தெஹிவத்தை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் குமாரபுரம் கிராமத்தின் உள்ளே புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 16 வயதுடைய மாணவி ஒருவரும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் வன்புனர்வின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்கள், 13 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர். இந்த வெறியாட்டத்தில் சம்பந்தப்பட்ட இராணுவச் சிப்பாய்களில் சிலர் மது போதையில் இருந்ததாகக் கண்கண்ட சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருடன் தெஹிவத்த இராணுவ முகாமைச் சேர்ந்த சிங்களக் கிராமவாசிகளான ஊர்காவல் படையினரும் குமாரபுரம் கிராமத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இணைந்திருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.    

கூட்டமாகக் கிராமத்தினுட் புகுந்து கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுத்தள்ளிய இராணுவத்தைக் கண்டதும். ஊர் மக்கள் வீடுகளில் புகுந்து கதவுகளைச் சாத்திவிட்டு ஒளிந்து கொண்டனர். வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த இராணுவத்தினர் கையெடுத்து கும்பிட்டவர்களையும் சுட்டுத் தள்ளியதாக, இந்தச் சம்பவத்தில் காயங்களுடன் உயிர் தப்பி சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.  

பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த குமாரபுரம் படுகொலை வழக்கு முதலில் மூதூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதன் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. தெஹிவத்த இராணுவ முகாமைச் சேர்ந்த எட்டு இராணுவத்தி;னர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது எதிரிகள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என காரணம் காட்டி, இந்த வழக்கை, அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். அதற்கமைவாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, 

குற்றம் சாட்டப்பட்டிருந்த 8 இராணுவத்தினரில் 2 பேர் மரணமடைந்ததையடுத்து, 6 பேருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிங்கள ஜுரி சபையினர் - அறங்கூறும் அவையோர் முன்னிலையில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என முன்வைத்த விண்ணப்பமும் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, 7 பேர் அடங்கிய அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றன. 

அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் அறங்கூறும் அவையோர் எதிரிகள் 6 பேரும் நிரபராதிகள் என தெரிவித்து, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அறங்கூறும் அவையோர் முன்னிலையில் நடைபெறுகின்ற வழக்கு விசாரணையின் சட்ட நடைமுறைக்கு அமைவாக, அந்தப் பரிந்துரையை ஏற்று, நீதிபதி மஞ்சுள திலகரட்ன எதிரிகளான 6 இராணுவ வீரர்களையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.  

 

மயிலந்தனை படுகொலை வழக்கு 

மட்டக்களப்பு மாவட்டம் மயிலந்தனையில் கடந்த 1992 ஆம் ஆண்டு 9 ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் ஒன்றில ஒரு வயது தொடக்கம் 15 வயது வரையிலான சிறுவர்கள், ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட் 35 பேர் கொல்லப்பட்டனர். 

இராணுவ கட்டளைத் தளபதி உள்ளிட்ட 7 இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டமைக்குப் பழி தீர்க்கும் வகையிலேயே மயிலாந்தனை கிராமவாசிகள் மீது இராணுவத்தினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். 

மயிலந்தனை கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தி;னர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கத்திகள் கோடரிகள் என்பவற்றினால் வெட்டியும் கொத்தியுமே கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டதாக கண்கண்ட சாட்சிங்கள் தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அடையாள அணிவகுப்பு ஒன்றில் இந்தச் சம்பவத்த்pல் சம்பந்தப்பட்டதாக 24 இராணுவத்தி;னர் அடையாளம் காட்டப்பட்டிருந்தனர். பின்னர் இந்த வழக்கு பொலன்னறுவைக்கும் அங்கிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இராணுவத்த்pனருக்கு பொலன்னறுவையில் பாதுகாப்பு இல்லையென்ற காரணத்தைக் காட்டியே வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது. 

கொழும்பில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் அன்றைய யுத்த மோதல் சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சிகளான 30 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியங்கள் அளித்திருந்தனர். இந்த வழக்கும் எதிரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 7 பேர் கொண்ட அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணைகளின் முடிவில் எதிரிகளான 18 இராணுவத்தினரும் குற்றமற்றவர்கள் என அறங்கூறும் அவையோரினால் தீர்மானிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 

அறங்கூறும் அவையோரின் முடிவுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்கிய தமிழராகிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், அறங்கூறும் அவையினர் மீண்டும் இந்த வழக்கின் எதிரிகள் குற்றமற்றவர்கள் என உறுதி செய்திருந்தனர். 

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற மயிலந்தனை படுகொலைகளுக்கு சுமார் பத்து வருட்ஙகளின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அந்த வழக்கின் எதிரிகள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தப் படுகொலைச் சம்பவமானது, அன்றைய காலப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் பதைபதைப்பையும் தமிழர் பிரதேசங்களில் ஏற்படுத்தியிருந்தது. கண் கண்ட சாட்சிகள் மட்டுமல்லாமல், இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்து பின்னர் உயிர் நீத்தவர்களின் மரண வாக்குமூலங்களும்கூட, கொழும்பு மேல் நீதிமன்ற விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் குற்றவாளிகள் என எவரும் காணப்படவில்லை. தண்டனை வழங்கப்படவுமில்லை. மாறாக எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

இந்தத் தீர்ப்பையடுத்து, மயிலந்தனை கொலை வழக்கை மேன்முறையீடு செய்ய வேண்டும்  என்று அப்போதைய சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவர் அறங்கூறும் அவையோரின் முடிவுக்கமைய வழங்கப்படுகின்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற மரபு ரீதியான வழக்கத்தைக் காரணம் காட்டி மேன்முறையீடு செய்ய மறுத்துவிட்டார். 

 

ஜுரி சபையினர் - அறங்கூறும் அவையோர் விசாரணை முறை 

கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்புனர்வு (பாலியல் வல்லுறவு) ஆகிய குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகள் இலங்கையின் நீதிக்கட்டமைப்புக்கேற்ப, எதிரிகளின் விருப்பத்திற்கு அமைவாக அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடத்தப்படலாம். 

இத்தகைய வழக்கு ஒன்றை விசாரணை செய்யவுள்ள நீதிபதியிடமிருந்து நியாயமான நீதி கிடைக்காது என குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கருதினால், அவர்கள் அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய முடியும். 

அத்தகைய விண்ணப்பத்தை நீதிபதி நிராகரிக்க முடியாது. இரண்டு இனங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்படுகின்ற குமாரபுரம் படுகொலை போன்ற வழக்குகளில், எந்த இனத்தைச் சேர்ந்த  அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்ற தெரிவை மேற்கொள்கின்ற உரிமையும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த உரிமையில் நீதிபதி தலையிட முடியாது. எனவே இந்த விடயத்தில் நீதிபதியின் கைககள் கட்டப்பட்டிருக்கின்றன என்றே கூற வேண்டும். 

அவ்வாறு நடைபெறுகின்ற விசாரணைகளின்போது, அறங்கூறும் அவையைச் சேர்ந்த ஒருவர் வெளிச்சக்திகளினால் செல்வாக்கு பிரயோகிக்கப்பட்டிருக்கின்றார் என நீதிபதிக்குத் தெரியவரும்போது அல்லது, விசாரணைகளின் போது அளிக்கப்படுகின்ற சாட்சியங்கள் அல்லது நீதிபதியினாலும், சட்டவாதிகளினாலும் அளிக்கப்படுகின்ற சட்ட நடைமுறை விளக்கங்களை சரியாகக் கிரகிக்கவில்லை என கண்டால், அந்த அறங்கூறும் அவையைக் கலைத்துவிட்டு புதிய அறங்கூறும் அவையை நீதிபதி தெரிவு செய்யலாம். 

இவ்வாறு சில வழக்கு விசாரணைகளில் அறங்கூறும் அவைகள் கலைக்கப்பட்டு புதிய அறங்கூறும் அவையினர் நியமிக்கப்பட்ட அனுபவம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சில சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். 

உரிய காரணத்தைக் காட்டி, அறங்கூறும் அவையொன்றைக் கலைத்து புதிய அவையோரை நியமனம் செய்யலாமேயொழிய, தீர்ப்பு தொடர்பான அவர்களின் முடிவுகளில் மாற்றம் செய்ய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. அந்த அவையோரின் தீர்மானத்தை ஏற்று அதற்கேற்ற வகையிலேயே, நீPதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். 

கடந்த 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பையடுத்து அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமை இலங்கையில் நடைமுறைக்கு வந்தது. ஆயினும், 38 வருடங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற அறங்கூளூறும் அவையோர் விசாரணை முறைமையானது, கடந்த 30 வருடங்களில் படிப்படியாகத் தேய்வடைந்து 98 வீதம் அழிவடைந்துள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.  

நடைமுறை பாதிப்புகள்

அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமையானது அருகி வருகின்ற சூழலில் இராணுவத்தினரைத் தண்டிப்பதிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக அதனைக் கைக்கொள்கின்றதொரு போக்கு காணப்படுகின்றது என்பது சட்ட வல்லுனர்களின் கருத்தாகும். . 

பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகவும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிங்களவர்களான இராணுவத்தினராகவும் உள்ள சூழலில், சிங்களவர்களான அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்ற வழக்குகளில் அநேகமானவை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கே இந்த அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமை கைக்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவதற்;கு இது காரணமாகியுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

இதற்கு சிறந்த உதாரணமாக மயிலந்தனைப் படுகொலை வழக்கின் அறங்கூறும் அவையோர் வழங்கிய தீர்ப்பும், இப்போது குமாரபுரம் படுகொலை வழக்கில் அதேபோன்று சிங்களவர்களான அறங்கூறும் அவையோர் வழங்கிய எதிரிகள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பும் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கே அறங்கூறும் அவையோர் விசாரணை பயன்படுத்தப்படுகின்றது என்ற சந்தேகத்திற்குச் சிறந்த உதாரணங்களாகியிருக்கின்றன. 

அறங்கூறும் அவையோர் விசாரணை நடைமுறையில், ஒரு விசாரணையின் பின்னர் அளிக்கப்படுகின்ற தீர்ப்பை மாற்றி அமைக்க முடியாது. இந்த விசாரணை முறையில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும், பின்னர் உயர் நீதிமன்றத்திலும் மேன் முறையீடு செய்வதற்கான உரிமை சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது, 

ஆனால் ஒரு நீதிபதியினால் விசாரணை செய்யப்பட்டு அளிக்கப்படுகின்ற தீர்ப்புக்கு எதிரான  மேன்முறையீட்டு விசாரணையின்போது, எற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நிராகரித்து புதிய தீர்ப்பு வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உண்டு. 

அதேபோன்று ட்ரையல் எட் பார் எனப்படுகின்ற 3 பேரைக் கொண்ட நீதிபதிகள் குழுhமினால் விசாரணை செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற தீர்ப்பையும் உச்ச  நீதிமன்றம் மாற்றியமைத்து புதிய தீர்ப்பை வழங்கலாம். 

ஆனால் அறங்கூறும் அவையோர் விசாரணை நடைமுறையின் மூலம் வழங்கப்படுகின்ற தீர்ப்பை மேன்முறையீட்டு விசாரணையின்போது நியாயமான காரணங்களைக் காட்டி, மீள்விசாரணைக்கு உத்தரவிடலாமேயொழிய, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றுவதற்கு அதிகாரம் கிடையாது. ஆனால் நியாயமான காரணங்கள் இருக்குமேயானால் மேன்முறையீட்டின் போது அந்த வழக்கை மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியும். அதற்கான அதிகாரம் மேன்முறையீட்டைப் பரிசீலனை செய்கின்ற நீதிமன்றத்திற்கு உண்டு. 

அறங்கூறும் அவையோரினால் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக, அத்தகைய வழக்கைத் தாக்கல் செய்த சட்டமா அதிபரே மேன்முறையீடு செய்ய முடியும். அதேபோன்று குற்றம் சாட்டப்பட்டவராகிய எதிரியும் - தேவை ஏற்பட்டால், வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்குத் திருப்தி இல்லை என தெரிவித்து, மேன்முறையீட்டுக்குச் செல்ல முடியும். 

ஆனால் பாதிக்கப்பட்டவர்களான  கொலையுண்டவர்கள் அல்லது கொலை முயற்சிக்கு உள்ளாகியவர் அல்லது பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டவரும், பாலியல் வன்புனர்வின் பின்னர் கொல்லப்பட்டவர் சார்பானவர்களும் மேன்முறையீடு செய்ய முடியாது. 

அவ்வாறு மேன் முறையீடு செய்வதற்கான உரிமை அந்த வழக்கைத் தாக்கல் செய்த சட்டமா அதிபருக்கே உள்ளது, 

இதன் காரணமாகத்தான், குமாரபுரம் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளித்திருக்கின்றார்கள். 

சாதாரணமாக அரச தரப்பினராகிய சட்டமா அதிபர் அறங்கூறும் அவையோர் விசாரணை முறையில் வழங்கப்படுகின்ற ஒரு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது கிடையாது. அவ்வாறு செய்ததாகத் தெரியவில்லை. அரச தரப்பாகிய சட்டமா அதிபரே நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் திருப்தி இல்லை எனக் கூறி மேன் முறையீட்டுக்குச் செல்வது நீதி நடைமுறைக்குப் பொறுப்பானவர்களே நீதி நடைமுறைமீது நம்பிக்கையில்லை என்று கூறியதாக அமைந்துவிடும் அல்லவா?

மறு புறத்தில் குற்றம் செய்துள்ளாகக் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமு; என்பதற்காகவே சட்டமா அதிபர் குமாரபுரம் கொலை வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த வழக்கில் அவருடைய சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அரச தரப்புச் சட்டத்தரணி. இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தார். அதற்கான காரணங்கள், ஆதாரங்கள் குறித்தும் அவர் நீதிமன்றத்திற்கும்,  அறங்கூறும் அவையோருக்கும் தெளிவுபடுத்தியிருந்தார். ஆயினும் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் மேன் முறையீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. 

 

பலரையும் பல்வேறு உணர்வுகளுக்கு உள்ளாக்கியுள்ள குமாரபுரம் கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக, குமாரபுரம் மக்கள் விடுத்துள்ள நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஏற்பாரா, அவ்வாறு அதனை ஏற்று, சட்டமா அதிபரை மேன்முறையீடு செய்யுமாறு கூறி நீதித் துறையில் தலையீடு செய்வாரா என்பது தெரியவில்லை.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134645/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
விசாரணைப் பொறிமுறையில்
 

விசாரணைப் பொறிமுறையில்

சர்வதேச பங்களிப்பின் அவசியம்

 

 

குமா­ர­புரம் கிரா­மத்து மக்கள் மட்­டு­மல்ல. குமா­ர­புரம் படு­கொலை வழக்கின் விசா­ர­ணை­களில் அளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்­களை ஊட­கங்கள் வாயி­லாக அறிந்த சாமான்­யர்­களும் இந்த வழக்கு மேன் முறை­யீடு செய்­யப்­பட வேண்டும் என்ற மன எழுச்­சியைக் கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். 

குமா­ர­புரம் கொலை வழக்கின் எதி­ரி­க­ளா­கிய 6 இரா­ணு­வத்­தி­னரும் விடு­தலை செய்­யப்­பட்­டார்கள் என்ற செய்தி வெளி­யா­கி­யதும், என்ன இப்­படி நடந்­தி­ருக்­கின்­றது என்று பெரிய ஏமாற்­றத்­துடன் அங்­க­லாய்த்­த­வர்­களே அதிகம். அதிலும் இது ஏன் இப்­படி நடந்­தது, என்ன காரணம் என்று அறி­வ­தற்­கான மன உந்­து­தலைக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. 

இதற்குக் காரணம் இல்­லாமல் இல்லை. நீதி­மன்­றத்தில் சட்ட ரீதி­யான ஆதா­ரங்கள் அவ­சியம். அந்த ஆதா­ரங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே சட்­ட­வி­தி­க­ளுக்கு உட்­பட்ட வகையில் தீர்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­பட்ட வகை­யி­லேயே அறங்­கூறும் அவையோர் விசா­ர­ணை­யின்­போதும் தீர்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

அறங்­கூறும் அவையோர் முன்­னி­லையில் நீதி­மன்ற விசா­ர­ணைகள் நடை­பெற வேண்டும் என்­பது குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­களின் விருப்­பத்­திற்கு விடப்­பட்­டி­ருக்­கின்­றது. குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ஒருவர் தனக்கு நியா­ய­மான முறையில் நீதி கிடைக்க வேண்டும். எந்தக் கார­ணத்தைக் கொண்டும் நிர­பா­ராதி ஒருவர் தண்­டிக்­கப்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­வற்றை உறுதி செய்­வ­தற்­காக சட்­டத்தில் இந்த வசதி செய்­யப்­பட்­டி­ருக்­கலாம். 

ஒரு வழக்கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இருந்த போதிலும், அவர் உண்­மையில் குற்றம் செய்­தாரா என்­பது முதலில் நிரூ­பிக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு நிரூ­பிக்­கப்­ப­டா­விட்டால், அவர் விடு­த­லை­யாவார் என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் இல்லை. அதே­நேரம் நடை­பெற்ற குற்றச் செயல்­க­ளுக்கு யார் காரணம் என்ற விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற பொது­வான எதிர்­பார்ப்பு எழு­வது இயல்பு.

 

அந்த வகை­யி­லேயே குமா­ர­புரம் கிரா­மத்து மக்­களும் சரி சமூ­கத்தில் உள்ள சாமான்­யர்­களும் சரி இன எழுச்­சிக்கு உள்­ளாகி குமா­ர­புரம் படு­கொலை வழக்கில் மேன் முறை­யீடு செய்­யப்­பட வேண்டும் என்ற ஆவ­லையும் எதிர்­பார்ப்­பையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள் என்று கரு­து­வ­தற்கு இட­முண்டு. 

அதே­வேளை, மறு­பு­றத்­தில்­இ­ரா­ணு­வத்­தினர் ஒரு­போதும் தண்­டிக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதை  குமா­ர­புரம் கொலை வழக்கின் தீர்ப்பு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்று அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றில் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இந்த அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­னரைப் பழி­வாங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வருகின்றது என்று எதிர்க்­கட்­சி­யினர் செய்து வரு­கின்ற அர­சியல் பிர­சா­ரத்­திற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் இந்த அர­சியல் கூற்றை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். 

அத்­துடன் எதிர்க்­கட்­சியில் உள்ள பொது எதி­ர­ணி­யினர் நடத்­திய பாத­யாத்­தி­ரைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி செய்­யப்­பட்ட விண்­ணப்­பத்தை சில நீதி­மன்­றங்கள் நிரா­க­ரித்­தி­ருப்­ப­தையும் குறிப்­பிட்­டுள்ள அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, இப்­போது நாட்டில் நீதித்­துறை சுதந்­தி­ர­மாகச் செயற்­ப­டு­கின்­றது என்­ப­தற்­கான இது சிறந்த உதா­ர­ண­மாகும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

அதே­வேளை, இன ரீதி­யா­கவும், மத ரீதி­யா­கவும் பெயர்­களைக் கொண்ட அர­சியல் கட்­சி­களைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதி­மன்­றத்தில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிர­சன்ன லால் டி அல்விஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்­தி­ருந்தார். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மற்றும் பொது­ப­ல­சேனா ஆகிய கட்­சி­களை அவர் உத­ராணம் காட்டி இந்த தடை­யுத்­த­ரவைக் கோரி­யி­ருந்தார். அவ­ரு­டைய கோரிக்­கையை எதிர் மனு­தா­ரர்கள் எதிர்த்­தி­ருந்­தனர். அத்­த­கைய தடை­யுத்­த­ரவை வழங்­கு­வ­தற்கு உச்ச நீதி­மன்­றத்­திற்கு அதி­காரம் இல்லை என அவர்கள் வாதிட்­டனர். இரு தரப்பு வாதங்­க­ளையும் செவி­ம­டுத்த உச்ச நீதி­மன்றம் சரி­யான சட்­ட­ரீ­தி­யான கார­ணங்­களை  அந்த மனு கொண்­டி­ருக்­க­வில்லை எனக் கூறி தள்­ளு­படி செய்­தது.

ஒரு சில செய்­திக்­கண்­ணோட்­டக்­கா­ரர்கள் உச்ச நீதி­மன்­றத்தின் இந்த நட­வ­டிக்­கையை உதா­ரணம் காட்டி நாட்டில் நீதித்துறை சுதந்­தி­ர­மாகச் செயற்­ப­டு­கின்­றது என வாதிட்டு வரு­கின்­றனர். ஆனால் இந்த நிலைப்­பாடு குறித்து சாமான்­யர்கள் மத்­தியில் சந்­தே­கங்­களே நில­வு­கின்­றன. 

ஜுரிமார் - அறங்­கூறும் அவை­யினர்

கொலை, கூட்டுக் கொலைகள் அல்­லது கொலை முயற்சி மற்றும் பாலியல் வன்­பு­ணர்வு, பாலியல் வன்­பு­ணர்வின் பின்­ன­ரான கொலை போன்ற பார­தூ­ர­மான குற்றச் செயல்கள் தொடர்பில் ஜுரிமார் - அறங்­கூறும் அவை விசா­ரணை முறை நாட்டில் கைக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இந்த அறங்­கூறும் அவைக்கு சட்­டத்­துறை சார்ந்த புல­மை­யற்ற சமூக முக்­கி­யஸ்­தர்­களே உறுப்­பி­னர்­க­ளாக நிய­மனம் செய்­யப்­ப­டு­கின்­றனர். 

ஆசி­ரி­யர்கள், நிர்­வாக சேவையில் உள்ள அரச உத்­தி­யோ­கத்­தர்கள் இவற்றில் முக்­கிய இடம் வகிக்­கின்­றனர். குறிப்­பாக இணக்­க­சபை உறுப்­பி­னர்­க­ளாகத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற சமூகப் பெரி­யார்கள் அறங்­கூறும் அவையின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அவர்கள் வழக்கு விசா­ர­ணை­களின் ­போது சாட்­சி­க­ளினால் அளிக்­கப்­ப­டு­கின்ற சாட்­சி­யங்­க­ளையும் வழக்கு நிகழ்­வு­க­ளையும், ஆதா­ரங்­க­ளையும் கவ­னத்தில் எடுத்துக் கொள்கின்றார்கள். 

அவர்­க­ளுக்கு உத­வி­யாக அரச சட்­டத்­த­ர­ணியும், எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணியும், வழக்கு விசா­ர­ணைக்குத் தலைமை தாங்­கு­கின்ற நீதி­ப­தியும் சாட்­சி­யங்கள், வழக்கு நிகழ்­வுகள் மற்றும் வழக்கில் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற ஆதா­ரங்கள் என்­ப­வற்றில் உள்ள சட்­ட­ரீ­தி­யான அம்­சங்கள் குறித்து அறங்­கூறும் அவையின­ருக்குத் தெளி­வு­ப­டுத்தி அவர்கள் ஒரு முடி­வுக்கு வரத்­தக்க வகையில் அவர்­களை வழி­ந­டத்­து­வார்கள். 

விசா­ர­ணையின் முடிவில் இடம்­பெ­று­கின்ற தொகுப்­பு­ரை­க­ளிலும் சட்­ட­ரீ­தி­யான அம்­சங்கள் குறித்து விளக்­க­ம­ளிக்­கப்­படும். இறு­தியில் அறங்­கூறும் அவை­யினர் தமது அறி­வுக்­கும் அனு­ப­வத்­திற்கும் ஏற்ற வகையில் சமூக நீதி சார்ந்து தமது மனச்­சாட்­சிக்கு ஏற்ற வகையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டவர் குற்­ற­வா­ளியா இல்­லையா என்­பதை முடிவு செய்து அறி­விப்­பார்கள். 

அறங்­கூறும் அவை­யினர் ஏழு பேரும் ஏகோ­பித்த முடிவை மேற்­கொள்­ளா­விட்டால் பெரும்­பான்­மை­யோரின் கருத்­துக்­க­மை­வாக தீர்ப்பு வழங்­கப்­படும். இத்­த­கைய நடை­முறை இனப்­பி­ரச்­சினை தீவிரம் பெற்று, இன ரீதி­யான சிந்­த­னைகள் மேலோங்­கி­யுள்ள சூழலில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் சரி­யான முறையில் இனங்­கா­ணப்­ப­டு­வது சந்­தே­கமே என்ற கருத்து சட்ட வல்­லு­னர்கள் மத்­தியில் நில­வு­கின்­றது.   

பண்­டா­ர­வளை பிந்­து­னுவெவ

புனர்­வாழ்வு முகாம் படு­கொலை

அறங்­கூறும் அவையோர் - ஜுரி முறை­யி­லான விசா­ரணை ஒரு­பக்கம் இருக்க சமூ­கத்தில் பெரும் தாக்­கத்­தையும் எழுச்­சி­யையும் ஏற்­ப­டுத்­து­கின்ற மோச­மான கொலைகள் மற்றும் பாலியல் வல்­லு­றவு, வல்­லு­றவுக் கொலைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக மூன்று பேர் கொண்ட  நீதி­ப­திகள் குழாம் - ட்ரையல் அட் பார் முறையில் விசா­ர­ணை­கள் நடத்தும் நடை­மு­றையும் நாட்டில் கைக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இந்த நடை­மு­றையின் மூலம் சரி­யான முறையில் நீதி வழங்­கப்­ப­டு­கின்­றதா என்­பதும் கேள்­விக்­குறி­யா­கவே உள்­ளது. 

இவ்­வா­றான விசா­ர­ணை­களின் மூலம் அளிக்­கப்­ப­டு­கின்ற தீர்ப்­புக்கள் முன்­னுக்குப் பின் முர­ணாக அமைந்த நீதித்­துறை வர­லாறும் இலங்கையில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. பண்­டா­ர­வளை பிந்­து­னுவெவ புனர்­வாழ்வு முகாமில் இடம்­பெற்ற படு­கொலை வழக்கு சிறந்த உதா­ர­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

இந்த புனர்­வாழ்வு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளான 18 க்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட 27 இளை­ஞர்கள் வெட்­டியும் உயி­ரோடு எரித்தும் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். இந்தச் சம்­பவம் 2000 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 24 ஆம் திகதி அதி­காலை வேளையில் இடம்­பெற்­றது. 

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கான புனர்­வாழ்வு முகாம் என்ற பெயரில் அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த இளை­ஞர்கள் தங்­களை விடு­தலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்றை நடத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த வேளையில் அவர்கள் கல­கத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் அங்கு காவ­லுக்கு இருந்த பொலி­ஸா­ரினால் அதனை அடக்க முடி­யா­த­போது பொலிஸா­ரையும் மிஞ்­சிய காடையர் கூட்டம் ஒன்று அந்த முகா­முக்குள் புகுந்து அந்த இளை­ஞர்­களைத் தாக்­கி­யதால் இந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்­ற­தாக அரச தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்தத் தாக்­குதல் சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக அங்கு காவல் கட­மையில் இருந்த இரா­ணு­வத்­தினர் விலக்கிக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தனர். ஒரு சில பொலி­ஸாரே அங்கு கட­மையில் இருந்­தார்கள். அப்­போது கத்­திகள், வாள்கள், பொல்­லுகள் என்­ப­வற்­றுடன் அந்த முகா­முக்குள் புகுந்த கோஷ்­டி­யொன்று அந்த இளை­ஞர்­களை வெட்டிச் சரித்து தீயிட்டுக் கொளுத்­தி­யது. 

கண்­கண்ட சாட்­சி­யங்­க­ளின்­படி, 4 இளை­ஞர்கள் உயி­ரோடு எரிக்­கப்­பட்­டார்கள். கொல்­லப்­பட்­ட­வர்­களில் 11 பேரின் சட­லங்கள் அடை­யாளம் காண முடி­யாத வகையில் எரிந்­தி­ருந்­தன. மின்­சா­ரத்தில் மரம் அரியும் வாளினால் இளைஞன் ஒரு­வனின் கழுத்து அறுக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. 

இந்தப் படு­கொலைச் சம்­பவம் அப்­போது நாட்டைப் பெரும் பர­ப­ரப்­புக்கு உள்­ளாக்­கி­யி­ருந்­தது. தமிழர் தரப்பில் பெரும் அதிர்ச்­சி­யையும் பேரச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் நாட்டின் தென்­ப­குதி அதற்கு எதிர்­மா­றான ஓர் உணர்­வையே பிர­தி­ப­லித்­தி­ருந்­தது. 

இருப்­பினும் பத்­தொன்­பது பொலிஸார், சிங்­கள தேசி­ய­வா­தி­க­ளாகக் குறிப்­பி­டப்­பட்ட 24 சிங்­க­ள­வர்கள் உட்­பட 44 பேர் இந்தக் கொலைச் சம்­ப­வத்தில் சந்­தேக நபர்­க­ளாகக் கைது செய்­யப்­பட்­டார்கள்.இவர்­களில் இரண்டு பொலி­ஸா­ருக்கும் 3 சிங்­க­ள­வர்­க­ளுக்கும் 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி, மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான சரத் அம்­பே­பிட்­டிய, எரிக் பஸ்­நா­யக்க, உப்­பாலி அபே­ரத்ன ஆகிய 3 நீதி­ப­திகள் குழாமின் ட்ரையல் அட் பார் நீதி விசா­ர­ணையில் மரண தண்­டணை விதிக்­கப்­பட்­டது. பிந்­து­னுவெவ முகாமில் 27 பேரைக் கொலை செய்­த­தாக கொலைக்­குற்­றச்­சாட்டு உட்­பட 83 குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன், 14 பேரைக் கொலை செய்ய முற்­பட்­ட­தாக இவர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. 

ஆயினும் ட்ரையல் அட் பார் விசா­ர­ணையில் வழங்­கப்­பட்ட மரண தண்­டனை தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்தில் மேன் முறை­யீடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, 2005 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஐந்து நீதி­ய­ர­சர்­களைக் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு அந்த மரண தண்­ட­னையை ரத்துச் செய்து அவர்­களை விடு­தலை செய்­தது. 

ட்ரையல் அட் பார் விசா­ர­ணையில் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்­ட­வர்கள் உச்ச நீதி­மன்ற விசா­ர­ணை­யின் ­போது பிந்­து­னுவெவ படு­கொலை நிகழ்­வு­க­ளுடன் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­ட­தாக உறு­தி­யான சாட்­சி­யங்கள் இல்லை என்ற கார­ணத்தைக் காட்டி இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­டார்கள். 

நீதி­மன்­றத்தின் பொறுப்பில் உள்ள சிறைப் படு­கொ­லை­க­ளுக்கே நீதி கிடைக்­க­வில்லை என்றால்.......

இலங்­கையில் காலத்­திற்குக் காலம், இன ரீதி­யாகப் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில்  இடம்­பெற்று வரு­கின்ற கூட்டுப் படு­கொ­லைகள், பாலியல் வன்­பு­ணர்வுக் கொலைச்சம்­ப­வங்கள் தொடர்பில் முறை­யான நீதி வழங்­கப்­ப­டு­கின்­றதா என்ற கேள்வி நீண்ட கால­மா­கவே எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. 

கடந்த 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கல­வ­ரத்­தின் ­போது வெலிக்­கடை சிறைச்­சா­லையில் இரு வேறு சம்­ப­வங்­களில் 53 தமிழ் அர­சியல் கைதிகள் சித்­தி­ர­வ­தை­களின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். இந்தச் சம்­பவம் நீதி­மன்றக் காவலில் சிறைக்­கா­வ­லர்­களின் பொறுப்பில் பாது­காப்­புக்­காக விடப்­பட்­டி­ருந்­த­வர்­களைப் பாது­காப்­ப­தற்கு உரி­ய­வர்­களும் அர­சாங்­கமும் தவ­றி­விட்­டது அல்­லது வேண்­டு­மென்றே உதா­சீனம் செய்­து­விட்­டது என்ற பழிச் சொல்­லுக்கு இட­ம­ளித்­தி­ருந்­தது. 

அதனைத் தொடர்ந்து பதினேழு வரு­டங்­க ளின் பின்னர் அர­சியல் கைதி­க­ளாக புனர்­வாழ்வுப் பயிற்­சிக்­காக தடுத்து வைத்­தி­ருப்­ப­தாகக் கூறி பண்­டா­ர­வளை பிந்­து­னுவெவ தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களில் 27 இளை­ஞர்கள் மிக மோச­மான முறையில் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார்கள். 

இதன் கார­ண­மாக சிறைச்­சா­லை­களில் அல்­லது தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­ப­டு­கின்ற தமிழ் இளை­ஞர்கள் அங்கு பாது­காக்­கப்­பட்டு உரிய சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வார்கள் என்ற அர­சாங்­கத்தின் நடை­மு­றைக்குப் பதி­லாக அவர்கள் அங்கு படு­கொலை செய்­யப்­பட்­டு ­வி­டு­வார்­களோ என்ற பதற்றத்திற்கும் பேரச்­சத்­திற்கும் தமிழ் சமூ­கத்­தினர் உள்­ளாக்­கப்­பட்­டார்கள். இந்த அச்­சத்தை மெய்ப்­பிக்கும் வகை­யி­லேயே பின்­னாளில் நிம­ல­ரூபன், டெல்­றொக்சன் தமிழ் அர­சியல் கைதிகள் சிறைச்­சா­லை­களில் அடித்து நொறுக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட வர­லாறு பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. 

நீதித்­து­றையின் பொறுப்பில் கைதி­க­ளாக வைக்­கப்­பட்­ட­வர்கள் படு­கொலை செய்­யப்­படும் சம்­ப­வங்கள் தொடர்பில் உரிய நீதி வழங்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இந்த நிலை­யில் தான் ஏனைய கூட்­டுக்­கொ­லைகள், பாலியல் வன்­பு­ணர்வு, பாலி­யல்­வன்­பு­ணர்வுக் கொலைகள் என்­ப­வற்­றிற்கு உரிய நீதி இங்கு கிடைக்கப் போவ­தில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. மிகவும் அரி­தாக அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக நீண்டகால இடை­வெ­ளியின் பின்னர் ஒரிரு சம்­ப­வங்­களில் நீதி வழங்­கப்­பட்­டி­ருப்­பதைக் கவ­னத்திற் கொள்­ளத்தான் வேண்டும். இருப்­பினும் பெரும்­பான்­மை­யான சம்­ப­வங்­களில் சமூக நீதி சார்ந்த நிலையில் சிந்­திக்­கும்­போது சரி­யான நீதி வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே காரியங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் மத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்ற நம்பிக்கையற்ற தன்மை காலம் காலமாகத் தொடர்ந்து நிலவி வருகின்றது. 

இத்தகைய சூழலில்தான் இறுதி யுத்தத் தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் சம்பவங்களுக்கும் உள்நாட்டு விசா ரணைகளில் உரிய நீதி வழங்கப்படமாட் டாது என்று பாதிக்கப்பட்ட மக்கள் அடித் துக் கூறுகின்றார்கள். நீதித்துறையில் நம் பிக்கையற்ற நிலை காரணமாகவே, சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக் கையில் அவர்கள் அழுங்குப் பிடியாக இருக்கின் றார்கள். 

ஜுரி – அறங்கூறும் அவையினர் விசா ரணை முறையிலும்சரி, 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் விசாரணையிலும் சரி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங் கப்படுவது சந்தேகமே என்பது இந்த நாட்டின் யதார்த்தமாக உள்ளது. 

எனவே தான், பொறுப்புக் கூறும் விட யத்தில் - இனம் சார்ந்த உணர்வுகள் கூர்மை பெற்றிருக்கின்ற அரசியல் மயப்பட்ட சூதிரைக் கொம்பாகக் கருதப்படுகின்றது. எனவே உண்மையான நீதி வழங்கப்பட வேண்டுமானால், மூன்றாந்தரப்பு அவசியம். இன ரீதியான உணர்வுகள் மேலோங்கி நடுநிலைமையைப் பாதிக்கின்ற போக்கில் இருந்து விடுபட வேண்டுமானால் சர்வதே சத்தின் பங்களிப்பு நீதி விசாரணைப் பொறி முறையில் நடைமுறையில் அவசியம். 

அத்தகைய பொறி முறையொன்றே யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களுக்கு மேற்பட்ட கால தாமதத்தின் பின்னராவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேக மும் இல்லை. \

(முற்றும்)

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=04/08/2016

 
 
 
 
 
 
 
 
 

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.