Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகையர் திலகம் சாவித்ரி

Featured Replies

சாவித்ரி- 1. அடடா... அறியாப் பருவமடா!

 


 

1964.  குரோதி ஆண்டின் ஆவணி மாதத்துக் கடைசி முகூர்த்தம். கல்யாண வீடு. வி.ஐ.பி. இல்லத் திருமணம். மாபெரும் தலைவர்களும் உச்ச நட்சத்திரங்களும் ஒவ்வொருவராக உள்ளே வர வர, அவர்களை அருகிலிருந்து பார்க்கக்கூடிய  பரவச வாய்ப்பு. எங்கும் பெண்களின் கலகலப்பு! இதனிடையே மனத்தைப் பிழியும் 'கலைக் கோயில்' சிட்டிபாபுவின் வீணை.

ராஜாஜி, ஜெமினி கணேசனை நெருங்கி சாவித்ரியை சுட்டிக்காட்டி, 'கல்யாணப் பெண் யார்? அவரா...? என்றார்.  கூட்டம் பூகம்பமாகச் சிரித்தது. ஜெமினிக்கு வெட்கமாகிவிட்டது. இயல்பாகவே சிவந்த முகம். பெருமிதத்தின் பூரிப்பு சற்றே பெருகியது.  மன்மத வதனம் செவ்வானம் ஆயிற்று. அதிரடியாக அவரும் சிரித்தார். கவலையில்லாத மனிதன். அதற்குள் சாவித்ரி, 'என்ன ஒரேடியா  இங்கே சிரிப்பு?'

ராஜாஜி, அன்றைக்கு மூதறிஞர் என்கிற தனது மகுடத்தைக் கழற்றிவிட்டார்போல. ஜெமினியிடம் கேட்டதையே  ஜாலியாக சாவித்ரியிடமும் மீண்டும் வினவினார்.

‘ஏன், எதனால் அப்படிக் கேட்கிறீர்கள்...?’ - சாவித்ரியின் குரலில் சந்தோஷச் சாரல். பெரிய மனிதர்களுக்கு மத்தியில், ராஜாஜியிடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியின் மலர்ச்சி.

‘நானும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உன் பின்னால்தான் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது.’

அகிலமே  ஆசிர்வதித்ததுபோல் தோன்றியது சாவித்ரிக்கு!

 

Late-Savitri.JPG
***

 

1965 நவம்பர் மாதம்.  சிவாஜி கணேசன் தலைமையில் தமிழக நட்சத்திரங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து. பாகிஸ்தான் போரில் எல்லையில் படுகாயமுற்ற ராணுவ வீரர்களின் மத்தியில் ஆறுதலாக ஆடிப்பாடி, உற்சாகப்படுத்திவிட்டு வந்தவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.

'யாராவது ஏதாவது பாடுங்களேன்...’ என்றார் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். சிவாஜி, 'ஆர்மோனியம் இல்லாம முடியாதே...’ எனவும்,  ஜனாதிபதிக்குச் சுடச்சுட கோபம் வந்துவிட்டது.

‘பத்தாயிரம் பேருக்கு மேல் இங்கே வேலை செய்கிறீர்கள். ஒருவருக்குக்கூட சங்கீத ஞானமில்லையோ...’

அறிவார்ந்த அரிமாவின் அதட்டலில் கலைஞர்கள் கலங்கினர். ஏ.எல்.ராகவன்,  'ஆர்மோனியம் இல்லாமலே பாடறேன் சார்...' என்று  சிந்து நதியின் இசை நிலவினிலே என  முந்திக்கொண்டார். பி.சுசீலா, 'அத்தை மடி மெத்தையடி'  பாட, கச்சேரி களை கட்டியது. 1965-ன் சிறந்த புதுமுகம் ஜெயலலிதா. ஜனாதிபதி முன்பாக ஆடினார். பி.எஸ்.வீரப்பா கணக்காக, மேதகு ஜனாதிபதி, கலைச் செல்விக்கு சபாஷ் போட்டார்.

நடிகர் திலகம் - நடிகையர் திலகம் இருவரும் இணைந்து நவராத்திரியில் ஆடிய  சத்யவான் - சாவித்ரி தெருக்கூத்தை அரங்கேற்றினர். ஜனாதிபதி தன்னுடைய ஸ்பெஷல் பாராட்டை சிவாஜிக்குத் தெரிவித்தார். சாவித்ரியிடம் திரும்பி,  'புதிதாகப் பிறந்த குழந்தை சவுக்கியமாக இருக்கிறதா... பார்த்தாயா உன் வளர்ச்சியை நான் எப்படி கவனித்துக்கொண்டு வருகிறேன்!’

***

ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முதலிய உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் முதல் கடைசி குடிமகன் வரை, சாவித்ரியின் நடிப்பாற்றலால் மனம் மகிழ்ந்தார்கள். தேவதாஸில் தமிழச்சிகளின் மனத்தில்  நவரசப் பதியம் போட்டவர், எட்டே ஆண்டுகளில் நூறு படங்களில் நாயகியாக நடித்துப் புதிய சாதனை படைத்தார்.

 

Devadoss%20still.jpg

சாவித்ரிக்கு முன்பாக சதம் அடித்த ஹீரோ, ஹீரோயின்கள் யாரும்  கிடையாது. 'கொஞ்சும் சலங்கை'  சாவித்ரியின் நூறாவது பங்களிப்பு மட்டுமல்ல. அவரது முதல் வண்ணச் சித்திரமும்கூட.  ஒட்டுமொத்த திரைஉலகத்தினரால், ஆணாதிக்க அரிதார சமூகத்தால் ஒருமனதாக நடிகையர் திலகமாகக் கொண்டாடப்பட்டவர் சாவித்ரி!

 

 

முதன்முதலாக கண்ணதாசன்,

 தனது தயாரிப்பில் மிகத் துணிச்சலுடன்

நடிகர் திலகம்  - நடிகையர் திலகம்  நடிக்கும்

ரத்தத் திலகம்


என்று விளம்பரப்படுத்தினார். சிவாஜி கணேசனும், எம்.ஜி.ராமச்சந்திரனும், என்.டி.ராமாராவும், நாகேஸ்வர ராவும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தனர். அறுபதுகளில் அப்படியொரு உச்சம்  பெறுவது அத்தனை எளிதல்ல.

கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிப்படுத்தியாக வேண்டிய சுய முனைப்பும், அளவிட முடியாத ஆற்றலும், உச்சம் தொடத் தேவையான மிகக் கடினமான உழைப்பும் சாவித்ரியின் பக்க பலங்கள். தென்னக சினிமாவில் நீண்ட நெடிய காலம் நீடித்து நிலைத்து நிற்க அவை உதவின. ஜெமினி கணேசனும் துவக்கம்  முதலே, சாவித்ரிக்கு அருமையான கதாபாத்திரங்கள் அமைய ஆலோசனைகள் தந்தார் என்கிறார்கள்.

முன் மாதிரிகள் இல்லாத துருவ நட்சத்திரம் அவர். மதராஸிகளின் முதல் கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி, திரையில் 'கண்ணகியாக' வாழ்ந்து காட்டிய கண்ணாம்பா, பாவுரமா  என்று தேன் குரலில் பாடி வந்த பானுமதி, முத்தக் காட்சியில் நடித்த அஞ்சலி தேவி ஆகியோரை மிஞ்சி, மிகச் சீக்கிரத்தில் சிகரம் தொட்டவர் சாவித்ரி.

பத்மினி, வைஜெயந்தி போன்ற வலுவான நாட்டிய மேன்மையோ,  செல்வாக்குமிக்க குடும்பப் பின்னணியோ சாவித்ரிக்குக் கிடையாது. டி.ஆர். ராஜகுமாரி போன்ற பரம்பரை வாரிசோ அல்ல அவர். தன்னைத்தானே உருவாக்கிக்கொண்ட கலைச் சுயம்பு சாவித்ரி.

தாய் மண்ணான விஜயவாடாவில் 'பாலராஜு' பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் அஞ்சலி ஆடிய நாட்டுப்புற நடன  அசைவுகள் பாலகி சாவித்ரிக்கு அத்துபடி. நினைவு தெரிந்த நாள் முதலாக அஞ்சலியின் ரசிகை! சினிமா பைத்தியம் பிடித்து உடன்பிறந்த ஒரே அக்காவிடம், அபிநயங்களால் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பெரியப்பா சவுத்ரிக்கும், தாயார் சுபத்ராவுக்கும் சாவித்ரியின்  மீது அதிகப் பாசம். அவருக்கு நடனம் சொல்லித் தர விரும்பினார்கள்.

'அஞ்சலி மாதிரியே ஆடுகிறாளே...' என்று அதிசயப்பட்ட சுற்றம் எதிர்த்தது. நம்மைப் போன்ற சம்சாரிகளுக்கு ஆட்டம் சரிப்பட்டு வராது என்றது.

பள்ளிக்கூட நாடகம். பத்து வயதில் கிருஷ்ணர் வேஷம் போட்டுக்கொண்டு ஆடினாள் சாவித்ரி. ஒளிந்திருந்து பார்த்து ரசித்துப் பாராட்டிய ஒரே  ரசிகர் சவுத்ரி மட்டுமே. அம்மாவுக்கு பெரியப்பா சொல்லே வேதம். உள்ளூரிலேயே நட்டுவனார்  பூர்ணையா சாஸ்திரியும், அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும் சாவித்ரிக்கு நடனம் கற்றுத் தர முன் வந்தனர். மூன்று வேளையும் விடாமல் கதக், பரதநாட்டியம், குச்சுப்புடி என்று பாதம் தூக்கி ஆடினார் சாவித்ரி. தனியாக அரங்கேற்றம் செய்யும் வசதி இல்லை.

காக்கிநாடாவின் கலாபரீஷத் என்கிற அமைப்பு ஆண்டுதோறும் நாட்டியப் போட்டி நடத்தி இளைய பாரதத்தை ஊக்குவித்தது. 1950. சாவித்ரிக்கு வயது 14. நாலாவது ஃபாரம் வாசித்த நேரம்.

சாவித்ரிக்கும் கலாபரீஷத் போட்டிகளில் பங்கேற்க ஓர் அழைப்பு.  'ஆத்ம வஞ்சனை' எனும் நாடகத்தில் ஒரு சிறிய வேடம். சுரையாவின் இந்தி சினிமா பாட்டைப் பாடியவாறே, இளமை கொப்பளிக்கத் துள்ளலாகத் தோன்றிய யவ்வன சுந்தரியைக் கண்டதும், அரங்கத்தில் ஆனந்த கும்மி! நாடோடிப் பெண்ணாக ரசிகர்களைக் கவர்ந்தவருக்கு அடுத்து வசனக் காட்சி. கூட்டம் ஆர்ப்பரித்தது. வசனம் சொல்ல முடியாமல் திக்கித் திணறி க்ரீன் ரூமுக்குள் ஓடினார்.

கலாபரீஷத்தின் கடைசி நாள். நிகழ்வின் சிறப்பு விருந்தினர் பிருத்வி ராஜ்கபூர். சுதந்தர இந்தியாவின் சினிமா சக்கரவர்த்தி. அன்று லலிதா-பத்மினியின் நடனம். திருவாங்கூர் சகோதரிகள் வந்து சேரவில்லை. எப்படியாவது ஒப்பேற்றியாக வேண்டும். பத்மினி அகப்படாத அவைக்கு சாவித்ரியின் அசைவுகள் அஸ்கா சர்க்கரை!

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை சாவித்ரி. முறையாகப் பயின்ற பரதம் தக்க சமயத்தில் கை கொடுத்தது. சுமார் இரண்டு மணி நேரம் வர்ணம், அலாரிப்பு, கீர்த்தனை, தில்லானா என ஒரு குறையும் இல்லாமல், தானே பதம்  பாடியவாறு ஆடி முடித்தார். பிருத்வி ராஜ்கபூருக்கு உச்சி குளிர்ந்துபோனது.

'இந்தப் பெண் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வரப்போகிறார். அதற்குத் தேவையான முகபாவங்கள் அருமையாக அமைந்திருக்கின்றன.' வஞ்சனையின்றி சாவித்ரியை வாழ்த்திவிட்டுச் சென்றார். முன் பிறவியில் அவர் மகரிஷியாக இருந்திருக்க வேண்டும். பூர்வ ஜென்ம வாசனை. பிருத்வியின் வாக்கு உடனடியாகப் பலித்தது. நாட்டிய விழாவுக்கு வந்திருந்தவர்களை  ஏவுகணையாகத்  தாக்கியது.

சாதனா ஃபிலிம்ஸ், தெலுங்கு சம்சாரம் படத்துக்கு இரண்டாவது நாயகியைத் தேடியவர்களின் கண்களில் சூரியப் பிரகாசம்.   புத்தம் புது மொட்டாக அரும்பத் துடித்த சாவித்ரியைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிடித்துப்போனது.

savithri.jpg


'மெட்ராசுக்கு வாம்மா. நடிக்க சான்ஸ் தருகிறோம' என வாயாரச் சொல்லிப் புறப்பட்டார்கள். அந்த நொடி முதல்  சினிமா ரயில் சென்ட்ரலை நோக்கி ஓடியது. 1950-ன்  மே மாதம் 17-ம் தேதி. மிக உக்கிரமான கத்திரி வெயிலில், சாவித்ரி சென்னையில் கால் பதித்தார். ஆந்திர வெயிலுக்குத் தமிழகத்தின் அக்னி நட்சத்திரம் இளைப்பாறுதல் அளித்தது.

'சம்சாரம்' தெலுங்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்தது. எல்.வி. பிரசாத், சாவித்ரியை ஏமாற்றப்  பிடிக்காமல் நிஜம் பேசினார்.

'இந்தப் பெண்ணுக்கு நடிப்பு சரியாக வரவில்லையே... இன்னும் பக்குவப்படவில்லை. டான்ஸ் ஆட வைக்கலாம். பெரிய ரோல் எதுவும் தர வேணாம்.'

அடுத்து ஜெமினி ஸ்டுடியோவில் இருந்தார் சாவித்ரி. அந்த அனுபவத்தை அங்கு பணியாற்றிய ஜெமினி கணேசன் பதிவு செய்துள்ளார்.

'நடுத்தர உயரம். சுறுசுறுப்பாகப் பேசும் கண்கள். மாநிறம். சுறுசுறுப்புக்கு சுறுசுறுப்பு தரும் அங்க அசைவுகள். பாடிக்கொண்டே அந்தப் பெண் நடனமாடிய நளினம், ஒரு கண்ணியம், கடமை உணர்ச்சி, தகப்பனாரிடம் கட்டுப்பாடு, கிளர்ச்சியோ அதிர்ச்சியோ இல்லாத நிர்மலமான முகம். ஒரு மரியாதை மிகுந்த புன்சிரிப்பு.

சாவித்ரியிடம் நடித்துக் காட்டச் சொன்னதும் சுறுசுறுப்பாக வசனம் பேசி நடித்துக் காட்டினாள். ‘அட நீ தெலுங்கு பெண்ணா?  தமிழ் நன்னாப் பேசறியே’ என்று கொத்தமங்கலம் சுப்பு பாராட்டினார். அவ்வளவுதான். அதன்பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும், 'ரொம்ப சின்னப் பொண்ணுப்பா! அடுத்தப் படத்துக்குப் போட்டுக்கொள்ளலாம' என்று சொல்லிவிட்டார்கள்.’

சாவித்ரியின் பன்னிரெண்டு வயது போட்டோவை ஜெமினி ஸ்டுடியோ ஆல்பத்தில் ஒட்டிவைத்தார் கணேசன். 'ரொம்ப சூட்டிகையான பெண். வருங்காலத்தில் பெரிய நடிகையாக வரும் அறிகுறிகள் தென்படுகின்றன' என்றது அவரது குறிப்பு. 

சாவித்ரியின் கனவு கோபுரங்கள் சட்டென்று சரிந்தன. அஞ்சலிபோல் ஆக முடியாதா  நாமும்... ஏக்கத்தின் ஊர்வலத்தில் பெரியப்பா துணைக்கு வர, ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கினார். சொல்லிவைத்தாற்போல் எல்லாரும் 'அடடா அறியாப் பருவமடா...!' என்றார்கள்.

சாவித்ரியைத் தேடி ஆறுதல் சொல்ல எல்.வி.பிரசாத் வீட்டுக்கே வந்தார். 'இங்கே பாரம்மா. உனக்கு இன்னும் வயதாகவில்லை. பதினாலு வயசில் பெரிய வாய்ப்புக்காக  ஏங்கி நீ ஏமாற்றம் அடையக்கூடாது. உனக்கு நடிப்புலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போது கிடைக்கும் ரோல்களை ஏற்றுக்கொண்டு உன் திறமையைக் காட்ட முயல வேண்டும'.

ப்ளீச் செய்த முகத்தில் கரியைப் பூசியதைப் போலாயிற்று சாவித்ரிக்கு. இரண்டு வாரங்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தார். எதற்கும் லாயக்கற்றுப் போய்விடுவோமோ என்கிற அச்சம்... கண்ணீராகப் பெருகியது. அவரது கருப்புத் தோலில் மெல்லிய மினுமினுப்பும் பளபளப்பும் நீக்கமற நிறைந்திருக்கும். சாவித்ரியின் மேனி அழகைக் கூட்டிக் காண்பிக்க இயற்கை தந்த சீதனம்!

அதேபோல் மனத்துக்குள்ளும் மற்றவர்கள் எளிதில் உணர இயலாத பிடிவாதமும், வைராக்கியமும் கோதாவரியாக நிரம்பி வழியும். சிரித்த முகத்துக்குப் பின்னால், சீறிப் பாயும் சினம் சிறைப்பட்டிருக்கும். சாவித்ரி ஒரு முடிவுக்கு வந்தவராக அழுகையை நிறுத்தினார்.

'என்னால் ஏன் நடிக்க முடியாது? இவர்களெல்லாம் பாராட்டும்படியாக நடித்துப் பேர் வாங்குகிறேன் பார்.' ஒரு சவாலை தனக்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்டார். அது நல்ல நேரமாக அமைந்தது. நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் 'பாதாள பைரவி'யில் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தது. அதில் என்.டி.ராமாராவ் அறிமுக நாயகன்.

'வர மாட்டேன்னா... வரமாட்டேன்' என்ற பாடலுக்கு சாவித்ரி அபிநயம் பிடித்தார். மார்க்கஸ் பார்ட்லேவின் கேமரா, கருப்பு திராட்சை சாவித்ரியின் எழிலைச் சாறு பிழிந்தது. 

எல்.வி. பிரசாத்துக்குப் பிறகு டைரக்டர் கே.வி. ரெட்டியும், நாகிரெட்டியிடம் சாவித்ரிக்கு சிபாரிசு செய்தார்.

'இந்தப் பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருக்கிறது. நடிக்கும் திறமையும் இருக்கும்போலத் தெரிகிறது. அடுத்த ப்ராஜெக்டிலும் சாவித்ரிக்கு சந்தர்ப்பம் தரலாம்.'

அவரது சொற்கள் சாசனமானது. அன்றிலிருந்து சாவித்ரியின் தாயகம் நாகிரெட்டியின் விஜயா நிறுவனம். ஒரே நேரத்தில் அங்குத் தமிழிலும் தெலுங்கிலும் தயாரான ஒரு டஜனுக்கும் அதிகமான சினிமாக்களில் சாவித்ரியே சாஸ்வதமான ஒரே நாயகி!

'கல்யாணம் பண்ணிப்பார்' விஜயாவின் அடுத்தத் தயாரிப்பு. சாவித்ரிக்கு அதில் சாந்தி என்கிற வில்லி வேடம். தமிழிலும் சொந்தக்குரலில் பேசி நடிக்க வேண்டும் என்றார்கள். அதுவரையில் கொச்சையாகத் தமிழ் பேசிய சாவித்ரி, முறையாக ஓர் ஆசிரியரை வைத்துத் தமிழ் கற்றார்.

என்.டி.ராமாராவ் - ஜி.வரலட்சுமி ஜோடியாக நடித்தனர். ஜி.வரலட்சுமியோடு சாவித்ரிக்கு விஜயவாடாவிலேயே நல்ல சிநேகிதம் உண்டு. அவருடன் நடிப்பது சௌகரியமாகத் தோன்றியது. அப்படியும் சாவித்ரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்கள் காபி கொடுக்கும் பையன்கள்.

வாகினி ஸ்டுடியோ. செட்டுக்கு வெளியே ஜி.வரலட்சுமியும், சாவித்ரியும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஹீரோயினுக்கு கப் அன்ட் சாசரிலும், சாவித்ரிக்கு சாதாரண கண்ணாடி கிளாசிலும் காபி வந்தது. அதைக் கண்டதும் ஜி.வரலட்சுமியிடம் கோபம் வெளிப்பட்டது.

'எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியா காபி கொடுத்தா என்ன? போ, போய் இன்னொரு கப் எடுத்துட்டு வா.'

'ஒரு கப்தான் இருந்தது மேடம்'

பையனின் பதிலில் வரலட்சுமிக்கு வெறுப்பு. பிரம்மாண்டத்துக்காகப் பணத்தை வாரி இறைக்கும் வற்றாத வாகினியில், கேவலம் காபி கப்புக்கு பஞ்சமா? சாவித்ரியை மட்டம் தட்ட யாரோ வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா என்கிற அலட்சியம். சாவித்ரி நம்பிக்கை நட்சத்திரம்.  உதாசீனங்களால் அவரை யாரும் உதறித் தள்ளிவிட முடியாது என்று சகலருக்கும் உணர்த்த வேண்டும்.

'சரி நீ போ. நாங்க ஒரே கப்ல குடிச்சிக்கிறோம். டம்ளர்ல இருக்குற காபியை நீ திரும்ப எடுத்துட்டுப் போ.'

சென்னைக்கு வந்த புதிதில் ஆயிரம் விளக்கு ஷாபி முகமது தெருவில் எட்டாம் எண் வீட்டில் குடியிருந்தார் சாவித்ரி.

'முதலில் இடத்தைக் காலி செய்யுங்கள். போயும் போயும் எட்டாம் நம்பரில் வந்து சேர்ந்தீர்களே. அது ராசியான இலக்கம் இல்லையே... வேறு எங்காவது போங்கள்' சவுத்ரியின் சிநேகிதர்கள் எச்சரித்தனர். எட்டு, சாவித்ரிக்கு அதிர்ஷ்ட எண். வெகு சீக்கிரத்தில் அது வெளிப்பட்டது.

 

Savitri-MovieManchuria-1.jpg

 


என்ன காரணத்தாலோ கடைசி நிமிடத்தில் சவுகார் ஜானகியை நீக்கிவிட்டு சாவித்ரியை ஒப்பந்தம் செய்தனர் வினோதா பிலிம்ஸ்காரர்கள். 

'வேதாந்தம் ராகவையா டைரக்ட் செய்கிறார். புகழ்பெற்ற சரத் சந்திர சட்டர்ஜியின் நாவல் தேவதாஸ். அதில் கதாநாயகியாக நடிக்க உங்களுக்குச் சம்மதமா?' - தேவதாஸ் படத்தைத் தயாரிக்கும் வினோதா யூனிட்  தேடி வந்தது.

1953 செப்டம்பர் 4-ல் 'தேவதாஸ்' வெளியானது. திரையில் சாவித்ரியைக் காணோம்! அதில் நீக்கமற நிறைந்திருந்தது பார்வதி!  க்ளைமாக்ஸில்  காதலன் தேவதாஸ் தன்  புகுந்த வீட்டின் வாசலில் செத்துக் கிடப்பதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியோடும் ஆவேசத்தோடும், அழுகையை அடக்க முடியாமல் ஓடோடி வந்து சடலத்தின் மீது விழுந்து, அவரும் உயிர் துறந்தபோது திரை அரங்கமே சிலிர்த்து எழுந்தது.

அதுவரையில் யாரிடமும் பார்த்திராத அதிசயமூட்டும் உணர்ச்சி பொங்கும் இயல்பான நடிப்பு! பதினேழு வயது இளம் பெண்ணின் எல்லை மீறிய பேராற்றலுக்குத்  தலை வணங்கியது தென்னகம். அஞ்சலியைத் தவிர்த்து  கோலிவுட் சட்டென்று சாவித்ரிக்கு மாறிவிட்டது. தேவதாஸ் விளம்பரங்களில் முதலில் லலிதா. அடுத்து சாவித்ரி அதன் பிறகே  ஏ.நாகேஸ்வர ராவின்  பெயர்கள் இடம்பெற்றன. தேவதாஸை விடுத்து ஏராளமான விருதுகள் பார்வதிக்கே கிடைத்தன.

'ஓ பார்வதி படிப்பு இதானா', 'உலகே மாயம், வாழ்வே மாயம்', 'கனவிதுதான்', 'துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே' உள்ளிட்ட இனிய பாடல்கள் சி.ஆர். சுப்புராமனின் இசையில் காலத்தை வென்று நிற்கின்றன. பகவானாக வந்து காமெடி செய்தவர் எம்.என். நம்பியார் என்றால்  இளைய தலைமுறை நம்புமா?

தேவதாஸ் தயாரிப்பில் இருக்கும்போதே நாராயணன் கம்பெனி தங்களது 'மனம்போல் மாங்கல்யத்தில்' சாவித்ரியை நடிக்க அழைத்தது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் நடிகையர் திலகத்தின் வாழ்க்கையில் புதுப் புது உதயங்களை உண்டாக்கியது.

1953 தீபாவளிக்கு 'மனம்போல் மாங்கல்யம'’ ரிலீசானது. அது சாவித்ரியின் தலை தீபாவளி எனச்  சொல்லுமளவு அடுக்கடுக்காக நீர்வீழ்ச்சி நிகழ்வுகள். அவை அடுத்த அத்தியாயத்தில்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி - 2. காதல் மந்திரவாதி!

 


 

ரா
யப்பேட்டை. நாராயணன் கம்பெனி. சாவித்ரி  மனம் போல் மாங்கல்யம் வசன ஒத்திகையில் தினமும் பங்கேற்றார். ஜெமினி ஸ்டுடியோ தயாரித்திருக்க வேண்டிய சினிமா அது. எஸ்.எஸ்.வாசனுக்கு சப்ஜெக்ட் பிடிக்கவில்லை. கதாசிரியர் கே.வி. சீனிவாசன். ஜெமினியில் வளர்ந்த கே.ஜே.மகாதேவனின் ஒன்று விட்ட தம்பி. சந்திரபாபுவும் அவரும் சிங்கிள் டீயை சேர்ந்து சுவைத்துப் பசி போக்கியவர்கள். தன் எழுத்து திரையில் ஒலிக்காத சோகத்தை, சீனிவாசன் ஜெமினி கணேசனிடம் சொல்லி வருந்தினார்.

வாசனின் படைப்புகளில்  போதிய வாய்ப்பு அமையாமல் ஜெமினியிலிருந்து வெளியேறியவர்  கணேசன். சீனிவாசனின் துயரம் புரிந்தது. நாராயணன் கம்பெனி கணேசனுக்கு அடைக்கலம் அளித்தது.அவர்களின் தாய் உள்ளம் படத்தில் வில்லனாக நடித்து நல்லதோர் அறிமுகம் பெற்றார். அடுத்து அங்கேயே ஹீரோவாக நடிக்கும் சான்ஸ் கிடைத்தது.

நாராயணன் கம்பெனியில் தனக்கு ஏற்பட்ட செல்வாக்கில் சீனிவாசனை  சிபாரிசு செய்தார் கணேசன்.  தோழரின் ஸ்கிரிப்ட்   உடனடியாக ஓகே ஆனது. (’பாக்யலட்சுமி’ புகழ் கே.வி. சீனிவாசன் பின்னாள்களில் மாடர்ன் தியேட்டர்ஸின் டைரக்டர் ஆனார்.)

ஒத்திகையின் ஐந்தாவது நாள். நடந்தவை ஏதும் அறியாத சாவித்ரி, ஜெமினி கணேசனை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. அங்கே ஜெமினி கணேசனின் அட்டகாசத்தைக் கண்டு அதிசயித்தார்.

’ஓர் இளம் ஹீரோவுக்கான அச்சத்தை, அடக்கத்தை அப்புறப்படுத்தி விட்டு, ஏதோ காலேஜ் ஸ்டூடன்ட் கணக்காக அமர்க்களப்படுத்துகிறாரே... ஓர் இடத்தில் நில்லாமல் துறுதுறுவென இங்கும் அங்கும் கன்றுக்குட்டியாட்டமாகத் துள்ளித் திரிகிறாரே...நாற்காலியில் உட்கார்ந்தாலும் நேராக அமராமல், அதைத் திருப்பிப் போட்டுக் குந்திக்கொள்கிறாரே... இவர் என்ன  மிஸ்டர் லூஸோ...  என்று வாய் விட்டு கேட்டே விட்டார்.

savv.jpg

 

 

வசனங்களை வாசித்துக் கொண்டிருந்த சாவித்ரியைப் பார்த்ததும் ஜெமினிக்கு ஜென்ம ஆச்சரியம்! ’அவளா இவள்! பன்னிரெண்டு வயது பாலகியாகப் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...!  திகைப்பின் வீரியம் விரிந்து நெஞ்சமெல்லாம் பூ வாசம் பரப்பியது. கொலைகாரன் பேட்டையில் குற்றால சாரல்! கொஞ்சும் சலங்கைக்கான  தேடல்!

 சாவித்ரியின் அழகான நிழலும் கணேசனை என்னென்னவோ செய்தது. கணேசன் தன்னுடைய மன்மத லீலையை மீண்டும் உயிர்ப்பித்து, வாலிப வில்லில் வசீகரக் கணை தொடுத்து நின்றார். குறும்பு கொப்பளிக்கும் விழிகளால் சாவித்ரியின் யவ்வன நரம்புகளில், மின்சார வீணை மீட்டி முழுதாக மூழ்கடித்தார்.

மோகத்தின் வெப்பத்தில் சாவித்ரிக்கும்  உள்ளக் குருதி சூடாகி வெளியே வியர்த்தது. காகிதங்களில் ஓடிய எழுத்து,சொல்,பேச்சு,சுற்றம், சூழல் எல்லாமும் மறந்து, முற்றும் துறந்து ஜெமினியையே நோக்கினார். நேச அனலின் நிலை கொள்ளாதத் தகிப்பு! இளமை அவிழ்ந்து விடுமோ என்கிற அச்சம். எதிரே நிற்பவன் காதல் மந்திரவாதி!

அதுவரை அறியாத சுகானுபவம்! ஒவ்வொரு நொடியிலும் இன்பப்பிரளயம்!

‘முதலில் அவரது எக்ஸ்ரே பார்வை என்னை ஊடுருவியது. நாள் பட நாள் பட நானும் என்னை அறியாமல் அவரிடம் மனத்தைப் பறி கொடுத்தேன்!’- சாவித்ரி.

பட்டப்பகலில் படப்பிடிப்புத் தளங்களில் அவர்களது காதல் காமிரா ஓடும் சப்தத்தில், ரிஃப்ளெக்டர்களின் கண் கூசச் செய்யும் கந்தர்வ வெளிச்சத்தில் ஜோராக வளர்ந்தது. பீச், பார்க், ஹோட்டல் என்றெல்லாம் சுற்ற அரிதாரத் தொழில் இடம் அளிக்கவில்லை. யாருக்கும் பாக்கு வெற்றிலை தராமல், அனைத்து நொடிகளிலும் அணைப்பில் ஒன்றாகிப் போனார்கள்.

அறிந்தும் அறியாமலும் சாவித்ரி ’மனம் போல்  மாங்கல்யத்தில்’ வாயசைத்துப் பாடிய பாடல் இப்படித் தொடங்கியது.

‘எல்லாருக்கும் வாய்க்குறது தாலி கட்டும் மாப்பிள்ள
 எனக்கு வந்த மாப்பிள்ளயோ ஜாலியான ஆம்பிள’

ஆனால் அதில் இடம் பெற்ற இன்னொரு டூயட் மிக விசேஷமானது. ஏ.எம்.ராஜா-பி.லீலாவின் அபூர்வ காம்பினேஷனில்  சூப்பர் ஹிட்டாகி எல்லாரையும் குஷிப்படுத்தியது.

மாப்பிள்ளை  டோய்  மாப்பிள்ளை  டோய்  மணியான  மதராசு  மாப்பிள்ளை  டோய்
மைலேடி டோய் மைலேடி டோய் மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்’

1953. நவம்பர் 5. தீபாவளி. முன் கூட்டியே பேசியபடி ஜெமினி ஆசை ஆசையாக நெய்து தந்த வெள்ளை நிறச் சேலையை உடுத்திக்கொண்டு திராவிட தேவதையாக ஒளி வீசினார் சாவித்ரி. காதல் மன்னனின் வரவுக்காக மாடியில் காத்து நின்றார். ’நல்ல நாளும் பொழுதுமா கட்டிக்க வெள்ளைப் புடைவைதானா கிடைச்சிது!’ என்றார் சவுத்ரி.  

மனம் போல் மாங்கல்யத்தின் வெற்றியைக் கொண்டாட, சலிக்காமல் சாவித்ரியின் வீட்டுக்குப் படை எடுத்தார் கோலிவுட் கஜினி முகமது! ஒரு முறை கூட  சாவித்ரியின் முக தரிசனம் கிட்டவில்லை. பெரியப்பா சவுத்ரியின் 144ஐ மீறி அவரைக் காண்பது துர்லபம் என்று புரிந்தது. பாழும் மனது கேட்கிறதா. அலை பாயுதே!

இரவின் மடியில் புது மாப்பிள்ளை கணேசனின் தாபங்கள் தொலைபேசி மூலம் தீர்ந்தன. அலெக்ஸாண்டர் கிரஹாம்பெலின் புகழ் நீடுழி வாழ்க

‘சாவித்ரி!  இப்படித்தான் நம்ம தலை தீபாவளி இருக்கணும்னு ஆண்டவன் எழுதி வெச்சுட்டான் போலிருக்கு. வெள்ளைப் புடைவையில் காலையில் நீ மாடியில் இருந்த போது ஷேக்ஸ்பியர் வர்ணித்த ஜூலியட் மாதிரியே இருந்தாய்!

அதில் வர்ற ரோமியோ எப்படி கீழே இருந்தானோ அப்படி நான் இருந்திட்டேன்.

’ம்...’

சாவித்ரி நீ தீர்க்க சுமங்கலியா இருக்கணும். இது என் தீபாவளி வாழ்த்து.’

எடுத்த எடுப்பில் இரட்டை வேடங்களில்  காமெடி ஹீரோவாக ஜொலி ஜொலித்த, ஜெமினியையும் சாவித்ரியையும் பல நூற்றாண்டு காலத்துக்குத் தமிழர்கள் இன்பக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டனர்.  

மாடர்ன் தியேட்டர்ஸ் சுகம் எங்கே அடுத்து சாவித்ரிக்கு கிரீடம் சூட்டியது. மு.கருணாநிதியின் வசனத்தை சாவித்ரி தெள்ளத் தெளிவாக தெலுங்கு வாடையின்றி பேசி,  தனி இடம் பெற்றார். அதனோடு போட்டி போட்டு உருவான கண்ணதாசனின் அம்மையப்பன் படு தோல்வி அடைந்தது. சுகம் எங்கேயின் ஹீரோ  கே.ஆர்.ராமசாமி-ஜிக்கி இருவரும் பாடிய ’கண்ணில் தோன்றும் காட்சி யாவும்’  வானொலி உங்கள் விருப்பத்தின் நான் ஸ்டாப் பாடல்களில் ஒன்று! 

சாவித்ரிக்கு மீண்டும் ஒரு லைஃப் டைம் கேரக்டர் மிஸ்ஸியம்மாவில் அமைந்தது. தேவதாஸின் பார்வதிக்கு  நேர் விரோதம் மிஸ் மேரி!  பி.பானுமதி நடிக்க வேண்டிய எமகாதக வேஷம்!  விஜயா நிறுவன சக்ரபாணிக்கும் அவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. சக்ரபாணி பானுமதியின் தங்கையாக நடிக்க வந்த சாவித்ரிக்கு அக்கா மிஸ் மேரியாக பிரமோஷன் அளித்தார்.

சாவித்ரி மிஸ்ஸியம்மாவாகத் தோன்றிய வைபவத்தைத்  தாம்பூலச் சுவையுடன் கூறியுள்ளார்.

‘முதலில் உள்ளூரக் கொஞ்சம் பயம். பெரிய நடிகை ஒருவரை ஏற்பாடு செய்த இடத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களே என்ற கலக்கம். டைரக்டர் எல்.வி. பிரசாத். ஆரம்ப நிலையிலிருந்து என்னை நல்ல முறையில் முன்னுக்குக் கொண்டு வர முயன்றவர். அவரது இயக்கத்தில் நடிப்பதில் ஒரு திருப்தி. கதாநாயகன் ஜெமினிகணேஷ். ஆக  இருபுறமும் நல்ல துணை இருந்தது.

பிரசாத்  நுட்பமாக நடிப்பைச் சொல்லிக்கொடுப்பார். மிக நன்றாக எடுக்கும் வரையில் விடமாட்டார். மிஸ்ஸியம்மாவில்  கிருத்தவப் பெண்ணாக நடித்தேன். அதற்கானப் பழக்க வழக்கங்களைக்  கற்றுக் கொண்டேன். அந்த விதத்தில் உதவியவர் காமிரா மேன் மார்க்கஸ் பார்ட்லே. அவருக்கு முன்னால் நின்று இரண்டு தோளிலும், மேலேயும் கீழேயும் சிலுவைக்குறி போட்டுக் காண்பித்து சரிதானா சார் என்று கேட்டுக்கொள்வேன்.

மிஸ்ஸியம்மாவில் நடிக்கும் போது  வெற்றிலைப் பாக்கு போடும் வழக்கம் ஏற்பட்டது. வெற்றிலை பாக்கு போட்டால் படப்பிடிப்பில் பல் தெரியும் போது கிளேர் அடிக்காது என்று சொல்லி டைரக்டர் என்னைப் போட வைத்தார். நாக்கு தடித்தது. சில சமயம் டயலாக் நிரடுகிற அளவுக்கு அது தொற்றி விட்டது.’

பெரியப்பாவின் கட்டுப்பாடுகளை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்கிற நிலை. ஏ.டி.எம்’மாக சாவித்ரியை எண்ணிய சவுத்ரியின் சாரம் சரிந்தது. ஓர் அர்த்த ராத்திரி. ஆக்ரோஷமாக மழை பொழிந்த ஜெய வருஷ கார்த்திகை. கணேசனே தனக்கு சகலமும்  என்கிற உறுதியோடு, அவரது வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் சாவித்ரி.    

பேச்சு சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்தவர்  முதல் மனைவி பாப்ஜி! அவருக்கும் ஜெமினிக்கும்  1940 ஜூன் 30ல் கல்யாணமாகி இருந்தது. அப்போது சாவித்ரிக்கு நாலு வயது இருக்கலாம். ஜெமினி -சாவித்ரி இருவருக்கும் அதிகமில்லை ஜென்டில்மென் 16 வருட இடைவெளி.

1955. ஜெமினி-சாவித்ரியின் பொற்காலம் தொடங்கியது. தைத் திருநாளில் வெளியான மிஸ்ஸியம்மா தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிச்சித்திரம். மிக இயல்பான நடிப்பும், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் உள்ளிட்ட இனிய பாடல்களும், கருப்பு வெள்ளையில் கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவும், சாரங்கபாணியின் மெல்லிய நகைச்சுவையும்...

எல்லாவற்றுக்கும் மேலாக சாவித்ரியின் மழலை ரகக் கோபங்களும், சிடுசிடுப்பும், அப்பாவித்தனமான முகபாவங்களும் எழுதாத கவிதைகள்! அவர் உருக்கமாகப் பாடி நடித்த, ’என்னை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா’ பாடல் மதங்களைக் கடந்து உலகத் தமிழர்களின் வழிபாட்டுத் தோத்திரமானது.   

காதலையும் தும்மலையும் மூடி வைக்க முடியாது என்கிறார் திருவள்ளுவர். எத்தன் ஜெமினி கணேசனுக்கு அதுவும் சாத்தியம். மூன்று வருடங்கள் சாவித்ரியுடனான பிரேம பாசத்தைப் புதையலாகப் பொதுமக்கள் அறியாமல் காக்க முடிந்தது.

1956ல் வாசகர்கள் சினிமா பத்திரிகைகளில் கேள்வி கேட்டனர்.

ஜெமினி-சாவித்ரி காதல் திருமணமாமே... நிஜமா?

அந்தப் பரவச நொடிகளின் பனித் தூறலை சாவித்ரியின் ஐஸ்க்ரீம் வார்த்தைகளில் பார்க்கலாம்.

‘மனம் போல் மாங்கல்யம் படத்தையொட்டி எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவருடைய தோற்றம், பழகும் சுபாவம், கலகலப்பான சிரிப்பு எல்லாமே என்னை அவர் பால் மிகுந்த ஈடுபாடு கொள்ளச் செய்தன. எங்கள் திருமணமும் முடிந்தது. நாங்கள் தம்பதிகளானோம். அவர் நான் உனக்கு அடிமை என்றார். அவரிடம் உங்களுக்கு நான் அடிமை என்றேன். என் கல்யாணத்துக்கு அடையாளமாக அவர் என் கையில் மோதிரத்தைப் போட்டார். அவர் கைகளில் என்னையே ஒப்படைத்தேன். அவர் போட்ட மோதிரம் உட்படத்தான்.

ஆனால்  அவரை மணந்து கொண்டது வெகு நாள்களுக்கு ரகசியமாகவே இருந்தது. லக்ஸ் சோப் விளம்பரம் ஒன்றில்  என் கையெழுத்தை முதன் முறையாக சாவித்ரி கணேஷ் என்று போட்டேன். அதுவே  ரசிகர்களுக்கு எங்கள் திருமணம் முடிந்து விட்டதை நான் குறிப்பாக உணர்த்திய முறை.

missiamma1.jpg

 

 

திரையில் எங்கள் இருவரையும் புகழ் மிகுந்த காதல் ஜோடிகளாகப் பார்த்து மகிழ்ந்த, லட்சக் கணக்கான ரசிகர்களுக்கு அது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

எனக்கு நிறையப் படங்கள் வரத்தொடங்கின. காலை 7 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி,  இரண்டு மணியிலிருந்து இரவு 9 மணி இப்படி எங்கள் இருவருக்கும் தினந்தோறும் ஷூட்டிங் இருக்கும். ஸ்டுடியோவில் போய் மேக் அப் போட்டுக்கொள்ளக் கூட நேரம் இருக்காது. அதனை வீட்டிலேயே செய்த பின்னர்  செட்டுக்கு செல்வேன்.

 நான் என்னுடைய வேலையை முடித்துக் கொண்டு அவர் இருக்கும் இடத்துக்குப் போவேன். அங்கிருந்து இருவரும் ஒன்றாகவே வீட்டுக்குக் கிளம்புவோம். சில நாள்களுக்கு இரவு ஷூட்டிங் கூட இருந்தது. உடம்பு அடித்துப் போட்டது போல சோர்ந்து போகும். ஒரு பிரபல நடிகையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.

1956 செப்டம்பர் 9ஆம் தேதி அபிராமபுரத்தில், 400 ரூபாய் வாடகையில்  தனிக்குடித்தனம் வந்தோம். அந்த இரவுதான் நாங்கள் இருவரும் முதன் முறையாக ஓடியன் தியேட்டரில் (இப்ப மெலடி) இங்கிலீஷ் ஃபிலிம் பார்க்கப் போனோம். படத்தைப் பார்க்கவா தோன்றும்!’

மாடர்ன் தியேட்டர்ஸின் ’மகேஸ்வரி’ சாவித்ரிக்காகவே தயாரித்தப் படைப்போ என்கிற பிரமையை ஏற்படுத்தியது. அதில் ஸ்ரீதர், சாவித்ரிக்காக உருவாக்கிய வேடம் திருடர்களின் தலைவி ராணி ரங்கம்மாள்! திரையில் பூலான் தேவியாகவும் சாவித்ரி மக்களின் மனங்களைக் கொள்ளையடித்தார்.

‘வாளெடுத்து வீசுவாள் மானம் காக்க!  ஏழை மக்கள் பக்கம் பேசுவாள் துன்பம் தீர்க்க!’

என்ற மகேஸ்வரி படப் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் தடம் பதித்தார் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.

1956 நவம்பர் 22.  தொடர் வண்டியில் வந்தவர்கள், அரியலூர் பாலம் உடைந்து விழுந்ததில் 152 பேர் பலியானார்கள். 120 பேர் படு காயமடைந்தார்கள். அன்றைய ரயில்வே மந்திரி லால்பகதூர் சாஸ்திரி உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவெங்கும் பரபரப்பை உண்டாக்கிய  சம்பவம்!

அது சுடச்சுட ’மாதர் குல மாணிக்கம்’ திரைக் கதையின் கருவாக அமைந்தது. அஞ்சலியின் ரசிகை சாவித்ரி! அஞ்சலியோடு இணைந்து நடித்த படம். ஜெமினி நடித்திருந்தும், சாவித்ரியின் நாயகன் நாகேஸ்வரராவ் என்பது மாறுதல். தயாரிக்கப்பட்ட அத்தனை மொழிகளிலும் பெரிய வசூலைக் குவித்தது.

ராஜாராணி - கத்தி சண்டையா, குடும்பச் சித்திரமா, புராண இதிகாசமா, தேவன் படைத்த ’கோமதியின் காதலன்’ போன்ற காமெடியா  எல்லாவற்றிலும் சாவித்ரி ஆல்ரவுண்டர் என நிருபித்துக் காட்டினார்.

அன்றைய ஆந்திரத்தின் சில பகுதிகளும் கொஞ்சம் மலையாள மண்ணும் கூடி, அகலவிரிந்து ஒன்றாகி பரந்து நின்ற மதராஸ் மாகாணத்தில், நவரஸ நடிப்பில் சாவித்ரியை மிஞ்ச ஆளில்லை என்றானது. அவரது ஒவ்வொரு அசைவையும் மீடியா உற்று நோக்கியது.

விளைவு 1957  சாவித்ரியின்  ஆண்டானது. வெளியான 30 தமிழ்ப் படங்களில் மூன்றில் ஒரு பங்கு சாவித்ரி நடித்தவை. தமிழ் சினிமா சரித்திரத்தில் அதுவரை யாராலும் எண்ணிப்பார்க்க முடியாத அரிய சாதனை. அவற்றில் எங்கள் வீட்டு மகாலட்சுமி, மாயாபஜார், வணங்காமுடி, கற்புக்கரசி, யார் பையன், மகாதேவி  எனப் பலவும் சாவித்ரியின் அருமையைச் சொல்லும்  திரை சாசனங்கள். அவை ஒவ்வொன்றின் பின்னாலும் குவிந்து கிடக்கும் சுவாரஸ்யங்கள் நிறைய!

‘சாவித்ரி மகாலட்சுமின்னா மகாலட்சுமிதான். என்ன பொறுமை,  என்ன பெருந்தன்மை, என்ன சாந்தம், என்ன கண்டிப்பு... மருமகள்னா அப்படி இருக்கணும் என ஒவ்வொரு மாமியாரையும் பேச வைத்தது நடிகையர் திலகத்தின் பெர்ஃபாமன்ஸ்!

1957ன் மிகச் சிறந்த குடும்பச் சித்திரமாக கொண்டாடப்பட்டது எங்கள் வீட்டு மகாலட்சுமி. ஏ.நாகேஸ்வரராவின் சொந்தத் தயாரிப்பு. சாவித்ரியின் நடிப்பு இதில் பாட்டிக்குலங்களின் மனத்தில் பசுமையாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இரட்டை வேடத்தில் யார் முதலில் நடிப்பது என போட்டி போட்ட  காலம். அவர்களுக்கு முன்னோடியாக சாவித்ரி ஒரே படத்தில் அநாயாசமாக மூன்று வேடங்களில் வலம் வந்தார்.

வணங்காமுடியில் சாவித்ரி த்ரீ !  ஒரிஜினலாக இளவரசி. சிற்பி சிவாஜியின் காதலி. சிவாஜியுடைய அம்மா கண்ணாம்பாவைக் கவர்தற்காக மிக சாதாரண குடும்ப யுவதியாகவும் தோன்றுவார்.  கூடுதலாக இன்னொரு சாவித்ரி குறத்தியாக நடித்து திரையைக்  கலக்கினார்.

1957 தமிழ்ப் புத்தாண்டில் வெளியானது மாயாபஜார். போகோ, சுட்டி டிவி போன்ற கார்ட்டூன் சேனல்கள் அறியாத  அக்காலத்து, ஜெயலலிதா உள்ளிட்டக் குழந்தைகளுக்கு, விஜயா புரொடக்ஷன்ஸ் மாயாபஜார் அரிய பொக்கிஷம்!  பிடித்தமான படங்களில் மாயாபஜாருக்கு தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

‘நன்றாக இருக்கிறது என்று எது உங்களை உணர வைக்கிறதோ, அதுவே பொழுது போக்கு. மாயாபஜார் நான் சிறு குழந்தையாக இருந்தது முதல் இப்போது வரை கிட்டத்தட்ட 100 தடவைகளுக்கு மேல் பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இப்போது தான், முதல் முறை பார்ப்பது போல் மனம் விட்டுச் சிரிக்கிறேன்.’- ஜெயலலிதா. 

யார் பையன்?  இன்றைக்கும் பார்க்கப் பார்க்க சஸ்பென்சும் ஹாஸ்யமும் நிறைந்த  மிக வித்தியாசமான சித்திரம். டெய்சி ராணி என்கிற வடக்கத்திய குழந்தை நட்சத்திரம் யார் பையன்? மூலம் தமிழிலும் சக்கை போடு போட்டது.

02cp_mahadevi_jpg_1285123f.jpg

 

 

தீபாவளி ரிலிசான மகாதேவியில் எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் முதன் முதலாக இணைந்து நடித்தனர். நிறைய எதிர்பார்ப்புகள். முதலிரவு காட்சியில் எம்.ஜி.ஆரிடம் சாவித்ரி பாடிய பாடல்.

‘சேவை செய்வதே ஆனந்தம் பதி சேவை செய்வதே ஆனந்தம்’ என ஆரம்பித்தது.

எம்.எஸ்.ராஜேஸ்வரி, சாவித்ரிக்காகப் பாடியிருந்தது விசேஷமானது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குப் பரமத் திருப்தி! தங்கள் வாத்தியாரை சாவித்ரியும் போற்றி விட்ட சந்தோஷத்தின் நிறைவு.

வருஷமெல்லாம் வசந்தம் சாவித்ரிக்கு. ஆனந்த விகடன்  சாவித்ரியின் நடிப்பைப் புகழ்வதை பார்ட் டைம் வொர்க் ஆக வைத்துக் கொண்டது. 

மாயாபஜார்- சாவித்ரி வத்சலா பாகத்தை நல்லா சமாளிச்சிருக்குது. வெடுக் வெடுக்குன்னு பேசுது. க்ளுக் க்ளுக்குன்னு சிரிக்குது. அமர்க்களம் பண்ணுது... அதுவும் மாய வத்சலாவாக வரும் போது அசல் ரவுடிப் பொண்ணுதான்.

வணங்காமுடி- ‘சாவித்ரி நடிப்பும், துடிப்பும், பேச்சும், சிரிப்பும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போயிடுச்சி. எப்படி ஆடியிருக்கிறா!’

கற்புக்கரசி- ’ஜெமினி சாவித்ரி இருவரையும் சேர்ந்தாப்போல கண்டாலே ஆனந்தம்! மூணு மணி நேரமும்  ஒரே குஷிதான்!’.

‘யார் பையன் ? - ‘மிஸ்ஸியம்மாவுக்கு  அப்புறம் இந்தப் படத்தில் தான்  ஜெமினி-சாவித்ரிக்கு தகுந்த ரோல் கிடைச்சிருக்கு. கணேசன் ரொம்ப நேச்சுரலா செய்திருக்காரு...சாவித்ரி ஏழு வயது பையனுக்குத் தாலாட்டுப் பாடறதும் சிரிப்பு சிரிப்பா வருது.’

மக்களின் கவனம் பெற்ற வெற்றிச் சித்திரங்களில் மட்டுமல்ல. அதே வருடத்தில் வெளிவந்து யாரும் அதிகம் கேள்விப்படாத,  தோல்விப் படங்களிலும் சாவித்ரியின் நடிப்பு  பத்திரிகைகளால் மெச்சப்பட்டது.

1957ன்  வெற்றித்திருமகள் நடிகையர்திலகம்! தன் சாதனை அனுபவங்களை இனிமையாகப் பரிமாறிய  நட்சத்திர பந்தி இது:

எப்போதும் கதையைக் கேட்டு அதில் வருகிற கேரக்டர் பிடித்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன். பொதுவாக  அமைதியான  குடும்பப் பெண்ணாகவே நடித்திருக்கிறேன். துவக்கத்தில் செல்லப்பிள்ளை போன்ற ஓரிரு படங்களில் மாத்திரம் வில்லியாக வந்திருக்கிறேன்.

நான் மன நிறைவுடன் நடித்த படம் எங்கள் வீட்டு மகாலட்சுமி.  இப்போது வரும் சினிமாக்களில் காதல் சீன்களில் கட்டிப்பிடித்து உருள்கிறார்கள். குறைந்த உடையுடன் மிக நெருக்கமாக நடித்தால் ஜனங்கள் விரும்புவதாகவும் நினைக்கிறார்கள்.  எங்கள் வீட்டு மகாலட்சுமி ஒரு வெற்றிப்படம்! அதில் நானும் நாகேஸ்வரராவும்  காதல் சீனில் நடித்திருக்கிறோம். ஆனால் ஒருவரை ஒருவர் தொட்டது கூட இல்லை.

இன்னொரு விதமான வினோத ரோலிலும் நடித்தேன். அது மாயாபஜாரில் எனக்குக் கிடைத்த மாய வத்சலாவின் பாகம். கடோத்கஜனாக ரங்காராவ் நடித்தார். மகா பாரத கதையில் கடோத்கஜனே மாறி பெண் உருவில் மாய வத்சலாவாக வருகிறான். இந்த வேடத்தையும்  ஏற்று நடிக்க வேண்டி வந்தது. 

உடை, நகைகள்,மேக் அப் எல்லாவற்றிலும் பெண் உருவின் கவர்ச்சியும் இருக்க வேண்டும். ஆனால், நடிப்பில் ஆண் என்பது தெரியுமாறு நடிக்க வேண்டும். மாய வத்சலா உருவத்தில் நிமிர்ந்த நடையும், கம்பீரப் பார்வையுமாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நடித்தேன். அதற்கு  ஒரு தனி முத்திரையே கிடைத்தது. தமிழிலும் தெலுங்கிலும் மாயாபஜார் அமோக வெற்றி பெற்றது.

தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய கல்யாண சமையல்சாதம்  என்ற பாட்டு ரொம்ப பாபுலர். அநேகமாக எல்லா கல்யாண வீடுகளிலும் இந்த இசைத்தட்டைப் போட்டு விடுவார்கள்! அங்கே போகும் போது எனக்கு எல்லாரையும் பார்க்கவே வெட்கமாக இருக்கும்!

வணங்காமுடியில்  குறத்தி வேஷம். அது எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த நாளில்  கோடம்பாக்கத்தில் மேம்பாலம் கிடையாது.  அதனால் லெவல் கிராசிங்கில் கார் காத்து நிற்க வேண்டியது இருக்கும். அப்போது ஜனங்கள் ஆவலோடு வந்து கவனிப்பார்கள். வணங்காமுடி வெற்றிகரமாக ஓடிய போது, எனக்கென்று ஸ்பெஷலாக ஒரு ரசிகர் கூட்டம் சேர்ந்து நிற்கும். அவர்களெல்லாம் நரிக்குறவர்கள்!

எம்.ஜி.ஆருடன் நான் நடித்த முதல் படம் மகாதேவி. தமிழில் சிருங்காரம், வீரம் இரண்டிலும் ஒரு பெரிய தோற்றத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.இந்தப் புதுமையே அவரது படங்களைச் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்க்கச் செய்தது. மகாதேவி வெற்றிகரமாக ஓடியது. படம் ரிலீஸ் ஆன அன்று சொல்ல முடியாத கூட்டம்!’

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி- 3. அம்மாடி! தாயே! நீ ஆபத் பாந்தவி!

 


 

ந்தியாவிலேயே அப்படியொரு காம்பினேஷன் முதலும் கடைசியுமாக தமிழ் சினிமாவில் அபூர்வமாக அமைந்தது. அது சிவாஜி - ஜெமினி - சாவித்ரியின் வெற்றிகரமான கூட்டணி! 1956ல் ’பெண்ணின் பெருமை’ படத்தில்  தொடங்கிப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நீடித்தது.

திறமையான நட்சத்திரங்களின் ஆழ்ந்த அன்பையும், சிநேக பந்தத்தையும் ஏ.பீம்சிங்  செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டார். மூவரையும் வைத்து அவர் இயக்கத்தில் வெளியான ‘பா’ வரிசைப் படங்கள் காலப் பெட்டகங்கள்!

வேறு எவரிடமும் அகப்படாத அரிய குணம் ஜெமினி - சாவித்ரி ஜோடிக்கு உண்டு. சினிமா போஸ்டர், டைட்டில், சம்பளம், அதிகக் காட்சிகள், டூயட், தனிப்பாடல் எல்லாவற்றிலும் அவ்விருவரும் சிவாஜிக்காக விட்டுக் கொடுத்தார்கள். அவையே  ‘பா’ வரிசைச்  சித்திரங்கள் குறுகிய காலத்தில் தயாராகி, அநேகத் தலைமுறைகளைக் கடந்து  நிலைப்பெற்று நிற்கக் காரணம். 

டைட்டில் விஷயத்தில் சாவித்ரியை வருத்தப்பட வைத்த விவகாரத்தை முதலில் வாசிக்கலாம்.

mahanati-savitri-photos-4.jpg

 

 

‘பாசமலரில் பிரபல நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடித்தோம். அதன் வெற்றியைத் தொடர்ந்து மல்டி ஸ்டாரர் சினிமாக்களுக்கு ஒரு மவுசு ஏற்பட்டது. பார்த்தால் பசி தீரும் அப்படி உருவானது. அதில் எனக்கு குருட்டுப் பெண் வேஷம். மலை ஜாதிப் பெண்ணானதால் மொழி தெரியாது. ஜெமினி எனக்கு அ’ னா, ஆவன்னா என்று பாடம் கற்றுக் கொடுப்பார். அதுவே ஒரு பாட்டாகிப் பிரபலம் ஆயிற்று!

இதில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டது. பார்த்தால் பசி தீரும் படத்தில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், நான், சரோஜா தேவி எல்லாருமே நடித்திருந்தோம். அன்று நாங்கள் எல்லாருமே முன்னணி நட்சத்திரங்கள். டைட்டிலிலும் விளம்பரங்களிலும் யார் பெயரை முதலில் போடுவது...?  இந்தச் சிக்கலுக்கு ஒரு வினோதமான தீர்வும் காணப்பட்டது.

‘நான் தான் சரோஜாதேவியை விட சீனியர். ஆனால் அவர் அடுத்த இடத்தில் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ள, ஏதாவது மறுப்புச் சொல்லி இருப்பார் போலிருக்கிறது. பெயர்களை எப்படி வரிசைப்படுத்துவது என்பது பற்றிக் குழப்பம் கூடியது.

என்னுடைய பெயரைத் தொடர்ந்து சரோஜாதேவியின் பெயர், அப்புறம் சவுகார் ஜானகி அப்படி இருந்திருந்தால் சரியாக அமைந்திருக்கும். ஆனால் சிக்கல் அவ்வளவு சுலபமாகத் தீரவில்லை.

‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’ யில் கண்ணாம்பாவின் பெயரையே முதலில் காண்பித்தார்கள். அப்போதும் நான் முன்னணி நடிகை. ஆனாலும் என் பெயரை அடுத்தபடியாகப் போட ஒப்புக்கொண்டேன்.’

தயாரிப்பாளர்கள் கடைசியில் டைட்டிலில்,

‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று போட்டு  எல்லாருடைய படத்தையும் ஒன்றாகக் காட்டி விட்டார்கள். ஆகவே அனைவருக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டுமே அப்படிக் காட்டினார்களாம். வெளியூர்களில் சரோஜாதேவியின் பெயர் டாப்பில் இருந்ததாகக் கேள்வி.

எந்தப் படத்திலும் நடிப்பே முக்கியம். இந்தப் பெயர் போட்டுக் கொள்வது, நீ முந்தி... நான் முந்தி... என்று சண்டை போடுவது எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டேன்.’ 

ஏறக்குறையப் பத்துப் படங்களில் மூவரும் இணைந்து நடித்தனர். அவை அத்தனையும் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடம் பிடித்தவை. சமூகம், வரலாறு, புராணம் என ஒன்றுக்கொன்று மாறுபட்டவை.

sivaji_gemini.jpg

 

 

ஜெமினி குறித்த சிவாஜியின் கருத்து இது:

‘ஜெமினி பெரிய பலசாலி! பயங்கரமான துணிச்சல்காரன். பயப்படவே மாட்டான் ஜெமினி மாப்ளே மனசுல ஒண்ணு வெச்சுக்கிட்டு  மாத்திப் பேசத் தெரியாது. எதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டான்.’

சிவாஜியுடனான அறிமுகம் குறித்தும், அது  கெட்டித்தயிர் போல் தோழமையில் தோய்ந்தது பற்றியும் ஜெமினி நிறையச் சொல்லியிருக்கிறார்.

‘நானும் சிவாஜியும் பெண்ணின் பெருமையில் முதன் முதலாகச் சேர்ந்து நடித்தோம். புத்தி சுவாதீனமில்லாத மூத்த சகோதரன் வேடமும்,  அவனைத் துன்புறுத்தும் தம்பியின் வில்லன் பாத்திரமும் இருந்தன.  அதில் உங்களுக்கு எந்த ரோல் வேண்டுமோ  அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்றார் சிவாஜி.

சாவித்ரிக்கு மிகச் சிறந்த கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காகவே, நான் அவளது கணவனாய்  சிவாஜியோடு பல படங்களில் நடிக்க வேண்டியதாயிற்று. பதிபக்தி, பாசமலர், பந்தபாசம் இன்னமும் ஞாபகத்தில் இருக்கு.

ரேவதி (தற்போது விஜயா) ஸ்டுடியோவில் பெண்ணின் பெருமை  படப்பிடிப்பு. அங்கு ஏராளமாக தென்னை மரங்கள் இருக்கும். சிவாஜி குறி பார்த்துச் சுடுவதில் வல்லவரான வேட்டைக்காரர் ஆயிற்றே... லன்ச் பிரேக்கில்  தன் கைத்துப்பாக்கியால் இளநீர் கொத்தைச் சுடுவார். அது கீழே விழும். ஆளுக்கொன்றாக அடுத்த விநாடியே அந்தக் கொத்து காலியாகி விடும்.

பராசக்தியில் நடிப்பதற்கு முன்னால் கணேசன் ஜெமினிக்கு வேஷம் கேட்டு வந்தார். நடிகர் தேர்வு இலாகாவில் நான் இருந்தேன். அவரைப் பற்றி அப்போதே என் குறிப்புப் புத்தகத்தில்

‘களையான முகம். தீர்க்கமாக பேசும் கண்கள். எதிர்காலத்தில் சிறந்த நடிகராக வர முடியும்’ என்று எழுதினேன்.  நாங்கள் இணைந்து நடித்தபோது இந்தப் பழைய கதையெல்லாம் நினைவூட்டிக் கொண்டோம்.

’என்ன கணேசு! ஜெமினியிலே என்னை அளவெடுத்தியே ஞாபகம் இருக்கா? ஹூம் யார் நினைச்சிருப்பாங்க...! நீயும் நானும் இப்படி சேர்ந்து நடிப்போம்னு...?’  என்றார் சிவாஜி.

கட்டபொம்மனில் வெள்ளைய தேவன் வேடம் எஸ்.எஸ்.ஆர். நடிப்பதாக இருந்தது. பின்பு அவர் நடிக்கவில்லை. என்னைத் தேடி வந்தார்கள்.

‘என்னால் நடிக்க முடியவில்லை என எஸ்.எஸ்.ஆரிடமிருந்து, கடிதம் எழுதி வாங்கி வாருங்கள்’ என்றேன் பந்தலுவிடம். அவரும் அவ்வாறே செய்தார். அப்படியும் எனக்கு நடிக்க மனமில்லாமல், ‘சாவித்ரிக்குத் தலைப்பிரசவம்! அவளுக்கு யாரும் துணை கிடையாது’ என மறுத்தேன். ஜெய்ப்பூரிலிருந்து சிவாஜி, சாவித்ரிக்கு டிரங்கால் பண்ணினார். 

‘அம்மாடி! தாயே! மகமாயி உன்னைக் காப்பாத்துவா. உனக்கு ஒரு கஷ்டமும் வராது.  நீ அவரை அனுப்பிச்சி வைம்மா.  ஊர்ல இருக்குற பெரிய டாக்டர்களையெல்லாம் உன்னை கவனிக்கச் சொல்றேன். என் தாயாரை அனுப்பி வெச்சு, உனக்குப் பிரசவம் பார்க்கச் சொல்றேன்.’ என்று ரொம்பவும் கேட்டுக் கொண்டார்.

‘இந்த மாதிரி நேரத்தில் போனால் மாத்திரமே உதவின்னு பேரு.  எனக்குக் கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டார்.’ என்று என்னை அனுப்பி வைத்தாள் சாவித்ரி. நல்ல வேளை நாங்கள் வந்த மறுநாள் விஜயா பிறந்தாள். ‘மகமாயி காப்பாத்திட்டா’ என்றார் சிவாஜி. ‘எனக்கு ஒரு புது வடிவம் கொடுத்தது வீரபாண்டிய கட்டபொம்மனில் வெள்ளையத் தேவன் ரோல்.

சிவாஜி அழகாய் வசனம் பேசுவார். கட்டபொம்மன்ல அவர் எப்படி  நடிச்சாரோ  அப்படித்தான் நடிக்கணும். அதை அடக்கி அன்டர் ப்ளே பண்ணா நல்லா இருக்குமா...?  என்னை மாப்பிள்ளை என்று சிவாஜி எப்போதும் கூப்பிடுவார். நான் அவரை கணேசா என்பேன். குடும்பத்தோடு பழகுவதற்கு மிக நல்ல நண்பர்.’

கட்டபொம்மனில் மட்டுமா? அதே நேரத்தில் உருவான  டி.ஆர். ராமண்ணாவின் ’காத்தவராயன்’  படத்தில் முதல் நாள் டி.எஸ். பாலையாவுடன் நடித்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றார். மந்திர தந்திரக் காட்சிகளில் நடிக்கத் தனது  இயக்கமான தி.மு.க அனுமதிக்காது என விலகி விட்டார். டி.ஆர். ராமண்ணாவுக்கு சிவாஜியும், சாவித்ரியும் ஓடோடி வந்து ஆதரவு அளித்தனர். 1958 தீபாவளிக்கு வெளியான காத்தவராயன் மிகப் பெரிய வசூல் சித்திரம்!  அதில் டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ‘வா  கலாப மயிலே...’ மறக்க முடியாத காதல் கீதங்களில் முக்கியமானது.

நடிகர் திலகத்துடன் நடித்த முதல் அனுபவம் குறித்து சாவித்ரி கூறியவை:

pasamalar.jpg

 

 

‘பெம்புடு கொடுகு தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் அண்ணனுடன் நடித்தேன். அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை.அண்ணியாகத் தோன்றினேன். அமரதீபத்தில் கதாநாயாகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிவாஜியுடன் நடிப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உள்ளூற ஒரு பயமும் இருந்தது.

நீளமான வசனத்தை  உணர்ச்சியுடன்  பொழிந்து தள்ளுவதில்,  சிவாஜிக்கு நிகர் யாரும் இல்லை என்ற பேச்சு இருந்தது. அவருக்கு இணையாக பேசி நடிக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை. சிவாஜி நான் பேசும் வசனத்தைக் கூர்ந்து கவனிப்பார். தப்பு ஏதாவது இருந்தால் திருத்திச் சொல்லிக் கொடுப்பார். அமர தீபம் பெரிய வெற்றி அடைந்தது! நானும் சிவாஜியும் தொடர்ந்து சேர்ந்து நடிக்க நல்ல ஆரம்பமாக அமைந்தது.

டைரக்டர் பீம்சிங் எடுத்த பதிபக்தி 1957 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தப் படம் ஒரு மல்டி ஸ்டார்  காம்பினேஷன் என்பது மாத்திரம் இல்லை. அதை கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தவரே ஒரு பெரிய ஸ்டார். அவர் பத்மினி!  மல்லிகாவில் நடித்துக்கொண்டிருந்தவர் அதே மேக் அப்புடன் வந்து நியூடோன் ஸ்டுடியோவில் பதிபக்தியை ஆரம்பித்துத் தந்தார்.’

சாவித்ரியுடனான சிவாஜியின் நட்பு திரையைத்  தாண்டியும் வலுப்பெற்றது. நேரம் கிடைக்கும்போது சாவித்ரியின் வீட்டுக்குச் சென்று,  விரும்பிய அசைவ உணவுகளை அவரைச் சமைக்கச் சொல்லி விருந்துண்டு வருவது சிவாஜியின் ருசி! ரசனை! மகிழ்ச்சி!.

அதே போல் ஜெமினி- சாவித்ரி இருவரும் கணேசனின் அன்னை இல்லத்துக்கு போய், தீபாவளி முதலான விசேஷ நாள்களில், அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு வருவதும் வழக்கம். சிவாஜி- சாவித்ரி இடையே நல்ல புரிதலும், சிறந்த நட்பும் தொடர்ந்தது.

’குறவஞ்சி’ முதலில் எஸ்.எஸ்.ஆரும் பண்டரிபாயும் ஜோடியாக நடிக்க வேகமாகத் தயாரானது. கலைஞருக்கும் ராஜேந்திரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் முடங்கிவிட்டது. கருணாநிதி  சிவாஜியிடம் சென்றார். அவரது ‘மேகலா பிக்சர்ஸில்’ சாவித்ரியை குறவஞ்சியாக நடிக்கச் சொல்லிக்  கேட்டார்கள்.

கலைஞரின் வசனத்தை, சுகம் எங்கே படத்தில் ஏற்கனவே பேசி நடித்ததும், வணங்காமுடியின் முன் அனுபவமும் சாவித்ரிக்கு உண்டு. அதனால் சாவித்ரி சட்டென்று, சிவாஜியின் இன்ஸ்டன்ட் நாயகியாகி உதவினார்.

மு.கருணாநிதியின் எழுச்சிமிக்க வசனங்களைப் பேசுவதில் முதலிடம் பெற்ற கணேசனோடு நேரடியாக மோதிப் பார்க்கும் அரிய சந்தர்ப்பம். அரிமாவின் குகையிலேயே சிந்தித்தும்  சீறியும் பேசி நடித்ததில் சாவித்ரியின் புகழ் எப்போதும் போல் அதிகரித்தது.

சிவாஜியை மேடைகளில்  தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கிப் பேசிய நேரம். குறவஞ்சியில்  நடிக்கவே கூடாது என்றெல்லாம், ரத்தக் கையெழுத்திட்டுக் கடிதங்கள் எழுதினார்கள் சிவாஜி ரசிகர்கள். ’பராசக்தி’ கணேசன் பெருந்தன்மையாகத் தன் தோழருக்குத் தோள் கொடுத்துத் துன்பத்திலிருந்து தூக்கி நிறுத்தினார். குறவஞ்சி முழுமையாகி வெளி வந்தது. கலைஞர் பெருத்த நஷ்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.

Parthal+Pasi+Theerum+1962+Tamil+Movie+Mp

 

 

கட்டபொம்மனில் மட்டுமல்ல. கப்பலோட்டிய தமிழனிலும் பந்தலுவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதற்குக் காரணம் சரோ. ஜெமினிக்கு ஜோடியாக ஆடிப் பாட  ஏற்கனவே ஒப்புதல் தந்தவர், தேவர் கூடுதலாக பணக்கட்டுகளைக் காட்டியதும், ’தாய் சொல்லைத் தட்டாதே’யில் நடிக்க ஓடினார். பாவம் பந்தலு! தத்தளித்துப் போய் விட்டார். அப்போதும் அவருக்குக்  கை கொடுத்த தெய்வம் சாவித்ரி ஒருவரே!

பிசியான கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து, ம.பொ.சி.யின் கற்பனை பாத்திரமான, மாடசாமியின் கண்ணம்மாவாக சாவித்ரி, கப்பலோட்டிய தமிழனில் கவனம் ஈர்த்தார்.

சிவாஜியும் சாவித்ரியும்  ‘அமர தீபம்’ தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு டஜன்  படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவற்றில் திருவிளையாடல் உள்ளிட்ட வெள்ளி விழா சித்திரங்களும், நவராத்திரி போன்ற நூறு நாள் படங்களும் நிறைய. வடிவுக்கு வளைகாப்பு, பிராப்தம் ஆகியன மாத்திரமே வசூலில் படுதோல்வி அடைந்தன. காரணம் நீண்ட காலத் தயாரிப்பு.

நடிகர் திலகம் - நடிகையர் திலகம் இருவரின் இணையற்ற நடிப்பில் எவையும் அன்னையின் ஆணைக்கு ஈடாகாது. அன்னையின் ஆணை  தமிழ்த் திரை வரலாற்றில் முதல் பழி வாங்கும் ஆக்‌ஷன் சினிமா! மாறுபட்ட  ‘எதிர்பாராதது’ வெற்றிச் சித்திரத்தை இயக்கிய சி.ஹெச். நாராயணமூர்த்தியின் புதுமைப் படைப்பு! வசனம் முரசொலி மாறன். சிவாஜி கணேசனின் பிரபலமான சாம்ராட் அசோகன் நாடகம் இதில் இடம் பெற்றது.

படம் முழுவதிலும் மிக நாகரிகமாக, நளினமாக ஆங்கில ஸ்டைலில் காட்சியளிக்கும் சிவாஜி- சாவித்ரி இருவருக்கும் அபாரமான நடிப்புப் போட்டி! அதைக் குறித்து சிவாஜி தன் சுயசரிதையில் எழுதும் அளவு முக்கியத்துவம் பெற்றது அன்னையின் ஆணை.

அப்பா சிவாஜியைக் கொன்ற எஸ்.வி. ரங்காராவை, தன் வீட்டிலேயே இளைய சிவாஜி சிறை வைத்துப் பழிக்குப் பழி வாங்குவதே கதை.  நிஜம் தெரிந்து சாவித்ரி பதறி, கணவர் சிவாஜியிடம் அப்பாவை விடுதலை செய்யச் சொல்லிக் கேட்பார்.  தன்னை மறந்து நடிப்பதில் சாவித்ரி தன்னிகரற்றவர். அதற்கானப் படப்பிடிப்பில் நடந்த விபரீதம் இதோ:

‘அது ஓர் அருமையான காட்சி. என்னோடு சாவித்ரி நடிக்கிறார்கள்.  சாவித்ரி உணர்ச்சிவசப்பட்டு, என்னுடைய சட்டையைப் பிடித்து உலுக்குவது போல் காட்சி. சாவித்ரிக்குள் ஏதோ பூதம் உள்ளே போய் விட்டது போலும். என் சட்டையைப் பிடித்து கிழித்து,  நெஞ்சையெல்லாம் பிராண்டி, மார்பில் ரத்தமாக வழிகிறது.அதன் பிறகு அவர் கையைப் பிடித்து நிறுத்திவிட்டு, நான் சென்று தண்ணீர் எடுத்துக் கழுவினேன். பிறகு என் டவலை நனைத்துப் பிழிந்து, அந்த அம்மாவை அடிப்பது போல் நடித்தேன். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார்கள்.’ ---- சிவாஜி கணேசன்.

pasamalar2.jpeg

 

 

சாவித்ரி என்று வாயைத் திறந்தாலே ஜனங்களின் மனத்தில் முதலில் மலர்வது பாசமலர்.  பாசமலர் பற்றி ஏதும் சொல்லாமல், சாவித்ரியின் சரித்திரத்தை எழுதுவதா என்ற உங்களின் பதற்றமும் பரிதவிப்பும் எனக்குப் புரிகிறது. பாசமலரை அத்தனைச் சாதாரணமாக எழுதி விட முடியாது. காரணம் சினிமா விளம்பரங்களில்  ‘கங்காரு’ காலம் வரையில் அண்ணன் தங்கை பாசத்துக்கு ஒரே உதாரணச் சித்திரம் பாசமலர் மாத்திரமே.  தமிழ் சினிமாவின் தலை சிறந்த ஐந்து தரமான படங்களில்  எப்போதும் முதலிடம் பெறுவது பாசமலர்.

ஆயிற்று. 2015 மே 27ல்  பாசமலருக்கு 55 வயது பூர்த்தியாகி, 56வது வயது பிறக்கிறது.(1961-2015) அடுத்த வாரம் அதைக் கொண்டாடுவோமே!

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி- 4. பாசமலர்

 

 

 

‘கை 

வீசம்மா கை வீசு’ என்று பிஞ்சுகளிடம் கொஞ்சத் தொடங்கினால், நம் ஒவ்வொருவரின்  மனத்திலும் ’பாசமலர்’ பூத்துக் குலுங்கி மணம் வீசும். எத்தனை யுகங்கள் கடந்தாலும் திரை இசைத் தாலாட்டுப் பாடல்களில் ‘மலர்ந்தும் மலராத’  தேன் மழையாகப் பொழியும். ’பாசமலர்’ கண்ணதாசன் சூட்டிய காவியப் பெயர்!

சிவாஜி கணேசனின் சிநேகிதர்கள் எம்.ஆர். சந்தானம்( பிரபல நடிகரும், டைரக்டருமான சந்தான பாரதியின் அப்பா) மற்றும் சென்னை பிரபாத் டாக்கீஸ் உரிமையாளரின் மகன், சினிமா விளம்பர பேனர்கள் தயாரித்த    ’மோகன் ஆர்ட்ஸ்’  மோகன்  ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பு பாசமலர். சிவாஜி கணேசனின் தாயார் பெயரில் ’ராஜாமணி பிக்சர்ஸ்’ என்கிற அவர்களது புதிய நிறுவனம் பாசமலருக்காகவே உருவானது.     

கதை - மலையாள எழுத்தாளர் கே.பி. கொட்டாரக்கரா. இயக்கம் -  ஏ. பீம்சிங். இசை -  விஸ்வநாதன் - ராமமூர்த்தி. பாடல்கள் - கண்ணதாசன். வசனம் - ஆரூர் தாஸ் என வெவ்வேறு மண்ணின் மைந்தர்களின் மகத்தானப் பங்களிப்பு. அவர்களில் பீம்சிங்கின் பூர்வீகம் சுவாரஸ்யமானது. கட்டுப்பாடுகள் நிறைந்த அக்காலத்தில்  ஜாதி மத இன வேலிகளைக் கடந்த, பரிசுத்த இதயங்களின் தன்னலமற்ற இமாலய அன்பின்  எதிரொலி அவர்.

ராஜ புத்திர வம்சத்தைச் சேர்ந்த அகர்சிங்கின் மகன் பீம்சிங். அவரது தாயார் ஆந்திரத்தைச் சேர்ந்த ஆதியம்மாள். மனைவி சோனாபாய். மாமனார் தஞ்சாவூரின் ராகவாச்சாரி என்கிறத் தமிழ் அய்யங்கார். மாமியார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பீம்சிங்கின் மைத்துனரும்  சோனாபாயின் அண்ணனுமாகிய ’கிருஷ்ணன்’, (பஞ்சு) பராசக்தியில் நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்தியவர். கிருஷ்ணன் -பஞ்சு இரட்டையர்களிடம் உதவியாளராக இருந்தவர் பீம்சிங். தனது வழிகாட்டிகளையும் கடந்து வாகை சூடினார்.

பீம்சிங்-கிருஷ்ணன் இருவரின் குடும்பத்தில் நடந்த மாமன் மச்சான் உறவுச் சிக்கல்கள், சந்தானம் மற்றும் மோகன் ஆகியோரின் வீடுகளில் நடைபெற்ற பாசப் போராட்டங்கள் ஆகியன கலந்து, அண்ணன்-தங்கை நேசத்தைச் சொல்லும் திரைக்கதை தயார் ஆனது.

திட்டமிட்டு தரமான ஒரு வெற்றிச் சித்திரத்துக்கானப் பிள்ளையார் சுழி புனிதமான கிறிஸ்துமஸ் தினத்தில் போடப்பட்டது.1960 டிசம்பர் 25. நெப்டியூன் ஸ்டுடியோ. ’மெக்ரெனட்’ ஊழியர்கள் உருவாக்கிய சாக்லெட் கேக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளோடு ’பாசமலர்’  என வெண்ணிற க்ரீமீல் எழுதப்பட்டு இருந்தது.கேக்கின் முதல் துண்டை  ஆரூர்தாஸூக்கு ஊட்டினார் சிவாஜி. எல்லாரும் கை தட்டினார்கள். ஜெமினி- சாவித்ரியின் கரவொலி அனைவரையும் மிஞ்சியது.

 

hqdefaultmm.jpg  

 

ஜெமினி - சாவித்ரி நடித்த சவுபாக்யவதி படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ். அவரது இலக்கிய நயமிக்க  உரையாடலுக்கு, ஒளிமயமானதோர் எதிர்காலத்தை ஏற்படுத்த விரும்பியது  ஜெமினி - சாவித்ரி ஜோடி.

1957ல் சவுபாக்யவதி டைட்டிலில்  நடிகைகள் பட்டியலில் முதலில் இடம் பெற்றது. எடுத்த எடுப்பில் சாவித்ரியின்  பெயர். பிறகே ஜெமினி உள்பட மற்றவர்கள். ஜெமினியை விடவும் உச்ச நட்சத்திர அந்தஸ்து சாவித்ரிக்கு.

கதை சொல்ல வரும் ஏழை எழுத்தாளர்களின் கற்பனைகளைக் களவாடி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு, மற்ற மொழிகளுக்கு விற்று அதிலும் கொழுத்த லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அரும்பாத காலம்.

பீம்சிங்கின் படங்களில் பெரும்பாலும் உரிமை பெறப்பட்ட வங்காள, மராத்திய, மலையாளத்தின் உள்ளம் உருக்கும் கதைகளோ, அல்லது சோலைமலை, பிலஹரி, போன்றத் தமிழர்களின் படைப்புகளோ இடம் பெறும். திரைக்கதைக்காக வலம்புரி சோமநாதன், இறைமுடிமணி, ராம அரங்கண்ணல் உள்ளிட்டக் குழு தனியே செயல்படும். வசனம் எழுதவும்  கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றத் தன்னிகரற்றவர்கள் வாய்த்தார்கள்.‘குடும்பக் கதைகளுக்கு ஆருர்தாஸ் சிறப்பாக வசனம் எழுதுவார். அவரையே பாசமலருக்கு எழுதச் சொன்னால் நன்றாக இருக்கும்.’

சாவித்ரி  ஆரூர்தாஸூக்காக சிபாரிசு செய்தார். பீம்சிங் நினைத்தால் ஆரூர்தாஸின் வாழ்வு மலரும் என மனமார நம்பினார்.

‘ஹீரோ ஒப்புக் கொண்டால் தனக்கு ஆட்சேபணை கிடையாது.’ என்றார்  பீம்சிங். சிவாஜி கணேசனின் வாயிலிருந்து உதிரும் சொற்களில் சிறைப்பட்டிருந்தது சினிமா உலகம். நடிகர் திலகத்தின் கடைக்கண் பார்வைக்காக மாபெரும் ஸ்டுடியோ அதிபர்கள் தவம் கிடந்தார்கள். அவர்களுக்கு முன் ஆரூர் தாஸ் எம்மாத்திரம்?

ஓர் அந்தண நடிகரும் நாயுடு நடிகையும் கலந்து நடத்திய நட்சத்திர இல்லறத்தில், மாதாவை வழிபடும் ஆரூர்தாஸ் என்கிற கத்தோலிக்க கிருத்துவ இளைஞர்,  சாவித்ரியை அன்போடு  சுந்தரத் தெலுங்கில் வதினா என்று அழைக்கும் கொழுந்தன். ஏ. பீம்சிங்கின் பரம்பரைக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல ஜெமினி- சாவித்ரியின் மன ஆகாயம்.

சொந்த அண்ணிகள் தங்களை அண்டி நிற்கும் மைத்துனருக்கு சோறு போடாத நமது சமூகத்தில், கலை சமுத்திரத்தில் அகப்பட்ட ஆரூர்தாஸுக்காக ஜெமினியிடம் மன்றாடினார் சாவித்ரி.

 

17FR-AROORDAS_GOQ4A_933057g.jpg  

 

‘பாசமலர் டயலாக் விஷயமா, சிவாஜி அண்ணா கிட்டப் பேசினீங்களா... என்ன சொல்றார்?’

’புதுப் பையன்னு சொல்றே. பார்க்கலாம்னு இழுக்கறான். அதோட இவன் வேறே அவன் கிட்ட வர மாட்டேங்கிறான்.’  ஆரூராருக்கும் சிவாஜியின் சிறப்புகள் தெரிந்திருந்தது.

எளிய திரைப் படைப்பாளிகளின் சுயமரியாதை, தன்மானத்தை அவமதிக்கும் அலட்சிய போக்கு, குறும்பு, கேலி, கிண்டல், எகத்தாளம், ஏளனம், நக்கல்,நையாண்டி, பரிகாசம் அனைத்துக்கும் அதிபதி சிவாஜி.  உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் உற்சாகத்தில் தன்னை உதாசீனப்படுத்தி விட்டால்...  சொர்க்க வாசலாக தேவர் பிலிம்ஸ் துணை இருக்கும் போது, சிங்கத்திடம் வலியப் போய் சிக்குவானேன்.

ஆரூர்தாஸ் தயங்கினால் சாவித்ரி விட்டுவிடுவாரா...!  பிடிவாதம் நடிகையர் திலகத்தின் உடன்பிறப்பு ஆயிற்றே!

‘சிவாஜி ஒண்ணும் சொல்ல மாட்டாரு. அதுக்குப் பார்த்தா எப்படி முன்னேற முடியும்? நீங்க பேசாம இவரோட போங்க. எங்கள்ட்ட கூட கால்ஷீட்டெல்லாம் வாங்கிட்டாங்க. அப்புறம் வேற ரைட்டரை ஃபிக்ஸ் செஞ்சுட்டாங்கன்னா எங்க முயற்சி வீணாப் போயிடும்.’

‘கணேஷ் ஏற்கனவே நாம லேட்டு. இப்பவே நீங்க அவரை சிவாஜி கிட்டே கூட்டிட்டுப் போறீங்க. அவருக்குப் பாசமலர்ல வாய்ப்பு வாங்கிக் கொடுத்துட்டு வந்தாத்தான் நமக்கு லன்ச். நீங்க நல்ல செய்தியோடு வரவரைக்கும் நான் சாப்பிடாம உட்காந்திருப்பேன்... புரிஞ்சுதா.’

 உள்ளன்போடு பிறருக்கு உபகாரம் செய்வதில் சாவித்ரி ஓர் எம்.ஜி.ஆர். அவரது ஆளுமையின் வேகம் ஆரூர் தாஸூக்கு அழியாப் புகழைத் தேடித் தந்தது. பாசமலரின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது ஆரூர் தாஸின் எழுத்து என்றால் யாரும் கோபிக்க மாட்டார்கள். பாசமலரில்  நடித்ததற்காக மட்டுமல்ல, ஏழை எழுத்தாளனின் திறமை வெளிப்பட உதவியதற்காகவும் சாவித்ரி பாராட்டப்பட வேண்டியவர்.

அண்ணன்-தங்கையின் அன்புக் கதைகள் பூமி பிறந்த போதே தோன்றியவை. இராவணன் - சூர்ப்பனகையின் கண் மூடித்தனமான ராட்சஸ பாசம் இராமாயணத்துக்கு விதையாக விளங்கியது.

ஏற்கனவே  ஏவி எம்முக்காக ’சகோதரி’ என்ற படத்தை இயக்கியவர் பீம்சிங். பாசமலரை  பீம்சிங் எடுத்துக் கையாண்ட விதம் அலாதி. சகலருக்கும் சாவித்ரியின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புத நடிப்பால் கிடைத்தப் பரவசம் பாசமலர்! இத்தனைக்கும் சாவித்ரிக்கு உடன் பிறந்த அண்ணன் தம்பி என்று எவரும் கிடையாது.

‘என்னோடு கூடப் பிறந்தவர்கள் என் அக்கா மட்டும்தான். அம்மா அப்படியில்லை.  எட்டு பேருக்கு இடையே பிறந்தவள். அந்த மாதிரி பெரிய குடும்பத்தில் பிறக்கவில்லையே  என்று நான் சில சமயம் ஏங்குவது உண்டு.

ஒரு அண்ணனுக்காக சில சமயம் ஆசைப்பட்டிருக்கிறேன்.  ஆனால் நினைத்துப் பார்க்கும் போது அப்படியில்லாததும் நன்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சுற்றமும் நட்பும் உதவியாக  இருந்தால் நல்லது. இல்லாவிட்டால்...?’ - சாவித்ரி. 

1961. மே 27ல் தமிழக மக்கள் நாட்டியப் பேரொளி பத்மினியின் திருமணத்தில் மனம் லயித்திருந்தனர். அன்று பாசமலர் ரிலீஸூம் கூட. திரை ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளிகளின் வாண வேடிக்கை. இன்ப வெளிச்சம்!

பாசமலர் விளம்பரங்கள் ஏற்கனவே ஜனங்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் கூடுதலாக்கியிருந்தது.

‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை’

இது சஞ்சிகைகளில் வெளியான முதல் விளம்பரம்! சினிமா வெளிவந்து ஐம்பது நாள்களைக் கடந்த பின்னும் தினசரிகளில் மட்டும் அல்லாமல் வார இதழ்களிலும் விளம்பரங்கள் தொடர்ந்தன.

‘படம் என்கிறார் சிலர் பாடம் என்கிறார் பலர்!  பாசத் தேன் குடம் இது எனப் பல்லோரின் வாழ்த்துடன்’

சாவித்ரி ஜெமினியைக் காதலித்து மணந்தவர். இருவருக்கும் இரண்டரை வயதில் விஜி என்கிற மகள் இருக்கிறாள் என்பதெல்லாம் தென்னக மக்களுக்கு அத்துப்படி. இருந்த போதும் பாசமலரில் ஜெமினி கணேசன், ‘சாவித்ரியிடம் நான் உன்னைக் காதலிக்கிறேன்...’ என்று தன் மன மோகத்தை நயம் பட இதமாகச் சொல்லும்போது-

கள்ளங்கபடமற்ற முகத்தில் கண்களை அகல விரித்து கறந்த பாலாக, ‘அப்படின்னா..!’ என்று ஆச்சரியப்பட்டு, அப்பட்டமான அப்பாவித்தனத்தை மிக இயற்கையாக, சூல் அறியா இளம் மொட்டாக, பார்வையைப் படர விடுவாரே ... அவர் தான் நடிகையர் திலகம்!

 பாசமலருக்கு முன்னும் பின்னும் அது வேறு எவருக்கு சாத்தியம்? இன்றைக்கு அமலாபாலும், அஞ்சலியும், லட்சுமி மேனனும், நயன்தாராவும், த்ரிஷாவும், வாயில் பெயர் நுழையாத இந்தி இறக்குமதிகளும் அதே வசனத்தைப் பேசினால் அரங்கமே கைகொட்டிச் சிரிக்காதா...?

கணவர் ஆனந்தன், பணக்கார அண்ணன் ராஜசேகரனிடம் சம்சாரத் தகராறில் சிக்கி அடிபடும் போது,

‘இது எங்கள் குடும்ப விஷயம். நீங்கள் யார் தலையிட?’ என்று பொங்கி எழும் சாவித்ரி, தங்கை ராதாவுக்காக அண்ணன் சொந்த மாளிகையை விட்டு வெளியேறும் போது, வேலைக்காரன் முதற்கொண்டு அவர் பின்னால் செல்வதைக் கண்டு, பதறியவாறு ‘அய்யோ சங்கரா... எல்லாரும் என்னை விட்டுட்டுப் போறீங்களே என அலறுவாரே...’ அங்கே சாவித்ரியை யாரும் பார்க்கவில்லை. ராதாவைத்தான் கண்டார்கள்.

 

hqdefault.jpg  

 

பாசமலர் க்ளைமாக்ஸ். கருப்பு வண்ணச் சேலையில் கவலை ரேகைகள் வழியும் சோகம் விழுங்கிய முகத்தில், அரிதாரப் பூச்சு அதிகமின்றி சாவித்ரி செட்டுக்குள் வந்தார். ஏதோ இழவு வீட்டுக்குள் நுழைவது மாதிரியான தோற்றம். குறும்பு கொப்பளிக்க உலா வரும் ஜெமினியும் சும்மா எட்டிப் பார்த்து விட்டு ஓடிப் போனார்.

இறப்பதற்குத் தயாராக சிவாஜி தனது கடைசி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். நடிப்புக்காகப் பெற்ற ஆசிய விருதைக் கடந்து, உலகக்  கலைஞனாகும் கனவுகள்  அவருக்குள் கனல் விரித்து எரிமலையை ஏற்படுத்தின. வடலூரில் வள்ளலார் தீ மூட்டிய அனையாத அடுப்பு எரிவது போல், எப்போதும் அனல் காற்று  வீசிக்கொண்டிருந்தது அவர் உள்ளத்தில்.

சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப்  பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித்  தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?

ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின்  காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள். 

‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா?’

உணர்ச்சி வசப்பட்ட உச்சக்கட்ட நடிப்பில் சாவித்ரிக்கு வைரி என்கிற அவ்வளவு அறிமுகமில்லாத வார்த்தை ஞாபகமில்லை. விரோதி என மாற்றிச் சொல்லி விட்டார்.

’வைரி, விரோதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பின்னே என்னா அம்மாடி. பீம்பாய்  பர்பாமன்ஸ் ஓகேயா?’ உயிர் உருகும் நேரத்திலும் ராஜசேகரன் மெல்லிய வறட்சியான குரலில் ராதாவுக்காகப் பரிந்து பேசினார்.   

சாவித்ரி ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லே இந்தத் தடவை சரியா சொல்றேன்.  அது நல்ல டயலாக். ஒன்மோர் டேக் ப்ளீஸ்’ எனக் கெஞ்சும் குரலில் வற்புறுத்த,

வைரி மிகச் சரியாக ஒலித்தது. ஆனால் முந்தைய டேக்கில் பொங்கிய அணை மீறிய  உணர்ச்சி வெள்ளம் காணாமல் போய் விட்டது. ‘முதல் ஷாட்டையே வெச்சுக்கலாம் அம்மாடி’ என ஆறுதலாக சிவாஜி சொல்ல, சாவித்ரி கூனிக் குறுகிப்போய்,  தன் இரு கைகளாலும் முகம் பொத்தி நிஜமாகவே அழுதார்.

‘திரைப்பட வசனகர்த்தாவாக- எனது நீண்ட நெடிய அனுபவத்தில் - எத்தனையோ படங்களுக்கு எழுதி, எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடித்ததில், வசனத்தில் ஒரே ஒரு வார்த்தை தன்னை அறியாமல் மாறிப் போனதற்காக வருந்திக் கண்ணீர் விட்டு அழுத ஒரே ஒரு நடிகை சாவித்ரி மட்டுமே.’- ஆரூர்தாஸ்.

பாசமலராக இருந்தாலும் படையப்பாவாக இருந்தாலும் சவமாக நடிப்பதிலும் சிவாஜி சிகரம். அண்ணனை மரணத்திலும் துரத்திய சாவித்ரியும் பிணமாகவே கிடந்தார்.  இம்மி அளவும் கண்களை இமைக்காமல், இறந்து பின்னும் நடிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இரு திலகங்களும். பன்னீரின் நறுமணம் வீசும் பீம்பாயின் கைக்குட்டைகள் கண்ணீரில்குளித்தன  நாள் முழுவதும்.

32 வாரங்களைக் கடந்து ஓடியது பாசமலர். 1961 கோடையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம்  2015ல் இன்னமும் மங்காமல் சின்னத் திரைகளிலும் வியாபித்து நிற்கிறது. வருடம் தவறாமல் அனைத்து சேனல்களிலும் நூறு தடவைகளாவது சலிக்காமல் வாசம் பரப்புகிறது!

இனி சாவித்ரியின் அனுபவத்தை அறிந்து கொள்வோம். அவை கலைப் பெட்டகத்தின் அரிதாரச் சுவடுகள்.

‘பாசமலரில் எனக்கு  முழுக்க முழுக்க மென்மையான உணர்ச்சிகள் கொண்ட ஒரு சகோதரியின் பாத்திரம். அதே போலவே சிவாஜிக்கும்.

அதில் நடித்த போது புது சிக்கல் ஒன்று ஏற்பட்டது. க்ளைமாக்ஸில் நான் மெலிந்து நலிந்து உருக்குலைந்து போவதாக வருகிறது. அதை  இயற்கையாகவே நடித்து முடிக்கத் தீர்மானித்தேன்.பாசமலருக்காக ஒரு மாதம் சாப்பாட்டை மிகக் குறைந்த அளவுடன் நிறுத்தினேன்.

ஜப்பானிலிருந்து இதற்காக ஒரு ஸ்பெஷல் பவுடர்  வரவழைக்கப்பட்டது. அதைக் கொஞ்சம் சாப்பிட்டால் போதும். பசி குறைந்து போகும். ஆனால் சோறு தின்பது போல் ஆகுமா? மதிய உணவு வேளையில் எனக்காகப்  பால் பிளாஸ்கில் வரும். மற்றவர்களுக்கு ருசியான ஐயிட்டங்கள் சுடச்சுட வரும்.கேமராமேன் விட்டல், உதவி டைரக்டர் மகாலிங்கம் எல்லாரும் பக்கத்திலேயே உட்கார்ந்து சப்பு கொட்டிக்  கொண்டு சாப்பிடுவார்கள்.

‘அய்யோ பாவம் சாவித்ரி! இப்படிப் பட்டினி கிடக்கும்படி ஆயிற்றே... என்று வருத்தப்படுவது போல் நடித்து என்னை வம்புக்கு இழுப்பார்கள். நான் துளிக்கூட மசிய மாட்டேன். 

எனக்கென்னவோ அந்த ராதா கேரக்டரில் அப்படியொரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. அதிலேயே ஒன்றிப் போனேன்.  படம் முடியும் வரையில் அதை என் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே எண்ணிக்கொண்டேன். அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் எத்தனையோ வெள்ளிவிழாப் படங்களில்  நடித்திருக்கிறேன். ஆனால் அவை பாசமலரைப் போல் என்னைக் கவர்ந்தது இல்லை.

அண்ணன் சிவாஜி கணேசனின் மேக் அப்பும் இதில் ஸ்பெஷலாக இருந்தது. மீசை, தாடி, கோட் இவைகளுடன் அவர் குலைந்து போய் வரும் கடைசிக் காட்சியில் யாரும் மனம் நெகிழாமல் இருக்க முடியாது. படத்தின் இறுதிக் காட்சியை எப்படி எடுத்து முடிக்கப் போகிறோம் என்று எல்லாரும் ஒரு சஸ்பென்ஸூடன் காத்துக் கொண்டிருந்தோம்.

அந்த நாளும் வந்தது...

பாசமலர் கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ்  கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!  

அதனுடைய சோக முடிவு என்னை உலுக்கி விட்டது. அது ரீலீஸ் ஆன போது நான் சென்னையில் இல்லை. காஷ்மீரில் இருந்தேன். தேனிலவு ஷூட்டிங்கிற்காக ஜெமினியுடன் நானும் சென்றேன். மே 11ஆம் தேதியே நாங்கள் போய் விட்டோம். பாசமலர்  அபாரமான வெற்றி அடைந்திருப்பதாக எனக்குத் தயாரிப்பாளர் தந்தி கொடுத்திருந்தார்.

மலர்கள் மணம் வீசிய பிறகு வாடி மறைந்து விடுவது வாடிக்கை. பாசமலர் அப்படியல்ல. நாள் ஆக ஆக அதற்கு வாசம் அதிகம். உங்கள் உள்ளங்களில் நான் என்றென்றும் ஒரு பாசமலராகவே இருந்து மனம் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே என் ஆசை.’- சாவித்ரி.

‘அண்ணனுக்கு ஏற்ற தங்கை. சிவாஜிக்கு ஏற்ற சாவித்ரி.’ ‘’ராதா’ பாகத்தைச் சொந்த பாணியிலேயே முழுக்க முழுக்கக் கையாண்டிருப்பது திருமதி கணேஷிற்கு ஒரு சிறப்பு.

‘உங்கள் காலில் என் அண்ணா விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், உங்கள் காதல் எனக்குத் தேவை இல்லை...’ என்று உதறும் இடத்தில், தியாகத்தின்  கம்பீரமும் தோல்வியின் சோகமும்  நம் உள்ளத்தை அள்ளுவதில் வியப்பென்ன...!’ என சாவித்ரியின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியது குமுதம்.

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

பாசமலரில் ஜெமினியின் வளர்ப்புத் தாயாக ஒரு அம்மா நடித்திருப்பார், அபாரம்...!

சிவாஜி ஒரு பென்சிலைச் சீவிக்கொண்டு ஜெமினியிடம் " ஆனந் நீயும் உனது கூட்டமும் பக்டரியை இழுத்து மூடினாலும்,  ஒரு அகல்விளக்கின் சிறு ஒளியில் ஒரு ஜீவன் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்துகொண்டு இருக்கும் அதுதான் தொழிலாளி ராஜு " என்று பேசும் வசனம் அன்று  எமது பஞ்ச் டயலாக்....! tw_blush:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சாவித்ரி- 5. சிவாஜியுடன் ஜோடியாக நடிக்காதே..!

 

 


பாசமலரின் தாக்கம் தமிழ் சமுதாயத்தில் வேரோடி நின்றது. ராஜசேகரன் போன்ற அண்ணனுக்காக  தங்கைகளும், ராதா மாதிரியான சகோதரிக்காக அண்ணன்களும் கோடிக்கணக்கில் ஏங்கினர். பாசமலரின் புகழும், வெற்றியும், வசூலும், ஓட்டமும் தமிழ்த் திரையில் சீனப் பெருஞ்சுவராக நிலை பெற்று விட்டது.

 

 

pasalamalr.jpg  

 

‘தேன் நிலவு’அவுட்டோர் முடிந்து, ஜெமினியும் சாவித்ரியும் சென்னை திரும்பினர்.

மறுநாள் காலை. தி.நகர். ஹபிபுல்லா சாலை. சாவித்ரியின் பங்களா வாசலில் விஐபிகளின் கார்கள் அணி வகுத்தன. அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் விநியோகஸ்தர்கள், பட முதலாளிகள், குடும்ப நண்பர்கள், ரசிகர்கள் என்று உற்சாக உற்சவம்!

சாவித்ரி மாத்திரம் மவுனமாக வாழ்த்துகள், பூங்கொத்துகள், பாராட்டுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். அவருக்குள் ஒரு போராட்டம். அதற்குக் காரணம் மூட்டை மூட்டையாகக் குவிந்திருந்த ரசிகர்  கடிதங்கள். அவை ஒவ்வொன்றிலும் ஆனந்தக் கண்ணீரின் தடங்கள். தனது அபிமானிகளால் நடிகையர் திலகம் அடைந்த  நெகிழ்ச்சிக்கும் அதிர்ச்சிக்கும் அளவே கிடையாது.

சாவித்ரியின் விசிறிகள் புதிய முடிவுக்கு வந்திருந்தனர். அதை மனம் திறந்த மடல்களின் மூலம்  தெரியப்படுத்தினர். அதில் காணப்பட்ட முக்கிய விவரம்  கோலிவுட்டின் வணிகத்துக்கே வேட்டு வைத்தது. அதை சாவித்ரி மிக சாமர்த்தியமாகக் கையாண்டார். அந்நிகழ்வை சகலருக்கும் விவரமாகத் தெரிவித்து விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். சாவித்ரியின்  இருதயத்திலிருந்து அன்று நடந்தவை இன்று உங்களுக்காக-

‘நானும் அவரும் தனிக்குடித்தனம் சென்ற நேரம். ஜெமினியிடம், நீங்கள் சம்மதித்தால் நான் பிற நடிகர்களுடன் நடிப்பேன். இல்லையானால் உங்களுடன் மட்டுமே நடிக்கிறேன்’ என்றேன். அதற்கு கணேஷ், ‘உன்னுடைய நடிப்புக்கும், கலையார்வத்துக்கும் நான் ஒரு போதும் தடையாக நிற்க மாட்டேன். நீ பல நடிகர்களுடன் நடித்து, உன் பெயரையும் புகழையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். மாறுபட்டப் பல திறமை கொண்ட எண்ணற்றக் கலைஞர்களுடன் நடிக்கும்போதுதான் உன்னுடைய நடிப்புத்திறனும் வளரும். வெவ்வேறு வேடங்களில்  உன்னுடைய சாமர்த்தியம் வெளிப்பட வாய்ப்பும் அதிகரிக்கும். அதனால் நீ தாராளமாக மற்ற ஹீரோக்களுடன் நடிக்கலாம்’ என்று பெருந்தன்மையுடன் வாழ்த்தி நல்ல வழியை அமைத்துக் கொடுத்தார்.

ஆனால் பாசமலர் ரிலீசுக்குப் பின்பு தமிழக மக்கள் எனக்கு இட்ட அன்புக் கட்டளை, ஆசை உத்தரவு -

 

savithri_single.jpg  

 

 

‘நான் அவருடன் மட்டுமே ஜோடியாக நடிக்க வேண்டுமாம். இனி சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கக் கூடாதாம்...’

எனக்கு ரசிகர்கள் விதித்த வேண்டுகோளை  எங்களின் நலம் விரும்பிகளிடம் காட்டினேன். அதை முழுதாக வாசித்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

 ‘சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு ஈடு கட்டும் முறையில் உணர்ச்சியுடன் நடிக்கக் கூடிய  நடிகை நீங்கள் ஒருவரே  என்பது எங்கள் திடமான முடிவு. நீங்கள் சிவாஜியுடன் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டும். இந்தச் சிறந்த வாய்ப்பை உங்களின் விசிறிகள் உணராமல் எழுதி இருக்கலாம். அதனால் நடிப்பின் சிகரத்தை எட்டும் அருமையானப் படங்களைப் பார்த்து ரசிக்கும் பாக்யத்தை அவர்கள் இழக்கத் தயாராக இருக்கலாம். ஆனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்றார்கள்.

‘சமீபத்தில் ஒரு பாராட்டு விழாவில் நான், அவர், சிவாஜி அண்ணா மூவரும் கலந்து கொண்டோம். எனக்கு வரவேற்பாளர் பொறுப்பு. மைக்கின் முன்னால் நின்று கொண்டு, ‘விருது பெற்றவர்களைப் பாராட்டி, இப்போது அண்ணா சிவாஜி கணேசன் பேசுவார்கள்...’ என்றேன். எனது உறவு முறையை கவனித்த ஜனங்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அடுத்து பேச இருந்தவர் என்னுடைய அவர்!

அர்த்தமில்லாத குரலில், மென்று விழுங்கியவாறு தொண்டையைச் சரிப்படுத்தி, அடுத்த படியாக அவர்... அவர்... என்று இழுத்துக் கொண்டே போகையில் என் நிலைமையைப் புரிந்து கொண்ட கூட்டத்தினர் கொல்லென்று சிரித்தனர். அவரை எப்படி அழைப்பது என்று தவித்துக் கொண்டிருந்ததால், அவர்களது  அட்டகாசத்தை ரசிக்க இயலவில்லை.

அவரும் புன்னகைத்தபடியே மைக்கைப் பற்றினார். அவரைப் பேச விடாமல் ரசிகர்களின் அமர்க்களம்  தொடர்ந்தது. இப்படியொரு இன்ப சங்கடத்தில் சிக்கி விட்டோமே... என்னை கேலி செய்கிறார்களே... என்று எனக்கு வெட்கமாகி விட்டது.

அடுத்த நாள்  பத்திரிகைகளில் என் தடுமாற்றமே தலைப்புச் செய்தி. ’அண்ணாவும் அவரும்’  என்று புது டைட்டிலில் நகைச்சுவையுடன்  எழுதினர்.

அண்ணன் சிவாஜி கணேசன் எனக் குறிப்பிட்ட சாவித்ரி, ஜெமினி கணேசனையும் பெயர் சோல்லியே அழைத்திருக்கலாமே...  என்று தர்க்க சாஸ்திரமே செய்து விட்டனர். அதைப் படித்தவுடன் எனக்கு என்னவோ போல் இருந்தது.

கணேசன் என்று வெறுமனே கூறினால் எந்த கணேசன் என்று கேள்விக்குறியைப் போடுவார்கள். ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் பெருமை சேர்ப்பது சிவாஜி, ஜெமினி என்கிறப்  பட்டங்கள். நாம் பட்டப் பெயர்களுக்குக் கொடுக்கும் மதிப்பை உண்மைப் பெயர்களுக்குத் தருவதில்லை.

 

konjum%20salangai2.jpg  

 

 

நான் என் கணவருக்கு மனைவி மட்டுமல்ல. நல்லதொரு ரசிகையும் கூட. ஆகவே நானும் ரசிகர்களைப் போலவே, ‘ஜெமினி’ என்றப் பட்டப்பெயருக்கு  ஒரு மரியாதை கொடுத்தேன், என்று எண்ணிக் கொள்ளட்டுமே.  

சபைகளில் ‘சிவாஜியை அண்ணா என்று அழைக்கிறீர்களே...’ அப்படியானால் அவருக்குக் காதலியாக ஏன் நடிக்கிறீர்கள்? அண்ணன்-தங்கை இருவரும்  காதலர்களாக நடித்தால் ஒப்புக் கொள்ள முடியுமா என்று என்னைக்  கேட்கிறார்கள். ரசிகர்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இல்லவே இல்லை.

‘வாழ்க்கை வேறு. நடிப்பு வேறு- என்பது புரியாததால் வந்த வினை அது.’

பல ஆண்டுகளுக்கு முன்னர், வி. சாந்தாராமின் பிரபாத் டாக்கீஸ் தயாரித்த  ‘சீதா கல்யாணம்’ படத்தில் ஒரு குடும்பமே நடித்தது. உடன் பிறந்த அண்ணனும் தங்கையும் ராமனாகவும்  சீதாவாகவும்  நடித்திருக்கிறார்களே...!  (வீணை எஸ். பாலச்சந்தரின் சகோதர சகோதரிகள்)

அண்ணா சிவாஜியுடன்  நான்  இணைந்து நடித்த  படங்களில் பல வெற்றி பெற்றிருக்கின்றன. வணங்காமுடியில் நானும் அண்ணன் சிவாஜியும் சந்திக்கும் முதல் கட்டம்,

 காத்தவராயனில்  ‘நித்திரை இல்லையடி சகியே என்று நான் முடிக்க, ‘எனதாசை வனிதா மணி’ என்று அண்ணன் பாடிக் கொண்டு வருவது...

அன்னையின் ஆணையில் அண்ணாவின் மார்பை நான் நகங்களால் பிராண்ட, அவர் கைத்துண்டால் என் முகத்தில் அடிப்பது போன்ற காட்சிகளைப் புகழ்ந்து எழுதாத பத்திரிகைகளே கிடையாதே!

அத்தகையச் சிறப்புகள் என்னை வந்து சேர சிவாஜி அண்ணன் மாத்திரமே காரணம். நான் சிவாஜி அண்ணனோடு நடிக்கும் போது யார் ஸ்டுடியோவில் முதலில் இருப்பது என்று எங்களுக்குள் பலத்த போட்டி இருக்கும். நடிப்பை ஒரு கலையாகவே கற்றுக் கொண்டவர் சிவாஜி. அவருடன் நடிக்க ஆரம்பித்தால் நமக்கும் நடிப்பில் வேகம் வந்துவிடும். பந்தயம் போட்டுக் கொண்டு நடிக்கத் தோன்றும்.

‘நடிக்கலாம். ஆனால் அது நடிப்பு என்பதை மறந்து, உணர்ச்சி வசப்பட்டு நடிக்கக் கூடாது.’ என்று அண்ணன் அடிக்கடி சொல்லுவார்.

‘அன்னையின் ஆணை’ படத்தில் அவர், அப்படியொரு சீனில் என்னை மேல் துண்டினால் அடித்து விடுவது போல நடிக்க வேண்டும். நான் ஓவராக  நடித்து விட்டேன். அக்காட்சியை மீண்டும் எடுக்க வேண்டி வந்தது.

‘பார்த்தாயா...  ரொம்ப  உணர்ச்சிவசப்பட்டுவிட்டாய். நான் உன்னை ரெண்டாவது தடவையாக அடிக்க வேண்டி வந்துவிட்டது.’ என்று என்னைப் பரிகாசம் செய்தார் சிவாஜி.

‘ஒரு படிப்பினையை அதை விட வேறு யாராலும் கற்றுக் கொடுத்து இருக்க முடியாது.’ இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால், நடிகர் நடிகைகளின் நிஜ வாழ்வு உறவு முறைகளைப் பார்த்து சினிமாக்களில் வேடங்களில் அமைவது கிடையாது.

‘ஒரு நடிகைக்கு வேண்டியது தொழிலில் ஏற்படும் புகழ்தானே...?  அதை இழந்து விடு என்று கூறலாமா...?’

‘மனம் போல் மாங்கல்யம், ‘மிஸ்ஸியம்மா, ‘பிரேம பாசம், ‘பெண்ணின் பெருமை’, ‘யார் பையன்?’, ‘களத்தூர் கண்ணம்மா’, போன்ற படங்களில் நான் அவருடன் நடித்து இருக்கிறேன். அவைகளின் வெற்றி நாடறியும்!

நானும் அவரும் கணவன் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

‘அவரும் அண்ணாவும் எனது இரண்டு கண்கள்.’

 என் மகள் விஜய சாமூண்டீஸ்வரி அவரை அப்பா என்று அன்புடன் அழைப்பது போல, என் அண்ணாவையும் மாமா என்று பிரியத்துடன் கூப்பிடுகிறாள். 

என்னுடைய படங்களை தியேட்டருக்குச் சென்று பார்ப்பது வழக்கம். மக்கள் எப்படி ரசிக்கிறார்கள். எந்தெந்தக் காட்சிகளை எவ்வாறு பாராட்டுகிறார்கள்...! எவ்விதம் என் நடிப்பு அவர்களைக் கவர்ந்திருக்கிறது, எங்கு என்னென்ன தப்புப் பண்ணியிருக்கிறோம்... என்பதையெல்லாம் கூர்ந்து கவனிப்பேன். ஓர் ஆர்ட்டிஸ்டின் வெற்றிக்கு உற்று நோக்குதல் மிக முக்கியம். ஆனால் ரிலீஸ் அன்று போக மாட்டேன். கூட்டம் என்றால் எனக்குப் போகவே பிடிக்காது.

பாசமலருக்குப் பின் நானும் சிவாஜியும் காதலர்களாக நடித்த எல்லாம் உனக்காக  வெளியானது. ஆனால்   உடனடியாக வெற்றி பெறவில்லை. அப்புறம் தனியாக நன்றாக ஓடியது.’

எட்டே ஆண்டுகளில் விரைவாக சாவித்ரி சதம் அடித்தார். 1962  தைத் திருநாளில் ‘கொஞ்சும் சலங்கை’ அவரது 100 வது படமாக வெளிவந்தது. எம்.வி. ராமனின் இயக்கத்தில் மிக நீண்ட காலம் பைனான்ஸ் பிரச்சனையால் முடங்கிக் கிடந்தது. பின்னர் தேவி பிலிம்ஸார்( சென்னை தேவி திரை அரங்க உரிமையாளர்கள்) கொஞ்சும் சலங்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

பொதுவாக வருடக் கணக்கில் பெட்டிக்குள் இருக்கும் படங்கள் ரிலிசில் தோல்வியைத் தழுவும். கொஞ்சும் சலங்கை அதை உடைத்து மகத்தான வெற்றி பெற்றது. பெர்லின் பட விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதுவரையில்  சாவித்ரிக்குப் பின்னணி பாடியவர்கள் எம்.எஸ். ராஜேஸ்வரி, ஜிக்கி, பி. லீலா, பி.சுசிலா ஆகியோர். ஆனால் ‘சிங்கார வேலனே தேவா’ முதன் முதலாக எஸ். ஜானகியின் குரலில் ஒலித்தது. அவரை உலகப் புகழுக்கு உள்ளாக்கியது.

இன்னொரு சுவாரஸ்யம்! சிலுக்கு சாவித்ரி பைத்தியம். சாவித்ரியைப் போல் நடிகையர் திலகமாக வேண்டும் என்கிற வெறியில் வெள்ளித்திரையில் முகம் காட்டியவர். கலை உலகம் அவரது அழகை  மட்டுமே ஆராதித்தது. சிலுக்கு அவிழ்த்து எறிந்த ஆடைகளில் தமிழ் சினிமா தனது மானத்தை மறைத்துக் கொண்டது. சிலுக்கின் சிறப்புத் தேன் கிண்ணம் விவிதபாரதியில் இடம் பெற்றது. அதில் அவர் தனக்குப் பிடித்த முதல் பாடலாக ஒலிபரப்பியது ‘சிங்கார வேலனே தேவா’. காரணம் அவர் எஸ். ஜானகி ரசிகையும் கூட.
 

 

savithri_2.jpg  

 

‘சிங்கார வேலா பாட்டை நானும் காருக்குறிச்சி அருணாச்சலமும் தனித்தனியே பாடினோம் என்றால், ஆச்சரியமாக இருக்கும். முதலில் நாதஸ்வரத்தில் வாசிக்கச் சொல்லி ரெக்கார்டு செய்து விட்டார்கள். பிறகு வெறொரு நாள் நான், அவர் வாசித்ததைக் கேட்டுக் கொண்டே  அந்தச் சுருதிக்கும், நயத்துக்கும் குழைவுக்கும் ஏற்ப அப்படியேப் பாடினேன்.

நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் லட்சக் கணக்கான ரசிகர்கள், நாங்கள் சேர்ந்து பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார்கள். ஆனால் நாங்கள் இருவரும் நேரில் பார்த்துக்கொண்டதே இல்லை. படம் ரிலீசாகி ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு ஒரு நாள் பம்பாய் ஷண்முகானந்தா சபாவில் முதல் முறையாகவும் கடைசியாகவும் சந்தித்துக்கொண்டோம்.’ - எஸ். ஜானகி. ( ஆன ந்த விகடன் 10.5.1964)  

மற்ற நடிகைகள் வசனம் பேசுவதும், பாடலுக்கு வாய் அசைப்பதும் கொஞ்சம் மிகையாக இருக்கும். ஆனால் சாவித்ரி மாதிரி இயல்பாக, அவர் பாடுவது போலவே இதழ் மீட்டுபவர்கள் இன்று வரையில் யாரும் கிடையாது. அதிலும்  ‘சிங்கார வேலனே தேவா’ மாதிரியான பக்தியும் காதலும் வெளிப்படும் அபூர்வமானதொரு இசைக் கலவையில்  சாவித்ரியின் பங்களிப்பு சிரஞ்சீவி சரித்திரம்! 

தமிழ்க் காற்று வீசும் வீதியெங்கும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின்  கலப்படமற்ற கர்நாடக இசைச்சாரல் ‘சிங்கார வேலனே தேவா’வில் பொழிந்தது. பாடலுக்கு முன்னால் வரும் காதல் வசனத்தைக் கேட்க கேட்க இன்றும் சுகம் பெருகும்.

‘சாந்தா! உட்கார்!

ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்?

உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில்

நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை

ஏமாற்றாதே சாந்தா!’

‘என் இசை உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...’

‘தேனோடு கலந்த தெள்ளமுது!

கோல நிலவோடு கலந்த குளிர் தென்றல்!

இந்தச் சிங்கார வேலன் சந்நிதியிலே,

நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும்.

பாடு! பாடு சாந்தா! பாடு!’

சிங்கார வேலனாக ஜெமினி கணேசனும், வள்ளியாக சாவித்ரியும்  கனவுக் காட்சியில் தோன்றினார்கள். ஆனால் திரைக்கு வந்த போது ஏனோ அதை வெட்டி விட்டார்கள்.

வீர தீரம் நிறைந்த எம்.ஜி.ஆர். படமோ என போஸ்டர்கள் எதிர்பார்ப்பை உண்டாக்கின. முழு நீள ஆக்ஷன் மற்றும் கவர்ச்சி ஹீரோவாக ஆர்.எஸ்.மனோகருடன் மோதினார் காதல் மன்னன். நாதஸ்வர வித்வானாகவும் கைத்தட்டல்களைப் பெற்றார்.

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாராகி வெளிவரும் தகுதி பெற்ற பிரம்மாண்ட வண்ணச் சித்திரம் கொஞ்சும் சலங்கை. 1960க்கு முன்பே 40 லட்சம் செலவில் உருவானது. தமிழ் நாட்டுக் கலாசாரம், சங்கீதம், நடனம், நாகஸ்வர இசை ஆகியனவற்றை  முத்து மணிகளாகக் கொண்ட ராஜா ராணிக் கதை. தீப்பற்றி எரியும் அரக்கு மாளிகையில் நடக்கும் கத்திச் சண்டைகள் இன்றைக்கும் ரசிகர்களை மெய் மறக்கச் செய்யும்.  நடிகையர் திலகத்துக்கு மட்டுமல்ல  தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்தது கொஞ்சும் சலங்கை.

கொடைக்கானல் நீர் வீழ்ச்சிகளிலும், ஆற்றிலும், செங்குத்தான மலை உச்சிகளிலும்  அபாயகரமான இடங்களிலெல்லாம் ஜெமினி-சாவித்ரி ரிஸ்க் எடுத்து தைரியமாக நடித்தார்கள். சாவித்ரி நிஜ வாழ்க்கையிலும் மிகத் துணிச்சலானவர். டூப் ஏதும் தேவைப்படாமல் உயிரைப் பணயம் வைத்து நீர்ச் சுழல்களில் நீந்தினார். நூறு அடி மலை உச்சியிலிருந்து, பெரிய பாறாங்கல் சாவித்ரி மீது விழ இருந்தது. மயிரிழையில் பிழைத்தார் சாவித்ரி.

சிவாஜி - சாவித்ரி ஜோடியாக நடிக்காவிட்டாலும் மறக்க முடியாத 100 நாள் படமாக அமைந்தது படித்தால் மட்டும் போதுமா. 1962 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு. ‘கோடையில் சாவித்ரியின் நடிப்பு குளுமை’ எனப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.

சாவித்ரிக்கு ஏற்ற விதத்தில் அவர் நடிப்பதற்காக ஜெயகாந்தன் திரைக்கதை அமைத்துத் தந்திருக்கிறார்.

 

savitri.jpg  

 

 

சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இணையாக  நடிகையர் திலகமும், அவர் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்யும் மாபெரும் நட்சத்திர அந்தஸ்தில் இருந்தவர். அவ்வாறு அரியணை ஏறிய முதல் துருவ நட்சத்திரம்  சாவித்ரி!

அந்நிகழ்வு ஜெயகாந்தனின் இரவல் சொற்களில்:

‘இன்றைக்கு நீங்கள் இன்னொரு வங்காளப் படத்தைப் பார்க்க வேண்டும். ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோர் பார்க்க வருகிறார்கள். நீங்களும் அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்று என்னை அழைத்தார்கள்.

படத்திற்கான கதையைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அக்காலத்தில் நடிகை சாவித்ரிக்குப் பெரிய பொறுப்பு இருந்தது போலும். சாவித்ரி அன்று மாலை அந்தப் படத்தை ஒரு மினி தியேட்டரில் பார்க்க வந்தார். ஜெமினியும் வந்து இருந்தார்.

இந்த வங்காளப்படத்தில் கதாநாயகிக்கு இரட்டை வேடம்.  ஒரு நடிகைக்கு அப்படிப்பட்ட கதைகள் அதிகம் பிடிக்கும் என்கிற விஷயத்தை நானும் அறிந்து கொண்டேன். ஒரு பிரபல நடிகையும் நடிகரும் பார்த்து ஒரு கதையை சிலாகித்து விட்டால் அனேகமாய் தயாரிப்பாளர்களின் எண்ணமும் அவர்களோடே இயைந்து போகும் என்பதும்  எனக்குப் புரிந்தது.

எழும்பூரில் என் வீட்டுக்கு எதிரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த உடுப்பி ஹோமில்  ஓர் அறையை எடுத்துக் கொண்டு நான் வங்காளிப் படத்தைத் தழுவி எழுதித் தந்தது காத்திருந்த கண்கள் என்ற பெயரில் தயாராயிற்று. அதை ரிலிசுக்கு முன் தயாரிப்பாளர்கள் என்னையும் அழைத்துத் திரையிட்டுக் காட்டினார்கள்.’

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி- 6. கோகிலாவும் பாஞ்சாலியும்

 

 

'காத்திருந்த கண்கள்’ சாவித்ரிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் மிகப் பெரிய நடிப்புப் புதையல். நிஜ வாழ்க்கையில் சாவித்ரியின் நவ நாகரிகத் தோற்றமும், ஜெமினியோடு போட்டி போட்டுக் கொண்டு வேகமாகக் காரில்  பறக்கும் அட்டகாசமும், நித்திய  நட்சத்திரப்  புத்துணர்வும், ஸ்டைலான பியானோ வாசிப்பும் மேட்டுக்குடிப் பெண் லலிதாவாவை பிரதிபலித்தன.

சினிமாவில் வழக்கமாகக் கிடைக்கும் அமைதியான குடும்பப்பாங்கான, துடைப்பத்துடன் வீடு கூட்டும் 'செண்பகமாக’  இன்னொரு சாவித்ரி. இரட்டையர்  நடிப்பில் நடிகையர் திலகம் காட்டிய வர்ணஜாலங்கள் அதைத் தயாரித்த வசுமதி பிக்சர்ஸூக்கு வசூலை வாரி வழங்கியது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும்,  கண்ணதாசனின் ‘காற்றடித்தால் தலை சாயும்,  ஓடம் நதியினிலே, பார் என்றது பருவம்,  வளர்ந்த கலை, கண் படுமே  போன்று தேனொழுகும் அர்த்த புஷ்டியுள்ள ஒவ்வொரு பாடலும் சாவித்ரிக்கு வெற்றிப் படிக்கட்டுகளாகி உதவின.

சாவித்ரியைத் தொடர்ந்து சரோஜா தேவி, தேவிகா, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடிக்கும் ட்ரென்ட் செட்டர் படமாக காத்திருந்த கண்கள் அமைந்தது. சானல்களில் சாவித்ரி வாரத்தில் நிச்சயம் இடம்பெறும் சிறந்த படம் 'காத்திருந்த கண்கள்’. 'காதலர்கள் பாகத்தில் கணேஷ் தம்பதிகளின் நடிப்பில் முன்னைக்கு இப்போது பழகப் பழகப் பால் இனிக்கிறது. உச்சக்கட்டக் காட்சிகளில் சாவித்ரியின் நடிப்பில் நல்ல செறிவு இருக்கிறது.’ என  குமுதம் பாராட்டியது.

savathri.jpg  

 


நடிகையர் திலகத்தின் உருக்கமான நடிப்பில் பாசமலர் வந்திருக்காவிட்டால், சாவித்ரியின் மார்க்கெட்சதம் அடித்த பூரிப்போடு முற்றுப் பெற்றிருக்கும். அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு நீடித்திருக்காது. என்ன இது...  இப்படிச் சொல்கிறேனே... என்று திகைக்காதீர்கள். வருடத்துக்கு டஜன் கணக்கில் நடித்து கலைப் பாதையில் சாவித்ரி களைத்துப் போனார்.1959ல்  ஏ.பி. நாகராஜனின் 'வடிவுக்கு வளைகாப்பு’ தயாரிப்பில் இருந்தது. அதில் சாவித்ரி-சிவாஜி ஜோடி. சினிமா டைட்டில் போலவே நிஜமாகவே சாவித்ரி தலைப்பிரசவத்தைச் சந்திக்க வேண்டிய தருணம் அது. அவர் நினைத்தவாறு முழு வீச்சில் நடிக்க முடியாமல் வடிவு முடங்கிப் போனது. சரோஜா தேவி புதுமலராக வாசம் வீசி மூவேந்தர்களின் மனத்தைக் களவாடிய பொழுது. சினிமா வணிக உலகம். சிவாஜி, ஏ.பி. நாகராஜனிடம் 'வடிவுக்கு வளைகாப்பில் சாவித்ரியை நீக்கி விட்டு சரோவை நடிக்க வைக்கலாம்’ என்றார். ஆனால் ஏ.பி. என். சம்மதிக்கவில்லை. அவரது இயக்கத்தில் சாவித்ரிக்கு அது முதல் படம். 'சாவித்ரி பிள்ளை பெற்று வரும் வரையில் காத்திருக்கிறேன்’ என சிவாஜியின் யோசனையை ஏற்க மறுத்து விட்டார். 1962  ஜூலையில் மூன்று ஆண்டுகள் கடந்து வடிவுக்கு வளைகாப்பு வெளியானது.

குழந்தை பெற்ற நாயகிகளை தமிழர்கள் கனவுக்கன்னியாக எண்ணிக் கொண்டாட மாட்டார்கள். அது ரசிக தர்மமும் அல்ல. கல்யாணப் பரிசு, முதலாளி போன்ற விழா கொண்டாடி விருது பெற்ற படங்களின் மூலம் தென்னகத்துக்கு த்ரி ரோசஸ் ஆக  சரோஜாதேவி, தேவிகா, விஜயகுமாரி ஆகியோர்  அகப்பட்டார்கள். அதிலும் சரோ...!  தனித்து முழு மெஜாரிட்டியோடு கோலிவுட்டில் ஆட்சி அமைத்தவர். ஸ்ரீதர், பீம்சிங், இருவரும் இம்மூவருக்கும் தொடர்ந்து கொடுத்த ஏற்றம் சாவித்ரிக்கு சரிவை ஏற்படுத்தியது.

ஸ்ரீதரின் இயக்கத்தில் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், ஏ. பீம்சிங்கின்  பட்டதாரி, எஸ். பாலசந்தரின் பெண் பாவம் பொல்லாதது, ஏ.சுப்பாராவின் நடமாடும் தெய்வம்  உள்ளிட்ட சினிமாக்கள் சிவாஜி- சாவித்ரி நடித்து  ஆரம்ப நிலையிலேயே நின்று விட்டன. ஒரு வேளை ஒழுங்காக அவை வெளி வந்திருந்தால் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இன்னமும் புதிய உயரங்களுக்கு நிச்சயம் சென்றிருப்பார்கள். ஸ்ரீதரும் சாவித்ரியும் இணைந்து பணியாற்ற இருந்த மற்ற படங்கள் கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், கொடிமலர் ஆகியன. அவை ஒவ்வொன்றிலும் சாவித்ரிக்குப் பிடித்தமான வேடங்கள் அமைந்தன. குறிப்பாக கொடிமலரின் ஊமை நாயகியை சாவித்ரி பெரிதும் விரும்பினார். ஆனால் அந்த அதிர்ஷ்டம் விஜயகுமாரிக்கு அமைந்தது. 'பாவ மன்னிப்பில் சாவித்ரி நடிப்பு பாராட்டுகிறாற் போல் இல்லை. மின்ன வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு ஒளியூட்டியிருப்பது தேவிகாவுக்குத்தான்.’ என்று பட்டவர்த்தனமாகத் தன் விமர்சனத்தில் போட்டு உடைத்தது குமுதம்.

 

savitri-stills2.jpg  

 



பந்த பாசம், பரிசு, கர்ணன்  ஆகிய படங்களிலும் சாவித்ரியின் ஆற்றலுக்கேற்ற வேலை கிடையாது. பாத காணிக்கையில் விஜயகுமாரி மேல் அனுதாபம் கூடியது. 'கற்பகம்’ சினிமாவில் டைட்டில் தொடங்கி, கதா பாத்திரம், விளம்பரம், எல்லாவற்றிலும் சாவித்ரி இரண்டாம் பட்சமாகத் தோன்றினார்.  தோழமைக்காகவும் நன்றிக்கடனுக்காகவும் சாவித்ரி விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது.

1962க்குப் பின்னர் பீம்சிங், சாவித்ரிக்கு  வாய்ப்பு தரவில்லை. மிக விரைவாகப்  பொற்காலம் படைத்தவர்கள்  சீக்கிரத்தில் பிரிந்து விட்டார்கள். 'பதிபக்தி’யில் தொடங்கி  பா’ வரிசையில்  வெற்றி அலைகளாகத் தவழ்ந்து  ’பந்த பாசத்தோடு’ ஓய்ந்து போனது சிநேக சாஹரம். அதற்காக சாவித்ரிக்கு பீம்சிங் மீது வருத்தம் கிடையாது. மாறாக எப்போதும் போல் பீம்சிங் மீது அன்பைப் பொழிந்தது சாவித்ரியின் குழந்தை உள்ளம்!

'எதற்கும் பீம்சிங் அலட்டிக் கொள்ள மாட்டார். நேரில் பார்க்கும் போது இவரா அந்தப் புகழ் பெற்ற டைரக்டர் என்பது போல அவ்வளவு எளிமையான தோற்றம். ஆர்ட்டிஸ்டுகளுக்கு அருகில் வந்து மெதுவான குரலில் யோசனைகள் சொல்வார். தனது அட்வைஸ் பிறர் காதுகளில் விழுந்தால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வருத்தப்படுவார்களே என்று நினைப்பார். அப்படியொரு மென்மையான உள்ளம் பீம்சிங்குக்கு. 'பதிபக்தி’ சினிமாவில் 'சின்னஞ்சிறு கண் மலர்’ பாடல் காட்சி.

பின்னணியில் பாட்டு, அதற்கேற்றவாறு என் உதட்டசைவு, முகத்தில் தாய்ப்பாசம், கையில் குழந்தையோடு நடக்கும் பாவனை எல்லாம் ஒருசேர நன்றாக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக,  குழந்தையைக் கைகளில் எடுத்துக் கொண்டு பீம்சிங்கே அதைப்போலப்  பாடி நடந்து காண்பித்தார்.

இருவாட்சி போல் மெலிந்திருந்த சாவித்ரியின் அழகிய இளமை தேகம், மழலையின் சிரிப்பில் பூசணிப் பூ போல் வளமாக உருமாறத் தொடங்கியது. சாவித்ரிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது ரத்தத் திலகம். அவருக்குப் போட்டியாக அதில் இன்னொரு நாயகி நிச்சயமாக இல்லை. படம்  முழுக்க முழுக்க சாவித்ரியின் தனி ஆவர்த்தனம்!

'இப்படியொரு நண்பன் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதிலே குற்றம் என்னுடையதாக இருந்தால் இந்திய மக்கள் என்ன மன்னிக்க வேண்டும்’

அகில இந்திய வானொலியில் பிரதமர் நேரு ஆற்றிய யுத்த உரையை கேட்ட தேசம் குலுங்கியது. தோழனாக நடித்து 1962ல்  துரோகியாக மாறிய சீனா, பண்டித நேருவைப் பதைபதைக்கச் செய்தது. பாரதத்தின் முதுகில் குத்திய சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து, ‘புத்தன் பிறந்த திசையிலே போர்! புனித காந்தி மண்ணிலே போர்!’ என  கோலிவுட்டில்  பரணி பாடினார் கண்ணதாசன். சட்டென்று சுடச்சுட  சினிமா எடுத்து தேச பக்தியை மக்களிடம் ஏற்படுத்தியது கவிஞரின் விரல்.

கண்ணதாசனின் ரத்தத் திலகம் தமிழ்த் திரையின் குறிப்பிடத்தக்க முக்கியமான வெற்றிச் சித்திரம். அன்னையின் ஆணைக்குப் பிறகு சிவாஜியும் சாவித்ரியும் ஜோடி சேர்ந்து, உணர்ச்சிகரமாக போட்டி போட்டு நடித்தப் புரட்சிப் படம்.

சரத் சந்திரரின் கதைகளில் நடித்து முன்னுக்கு வந்த சாவித்ரி, ஷேக்ஸ்பியரின் டெஸ்டிமோனாவாகவும் ரத்தத்திலகத்தில் ஒத்தல்லோ ஒரங்க நாடகத்தில் நடிப்பில்  முத்திரை  பதித்தார். ‘வெகு நாள் கழித்துச் சந்திக்கிறோம். சாவித்ரியின் சீறலையும் சிவாஜியின் கர்ஜனையையும். இருவரும் நெருக்கமாகப் பழகிச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தலைப்பு வெகு பொருத்தம்!’ என்றது குமுதம் வார இதழ்.

காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அந்தஸ்தைப் பெற்று சென்னை திரும்பிய தினம். அன்றைய இரவில் ஏவி.எம். ஸ்டுடியோவில் ரத்தத் திலகம் பார்த்து கண்ணதாசனைப் பாராட்டினார். ‘படம் நீளமாக இருக்கிறதே... ஏன் இதை இரண்டு சினிமாவாகப் பண்ண முடியாதா’ என்று கேட்டாராம் பெருந்தலைவர்.

1963  செப்டெம்பரில் திரைகளில் ஒலிக்க ஆரம்பித்து, ஒவ்வொரு  ஃபேர்வெல்லிலும் ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் - 'பசுமை நிறைந்த நினைவுகளே...!’ பள்ளி, கல்லூரிகளில் இன்னொரு தேசிய கீதமாகவே மாறி விட்டது. சிவாஜி - சாவித்ரி மீண்டும்  ஜோடி சேர்ந்ததன் வெற்றிகரமான அடையாளம் கவிஞரின் ரத்தத் திலகம்!

savitri2.jpg  

 

 

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் சாவித்ரி நடித்தவை கற்பகம், கை கொடுத்த தெய்வம், ஆயிரம் ரூபாய் ஆகிய படங்கள். குடும்பச் சித்திரங்களில் கே.எஸ்.ஜி. கொடி கட்டிப் பறந்தது போல் வேறு யாரும் வெற்றி அடையவில்லை. மேற்கூறிய மூன்றுமே மாறுபட்ட கேரக்டர்களை சாவித்ரிக்கு வழங்கின. அவரது நடிப்பாற்றலை எவரெஸ்ட் சிகரத்துக்குக் கொண்டு சென்றவை. ஆயிரம் ரூபாயில் மெட்ராஸ் பாஷை பேசியவாறு வீதிகளில், மருதகாசியின் பாடல் வரிகளை

'ஆனாக்க அந்த மடம்  ஆவா காட்டி சந்த மடம்
அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்டுபாரம் சொந்த இடம்’ 

என்று ஆடிப்பாடும் குப்பத்துப் பெண் வள்ளியாக, சாவித்ரி நடித்த விதம் அபாரம். குடிசை வாசலில் பல் விளக்கிக் கொண்டே, 'ஆப்பம் வாங்கி வச்சிக்கிறேன்... துண்ணுட்டுப் போ...’ என்று ஜெமினி கணேசனிடம் அநாயாசமாக அவர் சொல்லும் லாகவம், எத்தனை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் வைத்து நடிப்பைக் கற்றுத் தந்தாலும் யாருக்கும் வராது. காற்றில் பறந்து வந்து கைகளில் சிக்கிக் கொள்ளும், ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு அவர் படும் அவஸ்தைகள் ஒவ்வொன்றும் நவரச நடிப்பில் முனைவர் பட்டத்துக்குத் தகுதி உள்ளவை.

‘ஆடிப் பாடிச் சுமையில்லாமல் சுதந்தரமாக இருக்கும் ஒரு பெண்ணின் இயல்பை, காற்று அளித்த பரிசான ஆயிரம் ரூபாய் நோட்டு எவ்வளவு மாற்றி விடுகிறது என்பதை சாவித்ரி அருமையாகச் சித்தரித்திருக்கிறார். ஆயிரம் ரூபாய் ரசிக்கும்படியாக இருக்கிறது. காரணம் கே.எஸ்.ஜி., கே.எஸ்.ஜி.யாகவும் சாவித்ரி, சாவித்ரியாகவும் இருப்பதுதான்.’  என்று ’குமுதம்’  மெச்சியது. எனக்குத் தெரிந்து மெட்ராஸ் பாஷை பேசி நடித்த முதல் கதாநாயகியாக சாவித்ரியை மட்டுமே நினைக்க முடிகிறது. அதற்கு  முன் 'அபலைஅஞ்சுகம்’ படத்தில் மனோரமா சென்னைத் தமிழில் அற்புதம் செய்திருப்பார்.

சாவித்ரியோடு பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி கே.எஸ். ஜி.: ‘நடிப்பில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய நடிகைகளில் முக்கியமானவர் சாவித்ரி, தனக்கென்று - யாரும் அண்ட முடியாத பெரும் புகழ் பெற்றவர். இந்தக் காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற இலக்கணம் கற்றவர். இப்படி எத்தனையோ சிறப்புகளை ஏற்கும் தகுதி பெற்றவர் நடிகையர் திலகம். ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடிக்கும் போது, எனது கதாபாத்திரமே உருவெடுத்து உலவுவது போன்ற பிரமை எனக்கு ஏற்படும். ‘கை கொடுத்த தெய்வம்’ கதையை சாவித்ரியிடம் நான் சொன்னதும், கள்ளங்கபடமற்ற குழந்தை உள்ளம் படைத்த 'கோகிலா’ பாத்திரம் அவருக்கு மிகமிகப் பிடித்து விட்டது. சாவித்ரி படப்பிடிப்புக்கு வந்த முதல் நாள் என்னிடம் வந்து, 'கே.எஸ்.ஜி. சார்...  குழந்தைத் தனமான இந்த கேரக்டரை நான் எப்படி  நடிக்க வேண்டும் என்று ஒரு கோடிட்டுக் காட்டுங்கள். நான் அதை டெவலப் செய்து கொண்டு நடிக்கிறேன்’ என்றார்.

'குழந்தைத்தனமான வேடத்தை நீ சிறப்புற செய்து விடுவாய் என்ற முழு நம்பிக்கை இருப்பதால் தான் அதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் நீ கேட்டதற்காக ஒன்றை மட்டும் சொல்கிறேன். குழந்தைகளை நன்றாக கவனித்துப் பார். மழலைகள் அழுதாலும் சரி, சிரித்தாலும் சரி அதன் கண்கள் எப்போதும் திறந்தே இருக்கும்.எனவே நீ அழுதாலும், சிரித்தாலும், ஆத்திரப்பட்டாலும், அமைதியாக இருந்தாலும் கண்களைத் திறந்தவாறே வைத்திருந்தால் கோகிலா கேரக்டர்  முழு வெற்றி பெற்று விடும் என்று கூறினேன்.

சாவித்ரி நான் சொன்ன விளக்கத்தை மனத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் கண்களை அகலத் திறந்தபடியே நடித்தார். கை கொடுத்த தெய்வத்தில் அவர் நடிப்பு அப்பப்பா... அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு கதாசிரியனின்  பாத்திரப்படைப்பு, கலைஞர்களின் நடிப்பாற்றலைக்  கொண்டு கணக்கிடப்படும் போது நாற்பது முதல் அறுபது சதவிகிதம் தான் தேறும் என்பார்கள். ஆனால் கை கொடுத்த தெய்வத்தில் சாவித்ரி நூற்றி ஐம்பது சதவிகிதம் உயர்த்தி விட்டார். அவருக்கு ஈடு அவரே தான்.’

'கோகிலா’ உருவான கதை சாவித்ரியின் தாம்பூலம் தரித்த உதடுகளிலிருந்து : 'கை கொடுத்த தெய்வத்தில்’ என்னுடைய பாத்திரம் ஓர் அபூர்வமான கேரக்டர். வயது வந்த ஒரு பெண் வெகுளியாக வித்தியாசமில்லாமல் பழகுகிறாள். ஆனால் அந்த அப்பாவிப் பெண்ணின் பண்பை உலகம் புரிந்து கொள்ள மறுக்கிறது. இந்தப் பாத்திர அமைப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தன.  ஆனால் அதன் வடிவம் முதலிலேயே ஏற்படவில்லை. புதுமையான வேடம். எனவே நிறையவே யோசித்து எந்தவிதமாக நடித்தால் மக்கள் மனத்தில் இந்த குணச் சித்திரம் நன்றாகப் படியும் என்று திட்டமிட்டு நடிக்க வேண்டி இருந்தது. அப்படியும் கை வராமலே இருந்தது. இரண்டு நாள்கள் நடித்த பின்பு நான் அதில் ரொம்பப் பிடிப்புடன் ஈடுபட்டு விட்டேன். பிரமாதமாக  அமைந்து விட்டது. அந்த கேரக்டர் நானே உருவாக்கியது. கோகிலாவின் உயிர்ப்புக்குக் காரணம் அதை நான் முழுமையாக நம்பி, அந்த கேரக்டரில் வாழ்ந்தது தான். நான் நடித்த படங்களில் ஏற்ற குணச்சித்திரங்களில் மிகச் சிறந்த ஒன்றாக கோகிலாவை கருதுகிறேன். கே.எஸ்.ஜி.யின் வசனம் உணர்ச்சி மிகுந்தது.நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கொண்டு வரும். அதைச் சொல்லும் போதே படபடவென்று பொழிந்து தள்ளி விடுவார். ஒவ்வொரு ஒத்திகையிலும் வெவ்வேறு யோசனைகள் சொல்லுவார். தாளம் பிசகாமல் பாடக் கற்றுக் கொள்வதைப் போல் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரே குழப்பம் ஆகிவிடும்.  கே.எஸ்.ஜி. நடித்துக் காட்டும் பாணியே தனியாக இருக்கும். அவருடைய திறமை, பலவீனம் இரண்டுமே இப்படி நடிப்பவர்களைத் தன் வயப்படுத்திவிடுவது தான்.  கை கொடுத்த தெய்வம் படத்தில் கோகிலாவாக வாழ்ந்த என் நடிப்பைப் பாராட்டி எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன.’

'1964 ஆம் வருடத்துப் புதுமுகம் சாவித்ரி. கை கொடுத்த தெய்வத்துக்குப் பிறகு  அவரை யாரேனும் பழைய சாவித்ரி என்று சொன்னால் அதை விடப் பச்சையான பொய் இருக்க முடியாது. சாவித்ரிக்கு இந்தப் படம்  ஒரு புதுப் பாதையைத் திறந்துவிட்டு இருக்கிறது’   என்று குமுதம் சாவித்ரியைக் கொண்டாடியது.

லண்டனில் ஆங்கில நாகரிகத்தில் வளர்ந்த ராதிகாவை, 'கிழக்கே போகும் ரயிலில்’ பட்டிக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாஞ்சாலியாக உருமாற்றியவர் பாரதிராஜா. அதற்காக அவர் கையாண்ட பால பாடம் என்ன தெரியுமா? கை கொடுத்த தெய்வம் படத்தை ராதிகாவுக்குத் திரையிட்டுக் காட்டினார். கோகிலாவாக கூடு விட்டு கூடு பாய்ந்த  சாவித்ரியின் நடிப்பாற்றல், ராதிகாவின் அரிதார அரங்கேற்றத்தில், 'பாஞ்சாலி அவதாரம்’ எடுக்க  அடித்தளம் அமைத்தது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-7. மஞ்சள் முகமே வருக!

 

 

சா
வித்ரி ஆபத்பாந்தவி என்பதை முன்னமே சொல்லி இருக்கிறேன். அது எல்லா கட்டங்களிலும் நிருபணமானது. 1964ல் அதிலும் ஒரு புது அனுபவம். உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொண்ட உணர்வை சாவித்ரிக்கு ஏற்படுத்தியது தேவர் பிலிம்ஸ்.

சின்னப்பாதேவர்  சினிமாவில் சிகரம் தொட்ட உன்னத தமிழன்! 2015 ஜூன் 28ல் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. திரைக் கலைக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் ஆற்றிய சேவைகள் வேறு எவராலும் நெருங்க இயலாதவை. தமிழர்களும் அனைவரும் பெருமைப்படவேண்டிய சாதனையாளர். எவராலும் எளிதில்  கட்டுப்படுத்த  முடியாத எம்.ஜி.ஆர். என்கிற யானையை, தோழமை அங்குசத்தால் ஆண்டவர்.

பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டது. சாவித்ரி பருமனானார். விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆரின் மனைவி என்பதால் மூவேந்தர்களும், அவருடன் ஜோடியாக நடிக்க ஆர்வம் காட்டவில்லை. மிச்சம் இருந்தவர்கள் சரோவும் தேவிகாவும். அதில் தேவிகாவை விட சரோவுக்கு விநியோகஸ்தர்கள், ரசிகர்களின் ஆதரவு அதிகம்.        

சரோஜாதேவி என்கிற மொழி தெரியாத குருப் டான்சருக்கு, தேவர்  எட்டுப் படங்களில் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு  அளித்தார். அதில் குறுகிய காலத்தில்  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஐந்து வெற்றிச் சித்திரங்கள். கன்னடத்துப் பைங்கிளியாகவும், கை தொடாத ரோஜாவாகவும் மக்களின் மனத்தில் நிலை நிறுத்தி சரோஜாவை  உச்சம் தொட வைத்தவர் தேவர்.

அதை மறந்து சரோவின் தாயார் ருத்ரம்மா, தேவரிடமே நன்றிக் கெட்டத்தனமாக நடந்து கொண்டார்.

 

chinnappa%20devar.JPG  

 

இந்தியாவிலேயே வெற்றுக் காசோலைகள் வழங்காத ஒரே தயாரிப்பாளர் தேவர். கலைஞர்களுக்கான  முழு சம்பளத்தையும்  பணக்கட்டுகளாக மேஜையில் அடுக்கியவர். அதற்கேற்ப  ஒட்டு மொத்தமாக கால்ஷீட்டையும் பெற்று, குறித்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்தவர்.

1963  விடுதலை நாள் வெளியீடு ‘நீதிக்குப் பின் பாசம்.  பாதிக்குப் பின் மோசம் எனப் பத்திரிகைகள் கிண்டல் அடித்தாலும் வசூலை அள்ளியது. அடுத்து வேட்டைக்காரனில் சரோவை ஒப்பந்தம் செய்யச் சென்றார் தேவர். ருத்ரம்மா நடந்து கொண்ட விதம், தேவரின் சந்தனம் பூசிய மேனியில் அனலை வாரி இறைத்தது.

‘முன்ன மாதிரி ஒரேயடியா கால்ஷீட் கொடுக்க முடியாதுங்க. பாப்பா டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல.’

‘வர்ற பொங்கலுக்கு வேட்டைக்காரன் ரிலீஸ். எம்.ஜி.ஆர். நான் கேட்டபடி கால்ஷீட் கொடுத்திட்டார். அதை வீணாக்க முடியாதே. அதுக்கேத்த மாதிரி சரோஜா வந்து நடிக்குமா இல்லையா...?’

‘இப்படிப் பேசினா எம்பொண்ணு உங்க சினிமால நடிக்காது.’

‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேண்டாமான்னு நீங்க முடிவு செய்யக் கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்!’

மறத்தமிழன் சாண்டோ சின்னப்பா தேவர் சீற்றம் அடங்காமல் வெளியேறினார்.

சரோவை இழப்பதில் எம்.ஜி.ஆருக்குச் சம்மதமில்லை. சிநேகிதரை சமாதானம் செய்தார். இனியும் தன் கம்பெனியில் சரோவுக்கு வேலை கிடையாது என்று தேவர்  திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். வேட்டைக்காரனில் இனி யார் ஹீரோயின் என்பது அன்றைய மில்லியன் டாலர் கேள்வி. தேவருக்கு கவுரவப் பிரச்சனை. எப்பாடு பட்டாவது 1964 பொங்கலுக்குப் படம் வந்தாக வேண்டும்.

 

devar-1%20and%20mgr.jpg  

 

‘ஆனந்த ஜோதியில்’ எம்.ஜி.ஆரும் தேவிகாவும் ஜோடி. நன்றாகவே ஓடி வசூலித்தது. தேவிகா, சரோ கிடையாது என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். வாத்தியாருடன் தேவிகா நடிப்பதாக இருந்த அத்தனைப் படங்களும் கேன்சல் ஆனது.

சரோவின் இடத்தை நிரப்புவது அத்தனைச் சுலபமல்ல. தேவர் பிலிம்ஸ்- எம்.ஜி.ஆர். கூட்டணி வெற்றிகளைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத தருணம்.

புதிதாக யார் கிடைப்பார்கள்...? எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் இணைந்து நடித்த ‘பரிசு’ தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

கனமான தோற்றத்தைத் தவிர, நடிகையர்திலகத்திடம் குறை ஒன்றுமில்லை. தேவரின் கார் சாவித்ரி வீட்டை நோக்கிச் சென்றது.எப்போதும் போல்  சாவித்ரிக்குத் தெலுங்கிலும் தொடர்ந்தது வெற்றித் தேரோட்டம். அவரை  உடனடியாக வேட்டைக்காரனில்  நடிக்க வைப்பதில் ‘தேவர் பார்முலா’ பயன் அளித்தது.

இரண்டு படங்களில் சாவித்ரியை ஒப்பந்தம் செய்து, அதற்கான முழு ஊதியமும் கையோடு வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்.- சரோவுக்காக எழுதப்பட்ட உல்லாசமான சம்பவங்கள் நடிகையர் திலகம் நடிப்பதற்காக உருக்கமாகத் திருத்தி எழுதப்பட்டன. எம்.ஜி.ஆர். சினிமாவில், ஒரு ஹீரோயினுக்காக முதலும் கடைசியுமாகத்  திரைக்கதை மாறியது வேட்டைக்காரனில் மட்டுமே. அது சாவித்ரியின் நடிப்பாற்றலுக்குக் கிடைத்த 1964-ன் ஆஸ்கார்.

எம்.ஜி.ஆரும்  தாய்க்குலங்களைக் கவரும் வகையில், ஏழு வயதுச் சிறுவனைத்  தூக்கி வளர்க்கும் பொறுப்புள்ளத் தந்தையாக, ‘வெள்ளி நிலா முற்றத்திலே’ பாடினார்.

 

vettaikkaran%20m.g.r.jpg  

 

தமிழில் முதன் முதலாக ‘கவ்பாய்’ காஸ்ட்யூமில் வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர். ‘வெற்றி! வெற்றி!’ என்று ஓடி வர, புரட்சி நடிகரின் தோள்களை அணைத்து சாவித்ரி தாராளமாகக் கொஞ்ச,  ‘மஞ்சள் முகமே வருக!  மங்கல விளக்கே வருக!’ பாடலோடு வாகினியில்  நிச்சயித்த தேதியில் படம் சரியாகத்  தொடங்கியது.

வேட்டைக்காரனில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டோம் என்ற கடுப்பு சாவித்ரிக்கு உண்டானது.

மென்மையான அணுகு முறையோடு எப்போதும் பீம்பாயின் இயக்கத்தில் தென்றல் வீசும். அதனாலேயே பீம்சிங் - சாவித்ரி இருவரும் மிகச் சில ஆண்டுகளில் ஒன்பது படங்களில் இணைந்து பணியாற்ற முடிந்தது. அது ஓர் அபூர்வ சாதனை. தமிழில் சாவித்ரி நடித்து அதிகப் படங்களை இயக்கிய பெருமை பீம்சிங்கையே சேரும்.

தேவர் பீம்சிங்கிங்கிற்கு நேர் எதிர். வாகினியில் வேட்டைக்காரன் படப்பிடிப்பு காட்டு தர்பாராகக் காட்சியளித்தது. எம்.ஜிஆர். வர தாமதம் ஆகும். அப்போது எம்.ஜி.ஆரைக் காணாமல் டீ கொடுக்கும் பையன்களைக் கண்ட மாதிரி ஏசி அடிக்கவும் செய்வார் தேவர்.  

வேட்டைக்காரனில் வேண்டா வெறுப்பாக நடித்த போது, அன்றாடம் சாவித்ரி சந்தித்த சங்கடங்கள் ஏராளம். அவற்றைச் சுடச்சுட ஆரூர்தாஸிடம், கொட்டித் தீர்த்தார்.

‘இதென்ன ஷூட்டிங்கா இல்லே. யுத்த களமா?  ஒரே சத்தம். அடிதடி கலாட்டாவாயிருக்கு. எங்க வீட்டுக்காரரு அப்பவே சொன்னாரு. உனக்கும் தேவருக்கும் சரிப்பட்டு வராதுன்னு.    

தேவர் வேட்டிய மடிச்சிக்கட்டிக்கிட்டு ப்ரொடக்ஷன் ஆளுங்களை வெரட்டி வெரட்டி  அடிக்கிறாரு. ஹீரோ என்னன்னா எதையுமே கண்டுக்காம இருக்கிறாரு. இப்படியொரு ஷூட்டிங்கில் நான் இதுவரை நடிச்சது கிடையாது. ஏன்... பார்த்தது கூட இல்ல.

ஒக்காரவே விட மாட்டேங்கிறாரு தேவர்.  ரிகர்சல் பாக்குறதுக்குள்ளே டேக் டேக்னு அலறுறாரு. எனக்கு ரொம்ப நெர்வஸா இருக்கு.  இப்படின்னு முந்தியே தெரிஞ்சிருந்தா, நான் ஒத்துக்கிட்டு இருக்கவே மாட்டேன். மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணி கால்ஷீட் வாங்கிட்டு கூத்தடிக்கிறீங்க.

இனியும் நான் இங்க நடிக்க மாட்டேன். இந்த ஒரு படமே எனக்குப் போதும் சாமி. இதோட என்னை விட்டுடுங்க. அப்படிப் பதற்றத்தோட பணம் சம்பாதிக்கணும்ங்கிற அவசியம் எனக்கு இல்லை. என் டைப்புக்கு இது சரி வராது. ஏன் தேவர் பிலிம்ஸ்ல நடிக்க ஒத்துக்கிட்டேன்னு எல்லாரும் கேக்குறாங்க.’

ஆனால் வேட்டைக்காரனில் சாவித்ரி  சலிப்போடா தெரிகிறார்? அதுவே அவரது நடிப்பின் சாகஸம். சாவித்ரி அதுவரையில்  வன விலங்குகளுடன் நடித்தவர் அல்ல. காட்டு மிருகங்களுடன் அவர் நடிக்க, சாவித்ரிக்குப் பிரத்யேக வழி காட்டியவர் வாத்தியார். அதை சாவித்ரியும் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

vettai%20karan%20still%20taken%20from%20  

 

‘மகாதேவியில் முதன் முதலாக  எம்.ஜி.ஆருடன் நடித்தேன்.  அப்போது, தாய்க்குப் பின் தாரம் அமோக வெற்றி அடைந்திருந்தது. அதில் வந்த மாட்டுச் சண்டைக் காட்சி தமிழ்ப்பட உலகில் புதிய திருப்பம். தமிழ்ப் படங்களில் சிருங்காரம், வீரம்  இரண்டிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இந்தப் புதுமையே அவருடைய படங்களைச் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்க்கச் செய்தது. 

அந்தந்த சீனுக்குத் தகுந்தபடி நம்மை நடிக்கத் தயார் செய்து விடுவார்  எம்.ஜி.ஆர். காட்சிகளுக்கேற்றவாறு நம்முடைய நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொடுப்பார். ஆனால் நடிக்கும் போது மட்டும் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று வற்புறுத்திச் சொல்லுவார்.  

‘நன்றாக நடிக்க வேண்டியதுதான். ஆனால் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.  பட முதலாளிகள் நம்மை நம்பி நிறையப் பணம் போட்டுப் படம் எடுக்கிறார்கள்.  நாம் கவனமாக நம்முடைய காட்சிகளை  முடித்துக் கொடுக்க வேண்டும். நம்மால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும்படி செய்து விடக்கூடாது.’ என்பார் எம்.ஜி.ஆர்.’

1963 தீபாவளிக்கு சாவித்ரி நடித்து பரிசு, கற்பகம் என இரண்டு வெற்றிப் படங்கள் வெளியாயின. ஆனால் அதைக் கொண்டாட சாவித்ரி சென்னையில் இல்லை. வேட்டைக்காரன் ஷூட்டிங்கிற்காக ஊட்டி அவுட்டோரில் இருந்தார்.

‘ஒரு கதாநாயகன் கதை சொன்னான்’ என்று கல்லட்டி நீர்வீழ்ச்சியில்  எம்.ஜி.ஆருடன் ஆடிப் பாடினார்.

மறு நாள் தீபாவளி. எம்.ஜி.ஆர். வள்ளல். யூனிட் மொத்தத்துக்கும் வேட்டி சட்டையோடு, கைச்செலவுக்கு இருநூறு ரூபாய் பணமும் வழங்கினார். மக்கள் திலகத்துக்குத் தான் ஒன்றும் சளைத்தவர் கிடையாது என்று சாவித்ரியும் நிரூபித்தார்.

அவரும் டைரக்டர் திருமுகம் உள்படத் தொழிலாளர் அனைவருக்கும் இருநூறு ரூபாய் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 1963ல் அதன் மதிப்பு ஒரு பவுனை விடவும் அதிகம். அப்படியெல்லாம் தீபாவளியின் போதும் வீடு திரும்பாமல் கூட, அருமையாக நடித்துக் கொடுத்த சாவித்ரிக்கு நடந்தது அவமானம் மட்டுமே.

வாகினியில் வி.ஐ.பி.களுக்கான வேட்டைக்காரன் சிறப்புக் காட்சி. எம்.ஜி.ஆரும்-வி.என். ஜானகியும் வந்து விடவே விரைந்து மணி அடித்து விட்டார் தேவர். டைட்டில் தொடங்கிய ஒலியைக் கேட்டதும், சாவித்ரியின்  முகம் சிவந்தது. உள்ளே நுழையப் பிடிக்காமல் சட்டென்று, வேகமாக காரைத் திருப்பி  கோபத்துடன் வெளியேறினார். அவரை வரவேற்று அழைத்துச் செல்லக் காத்திருந்த ஆரூர்தாஸ் அதிர்ந்து நின்றார்.

சாவித்ரியின் கூடவே பிறந்தவை முன் கோபமும்  சுயமரியாதையும். மறுநாள் காலை. மனக் கொதிப்பு அடங்காமல் தொலைபேசியில் ஆரூர்தாஸிடம் நியாயம் கேட்டார் சாவித்ரி.

‘நேத்து ராத்திரி நான் ப்ரொஜெக்ஷனுக்கு வந்தது எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் தெரியுமா?’

‘நான் சொல்லல.’

‘எதுக்குப் பயம்? சொல்ல வேண்டியதுதானே. விரட்டி விரட்டி வேல மட்டும் வாங்கத் தெரியுது. நாள் தவறாம கரெக்டான டயத்துக்கு வந்து எவ்வளவு ஒத்துழைச்சி நடிச்சேன். எனக்காகக் கொஞ்சம் காத்திருக்கக் கூடாதா? குடியா முழுகிடும்?’

ஆண் ஆதிக்கம் மிக்க கோலிவுட்டில் ஒரு நடிகை அனைத்துத் தருணங்களிலும் அடங்கி நடக்க வேண்டும். இல்லாவிடின் அவர் தூக்கி வீசப்படுவார். அத்தகைய விதிகளை அநாயாசமானத் தன் நடிப்பாற்றலால் அன்றே வீழ்த்தி எறிந்தவர்  சாவித்ரி. அதன் விளைவு விரைவில் தெரிந்தது.

 

savv.jpg  

 

யோகானந்த் மதுரை வீரன், காவேரி, ராஜாதேசிங்கு, பார்த்திபன் கனவு, போன்ற முத்திரைச் சித்திரங்களின் டைரக்டர். பின்னாளில் ‘தாய்,  நான் வாழ வைப்பேன், வா கண்ணா வா’ உள்ளிட்ட  சிவாஜியின்  மிக அதிகமான சினிமாக்களை இயக்கியவர்.

பாசமலர்  கதையை எழுதிய கொட்டாரக்கராவோடு இணைந்து  ‘பரிசு’  படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். ஹீரோ. அப்போது நடந்த அவலம் டைரக்டரின் வார்த்தைகளில்: 

‘எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.  எனது இயக்கத்தில் சரோ கால்ஷீட் குளறுபடிகள் செய்ததால், அவரை எங்களது தயாரிப்பில் போடத் தயங்கினேன்.

‘பரவாயில்லை. நான் உங்களை அனுப்பியதாக, சரோஜாவிடம் கூறுங்கள். கால்ஷீட் தருவார்.’ என்று எம்.ஜி.ஆர்.  சொன்னதும், எனது சுயகவுரவத்தையும் பாராமல் அட்வான்ஸ் பணத்தை எடுத்துக் கொண்டு சரோஜாதேவியின் வீட்டுக்குப் போனோம்.

சரோவின் அம்மாவும், சரோவும் எங்களிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டு, ‘மற்ற விஷயங்களை எங்கள் மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள்.’ என்று முகத்தில் அடித்தாற்போல்  கூறியதுடன் வீட்டினுள்ளே சென்று விட்டனர். 

எனக்கு வந்ததே ஆத்திரம். இனி சரோஜாதேவியே வேண்டாம் என்று நடந்ததை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

‘சரி, அவருக்குப் பதிலாக யாரைப் போடப் போறீங்க?’ என்றார்.

சாவித்ரியை என்றேன். ஓகே சொன்னார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்.- சாவித்ரி நடித்த பரிசு நன்றாக ஓடியது. தொடர்ந்து அவர்களையே ஜோடியாக வைத்து ‘வாழ்வே வா’ என்ற படத்தை ஆரம்பித்தேன்.

பூஜை போட்டு இரண்டு நாள்கள் மாத்திரம் படப்பிடிப்பு நடைபெற்றது. எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துத்  தருவார் என நம்பி,  தி.நகர். ஜி.என். செட்டித் தெருவில் மூன்றரை வருடம் ஆபிஸ் வைத்திருந்தேன். ஷூட்டிங் நடக்காமல் வெறும் அலுவலக நிர்வாகம் நடந்ததில் எனக்கு  நாலு லட்சம் நஷ்டமானது. அதை என் வீட்டை விற்று சரி செய்தேன்.

நான் எம்.ஜி.ஆர். சொல்படி சரோஜாதேவியை நாயகியாகப் போடாமல், சாவித்ரியைப் போட்டு  எடுத்ததால்  ‘வாழ்வே வா’  படம் ‘வாழ்வே போ’என்று என்னை அழ வைத்தது.’   

1964 தைத் திருநாளில் வெளியானது பத்மினி பிக்சர்ஸ் ‘கர்ணன்’ வண்ணச் சித்திரம்!  பந்தலுவின் பிரம்மாண்டம் உண்டாக்கிய எதிர்பார்ப்பு, நடிகர் திலகம் - நடிகையர் திலகம்- என்.டி.ராமாராவ் கூட்டணியின் அற்புத நடிப்பு அத்தனைக்கும் முன் வேட்டைக்காரன் சராசரி என்றே எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் நினைத்தார்கள். ஒட்டு மொத்தத் தமிழர்களின் எண்ணமும் அதுவே.

வாத்தியாரே எதிர்பாராத வண்ணம்  அதிக செலவின்றி கருப்பு வெள்ளையில் தயாரான வேட்டைக்காரன் வசூலில் முரசு கொட்டியது.

‘மெதுவா மெதுவா தொடலாமா... என் மேனியில் உன் கை படலாமா...’

உள்ளிட்ட லவ் டூயட்டுகளில் சரோவுக்கும் கூடுதலாகவே எம்.ஜி.ஆரை கட்டிப் பிடித்து நெருங்கி நடித்தார் சாவித்ரி. தமிழகமெங்கும் அன்றைய கார்த்திகை ராத்திரிகளில் இன்பத் தத்தளிப்பு!

சாவித்ரியின் உற்சாக உத்சவத்தை அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கிறார் கலாப்ரியா.

‘அது வேட்டைக்காரன் பார்த்துவிட்டு வந்த முன்னிரவு. சாவித்ரி என்னமா நெருங்கி நடிச்சிருக்கா. பரிசு படத்தை விட ஓவர்.   ஜெமினி பார்த்தார்னா செத்தார். எனத் தெருவில் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருந்தன.

இன்னக்கி ராத்திரி கனவுலே சாவித்ரி அத்தை வரப்போறாலே... எங்க வீடுதான் முதல்ல இருக்கு. முதல்ல என் கனவுலதாம்லே வருவா.’ என்று சொல்லிவிட்டு மஞ்சள் முகமே வருக என்று பாடினான்.

‘ஏல,  ஒரு கதாநாயகன் கதை சொன்னான் இந்தக் கண்ணுக்குள்ளும் அந்த நெஞ்சுக்குள்ளும்...’  பாட்டு இப்ப வரும்லே போய்க் கேட்போமா’.   

‘சொல்லப் பொறுக்குமா... தியேட்டரை நோக்கி ஓடினோம்.’ - கலாப்ரியா

இன்னமும் சின்னத்திரைகளில் வாரம் தவறாமல் வேட்டைக்காரன் ஒளிபரப்பாகிறது. 

வேட்டைக்காரன் வெற்றியடைந்தும், அதோடு தேவர் பிலிம்ஸூக்கு சாவித்ரி டாட்டா காட்டிவிட்டார். சொல்லையும் செயலையும் ஒன்றாக பாவிக்கும் உயர்ந்த குணம் சாவித்ரிக்கு. இரட்டை நாக்கு அவருக்கு   இல்லை.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி- 8. தென்றலும் புயலும்

 

 


1964.  சாவித்ரி உச்ச நட்சத்திரமாக இரண்டரை இலட்சம் சம்பளம் வாங்கிய வருடம். அவரது வாழ்வில் மறக்க முடியாத ஓர் ஆண்டாக ஆகிப் போனது. வேட்டைக்காரனின் விஸ்வரூப வெற்றியோடு தொடங்கி, ‘ஆயிரம் ரூபாயில்’ அட்டகாச நடிப்போடு பூர்த்தியானது. ஆனால்  டிசம்பரில்  ஜெமினி-சாவித்ரி ஜோடிக்கு ஏற்பட்ட இயற்கை பேரிடர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இடையில் சாவித்ரி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் திடீரென்று மேடைப் பிரவேசமும் செய்தார். ஓய்.ஜி. மகேந்திரனின் தாயார், ‘திருமதி. ராஜலட்சுமி’யுடன், ‘பாவம் பலராமன்’ என்ற அமெச்சூர்  நாடகத்தில்  பங்கேற்றார். அதில் நடிப்பதற்காக சாவித்ரி காட்டிய அக்கறையும், ஆர்வமும், இன்முகமும், ஈடுபாடும்  நடிகையர் திலகத்துக்கே உரியவை.  இன்றைக்கு வாசித்தாலும் பாவம் பலராமனில் சாவித்ரி மடிசார் மாமியாக கூடு விட்டு கூடு பாய்ந்தது மிக சுவாரஸ்யம்! 

‘எழும்பூர் பொழுதுபோக்கு சங்கத்தின் 50 வது ஆண்டு விழாவில் ‘பாவம் பலராமன்’ என்ற நாடகம் நடைபெற்றது. அதில் திருமதி ராஜலட்சுமிக்கு  பலராமன் எனும் ஆண் வேடம். அன்றைய சிறப்பு விருந்தினர்கள் ஜெமினி கணேஷ் - சாவித்ரி. பின்னர் அவர்களிருவரும் ராஜலட்சுமி என்கிற ராஷ்மியை எங்கே  பார்த்தாலும், ஜோடி நாயணமாகி

‘என்ன பலராமன் சார் சவுக்கியமா?’ என்று அமர்க்களமாகக்  கிண்டல் செய்தார்கள்.

பாவம் பலராமனில் துடுக்கு வெடுக்கு ‘அம்மாமி ரேவதி’. அந்த வேடம் சாவித்ரிக்கு மிகவும் பிடித்து விட்டது. கஸ்தூரி பாய் நிலையத்தின் நிதி உதவிக்காக பாவம் பலராமன் நடக்க இருந்தது. சாவித்ரியை அதில்  நடிக்கச் சொன்னார் ராஷ்மி. தட்டாமல், தயங்காமல் சட்டென்று  சரி என்றார் சாவித்ரி.

ஓர் அரிதார மோகத்தில், ஒப்பனை தாகத்தில் மடிசாரோடு மேடையில் தோன்ற  சம்மதித்து விட்டாரே தவிர,  சாவித்ரிக்கு எங்கே  ட்ராமாவில் தலை காட்ட நேரம் இருக்கப் போகிறது என நினைத்தார்கள் ஒய்.ஜி.பி. தம்பதியினர்.

ஆனால் நடிகையர் திலகம் சொன்ன சொல் தட்டாதவர். அவரது வீட்டிலேயே முதல் ஒத்திகை தொடங்கியது. பாவம் பலராமனின் டைரக்டர் ராஷ்மியின் கணவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி.

 

Mahanati-Savitri.jpg

 

‘நடிகையர் திலகமாயிற்றே... நாம் போய் அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பதா...  என்கிறத் தயக்கத்தில் மவுனம் சாதித்தார். சாவித்ரி விடவில்லை.

‘இந்த நாடகத்தில் நடிக்க எல்லாரை விடவும் நான் தான் அதிகம் பயப்படுகிறேன். நான் சரியாகச் செய்யா விட்டால், மக்கள்  ‘பாவம் சாவித்ரி!’ என்பார்கள். கூச்சப்படாமல் அவ்வப்போது திருத்தம் சொல்லுங்கள்.’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தான் செய்தது சரியா எனக் கேட்டு கேட்டு நடித்தார். யானைக்கும் அடி சறுக்கி விடக் கூடாது என்கிற அச்சம்  ஆழ் மனத்தில் அரித்தது. டைரக்டரை நடித்துக் காட்டச் சொல்லியும் சில  இடங்களில் மெருகேற்றிக் கொண்டார்.

இன்ன மாதிரியாக நடித்தால் இன்னும் காமெடியாக இருக்கும் என்றால்,  மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். அமெச்சூர் ட்ராமா தானே... என்கிற அலட்சியம் அறவே இல்லை.  இரண்டே நாள்களில்  வசனம் அனைத்தும் அத்துபடி ஆகி விட்டது.

நடிகையர் திலகம் தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து, மாறி மாறி ஜொலி ஜொலித்த நெருக்கடியான பொழுது.

சாவித்ரி சினிமா ஷூட்டிங் முடிந்ததும், இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ரிகர்சலில் பங்கேற்றார். ஒரே நாளில் ஏற்கனவே இரண்டு மூன்று  படங்களில் நடித்த களைப்பே இருக்காது. உற்சாகமாக ஒத்திகையில் ஒத்துழைத்தார்.  

மிகச் சாதாரண  புதுமுக ஹீரோயின்கள் கூட, மிகச் சில நாள்களிலேயே அலட்டிக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.

‘இன்னிக்கு நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும், என் போர்ஷனை முதலில் பார்த்துடலாம்.’ என்ற நச்சரிப்பு தாங்காது.

சாவித்ரி மிகுந்த பொறுமையோடு எல்லாரும் நடித்து முடிக்கும் வரை  காத்து நின்றார். ‘முதல்ல நான் நடிச்சிட்டுக் கிளம்பறேனே...’ என்று அடம் பிடித்தது கிடையாது. மற்றவர்கள் நடிக்க வேண்டிய கேரக்டர்களையும் அவர்களுக்கு நடித்துக் காட்டினார். அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் தானே என்று எவரையும் அவமதித்தவர் அல்ல.

பாவம் பலராமனில் பிராமணத் தமிழ் அதிகம். சாவித்ரி மூன்று முறை ஒரு டயலாகை சொல்லிப் பார்த்து,  டைரக்டர் ஓகே செய்த பிறகே, அடுத்த வசனம் பேச ஆரம்பிப்பார்.

தன்னையும் அறியாமல் தப்பும் தவறுமாக ஏதாவது உளறினால், ‘கை கொடுத்த தெய்வம் - கோகிலாவாகி’  வயிறு குலுங்கக் குலுங்க   வாய் விட்டுச் சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்கவே முடியாது. நள்ளிரவு தாண்டியும் ஒத்திகை  தொடர்ந்தது.

ரிகர்சலுக்குப் பிறகு  சாவித்ரி மட்டும்  தனியே  திரும்ப மாட்டார். வழியில் யாராவது  இறங்க வேண்டுமென்றால் அவர்களையும் ஏற்றிக் கொண்டு கார் பறக்கும்.

‘அன்னிக்கு என்னை சாவித்ரி, அவங்க வண்டியிலேயே ட்ராப் செஞ்சாங்களே..!’ என  உடன் நடித்தவர்கள்  பெருமைப்பட்டுக்கொண்டார்கள். நள்ளிரவில் ஒரு திரை தேவதையோடு, தங்களின் கனவுக்கன்னியோடு  பயணித்ததை காலமெல்லாம் எண்ணிப் பரவசம்  அடைந்தார்கள்.

ஒத்திகையைப் பார்க்க ஜெமினி கணேஷ், ஏ. நாகேஸ்வரராவ்  போய் இருக்கிறார்கள். ஆலோசனை... அது இது என்று மூச்சு விட மாட்டார்கள். நடிப்பு நெருப்பிடம் நெருங்க பயம்!

சாவித்ரிக்கு  இரண்டு வாரம் ஹைதராபாத்தில் தெலுங்கு ஷூட்டிங் வேறு. அதற்குள் அதிகமாக  காமெடி சீன்களைப் புதிதாகச் சேர்த்து விட்டார் ஒய்.ஜி.பி. சாவித்ரி சென்னை திரும்பிய போது நாடகத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே இருந்தன. வேலைப் பளு பற்றி அலட்டிக் கொள்ளாமல், சாவித்ரி விரைவாக கூடுதல் வசனங்களையும் கற்றுக் கொண்டு பிரமாதப் படுத்தினார்.

தமிழ் நாடகத்தில்  நடிக்க முதன் முதலாக சபை ஏறிய தினம். பூஜை சமயத்தில் சாவித்ரிக்கு உள்ளூறப் பதற்றம். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மணி அடித்தார்கள். மடிசார் மாமி வேஷத்துக்காக 400 ரூபாய் மதிப்பில் நீல நிறத்தில், ஒன்பது கெஜம் பட்டுச் சேலையைக்  கட்டிக் கொண்டு நடித்தார் சாவித்ரி.

‘கோயில் வாசல்லயும் கிணத்தடியிலும் எனக்காக வந்து பல்லை இளிச்சிண்டு நின்னப்ப, தோணலையா இதெல்லாம்...?’

‘ஆண்டி பெத்தது அஞ்சும்  குரங்கும்பாங்க... சரியாய்த்தான் இருக்கு.’

‘நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. விஜயனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு. அதைக் கேட்டவுடனே எலக்ட்ரிக் பில்லை பார்த்த மாதிரி ஷாக் அடிச்சி குதிக்கிறார்...’

என்றெல்லாம் மிகச் சரளமாக பிராமணத் தமிழில் அசத்தினார் சாவித்ரி. ஓர் இடத்தில் வசனத்தை மறந்து விட்டார். ராஷ்மி மெள்ள எடுத்துக் கொடுத்தார். சட்டென்று சுதாரித்து சாவித்ரி சரியாகப்  பேசி விட,  பலத்தக் கைத்தட்டல்கள்.

அமெச்சூர் நடிகைகள் மேடைகளில்  எப்போதும் தங்களது தடுமாற்றங்களை இலேசில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  டயலாக் எடுத்துக் கொடுப்பதை அவர்கள் விரும்பியதும் கிடையாது. ஆனால் சாவித்ரி கள்ளங் கபடம் அற்றவர். அந்த சீன் முடிந்ததும் ராஷ்மியிடம் சென்று, மிக்கப் பெருந்தண்மையுடன்

‘நீங்க அந்த வசனத்தை எனக்காக எடுத்துச் சொன்னீங்க. ரொம்ப நல்லதாப் போச்சு. இல்லாவிட்டால் மறந்து போய் இருப்பேன். உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்’ என்றார்.

-------------------------

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!

ஜெமினி மிகவும் வெளிப்படையானவர். தன் வாரிசுகள் குறித்து  பூரிப்பும் பெருமிதமும் பொங்கப் பொங்கப் பேசுவதில் ஆர்வமுள்ளவர். அவரது முதல் குடும்பத்தில் பாப்ஜிக்கு நான்கும் பெண்கள். அவர்களில்  கணேசன் ஜெமினியில் சேருவதற்கு முன்பே பிறந்தவர் டாக்டர் ரேவதி. மற்றவர்கள்  டாக்டர் கமலா செல்வராஜ், நாராயணி, எய்ட்ஸ் நிவாரணத்தில் உலகப் புகழ் பெற்ற டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீதர். ஆகியோர்.

 

Savitri%20and%20gemini.jpg  

 

ஜெயஸ்ரீ, கார்த்திக்குடன் ஸ்ரீதரின்  ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் ஜோடியாக  நடித்துள்ளார். அவருடைய நிஜப் பெயர் ஜெயலஷ்மி. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தின் டைரக்டர் -  அறிமுக இயக்குநராக தேசிய விருது பெற்ற  ஸ்ரீதர்ராஜன். ஜெயஸ்ரீயின் கணவர்.

இரண்டாவது பந்தத்தில் 1953ல் சாவித்ரி, ஜெமினியின் வாழ்க்கையில் நுழைந்த பிறகு, புஷ்பவல்லி-ஜெமினி  இருவருக்கும் பிறந்தவர்கள் நடிகை ரேகா, மற்றும் அவரது தங்கை ராதா.

மூன்றாவதாக சாவித்ரிக்கு விஜயசாமுண்டேஸ்வரி. ஒரே குழந்தை! ஆக  ஏழு பெண்களைப் பெற்றும்,  காதல் சாம்ராஜ்யத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தியாக சந்தோஷ நடை போட்டவர் நடிக மன்னன்.

திருவிளையாடல் ஷூட்டிங்கில் நிகழ்ந்தவை... நடிகையர் திலகத்தின்  பக்திச் சொற்களில் :

‘சிவாஜி என்னை அம்மாடி என்று அழைப்பது வழக்கம். நான் முருகனை மடியில் வைத்துக் கொண்டேன். ‘முருகனை மடியில் வெச்சிட்டு இருக்கே. அம்மாடிக்குப் பையன் தான் பொறக்கப் போறான்’ என்றார் சிவாஜி. நாங்களும் ஆவலாகவே காத்திருந்தோம். அதற்குள் எங்களுக்கு ஏற்பட்ட பயங்கர சோதனை...?

ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பது ஜெமினி கணேசனின் ஆவல்.  நண்பர் வித்வான் லட்சுமணன் அவரிடம், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறான்’ என ஜோசியம் சொல்லி இருந்தார்.

வேறு சில நண்பர்களும் ராமேஸ்வரம் போய் வந்தால் நல்லது என்று கூறினர்.  அதனால் நான், ஜெமினி கணேசன், டாக்டர் லீலாவதி, அவருடைய கணவர் டாக்டர் ராமகிருஷ்ணன், என் தாயார், மகள் விஜி எல்லாரும் கொடைக்கானலில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுப் போனோம். ஒரே நாளில் சென்று விட்டுத் திரும்புவதாகத் திட்டம்.

ரயில் பாம்பன் பாலத்தின் மீது மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. காற்று அதிகமாக இருந்தது. அப்போது நான்  ‘இந்தப் பாலம் காற்று அதிகமாக அடித்தால் அசைந்து கொடுக்குமோ என்னவோ... இரும்பு உத்தரங்கள் விழுந்து விடுமோ?” என்றேன். ‘நான் சொன்னவாறே ஆயிற்று!’

‘ராமேஸ்வரத்தில் என்ன நடந்தது...? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சென்னை வானொலி நிலையத்தின் வானிலை அறிக்கையில்-

‘நாகப்பட்டினத்தில் மீண்டும் புயல் சின்னம்’ மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஐந்தாம் எண் கொடி ஏற்றப்பட்டுள்ளது’ என்கிறச் செய்திகள்  இயல்பானவை.

1964. டிசம்பர் 21ஆம் தேதி அன்றும் ‘புயல் மெதுவாக நகர்ந்து நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும்’ என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது.

சென்னைத் தமிழர்கள் உல்லாசமாக மிட்லண்டில் நவராத்திரியும், பிளாசாவில் படகோட்டியும்,  சித்ராவில் தாயின் மடியிலும் பார்த்து ரசித்தார்கள். அதே நேரத்தில் புயல் நாகப்பட்டினத்தை நட்டாற்றில் விட்டு விட்டு தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்தது. ராமேஸ்வரத்தில் காற்றின் ரகளை ஆரம்பமானது.

ராமேஸ்வரம் - மண்டபம் இடையே மிக அதிசயமானது பாம்பன் பாலம். கடல் மீது கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மீது ரயில் போகும். அதே சமயத்தில் கடலில் அந்த வழியாக கப்பல் ஏதும் வந்தால், கப்பல் செல்வதற்கு வசதியாக பாலம் இரண்டாகப் பிரிந்து வழி விடும். 

தனுஷ்கோடியை வெள்ளம் சூழ்ந்த நேரத்தில், பாம்பன் பாலத்தில் பிரயாணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஆவேசமான சுனாமி அலைகள்  பாலத்தோடு ரயிலையும் சேர்த்து அருந்திச் சுவைத்தன.  வெள்ளம் வடிந்த பின்பு பாலமும் அதன் மீது ஓடிய ரயிலும், தடங்களின்றி தண்ணீரில் தொலைந்து போய் இருந்தன. ரயில் பயணிகள் அனைவருமே கடலுக்கு பலி ஆனார்கள். 

தனுஷ்கோடிக்குள் கடல் புகுந்ததால் அடையாளம் தெரியாமல் மொத்த ஊரும் அழிந்தது. கடற்கரையில் மணலுக்குப் பதிலாக பிணங்களின் குவியல். அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். நாளிதழ்களில் அதிர்ச்சி தரும்  செய்திகளை வாசித்த மக்கள் நடுநடுங்கிப் போனார்கள்.

‘ஜெமினி கணேசன் - சாவித்ரி என்ன ஆனார்கள்...?’ என்று டிசம்பர் 24 - காலையில் தினசரிகள் கொட்டை எழுத்துக்களில்  கேள்வி எழுப்பின. சாதனைக் கலைஞர்களைக் காணாமல்  தமிழ்நாடு ஒட்டு மொத்தமாகப் பதறியது. 

 

savithri%20%20gemini,with%20thalaivar%20

 

ஜெமினி - சாவித்ரி உயிர் தப்பியது அதிசயத்திலும் அதிசயம்! அவை  அவர்களது அவஸ்தை வார்த்தைகளில்  இனி:

‘ராமேஸ்வரத்தில் சுவாமி கும்பிட்டு விட்டு தனுஷ்கோடி சென்றோம். அங்கு கடலில் குளித்தோம். அன்று டிசம்பர் 22 ஆம் தேதி. குளித்ததும் ராமேஸ்வரத்துக்குத் திரும்பி விடலாம் என்றேன் சாவித்ரியிடம்.மேலும் ஒரு நாள் இங்கேயே தங்கி விட்டுப் போகலாம் என்றாள்.

நான் பிடிவாதமாக எல்லாரையும் புறப்படச் செய்தேன். மாலை நாலரை மணிக்கெல்லாம் ரயிலில் ராமேஸ்வரம் திரும்பி விட்டோம். ரயில் நிலையம் அருகிலேயே பயணிகள் குடிலில் தங்கினோம். இரவு எட்டு மணிக்கு நான் படுத்துத் தூங்கிவிட்டேன்.’  ஜெமினியை மேலே பேச விடாமல், சாவித்ரி குறுக்கிட்டுத் தொடர்ந்து கூறியவை.   

 ‘எட்டரை மணிக்குப் புயல் அடிக்க ஆரம்பித்து விட்டது. நள்ளிரவு நேரத்தில் சூறாவளி. ஓ! என்ற சத்தத்துடன் காற்று சுழன்று சுழன்று அடித்தது. காற்று இவ்வளவு பலமாக இருக்கிறதே, என்ன ஆகுமோ...!’என்று நானும் டாக்டர்களும் கவலையோடு பேசிக் கொண்டோம். இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.  நரிகளின் ஊளைச் சத்தம்... எங்களை நடுநடுங்கச் செய்தன. வர வர புயல் அதிகமாகியது. அவர் விழித்துக் கொண்டார். சினிமாவில் வருவது போன்ற பயங்கர சம்பவம், வாழ்க்கையிலும் நடக்கிறதே என்று எண்ணினேன்.

அதிகாலை மூன்றரை மணி முதல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோரப் புயல் உச்சக்கட்டத்தை அடைந்தது. எங்கள் விடுதியின் கூரைகள் பறந்து விட்டன. விடிந்ததும் எங்கும் வெள்ளக்காடாக இருந்தது.

‘என்னம்மா... ரோட்டில் ஆறு மாதிரி தண்ணி ஓடுது...!’ என்று என் மகள் விஜயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

 கோயிலுக்குப் போகிற வழியெல்லாம் மரங்கள் வேரோடு விழுந்து கிடந்தன.  வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. 

‘இவ்வளவு பயங்கர புயல்  வீசி இருக்கிறதே... நாங்கள் திரும்பிச் செல்ல ரயில் கிடைக்குமா?’ என்று கேட்டோம்.’ரயிலா ? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய் விட்டதே! தனுஷ் கோடி கடலில் மூழ்கி விட்டது என்றார் கோயில் அதிகாரி.

அன்று முழுவதும் ராமேஸ்வரத்தில் தங்கினோம். நாங்கள் ஆயிரம் ரூபாய் கொண்டு போய் இருந்தோம். அதை அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க உதவினோம்.

25 ஆம் தேதி காலை எழுந்ததும், எப்படி ஊர் திரும்புவது என்ற கவலை ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் ஒரு ரயில் என்ஜின்  மட்டும் நின்று கொண்டிருந்தது.அதில் ஒரே ஒரு பெட்டியை மட்டும் இணைத்து  எங்களை பாம்பனில் கொண்டு விடச் சொன்னோம்.

டிரைவர், ‘ரயிலை ஓட்டுவதற்கு  நிலக்கரி இல்லை.  நான் போய் எடுத்து வருகிறேன்.’ என்றார். போனவர் திரும்பவே இல்லை.

மாலை  நாலு மணிக்கு பாம்பனில் இருந்து வந்தது ரயில். புயல் நிவாரணப் பணிகளை கவனிக்க மந்திரி கக்கன் இறங்கினார். விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்கள் விழுந்தன. அவற்றை அதிசயமாகப் பார்த்த என் மகள், ஆறு வயது சிறுமி விஜி அதை ஒன்று இரண்டு என்று எண்ணினாள்.

26 ஆம் தேதி. காலை. அமைச்சர் கக்கன் சென்ற ரயிலிலிலேயே  நாங்கள் பாம்பன் போனோம். அங்கிருந்து மோட்டார் படகில் ஏறி மண்டபத்தை அடைந்தோம். அங்கு எங்களுக்காக கார் காத்திருந்தது. மாலையில் மதுரை விமானத்தில் கிளம்பி சென்னை திரும்பினோம். தனுஷ்கோடி புயல் நிவாரண நிதிக்காக   செஞ்சிலுவை சங்கத்திடம் பத்தாயிரம் ரூபாயும், முதல்வர் காமராஜரிடம் ஐயாயிரம் ரூபாயும் வழங்கினோம்.

 

hqdefault.jpg  

 

1965. ஜூலை 31. ‘திருவிளையாடல்’ ரிலிசானது. ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி மகன் சதீஷ் பிறந்தான். எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஈஸ்வரனின் திருவிளையாடல்களைப் பற்றிய சினிமாவில் நடிக்க நேர்ந்தது. ஈஸ்வரனை, ராமர் பூஜித்த ஸ்தலத்துக்குப் போய் வந்தது.  இப்படியெல்லாம் எங்கள் ஆசை பலிதமாவதற்கு ஒரு சம்பந்தம் இருக்க வேண்டும் என்று  மனம் நினைத்து  நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டது.

சென்னை விமான நிலையத்தில் எங்களைப் பார்த்ததும்,  மாலை அணிவித்து ‘வந்திட்டீங்களா...’ என்று கட்டிப்பிடித்து கதறி அழுதார் மனோரமா.  நண்பர் கே. பாலாஜி, டைரக்டர் ஏ.பி. நாகராஜன்,  ஆகியோரும் வரவேற்க வந்திருந்தார்கள்.’- ஜெமினிகணேசன் -சாவித்ரி. 

ஜெமினி நேராக பாப்ஜியின் இல்லத்துக்கு விரைந்தார். மறுபிறவி எடுத்த அன்புள்ள அப்பாவைப் பார்க்க அவரது மகள்கள் துடித்துக் கொண்டிருந்தனர். பாப்ஜி பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

‘கணவனே கண் கண்ட தெய்வம்- மனாளனே மங்கையின் பாக்கியம்’ என வாழ்ந்த மாதர் குல மாணிக்கம். குணசுந்தரி.கற்புக்கரசி! அவர் காதல் மன்னனுக்கு ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-9. தங்கச் சரிகை சேல!

 

 


எதிலும் அகலக்கால் ஆகாது என்பார்கள். ‘அக்கம்மா பேட்டை பரமசிவம் நாகராஜன்’ என்கிற ஏ.பி. நாகராஜன்’ ஆர்வக் கோளாறில் ஒரே நேரத்தில் அநேக படங்களில் தன் கைப் பணத்தையும் கடின உழைப்பையும் முதலீடு செய்தார். பல்வேறு காரணங்களினால் அவை தோல்வியில் முடிந்தன.

மீண்டும் எழுந்திருக்க முடியாத அடி. வி.கே. ராமசாமியும், ஏ.பி.என்னும் இணைந்து நான் பெற்ற செல்வம், மக்களைப் பெற்ற மகராசி போன்ற வசூல்  படங்களைத் தயாரித்தவர்கள். நவராத்திரி கதைக்கான உரிமையும் வி.கே. ஆரிடம் இருந்தது. அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, மறுபடியும் யுகக் கலைஞன் சிவாஜி கணேசனை நாடிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

நெப்டியூன் ஸ்டுடியோவில் அன்னை இல்லம் ஷூட்டிங். வி.கே.ராமசாமியும் சிவாஜியும் பங்கேற்கும் காட்சி.ஏ.பி. என், வி.கே.ஆரிடம் கெஞ்சாத குறையாக வற்புறுத்தினார்.

‘நீங்க  எப்படியாவது சிவாஜிகிட்டே சொல்லி, நவராத்திரி எடுக்க எனக்குச் சீக்கிரமா கால்ஷீட் வாங்கிக் கொடுக்கணும்’

 

navarathiri%20sivaji%20film.png  

 

‘அது உடனடியா கிடைக்காதே. அவர் அவ்வளவு பிசி. கர்ணன் அது இதுன்னு ஏகப்பட்ட படங்கள் வரிசையில் இருக்கு. சிவாஜி பிலிம்ஸ்னு சொந்த பேனர்ல வேற நடிக்கப் போறார். சரோஜாதேவிக்காகக் காத்திருக்கிறாங்க. இப்ப எங்கே போய் நாம முந்திக்கிறது...?’

‘1952லிருந்தே சிவாஜி பிஸின்றது எனக்கும் தெரியும். காலையில் 9 மணியிலிருந்து சாயங்காலம் 5 மணி வரைக்கும் தானே நடிக்கிறார். எனக்கு 6 லிருந்து ராத்திரி 9 வரைக்கும் ஒரு அரை கால்ஷீட் வாங்கித் தந்தீங்கன்னா நான் பொழைச்சுக்குவேன்.’

‘வாழ்ந்து கெட்டவர்’ என்கிறப் பரிதாபத்தோடும், வித்தியாசமான கதைக்கருவோடும் ‘அன்னை இல்லத்தை’ அண்டி நின்றார் ஏ.பி.என்.  குரு பார்வையை விட உயர்ந்ததாகப் படைப்பாளிகள் நினைத்தது  சிவாஜிகணேசனின்  விழி அசைவை. அது காட்டிய வழியில் வெளிச்சம் பெற்றவர்கள் ஏராளம்! தமிழ் சினிமாவில் முதல் மண்வாசனைக் கலைஞன் ஏ.பி.என்!  அவரது எழுத்தாற்றல் திரும்பவும் உச்சம் தொட உதவியது.

‘நான் தற்போது மிகச் சிரமமான நிலையில் இருக்கிறேன். சிவாஜி எனது ‘நவராத்திரி’ படத்தில் 9 வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கையில் நயாபைசா கிடையாது. ஆனால் சினிமாவை எடுத்து வெளியிட வேண்டும். மிகப் பெரிய அளவில்  நவராத்திரி பற்றியச் செய்திகளையும் விளம்பரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவுங்கள். அதைப் பார்த்ததும் பைனான்சியர்கள் என்னைத் தேடி வருவார்கள்.’

‘மின்னல்’ என்கிற பெயரில் சினிமா பப்ளிசிடி கம்பெனி நடத்தியவர் எம். உதுமான் முகையதீன்.  அவரிடம் ஏ.பி. என். வைத்த  வேண்டுகோளுக்கு நல்ல பலன் கிடைத்தது.

பூஜ்யத்திலிருந்து தொடங்கியது நடிகர் திலகத்தின் முதல் நூறு! சிவாஜியும் சாவித்ரியும் நமக்குக் கிடைத்திருக்காவிட்டால், பல அற்புதமானப் பொற்காலச் சித்திரங்களைத் தமிழ் சினிமா நிச்சயம் இழந்திருக்கும்.

புத்தம் புதிதாக ‘ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ்’ என்கிற பேனரில் நவராத்திரி உருவானது.

நள்ளிரவில் காதலன் ஆனந்தனைத் தேடி அலையும் பரிதாபகரமான ‘நளினி’ என்ற வித்தியாசமான ரோல் சாவித்ரிக்கு. 9 வேடங்களில் நவரஸங்களைக் கொட்டித் தீர்த்த சிவாஜிக்குப் போட்டியாக சாவித்ரி ஒவ்வொரு எபிசோடிலும் நடிப்பில் இலக்கியம் படைத்தார்.

அதிலும் திரையில் பத்து நிமிஷம் நடைபெறும் ‘சத்தியவான் சாவித்ரி’ தெருக்கூத்து விசேஷ விருந்து.

எனக்குத் தெரிந்து 85 ஆண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில், வேறு எந்த வேற்று மொழி நாயகியும் சாவித்ரியைப் போல் தெருக்கூத்து ஆடியது கிடையாது. அதைப் பற்றி சிவாஜி தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, சாக்கியர் கூத்து போன்றவற்றைச் சிறு வயதிலேயே பார்த்துப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டவன் நான். அவற்றில் பாடுகின்ற முறை, வசனம் பேசுகின்ற லாகவம், மேடையில் தோன்றும் விதம் எல்லாமே சற்று வித்தியாசமானவை.

நவராத்திரி படத்தில் அத்தகையக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் அக்காட்சியை அமைத்த டைரக்டருக்கும், எனக்குச் சமமாக ஆடிய சாவித்ரிக்கும் அந்தப் பெருமை சேரும். நவராத்திரியில் நடித்தது எனது திறமைக்கு ஒரு சோதனை.’

சிவாஜி பார்த்துப் பரவசப்பட்டு நடித்ததை சாவித்ரி பார்க்காமலேயே வெளுத்துக் கட்டினார்.

 

navarathri-night-7-savitri.png  

 

‘வந்தேனே... ஏஏஏ...  வந்தேனே... ஏஏஏ...  ராஜாதி ராஜன் மகன் மகாராஜன் பிறந்ததாலே ராஜாதிராஜன் வந்தேனே...

வந்தேனய்யா வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா...’

எனத் தொடங்கும் தெருக்கூத்து சிவாஜி- சாவித்ரியின் ஜோடிக் குரலிலேயே முழுவதும் பாடப்பட்டது. இடை இடையே ‘வசீகர வயாகரா’ வசனங்களும் நிறைய உண்டு.

‘இன்னும் மணமானதோ... ஓஹோ!  இல்லையோ... சொல்லு. இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையும் ஆகாது.’

‘சொல்ல வெட்கமாகுதே. ஓஹோ!  இன்னும் மணமில்லை.’ சொந்தமான தந்தை தாயார் எண்ணிடவுமில்லை.’

‘அதாகப்பட்டது ப்ரபோ...’

‘பெண் பாவாய்’

‘என் திருமணத்தைப் பற்றி  தாய் தந்தையர் நினைக்கவும் இல்லை. நானும்...  -  நேற்று வரை  அதைப் பற்றிச்   சிந்திக்கவும் இல்லை’

‘இன்றென்னவோ...’

‘அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ஸ்வாமி!’

‘ரூப சித்திர மாமர குயிலே உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட நாடி நிற்கிறதா...!   அன்பினால் இன்பமாய் இங்கு வா ...’

‘அட்டி ஏது? இதோ கிட்டி வாரேன்.’

‘சித்தமானேன். சமீபத்தில் நீ வா’

‘மன்னா என் ஆசை மறந்திடாதே!’

‘சகி!  உன் ஆசை  நானோ மறப்பதில்லை.’

‘மறந்திடாதே!’

‘மறப்பதில்லை.’

‘தங்கச் சரிகை சேல எங்கும் பளபளக்க’ என கூத்தில் பாடியவாறு தோன்றும் சாவித்ரியின் தஞ்சாவூர் பொம்மை போன்ற பாந்தமான தோற்றமும், அங்க அசைவுகளும், காட்டும் முக பாவங்களும், ஸ்வாமி! என்று இழுத்துக் கூப்பிடும் அழகும், கைக்குட்டை வீசி ஆடும் ஆட்டமும், கூத்து முடிந்ததும் மூச்சு வாங்க போடும் கும்பிடும் அபாரம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதது.

தாய்மைப் பேறடைந்தத் தனக்காகக் காத்திருந்து, வடிவுக்கு வளைகாப்பில் நஷ்டத்தைச் சந்தித்த ஏ.பி. என்னுக்குக் கை கொடுத்துத் தூக்கி விடும் தூய உள்ளம் சாவித்ரிக்கு இருந்தது. அதற்காகத்  தூக்கத்தையே மறந்து, அதுவரையில் கடைப் பிடித்த  கொள்கையையும்  தியாகம் செய்தார் நடிகையர் திலகம்.

‘இரவு ஷூட்டிங்கில் நடிப்பதை நான் பொதுவாக விரும்புவதில்லை.அப்படி நடித்தால் மறுநாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.அதற்குத் தேவையான ரெஸ்ட் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

‘மிகுந்த வெளிச்சத்தில் குளோஸ் அப் அதிகமாக எடுத்துக் கொள்ளாதே. கூடியவரையில் இரவு ஷூட்டிங் வேண்டாம். முகத்தின் பொலிவு கெட்டு சீக்கிரம் முற்றிப் போய் விடும்.’

என்று அடிக்கடி என்னுடன் நடித்த என்.டி. ராமாராவும், நாகேஸ்வர ராவும் சொல்வதுண்டு.  அது ஓரளவுக்கு உண்மை.  என்னுடைய முகம் கள்ளமில்லாத குழந்தை முகமாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் குறிப்பிடுவது உண்டு. அதற்குக் காரணம், நான் கூடிய வரை இரவு ஷூட்டிங்கை மேற்கொள்ளாதுதான்.

ஆனால் நவராத்திரி மட்டும் விதிவிலக்கு. படப்பிடிப்புக்கும் பெயருக்கும் நல்ல பொருத்தம். இரவு வேளைகளில் தான் அந்தப் படத்தின் ஷூட்டிங்ஸ். சரியான ராத்திரிப் படம்! டைட்டிலுக்கேற்றவாறு அமைந்து விட்டது.

நவராத்திரியில் நடிக்கிற போது அது அண்ணனின் 100வது படம் என்று எனக்குத் தெரியாது. சிவாஜியோடு யார் நடித்தாலும் அவரது நடிப்புக்கேற்ற ரீ ஆக்ஷன் பண்ணியாக வேண்டும். அவர் கூட நடிப்பது ரொம்பவும் எளிதானது.

நாம் டல்லடித்து விடக்கூடாது என்ற வீம்பும் பிடிவாதமும் கூட நடிப்பவர்களுக்குத் தானாகவே வந்துவிடும். சத்யவான் சாவித்ரி தெருக்கூத்தை முழுக்க முழுக்க அவரிடமே பாடம் பண்ணிக்கொண்டு நடித்தேன். காரணம் தெருக்கூத்தை நான் பார்த்தது கிடையாது.

பைத்தியக்கார ஆஸ்பத்திரி  சம்பவங்களில் டாக்டராக வரும் சிவாஜியை, அவர் முன்னிலையிலேயே சில காட்சிகளில் குறும்பாக இமிடேட் செய்து நடித்தேன். நான் அவ்வாறு நடிப்பதை அவர் ஆர்வமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எத்தனைப் பெரிய நடிகர் சிவாஜி! நான் அவரை கேலி செய்வதாக நினைக்காமல், பெருந்தன்மையுடன் என்னைப் பாராட்டினார். ரசிகர்களும்  அதற்குக் கலகலப்பாகக் கைத்தட்டினார்கள். மற்ற பிரபல ஹீரோக்களிடம் அது சாத்தியமா என்ன...?’ - சாவித்ரி.

‘நவராத்திரியில் கதாநாயகியாக சாவித்ரி ஜே ஜே என்று நடித்து இருக்கிறார்’ என குமுதம் நடிகையர் திலகத்தைப் பாராட்டியது.

பீம்சிங்குக்குப் பிறகு ஏ.பி.என்.இயக்கத்தில் சிவாஜி- சாவித்ரி தொடர்ந்து சங்கமித்தனர். நவராத்திரியை அடுத்து  வரலாறு காணாத ஆன்மிக பிரம்மாண்டமாக திருவிளையாடல் உருவானது. சாவித்ரி அதில் ஈஸ்வரி. சக்தி ஸ்வரூபமாக, பெண் உரிமைக்காக சிவனிடம் போராடும் வேடம். ‘சிவா’ ஜியுடன் ஒப்பிடும் போது சாவித்ரிக்கு நடிப்பாற்றலைக் காட்டும்  வாய்ப்பு குறைவு.

இருந்தாலும் படகோட்டி சரோவுக்குப் போட்டியாக, அலைகளில் எதிர்பார்ப்புடன் ஏராளமான காஸ்ட்யூமில்  சாவித்ரியும் பாடினார்.  ‘ ஏலே எலோ... நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு’ பாடற் காட்சி அடங்கிய கடற்கரை சம்பவங்கள்  ரசிகர்களுக்கு நிறைவளித்தது.

வெகு காலம் வரையில் இலங்கை வானொலியில் திருவிளையாடல் வசனங்களை ஒலிபரப்பி, ‘நல்ல தமிழ் கேட்டீர்கள்’ என அறிவித்தார்கள். ஒவ்வொரு ஆடி பிறந்ததும் அம்மன் உற்சவங்களில் மூலை முடுக்கெல்லாம்  திருவிளையாடல் ஒலிச்சித்திரம்  கேட்கும்.

 

Thiruvilayadal.jpg  

 

வலைத்தளம், செல்போன், வாட்ஸ் அப், ட்ப்ஸ் மேஷ் என ஏதேதோ வந்து விட்டன. நாத்திகம் கொடி கட்டிப் பறந்த  1965ன்  ஆடி அமாவாசை முதல்,  ஐம்பது ஆண்டுகளாக  திருவிளையாடலில் சாவித்ரியின் சந்தனக்  குரல், நம் செவிகளில் திரும்பத் திரும்ப பக்திமணம் கமழச் செய்கிறது.

‘திருவிளையாடலில் எனக்குப் பார்வதி வேஷம். அதுவும் பச்சை நிற மேக் அப். அதைப் போட்டுக் கொள்ளும் போது எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அப்புறம் படத்தில் அதுவே பிரமாதமாகப் பொருந்தி விட்டது.

பரமசிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் அப்படியோர்  அமைப்பை நீங்கள் எங்கே பார்ப்பது? நாங்கள் காலண்டரைப் பார்த்து அமைத்துக் கொண்டோம்!’ -  சாவித்ரி.

சென்னையில் முதன் முதலாக சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி என்று மூன்று தியேட்டர்களில் மகத்தான வசூலுடன் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் திருவிளையாடல். தேசிய அளவில் பாராட்டுப் பத்திரமும் அதற்குக் கிடைத்தது.            

கே. பாலசந்தரின் நாணல் படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ பாடல் காட்சியை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதில் ‘சாந்தி’யில் திருவிளையாடல் ஓடிய  காலம் கண்களில் தெரியும்.

கற்பூர ஆரத்தி!

திருவிளையாடலைத் தொடர்ந்து உடனடியாக ஏ.பி. என். கூட்டணியில் சரஸ்வதி சபதம் தொடங்கியது. சாவித்ரி- சரஸ்வதி. பத்மினி- பார்வதி. தேவிகா- மகாலட்சுமி.சிவாஜி கணேசன் நாரதராகவும், சரஸ்வதியால்  ஊமையாக இருந்து ஞானம் பெற்றப் புலவராகவும் இரு வேடங்களில் நடித்து முப்பெரும் தேவியருக்கும் வேலை இல்லாமல் செய்து விட்டார்.

மகன் சதீஷை வயிற்றில் சுமந்தவாறு கர்ப்ப ஸ்திரீ சாவித்ரி, சந்தோஷ சங்கடத்துடன் நடித்த படம் சரஸ்வதி சபதம்.  அம்மாவோடு ஷூட்டிங்குக்குச் சென்ற ஆறு வயதுச் சிறுமி விஜியை வியப்பில் ஆழ்த்தினார் டைரக்டர் ஏ.பி. நாகராஜன். அன்று ‘கோமாதா என் குலமாதா’ என்கிற ஏழு நிமிட பாடலைப் படமாக்கினார்கள்.

தினமும் முதல் காட்சி படமாகும் வேளையில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி, கலைஞர்கள் பய பக்தியோடு சாமி கும்பிடுவது சினிமா சடங்கு. ஏ.பி. என். என்ன செய்தார் தெரியுமா...?

சாவித்ரி முழுதாக அரிதாரம் பூசி சர்வ அலங்காரத்துடன், சரஸ்வதி தேவியாக சத்திய லோகம் செட்டுக்குள் நுழைவார். நடிகையர் திலகத்தை அரங்க வாசலில்  நிறுத்தி, அவருக்கு உச்சி முதல் பாதம் வரை திருஷ்டி கழித்து கற்பூர ஆரத்தி காட்டினார்.

சரஸ்வதி சபதத்துக்கு முன்னும் பின்னும் எத்தனையோ பக்திச் சித்திரங்கள் திரையை ஆக்ரமித்து இருக்கின்றன. அவ்வளவு ஏன் நாடு விடுதலை பெறும் வரையில் புராணப் படங்களே அதிகம் தயாரானது.

கவுன் அணிந்து கவர்ச்சி காட்டிய அநேக கனவுக் கன்னிகள் மார்க்கெட் இழந்ததும், அம்மன் வேடத்தில் ஆன்மிகம் பரப்புவது கோலிவுட் வாடிக்கை. ஆனால் சாவித்ரிக்கு நடந்தது போல் அவர்கள் யாருக்காவது நேர்ந்திருக்கிறதா ...?

ஒரு வேளை தொடர்ந்து சாமி படங்களில் நடித்துள்ள ‘நம்ம வீட்டு தெய்வம்’ கே.ஆர்.விஜயாவை, யாராவது ஏ.பி. என். போல் இறைவியாக அர்ச்சித்து இருக்கிறார்களா...?  தெரிந்தால் சொல்லுங்கள்.

1966  ஆயுத பூஜைக்கு வெளியாகி  சரஸ்வதி சபதமும் சென்னை ‘சாந்தி’யில்  133 நாள்கள் ஓடியது. சாவித்ரி டைட்டில் ரோலில் நடித்து தமிழில் வெற்றி பெற்ற கடைசிப் படம் அதுவே.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-10. கோவா மாம்பழமே!

 

 

மூ

வேந்தர்களில் வாரி வழங்குவதில் எம்.ஜி.ஆர். வள்ளல்! நடிகர் திலகம் கர்ணன்!  எம்.ஜே. எம். ஜேசுபாதம் போன்றோர் கணேசனின் நன்கொடைகளைப் பட்டியலிட்டு, ‘நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி’ என்ற பெயரில் 2015ல் நூல் வெளியிட வேண்டி இருக்கிறது.  இரக்கத்தின் இமயமாகப்  ‘பொன்மனச் செம்மல்’ போற்றப்படுவது போல், ஏனோ  வி.சி. கணேசனை யாரும் கொண்டாடுவது கிடையாது.

மூன்றாமவர் ஜெமினி கணேசன்.

‘பண விஷயத்தில் அவருக்கு அஜாக்கிரதை ஜாஸ்தி. எங்காவது மறந்து விடுவார். அவருடைய பணத்தைப் பிறர் கவனித்துக் கொள்வதே வழக்கம். தன்னுடைய கையிலோ பையிலோ பணத்தை எடுத்துக் கொண்டு வர மாட்டார். அவரிடம் பணம் இல்லாததைக் கண்டு, ஜெமினி செலவு செய்யாதவர் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அது சரி அல்ல.’

‘ஜெமினி கஞ்சனல்ல’ என்றத் தலைப்பில் நடிகையர் திலகம் பேட்டி கொடுக்கும் அளவுக்கு, பெயர் ராசியோ என்னவோ  நடிப்புச்செல்வம் ஜெமினி கணேசனும்,  ‘பராசக்தி’ கணேசனைப் போல் பாமர மக்களால் மட்டும் அல்ல கோலிவுட் குடும்பத்தினராலும் ‘தார்ப்பாயில் வடி கட்டிய கஞ்சன்’ என பகிரங்கமாக அழைக்கப்பட்டார்.

காதணி விழா போன்று சின்ன நிகழ்வுகளுக்குச் சென்றாலும், ‘தாத்தா சொத்து பேரனுக்குத்தானே’ என்று பாட்டனாரின் சட்டை பாக்கெட்டிலிருந்தே நூறு ரூபாயை எடுத்து மொய் எழுதி விட்டு வந்தவர் ஜெமினி கணேசன்!

கதாநாயகிகளில் யார் கருணையின் கங்கை ?  நிச்சயமாக  சாவித்ரிக்கு முதலிடம் கிடைக்கும். மற்றவர்களை விட அவருக்கு தயாள குணம் தாராளமாக உண்டு. 

1942ப் பிறகு  1960 நவம்பரில்  சென்னை கடும் புயலால் பாதிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளில் இல்லாத பலத்த சேதம். மழை வெள்ளத்தில் தவித்த ஏழை மக்களுக்கு அப்போது உதவிய ஒரே நடிகை சாவித்ரி மட்டுமே.(ஆனந்த விகடன் 27.11.1960)

இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டால் தானா? நாட்டுக்கு எதிரிகளால் ஆபத்து நிகழ்ந்த போதெல்லாம் முந்திக் கொண்டு, அள்ளி அள்ளி வழங்கியதில் சாவித்ரியை மிஞ்சியவர் யார்?

பாகிஸ்தான் யுத்த நிதிக்காக ஸ்ரீதரும் சிவாஜியும் தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் இணைந்து  நட்சத்திர இரவுகள் நடத்தினர். அதில் நவீன துஷ்யந்தன் - சகுந்தலை நாடகம் முக்கியமானது. ஜெமினியும் சாவித்ரியும் ஜோடியாக நடித்தார்கள். மேடையில் அவர்கள் இணைந்து அரிதாரம் பூசியது அதுவே முதலும் கடைசியும். கிட்டத்தட்ட 12 லட்சங்களுக்கும் மேல் வசூலானது. அதைப் பெற்றுக் கொள்வதற்காகவே சென்னை வந்தார் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.

 

savitri%20giving%20jewels.jpg  

 

அதுவும் போதாமல் சிவாஜி, சாவித்ரி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும்  சாஸ்திரியிடம் கொடுத்தார்கள். பிரதமருக்கு முன்பாக சாவித்ரி தன் காதுகளிலிருந்து கம்மலைக் கழற்றும் புகைப்படம் புகழ் பெற்றது.

1965 அக்டோபர் கடைசி வாரம். கண்ணதாசனின் அண்ணனும் பட அதிபருமான ஏ.எல்.ஸ்ரீநிவாஸன் தலைமையில், சிவாஜி கணேசன்- பத்மினி, ஜெமினி கணேசன்- சாவித்ரி,  சந்தியா-ஜெயலலிதா, சந்திரபாபு-தேவிகா, ராஜசுலோசனா  ஆகியோர், போரில் காயமுற்ற நமது படை வீரர்களுக்கு ஆறுதல் கூற டெல்லியில் குவிந்தார்கள்.  ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுடன் முதலில்  மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது.

பின்னர்  சிப்பாய்களுக்கு மத்தியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் குறிப்பிடத்தக்கவை சிவாஜி- சாவித்ரியின்  சத்யவான் சாவித்ரி தெருக்கூத்து. பத்மினி, சந்திரபாபு, ராஜ சுலோசனா பங்கேற்ற பாங்ரா நடனம். ஜெயலலிதாவின் நாட்டியம் ஆகியன.

அக்டோபர் 27ல் ஜலந்தர் ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார்கள். விழுப்புரம் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் கலைஞர்களைக் கலங்கச் செய்தது.

‘போரில் எனக்குக் கைகள் போய் விட்டன. நான் உங்களை என் தலையால் வணங்குகிறேன்!’ என்றார். நடிப்பின் இமயம் அவரை கட்டிக் கொண்டு நிஜமாகவே கதறி அழுதார்.

பட்டாளத்துச் சிங்கங்களிடம் சிவாஜி-ஜெமினி தமிழிலும், பத்மினி மலையாளத்திலும், சாவித்ரி-தேவிகா  தெலுங்கிலும், சந்தியா-ஜெயலலிதா  கன்னடத்திலும் நலம் விசாரித்தனர்.

பாகிஸ்தான் யுத்தத்தின் போது மாத்திரம் அல்ல. ஒவ்வொரு போரிலும் சாவித்ரியின் பங்களிப்பு  தொடர்ந்தது. பங்களாதேஷ் நிதிக்காக மான் குட்டி ஒன்றை ஹைதராபாத்தில் ஏலம் போட்டார்கள். அதில் வென்றவர் சாவித்ரி. எம்.ஜி.ஆரை விட  அதிகம் கேட்டு 32 ஆயிரம் ரூபாய்க்கு மான் குட்டியை ஏலம் எடுத்தார்.

-----------------------

ஜெமினி கணேசன் - ‘எத்தனை மெழுகுவர்த்தி?’

சந்திரபாபு -‘ 54.’

சாவித்ரி - (சற்றே உணர்ச்சி வசப்பட்டு லேசான திணறலுடன்)  எனக்கு வயது... எனக்கு வயது... 30 தான்.

சந்திரபாபு - முப்பது வேணாம். ஸ்வீட் சிக்ஸ்டீன் என்பார்களே... 16 போதும். பதினாறும் பெற்று பெருவாழ்வு  வாழணும்.

பலத்த கைத்தட்டல்கள் ஒலித்தன. சந்திரபாபு சொற்படியே 16  மெழுகுகள் ஒளிர்ந்து வெளிச்சம் தர, விஜயா ஸ்டுடியோவில்  1966ல்  சாவித்ரியின் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது.

 

fr25chandra1_jpg_5635g.jpg  

 

ஜெமினிகணேசனின்  திரை வாழ்க்கையில் சாவித்ரிக்கும், வி.சி.கணேசனுக்கும் முன்பே சிநேகிதக் கொடி கட்டிப் பறந்தவர் சந்திரபாபு. விஷம் குடித்து உயிரை விடும் தருணத்திலும் தன் சகா, ஜெமினி கணேசனை  சினிமா சிகரத்தில் அமர்த்திப் பார்க்க ஆசைப்பட்டத் தன்னலமற்றத் தன்னிகரில்லாக் கலைஞன்.

எஸ்.எஸ்.வாசனுக்கு  பாபு எழுதிய கடிதத்தின் முக்கிய வரிகள் இவை:

‘பல தடவை நடிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு உங்கள் ஸ்தாபனத்தில் முயற்சித்தேன். கிட்டவில்லை. வெளியிலும் கிடைக்கவில்லை. இன்று காலை மிகவும் பிரயாசைப்பட்டு உங்களைச் சந்தித்தேன்.ஆபிசில் வந்து பார் என்று தட்டிக் கழித்து விட்டீர்கள்.

உங்கள் ஸ்டுடியோவில் இந்த ஜென்மத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமென்று நம்பிக்கையில்லை. மனம் நொந்து நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது என்று முடிவு செய்து விட்டேன்.

என் நண்பன் கணேசன், அழகன்; திறமை மிக்கவன்; ஆர்வமுள்ளவன். அவனுக்காவது ஒரு நல்ல வாய்ப்பளியுங்கள். குட்பை!’

சாவித்ரியின் ஒப்பனை வாழ்க்கையில் சிவாஜி, சந்திரபாபு இருவரும் முக்கியமானவர்கள். சிவாஜி ‘பாசமலர்’அண்ணன் என்றால், பாபு  உற்சாகமூட்டும் உத்தமத் தோழன். அவர்கள் இருவருக்கும் ஜெமினி-சாவித்ரி ஜோடி, நேசம் நிரம்பி வழிய வழிய நிறையவே  ‘சியர்ஸ்...’ சொல்லி இருக்கிறார்கள்.

ஜெமினி-சாவித்ரி-சந்திரபாபு காம்பினேஷனில் உருவான காமெடி திரைப்படம் மாமன் மகள். அதில் சாவித்ரிக்காக ஏங்கி சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் பாடலுக்காகவே மாமன் மகளுக்கு ரிபீட்டட் ஆடியன்ஸ் குவிந்தனர்.

மூன்று திலகங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் இது. ஒருவர் நடிகர் திலகம் சந்திரபாபு. மற்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மூன்றாமவர் நடிகையர் திலகம் சாவித்ரி. இம்மூவரும்  பங்கேற்ற படம் மாடி வீட்டு ஏழை.

சந்திரபாபு நடிகர் திலகமா...! என்கிற உங்களின் வியப்புக்குறி வினா  எனக்குப் புரிகிறது. அவர் கணேசனையும் மிஞ்சும் திறமைகள் படைத்தவர். விழுப்புரம் சின்னையா கணேசனுக்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்த அமைந்த சந்தர்ப்பம், தூத்துக்குடி பனிமயதாசன் என்கிற ஜே.பி.சந்திரபாபுவுக்குக் கிடைக்கவில்லை அவ்வளவே.

‘பேசும் படம்’ கணேசனை நடிகர் திலகமாக அறிவித்தது. ‘குமார ராஜா’ சினிமா விமர்சனத்தில் ‘குமுதம்’பாபுவை நடிகர் திலகமாகக் கொண்டாடியது.

‘தமிழ் நாட்டில் நடிகர் திலகங்கள் இருவர் உண்டு என்று நிருபிப்பவர் போல் நகைச்சுவையோடு கூட, நகை கலப்பே இல்லாத ஆழ்ந்த உணர்ச்சி மிக்க கட்டங்களையும், பிறவித் திறமையுடன் பாபு கையாளும் முறை மகிழ்ச்சியூட்டுகிறது.’

பயாஸ்கோப்பில் கணேசன் நாயகன் மாத்திரமே. பாபுவோ பாடகர்.  கதாசிரியர். தயாரிப்பாளர். இயக்குநர்  என அநேக முகங்கள் உடையவர். கணேசனுக்கே ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் பின்னணி பாடிய பெருமை பாபுவுக்கு  உண்டு. நடிப்பு அசுரன் சிவாஜி கணேசனை  தன் அனாயசமான நடிப்பால் கட்டிப் போட்டவர். சபாஷ் மீனாவே சாட்சி!

சந்தர்ப்பவசத்தால் சந்திரபாபு மாடிவீட்டுஏழையில் இணைய நேர்ந்தது. பாபுவின் ஆகாய ஆற்றலை உணர்ந்த அவரது சிநேகிதர்கள், ஒரு படம் இயக்கச் செய்யச் சொல்ல, பாபு புதைகுழியில் விழுந்தார்.

எம்.ஜி.ஆர். என்கிற சிங்கத்தைக் கட்டிப் போடும் ரிங் மாஸ்டராக ஆசைப்பட்ட பாபு, அசிங்கப்பட்டுப் போன கதை உங்கள் அனைவருக்கும் முன்னமே தெரிந்திருக்கலாம். அந்த அவஸ்தையைக் கூற வந்த பாபு, சாவித்ரியின் பெருமை பேசியுள்ளார். அதுவே இங்கு நமக்குத் தேவை.

‘எந்த நேரத்திலும் அன்போடு உதவுகிற சாவித்ரியிடம், என் வீட்டின் பேரில் 25,000 ரூபாய் கடன் கேட்டேன். அவரும் மறுப்பு சொல்லாமல் பணம் கொடுத்தார்.’ - சந்திரபாபு.

அந்தத் தொகை  மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தர  உதவியது.

சந்திரபாபு சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டு பானுமதியின் பரணி ஸ்டுடியோவில் புரட்சி நடிகருக்காகக் காத்திருந்தார். ஏ.எல். ஸ்ரீநிவாசனின் காசில் போடப்பட்ட குடிசை செட், வாத்தியாரைக் காணாமல் களை இழந்தது.

காலை  பூஜையில்  இருந்திருக்க வேண்டிய வள்ளல், ஒப்பனையோடு தலை காட்டிய நேரம் முற்பகல் பதினோரு மணி. இரண்டு நாள் படப்பிடிப்போடு மாடி வீட்டு ஏழை நின்று போனது.

எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைக்காததால் சந்திரபாபுவுக்கு சகிக்க இயலாத நஷ்டம். அதுவரையில் சம்பாதித்த சொத்துகள் மொத்தமும் ஜப்திக்கு வந்தன. அப்படியும்  டைரக்டர் பைத்தியம் ஓயவில்லை. தமிழில் சாவித்ரிக்கும் நாயகி வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது.

1966ல்  ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ, பாரதி, காஞ்சனா, இரண்டு மூன்று நிர்மலாக்கள்  என ஏகப்பட்டப் புது மலர்கள். நடிப்போடு கவர்ச்சியிலும் முன்னணியில் நின்றனர். இளைஞர்களின் இதயங்களில் சாவித்ரி மெல்ல மெல்ல ‘நேற்றுப் பூ’வாகிவிட்டார்.

அந்த நிலையிலும் சந்திரபாபு நட்புக்கு மரியாதை அளித்து, தோழமைக்குத் தோரணம் கட்டினார். சாவித்ரியை ஹீரோயினாக்கித் துணிச்சலாகப் புதுமையான படம் ஒன்றை அறிவித்தார்.

 

8.jpg         

 

காமராஜர் தலைமையில் பிரமாதமாக  பாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’  துவக்க விழா நடந்தது.

ஓவர் கான்ஃபிடன்ஸோடு மீடியாவில் சந்திரபாபுவின் சத்திய முழக்கம் கேட்டது.

‘பாபு இதுவரை பேசிக்காட்டியதை இந்தப் படத்தில் ஓரளவு செய்திருக்கிறான். அடைக்கலம் என்கிற  ஓர் ஊமை வேலைக்காரன் வேடம் எனக்கு. படம் முழுவதும் ஒரே ஒரு ஆடையில் வருகிறேன். அந்த உடையின் விலை மூன்றே கால் ரூபாய்தான்.  மனோகரும் சாவித்ரியும் பேசும் கட்டம் ஒன்று வருகிறது. செட்டின் ஒரு கோடியில் பேசத் தொடங்கும் அவர்கள், மறு கோடி வரை பேசியபடி வருகிறார்கள்.

‘முக்கியக் கதா பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் சில புதிய உத்திகளைக் கையாண்டிருக்கிறேன்.  அந்த அறிமுகமே பாத்திரத்தின் தன்மையை விளக்கிவிடும். இந்தப் படத்தில் இருந்து எனக்கு நிறையப் பணம் வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் ஒரு கலைஞன். நான் டைரக்டராகி விட்டேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் என் முதலீடு. எனவே நான் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.’ -சந்திரபாபு. 

1966 ஜூன் 17ல் வெளிவந்தது ‘தட்டுங்கள் திறக்கப்படும்.’ இன்றைக்குப் பார்த்தாலும் முற்றிலும் மாறுபட்டப் புதுமையான திரைச்சித்திரமாக உங்களுக்குத் தோன்றும். ஜின் ஜின்னாக்கடி நடனங்களுக்குத் தனி மவுசு ஏற்பட்ட சூழல். சந்திரபாபு மழலைகளைக் கொஞ்சியவாறு பாடிய ‘கண்மணி பாப்பா’ கேட்பாரற்று  ஒலித்தது.

சந்திரபாபுவின் தயாரிப்பு டைரக்ஷன் முயற்சி முற்றிலும் தோல்வியில் முடிந்தது. சாவித்ரிக்கும் புதிய புகழ், திருப்புமுனை ஏதும் அமையாமல் போனது. பயாஸ்கோப் சமூகத்தால் கை விடப்பட்ட கலைஞன் சந்திரபாபு ஒரு வாய்ச் சோற்றுக்கும் வக்கற்று வீதியில் நின்றார். அதற்கானப் பழி சாவித்ரி மீதும் விழுந்தது.    

1967 தைத் திருநாளில் வெளியானது கந்தன் கருணை. நடிகையர் திலகத்துக்கு மீண்டும் உமையவள் வேடம். புதிய சிவன் - ஜெமினி.  சினிமாஸ்கோப் சைசில் ‘சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா’ என்று சிவசுப்ரமணியனின் புகழ் பாடிய சாவித்ரியைப் பார்த்து மக்கள் மனம் வெறுத்துப் போனார்கள். ஒருவரின்  தோற்றத்தை விமர்சிப்பது அநாகரிகம்.

ஓசி பாஸில்  பார்க்காமல் கவுண்டரில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி சினிமா பார்ப்பவர்கள் பாமர ரசிகர்கள். பிரம்மாண்ட சாவித்ரியைக் கண்டு மனம் கலங்கினார்கள். திருவருட்செல்வரில் ‘ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே’ பாடலிலும் மிகப் பருமனான சாவித்ரியே திரையில் தோன்றினார். அவருக்கு கணவராக முதலும் கடைசியுமாக முத்துராமன் காட்சி அளித்தார்.

பணம். காசு.  துட்டு. முக்கியமில்லை சாவித்ரிக்கு. எப்போதும் தனக்குப் பொருந்தாத வேடங்களைத் தவிர்த்து விடுவார். கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா பாசமா படத்தில் ஜெமினிகணேசன் - சரோஜாதேவி ஜோடி. கதையின் முதுகெலும்பான திமிர் பிடித்த மாமியார் வேடத்தில் எஸ். வரலட்சுமி ஒப்பந்தம் ஆனார். அந்த ரோலில் முதல் நாளே அவர் சொதப்ப ஆரம்பித்தார்.

கே.எஸ்.ஜி.க்குத் தன்னுடன் மூன்று முத்திரைச் சித்திரங்களில் பணியாற்றிய சாவித்ரியின் ஞாபகம் வந்தது.

‘நேற்றுப்பூ’ ஆகி விட்டாலும் நடிகையர் திலகம் திறமைகள் வற்றாத தீராநதி.

ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சாவித்ரியைத் தேடி ஓடினார். இரவு நெருங்கும் தருணம். எப்படியும் மறு நாள் படப்பிடிப்பு நடந்தாக வேண்டும். கால நேரம் பார்க்காமல்  பணமா பாசமாவில் அவரை நடிக்கச் சொல்லி கெஞ்சி கேட்டார் கே.எஸ்.ஜி.

‘வாத்தியாரே! உங்களின் கலை ஆர்வத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்களே! ஜெமினி கணேஷின் நிஜமான மனைவி நான். அவருக்கு மாமியாராக இந்த சாவித்ரி நடித்தால்  ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா! உங்களின் படம் ஓஹோவென்று ஓட வேண்டாமா...?’

எஸ். வரலட்சுமி  சிறந்த நடிகை. நல்ல பாடகி. கந்தன் கருணையில் அவர் பாடிய வெள்ளிமலை மன்னவா சூப்பர் ஹிட். நீங்கள் எதிர்பார்ப்பது போல் அவர் நடிக்கா விட்டால் நான் நடிக்கிறேன். ஹீரோவை மாற்றி விடுங்கள். ஜெமினி கணேஷ் உங்களின் நலம் விரும்பி. நிலைமையைப் புரிந்து கொள்வார். தனக்குப் பதிலாக வேறு ஒருவரை அவரே சிபாரிசு செய்வார்.’ 

சொன்னதோடு மட்டுமல்லாமல் எஸ். வரலட்சுமி வீட்டுக்குச் சென்று கே.எஸ். ஜி.யின் பரிதாபகரமான சூழலை விளக்கினார் சாவித்ரி. அகந்தை, ஆணவம், இறுமாப்பு, ஈகோ, கர்வம், தெனாவட்டு என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏற்ப,  எப்படி நடிக்க வேண்டும் என்று தன்னை விட சினிமாவில் சீனியரான எஸ். வரலட்சுமிக்கு வகுப்பு எடுத்தார் நடிகையர் திலகம்.  சாவித்ரி வீடு திரும்பிய போது இரவு மணி 12.45.

 

panama%20pasama.jpg  

 

அன்றைய பொழுது கே.எஸ். ஜி.க்கு மட்டுமல்ல. தமிழ் சினிமாவுக்கும் மிகப் பிரமாதமாக விடிந்தது. கே.எஸ்.ஜி. எதிர்பார்த்த கம்பீர மாமியாரை எஸ். வரலட்சுமி கண் முன்னே நிறுத்திக் காட்டினார். பணமா பாசமா செட்டுக்குள் நுழைந்த சாவித்ரி, கே.எஸ்.ஜி.யிடம்

‘என்ன வாத்தியாரே! வரலட்சுமி நடிப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்றார்.

சாவித்ரி காலத்தால் செய்த உதவி 1968ல் வசூலில் மாளப் பெரிதாகி நின்றது. ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கமான மதுரை தங்கத்தில் 25 வாரங்கள் ஓடிய ஒரே வெற்றிச் சித்திரம் பணமா பாசமா. அதில் இடம் பெற்ற எலந்தப் பயம் பாடல் அகில இந்தியப் புகழை அடைந்தது. எவர் க்ரீன் ஹிட் என்கிறார்களே... அதற்கு இலக்கணம்  எலந்தப் பயம்!

‘பணமா பாசமாவை எப்போது தியேட்டர்களிலிருந்து எடுக்கப் போகிறீர்கள்...?’ என்று பட விநியோகஸ்தர்களிடம், உருவாக்கியப்  படைப்பாளியே கேட்ட நிகழ்வு அதற்கு முன்போ பின்போ  கோலிவுட்டில் நடந்தது கிடையாது.

தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய அருமையான வாய்ப்பையும் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து, தான் நடிக்காத படத்திலும் நட்போடு தலையிட்டு, அதைத் திரை வரலாற்றில் நிலை நிறுத்திய பெருமை சாவித்ரி ஒருவரையே சேரும்!

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-11. நட்சத்திர நாற்காலி!

 

 


துவரை நீங்கள் அறியாத சாவித்ரியின் ‘ஸ்டார் டைரி’யிலிருந்து சுவாரஸ்யமான சில பக்கங்கள்:

‘நான் முதன் முதலில் பணம் என்று சம்பாதித்தது 11 வயதில். பால்யத்தில் இனிமையாகப் பாடுவேன். விஜயவாடா வானொலி நிலையத்தில் என்னைப் பாட அழைத்தார்கள். அதற்குச் சன்மானமாகப் பத்து  ரூபாய்க்கான காசோலை கிடைத்தது. தொடர்ந்து பாடினேன். தொகையும் படிப்படியாகக் கூடி முப்பது ரூபாய் ஆனது.

 

Savithri_1.jpg  

 

வானொலியில் பாடுவதற்குக் காசு தருவார்கள் என்று கூடத் தெரியாது. பணம் சம்பாதிப்பது பற்றியச் சிந்தனைகள் அரும்பாத  பருவம்! அதற்கான தேவைகளோ அவசியமோ புரியாதத் தருணம். என் குரலால்  கிடைத்த வருமானத்தில் அம்மா எனக்கு ஒரு தங்கமோதிரம் போட்டார்கள்.

அடுத்து  நாட்டியத்தில் புகழ் பெற வேண்டி தினமும் ஆறு மணி நேரம் தொடர்ந்து பரதம், குச்சுப்புடி ஆடப் பயிற்சிகள் மேற்கொண்டேன். ஒரு கலை நிகழ்ச்சியில் எட்டு பவுனில் பதக்கம் பரிசாகக் கிடைத்தது. அதை அழித்து நெக்லஸ் செய்தார்கள். பொன்னாலான ஆபரணங்கள் என்றால்  எல்லாப் பெண்களுக்கும் ஆசை . நான் மட்டும் என்ன விதிவிலக்கா?

தமிழில் மிகப் பிரபலமான ஒரு வேடத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு  தேடி வந்தது. நான் ஏற்க மறுத்தேன். அது என்ன படம் தெரியுமா?

மெட்ராஸ்ல நான் பார்த்த முதல் நாடகம் ரத்தக் கண்ணீர். அது கூட அந்த ட்ராமா  படமாகிறதால, காந்தா ரோல்ல  நான் நடிக்கணும்றதால பார்க்கச் சொன்னாங்க. அதுல வர்ற டயலாகை கேட்டுப் பயந்து  பாதியிலேயே எழுந்து போய்  விட்டேன்.

ரத்தக் கண்ணீர் ஷூட்டிங் தொடங்கியது.  முதல் ஷாட்லயே அடி காந்தான்னு டயலாக் ஆரம்பிச்சுது. ‘பசிக்குது. வீட்டுக்குப் போறேன்னு’ சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.

சினிமால சேர்ந்த புதுசுலயே  8 படங்கள்ளே ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிக்கறது அப்போ பெரிய காரியம். மூணு மாசம் ரிகர்சல் பார்த்துட்டுத்தான் செட்டுக்குள்ளயே நுழைவோம்.கேமராமேன் நிற்கச் சொன்னார்னா... அவர் உட்காருன்னு சொல்ற வரைக்கும் நாங்க உட்கார மாட்டோம். ப்ரொடியூசர், டைரக்டர் செட்டுக்குள்ள வந்தாங்கனா எவ்வளவு நடுங்குவோம் தெரியுமா...?

 

முதலில் நடிக்கத் தொடங்கிய போது எனக்கு பயமும் கூச்சமும் ரொம்பவே அதிகம். யாருடனும் பழக மாட்டேன். ஏன் பேசவும் தயங்குவேன். எனக்கு ஏராளமாகக் காதல் கடிதங்களும் வர ஆரம்பித்தது. அம்மாவுக்குத் தெரியாமல் அதை எங்கே ஒளித்து வைப்பது?

ஒருநாள் உடன் நடித்துக்கொண்டிருந்த ஏ.நாகேஸ்வரராவிடம் என் தவிப்பைச் சொன்னேன்.

‘லவ் லெட்டர்ஸ் பார்த்து பயப்படாதே. ஃபேன்ஸ்கு யாரைப் பிடிக்குதோ அவங்களுக்கு மட்டும் தான் கடுதாசி போடுவாங்க. எல்லாருக்கும் எழுத மாட்டார்கள். சவுத்ல உன்னைத் தங்களோட ஃபேவரைட் டீரிம் கேர்ளா கொண்டாடறாங்க. அதுக்காக நீ  ஜனங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

விசிறிங்க இல்லன்னா நமக்கு இங்கே வேலை கொடுப்பாங்களா...? உன் மேலே அபிமானம் வெச்சிருக்காங்கன்னா நீ பெரிய ஸ்டார் ஆயிட்டேன்னு அர்த்தம். சினிமாவில் நடிக்க வந்த பிறகு இப்படி இருந்தால் எப்படி? எந்த விஷயத்திலும் ஒழுக்கம்,  கவனம், கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது முக்கியம். மற்றபடி சரளமாகப் பேசித் தாராளமாகப் பழகுவதே சரி.’

என்று எனக்கு ஏ. நாகேஸ்வர ராவ் அறிவுரை கூறினார். பின்னர் மெல்ல மெல்ல நான் தைரியம் பெற்றேன்.

 

savitri_devadas.jpg  

 

‘எதையும் ஜாக்ரதையா கேட்டுக் கொண்டு கருத்தைச் செலுத்தி கொஞ்சம் கற்பனை கலந்து நடிக்க வேண்டும்.’ என்பார் என்.டி. ராமாராவ். அவர் சொன்ன மாதிரியே வாழ்ந்து காட்டினார். நர்த்தனசாலா படத்தில் அவருக்கு அர்ஜூனன் வேடம். அர்ஜூனன் விராடனின்  சமஸ்தானத்தில் பிருகந்நளையாக மாறும் காட்சிகளில் நடிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து டான்ஸ் ரிகர்ஸல் பார்ப்பார் என்.டி. ஆர்.    

எங்க  பெரியப்பா மிகவும்  கண்டிப்பானவர். நான் நடிக்க ஒதுக்கிய தேதிகளை ப்ரொடியூசர்கள் யாராவது, பயன்படுத்திக் கொள்ளாமல் போனால், அவருக்கு ரொம்பவும் கோபம் வந்துவிடும். காலை ஆறு மணிக்கு ஷூட்டிங் என்றால் என்னை  ஐந்தரை மணிக்கே செட்டில் உட்கார வைத்து விடுவார். அட்ஜட்ஸ்மென்ட்  என்கிற வார்த்தையே அவருக்குத் தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் என் கால்ஷீட் தேதிகளை நானே பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

‘சாவித்ரிக்கு நடிப்பு வராது- நடனம் ஆடலாம்.’ என்று சொன்ன டைரக்டர் எல்.வி. பிரசாத், பின்னர் சாவித்ரிக்கு டைரக்டரே தேவை கிடையாது என்று பெருமையாகக் கூறினார். பிரசாத் இயக்குநர் மட்டும் அல்ல. நல்ல நடிகரும் கூட. பிரசாத்தே நடித்து முக பாவங்களை வெளிப்படுத்துவார்.

 (பிரசாத்தை திரையில் காண விரும்புகிறவர்கள் கமலின் 100-வது படத்தைப் பார்க்கவும். மாதவியின்  தாத்தாவாக ராஜபார்வையில் எல்.வி. பிரசாத் சக்கை போடு போட்டிருப்பார்.)

மிஸ்ஸியம்மாவில் என்னிடம் ஒரேயடியாக கோபப்பட்டார். எனக்கு ரோஷம் வந்துவிட்டது. அந்தக் காட்சியில் சிறப்பாகவே நடித்து முடித்தேன்.

‘நான் கோபப்பட்டதற்கு வருத்தமா மகளே! உன்னை நன்றாக நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு  நடித்தேன்.’ என்றார் எல்.வி. பிரசாத்.

‘உடம்பை சீராக வைத்துக் கொள். பருமனை குறைத்துக் கொள்.’ என்பார் அடிக்கடி.’

---------------

நீங்கள் எங்காவது சொந்த ஊரிலோ, டூரிஸ்ட் ஸ்பாட்டிலோ, அல்லது மாமன் - மச்சான் தயவில் சினிமா ஸ்டுடியோக்களிலோ ஷூட்டிங் பார்த்திருக்கக் கூடும். ஷாட் ஓகே ஆனதும் இன்றைக்கு, கேரவனில்  ஒளிந்து கொள்கிறார்கள் உங்களின் கனவுக் கன்னிகள். முன்பு அப்படி அல்ல.

 

savi_2.jpg

 

பந்தாவாக கால் மேல் கால் போட்டு ஸ்டார் சேர் எனப்படும் நட்சத்திர நாற்காலியில் ஒய்யாரமாக உட்கார்ந்திருப்பார்கள். அதை முதலில் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சாவித்ரி!

கே. பாலாஜியின் சினிமா கம்பெனியில் ‘நேற்றுப் பூக்கள்’  பயன்படுத்திய டம்ளர் முதலிய பாத்திரங்கள் கூட நட்சத்திரப் பெயரோடு ஜே ஜே என ஜொலிக்கும். சில பிரபலங்கள் தங்களின் அபிமான ஜோடிகள் உபயோகித்த டம்ளரைப் பயன்படுத்தி ஆத்ம சாந்தி பெறுவதும் உண்டு.

ஸ்டார் சேரின் தத்துவம் என்ன? சாவித்ரி மாத்திரம் பயன்படுத்தும் தனி இருக்கை அவ்வளவே.  நாற்காலியின் முதுகில் அவரது பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும். மற்றவர்கள் அமர இயலாது. அது ஒரு வகையான சவுகர்யம்.

ஒரு சினிமாவில் நாலைந்து முன்னணி நடிகைகள் சேர்ந்து நடிப்பது அப்போது சர்வ சாதாரணம். உதாரணமாக சாவித்ரி நடித்த படங்களில்  எம்.என். ராஜம், கண்ணாம்பா, ராஜசுலோசனா, தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜா ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள்.

ப்ரொடக்ஷனில் கொண்டு வந்து போடும் நாற்காலிகளில்  ஷூட்டிங் பார்க்க வரும் விஐபிகளோ, அவர்களது சின்ன வீடுகளோ உட்கார்ந்து விட்டால், வேர்க்க விறு விறுக்க நடித்து விட்டு வரும் நாயகி எங்கு போவார் ?

பையன் சேர் கொண்டு வந்து போடும் வரையில் காத்திருத்தல் சங்கடம். அதனால் சாவித்ரி தன்னிச்சையாக   யோசித்து ஏ. நாகேஸ்வர ராவுடன் கூடிப் பேசி, கலந்து ஆலோசித்து நட்சத்திர நாற்காலியை அறிமுகம் செய்தார். மற்றவர்களுக்குத் தொந்தரவு தராத வகையில் எளிமையாக  நடந்து கொள்ள அவருக்கு அடக்கமாக  ஒரு வழி கிடைத்தது. பின்பு அதுவே அநேகப் புதுமுகங்களின் அட்டகாசத்துக்கும் அட்சயப் பாத்திரமாகவும் ஆனது. 

‘எங்களுக்காக உட்கார தனியா ஒரு ஸ்டார் சேர் கொண்டு வருவதற்கு நாங்கள் முதலில் எப்படிப் பயந்திருக்கிறோம் தெரியுமா?’ - சாவித்ரி.

---------------------------

காரி’கை!

சாவித்ரியின் கார் எண்கள் எம்.எஸ்.இசட் 444. மற்றும்  0288 டிசோடா கார்.

சாவித்ரி பிறந்த வேளையில் பெரியப்பா சவுத்ரிக்கு ‘ஸ்டுடிபேக்கர்’ கார் ஏஜென்ஸி கிடைத்தது.  தாய்ப்பாலின் வாசத்தோடு அவர் முதன் முதலில் பயணித்தது ஸ்டுடிபேக்கரில்.

 

savithri_Gemini2.jpg  

 

ஸோ, கார் வாசனை சாவித்ரிக்கு இயல்பாகவே பிடித்தமான ஒன்றாகி விட்டது. இரண்டு பேர் மட்டும் அமரக் கூடிய டூரர் காரே சாவித்ரியின் ஸ்பெஷல் சாய்ஸ்!

சென்னைக்கு வந்த புதிதில் 14 வயதில், தெலுங்கு சம்சாரம் படத்துக்காக மூன்றே நாள்களில் மெரினா கடற்கரையிலும், மதராஸப் பட்டினத் தெருக்களிலும் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார். 1952ல் சாவித்ரி வாங்கிய முதல் கார் மாரிஸ் மைனர்.

ஜெமினி-சாவித்ரியின் காதல் வாகனமாக பவனி வந்தது 1948 ஆம் மாடல் ஃபோர்டு பெர்பெக்ட். எண் எம்.எஸ்.பி. 9282. 

‘மனம் போல் மாங்கல்யம்’ தயாரித்த நாராயணன் அய்யங்காரிடமிருந்து, 1951ல் ஆறாயிரம் ரூபாய் கொடுத்து ஜெமினி கணேசன் முதன் முதலில் வாங்கியது.

ஷூட்டிங் இடைவேளைகளில் ஓய்வுக்காக சாவித்ரி ஒதுங்கும் அந்நாளைய கேரவன்  அது. ஜெமினிக்கு மிகவும் ராசியான கார். சுப விரயங்கள், மங்கல நிகழ்வுகளுக்கும், மற்றும் மெரினா பீச்சில்  புஷ்பவல்லி மற்றும் சாவித்ரியுடனான ஐ லவ் யூ! அரங்கேற்றங்களுக்கும்  சென்டிமென்டாக அதைப் பயன்படுத்தினார் காதல் மன்னன்.

ஜெமினி- சாவித்ரி மட்டுமல்ல சிருங்கேரி சுவாமிகள், பெருந்தலைவர் காமராஜர், எஸ்.எஸ். வாசன் ஆகியோரும் அதில் பயணித்த  புகழ் அதற்கு உண்டு.

இடது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்து ஹபிபுல்லா சாலை இல்லத்திலிருந்து ஜெமினிக்கோ, ஏவிஎம்முக்கோ, விஜயா- வாகினிக்கோ செல்ஃப் டிரைவிங்கில் அதி வேகமாகச் சென்ற ஒரே திரைத் தாரகை சாவித்ரி மாத்திரமே. பல நாள்கள் அவருக்கும் ஜெமினி கணேசனுக்கும் யார் முதலில் ஸ்டுடியோ போய்ச் சேர்வது என்பதில் பந்தயம் நடக்கும்.

1961ல் ‘எல்லாம் உனக்காக’ படத்தில் கார் ரேசில் கலந்து கொள்ளும் நாயகியாக, சாவித்ரி நடித்தது நிழல் சுகம்!

நிஜத்தில் 1963  ஜனவரியில் நடிகையர் திலகம் சோழவரம் கார் பந்தயத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். சாவித்ரியோடு அன்றைய போட்டியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்கள் ஜெமினி கணேசன், கே. பாலாஜி, ’குலதெய்வம்’ ராஜகோபால்.

கார் சவாரியில் மட்டுமல்ல குதிரை ரேஸில் பங்கேற்பதிலும் ஜெமினி - சாவித்ரி ஜோடி ஆர்வமுள்ளவர்கள். புது வருஷம், பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் இருவரையும் ரேஸ் கோர்ஸில் பார்க்க முடியும். அவர்கள் பணம் கட்டும் குதிரை முதலில் வராது என்பது சுவாரஸ்யம்.

-------------------------------------

பாரதி விழா!

தமிழ்த் திரை மகாகவி பாரதி மீது  அரிதார பந்தம் ஏற்படுத்திக் கொண்ட காலம் ஒன்று உண்டு.கோலிவுட் பரிவாரங்களோடு எட்டயபுரம் வரை சென்று, நடிகர்திலகம் மிகப் பிரமாதமாக பாரதியாருக்கு விழா எடுத்து திரும்புவார். அவரைத் தொடர்ந்து 1963ல் ஜெமினி-சாவித்ரி ஜோடியும் அத்திருப்பணியைச் செய்தார்கள்.

சென்னையிலிருந்து காரில் புறப்பட்ட நடிக மன்னனுக்கும்- நடிகையர் திலகத்துக்கும் வழி நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன்  அற்புத வரவேற்பு அளித்தனர். சுவர்கள் பூராவும் ‘ரத்தத்திலகம்’பட ரிலீஸ் போஸ்டர்கள்.

திருச்சியில்  சாவித்ரிக்கு ஜே சொல்லியவாறு திரண்டு நின்றன தாய்க்குலங்கள்.

புரட்டிப் போடும் புரட்டாசி வெயில். ரத்தத்திலகத்தில் வந்த ஷேக்ஸ்பியரின் டெஸ்டிமோனாவை நேரில் காணும் ஆவலில் காற்றும் தற்காலிக விடுமுறை எடுத்துக் கொண்டது.

‘அம்மா நீங்க மகராஜியா இருக்கணும்!’  சாவித்ரிக்காக வான் முட்டும் வரை  வாழ்த்து கோஷங்கள்.

 

savithri_gemini.jpg  

 

பெருங்கூட்டத்தில் ஒருத்தியாகச் சிக்கிக் கொண்டு திணறினார் சாவித்ரி. இலேசாக கோபம் கூட வந்தது. வழியும் வியர்வையையும் துடைக்க இயலாமல் எரிச்சல், கெஞ்சல், பரிதாபம் கலந்தக் கதம்பக் குரலில்

‘இப்படி நெருக்கியடிச்சீங்கன்னா நான் எப்படி மகராஜியா இருக்க முடியும்...?’ என்று  முனகினார்.

அன்றே ஒரு லட்ச ரூபாய் செலவில் பாரதி வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எட்டயபுரம் எங்கும்  திருவிழா கோலம் பூண்டிருந்தது. விடுதலை வீரர்கள் வாழ்ந்த வீதிகளில்  பக்தவச்சலம், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரோடு ஜெமினி- சாவித்ரி தம்பதி சமேதராக ஒரே காரில் சவாரி போனார்கள். தேசிய கவியின் சுதந்தர தாகத்தை  ஓரளவாவது திருப்திப்படுத்த  சாவித்ரியும் ஜெமினியும் ஏற்பாடு செய்தனர்.

எட்டயபுரத்தில் குடிநீர்ப் பஞ்சம்.  தாமிரபரணி ஓடும் நெல்லைச் சீமையில்  அருந்த தூய்மையான நீர் கிடைக்காத துரதிர்ஷ்டம். தினந்தோறும் ஏழை மக்கள் படும் அல்லல் தீர, முறையான விநியோகத்துக்காக குடிநீர் தொட்டி கட்டிக் கொடுத்தனர். தொடர்ந்து முண்டாசு கவிஞனுக்கு முரசு கொட்டி வைபவம் நடக்க வேண்டுமென்று 25,000/- ரூபாய்  நிதி வழங்கினார்கள்.

----------------

எலிஃபன்ட் காட்!

கர்நாடகத்தின் கட்டடக் கலைச்சிற்பி ‘பொறிஇயல் மேதை விஸ்வேஸ்வரய்யா’.  அவரது நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற நேரம். நிறைவாக வாழ்ந்து நிகழ்கால வரலாறாக, கண் எதிரே காட்சி அளித்த விஸ்வேஸ்வரய்யாவிடம், நேரில்  வாழ்த்து பெற ஜெமினியும் சாவித்ரியும் பெங்களூர் சென்றார்கள்.

காலை பத்து மணி முதல் பதினோரு மணி வரை அவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருந்தது. விஸ்வேஸ்வரய்யா ஆள்கள் தாங்கி வர,  விருந்தினர்களை வழக்கமாகச் சந்திக்கும் ஹாலில், மிகச் சரியான விநாடிகளில்  காத்திருந்தார்.

‘ஐ யம் கணேசன்... திஸிஸ் மை வொய்ஃப் சாவித்ரி.  நாங்கள் திரைப்படக்கலைஞர்கள்’  என்று  அறிமுகம் முடிந்தது.

‘ஓ! எலிஃபன்ட் காட்!’ என்று புன்னகை பூத்தார் பிருந்தாவனத்தின் நந்தகுமரன்.

சாவித்ரி கையோடு எடுத்துச் சென்றிருந்த மாலையை ‘விதான் சவுதா’ அய்யாவுக்குப் போட முயன்றார். ‘ஓ மை காட்!’ என இலேசாக அதிர்ந்து, கீழே நழுவ இருந்த தன் டர்பனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கற்களின் கவிஞர்.

எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் சிறு பென்சிலையும் தன்னோடு வைத்திருப்பது பெரியவரின் வழக்கம். சாவித்ரி அதைக் கூர்ந்து கவனித்ததைக் கண்டு,

‘என்ன பார்க்கிறாய்...? ஞாபக சக்தியில் மட்டும் அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது.’ 

 உற்சாகமூட்டும் டூயட் காட்சிகளில் இன்ப உலா வரும் மைசூர் கிருஷ்ணராஜசாகர் கண்ணம்பாடி அணைக்கட்டையும், விஸ்வரூப விதான் சவுதாவையும் கட்டி முடிப்பதற்குள் எத்தனை ஏடுகள் செலவானதோ விஸ்வேஸ்வரய்யாவுக்கு!  வியப்பின் சரித்திரத்தில் விழிகளின் சமுத்திரத்தில் நீந்தினார் சாவித்ரி கண்களை அகல விரித்து.

 

savithri.jpg  

 

விஸ்வேஸ்வரய்யா தன் விருந்தினர்களிடம் மெல்ல பேச்சு கொடுத்தார்.

‘உலகம் உங்களிடம் நியாயமாக நடந்து கொள்கிறதா...? உங்களை  கவுரவமாக நடத்துகிறதா ஈஸ் தி வேர்ல்ட் ஃபேர் டு யூ...?

‘ஆமாம் அய்யா. என்னால் இயன்ற பணியை உலகிற்குச் செய்கிறேனென்று நம்புகிறேன். உலகமும் என்னிடம் பரிவு காட்டுகிறது என்றே நான் எண்ணுகிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிற கொள்கையைக் கடைபிடிக்கிறேன்.’

‘உனக்கு முன்னேற வேண்டுமென்ற ஆசை இல்லையா...?’

‘ஆசை இருக்கிறது. ஆனால் பேராசை கிடையாது.’

‘ஆண்டவன் உன்னைக் கை விட மாட்டார்.’

ஜெமினி கணேசனுக்கு உண்மையான அறிஞரின் புத்திமதியைக் கேட்டதும், தன் தாத்தாவின் ஞாபகம் வந்து விட்டது. அவர் கண்களில் லேசாகக் கண்ணீர்.

‘என்னாங்க இது...! வந்த இடத்துல’ என்று சாவித்ரி சமாதானம் செய்தார்.

எவரையும் போர்ட்டிகோ வரை வந்து கார் கதவைத் திறந்து  வீட்டுக்குள் அழைத்து வருவதும், திரும்பிப் போகும் போது கார் கதவைச் சாத்தி வழியனுப்புவதும் விஸ்வேஸ்வரய்யாவின் வழக்கம்.

மூப்பு காரணமாக அத்தகைய உயர்ந்த பண்பாடு நின்று போனது. அதை மனத்தில் எண்ணி ‘உங்களைச் சரியான முறையில் வரவேற்க முடியவில்லை’ என்று வருத்தத்துடன் விடை கொடுத்தார் விஸ்வேஸ்வரய்யா.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

12. 'இரண்டு ரிசர்வ் பாங்குகள்' எனக்கு மட்டும்!

 

 

 

நடிகையர் திலகத்தின் இல்லற வசந்தத்தில்  இனிமையான சில ஏடுகள்:

"அவரிடம் எனக்குப் பிடிக்காதது ஞாபக மறதி. 'சாவித்ரி கரெக்டா ஆறு மணிக்கு இங்கு இருப்பேன் ரெடியா இரு. என் தலையைப் பார்த்ததும் கண்ணாடி முன் நின்று சிங்காரித்துக் கொள்ள ஆரம்பித்து விடாதே. டைம் ஈஸ் பிரிஷியஸ்: காலம் பொன்னானது. என்பார். இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே என்று நானும் தயாராகக் காத்திருப்பேன். வாசலையே பார்த்திருப்பேன். நேரம் ஓடுமே தவிர வரமாட்டார்.

அப்பாடி என்று சோர்ந்து போவேன். சாவித்ரி நான் என்ன சொல்வது? யார் யாரோ வந்துட்டாங்க. உனக்கு கொடுத்த ப்ரொகிராமை மறந்துட்டேன். சரி சரி இப்ப மணி ஏழா அட 60 நிமிஷம் லேட் கம் ஆன் கிளம்பு என்பார்.

சும்மா சொல்லக் கூடாது கோபத்தில் கூட நீ அவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா என்று தமாஷ் பண்ணி  என்னைச் சிரிக்க வைத்து விடுவார். நான் கோபிப்பதா, சிரிப்பதா, அழுவதா?

சாப்பாட்டில் ரொம்பவும் லிமிட்டாக இருப்பார்.  அவியல் என்றால் உயிர். அதுவும் சேனைக் கிழங்கும் இருந்து விட்டால் உண்ணும் அளவை அன்று நிச்சயம்  தளர்த்தி விடுவார்.

'சாவித்ரி ஏன் இதை செய்தே! பார் இப்போது நான் மூச்சு விட முடியாமல் திண்டாடுவதை' என்பார். முன்பெல்லாம் இனிப்பு அதிகம் சாப்பிடுவார். கேட்டால் 'வாழ்க்கை ஸ்வீட்டாக இருக்க வேண்டாமா' என்பார்.

இந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் இரண்டும் ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் இருக்கும் போது ஏதாவது ராகத்தை ஆலாபனை செய்து கொண்டிருப்பார். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு மோகம் அதிகம். அது அடிக்கடி வெளிப்படும்.

 

ganesan_savi.jpg  

 

'ராம சிலுக ஒகடி பந்து பிரேம மாட' என்ற தியாக ராஜரின் கீர்த்தனையின் ஒரே அடியை மீண்டும் மீண்டும் பாடுவார். எனக்கு ஆத்திரம் வரும்.

'கீறல் விழுந்த கிராமஃபோன் மாதிரி மேலே நகராதா என்றால், 'உனக்குப் பிடிக்கலியா, அப்ப வேற பாட்டு' என்று 'என்ன ராம கான ராம பஜன' என அதே பாடலின் முதலடியைப் பாட ஆரம்பித்து விடுவார். 'ரிகார்ட் பிளேயர் ஒன்று தானே! விதவிதமாகப் பாடல் எப்படிவரும்' என்பார் சிரித்தவாறே. இம்மாதிரி சாமர்த்தியமாகப் பேசி எதிராளியைக் கைக்குள் போட்டுக் கொள்வதில் சமர்த்தர்.         

சினிமாக்களில் வரும் காஸ்ட்யூமை மட்டும் அவர் தேர்ந்தெடுப்பார். மற்றபடி அவர் அணியும் அன்றாட ஆடைகளை நாங்கள் இருவருமே தேர்வு செய்வோம். வீட்டில் இருக்கும் போது  வெள்ளை நிற பைஜாமா  ஜிப்பா. வெளியே போகும் போது லைட் கலர் சூட் அணிவதை விரும்புவார். நான் அதிகம் தேர்வு செய்வது வெண்மை மற்றும்  நீலவண்ண சேலைகள்.

'எனக்கென்ன கவலை பில் பற்றி?  இந்தியாவுக்கு ஒன்றுதான். ஆனால் எனக்கு மட்டும் இரண்டு ரிசர்வ் பாங்குகள் என்பார்.' என்னைக் குறிப்பிட்டு.

பெஸரட் தோசை தொட்டுக் கொள்ள கோங்குரா சட்னி, சுடச் சுட பாயசம் எனக்கு விருப்பமான அயிட்டங்கள்.

கொஞ்சமா சாதத்தைத் தட்டில் போட்டு, அதைப் பிசைஞ்சு நிறைய மோர் விட்டு அதிகக் காரமான ஆவக்காய் ஊறுகாயை அதனோடு சேர்த்து மறுபடியும் கொள கொளன்னு ஆக்கி, தட்டைத் தூக்கிப் பிடிச்சு அப்படியே குழந்தைங்க மாதிரி, சப்பு கொட்டி குடிக்கறது எனக்கு ரொம்ப இஷ்டம். சாகவாசமாக வீட்டில் நான் சாப்பிடற ஸ்டைல் அது.

ஆனா அவருக்கோ காரம்னாலே ஆகாது. என்னை அடிக்கடி கேலி செய்வார்.

'உன் வீட்டுக்கு வந்தா சிகப்புப் பட்டை மிளகாயைத் தவிர என்ன கிடைக்கும்னு' கேட்பார். எனக்கு கோபம் வந்துடும். அவரோ பிராமின். அதுவும் அவங்க அம்மா ரொம்ப ஆர்த்தடாக்ஸ் வேறே.

'உங்க ஆத்துல பொடலங்காயும் பூசணிக்காயும் தவிர என்ன போடுவீங்க?ன்னு வெடுக் வெடுக்னு கேட்டுடுவேன். அதுக்கு அவர் கோபிக்கவே மாட்டார். குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார். என் கண்ணுல தண்ணி வந்துடும்.

வேகமாக கார் ஓட்டுவதும்,  மல்லிகை மணமும், கோடைக்கானல் ஏரியின் அழகும்  அவரது ரசனையின் அடையாளங்கள்.

புத்தகங்களைக் கடவுளாக மதித்து மிகுந்த எச்சரிக்கையாகக் கையாள்வார். அவரது பெயரைக் கூட நூல்களில் எழுதி வைக்க மாட்டார். எச்சில் தொட்டுப் பக்கங்களைப் புரட்டுவதோ, மூலைகளை மடித்துக் காகிதங்களைப் பாழாக்குவதோ, அழுக்காக வைத்திருப்பதோ அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ், சார்லஸ் டிக்கன்ஸ், தமிழில் பாரதியார், கல்கி, புதுமைப்பித்தன் எழுத்துக்களை விரும்பி வாசிப்பார். துப்பறியும் நாவல்கள் அவரை முகம் சுளிக்க வைக்கும்.  

அணில் பழம் சாப்பிடும் அழகும், பல்லி, எட்டு கால் பூச்சியைப் பிடிக்கும் லாவகமும் என்னை ஆச்சரியப்படுத்தும். தவளையைக் கண்டால் பயம் எனக்கு.  

தமிழ் வருஷப் பிறப்பு, யுகாதி, தீபாவளி, பொங்கல், ஜனவரி 4 ஆம் தேதி  (என் பிறந்த நாள்) இந்த ஐந்து தினங்களையும் மறக்க மாட்டார். என்னை அழைத்துச் சென்று பட்டுப்புடைவைகளை வாங்கிக் கொடுப்பார்.

எனக்குப்  புடைவைப் பைத்தியம். புடைவை வியாபாரிகளை அம்மாவை போய்ப் பாருங்கள் எனச் சொல்லி அனுப்பி வைப்பார். ஓய்வில் சினிமா, பீச் , நண்பர்கள் வீடு என்று போவோம்.

 

childwithsavi.jpg  

 

ஆங்கில சினிமாக்களுக்கும் நாங்கள் நடிக்காத மற்ற மூவிகளுக்கும் போவோம். இங்கிலீஷ் ஃபிலிம்களைப் பார்க்கும் போது, 'ஆஹா! இந்த ரோல் பிரமாதம். இதே மாதிரி ஒரு வேஷம் உனக்குக் கிடைத்தால் பிரமாதமா செஞ்சிடுவே' என்பார்.

சூசன் ஹோவர்ட் நடித்த ஐ வான்ட் டூ லீவ். குடியினால் விளையும் கேடுகளை விளக்கும் பெண்களின் கதை.  அப்புறம் சோபியா லாரன் நடித்த டூ விமன்.

அதே போல் நானும் சொல்வேன். நார்த் பை நார்த் வெஸ்ட், பெக்கெட் முதலியவற்றைப் பார்த்து விட்டு இம்மாதிரி வேஷங்களை உங்களுக்குக் கொடுக்கக் கூடாதா என்பேன்.

அவர் நடித்து எனக்கு மிகவும் பிடித்தவை மீண்ட சொர்க்கம், கல்யாணப் பரிசு, சுமை தாங்கி, ராமு.

நான் நடித்தவற்றில் அவருக்குப் பிடித்தது சிலரகு மிகிலேதி, மூகமனசுலு, தட்டுங்கள் திறக்கப்படும் எல்லாம் உனக்காக.'

வீட்டில் இருக்கும் போது நானும் பாடுவேன். 'நாத தனு மனிசம்' என்ற தியாகராஜர் கீர்த்தனை மிகவும் பிடிக்கும்.உதடுகள் அதையே அடிக்கடி அசை போடும்.

மங்கையர்க்கரசி படத்தில் பி.யூ. சின்னப்பா, சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த அதே கீர்த்தனையை 'காதல் கனி ரசமே' என்று பாடியிருப்பார். அதையும் நான் விரும்புவேன்.

சிறிது காலம் வீணை வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். இப்போது வாசிப்பது நின்று விட்டது. வீணை அலங்காரப் பொருளாகி விட்டது.

பணம் என்பது அளவோடு இருப்பது நல்லது. பொதுவாக நான் கதையை மட்டும் கேட்டு விட்டு நடித்து விடுவேன். சம்பளத்தில் விவகாரமே எனக்கு வராது. தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசி பணம் வாங்கியது கிடையாது. கண்டித்துக் கேட்கவும் தெரியாது. அவர்களாகக் கொடுத்தால் தான் உண்டு. அதைப் பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றியவர்கள் ஏராளம்!

ஹபிபுல்லா சாலை இல்லம் மார்ச் 1958ல் கட்டியது. பெரியப்பாதான் பிளான் போட்டுக் கொடுத்தார். ஆனால் நான் தனிக்குடித்தனம் போவதற்குக் குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தது. யாரும் ஒத்துழைக்கவில்லை.  நானே பிடிவாதமாக முன்னின்று கட்டினேன்.

லன்ச் டைமில் கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு வந்து மேற்பார்வை செய்து விட்டுப் போவேன். அலங்கார விளக்குகள் அறைகளின் அமைப்பு எல்லாம் என் விருப்பம்.

எனக்கு பூஜை செய்வதில் அளவு கடந்த பிரேமை உண்டு. கோவிலைப் போலவே ஒரு பூஜா மண்டபம் கட்டுவதற்கென்று தனியாகத் திட்டம் போட்டு நிர்மாணித்தோம். ஆர்ட் டைரக்டர் சேகர்  வரைபடம் போட்டுத் தந்தார்.

 

Pooja_savi_b.jpg  

 

வீணை வித்வான் எஸ். பாலசந்தர் வீட்டில் சரஸ்வதி தேவிக்கு மண்டபம் அமைத்திருந்தார். படி ஏறி மேலே போகும் போது நவக்கிரங்கள்,  சிற்ப வேலைகள் உடைய கதவுகள் எனப் பிரமாதமாகத் தோன்றியது. அந்த அம்சங்களை கூடிய வரையில் நானும் அமைத்துக் கொண்டேன்.

கோயிலைப் போலவே உள்ளே கர்ப்பக் கிரஹம் உண்டு. உள்ளே உட்கார்ந்து பூஜை செய்யும் வசதிகள் இருந்தன. தினமும் ஒரு சாஸ்திரிகள் வந்து போவார். முக்கியமான பண்டிகை நாள்களில் நானும் தீபாராதனையில் கலந்து கொள்வேன்.

நவராத்திரி என்றால் வீட்டில் விசேஷமாக இருக்கும். சத்யநாராயண விரதம், வரலட்சுமி விரதம் எல்லாவற்றையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்.

சினிமாக்களில் அமைதியான குடும்பப் பெண்ணாக நடித்து நல்ல பெயர் வாங்கியதற்கு, என்னுடைய இந்த தெய்வ  பக்தியும் ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறேன்.

மேக் அப்பை கலைத்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் கூட நாம் நடித்தது சரியா,  இன்னும் நன்றாக நடித்திருக்கலாமோ என்று  எண்ணிக் கொள்வேன்.  கிடைத்த  நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளத்தக்க படங்கள் அப்போது தொடர்ந்து வந்தன. வருஷத்துக்கு நாலு படமாவது எனக்கு அற்புதமான வேடத்துடன் கிடைத்தது.

அன்னையின் ஆணை, கை கொடுத்த தெய்வம், பாசமலர், தேவதாஸ், மிஸ்ஸியம்மா போன்றவையில் எனக்கு அருமையான கதாபாத்திரங்கள். அது மட்டுமல்ல. அந்தக் கதைகளே மிக நன்றாக இருந்தன. ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே சிறப்பாக இருந்தால் அந்த சினிமா எடுபடாது.

என் மகன் சதீஷ் பத்து மாத கைக் குழந்தை. அவனோட முழு பெயர் ஸ்ரீராம் நாராயண் சதீஷ் குமார். அவங்க அப்பா பெயர் மாதிரியே மிக நீளமா இருக்கா. ஓ! உங்களுக்கு அவன் அப்பாவோட ஃபுல் நேம் தெரியாது இல்லையா. ஜெமினி கணேஷ்கு அவங்க தாத்தா வைத்த பெயர் 'கணபதி சுப்ரமணிய சர்மா'. ஆனால் செல்லமா அப்புன்னு கூப்பிடுவாங்களாம். தவமா தவமிருந்து வரப்பிரசாதமா பிறந்ததால் அவருக்கு பிச்சைன்னு இன்னொரு பெயரும்  உண்டாம்.

ஒரே பையன் தானே அவனைச் செல்லம் கொடுத்து, சாவித்ரி வளர்ப்பாளோ என்று  நீங்கள் யூகித்தால் அது தவறுதான். என் மகனை நான் ஆரம்பம் முதல் கண்டிப்புடனும் கட்டுப்பாடுடனும் வளர்க்கப் போகிறேன்.

இவங்க அப்பா, அவங்க அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவர் அவங்க அம்மாவிடம் இருந்ததைப் போல இவனும் என்னிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது என் ஆசைக்கனவு அல்ல. என் கவலை.

சிவாஜி, எஸ். வி. ரங்காராவ், கே. பாலாஜி,ஏவிஎம். ராஜன், அஞ்சலிதேவி, பத்மினி, ராகினி, எம்.என். ராஜம், ஜமுனா,மனோரமா, புஷ்பலதா, ஆகியோர் கலந்து கொள்ள மூன்று வயது வரை விஜியின் பிறந்த நாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடினோம்.

 

BDay_savi.jpg  

 

நல்ல மனைவி, நல்ல நடிகை, நல்ல தாய், என்கிற வரிசையில்  நல்ல டைரக்டர் என்று பெயர் எடுக்கவே எனக்கு ஆசை.'  சாவித்ரி.

நடிப்பதற்கு மூட் தேவை என்றெல்லாம் சிலர் பேசுகிறார்களே அதெல்லாம் சாவித்ரிக்கு முன் தூசு. தோழிகளுடன் செட்டில் சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டு இருப்பார். ஷாட் ரெடி என அழைத்ததும் மிடுக்குடன் எழுந்து சென்று நடிப்பதோ சோகப் பாத்திரம்.

ஒரு நிமிடத்தில் கேரக்டராகவே மாறி விடுவார். எப்பாடு பட்டாவது அவரது கண்ணீரைத் துடைக்க முடியாதோ என்று தோன்றுமளவுக்கு  அதி அற்புதமாக நடித்துத் திரும்புவார். அழுகை தத்ருபமாக அமைந்த சமயங்களில் மயக்கமடைந்து விழுவார். அவருக்கு சுய நினைவு திரும்ப கூடுதல் நேரமானதும் உண்டு.

தனக்கு வரும் டெலிபோன்களுக்கு அவரே பதில் சொல்வார். மல்லிகைப் பூ என்றால் சாவித்ரிக்கு கொள்ளை ஆசை. ஷூட்டிங் இல்லாவிட்டால் பூக்கள் கட்டியே பொழுதைக் கழிப்பார். அவரது விரல்களின் லாவகம் பிரமிக்க வைக்கும். மிக வேக வேகமாகக் கட்டி முடிப்பார். நாக்கினால் உதடுகளைத் தடவி ஈரப்படுத்திக் கொள்வது சாவித்ரி ஸ்டைல்.

வண்ண வண்ண பூக்கள் போட்ட சிங்கப்பூர் நைலக்ஸ் சேலைகளைப் பார்த்தவுடன் வாங்கிக் குவிப்பார். நகைகளும் அப்படியே.

 

savithri.jpg  

 

வீம்பும் பிடிவாதமும் சாவித்ரியிடம் தேவைக்குச் சற்று அதிகமாகவே காணப்படும். தோட்டக் கலையில் ஆர்வமும் மோகமும் நிறைய. நடிப்புக் கலையை வளர்த்ததில் மட்டும் அல்ல. காய்கறி, கனிகளை உண்டாக்குவதிலும் ஏராளமான பரிசு கோப்பைகளை வென்றவர். விதைகள் வாங்குவதற்கென்றே பெங்களூர் செல்வார். தப்பித் தவறி கூட தன்னால் பிறரை விட நன்றாக நடிக்க முடியும் என்று சாவித்ரி  சொல்லியது கிடையாது. பருமனான பின் நடிக்க வாய்ப்பு இல்லை என ஏங்கியவரும் அல்ல.

சாவித்ரி முதன் முதலில் தாய்மைபேறு அடைந்த நேரம். அவரது தாயார் மைசூருக்குச் சென்று திரும்பினார். மகளுக்கு சுகப் பிரசவமாகிப்  பெண்  பிறந்தால், சாமூண்டீஸ்வரி அம்மனின் பெயரையே குழந்தைக்கு வைப்பதாக வேண்டிக் கொண்டார்.

நடிகையர் திலகம் சினிமாவில் பேரும் புகழும் பெற முதுகெலும்பாக நின்று காத்தது நாகிரெட்டியின் விஜயா வாஹினி நிறுவனம். நன்றி மறவாதவர் சாவித்ரி. தன் மகளின் பெயருக்கு முன்னதாக விஜயாவை சேர்த்து விஜய சாமூண்டீஸ்வரி என அழைத்தார். காலப் போக்கில் அது செல்லமாக விஜயாவாகவே நிலைத்து விட்டது.

திருப்பதி பெருமாளின் பக்தை சாவித்ரி. பாலாஜியிடம் வேண்டிக் கொண்ட படி மகன் சதீஷ் பிறந்ததும்,  ஏழுமலைகளில் ஏறி நடந்தே சென்று வேங்கடவனை தரிசித்துத் திரும்பினார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-13. நூறு நூறு பெருமைகள்!

 

 

 

ஜெமினி கணேஷ் - சாவித்ரி ஜோடி 1953  தீபாவளி அன்று வெளியான மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடிக்கத் தொடங்கி, 1967 பொங்கல் வெளியீடான கந்தன் கருணை, சீதா வரையிலும் தொடர்ந்து 14 ஆண்டுகள் கிட்டத்தட்ட 40 படங்களில் ஜோடியாக நடித்து அரிய சாதனை புரிந்தது. அவர்களுக்கு முன்னும் பின்னும் வேறு யாரும் அவ்வாறு, மிக நீண்ட வருடங்கள் இடை விடாமல் இணையாக வலம் வந்ததில்லை.

கவுரவத் தோற்றங்களில் அவர்கள் இருவரும் நடித்த ஒரே படம் வல்லவனுக்கு வல்லவன். மாடர்ன் தியேட்டர்ஸின் 100வது தயாரிப்பு என்கிற சிறப்புக்காக அதில் இடம் பெற்றனர். ‘பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்’ பாடல் காட்சியில் சாவித்ரி தோன்றினார். ஜெமினிக்கு மிக வித்யாசமான ஸ்டைலிஷான வில்லன் வேடம். வல்லவனுக்கு வல்லவன் 100 நாட்கள் ஓடியது.

சிவாஜியைப் போலவே நடிகையரில் ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு படங்கள் ரிலிசானது சாவித்ரிக்கு மாத்திரமே.1957 தமிழ்ப் புத்தாண்டுக்காக ஏப்ரல் 12ல் மாயா பஜார்- வணங்காமுடி, அதே ஆண்டின் தீபாவளித் திருநாளில் மகாதேவி- சவுபாக்கியவதி, 1962 தைத் திருநாளில் கொஞ்சும் சலங்கை-பார்த்தால் பசி தீரும். 1963 தீபாவளிக்கு கற்பகம் - பரிசு. 1964 பொங்கலுக்கு கர்ணன் - வேட்டைக்காரன். அவை அத்தனையும் பிரமாதமாக ஓடியவை என்பது கூடுதல் சிறப்பு.

‘‘வடக்கில் மீனாகுமாரி, வங்காளத்தில் சுசித்ரா சென், தென்னாட்டில் சாவித்ரி  இந்த மூன்று பேரையும் விடச் சிறப்பாக குணச்சித்திர வேடங்களில் யாரும் நடிக்க முடியாது’ என்று ஸ்கிரின் இதழில் சாந்தாராம் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சாவித்ரி, சுசித்ராசென்னை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் வங்காளத்தில் சுசித்ரா சென் ஏற்ற வேடங்களில் தமிழிலும் தெலுங்கிலும்  மேலும் மெருகூட்டி நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார் நடிகையர் திலகம்.

 

savi.jpg  

 

ஜகார்தா திரைப்பட விழாவில் ஜெமினிகணேசனும் சாவித்ரியும் கலந்து கொண்டார்கள். இந்தோனேஷியாவின் அதிபர் சுகர்னோ அவர்களை வரவேற்று  விருந்து வழங்கி கவுரவித்தார். சுகர்னோ அப்போது பாரதத்துடன் சுமுக உறவில் இல்லை.

சுகர்னோவுடன் சேர்ந்து நடனம் ஆடியதற்காகவும், அவரது அழைப்பை ஏற்றுச் சாப்பிட்டதற்காகவும் ஜெமினி- சாவித்ரி ஜோடிக்கு தமிழகத்தில் சிலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தகைய நிலை ஜெமினி- சாவித்ரியின் வாழ்வில் ஏற்பட்டது அதுவே முதலும் கடைசியுமாகும்.   

6.3.1964ல்  காதல் மன்னன் - நடிகையர் திலகம் இருவரையும் ஹைதராபாத்தில், ஊர்வலமாக யானை மீது பவனி வரச் செய்து விழா கொண்டாடினார்கள் தெலுங்கு சகோதரர்கள்.1965ல் சிறந்த தம்பதிகள் போட்டியில் ஜெமினி-சாவித்ரிக்கு முதல் பரிசு கிடைத்தது.

தேசிய விருதுகள் வழங்கப்படும் போது முன்பெல்லாம், தயாரிப்பாளர், இயக்குநர் தவிர, சிறந்த படங்களில் பங்கேற்ற நாயகன் நாயகி ஆகியோரும் கவுரவம் பெறுவர். காரணம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்பது போன்ற தனித் தேர்வுகள் ஏற்படவில்லை.

பாரத், ஊர்வசி விருதுகள் முதன் முதலாக 1967ன்  சினிமாக்களுக்குத் தரப்பட்டன. சிறந்த பிராந்திய மொழிச் சித்திரம் ஒன்றுக்கு வெள்ளிப்பதக்கமும், மற்ற அற்புதமானப் படங்களுக்கு தரச் சான்றிதழும் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் தொடர்ந்து சாவித்ரி ஒரு டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் நேருவிடம் விருதுகள் பெற்று அபூர்வ சாதனை புரிந்தார்.

1961ல் தமிழில் சாவித்ரி நடித்து மூன்று படங்கள் தில்லிக்குச் சென்றன. மூன்றுமே பரிசு பெற்றுத் திரும்பின.  பாவமன்னிப்பு  ‘தங்கப்பதக்கம்’ பெற வேண்டியது. ஏ.பீம்சிங் அதற்காக மெனக்கெட விரும்பாததால் சில ஓட்டுகளில் அதை இழந்தது. அதற்கு இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது படம் என்கிற விருதும், கப்பலோட்டிய தமிழனுக்கு வெள்ளிப் பதக்கமும், பாசமலருக்கு சிறந்த படம் என்கிற தரச் சான்றிதழும் கிடைத்தது.

கப்பலோட்டிய தமிழனில்  சாப்பிடும் காட்சியில், ‘கண்ணம்மா தனது முறைப் பெண் என்பதை அறியாமல் கோபிப்பார்  மாடசாமி’. அக்காட்சியில் சாவித்ரிக்கு எவ்வாறு நடிப்பது என  ஜெமினி பாடம் நடத்தினார். சாவித்ரிக்கு வந்ததே கோபம்!

‘எனக்கு நீங்க ஆக்டிங் சொல்லித் தரீங்களா...?’ எனப் பரிமாறும் கரண்டியை எடுத்துத் தன் ஆசை நாயகன் மேல் வீசினார். யூனிட் மொத்தமும் அதைப் பார்த்து அதிர்ந்தது.

‘மாடசாமியும் அவன் காதலி கண்ணம்மாவும் இல்லாவிட்டால் கப்பலோட்டிய தமிழன் கரை தட்டிப் போகும் என்பதில் ஐயம் என்ன? சாவித்ரிக்கு ஈடு கொடுத்து ஜெமினி ஒரு படி உயர்ந்து விடுகிறார்.’என்கிற குமுதம் விமர்சனம் சாவித்ரியின் செய்கையை நியாயப்படுத்தியது.

 

maxresdefault.jpg  

 

பி.ஆர். பந்தலு குறித்து சாவித்ரி: ‘ கையில் வெற்றிலை பெட்டியுடன் பனியனோடு வருவார் டைரக்டர் பந்தலு. மளமளவென்று  ஷாட்களை எடுத்துத் தள்ளி விடுவார்.  துணிந்து முடிவெடுக்கும் தைரியசாலி. எனக்கு மாலை 4 மணிக்கு அவுட்டோர் போக வேண்டும். அன்று கப்பலோட்டிய தமிழனில் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கான ஷூட்டிங்.

முன்னதாகவே தெரிந்ததால், ‘கேன்சல் செய்து விடலாம். இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம்’ என்றேன்.‘பரவாயில்லையம்மா. நீ வந்து விடு.’ என்றார் விடாப்பிடியாக. 

எனக்கு நம்பிக்கையே இல்லை. சரியாக காலை எட்டு மணிக்குப் படப்பிடிப்பை ஆரம்பித்தவர், மதியம் ஒன்றரை மணிக்கே எல்லாவற்றையும் எடுத்து முடித்து என்னைக் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.’

1964ல் மட்டும் அவருக்கு ஐந்து அவார்டுகள். சிறந்த மாநில மொழிப் படமாக கை கொடுத்த தெய்வம் வெள்ளிப்பதக்கம் பெற்றது. கர்ணனுக்கு நற்சான்றிதழ்  வழங்கினர்.

சாவித்ரியின் 150 வது படம், ஜெமினியின் முதல் சதம் இரண்டும் ‘சீதா’ என்கிற ஒரே சினிமாவில் பூர்த்தியானது. ஜெமினிக்கு அதில் ஓர் தனி அதிசயம். அவரது முதல் படம் மிஸ். மாலினி, 100வது படம்  சீதா இரண்டுமே சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் வெளியானது.ஏனோ இரண்டுமே பெரிய வெற்றிச்சித்திரங்களாக அமையாமல் போனது.  இடைப்பட்ட 98 சினிமாக்களில் வெள்ளி விழா கொண்டாடியவை மூவேந்தர்களில் ஜெமினிக்கே அதிகம்.

இரண்டு கணேசன்களின் 100வது படங்களிலும் நாயகியாக நடித்த பெருமை சாவித்ரிக்கே உண்டு. அவை இரண்டுமே ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையில் வெளியானவை என்பது கூடுத ல் சிறப்பு.

சீதா  ரிலிசையொட்டி ஒரு பாராட்டு விழா ஜெமினி- சாவித்ரி ஜோடிக்கு சென்னை  ஸ்ரீநிவாஸ காந்தி நிலையத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் நாவலர் நெடுஞ்செழியன், டி.கே. ஷண்முகம், ஏ.பி. நாகராஜன், ஏ.எல். ஸ்ரீனிவாசன் ஆகியோர். சபையில் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் ஜெமினிகணேசனின் கால்களில் விழுந்து சாவித்ரி ஆசி பெற்றுக் கொண்டார்.

இந்தியும் சாவித்ரியும்!

இந்தியில் நடிக்க வேண்டும், வடக்கிலும் வாகை சூட வேண்டும்  என்ற ஆசை சாவித்ரிக்கு நிறையவே உண்டு. சுரையா அவரது அபிமான நட்சத்திரம். பத்மினி போல் சாவித்ரிக்கு இந்தியில்  கூடுதலாக ஈடுபாடு கொள்ள முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். 1. தமிழ், தெலுங்கு இரண்டிலும் சாவித்ரி பிசியாக நடித்துக் கொண்டிருந்தது. 2.சாவித்ரியின் திராவிடப் பெண்மை.

இன்றைக்கும் வடக்கில்  நடிகைகள் எல்லாருமே ஒல்லியாகக் காட்சியளிப்பார்கள். ஆனால் சாவித்ரியின் உருவம் அவ்விதத்தில் பொருத்தமாக அமையவில்லை. சாவித்ரிக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில்   இந்தியில் அவரது படங்கள் தொடர்ந்து நிறையவே ரீ மேக் ஆகி விழா கொண்டாடின.

(பாசமலர்) ராக்கி -  வஹீதா ரெஹ்மான்

(மிஸ்ஸியம்மா) மிஸ் மேரி - மீனாகுமாரி

காதல் கணவர் ஜெமினி கணேசன் துணை இருந்தும், சாவித்ரிக்கு ஜெமினி ஸ்டுடியோவில், தமிழ், தெலுங்கில் நாயகியாக வெற்றிக்கொடி கட்டும்  வாய்ப்பு வராமல் போனது. அவரது அந்த ஏக்கத்தை இந்தியில்  பூர்த்தி செய்தார் எஸ்.எஸ். வாசன்.

ஜெமினியின் ‘பால நாகம்மா’ தமிழில் காஞ்சன மாலா, புஷ்பவல்லி ஆகியோரின் நடிப்பில் வெளியானது. மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் அதே சினிமா இந்தியில் ‘பஹூத் -தின்-ஹூவே’வாக உருவானது.  அன்றைய உச்ச இந்தி நட்சத்திரம் மதுபாலா, காஞ்சனமாலாவின் வேடத்தில் சென்னையில் தங்கி நடித்தார். ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவி புஷ்பவல்லி நடித்த கவர்ச்சியான வில்லி வேடத்தில் மூன்றாவது துணைவியான சாவித்ரி நடிக்க வேண்டி வந்தது கலையின் விசித்திரம்!

தனது இந்தி அனுபவங்களைப் பற்றி சாவித்ரி-

‘பஹூத்-தின்- ஹூவே  ஜெமினியிலும் வாகினியிலும் தயாராயிற்று. எனக்கு இதில் மூன்று நடனப் பகுதிகள். அவற்றுக்கு மூன்று மாதம் ஒத்திகை. எஸ்.எஸ். வாசன் எதையும் பிரமாதமாகவே திட்டம் போடுவார். நினைத்ததை மிகச் சிறப்பாக  நடத்தி முடிக்கும் வரையில் விட மாட்டார்.எங்கள் எல்லாருடைய  உழைப்புக்கும் சமமாக அவரும் கூட இருந்து பாடுபடுவார். அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளரை, நான் அபூர்வமாகவே சந்தித்திருக்கிறேன்.

சில காரெக்டர்களை இந்தியில் நான் நடிக்க விரும்பியது உண்டு. ஆனால் அந்த அளவு வாய்ப்பு கிடைக்காத போது, அதே கதை தமிழில் எடுக்கப்பட்ட சமயத்தில் ஆசைப்பட்ட ரோலில் நடித்துத் திருப்தி அடைந்திருக்கிறேன். வேறு வழி?’

இந்தியில் சாவித்ரியோடு நடித்த பிரபலங்கள் தர்மேந்திரா, மெகமுத் எனச்  சிலரே.

----------------

சாவித்ரியால்  வாழ்வு பெற்றவர் கே.பாலாஜி. ஜெமினியின் அவ்வையார் படத்தில்  முருகனாக  அறிமுகமானார். 1950 முதலே ஜெமினியின் நட்பு வட்டத்துக்குள் வந்தவர்.

தொடர்ந்து வேஷம் கட்டும் வாய்ப்பின்றி நரசு ஸ்டுடியோவில்   தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார்.  அங்கு இந்தியில் அசோக்குமார் நடித்து சூப்பர்ஹிட்டான கிஸ்மத், பிரேம பாசம் என்ற டைட்டிலில் தயாரானது. அதில் நடிக்க வந்த ஜெமினி- சாவித்ரியுடனான சிநேக பந்தம் பாலாஜிக்கு மேலும் வலுப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் தலை காட்ட வேண்டும் என்கிற தீராத ஆர்வம். அதில் ஜெமினிகணேசனின் சிபாரிசில் சின்ன வேடம் கிடைத்தது.

 

balajee.jpg  

 

அரிதார ஆசையால் நரசு ஸ்டுடியோ வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அந்த நொடியில் அவருக்கு  காதல் மன்னனிடமிருந்து சம்பள பாக்கியை கேட்டு, போன் வந்தது. ஏற்கனவே மனக் கொதிப்பில் இருந்த பாலாஜி,

அழுதவாறே ஜெமினி கணேசனிடம் தொலைபேசியில் தன் நிராதரவான நிலையைத் தெரிவித்தார். அடுத்து அவர் போய் நின்ற இடம் வாகினி ஸ்டுடியோ. அங்கு  மாதர் குல மாணிக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

அதன் தயாரிப்பாளரிடம் உடனடியாக பாலாஜிக்கு ஒரு வாய்ப்பு தரச் சொன்னார் ஜெமினி கணேசன். ஜெமினி குறிப்பிட்டது அஞ்சலி தேவியின் அண்ணன் ரோல். தயாரிப்பாளர் அதற்கு ஏற்கனவே ஆள் வந்தாயிற்று. இனிமேல் மாற்ற முடியாது என்றார்.

உடனடியாக ஜெமினி ‘அப்ப என்னை மாத்திட்டு வேற ஹீரோவைப் போட்டுக்குங்க... என்றவாறே வெளியேற ஆரம்பித்தார். ‘சார் வேணாம் சார்...’ என்று பதறிய பட அதிபர் ஜெமினியின் சிபாரிசான கே. பாலாஜியை ஏற்றுக் கொண்டார்.

அதிலிருந்து கே. பாலாஜிக்கு நிறைய படங்கள் வரத் தொடங்கின. ஆனாலும் ஹீரோவாவது  கனவாகவே இருந்தது. காமெடி நடிகர் டி.எஸ். துரை ராஜ் தன் தயாரிப்பான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’யில் கே. பாலாஜியை நாயகனாக்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் விதித்த ஒரே நிபந்தனை சாவித்ரி அதில் நாயகியாக நடிக்கச் சம்மதிக்க வேண்டும். சாவித்ரி இருந்தால் போதும். படம் பிய்த்துக் கொண்டு ஓடும்.  உடனடியாக கஜானா நிறையும். நடிகையர் திலகத்தின் அபரிதமான செல்வாக்கை காசு பண்ண துரைராஜ் காய் நகர்த்தினார்.

தனக்கு இணையாக சாவித்ரியா...! நம்புவதற்கே சிரமமாக இருந்தது பாலாஜிக்கு. தவித்துப் போனார். தென் இந்தியாவின் ஒப்பற்ற நடிகையாக ஒளி வீசும் சாவித்ரியின் நட்சத்திர அந்தஸ்துக்கு முன் அவர் எம்மாத்திரம்!

சாவித்ரியின் இரக்கம் வழிந்தோடும் நேசம் பழகிய ஒன்று. ஆனால் அவரை வழி நடத்தும் ஜெமினி தடை ஏதும் சொல்லாமல் இருப்பாரா...! தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் தவிர, தெலுங்கில் என்.டி. ராமாராவ், ஏ. நாகேஸ்வர ராவ் ஆகிய ஜாம்பவான்களுடன் மட்டுமே நடித்து வரும் தன் நாயகியை, பாலாஜிக்கு ஜோடியாக்கினால் சாவித்ரியின்  இமேஜ் பாழாகும் என நினைப்பாரா...?  எல்லாம் கைகூடி வந்தாலும் சாவித்ரியின் கால்ஷீட் ஒத்து வருமா?

அவநம்பிக்கைகளின் அணி வகுப்பில் பாலாஜிக்கு வியர்த்தது. ஆனாலும் நம்ம சாவித்ரி மேடம் நல்ல பதிலையே  சொல்வார்  என்கிற உள்ளுணர்வு.

பாலாஜியின் ஒப்பனை எதிர்காலம் சாவித்ரியின் தாம்பூலம் பூசிய உதடுகளில் உறைந்து கிடந்தது.

‘டி.எஸ். துரைராஜ் என்னை ஹீரோவா பிரமோட் பண்ணிட்டார். பட் நீங்க  ஓகே சொன்னாத்தான் நான் நிஜமா ஹீரோ. இல்லன்னா ஜீரோ. உங்களோட ஜோடியா நடிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்களேன்.’

வேஷப் பிச்சை கேட்டுத் தங்கள் முற்றத்து வாசலில் நின்ற பாலாஜியின் பல்லாண்டு காலத் தவிப்புக்கு ஜெமினி-சாவித்ரி இருவரும் முற்றுப் புள்ளி வைத்தார்கள். ஜெமினி முழு மனதோடு அனுமதிக்க பாலாஜி, சாவித்ரியின் காதலனாக திரையில் டூயட் பாடி வலம் வந்தார். அவர்கள் சேர்ந்து நடித்த மற்ற படங்கள்  தூய உள்ளம், படித்தால் மட்டும் போதுமா.

பானை பிடித்தவள் பாக்கியசாலி படத்தில் திருச்சி லோக நாதனின் குரலில் ஒலித்த

‘புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே’ மன்மத ஆண்டின் முகூர்த்த நாள்களிலும் கல்யாண வீடுகளில் தவறாமல் கேட்கிறது.  சாவித்ரி காலத்தால் செய்த உதவியால் பாலாஜி சீக்கரத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் கதா நாயகனாக சக்கை போடு போட்டார்.

 2,000/- ரூபாய்க்கு பட்டாசு வெடித்து  முரசொலி மாறன் உள்ளிட்ட மிக முக்கிய 25 சகாக்களுடன் ஒவ்வொரு தீபாவளி ரிலிஸ் சினிமாவையும் அன்றே ராத்திரி ஆட்டம் பார்த்து, உல்லாச உலகம் உனக்கே சொந்தம் என உற்சாகமாக வலம் வந்தார். எல்லாம் சாவித்ரி மகிமை!        

கடைசி வரையில் நன்றி மறக்காதவர் கே. பாலாஜி. அவர்  சினிமா தயாரிப்பாளர் ஆனதும் ‘அண்ணாவின் ஆசை என்ற பெயரில் ஜெமினி- சாவித்ரியை வைத்துத் தன் முதல் ப்ராஜெக்டை உருவாக்கினார். பாலாஜியின் ஒரே நேரடி தமிழ் படைப்பு அது. மற்றவை யாவும் ரீமேக் ஃபிலிம்ஸ். அண்ணாவின் ஆசையில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவர் பிரபல இந்தி நட்சத்திரம் அசோக் குமார். 

 

sivakumar.jpg  

 

கே. பாலாஜியை மட்டும் அல்ல. சிவகுமாரையும் கை தூக்கி விட விரும்பியவர் நடிகையர் திலகம். இடது கையால் சுந்தரத் தெலுங்கில்  எழுதுவது சாவித்ரியின் சுபாவம்!  சிவகுமாரும் அப்படியே.

ஏவிஎம் ஸ்டுடியோ. 1971  ஜனவரி. வெயில் உறைக்காத தைத் திங்களின்  உச்சி நேரம். அருகருகே இருந்த தளங்களில் சாவித்ரியும் சிவகுமாரும் நடித்துக்கொண்டிருந்தார்கள். சாவித்ரியின்  கலை வண்ணத்தில் வியட்நாம் வீடு தெலுங்கு பேசியது. மடிசார் மாமியாக மெல்ல செட்டை விட்டு வெளியே வந்த சாவித்ரியின் கண்களில் சிவகுமார் பட்டார். மூத்த நட்சத்திரத்தைக் கண்டதும் உடனே கை கூப்பி வணக்கம் சொன்னார் பணிவின் பக்தர்.

சாவித்ரி-‘என்ன படம் ஷூட்டிங்? உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?’

சிவகுமார்- ‘திருமகள்’  நடந்துகிட்டு இருக்கு. என்னைத் தவிர  ஏவிஎம். ராஜன், லட்சுமி, ஜெமினி மாமா, பத்மினி, மேஜர், எஸ். வரலட்சுமின்னு ஏகப்பட்ட ஸ்டார்ஸ்.’

‘எத்தனை நாள்கள் தபால் தலை அளவில் விளம்பரங்களில் இடம் பெறுவது, எப்போது பிரபல ஹீரோ ஆவோம்’ என்கிற  மெல்லிய தாபத்தின் தடயங்கள் சிவகுமாரின் வார்த்தைகளில்.

சாவித்ரி - ‘சிவகுமார், உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?’

சிவகுமார்- ‘தெரியாது.’

சாவித்ரி- ’தெலுங்கு படியுங்களேன். தெலுங்கு ஃபிலிம்ஸ்ல நிறைய நல்ல சான்ஸ்  வாங்கித் தரேன்.’

சிவகுமார் பதில் சொல்லாமல் புன்னகைத்தார்.  தமிழில் முதலில் நினைத்ததை சாதித்து விட்டு மற்ற மொழிகளைப் பற்றி யோசிப்போம். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்கிற குழப்பம்  வேண்டாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

http://www.dinamani.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சாவித்ரி - 14. குழந்தை உள்ளம்!

 


‘பலர் என் காதுபடவே நான் குண்டாகி விட்டதைப் பற்றிப் பேசுகிறார்கள். உடல் பருமனாகி விட்டதால் எனக்கு நடிக்க சான்ஸ் வரவில்லை என்கிறார்கள். அது தவறு. எனக்குத் திருப்தியான பாத்திரங்கள் வராததால் நானே வேண்டாம் என்கிறேன்.

என் உடல் இளைக்க வேண்டும்  என்பதால் நானும் அவரும் அரிசி சாதம் சாப்பிடுவதே கிடையாது. சோறு என்றால் எனக்கு உயிர். ஆனால் இப்போது ஒரு மணி அரிசி கூட இல்லாத வீடு எங்கள் வீடாகத்தான் இருக்கும்.

காலையில் காபி வித் அவுட் சுகர்.  9 மணிக்கு தக்காளி ஜூஸ். மதியம் ஒரு மணிக்கு பச்சை காய்கறி இல்லனா நீர் மோர். ராத்திரில வேக வைத்த காய்கள்.  இவ்வளவு கட்டுப்பாடாச் சாப்பிட்டும் உடம்பு இளைக்கலே.

நான் ஒல்லியாகணும்னு தோழிகள் எல்லாருமே என்னை விட அதிகம் கவலைப் படறாங்க. என் பங்களாவைக்  கட்டும் போதே நீச்சல் குளத்துக்கு இடம் ஒதுக்கியாச்சு. ஸ்விம்மிங்னா எனக்குக் கொள்ளை ஆசை. நானும் ஜெயலலிதாவோட அம்மா சந்தியாவும் மாயாபஜார்ல சேர்ந்து நடித்தோம். ரொம்பவே திக்  ஃபெரன்ட்ஸ்.

சந்தியா கூடவே நானும் தினமும் நீந்துகிறேன். முன்ன மாதிரி பார்ட்டி, டின்னர்களுக்கு போவது கிடையாது. ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டா ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிக்கிறேன். ரசிகர்களின்  அன்புக்குக் கட்டுப்பட்டாவது  நான் பழைய மாதிரி ஆகி நடிக்க வேண்டும் என்ற வைராக்யத்தில் இருக்கிறேன்.’

- 1967 நவம்பரில் சாவித்ரி கூறியவை.  ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரது முயற்சிகள் எதுவும்  பலிக்காமல் போனது.

தமிழில் வாய்ப்புகள் வரக் காணோம். ஆந்திராவில் சாவித்ரி எப்போதும் நடிகையர் திலகம்! தமிழில் மற்ற ஹீரோயின்கள் நடித்து விழா கொண்டாடியவை, தெலுங்கில் ரீ மேக் ஆன போது அவற்றில் சாவித்ரியே நாயகி. 1970 ல் என்.டி. ராமாராவுடன்  ‘பெத்தார்த்தலு’ உள்ளிட்ட படங்கள் ஒப்பந்தமாயின. அந்த ஆண்டின் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

images.jpg 

ஸ்ரீதர் இயக்கத்தில் சாவித்ரி நடிக்க மிக அருமையான சந்தர்ப்பங்கள் தமிழில் மூன்று முறை வந்தன.  முதலில் கல்யாணப் பரிசு. கர்ப்பஸ்திரி சாவித்ரியால் அதில் நடிக்க முடியவில்லை.

அடுத்து நெஞ்சில் ஓர் ஆலயம். மிகக் குறுகிய கால தயாரிப்பு. ஒரேயடியாக மொத்த கால்ஷீட்டையும் கேட்டார் ஸ்ரீதர். கொடுக்க முடியாத சூழலில் ஜெமினி - சாவித்ரி இருவரும்  பிசி.

மூன்றாவதாக கொடி மலர். முத்துராமன் - விஜயகுமாரி நடித்த வேடங்களில் ஜெமினி-சாவித்ரி நடிக்க சில நாள்கள் ஷூட்டிங் நடந்தது. பிறகு ஏனோ நின்று விட்டது.

நாலாவது வாய்ப்பாக  நெஞ்சில் ஓர் ஆலயம் தெலுங்கில் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவானது. 

‘சாவித்ரி நடித்து நான் இயக்கிய ஒரே படம் மனசே மந்திரம். இறந்த பிறகு வேறு ஒருவரை, மணந்து கொள்ளச் சொல்லும் கணவரை மறுத்து, சாவித்ரி  பேச வேண்டிய காட்சி. காமிரா ஓடியது. கணவராக நடித்த ஜக்கையாவின் கோரிக்கையை கேட்டுப் பதறியவாறு, தன்  அதிர்ச்சியையும், மறுப்பையும் ஆவேசமாக  வெளிப்படுத்தியபடி  சாவித்ரி தடாலென்று தரையில்  விழுந்து விட்டார்.

அவரது நடிப்பு சுற்றியிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. ஆனால் சாவித்ரியோ உணர்ச்சி வசப்பட்டதால்  மயங்கிக் கிடந்தார். நடிகையர் திலகம் கண் விழிக்க அரை மணி நேரம் ஆனது. அதுவரை ஷூட்டிங் நடைபெறவில்லை.

துரிதமாக எழுந்த சாவித்ரி,  ‘ஸ்ரீ  அடுத்த ஷாட்டை உடனே  ரெடி பண்ணுங்க...’ என்றார் சுறுசுறுப்பாக.’

‘பரவாயில்ல. முதல்ல நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.’

‘தேவையில்ல. நான் இப்ப சரியான மூட்ல இருக்கேன். அது முக்கியமான சீன். எடுத்து முடிச்சிடுவோம்.’ என்றவாறு தொடர்ந்து நடித்து முடித்தார்.

சாவித்ரி பருமனாக இருந்ததால் அந்த கேரக்டர் பெற வேண்டிய அனுதாபத்தைப் பெறாமல் போய்விட்டது. பெரும்பாலான ஷாட்களில் மக்களின் கவனம், சாவித்ரியின் வடிவம் மீது போகாதவாறு அமைத்திருந்தேன். ஆயினும் பயனில்லை.

நடிகையர் திலகம் உடல்வாகு காரணமாகவே தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் போனார். அதனால் சாவித்ரிக்கு  எந்த அளவு நஷ்டமோ எனக்குத் தெரியாது. ஓர் அற்புதமான நட்சத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது தென்னகத் திரை உலகத்துக்கு மாபெரும் இழப்பு! ’-ஸ்ரீதர்.

 ஸ்ரீதரின் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து சாவித்ரி-

‘நெஞ்சில் ஓர் ஆலயம் தெலுங்கு ரீமேக்கில் நடித்தேன். ஏனோ அதில் எனக்கு அவ்வளவாகத் திருப்தி இல்லை.  தமிழ்ப்படத்தைப் பார்த்து நடிக்கிறோம் என்ற நினைப்பு கூடவே இருந்தது தான் காரணமோ என்னவோ...’

‘நானும் ஒரு பெண்’ தெலுங்கு பேசிய போது கருப்புப் பெண்ணாக என்.டி.ஆர். ஜோடியாக சாவித்ரி நடித்தார். ஏவிஎம்மோடு இணைந்து படத்தைத் தயாரித்தவர் சாவித்ரியின் அபிமானத்துக்குரிய எஸ்.வி. ரங்காராவ்.

‘ரங்காராவைப் போன்ற ஒரு கம்பீரமான இயற்கையாக நடிக்கக் கூடிய நடிகரை நான் பார்த்தது இல்லை. அவரைப் பார்க்கும் போது ’சார்லஸ் லாஃப்டனின்’ ஞாபகம் வரும்.  ஒரு சிரமும் இன்றிச் சட்டென்று எந்த பாகத்துக்கும் உரிய குரல், பாவனைகளுடன் நடிக்கக் கூடிய தனித் திறமை எஸ்.வி. ரங்காராவுக்கு உண்டு.’ -சாவித்ரி.

அன்னை பூமி அவரைக் கை விடாது அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. சாவித்ரி தாய்மண்ணில் டைரக்டர் ஆக ப்ரொமோஷன் பெற்றார்.

‘தெலுங்கில்  நான் நடித்த ’மூக மனசுலு’ பிரமாதமாக ஓடியது. அதைத் தமிழிலும் எடுக்க விரும்பினேன். அதுவே பிராப்தம். எனது டைரக்ஷனில் ஐந்தாவது படம். ஆனால் அந்தப் படமே என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாகவும் அமைந்து விட்டது.’ - சாவித்ரி.

ஆரம்ப காலத்தில் தி.நகர்  வைத்தியராமன் தெருவில் உள்ள  பானுமதியின் வீட்டில் குடியிருந்தவர் சாவித்ரி.

சினிமா தயாரிக்க வேண்டிய அவசியமோ, டைரக்டராக மாறும் நிர்ப்பந்தமோ நடிகையர் திலகத்துக்கு கிடையாது.  பானுமதி மாதிரி சொந்தத்தில்  சினிமா ஸ்டுடியாவை உருவாக்கியிருந்தால், சாவித்ரியின் கலைத் தேர் கம்பீரம் இழந்திருக்காது. 

ஏ.நாகேஸ்வரராவ்- சாவித்ரி நடித்த மூகமனசுலு தெலுங்கு வெற்றிச் சித்திரம்,  ஆந்திராவில் வசூலை வாரிக் குவித்தது. இந்தியில் மிலன் என்ற பெயரில் வெளியானது. சுனில்தத்- நூதன்,  ஜமுனா நடித்தனர். வடக்கிலும் சூப்பர் டூப்பர் சக்ஸஸ். 

கல்லூரி மாணவியான பணக்கார வீட்டுப் பெண்ணுக்கும் படகோட்டி ஒருவனுக்கும்  ஏற்படும் ஈடுபாடு, காதலாகி அடுத்த பிறவியிலும் தொடர்வதாக கதை.

திருப்பதி ஏழுமலையானுக்குப் பிறகு  சாவித்ரியிடம் அதிக அக்கறை காட்டினார்கள் ஆந்திரர்கள். ஆகவே சாவித்ரியை காலேஜ் ஸ்டூடன்ட் ஆக மனமாற ஏற்றுக் கொண்டனர். படத்தை இயக்கிய ஆதூர்த்தி சுப்பாராவ் அனுபவமிக்க இயக்குநர். மூகமனசுலு, மிலன் இரண்டையும் அவரே திறமையாக டைரக்ட் செய்து சாதித்துக் காட்டினார்.

சாவித்ரி ஏனோ  மூகமனசுலு ஹீரோயின் தமிழ் பேச வேண்டும் என்று துடியாகத் துடித்தார். அவரே சொந்தமாகத் தயாரித்து இயக்க ஆர்வம் பெருகியது. அவரது அன்பின் சுமையைத் தமிழக ரசிகர்கள் தாங்குவார்களா என்பதையெல்லாம் சிந்திக்கவில்லை. ஆசைத்தீ அண்ணா சமாதியின் அணையா விளக்கு போல், அல்லும் பகலும் சுடர் விட்டுத் தொடர்ந்து எரிந்தது.

மீனவர் நாகேஸ்வரராவ் ’மூகமனசுலுவில்’ மரியாதை நிமித்தமாக, மேட்டுக்குடிப் பெண்ணான நாயகியை தெலுங்கில் ’அம்மகாரு’ என அழைப்பார்.

தமிழில் ஜெமினி, சாவித்ரியை அது போல் அழைத்தால் பைத்தியங்கள் கூடச் சிரிக்கும்! படகோட்டி வேடம் தனக்குப் பொருந்தி வராது என்று ஜெமினி ஒதுங்கிக் கொண்டார்.

‘நீங்க நடிக்கலன்னா போங்க. சிவாஜி அண்ணாவை வெச்சி எடுக்கலாம். இன்ஃபாக்ட். எப்பவுமே அவருக்கு  பிரமாதமான மார்க்கெட் இருக்கு! டிஸ்டிரிபியூட்டர்ஸ் கணேஷ் அண்ணாவை போட்டு எடுத்தா பெரிய லாபம் கிடைக்கும்கிறாங்க.

‘நடிகையர் திலகம் சாவித்ரி டைரக்ஷன்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கிறார் !’

praptham1.jpg 

கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஃபேன்ஸ் மத்தியில நல்ல பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். ஓபனிங்லயே பெரிய பப்ளிசிடி கிடைக்கும்! பட சூப்பரா ஓடும். கலெக்ஷன் குவியும்!’

வியப்பின் பெரு வெளியில் சாவித்ரி அடம் பிடித்தார்.

இயல்பான நடிப்பின் இமயம் ஜெமினி!  வாழ்வின் நிலையாமையை வாசித்தும், அனுபவித்தும் கற்றவர்.    அன்றாடம் நேசம் நெய்யும் அழகிய மனைவியின், ஆசை வெள்ளத்துக்கு அணை கட்ட முயன்றார்.

திரை வணிகத்தின் யதார்த்தம் உணராமல், உச்ச நட்சத்திரத்தின் உண்மை சூழல் புரியாமல்  நீ ஏமாந்து போவாய் என்று எவ்வளவோ புத்தி சொன்னார்.

‘மூகமனசுலு வேண்டாம். அது பூர்வ ஜென்மக் கதை. ரிஸ்க் ஆனது.  இங்கு  ஓடாது. வேறு ஏதாவது நல்ல சப்ஜெக்டில் நீ நடிக்கலாம்.’

‘மனக்குகையில் சதா சாத்தான்களின்  புல்லாங்குழல் இசை!’ 

சாவித்ரிக்கு  புருஷனின் வார்த்தைகள் பாகற்காயானது.

பிரியசகி சாவித்ரியிடம் ‘ நான் கண்டிப்பா சொல்றேன். உன் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் செஞ்சிக்க. இது சம்பந்தமா  மேற்கொண்டு என்னை எதுவும் கேட்க வேண்டாம்.’ என்று தீர்த்துச் சொல்லி, விட்டு விலகி நின்றார்  ஜெமினி.

காதல் கணவர் என்பதற்காகவோ, மூவேந்தர்களில் ஒருவர், தமிழில் தொடர்ந்து அதிக சில்வர் ஜூபிளி சினிமாக்களின் ஹீரோவாக, நிலைத்து நிற்பவர் என்பதற்காகவோ ஜெமினியைக் கொண்டாடாமல், மதிக்காமல் சிவாஜியிடம் பேசி அப்போதைக்கு கால்ஷீட்டும் வாங்கி விட்டார் சாவித்ரி. பிராப்தம்  துரிதமாக உருவாக ஏற்பாடுகள் தயார் .

உள்ளுக்குள் புழுங்கிப் போனாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல், நிஜ நடிக மன்னனாகப் பெருந்தன்மையுடன் ஜெமினி நடந்து கொண்டார்.

வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டக் கலைஞர்களுக்கு சாவித்ரி,  தன் வீட்டில் வைத்து அட்வான்ஸ் தந்த போது, ஜெமினியும் பக்கத்தில் சேர்ந்து நின்று வழங்கினார்.

ஜெமினி - சாவித்ரி இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்கிறத் தகவல் வேகமாகப் பரவியது. மீடியா விழித்துக் கொண்டது. காதல் மன்னனின் ரசிகர்கள் உள்ளன்போடு ஊடகங்களை அணுகினார்.

‘ஜெமினி கணேசனும் சாவித்ரியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்களாமே?’

‘சண்டை போடாத கணவன் -மனைவி உலகத்திலேயே கிடையாது. வெற்றி என்னவோ வழக்கம் போல் சாவித்ரிக்கே.’

பிரபல சினிமா பத்திரிகையில் வெளியான கேள்வி பதில்.

1969.பேரறிஞர் அண்ணாவை இழந்த வறண்ட கோடை. சென்னையின் சுவர்களில்  ‘வெற்றி நடை போடுகிறது! எனப் பூரித்து நிற்கும்  ’அடிமைப் பெண்ணின்’ அட்டகாச விளம்பரங்கள். வருகிறது  ‘சாந்தி நிலையம்!’  என்று மிளிரும்  வண்ணப் பதாகைகள்.

காதல் மன்னனின் வாழ்க்கையில் என்னதான் நடக்கிறது...  கவர் ஸ்டோரி வெளியிட்டால் என்ன...?  பிரபல முன்னணி வார இதழ் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சினிமா நிருபரை, காதல் மன்னனைத் தொடர்பு கொள்ளத் தூண்டியது.

நீச்சல் குளப் பின்னணியில் சாவித்ரி - பன்னீர் திராட்சை வண்ணத்தில், பூக்கள் போட்ட சேலையில், நாக்கைத் தொங்க விட்ட வெள்ளை நிற நட்சத்திர நாயுடன் பத்திரிகையின் அட்டையை அலங்கரித்தார். சாவித்ரியின் கையில்  ரிஸ்ட் வாட்ச்.  அதைச் சொல்ல மறந்து விட்டேனே...!

‘ஹலோ ஜெமினி கணேஷ்  சார் இருக்காரா..?’

எதிர்  முனையில் ‘இவ்ளோ நாழி இங்கே தான் இருந்தார். இப்பொழுது தான் அந்த வீட்டுக்குப் போனார்.’

அடுத்து நிருபர்  சாவித்ரி இல்லத்துக்கான தொலைபேசி எண்ணைச் சுழற்றுகிறார்.

சாவித்ரி- ‘ ஹலோ யார் வேணும்?’

ஜெமினி- ‘நான் பேசறேன் கொடு.’

அக்னி நட்சத்திர வெயிலின் அனல் கக்கும்  முற்பகல் பதினோரு மணி. தி. நகர். அபிபுல்லா சாலை சாவித்ரி மாளிகை. அழகிய கூடம்.

பிரகாஷ் ஸ்டுடியோவில் தெலுங்கு சினிமாவை இயக்கும் அவசரம். சாவித்ரி கிளம்ப இருந்தார். நேர்காணலுக்காக அரை மணி நேரம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று உட்காருகிறார்.

அனுபவஸ்தர் ஜெமினி கணேஷ். உலகம் அறியா அப்பாவி சாவித்ரி. அவர் வாயிலாகத் தப்பித் தவறி கூட, வீட்டு விஷயம் வெளியே தெரியலாகாது. பண்பாடு அவரை எச்சரித்தது. உடனே உஷாராகி, 

’கொஞ்சம் இருங்கள். சாவித்ரி பற்றி நீங்கள் கேட்கும் பேட்டியை நான் எழுதியே கொடுத்து விடுகிறேன்’ என்றார். அவரே காகிதம் பேனாவோடு அமர்ந்து  நிருபரிடம் நிரப்பித் தந்ததிலிருந்து.  

’சாவித்ரிக்கு  குழந்தை உள்ளம். சிறு பிள்ளைக்கு இருக்க வேண்டிய குணாதிசயம் அவளுக்கு உண்டு. வீட்டில் இவர்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள். நளினமாகப் பேசுகிறார்கள். நேரில் பார்த்தால் பெரிய நடிகையைப் போலவே தெரியவில்லையே...

சினிமா மேக் அப், நடை, உடை, பாவனை இப்படி இருப்பாங்கன்னு நினைச்சா அப்படி இல்லையே... என ரசிகைகள் அங்கலாயிப்பார்கள்.

குடும்பப் பெண் - சினிமா நடிகை என்று இனம் பிரித்தால், ’குடும்பப் பெண் சினிமாவில் நடிக்கலாமா என்றால்,  இதென்னயா கேள்வி...?’  என சாவித்ரி கோபப்படுவாள்.

நடிகைக்குக் குடும்பம் இல்லையா? அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை கிடையாதா? கல்யாணம் ஆனால் குடும்பப் பெண். - திருமதி. ஆகலேன்னா குமரிப் பெண் அவ்வளவு தானே என்பாள்.

சாவித்ரிக்குக் கோபம் வரும். ஆனால் அது முன் கோபம். குழந்தை போலே உடனே இளகி விடும். தொழிலைப் பொறுத்தவரை சாவித்ரி மிகக் கண்டிப்பானவள். செட்டில் சாவித்ரி நடந்து கொள்ளும் முறை  எல்லாரும் பின் பற்ற வேண்டியது. அழகான ஒழுங்கான நடைமுறை.

ganesan_savi.jpg 

லேட்டா போகக் கூடாது.  நடிப்பில் மனது வைத்து பூரணத் திருப்தி உண்டாகுமாறு  நடிக்க வேண்டும் என்று, எனக்கே பல முறை சொல்லி ஓரிரு முறை கண்டித்திருக்கிறாள்.

உடலை சரிக்கட்டி வை என்றால் ஒரு பக்கம் வருத்தம், ஆத்திரம் எல்லாம் கலந்து வரும். என்ன செய்வது? கூடிய வரை உடல் எடையைக்  குறைக்க முயற்சிக்கிறாள்.

எங்களது ரசிகப் பெருமக்களின் ஆசி வீண் போகவில்லை. ஆண்டவனின் ஆசியும், அன்பு ரசிகப் பெருமக்களின் வாழ்த்துகளும் எங்களைப் போன்ற மனமொத்த கலைஞர்களுக்கு என்றென்றும்  வேண்டும் என்று மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.’- ஜெமினி கணேசன்.

பத்திரிகைக்கு அடுத்த வாரமே ஓர் அஞ்சல்.

சென்னை 17. கிருஷ்ணா என்பவரிடமிருந்து.

’புயல் வீசிக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ஜெமினி அபிமானிகளின் உள்ளங்களில் அமைதி தேடித் தந்து இருக்கிறீர்கள்.’

சாவித்ரிக்கும் ஜெமினிக்கும் ஏற்பட்டப் பிணக்குகள் நட்சத்திர வாழ்வில் இயல்பானவை. சாவித்ரியோடு பிரிவு என்பதை ஜெமினியால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 

தங்களையும் மீறி விதிவசத்தால் விலகி விடுவோமோ... என்கிற உள்ளுணர்வு இருவரிடமும் இருந்தது. அத்தாக்கத்தின் வெளிப்பாடே ரசிகர்களுக்கு ஜெமினி விடுத்த கோரிக்கை.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி - 15. காயகல்பம்!

 

 

தமிழ் நாட்டில் ஆற்றங்கரைகள் கிடையாதா என்ன? ரீமேக் செய்பவர்களுக்கு ஓர் அடிவயிற்று அச்சம். மூலப்படத்தில் உள்ளது போலவே காட்சிகள், காஸ்ட்யூம்கள், வசனம், செட், இசை, லொகேஷன், தலைக்கான விக் அத்தனையும் இருந்தாக வேண்டும்.

அதில் ஏதும் ஒன்று மாறினால் கூடத் தங்கள் படம் கோவிந்தாவாகி விடும் என்கிற காப்ரா. சாவித்ரி கோலிவுட் பயந்தாங்கொள்ளி. கோதாவரி பாய்ந்தோடும் அமலாபுரத்தில், அவுட்டோர் யூனிட் சகிதம் ஹீரோ சிவாஜியோடு களம் இறங்கினார்.

இருபது நாள்களில் முதல் ஷெட்யூலை முடிக்கத் திட்டம்.

praptham1.jpg

இயற்கைப் பேரிடரும் ஒரிஜினல் - ரீமேக் இரண்டிலும் உள்ளேன் அம்மா! என ஒத்துழைத்தது. இரண்டு அவுட்டோரிலும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அஞ்சி நின்றவர் சாவித்ரி. அந்நிகழ்வு அவரது வார்த்தைகளில்:

‘கோதாவரி கரை. ராஜமகேந்திரபுரம். ஓடத்தில் ஏ.நாகேஸ்வர ராவுடன் மூகமனசுலு படத்துக்கான  ஷூட்டிங். ‘நான் படகின் விளிம்பில் என்னை நோக்கிப் பாடும்  ஹீரோவைப் பார்த்தவாறு வர வேண்டும். சட்டென்று திரும்புகையில் தவறி நதியில் விழுந்து விட்டேன். நல்ல ஆழம். சுழல் வேகம் கூடிக் கொண்டே இருந்தது.

நான் இல்லாததை அறியாமல் ஏ.என்.ஆர். பாடலைத் தொடர்ந்தார். போட் என்னை மறந்து நகர்ந்து சென்றது. தண்ணீரில் தத்தளித்தவாறு அதன்  பிடியைத் தேடி நீரில் அலைந்தேன். என் கூக்குரல்  படகோட்டியின் காதுகளில் விழவே இல்லை.

நல்ல சமயம். ஏ.என்.ஆர். என் அலறலைக் கேட்டு விட்டார். அவர் ஸ்டாப்... ஸ்டாப் எனக் கத்தியும்  படகோட்டி நிறுத்தவில்லை. நீச்சல் தெரியும் என்பதால்  வேகமாக நீந்தி, எப்படியோ ஓடத்தின் நுனியை கெட்டியாகப் பிடித்து விட்டேன். ஏ.என்.ஆர். கை கொடுத்துக் காப்பாற்றினார்.

அதுக்கு மேலே அன்னிக்கு ஷூட்டிங் நடக்கல. பேக் அப்  ஆயிடுச்சு.

பிராப்தம் லொகேஷன் கோதாவரி ஓடும் பாதையில் காக்கிநாடாவுக்கும் அமலாபுரத்துக்கும் நடுவில் உள்ள ஒரு தீவில் அமைந்தது. போட் மூலமே அங்கு போய் வர முடியும். சிவாஜி அண்ணனும் மற்ற ஆர்ட்டிஸ்டும் தங்குவதற்காக ஸ்மால் ஹட்ஸ் போட்டோம். நாங்க போன நேரம் சூறைக்காற்றும், பேய் மழையும் வந்துவிட்டது. சிவாஜி உட்பட எல்லாரும் சூறாவளியில் சிக்கிக்கிட்டோம்.

ஓடக்காரர் இந்த காத்து மழையில அக்கரையில் கொண்டு சேர்க்க முடியாதுன்னு தீர்மானமா சொல்லிட்டார். படகை எடுக்கவே மறுத்தார். நான் ரொம்பவும் கெஞ்சி கேட்டேன்.

தயவு செஞ்சு கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க. சிவாஜி மழையில தொப்பைக்கட்டையா நனைஞ்சு நிற்கிறார். வேற வழி கிடையாதுன்னு. ஆயிரம் ப்ளீஸ் போட்டேன். ஒரு வழியா மறுகரைக்கு வந்து சேர்ந்தோம்.

படகை விட்டு இறங்கினதும் சிவாஜி அண்ணன் என்னைக் கண்டித்தார். இந்த மாதிரியான நேரத்துல ஆற்றைக் கடந்து வந்தது ரொம்பவும் ஆபத்தானதுன்னு.’  

பணக்கட்டுகளில் மெத்தை தைத்துப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு செல்வ சீமாட்டி சாவித்ரி!   உயர் மின்சார பல்புகளின்  தகிக்கும் அனலில் அழுது கண்ணீர் விட்டு, கேமரா முன்பு கஷ்டப்பட்டு கதறி  சம்பாதித்த காசை கோதாவரி நதியில் வாரி இறைத்தார்.

1970  கோடையில் 12 ஆயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் ‘ பிராப்தம்’ நின்று விட்டது.

பராசக்தி முதலே நடிகர் திலகம் ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களில் நடிக்கிற பிசியான மகா கலைஞர். சாவித்ரி காலமான பிறகும், ரஜினி - கமல் உச்சாணிக் கொம்பில் இருந்த 1983ல்,  சிவாஜியின்  ஒரு டஜன் சினிமாக்கள் வெளிவந்தன.

கணேசனின்  அற்புத நடிப்புக்கு இணையாக  உடன்  பயணித்த ஒரே நடிகை சாவித்ரி. அண்ணனின்  உச்ச நட்சத்திர அந்தஸ்தை உணர்ந்திருந்தும், அவரது பரிபூரணமான ஒத்துழைப்பு  தனக்குக் குறைவில்லாமல் கிடைக்கும் என மனமார நம்பி ஏமாந்தார். அவஸ்தைகளின் யாத்திரையில் அவதிப்பட்டார்.

13KIMP_SAVITHRI_2150280e.jpg 

‘ஏராளமான படங்களைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்வது ஏன்?’

 என்கிற கேள்விக்கு 1971ல் நடிகர் திலகம் தன்னிலை விளக்கம் அளித்தார்.

‘நாட்டில் நடக்கிற பல நல்ல காரியங்களுக்குச் செலவிட நேருவதால், நான் வாங்குகிற ஊதியம் போதவில்லை. ஆகவே பல படங்களில் நடிக்க வேண்டி வருகிறது.

எத்தனையோ நண்பர்கள் தங்கள் படங்களில் நடிக்குமாறு கேட்கும் போது எவரை வேண்டாம் என்று ஒதுக்குவது?

ஒரே கலைக்குடும்பமாக உள்ளதால் சிலரைப் புறக்கணிப்பதோ,  பட எண்ணிக்கையைக் குறைக்கவோ  முடிவது இல்லை. அதனால் நிரந்தரமாக நிறைய சினிமாக்களில் நடிக்கும் சந்தர்ப்பம் உண்டாகிறது.’

ஒட்டு மொத்தமாக தென்னக சினிமா ஜெ.வுக்கு மாறிய காலகட்டம். (1965 - 1973.) ஜெயலலிதாவை வசூல் கஜானாவாக, கலைச் செல்வியாக, ஐஸ்வர்ய தேவதையாக, அழகின் ஆலயமாக  விநியோகஸ்தர்களும் இளைஞர்களும்  கொண்டாடினர்.

நடிகர் திலகமும் ஜெயலலிதாவை

‘வந்த இடம் நல்ல இடம்

வர வேண்டும் காதல் மகராணி!’

என்று வாழ்த்தி வரவேற்று, அவரது சொந்த கம்பெனி போன்ற ராம்குமார் பிலிம்ஸ் தயாரித்த, ‘கலாட்டா கல்யாணம்’ சினிமாவில் லாபக் கணக்கை வரவு வைத்தார்.

ஜெ.வின் கால்ஷீட்டைப் பெறுவது புலிப்பாலைக் கொண்டு வருவது போல் இருந்தது. அத்தனை உயரிய  உச்ச நட்சத்திரப் பெருமிதத்தை வாரி வழங்கினர் தென்னக மக்கள்.  

‘அம்முவிடம் தேதிகளை கேட்டு ஒழுங்குபடுத்திய பின்பு என்னிடம் வாருங்கள்...’ என்று தன் பட அதிபர்களுக்கு உத்தரவிட்டார் சிவாஜி கணேசன்.

கணேசனும் - கலைச்செல்வியும் இணைந்து நடிக்கும் சினிமாக்கள் டஜன் கணக்கில்  தயார் ஆயின. அவர்கள் ஜோடியாக  நடித்தவை பெரும்பாலும் வண்ணச்சித்திரங்களாக அமைந்தன. சிவாஜி கணேசனின் கவனம் அத்தகைய இளமை ததும்பும் படங்களில் லயித்தது.

பி. மாதவன், முக்தா சீனிவாசன், கே. பாலாஜி, போன்றோர் படங்களில் நடிப்பதற்கு கணேசன் கூடுதல் முன்னுரிமை வழங்கிய நேரம்.

நேற்று பூ - சாவித்ரி - நடிகையர் திலகமாக, தனது தோழியாக, உடன் பிறவா சகோதரியாக, படத் தயாரிப்பாளர், டைரக்டர், கதாநாயகியாக இருந்தும் ஏனோ, கணேசன் பிராப்தம் படத்துக்குப் போதிய முக்கியத்துவம் தரவில்லை.

முடிந்த வரையில் கழற்றிக் கொள்ள விரும்பினார். சாவித்ரியுடனான சிநேக பந்தம் நடிகர் திலகத்தை  கட்டிப்போட்டது.

அதைக்  குறித்து வசனகர்த்தா ஆரூர்தாஸ்  எழுதியுள்ளவை:

பிராப்தம் தெலுங்கு மூலத்தைப் பார்த்த பின்னர்  நடந்த உரையாடல்:

‘சிவாஜி - ஆரூரான் இந்தப் படம் மூகமனசுலு ஆந்திரால எப்படிப் போச்சு?

ஆரூர்தாஸ்-  ரொம்ப நல்லாப் போச்சு. ஆனா தமிழ்ல அந்த மாதிரி போகும்னு நான் சொல்ல மாட்டேன். இதை  அதன் டைரக்டர் ஏ. சுப்பாராவ் ரொம்ப ஜாக்கிரதையா கையாண்டிருக்காரு. அவரு ஒரு நல்ல  இயக்குநர். அந்த அளவு சாவித்ரி...

சிவாஜி- நான் என்ன நினைச்சேனோ நீ அதை அப்படியே சொல்லிட்ட. சாவித்ரி ரொம்ப ரிஸ்க் எடுக்குது. இப்போ அது ஏன் சொந்தப்படம் எடுக்கணும்?

அப்படியே எடுத்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல குடும்பக் கதையா பார்த்து எடுக்கலாமே. அதான் நீ இருக்கியே.  ஒங்கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது தானே?

என்ன பெரிய டைரக்ஷன் வேண்டிக் கிடக்கு ?

நம்ம குடும்பத்துப் பொண்ணு. நம்மால ஒண்ணும் மறுத்துச் சொல்ல முடியல. பேசாம ஏ. சுப்பாராவையே டைரக்டரா போடச் சொல்லு. நீ சொன்னா சாவித்ரி கேட்கும்.  ஜெமினி கணேசனையும் விட்டுச் சொல்ல சொல்லு.’

----------------------

ஆரூர்தாஸ் -  ‘அண்ணி! நீ ரெண்டு ரிஸ்க் எடுக்கறே. ஒண்ணு சொந்தத் தயாரிப்பு. இன்னொன்னு டைரக்ஷன். இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கறதுக்கான அவசியம் உனக்கென்ன வந்தது?

குழந்தை உள்ளம் மாதிரி இது சின்ன ப்ராஜெக்ட் இல்லே. சிவாஜியை வெச்சு எடுக்கற படம். காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாகும். அவுட்டோர் ஓர்க் நிறைய இருக்கு. அது மட்டுமில்ல மூகமனசுலு மறு ஜென்மத்தைப் பத்தின ஒரு குழப்பமான கதை.

சாவித்ரி - பரவாயில்லை. மூகமனசுலுவைத்தான் நான் எடுக்கப் போறேன். தெலுங்கு மாதிரி தமிழும் நல்லா வரும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க தமிழ் ஸ்கிரிப்டுல தெலுங்கை விட இன்னும் நல்லா இம்ப்ரூவ் பண்ணி கொடுத்தீங்கன்னா, அதை நான் கரெக்டா ஃபாலோ பண்ணிக்குவேன். படம் நல்லா வரும். சிவாஜியும் நானும் இருக்குறதுனால நல்லா பிசினஸ் ஆகும்.

savithiri_three.jpg 

ஆரூர்தாஸ்- சரி. அப்படின்னா, இன்னொரு முக்கியமான பாயிண்ட். நீ ஏன் வீணா ரெண்டு வகையில ஸ்ட்ரெயின் பண்ணிக்குற?  சுப்பாராவையே டைரக்ட் செய்ய சொல்லேன். ஏன்னா ஆக்டிங், ப்ரொடக்ஷன், டைரக்ஷன் இவ்வளவு லோடு உனக்கு தேவையா? நல்லா யோசிச்சி பாரு.

சாவித்ரி - நல்லா  சிந்திச்சிப் பார்த்துதான் முடிவெடுத்தேன். நானே டைரக்ட் பண்ணப் போறேன்னு சுப்பாராவ் கிட்ட சொல்லி அவரு ஆசீர்வாதத்தையும் வாங்கிட்டேன். எல்லாம் முடிஞ்சி போச்சி. இனிமேல் திங்க் பண்ண எதுவும் இல்ல.

ஆரூர்தாஸ்- கடைசியா  உனக்கு ஒண்ணு சொல்றேன். இந்தப் படத்துனால உனக்கும் ஜெமினி அண்ணனுக்கும் எந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும்  வராம நீ பார்த்துக்கணும். எனக்கு வேண்டியது அது ஒண்ணுதான்.

சாவித்ரி - பிராப்தம் சம்பந்தமா தன்னை ஒண்ணும் கேக்க வேணாம்னு அவர் கண்டிச்சி சொல்லிட்டாரே. அதுக்கப்புறம் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் வர்றதுக்கு என்ன இருக்கு?’

‘அப்படி சாவித்ரி சொன்னதே கணவன் - மனைவி இருவருக்குள்ளும் உண்டான கருத்து வேறுபாட்டின் முதல் கட்டம் என்பதை நான் எளிதில் புரிந்து கொண்டேன்.’ -ஆரூர் தாஸ்.

சிவாஜி அண்ணனின்  அறிவுரை, ஆரூர்தாஸின் வேண்டுகோள்  எதையும் கேட்கும் நிலையில் சாவித்ரி அன்று இல்லை.

தமிழிலும், தெலுங்கிலும் தன்  சொந்தக் காலில் நின்று,  ஏராளமான வெற்றிச் சித்திரங்களை வழங்கிய ஒரே  ஒருவர் நடிகையர் திலகம். அவரது படுதோல்விப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கேமராவுக்கு முன்னால் சாதித்ததைப் போலத் திரைக்குப் பின்னாலும், இயக்குநர் இமயமாக ஜெயித்துக் காட்ட முடியும் என்கிறத் தன்னம்பிக்கையின் உச்சம்!

இன்றைய பாஷையில் சொன்னால்

‘தல, சாவித்ரி ஓவரா சீன் போடுது தல! எப்ப ரெண்டும் புட்டுக்குமோ தெர்ல!’

பிராப்தம் மட்டுமா ஜெமினி - சாவித்ரி உறவில் விரிசல் ஏற்படக் காரணம்?  ஜெமினியின் தீரா காதல்களும் அதற்குக்  கை கொடுத்தன. 

தாம்பரம் கிருத்தவ கல்லூரியில் படிக்கும் போதே கல்யாண மாப்பிள்ளையானவர் ஜெமினி. அதை அவர் சக மாணவர்களிடையே மறைத்து விட்டார்.  பாப்ஜியின் தகப்பனார், மருமகனை டாக்டருக்குப் படிக்கவைக்கிறேன் என்று வாக்குறுதி தந்ததால், திருமணம் நிச்சயமானது. அப்படிப்பட்ட மாமனார்  முறுக்கு, சீடை, தேன்குழல் முதலான பட்சணங்களோடு கிருத்துவ கல்லூரிக்கு வந்தார். அவர் மூலம் தான் திருமணமானவன் என்பது தெரிந்தால், பேச்சுலர் இமேஜ் போய் விடும் என  அவசர அவசரமாக அவரை வெளியேற்றினார் ஜெமினி. 

பாதகாணிக்கை படத்தில் ஒலித்த, ‘பெண்ணுக்கு இளமை எதுவரை  பிள்ளைகள் இரண்டு பெறும் வரை’ என்ற கண்ணதாசன் வரிகளுக்கு நிஜ வடிவம் தந்தவர் ஜெமினி.

புஷ்பவல்லிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் சாவித்ரிக்கு வலை வீசி, அங்கும் இரண்டு வாரிசுகள்.

ஐம்பதை  நெருங்கியும் ஜெமினியின் வசீகரத் தோற்றத்தில் இளமை ஊஞ்சலாடியது. ‘சாந்தி நிலையம்’ வண்ணச் சித்திரம் அதற்கு சாட்சி. காமிரா மேதை மார்க்கஸ் பார்ட்லேவின்  ஒளிப்பதிவில்  ‘இயற்கை எனும் இளைய கன்னி’ பாடலில் ஜெமினி ‘ சிரஞ்சீவி சுந்தர புருஷன்!’

GG-JUL-10.jpg 

‘சாந்தி நிலையம் படத்துக்காக ஜெமினி காயகல்பம் உண்டாரா?’ என்று குமுதம் தன் விமர்சனத்தில்  குஷியாக குலவையிட்டது.

புஷ்பவல்லி, சாவித்ரி ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவதாக, ஓர்  ஆந்திர அழகியை ஜெமினியுடன் இணைத்து கிசுகிசுக்கள் பெருகின. அவர் -

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கணக்காக ஜெமினி உள்பட, இந்திய யுவன்கள் அனைவரையும் ஜொள்ளு விட வைத்த  கவர்ச்சி சுனாமி! ‘ காதலிக்க நேரமில்லை’ புகழ் ராஜஸ்ரீ.

அதில், ‘அனுபவம் புதுமை அவரிடம் கண்டேன்!’ பாடல் காட்சி இன்றைக்கும் சிருங்கார சுவையூட்டும்.

அதுவரையில் ஹபிபுல்லா சாலையில் சாவித்ரியின் நேத்ர தரிசனத்துக்காகத் தவம் கிடந்தனர் தெலுங்கு ரசிகர்கள். பின்பு திசை மறந்து, ருசி மாறி கோடம்பாக்கம் மேம்பாலத்துக்குச் சமீபமாக  போரூர் சோமசுந்தர முதலித் தெருவில் அவர்களது பஸ் நின்றது.

திருப்பதியில்  மொட்டை போட்ட கையோடு, ராஜஸ்ரீயின்  இல்லத்தை முற்றுகையிட்டனர்.

‘தனக்கு ஒரு சிலை செய்தால் என்ன?’ எனப் பிரபல வார இதழில்  ஜனங்களிடம் அபிப்ராயம் கேட்டார் ராஜஸ்ரீ. அன்றைய இளசுகளுக்கு அவர் மீது அப்படியோர் அநியாய அபிமானம்!

‘ஆந்திராவிலிருந்து வரும் மக்கள் என்னைப் பார்க்க வருவது அதிகமாகி விட்டது. காலையில் அவர்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டுத்தான் மீதி விவகாரம்.

ஏன் என்னைப் போலவே ஒரு சிலை செய்து வைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு நாள் ஆயில் பாத் எடுத்துக் கொண்டிருந்தேன். அது தெரியாமல் என் சகோதரி நான் இல்லை எனச் சொல்ல,

‘எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறோம். ஏன் வீட்டில் வைத்துக் கொண்டே ஷூட்டிங்கில் இருக்கிறார் என்று பொய் சொல்கிறீர்கள்...?’ என கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள். - ராஜஸ்ரீ.’

Rajasri.jpg 

முதன் முதலில் ‘பூவா தலையா’  வெற்றிப் படம்  மூலம், ராஜஸ்ரீயுடனான மோகக்  கணக்கைத் தொடங்கினார்  ஜெமினி. 

அதில் கவிஞர் வாலியின் உபயத்தில் ‘ மதுரையில் பிறந்த மீன் கொடியை’ பாடலில், ராஜஸ்ரீயை தமிழகமாக வர்ணித்துப் பாடி நடித்துப் புளகாங்கிதம் அடைந்தார்  காதல் மன்னன்.

அவரது படங்களில் தொடர்ந்து ராஜஸ்ரீ இடம் பெற்றார். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருவரும் இணைந்து இலங்கைக்குச் சென்றனர்.

கொடைக்கானலில் தனது ரெட்லின்ச் பங்களாவில், ராஜஸ்ரீயுடன் ஜெமினி கணேசன் உல்லாச சல்லாபம்,   புது மாப்பிள்ளையாகி ராஜஸ்ரீயை கல்யாணமே செய்து கொண்டார் என்றெல்லாம் பரபரப்பாக கோலிவுட்டில் வதந்திகள் உலா வந்தன. அப்போது நடந்தவை மன்மதனுக்கே வெளிச்சம்!  

‘யாராக இருந்தாலும் ஒரு மனிதன் அறுபது வயதுக்கு மேல் இருப்பது வீண் தான். அறுபதோ ஐம்பதோ, வயதைப் பற்றி ஒன்றுமே இல்லை. ஒரு மனிதனுக்கு செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயணற்றது. ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால்  எத்தனை வயது ஆனாலும் இளமையாக வாழலாம்- ஜெமினி.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-16. பிரிவின் உச்சம்! பிராப்தம்!

 

 

ஜெமினியைப் பார்க்கப்  படப்பிடிப்புகளுக்குச் செல்வது சாவித்ரியின் பழக்கம். ஜெமினியை தேடி தெலுங்கு ஷூட்டிங்கில் இருந்து, மேக் அப்போடு வந்த சாவித்ரியிடம், டைரக்டர் ஸ்ரீதர் கேட்டார்.

உங்க பிராப்தம் எப்ப ரிலீஸ்?

‘அதுக்கு எப்ப பிராப்தம் இருக்கோ அப்ப.’ என்று சொல்லிச் சிரித்தார் சாவித்ரி. வேறு வழி?

சாவித்ரி சிவாஜியின் தம்பி வி.சி.ஷண்முகத்திடம், கணேசனின் கால்ஷீட் கேட்டு அலைவது வாடிக்கையானது. அப்படியும் நேரம் நிறையவே மிச்சம் இருந்தது.

இரவில் சாவித்ரியின் வீட்டில் தங்கி, விடியலில் அங்கேயே மேக் அப் போட்டு ஷூட்டிங் புறப்படுவது, ஜெமினியின் அன்றாட இயல்பு. பிராப்தம் ஏற்படுத்திய சிக்கலால் அவர்களிடையே சீனப் பெருஞ்சுவர் எழும்பியது.

தனியாகவே சென்று சஃபையர் தியேட்டரில், நாலு மணி காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்தார் சாவித்ரி.

ஜோதி லட்சுமி எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவர் வீட்டுக்குப் போய் சீட்டு விளையாடினார். கேட்காமலே ஏகப்பட்ட அறிவுரைகள் ஜோதியின் காதுகளை நிரப்பின.

‘உனக்கு நீச்சல் தெரியுமா...?  தெரியலன்னா என் வீட்டுக்கு வா. அங்க பெரிய நீச்சல் குளம் இருக்கு. டைம் கிடைக்கறப்ப வந்து ஸ்விம் பண்ணு. உடம்பை ஸ்லிம்மா வெச்சுக்க. வெறும் கிளாமர் ரோல் பண்ணாம கேரக்டர்களும் செலக்ட் செஞ்சி பண்ணு. வரட்டுமா. ஆல் தி பெஸ்ட்!’

ஜோதி இன்ப அதிர்ச்சியில் வியர்த்து நின்றார்.

ஓர் ஆடவன் ஸ்த்ரீ லோலனாக அலைவதைப் போல் ஒரு பெண்ணும் அவனைக் கண்டித்து ஒழுங்குபடுத்த இயலாத சூழலில்,  ஆற்றாமையின் விளிம்பில், விரக்தியில் தானும் தவறுகளைச் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு, சாவித்ரியின் வாழ்க்கை நிகழ்வுகள் பொருத்தமான எடுத்துக் காட்டு.

மது. மாது. ரேஸ் உள்ளிட்ட லாகிரிகள் நீங்கலாக ஜெமினி மனத்தாலும் பிறருக்குத் தீங்கு நினைக்காதவர். அதை வேறு யாரும் சொன்னதில்லை. அவரே ஒவ்வொரு நேர்காணலில் தவறாமல் சொல்லி இருக்கிறார்.

 ‘நான் கடவுளுக்கும் கூட பயப்பட மாட்டேன். ஆண்டவன் தான் என்னைப் பார்த்து நடுங்கணும்!’

பொறுமைக்கொரு சமுத்திரமாக ஜெமினி கணேசனும் புகழுக்கொரு கோபுரமாக சாவித்ரியும் இணைந்து வாழ்ந்த பொற்காலம் 1970 துடன் பூர்த்தி பெற்றது.

savi.jpg 

சாவித்ரியின் கோப தாபங்களுக்கேற்ப  அனுசரித்து நடந்தவர் ஜெமினி. சாவித்ரிக்குக் கீழ் படிவதை அவமானமாக ஜெமினி எண்ணியது  கிடையாது. காரணம் சாவித்ரி மீதான எல்லையற்ற பிரேமை. கணேசன் சாவித்ரிக்குப் பிரியமானவன் அல்ல. காதல் ஊழியன் என்பதே சரி!

‘சாதிக்க நினைக்கும் திறமை நிறைந்த பெண்களைப் பார்க்கும் போதே நான் பிரமித்து நிற்பேன். பாராட்டவும் நினைப்பேன்.  சாவித்ரி செய்த எத்தனையோ தவறுகளையும் மிஞ்சி, அவளிடம் எனக்குப் பாசத்தையும் நேசத்தையும் உருவாக்கியது அதுதான்.’- ஜெமினி.

தராசின் தட்டுகள் எடைக்கு ஏற்ப மாறி மாறி உயர்வதைப் போல ஜெமினியும் சாவித்ரியும், போட்டி போட்டிக் கொண்டு சம்பாதித்து உல்லாசமாக செலவழித்தார்கள். நிஜத்தில் யார் பெரியவர் என்கிற ஈகோ அங்கே இல்லை.

ஜெமினி கணேஷ் - சாவித்ரி இணைந்து நடித்த ‘ஆயிரம் ரூபாய்’ உள்ளிட்ட பல படங்களில், தனது பெயருக்கு முன்னாலோ பின்னாலோ ‘நடிகையர் திலகம் சாவித்ரி’, என்கிற டைட்டில் கார்டைக் கண்டு ஜெமினி பெருமிதம் கொண்டார். ஒரு போதும் பொருமியது கிடையாது.

கோலிவுட் கூடாரத்தில் நஞ்சு தோய்ந்த நாக்குகளில்  வெளிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு கணக்கேது?

சாவித்ரிக்கு இருந்த சினிமா செல்வாக்கில், டாப் ஸ்டார்  அந்தஸ்தில் ஜெமினி அண்ணாச்சி குளிர் காய்ந்தார். மற்றபடி அவருக்குத் தனிப்பட்ட முறையில் மார்க்கெட் கிடையாது என்றவர்களும் உண்டு. அதை அடியோடு மறுத்தவர் சீனியர் சினிமா தயாரிப்பாளர்.

ஜெமினி கணேசன் நாயகனாக நடிக்க, முதன் முதலில் முன் பணம் கொடுத்த ஸ்டுடியோ அதிபரின் வாரிசு.

‘சாவித்ரியால் மட்டுமே ஜெமினிக்கு மவுசு வந்தது  என்பதை ஒரு சதவிகிதம் கூட ஒத்துக்க மாட்டேன். ஜெமினிக்கென்று தனியே மார்க்கெட் இருந்தது. நடிகையின் தயவால் நிற்க  வேண்டும் என்றிருந்தால், அன்றைய ஹீரோயின்களிலேயே மிக அதிகமாக சம்பளம் வாங்கிய சரோஜாதேவியை ஜெமினி நட்பு பாராட்டியிருக்க மாட்டாரா?’

காதல் மன்னனும் சாவித்ரியும் அவர்களின் தயாரிப்பில் தொடர்ந்து நடித்தவர்கள். அவை அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட். தேசிய விருதுகளும் பெற்றவை.

சாவித்ரியால் புண்பட்டிருந்த ஜெமினி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு ஆறுதல் அளித்தது. அதைப் பெற்றுக் கொள்ள பாப்ஜியுடன் தலைநகருக்குச் சென்று திரும்பினார் ஜெமினி கணேசன். ஜனாதிபதி வி.வி. கிரி மற்றும் அவரது மனைவியுடன் தம்பதி சமேதராக  ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள் ஜெமினி - பாப்ஜி இருவரும்.

சாவித்ரிக்கு உள்ளுக்குள் ஏதோ உதைத்தது.

சிவாஜியின் கால்ஷீட் கிடைக்காமல் சாவித்ரி மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சமயம். ஜெமினி போட்டது போட்ட படி, 1970 மே 6ல்  பூவா தலையா - பட அதிபரும், அன்றைய தி.மு.க. எம்.எல். ஏ.வுமான ராம. அரங்கண்ணலுடன் ஜெர்மனி பிராங்க்ஃபர்ட் நகருக்குக் கிளம்பிச் சென்றார்.

ரோம், ஏதென்ஸ், ஸ்விஸ் என திடீர்  தூர தேசப் பயணம். ஜூன் முதல் தேதி  சென்னை திரும்பினார். 

‘பிராங்க்ஃபர்ட் போக வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் மன நிம்மதி இல்லாமல் இருந்ததால், பிராங்க்ஃபர்ட் போக முடிவு செய்தேன். இரண்டே நாள்களில் வந்து விடலாம் என  எண்ணினேன். ஆனால் அரங்கண்ணலின் வற்புறுத்தலால் டூர் ஒரு மாதம் ஆகி விட்டது.’ - ஜெமினி கணேசன்.

savithri_gemini.jpg 

1970  ஜூன் 15  -ஞாயிறு.  மக்கள் கலைஞர் ஜெய்சங்கரது  இரு தம்பிகளின் திருமணம். ஏவிஎம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில். ஜெமினி கணேஷ் இல்லாமல் தனித்து, தன் இரு குழந்தைகளுடன்  வரவேற்பில் கலந்து கொண்டார் சாவித்ரி.

நடிகையர் திலகம் வழக்கம் போல் முழு அலங்காரங்களுடன் சிங்காரித்துக் கொண்டு பவனி வராமல், யாரோ மாதிரி கழுத்து வரை போர்த்தியபடி மிக எளிமையாக தோற்றமளித்தார். சாவித்ரியை சகலரும் பார்த்த பார்வையில் பரிதாபத்தின் பாதாளம் தெரிந்தது. 

அதே ஜூனில் சாத்தணூர் டேமில் ‘பேரப்பிள்ளை’ ஷூட்டிங். ஜெமினி கணேசன் - ராஜஸ்ரீ  ஜோடியைப் பார்த்ததும் ரசிகர்கள் குவிந்தனர். தன் விசிறிகளுடன் ஆட்டோகிராஃப், போட்டோ என உற்சாகமாகப் பொழுது போனது ஜெமினிக்கு. போதாக்குறைக்கு ஜனங்களிடம் வலிய ராஜஸ்ரீயை அறிமுகப்படுத்தி ஆனந்தப் பரவசம் அடைந்தார்.

ஜூலை 1970. கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை திறப்பு விழா. சிவாஜி - சாவித்ரி, சற்றுத் தள்ளி  பத்மினி - ஜெமினி  என நால்வரும் தனித் தனியே நிற்க- சிவாஜியும் ஜெமினியும் பேசிக் கொண்டிருந்த நேரம் மீடியாவில்  ஃபோட்டோ எடுத்து விட்டார்கள்.

1963ல்  நெல்லைச் சீமையில் ஊரே வியக்க, பாரதி விழாவில் பங்கேற்ற ஜெமினி- சாவித்ரி ஜோடி, கயத்தாறில் விட்டு விலகித் தோன்றி, கலகலப்பைத் தொலைத்ததற்கு சாட்சி அந்த நிழற்படம்.

ஆகஸ்டு 16. 1970.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம். முதல்வர் கலைஞர் தலைமையில் நட்சத்திர இரவு. காதல் மன்னனும் நடிகையர் திலகமும் வெவ்வேறு நிகழ்வுகளில் தனித்தனியே தோன்றினர்.

சிவாஜி- சாவித்ரி இணைந்து சத்தியவான் சாவித்ரி தெருக்கூத்து ஆடினார்கள். ‘சகுந்தலையின் சுயம்வரம்’ நாடகத்தில் ஜெமினிகணேசன்- தேவிகாவோடு நடித்தார்.

நடிகர் திலகத்தின் பிறந்த நாள்  உள்பட, சிவாஜி சம்பந்தப்பட்ட வைபவங்களில் தொடர்ந்து பங்கேற்றார்  சாவித்ரி. அண்ணனின் தயவில்லாமல் என்ன நடக்கும்? ஓரளவு அதற்குப் பலனும் கிடைத்தது.

1970 தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் நாலு படங்கள்  வெளி வருவதாக அறிவிக்கப்பட்டது. அவை சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு, பிராப்தம்.

அதே குஷியில் ஜெமினியைத் தேடிச் சென்றார் சாவித்ரி. ஸ்ரீதரின் அவளுக்கென்று ஓர் மனம் ஷூட்டிங். ஜெமினி - காஞ்சனாவுக்கு முகூர்த்த சீன்.  மனமாரத் தன் கணவரை அட்சதை தூவி ஆசிர்வதித்தார் சாவித்ரி.

‘சினிமால இது எனக்கு 87 வது கல்யாணம். மேரேஜ்னால போர் அடிக்குது’  காதல் மன்னன் சலிப்பாகப் பேசினார். அவரது நிலையில் பெரிய மாற்றம் இல்லை. சாவித்ரிக்கு  தோல்வி.

ஒரே நாளில் சிவாஜியின் நாலு படங்கள் திரையிடப்பட்டால் அது சினிமாவுலகுக்கு நல்லதல்ல. வசூலைப் பாதிக்கும் என எதிர்ப்பு வலுத்தது.  ஏகப்பட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு  பிராப்தம் வெளியீடு கேள்விக்குறியாகி விட்டது.

அதற்கிடையே சோபன்பாபு- வாணிஸ்ரீ  ஜோடியோடு, சாவித்ரியின் மகன் சதீஷ்           (மீடியாவில் அன்று அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்) நடிக்க, ஒரு தெலுங்கு சினிமா உருவானது. உஷாஸ்ரீ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.

ஜெமினிக்கு சச்சரவுகள் சாவித்ரியின் சூடேற்றும் சுபாவங்களுடன் மட்டுமே. ஓடோடி வந்து மகன் சதீஷை வாழ்த்த மறக்கவில்லை அப்பா.

முகத்தில் அரும்பு மீசை ஆச்சர்யமூட்ட குட்டி ராஜாவாக, வெகு ஜோரான மேக் அப்பில்  காமிரா முன்பு நின்றார் சதீஷ். தன் ஒரே ஆண் வாரிசைக் கட்டித்தழுவி,  ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் தகப்பன்சாமி. அந்தப் புகைப்படத்தில் சாவித்ரி மிஸ்ஸிங்!

சாவித்ரியால்  சம்சார வீணையில் முன்பு போல் மோகனமோ, ஆனந்த பைரவியோ மீட்ட இயலவில்லை. ஜெமினி கணேசனுக்கும் அதே நிலை.

1970 தீபாவளிக்கு சிவாஜியைப் போலவே ஜெமினிக்கும் காவியத்தலைவி, மாலதி என இரண்டு சினிமாக்கள் ரிலீஸ் ஆனது. பணமா பாசமாவுக்குப் பிறகு அதே கூட்டணி இணைந்த படம் மாலதி. சாவித்ரியுடனான சண்டைகள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன.

நடிக மன்னன், நடிப்புச் செல்வம், பத்மஸ்ரீ என்றெல்லாம் பட்டங்கள் பெற்ற ஜெமினிக்கு, அன்றைய ஷூட்டிங்  வரலாறு காணாத தொழில் தோல்வி.

‘அது ஒரு சாதாரண சீன். அன்று நான் மனம் குழம்பிப் போயிருந்தேன். அதனால் சரி வர செய்ய முடியவில்லை. ஏழு, எட்டு டேக்குகள் ஆகி விட்டன. நான் தவித்துப் போனேன். என் கால்கள் தரையில் பாவவில்லை. அழுகையே வந்து விட்டது.

‘என்ன ஆச்சு கணேஷூக்கு...?’ இதமாக டைரக்டர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், என்னை ஆறுதல் படுத்தியும்  நடிப்பு மறந்து போனது. நேரம் ஓடிக்கொண்டே இருந்ததில் லன்ச் பிரேக்  அறிவித்தார்கள்.

மதியத்துக்குப் பிறகு முயற்சி செய்தும் நான் ஏமாற்றத்தைத் தழுவினேன். கே.எஸ். ஜி. எனக்காக ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டார். தீராத அவமானம்! மாறாத வடு. ஆறாத காயம். அந்த காட்சியை நான் இரண்டு நாள்களுக்குப் பிறகே ஒழுங்காக நடித்து முடித்தேன்.’ - ஜெமினி கணேசன்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடக்கக் காலத்தில்  பாடிய ‘கற்பனையோ கை வண்ணமோ...’ பாடல் மட்டும் மாலதியை ரசிகர்களுக்கு இன்று ஞாபகப் படுத்தும்.

savithri_aara.jpg 

பிராப்தம் முடிந்தும் ரிலிசாகாத சங்கடம், ஜெமினி வழக்கம் போல் தன்னைத் தேடி வராத ஆத்திரம், ராஜஸ்ரீ விவகாரம் எல்லாம் சேர்ந்து, நடிகையர் திலகத்தின்  மனக்குள வெப்பத்தில் மேலும் அக்னி அஸ்திரங்களைப் பாய்ச்சின.  ஜெமினியுடனான தகராறு குறித்து  விசாரித்தவர்களை  சாவித்ரி ஆவேசமாக விளாசித் தள்ளினார்.

‘ என் சொந்தப் பணத்துல நான் எப்படி வேணும்னாலும் யாரை வெச்சியும் படம் எடுப்பேன். ஏன்? போன தடவை குழந்தை உள்ளம் படத்திலே இவரை ஹீரோவா நான் நடிக்க வைக்கலியா?

பிராப்தம் படம் எடுக்கறது பிசினஸ் ரீதியிலே. அதுக்கு இவர் என் கணவர்ன்ற முறையில பக்கத்துல இருந்து எனக்கு உதவி செய்து ஆதரவா நிக்க வேணாமா.

எக்கேடாவது கெட்டு ஒழிஞ்சி போன்னு ஒதுங்கிக்கிட்டா எப்படி?

தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணிட்டு, தன்னந்தனியா நடுக்கடலில் ஒரு தீவுல நின்னு தவிக்கிற நிலைக்கு நான் ஆளாயிட்டேன். என் தலையெழுத்து.  எனக்கு இவர் கை கொடுத்துக் காப்பாற்ற வேண்டாமா? இவரை விட்டா இந்த சினிமா உலகத்துல எனக்கு யார் இருக்காங்க? அநியாயத்துக்கு என்னைக் கை விட்டுட்டு ஒரேயடியா ஒதுங்கிக்கிட்டாரே.

முந்தி மாதிரி தினமும் என் வீட்டுக்கு வர்றதும் இல்ல. எப்பவாவது வர்றாரு. வந்தாலும் என்னோட முகம் கொடுத்தும் பேசறதில்ல. அவர் பேசலங்கிற போது நான் ஏன் அவரோட பேசணும்?  நானும் பேசறதில்ல. அப்புறம் இவரு எதுக்கு?

இதுக்குத்தானா அன்னிக்கு எங்க பெரியப்பா சவுத்ரி அவ்வளவு தடுத்தும், அதையெல்லாம் மீறி, ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைங்களோட இருக்கிற இவரை மனசார விரும்பிக் கட்டிக்கிட்டேன்.?

‘இப்போ உனக்கு சந்தோஷமா இருக்கும். பின்னால நீ ரொம்ப கஷ்டப்படுவேன்னு’  பெரியப்பா சொன்னது சரியாய்ப் போயிடுச்சி.’ 

விடை கிடைக்காத வினாக்களின் ஊர்வலத்தில் சாவித்ரி தொலைந்து போனார்.

காதல் மன்னனும் நடிகையர் திலகமும் எந்தத் தருணத்தில் ஒன்று கூடினர் என்பது எவருக்கும் தெரியாது. அதைப் போன்றே  1970ன்  இறுதியிலோ 1971ன்  துவக்கத்திலோ அவர்கள் பிரிந்த நொடிகளும் முகவரியற்றுப் போயின.

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

அருமை நன்றி நவீனன்

  • தொடங்கியவர்

17. டைரக்டர் சாவித்ரி!

 

 

‘An Idle mind is a devils workshop’  மிகவும் சுறுசுறுப்பாக  நடித்து வந்தவளுக்கு திடீரென்று ஓர் ஓய்வு ஏற்பட்டது. அது நீடிக்கக் கூடாது என்று  நான் தான் பிடிவாதம் செய்து, படங்களை டைரக்ட் செய்யுமாறு தூண்டினேன்.’ அரை மனதுடன் சாவித்ரி சம்மதித்தாள்.

 ‘என்னை இப்படி மாட்டி விட்டுவிட்டீர்களே... எனக்கு இந்த டைரக்ஷன் பொறுப்பு மிகச் சிரமமாகவும் தொல்லையாகவும்  இருக்கிறது’ என்று அங்கலாயித்தாள்.

‘கொஞ்சம் பொறுமையாக இரு. பலன் கிடைக்கும். என்றேன். ‘சின்னாரி பாப்பலு’ வெளியானது. அவளுக்கு நல்ல பெயர். மகிழ்ச்சியில்  நன்றியுடன் என்னை நோக்கினாள். சென்னை சினிமா ரசிகர் சங்கம், சிறந்த படம், சிறந்த இயக்குநர் என்று சாவித்ரியைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது. ’ ஜெமினி கணேசன்.

பத்திரிகைகளில்  டைரக்ஷன் பொறுப்பு குறித்து, சாவித்ரி அவ்வப்போது பேட்டிகள் கொடுத்தார். நடிகையர் திலகம் ஓய்ந்து விடவில்லை என்பதைச் சொல்ல, அத்தகைய நேர் காணல்கள் உதவின. சாவித்ரிக்கும் இனம் புரியாத மன ஆறுதல் கிடைத்தது.

‘நீங்கள் டைரக்டர் ஆக என்ன காரணம்? ’

‘விதவிதமான வேடங்களில் நடித்த போது உள்ளூர எனக்கு ஏற்பட்ட ஓர் உணர்வு அது. புதுப் புது குணாதிசயங்களை  திரையில் சமர்ப்பிக்கவும், எனது சுவைக்கேற்ற படங்களை உருவாக்கவும் ஆசை வந்தது. நான் டைரக்டர் ஆவேன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. எனது தோழிகளும் என்னை டைரக்ஷன் துறையில் ஈடுபடச் சொன்னார்கள். முதலில் மறுத்தேன்.  ஆனால் நான் கண்டிப்பாக டைரக்டர் ஆகவேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்திய போது என்னால் மறுக்க முடியவில்லை.

முதல் இயக்கம் சின்னாரி பாப்புலு. தமிழில் குழந்தை உள்ளம். தெலுங்குப் பட இயக்குநர் மதுசூதனராவ் அவர்களின் மனைவி வி. சரோஜினி எனது நெருங்கிய சிநேகிதி.

அவர் எழுதிய கதை சின்னாரி பாப்புலு. அதை இயக்க என்னைத் தூண்டியவரும் அவரே. சின்னாரி பாப்புலுவில் எனது அசோசியேட்டாகவும் பணியாற்றினார் சரோஜினி. உதவி இயக்குநர் - மோகன குமாரி. இசை - பின்னணிப் பாடகி பி. லீலா.  நடனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் நடிகை ராஜ சுலோசனா. தென் இந்தியாவில் மகளிர் மட்டும் இணைந்து பங்கேற்ற முதல் சினிமா அது!

Savithri_1.jpg 

எங்களது முயற்சியால் உருவாகும் முதல் படத்தில் கிடைக்கும் லாபத்தை,  ரிடையர்டு ஆர்ட்டிஸ்டுகளுக்கு உதவிப் பணமாக வழங்க அறக்கட்டளை ஒன்றையும் அமைத்தோம். இரண்டு பெண்கள் சேர்ந்தாலே கலகம் என்பார்கள். நாங்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றி பெற்றோம்.

ரோஜாரமணி, கண்ணே பாப்பா புகழ் பேபி ராணியின் தங்கை சாந்தி ஆகியோருடன் எனது டைரக்டர் வேலை ஆரம்பம் ஆனது. சோதனையாக, முதல் ஷாட்டிலேயே சீறும் பாம்பைப் படமாக்கும் படபடப்பான வேலை.

பாம்பு என்றாலே எனக்கு அலர்ஜி. இருந்தாலும் டைரக்டர் ஆயிற்றே. சகித்துக் கொண்டேன்.ரோஜாரமணிக்கு  நடிப்பில் கொஞ்சம் அனுபவம் உண்டு. ஆனால் என்னைப் போல் சாந்தியும் கத்துக்குட்டி. இரு குழந்தைகளுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கக் கற்றுக் கொடுத்தேன்.

ரஷ்  பார்த்ததில் திருப்தியாக இருந்தது. படம் முழுதாக முடியும் வரை யாருக்கும் போட்டுக்  காட்டவில்லை. எல்லாப் பணிகளும் பூர்த்தியான பின்பு முதலில் வாகினி அதிபர் - சக்ரபாணிக்கு திரையிட்டுக் காட்டினோம். சக்ரபாணி சிறந்த எழுத்தாளர். கதையை மேம்படுத்த சில யோசனைகளைக் கூறினார்.

எம்.ஜி.ஆர்.- சிவாஜி இருவருமே சின்னாரி பாப்புலு பார்த்தார்கள்.

‘அம்மாடி ரொம்ப நல்லா டைரக்ட் பண்ணி இருக்கே. கதையில கொஞ்சம் தொய்வு விழுது. இருந்தாலும் படம் வெரி குட். உன் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துகள்’ என ஆசி கூறினார் நடிகர்திலகம்.

sivajhi.jpg 

சின்னாரி பாப்புலுவில் சவுகார்ஜானகி- ஜமுனா இருவரும் நடித்தார்கள். மோஸ்ட் கோவாபரேட்டிவ் ஆர்ட்டிஸ்ட். நடிகையான நான் முதன் முதலாக இயக்குகிறேன் என அற்பமாக நினைக்காமல், ஒரு டைரக்டருக்குரிய மரியாதையை, கவுரவத்தை எனக்கு வழங்கினர்.

பானுமதிக்கு அடுத்து படங்களை டைரக்ட் செய்ய முன் வந்த நடிகை நான் தான். குழந்தை உள்ளம், மாத்ரு தேவதா, சின்னாரி பாப்புலு ஆகிய படங்களைத் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கினேன்.

 நீர்க்குமிழியை தெலுங்கில் டைரக்ட் செய்து, அதில் டாக்டர் வேடத்தில் (தமிழில் சவுகார் ஜானகி நடித்தது)  வந்தேன். படத்தின்  பெயர்  சிரஞ்சீவி.

 ‘நீங்கள் இயக்கியதில் உங்களுக்குப் பெயர் வாங்கித் தந்த படம் எது? ’

‘மாத்ரு தேவதா, சிரஞ்சீவி முதலியன. மாத்ரு தேவதா என்.டி.ராமாராவ்- சந்திரகலா நடித்து பிரமாதமாக ஓடியது. சிரஞ்சீவி நான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. டைரக்டர் என்ற முறையில் எனக்கு நல்ல பெயர்  கிடைத்தது.

‘இயக்கத்தில் உங்களுக்கென்று தனி பாணி இருக்கிறதா? ’

‘கதை, கதாபாத்திரத்துக்கேற்ற நடிகர் நடிகைகள் தேர்வில் அதிகக் கவனம் செலுத்துவேன். அதில் அடுத்தவர் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன். பிராப்தம் படத்தில் சந்திர கலாவைத் தேர்வு செய்தேன். முதலில் அதற்கு எதிர்ப்பு இருந்தது. சந்திரகலாவின் நடிப்பைப் பார்த்து அனைவருக்கும் இப்போது திருப்தி. ’

‘டைரக்ஷனில் உங்களுக்கு மன நிறைவு கிடைத்து விட்டதா? ’

‘திருப்தி என்பது ஒருவிஷயத்தில் கரை கண்டால் மட்டுமே ஏற்படும். நடிப்பிலும் சரி இயக்கத்திலும் சரி நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கின்றன. ’

‘உங்களின் படைப்புப் பணியில் நீங்கள் உணரும் கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன?’

‘பட இயக்கம் என்பது சிரமமான காரியம். கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டிய ரொம்பப் பொறுப்பான விஷயம். புதுப்புது கடமைகள் என்னைச் சூழ்ந்ததை மனமார உணர்ந்தேன். ’

திரைக்கதையில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கேரக்டர்களை அனலைஸ் செய்யும் போது என் நடிப்புத் திறனும் விருத்தியாகிறது.

அனுபவமுள்ள நடிகையான எனக்கு இயக்குநர் உத்தியோகம் புதுமையாகத் தோன்றவில்லை. நான் ஒரு சினிமா டைரக்ட் செய்ய ஒத்துக் கொண்டால் நாலு படங்களில் நடிக்கிற சான்ஸ் போய் விடுகிறது! ’

‘எப்படிப்பட்ட கதைகளைக் கையாள  ஆர்வம் காட்டுகிறீர்கள்? ’

‘பெண்ணினத்தின் துயரங்களையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் படமாக்க அதிக விருப்பம். தி விசிட் இங்கிலீஷ்  ஃபிலிம் பார்த்திருக்கிறீர்களா...?

 ஆண்கள் பெண்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதைப் பற்றிய கதை அது. அதில் வரும் இன்கிரிட் பெர்க்மென் ரோல் என்னை ரொம்பவும் கவர்ந்தது.’

1.1big.jpg 

சாவித்ரி நடிகையாகவும் டைரக்டராகவும் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத மனுஷியாக வெற்றி வலம் வந்தவர். ஓர் இயக்குநராக அவருக்கு முதல் தமிழ்ப்படம் குழந்தை உள்ளம்.அதன் அவுட்டோர் ஒகனேக்கலில் நடைபெற்றது.

 மலையுச்சிக்குச் செல்வதற்கு காமிரா மேன் தயங்கி நிற்க, சாவித்ரியே காமிராவை தூக்கிக்கொண்டு காவிரியில் இறங்கி நடந்தார். காதல் மன்னன் ஹீரோ.

தன் மனைவிக்கு உதவி செய்யும் ஆர்வத்தில் அவர் ஏதேதோ உத்திகளைக் கூறத் தொடங்க,

‘மிஸ்டர் கணேஷ் இங்கே நான் தான் டைரக்டர். நான் சொல்கிற மாதிரிதான் எல்லாரும் நடக்க வேண்டும். எனக்கு யாரும் யோசனை சொல்லத் தேவையில்லை. ’ என்றார் கம்பீரமாக.

 அதைக் கேட்டு ஆர். எஸ். மனோகர் பிரமித்து விட்டார்.  நடிகையர் திலகத்தின் வல்லமை ஒகனேக்கல் அருவி போல் வானைத் தொட்டது. ‘நடிக மன்னன்’ ஜெமினி கணேஷ் டைரக்டரின் உத்தரவுக்குப் பின்னர் கப்சிப் ஆனார்.

பிரசாத் ஸ்டுடியோவில் பிராப்தம் ஷூட்டிங். கல்லூரி அறை செட்.  ஏராளமாக துணை நடிகர்கள் மாணவர்களாக கூடி  நின்றனர். ஸ்ரீகாந்த்துக்கு முக்கிய வேடம். அவர் செட்டுக்கு வெளியேச்  சற்றுத் தள்ளி கோல்ட் பிளேக் சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தார். நடிப்பிலும் இயக்கத்திலும் நடிகையர் திலகத்துடன் அவருக்கு பிராப்தம் முதல் அனுபவம்.

அரிதாரம் பூசிய கலைஞராக ஆன பின்னும், அமெரிக்க தூதரகத்தில் தொடர்ந்து  பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த். அதிகம் பிரபலமாகாத சூழலில்  அமெரிக்கன் எம்பஸிக்கு அடிக்கடி, சினிமா பார்க்க வரும் சாவித்ரியை  அநேக முறைகள் சந்தித்திருக்கிறார்.

 பள்ளிக் கூட மாணவராக தேவதாஸில் சாவித்ரியின் நடிப்பைப் பார்த்து வியந்து போனவர் ஸ்ரீகாந்த். சாவித்ரியிடம் அதன் பிரமிப்பைச் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஷாட் எடுக்க நேரமாகியும் செட்டில் ஸ்ரீகாந்த் இல்லாததால், ‘எங்கே ஆர்ட்டிஸ்ட்ட  காணோம்... ’ என்று  தேடிக் கொண்டு வெளியேயே வந்து விட்டார் சாவித்ரி.

 அதனைச் சற்றும் எதிர்பாராத ஸ்ரீகாந்த், ‘அத்தனை பெரிய கூட்டத்திலேயும் நான் இல்லாததைக் கண்டு பிடிச்சிட்டீங்களே..., யாராவது ஒரு அசிஸ்டென்டை அனுப்பாம நீங்களே நேர்ல வந்துட்டீங்களே...! ’

என்று ஆச்சர்யங்களை அடுக்கினார்.

ஸ்ரீதர் இந்தியத்திரை உலகின் பிதாமகன்களில் முக்கியமானவர். டைரக்டர் சாவித்ரியின் ஆளுமை குறித்து ஸ்ரீதர்:

‘ஒரு தடவை நான் சாவித்ரி டைரக்ட் செய்து கொண்டிருந்த செட்டுக்குள் நுழைந்தேன்.

அடேயப்பா...  என்ன சுறுசுறுப்பு!  காமிராவுக்கு கோணங்கள் பார்ப்பது, நடிகர் நடிகைகள் எப்படி நடக்க வேண்டும், எப்படி வசனம் பேச வேண்டும் என்று சொல்லித் தருவது- இவைகளையெல்லாம் மிகவும் கச்சிதமாகத்  தான் நினைத்தவாறு படமாக்கும் வரையில் அவர் விடவில்லை.

பிராப்தம் - சாவித்ரி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் சாவித்ரியின் டைரக்ஷன் அதில் மிக  நன்றாகவே இருந்தது. ’

1971ல்  பொங்கல் தொடங்கி மாதா மாதம் முழுநிலவும், அமாவாசையும் வருகிறதோ இல்லையோ சிவாஜி  நடித்த படங்கள் தவறாமல் வெளி வந்தன.

ஜனவரியில் இரு துருவம், பிப்ரவரியில் தங்கைக்காக, மார்ச்சில் அருணோதயம் - குலமா குணமா, ஏப்ரலில் பிராப்தம் - சுமதி என் சுந்தரி.

பிராப்தமும் சுமதி என் சுந்தரியும் ஒரே நாளில்  தமிழ்ப்புத்தாண்டு அன்று  ரிலீஸ் ஆனவை. பிராப்தம் -கருப்பு வெள்ளை.  தெலுங்கு ரீமேக். குழப்பமான பூர்வஜென்மக் கதை.

‘சுமதி என் சுந்தரி’ ஜொலிஜொலித்தது. ஏறக்குறைய நடிகர் திலகத்தின் சொந்தப்படம் போன்றது. அவரது மூத்த மகன் பெயரில்,  ‘ராம்குமார் பிலிம்ஸ்’  பேனரில் தயாரானது.

அனைத்து  ரசிகர்களும்  பிராப்தம் படத்தை விட, சுமதி என் சுந்தரியை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்தார்கள். அதற்கு மிக முக்கியமான காரணத்தை பத்திரிகை விமர்சனங்களில்  காணலாம்.

‘இந்தப் படத்தைப் பொருத்தவரை சிவாஜியையும் ஜெயலலிதாவையும் பற்றித் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லாமல் இருவரும் ரொம்பவும் இணைந்து நடிக்கிறார்கள்.

அதுவும் குறிப்பாக ஓர் இடத்தில் சிவாஜி ஒரு நாவல் படிக்க, ஜெயலலிதா அதைப் பிடுங்கிக் கொள்ள  சிவாஜி மேல் விழ, சிவாஜி ஜெயலலிதாவைக் கட்டியணைத்துத் தழுவ அமர்க்களம் தான். ’- ஆனந்த விகடன் (16.5.1971).

sivaji.jpg 

‘சிவாஜியும் ஜெயலலிதாவும் அடிக்கடி தழுவிக் கொள்கிறார்கள். முகத்தோடு முகம் வைத்து இழைகிறார்கள். சமயங்களில் இவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இளம் உள்ளங்களைச் சுண்டி இழுக்கும் டூயட்ஸ். -  ‘ஒரு தரம்’ பாடல்,  படத்துக்கு அதுவே சிபாரிசோ? ’ தினமணி கதிர் - ( 30.4.1971)

-------------------விளைவு  சாவித்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாவித்ரி இயக்கிய பிராப்தம், மூகமனசுலு ஆகவோ, மிலன் மாதிரியோ வாகை சூடவில்லை. நடிகையர் திலகத்தை நஷ்டக் கணக்கு பார்க்கச் சொல்லி, துயர சமுத்திரத்தில்  மூழ்கடித்தது.

‘சாவித்ரியைக் கல்லூரி மாணவி என்று ஏற்றுக் கொள்வது சற்று கடினமான காரியம். பிந்தைய கட்டங்களில் அநாயாசமாக நடித்திருக்கிறார்.

சிவாஜியிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் போதும், சிவாஜியைப் பாடச் சொல்லி கண்களாலேயே அனுமதி வழங்கும் போதும் சாவித்ரி நடிப்பு நெஞ்சை நிறைக்கிறது.

எளிமையும் வெள்ளை மனமும் கொண்ட கண்ணன் பாத்திரத்துக்கு சிவாஜியை விட்டால், வேறு யார் கிடைக்கப்போகிறார்களாம்...?

சாவித்ரியிடம் அவர் சின்னம்மா என்று குழைவது, ஸ்ரீகாந்துக்கு தேங்க்ஸ் சொல்வது,  ஸ்ரீகாந்தை சாவித்ரிக்காக அறைந்து விட்டு வருவது...,  அப்புறம் சிவாஜி, சாவித்ரியை சாப்பிட வைக்கும் கட்டத்தை இலேசில் மறக்க முடியுமா?

படம் வெளி வரும் முன்பே பிரபலமாகி விட்ட பாடல்கள். அருமையான பின்னணி இசை.

சாவித்ரி டைரக்ட் செய்திருக்கும் தமிழ்ப்படம். இது அவருக்குத்தான் பெருமையே தவிர, படத்துக்கு அல்ல. ’-  பிரபல வார இதழின்,  பிராப்தம்  சினிமா  விமர்சனம்.

‘சாவித்ரி அம்மாவும் எங்க அய்யாவும் டாப்பிலே ஜோடியாக நின்னாங்க. சிவாஜி சார் கூட சாவித்ரி அம்மாவைப் பார்த்து பயப்பட்ட நாள் உண்டு. சாவித்ரி அம்மா யாருக்காகவும் பணிய மாட்டாங்க. ஜெமினி சாரை யாராவது ஏதாவது சொன்னா சும்மா விட மாட்டாங்க. சண்டைக்குப் போயிடுவாங்க.’

அப்படியோர் கருத்தைச் சொல்லியிருப்பவர் யாரோ அல்ல. அல்லும் பகலும் ஜெமினி - சாவித்ரியின் நிழலாக வாழ்ந்த காதல் மன்னனின் நிரந்தரமான  கார் டிரைவர் சுந்தரம்.

1971 மே மற்றும் ஜூன் மாதங்களில் சிவாஜி சினிமா ஏதும் ரிலிஸ் ஆகவில்லை. ஜூலையில்  150வது படமாக சவாலே சமாளி வெற்றிச் சித்திரமும், அதைத் தொடர்ந்து தேனும் பாலும் படமும்  திரைக்கு வந்தன.

‘பிராப்தம் படத்துடன் போட்டி போடுவது போல் நடிகர் திலகம்,  சுமதி என் சுந்தரியை ஒரே நாளில் ஏன் களம் இறக்க வேண்டும்?  அவர் நினைத்திருந்தால் அதை மே அல்லது ஜூன் மாதம் வெளியிட்டிருக்கலாம். பிராப்தம் படு தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

பெண்கள் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு போய்  பிராப்தம் படத்தை ஓரளவேணும் ஓட வைத்திருக்கும். அதற்கான வாய்ப்பையே கணேசன் தரப்பு தரவில்லை. ஏன் ?   

சமயம் பார்த்து ‘அன்னை இல்லம்’ சாவித்ரியை கவிழ்த்து விட்டு விட்டது! ’

கணேசனின்  எதிரிகள் கிளப்பிய குற்றச்சாட்டுகள் அவை.

ஆனால் சாவித்ரி  எதையும் சட்டைசெய்யவில்லை. அவர் வீழ்ந்த போதும் அண்ணனைப் பாராட்டும் பார்வையாளராக, ‘சவாலே சமாளி’  100வது நாள் விழாவில் பெருந்தன்மையுடன் பங்கேற்றார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!

 

 

தன் சறுக்கல்களுக்கும் சரிவுகளுக்கும் சாவித்ரி யார் மீதும் பழி போட விரும்பவில்லை. தனக்காக இரக்கப்பட்ட ரசிகர்களிடம் மனம் விட்டுப் பேசினார். அவரது பேட்டியில் ஒளிவு மறைவு கிடையாது. அது   ஓர் ஓபன் ஸ்டேட்மென்ட். தவறுகளுக்கானத் தன்னிச்சையான வாக்குமூலம். அதில் கண்ணியத்தின் மாண்பைக் காணலாம்.

‘யாருடைய கருணையும், பரிதாபமும் எனக்குத் தேவை இல்லை. மீண்டும் உயிர்த்தெழுவேன்! ’  என்கிற வைராக்கியத்தின் விலாசமாக வெளிப்பட்டது.

‘பிராப்தம் தெலுங்கு படத்தை எடுக்கும் போதே அதன் தயாரிப்பாளர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி நடிக்கச் செய்தார்கள். அதில் ஏ. நாகேஸ்வர ராவ் அப்பாவியான படகோட்டி. அவரை நான் வாடா போடா  என்று பேசி நடிக்க வேண்டும்.  எனக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. அதனாலேயே அதில் நடிக்க ரொம்பத் தயங்கினேன்.

ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் கடைசியில் ஒப்புக் கொண்டேன். படம் அபாரமான வெற்றி அடைந்தது. அதுவே என்னைத் தமிழிலும் தயாரிக்கத் தூண்டியது. தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதன் தமிழ் உரிமையையும் நானே வாங்கிக் கொண்டேன்.

எம்.எஸ்.வி. அருமையாக இசை அமைத்தார். ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’,   ‘சந்தனத்தில் நல்ல’,  ’தாலாட்டு பாடி’, ‘நேத்துப் பறிச்ச ரோஜா’ என அத்தனைப்  பாடல்களும் சூப்பர்ஹிட். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.  எனக்குப் பெரிய நஷ்டம்.

MSV.jpg 

‘சாவித்ரி ஒவ்வொரு சிச்சுவேஷனையும் உணர்ச்சி பூர்வமாக எனக்கு சொல்லிக் காட்டிய விதம் மறக்க முடியாதது. மிகச் சிறந்த நடிகையாக இருந்ததால், பாடலின் உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுவதை விட,  நடித்தே காட்ட அவரால் முடிந்தது. சில காட்சிகளை  சாவித்ரி விளக்கிய போது அழுது விட்டார். என்னையும் அழ வைத்தார். ’ 

-மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.

பிராப்தம் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கவா இரண்டரை ஆண்டுகள் என்றார்களாம். இடையில் ஏற்பட்ட இன்னல்கள், இடையூறுகள், உண்டாக்கி விடப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் எத்தனை?

 டாக்டர் பட்டம் பெற முதலில் ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு, ஸ்பெஷல் கோர்ஸ், பயிற்சி மருத்துவராக ப்ராக்டிஸ் என்று படிப்படியாகப் போய், ஆபரேஷன் செய்ய ஏழு வருஷங்கள் ஆகி விடும்.  மூன்று மணி நேரம் ஆபரேஷன் செய்ய இத்தனை கால விரயம் செய்து படிப்பார்களா..., என யாராவது கேட்பார்களா?

எதனாலேயோ பிராப்தம் ஷூட்டிங் முழுவதுமே  எனக்குப் பெரிய கலக்கமாகத்தான் போய்விட்டது. கோதாவரியில் பெரிய செட் போட்டு வைத்திருந்தோம்.  மார்ச் முதல் தேதி அங்கு புறப்படும் வேளையில் என் தாயார் இறந்து விட்டார்.

அது எனக்குத் தாங்க முடியாத இடி. பத்து நாள்கள் காரியம் முடியாமல் எங்கேயும் போக முடியாது என்ற நிலை. மனவருத்தம், வேதனையோடு மீண்டும்  சுதாரித்து எழும் போது, எனக்கு மஞ்சள் காமாலை நோய் வேறு வந்து விட்டது. மறுபடியும் ஷூட்டிங் ரத்தானாது.

பிராப்தம் தயாரிப்பில் இருந்த போதே தெலுங்கில் வியட்நாம் வீடு படத்தையும் தயாரித்து இயக்கி, பத்மினி ரோலில் நடித்தும் வந்தேன். எனக்கு வந்த காமாலை நோய் ஒரு புதுவகை.  முகம் புஸூபுஸுவென்று ஊதி விட்டது.

நான் சுபாவமாகக் கருப்பு  நிறம். இந்த நிறத்தையும் பளபளப்பையும் பார்த்தவர்கள் எல்லாம், உங்களுக்கு என்ன உடம்பு என்று கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தான் காமாலை என்பது தெரிந்தது.

பிராப்தம் ரிலீசில் என்னால் மிகவும் தாமதம் ஏற்பட்டு விட்டது. பிராப்தம் தோல்விக்கு நானே காரணம்!  யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காலம் கடந்த தயாரிப்பு. என் உடல் நிலைக் கோளாறு. இவையே முக்கிய காரணம்.

நான் மிகவும் ஆசையாக உருவாக்கிய ஓர் உன்னதமான கோட்டை நொறுங்கிப் போனது. பண நஷ்டம் மட்டும் அல்ல. நல்ல கதை. புகழ் பெற்ற நல்ல நடிகர் நடிகையர். நல்ல இசை. இவ்வளவு அம்சங்களும் இருந்தும் பிராப்தம் ஏன் வெற்றி பெறவில்லை? தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றம்.

கோதாவரி நதியும் படகுப் பயணமும் தமிழர் வாழ்க்கை முறைக்குப் பழக்கம் இல்லாதவை என்பதனாலா?

hqdefault.jpg 

என்னை மங்கலம் இழந்த கோலத்தில் காண ரசிகர்களுக்குப் பிடிக்காததனாலா? புரியாத மர்மமாகவே இருக்கிறது.

நான் நடிக்காமல் வாணிஸ்ரீ நடித்திருக்கலாம் என்றார்கள். நான் ஏற்று நடித்த பாத்திரம் சாதாரணமானதல்ல. மிக அனுபவமிக்க சிறந்த நடிகை ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

நான் செய்தது சரி இல்லை என்றால் எனக்குப் பதில், அதை செய்யக்கூடிய நடிகை சவுகார் ஜானகி ஒருவரே. அவரால் அதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.

சந்திரகலாவுக்குப் பதில் வாணிஸ்ரீயைப் போட்டு இருக்கலாம் என்று முதலிலும் முடிவிலும் சொன்னார்கள். அதை வேண்டுமானால் செய்திருக்கலாம் என்று எனக்கு  தோன்றுகிறது.

தாய் போன துக்கம். குழந்தைகளைப் பற்றிய கவலை. ஏகப்பட்டப் பண நஷ்டம். எல்லாமாக சேர்ந்து என்னை உலுக்கி விட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த போது ஜூரத்தில் ஓயாமல் புலம்புவேன். சாவித்ரிக்கு சித்தம் கலங்கி விட்டது என்று கூடச் சிலர், புரளியைக் கிளப்பி விட்டுப் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிரமம் வரக் கூடாது. வந்தால் உடனே கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஹபிபுல்லா சாலையில் நான் இருந்த வீட்டை மாற்ற நேர்ந்த போதும்  அப்படித்தான் ஆயிற்று. அவ்வளவு ஆசையாகக் கட்டிய பெரிய வீட்டில், நான் தனியாகக் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அதனால் சிறிய வீட்டுக்குப் போனேன்.

உடனே எல்லாரும் ஆளாளுக்கு ஒரு விதமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘பாவம் சாவித்ரி நொடித்துப் போய் விட்டாள். ’ என்று என் காதுபடவே பேசத் தொடங்கினார்கள்.

பிராப்தத்துக்குப் பிறகு  சாவித்ரி படமெடுக்க மாட்டாள் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் படமெடுக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன்?  இன்றைய சூழலில் தயாரிப்புத் துறை அவ்வளவு லாபகரமானது அல்ல.

பிற தொழில்களைப் போல பயபக்தியோடு, புனிதத் தன்மையோடு இந்தத் தொழிலை என்று நடத்துகிறோமோ அன்று தான் இதில் லாபம் காண முடியும்.

நாம் ஒன்றை நினைத்துப் படமெடுப்போம். விநியோகஸ்தர்கள் தாங்கள் நினைத்ததைப் படமெடுக்கச் சொல்வார்கள். கதையை மாற்றச் சொல்வார்கள். கதையின் கரு மாறி படம் ஏதோ ஒன்றாகி விடும்.

எனது அடுத்தப் படத்தில் நர்ஸாக நடிக்கிறேன். என்னுடன் ரவிச்சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். ஒரு புதுமுகத்தை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஆனால் இதை நான் டைரக்ட் செய்யப் போவதில்லை. தயாரிப்பு மட்டுமே. ‘புகுந்த வீடு’ வெற்றிச்சித்திரத்தை இயக்கிய  பட்டுவிடம் அப்பொறுப்பைத் ஒப்படைத்து விட்டேன்.

நான் இயக்கிய பிராப்தம், குழந்தை உள்ளம் இரண்டிலும்  நான் ஏற்று நடித்த பாத்திரம் படங்களில் ஓரளவுதான். எனக்கு ஓய்வு அதிகம். எனவே டைரக்ஷனைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. இப்போது நான் தயாரிக்கப் போகும் படத்தில் என் வேடம் முழுமையானது. நான் டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் நடிப்பில் அதிக பாதிப்பு ஏற்படும்.

நாற்பது நாள்களில் இந்தப் ப்ராஜெக்டை முடித்து விடுவேன். 1972  தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸாகும். இனி நான் நடிக்க மாட்டேன் என்று யாரிடமும் மறுத்ததில்லை. என்னால் இனி மேல் காதல், ஆடல், பாடல் காட்சிகளில் நடிக்க முடியாது. வயதாகி விட்டதல்லவா!  தாயாக, சகோதரியாக, அண்ணியாக நடிக்கலாம்.

அன்று முதல் இன்று வரை நானாக யாரிடமும் போய் சான்ஸ் கொடுங்கள் என்று கேட்டதில்லை. எனது ஒரே ஆசை  சாகும் வரையில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நடிக்கும் போதே சாக வேண்டும். ’

மேற்கண்ட சாவித்ரியின் நேர் காணலில் ஊன்றி கவனித்தால் அவர் குழம்பிப் போய் இருப்பது புரியும். அப்படியும் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்கான முயற்சிகளும் விளங்கும். வாசகர்களின் மனத்தில் எழுந்த ஒரே கேள்வி.

ஏற்கனவே யானைப் பள்ளத்தில் வீழ்ந்து அவதியுறும் நடிகையர் திலகம்,  தமிழ் சினிமாவின் சூழல் சரியில்லை என்று தெளிவாகக்  கூறும் சாவித்ரி, மீண்டும் படம் தயாரிக்க வருவானேன்! தொடர்ந்து அழிவைத் தேடிக் கொள்வானேன்!

நல்ல வேளை! அவ்வாறு நடக்காமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தியவர் சாட்சாத் ஜெமினி கணேசன்! சாவித்ரியை அதல பாதாளத்திலிருந்து ஓரளவு காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு.

‘என் மனம்  அறிஞ்சி நானாக  எந்தத் தப்பும் பண்ணல. யானை தன் தலையில் மண் எடுத்துப் போட்டுக்குற மாதிரி, அவா அவா கெட்டுப் போனா நான் என்ன பண்ண முடியும்? ’

மத்தவங்க ஆண்டவன் கிட்டே பாவ மன்னிப்பு கேட்கணும். எனக்கு அந்த அவசியம் இல்லை. ஏன்னா எனக்கு ஏதாவது கெடுதல் வந்தால், கடவுள் தான் இத்தனை நல்ல ஆத்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருந்த வேண்டும்.’ - ஜெமினி கணேசன்.

1280x720-Kct.jpg 

தன் மணாளனின் வாக்கியங்கள் உண்மையானவை என்பதை மனைவி உடனடியாக நிருபித்தார்.

தன்னை நன்கு அறிந்த சகக் கலைஞர்களிடம் சாவித்ரி அடிக்கடி மனம் விட்டுக் கூறிய வாசகம்!

‘என் நிலைமையைப் பார்த்தீங்களா...! எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்! ’

ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

பிராப்தம்  உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில்  இருந்தது.

1968-ல் வெளியான கே.எஸ். கோபால கிருஷ்ணனின்  ’பணமா பாசமா’ வசூலில் சுனாமி!  தமிழகமெங்கும் வெற்றி விழா கொண்டாடியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தியேட்டரான மதுரை தங்கத்தில் அபூர்வமாக  25  வாரங்கள் ஓடியது.

அதே கால கட்டத்தில் சவுகார் ஜானகியும், தேவிகாவும் தங்களின் சொந்தத் தயாரிப்புகளில் ஜெமினி கணேசனையே நாயகனாக நடிக்கச் செய்தார்கள். சவுகாரின் ’காவியத்தலைவி’ 100  நாள்கள் ஓடி விழா கொண்டாடியது.ஜெமினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றுத் தந்தது.

தேவிகாவின் ‘வெகுளிப் பெண்’ நூறு நாள் படம். அது மாத்திரம் அல்ல. 1971ன்  சிறந்த மாநில மொழிப் படம் என்கிற தேசிய விருதைத் தட்டிச் சென்றது. சாவித்ரியால் புறக்கணிக்கப்பட்ட ஜெமினியின் கவுரவத்தை அத்தகைய பெருமைகள்   உயர்த்தின.

1969, 1970,1971, 1972 ஆகிய வருடங்களில்  ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஜெமினி, தொடர்ந்து புயல் வேகத்தில் நடித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அவரது படப் பட்டியலைப் பாருங்கள். இரு கோடுகளாகி  கே.பாலசந்தரும் -ஜெமினியும் தொடர்ந்து முத்திரைச் சித்திரங்களை வழங்கினர்.

சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர்  சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.

சவுகார் ஜானகிக்கும், எஸ். வரலட்சுமிக்கும், பண்டரிபாய்க்கும், சுகுமாரிக்கும்  வழங்கிய அம்மா வேடங்களை ஏனோ சாவித்ரிக்கும் தராமல் போனார்.

--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

‘ஒரு தாய் மக்கள்’ படப்பிடிப்பு. சண்டைக் காட்சியில்  ஸ்டன்ட் நடிகர் கே.பி. ராமகிருஷ்ணன் கால் ஒடிந்து விட்டது. கே.ஜே. நர்சிங் ஹோமில் உடனடியாக அனுமதித்தார்கள். அவரைப் பார்க்கச் சென்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

அங்கேயே  மஞ்சள் காமாலையால்  உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாவித்ரி ஆதரவின்றி கிடப்பதைக் கேள்விப் பட்டார். சகலரையும் போல் சும்மா நலம் விசாரித்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா?

சாவித்ரிக்கான முழு சிகிச்சை செலவையும் வள்ளலே ஏற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கால கட்டம்.

மிகவும் நிராதராவான நிலையில், புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்துக்கு வந்து காத்து நின்றார் சாவித்ரி. எப்படியாவது  முதல் அமைச்சரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம். சுற்றிலும்  மன்னாதி மன்னனின் ராஜாங்கம் கண்களில் தெரிந்தது.

மந்திரிகள். அரசு உயர் அதிகாரிகள். மாவட்ட ஆட்சியர்கள். தினந்தோறும் நாளிதழ்களில் வாத்தியாரோடு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்கும் முக்கியப் பிரமுகர்கள். எம்.எல். ஏ.க்கள். எம்.பி.க்கள்...

அத்தனை பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், களையிழந்த நேற்றுப் பூவாக, மாலைகள் கூட கொண்டு வராமல்,  வெறுங்கையோடு தோன்றும் மாஜி நடிகையை முதல்வர் அழைப்பாரா...?  அல்லது ஆட்சி நடத்தும்  பரபரப்பில் பாராமலே சென்று விடுவாரா?

ஒவ்வொரு விநாடியையும் வாழ்வின் புதைகுழியில் செலவிடும் தன்னை, எம்.ஜி.ஆரும் கை விட்டு விட்டால்...?

mgr.jpg 

நினைக்கவே பயங்கரமாக இருந்தது சாவித்ரிக்கு.

திருப்பதி பெருமாளே! உனக்கு நிம்மதியாக தேங்காய் உடைக்கக் கூட எனக்கு இப்போது வக்கில்லை. இக்கட்டான இத்தருணத்திலிருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்று. எம்.ஜி.ஆரின் மனத்தில் புகுந்து, என்னைச் சீக்கிரம்  கூப்பிடச் சொல்...

தேவைகளின் நெருக்கடியில் நெருடும் மனதோடு, கவுரவர் சபையில் திரெளபதியாக கை கூப்பி நிற்கும் தனக்கு,  இரண்டு மதில் சுவர்களையாவது  ஓடோடி வந்து,  ஒதுக்கித் தர மாட்டாரா மக்கள் திலகம்...?

யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் இயலாத துக்கத்தின் சாஹரம். நிமிர்ந்து பதில் வணக்கம் கூடச் சொல்ல முடியாத சங்கடம். ஆனால் இன்னமும் சாவித்ரியின் ஆணவம் அடங்கவில்லை. திமிராகவே இருக்கிறாள் என நினைக்கும் சமூகம்!  நேரம் ஓடியது.

மக்கள் திலகம் அழைத்ததும்,

மழைக்கு ஒதுங்கவும் ஒரு வீடு இல்லாத தன் வாழ்வின் நிர்வாண அவலத்தை, அப்பட்டமாக பொன்மனச் செம்மலிடம் எடுத்துச் சொல்லிக் கதறி அழுதார்.

உடனடியாகத் தமிழக முதல்வர்  வீட்டு வசதி வாரியம் மூலம், சாவித்ரிக்காக ஒரு குடிலை வழங்கி நடிகையர் திலகத்தின் துயரைப் போக்கினார்.

மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு!  பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி - 19. மயங்குகிறாள் ஒரு மாது!

 

உலகமெங்கும் சாவித்ரியின்  இறவாப் புகழ் பரவியிருப்பதைப் போலவே, அவரது ரசிகர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.  இனி வரும் அத்தியாயங்களை அவர்கள் வாசிக்க நேர்ந்தால், வருத்தப்படுவார்கள்.

 தமிழ் சினிமாவின் கதை’ எழுதிய அறந்தை நாராயணனின் வார்த்தைகளில் சொன்னால், நடிகையர் திலகம் ‘குடியினால் குடை சாய்ந்த கோபுரம்!’

தி.நகர். ஹபிபுல்லா சாலையில் அடுத்தடுத்து இரண்டு 12 கிரவுண்ட் நிலங்களை சாவித்ரி வாங்கினார். தன்னுடைய நுங்கம்பாக்கம் வீட்டைப் போலவே அங்கு  முன் நின்று ஸ்கெட்ச் போட்டு வீடு கட்டித் தந்தவர் காதல் மன்னன்.

அதில் பிரம்மாண்ட நீச்சல் குளம் ஒன்றையும் சாவித்ரி அமைத்தார். ஜெமினிக்கு அதில் விருப்பம் இல்லை. வேண்டாம் என்றார். சாவித்ரி ஜெமினியின் சொற்களைக் காதில் வாங்காமல் நீந்தும்  நீரில் விட்டு விட்டார். மவுனம் சாதிக்க ஜெமினி பழகிய முதல் தருணம் அது. நீச்சல் குளத்துக்கு மேலாக சாவித்ரியை அவர் விரும்பினார்.

1973 கோடை. சில நாள்களாக சாவித்ரியின் வீடு பூட்டியிருந்தது. ஏதேதோ வதந்திகள். விசாரித்த பின் சாவித்ரி சொன்னது;

‘வீட்டிலிருந்தால் கணக்கு வழக்கு குழப்பம். கரண்ட் வேறு அடிக்கடி ஆஃப் ஆகி விடுகிறது. பேசாமல் நர்சிங் ஹோமில் போய்ப் படுத்து விட்டேன். அங்கு ஏசி அறையில் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.’

நயாபைசா முதல் போடாமல், திரை வணிகர்கள் வாரி வழங்கிய  பணத்தில் தொடங்கியது ஸ்ரீதரின் வீனஸ் பிக்சர்ஸ்.

2.jpg 

அமரதீபத்தில் சிவாஜி, பத்மினி, சாவித்ரி  நடிக்கிறார்கள்  என்கிற ‘தினத்தந்தி’ முழுப் பக்க விளம்பரம்  அதற்கு  உதவியது. திறமைமிக்க  இளம் எழுத்தாளனைக் கை தூக்கிவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், முன் பணம் கூட வாங்கிக் கொள்ளாமல் அன்றைய நட்சத்திரங்கள் அமர தீபத்துக்கு ஒளியூட்டினர். 

சாமர்த்தியசாலி ஸ்ரீதர் வாழ்ந்த தமிழ்நாட்டில் சாவித்ரி வீம்புக்காக விநியோகஸ்தர்களிடம் போகவில்லை.

பிராப்தம் படத்துக்காக சொந்த சொத்துகளை அடமானம் வைத்து, நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்து போட்டதன் பலன், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் சாவித்ரி திக்கித் திணறினார்.

கடைசியில் வட்டிக்குப் பணம் கொடுத்த சேட்டே சாவித்ரியின் சகல சொத்துகளையும் எடுத்துக் கொண்டார். சாவித்ரி ஆசை ஆசையாகக் கட்டிய ஹபிபுல்லா சாலை மாளிகையிலிருந்து வெளியேற வேண்டி வந்தது.

‘சிக்கனம் வீட்டுக்கு. சேமிப்பு சேட்டுக்கு!’ என்று  லாரிகளில் எழுதி வைத்திருப்பார்கள். மிஸ்ஸியம்மா மூலம்  மில்லியனர் ஆன சாவித்ரி விஷயத்திலும் அது நிஜமாகி விட்டது.

‘உங்கம்மாவுக்குக் குடிக்கக் கத்துக் கொடுத்ததே உங்கப்பாதான்னு’ எங்கிட்டே எத்தனையோ பேர் சொல்லி இருக்காங்க. அப்பா பிரிஞ்சி போன துக்கத்தைத் தாங்க முடியாம அதை மறக்க அம்மா மதுவைத் தேடிப் போனாங்க. அதுக்கு அப்பா எப்படிக் காரணமாவார்னு என்னால் புரிஞ்சிக்க முடிஞ்சது.’- விஜய சாமுண்டீஸ்வரி.

ஷூட்டிங்குக்கு குடித்து விட்டுச் செல்வதெல்லாம் சாவித்ரிக்கு மிகச் சாதாரணம். அத்தகைய போதையான நிகழ்வுகள்.  முக்தா. வி. சீனிவாசனின் வார்த்தைகளில்:

‘எனது பூஜைக்கு வந்த மலர்’ படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக சாவித்ரி நடித்தார். முக்தா சார்னுதான் மரியாதையா கூப்பிடுவாங்க. கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், தனக்குப் பணம் வேண்டாம், ஏரியா ரைட்ஸ் தாருங்கள் என்றார். நான் ஒத்துக் கொண்டேன்.

பின்னர் அவருக்கு என்னப் பிரச்சனையோ தெரியவில்லை, ஏரியா வேண்டாம், பணமாகக் கொடுத்து விடுங்கள் எனக் கேட்டார். எனது பைனான்சியர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  நான் இக்கட்டான சூழலுக்கு ஆளானேன். கடைசியில் சாவித்ரிக்கு கேஷாகவே கொடுத்தோம்.

பூஜைக்கு வந்த மலருக்காக நெப்டியூன் (இப்ப சத்யா) ஸ்டுடியோவில் 8 அடி உயரத்திற்கு ஒரே ஒரு குத்து விளக்கை அமைத்தேன். அதற்குக் கெட்டியான அடித்தளத்தையும் ஏற்படுத்தி,  அதன் மீது  நின்று கொண்டு சாவித்ரி ‘மை ஏந்தும் விழி ஆட’ என்கிற டூயட் பாடலைப் பாடுவதாக காட்சி.

நேர்காணல்களில் எனக்குப் பொய்யே வராது. சாவித்ரிக்குக் குடிப்பழக்கம் உண்டு. அந்த சீன் எடுக்கப்பட்ட போது சாவித்ரி குடித்து விட்டு வந்து, விளக்கின் மேலே ஏறி ஆடத் தொடங்கியதும் நான் நடுநடுங்க ஆரம்பித்து விட்டேன். எந்த நிமிடமும் கீழே விழுந்து விடுவார்களோ என்கிற அதிர்ச்சி. பயம்.

ஷூட்டிங் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த அம்மாவை விளக்கிலிருந்து கீழே இறக்கி விட வேண்டுமென்று  நினைத்துப் பதறிப் போனேன். ஜெமினிக்கு போன் போட்டு உடனே வரச் சொன்னேன். அன்றைய சீனில் அவர் கிடையாது. எல்லாமே சாவித்ரியின் தனி ஷாட்கள், க்ளோஸ் அப்கள். எனவே ஜெமினி வீட்டில் இருந்தார்.

என் போனை கேட்டு உடனே வந்து, மெதுவாக சாவித்ரியை கீழே வரச் சொல்லித் தன் காரில் ஏற்றி அழைத்துச் சென்றார் .நிலைமையைச் சமாளிக்க ஜெமினி செய்த உதவி போற்றுதலுக்கு உரியது. படப்பிடிப்பு கேன்சல் ஆனாலும் விபத்துகள் நடக்காமல் இருந்ததே என்பதில் நான் மகிழ்ச்சி கொண்டேன்.

எனது சூரியகாந்தி படப்பிடிப்பிலும் சாவித்ரி குடித்து விட்டு வந்ததால், ஒழுங்காக நடிக்க இயலாமல் பதினாறு பதினேழு டேக்குகள் ஆனது. ‘போதும் சார். நாளைக்கு மீதியை எடுப்போம்’ என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால், உடனடியாக  பேக் அப் சொல்லி விட்டேன்.

ஜெய்சங்கர் மெர்சி ஹோமில் சாவித்ரிக்காக ஒரு பாராட்டு விழா எடுத்தார். மைக்கைப் பிடித்த  சாவித்ரி

‘முக்தா மாதிரி ஒரு சகோதரன் இருந்திருந்தா நான் இப்படி சீரழஞ்சி இருக்க மாட்டேன்.  அடுத்த ஜென்மத்துலயாவது அவரது சகோதரியாகப் பிறக்கணும்னு ஆசைப்படறேன் என்றார்.’

savithiri_three.jpg 

சாவித்ரியுடன் நெருங்கிப் பழகிய பிரபலங்கள் நடிகையர் திலகம் பற்றிக் கூறிய நன்றும் தீதும்:

‘சாவித்ரிக்கு ஜெமினி  சிபாரிசெல்லாம் செய்ய மாட்டார். தனது திறமையால் நின்றவர் சாவித்ரி. தன் குணத்தாலே கடைசியிலே அழிஞ்சி போயிட்டா!’

‘சாவித்ரி ரொம்ப சென்ஸிட்டிவ் ஆர்ட்டிஸ்ட்.’

‘குடிச்சிட்டா வாடா போடாதான் ஜெமினியை...!’

‘சில விஷயத்துல வெகுளி! சில விஷயத்துல அடமன்ட்!’

‘ஏகப்பட்ட நாயகிகளுடன் ஜெமினிக்குத் தொடர்பு  ஏற்பட்டது. அதனால் சாவித்ரி விரக்தி அடைந்தார். மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். அழிந்தது சொத்து. ஜெமினி அதைக் கண்டிக்காமல் விட்டுவிட்டார்.’

‘சாவித்ரிக்கு ஒரு போதும் ஜெமினி ரெகமன்ட் செய்தது இல்லை. பக்கா பிசினஸ் மேன் ஜெமினி.’

----------------------------------

‘பாலநாகம்மா, சம்சாரம்’ புகழ்  புஷ்பவல்லி என்கிற பிரபஞ்ச சுந்தரியுடன் கூடி ஜெமினி குதூகலித்த காலம். நாடு விடுதலையான நேரத்தில் நடந்தது ஜெமினி - புஷ்பவல்லியின்  ‘ஓ காதல் கண்மணி!’ கொண்டாட்டம்.

‘அப்பாவுக்கு முதல் மனைவி இருப்பதே ரொம்ப நாள்களுக்குப் பிறகுதான் என் அம்மாவுக்குத் தெரியும்.’-  நடிகை ரேகா.

பொதுவாக செட்டில் சுமாரான பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகுள்ள பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக்.’- ஜெமினிகணேசன்.

ஜெமினி காதல் தேசத்தின் முன்னோடி! அவரது ஸ்ரீகிருஷ்ண லீலா தொடர்ந்தது. சாவித்ரி அவரது கண்களில் பட்டார்.

பத்மினி-வைஜெயந்தியின் வண்ணமிகுத் தோற்றமோ, வாளிப்போ, உயரமோ இல்லாவிட்டாலும் சாவித்ரியும் எழிலரசி! மாநிறம். நாட்டுக்கட்டை.

‘வதனமே சந்திர பிம்பமோ... மதன சரோஜமோ... என வாய் விட்டு உற்சாகமாகப் பாடவைக்கும்; எவரையும் மறுமுறை திரும்பிப் பார்க்கச் சொல்லும் வட்ட வடிவ வசீகர சந்திரமுகி. சாவித்ரியின் முகத்தில் எப்போதும் கள்ளங் கபடமில்லாத குழந்தைத்தனம் குடி இருக்கும்.

ஆயிரம் பாவம் காட்டிக் கவர்ந்திழுக்கும் ஆகாய விழிகள். வாய் திறந்து பேசாதோ... ஐ லவ் யூ சொல்லாதோ என காதல் மன்னனை ஏங்க வைத்த, சீராக  அளவெடுத்து பிரம்மன்  அணிவித்த மெல்லிய இதழ்கள்... மற்ற அங்கங்கள் யாவிலும் யவ்வனத்தின் தேரோட்டம்.

ஜெமினியுடனான தன் காதலை சாவித்ரி அஞ்சலிதேவியிடம் மனம் விட்டுக் கூறியிருந்தார்.

‘நீ தெலுங்கு பெண். அவர் தமிழர். எச்சரிக்கையாக இருக்கணும்!’ என்று சாவித்ரியை உஷார் படுத்தினார் அஞ்சலி.

கணவனே கண் கண்ட தெய்வம் ஷூட்டிங். சாவித்ரி பற்றி ஜெமினியிடம் நேரடியாகவே பேசி தெளிவு பெற்றார் அஞ்சலி.

‘கல்யாணம்னு சொல்லுதே அந்தப் பொண்ணு. உங்களை நம்பி வருது. ஜாக்ரதையாகப் பார்த்துக்குங்க.’ என்றார் அஞ்சலி அக்கறையோடு.

அஞ்சலிக்கும் அப்போது தெரியாது. ஜெமினி ஏற்கனவே மணமானவர்  என்று.

பிராப்தம் தோல்வி அடைந்ததன் விளைவாக சாவித்ரி குடிக்கத் தொடங்கவில்லை. அவரது அழகிய முகத்தை நோக்கி சினிமா காமிரா  நிலை பெற்ற நாள் முதலாகவே தொற்றிக் கொண்ட பழக்கம்.

புஷ்பவல்லியிடம்  சாவித்ரியை அறிமுகம் செய்து வைத்தார் ஜெமினி.

மூவரின் இன்ப விநாடிகளில்  சாவித்ரிக்கு லாகிரி வஸ்துகள்  பழக்கமானது. புஷ்பவல்லி ஊற்றித் தர, காதல் மன்னன் வற்புறுத்த ஸ்டார்களின் சியர்ஸ்!

பருகப் பருக சாவித்ரிக்கு உற்சாக பானத்தின் தங்க நிறமும், அலாதி ருசியும், அற்புத போதையும் ஜெமினியை விடப்  பிடித்துப் போனது. உதடுகளில் மதுக் கோப்பைகளின் உரசல் இல்லாமல் உல்லாச உலகம் இல்லை என்றானது.

புஷ்பவல்லிக்கும் ஜெமினிக்கும் மாறுதல் தேவை எனத் தோன்றியது. காரணம் புஷ்பவல்லியின் எளிய நோக்கம் நிறைவேறி விட்டது. ஜெமினி மூலம் வேண்டி விரும்பி புஷ்பவல்லி இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்.

118.jpg 

தேவைகள் தீர்ந்தவுடன் நாகரிகமாக டாட்டா சொல்லி  பிரியத்தோடு பிரிந்தார்கள். புஷ்பவல்லி குறித்த மலரும் நினைவுகள்:

‘ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும்  நடித்துக் கொண்டு இருந்த போது இருவருக்கும் காதல் பிறந்தது.  ஒட்டிப் பழகினோம். கல்யாணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை.  மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் தடையில்லைதான்!

எங்கள் இருவர் உயிரும் கலந்து மூன்றாவது உயிர் தோன்றியது. பானுரேகா பிறந்தாள். காலப் போக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டி இருந்ததால் பிரிந்தோம். எங்களுக்குள் கல்யாணம் ஆகாததால் விவாகரத்து பிரச்சனையும் எழவில்லை.’- ஜெமினி கணேசன்.

இரு தார மணம் குற்றம் என்கிறது  சட்டம். ஜெமினி சமர்த்தர். பாப்ஜி தவிர வேறு யாரையும் அவர் சாஸ்திரப்படியோ,  சப் ரிஜிஸ்ட்ரார் முன்போ பதிவுத் திருமணம் செய்து கொள்ளவில்லை. முன் எச்சரிக்கை முனுசாமி!

ஜெமினிக்கும் பாப்ஜிக்கும் நிறைவாக 1962 பிப்ரவரி 28ல் பிறந்தவர், ஜெயஸ்ரீ ஸ்ரீதர். சாவித்ரியின் வீட்டிலேயே தங்கி விட்ட போதிலும், ஜெமினி தன் முதல் மனைவி  பாப்ஜியிடம் காட்டிய நேசம் மரியாதைக்குரியது.

பாப்ஜியோ, சாவித்ரியோ ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என்று காதல் மன்னன் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை. காரணம் இருவருமே கள்ளங் கபடம் அறியாதவர்கள்.

நடிகைகளின் கணவர் பற்றி ஏராளமாக கேலி கிண்டல் தொனிக்க ஜோக்குகள் எழுதுபவர்கள்   இன்றைக்கும் அதிகம். ஆனால் ஜெமினியை சத்தியமாக அந்தப் பட்டியலில் சேர்த்து விட முடியாது.  

சாவித்ரி ஜெமினியை கவனித்துக் கொண்ட விதம் அருமை!  அதற்குக் கண் கண்ட சாட்சி. டாக்டர் கமலா செல்வராஜ்.

‘ஒரு பீரோ நிறைய ஷர்ட்-பேன்ட்-கோட்- சூட். ஒரு பீரோ நிறைய ஷூ.  கை தட்டினால் சட்டையை மாட்டி விட,  ஷூ போட்டு விட ஆள், கூப்பிட்ட குரலுக்கெல்லாம்  கேட்டதை செய்ய சாவித்ரி ஓடி வந்தார். எங்க அப்பாவை சாவித்ரி ராஜா மாதிரி நடத்தியதைப் பார்த்து நான் பிரமித்து நின்றதுண்டு.’

மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நேயர்களே... ஜெமினியின் நட்சத்திர சம்பாத்தியத்தில் சாவித்ரி ஒரு வேளை கூட சோறு தின்னவில்லை.

1958-  ஜூலை 8. ‘கொஞ்சும் சலங்கை’ அவுட்டோருக்குச் சென்ற ஜெமினி, டைஃபாயிட் ஜூரத்துடன் திரும்பினார். அப்போது சாவித்ரி கர்ப்பிணி.

தாய்மை அடைந்தப் பூரிப்பில் அவர் ஜெமினியிடம் காட்டிய பரிவு, பாசம், கவனம், அக்கறை, உபசரிப்பு, பதற்றம், எந்தவொரு குணசுந்தரியான மனைவியின் பிரியத்துக்கும் சற்றும் குறைந்தது அல்ல. இதை நான் சொல்லவில்லை. ஜெமினியின் மகள் நாராயணி பதிவு செய்துள்ளார்.

savv.jpg 

‘அப்பா படுத்த படுக்கையாக இருந்தார். கமலா, ரேவதியுடன் அப்பாவைப் பார்க்க என்னை அழைத்துக் கோண்டு போனார்கள் அப்பாவின் சின்னம்மா.(ஜெமினியின் சித்தி)

அங்கு அப்பாவுக்குப் பக்கத்தில் பணி விடை செய்து கொண்டிருந்தார் ஒரு பெண்.  வெள்ளை உடையிலிருந்த அப்பெண்ணின் அழகு  என்னைக் கவர்ந்தது. அப்பாவைப் பார்க்கச் சென்ற நான், ‘ அந்த நர்ஸ் ரொம்பவே அழகாயிருக்கா!’ என்றேன்.  சின்னம்மா என் தொடையில் கிள்ளி, பேசாமல் இருக்குமாறு  சைகை காட்டினாள்.

‘நர்ஸ் அழகாய் இருக்கான்னு சொன்னா ஏன் என்னைக் கிள்ளினே...’  என்றேன். வெகு நாள்களுக்குப் பிறகே அந்த அழகான நர்ஸ், நடிகை சாவித்ரி என்பது எனக்குத் தெரிந்தது!’ - நாராயணி.

சாவித்ரியின் ஈடு இணையற்ற கவனிப்பால் ஜெமினிகணேஷ் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரத்தில் குணமாணார். அடுத்து ‘கல்யாணப் பரிசில்’ பாஸ்கராக தோன்றி வசந்திக்கு( சரோஜாதேவி)  தூண்டில் போட்டார்.

ஜெமினியை மட்டும் அல்ல. அவரது மகள்களில் தன்னுடன் நெருங்கிப் பழகிய நாராயணியையும்  சாவித்ரி கண்ணுக்குக் கண்ணாக கவனித்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதைப் பற்றி நாராயணி :

சாவித்ரி ஆன்டீ வீட்டுக்குப் போய் விஜியுடன் விளையாடுவேன். ‘கங்கா கினாரே’ இந்தி சினிமா ஷூட்டிங்குக்காக சாவித்ரியுடன் மும்பை போய் இருக்கிறேன். சாவித்ரி தன் தலை முடியை ‘சாதனா’ கட் செய்திருந்தார். மும்பையில் தங்கியிருந்த போது என்னை ரொம்ப நன்றாக பார்த்துக் கொண்டார்.

ஸ்டுடியோவுக்குப் போகும் போது மேக் அப் ரூமில் எங்களை இருக்கச் செய்வார். சாப்பிட சாக்லெட், பிஸ்கட், சாப்பாடு - படிக்க காமிக்ஸ் கொடுத்து விட்டு நடிக்கப் போவார்.

எனக்கு சாவித்ரியைப் போலவே சாதனா கட் செய்து கொள்ள எக்கச்சக்க பிளானுடன் போய் இருந்தேன். அதை சாவித்ரியிடம் கூறிய போது அவங்க பயந்துட்டாங்க. நான் ரொம்பவும் கெஞ்சினேன்.  திரும்பத் திரும்ப கெஞ்சிய போதும் அவர் தயங்கினார்.

‘எங்கள் வீட்டில் தலை முடியை வெட்டிக் கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். பாட்டி கேட்டால் நான் தான் விரும்பி செய்து கொண்டதாகச் சொல்லி விடுகிறேன்’  என்று கெஞ்சினேன்.

என்னை ஒரு சைனீஸ் பார்லருக்கு அழைத்துப் போய் முடி வெட்டினார். ‘சாதனா கட்’டுக்கு எப்படி தலை சீவிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் எனக்கும் நெருக்கமானவர்கள் என்கிற உணர்வின் உந்துதலால் சாவித்ரியிடம் நான் நெருங்கிப் பழகினேன். அப்பாவோடு நெருங்கி நிற்க  என் மனத்தில் மறைமுகமாக எழுந்த ஆசையாகக் கூட அது இருக்கலாம்.’

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி-20. கல்யாணப் பரிசு!

 

'இயற்கையாகவே  நான் மென்மையான உணர்ச்சிகளில் மனத்தை ஈடுபடுத்திக் கொண்டு விடுவேன். யாரிடமும் அன்பும் பற்றும் கொண்டால்  அது மிகவும் ஆழ்ந்து படிந்து விடும். அதற்குச் சிறு அதிர்ச்சி ஏற்பட்டாலும்  என்னால் தாங்க முடியாது, மிகுந்த மனவேதனைப் படுவேன்.’ - சாவித்ரி.

நிஜத்தில் நடிகையர் திலகம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நிதானம் அற்றவர். மகிழ்ச்சியோ, துக்கமோ,  ஆவேசமோ சட்டென்று வெளிப்படுத்தி விடுவார். கறந்த பால் போன்ற அப்பட்டமான மன நிலை. காமிராவுக்கு முன்பு மட்டுமே அவரது உதடுகள் ஒத்திகை பார்த்தன. பாசாங்குகளற்ற அற்புத பிறவி! சுபாவத்தில் பச்சை மிளகாய். முன் கோபத்தில்  சிவகாசி சரவெடி!

சாவித்ரியால் மதுவைச் சுவைக்காமல் இருக்க முடியவில்லை. மற்ற நாயகிகளுடனான ஜெமினியின் மன்மத லீலைகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி. கால காலமாக மனப்பாடம். இருந்தும் அழுதார். காரணம், உடல் இன்பத்தைப் பொருட்படுத்தாது பரஸ்பரம் ஜெமினியும் சாவித்ரியும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த கலப்படமற்ற ஐ எஸ் ஐ அன்பு!

நீங்கள்  பரிசுத்தமான நேசத்தை  அனுபவத்திருந்தால் மாத்திரமே ஜெமினி - சாவித்ரியின் உறவையும் பிரிவையும் மனமார  உணர முடியும்! அது ஏதோ மேம்போக்கான சினிமாகாரர்களின் அன்றாட அடிதடி கலாட்டா கிடையாது. உள்ளார்ந்த உணர்வுகளின் விஸ்வரூபம்!

மேற்கத்திய கலாசார கோயிங் ஸ்டெடி ஃலைப் அல்ல ஜெமினி- சாவித்ரியின் இல்லறம்.  ஒன்று பட்ட உயிர்க் கூடுகளில் பொங்கிப் பெருகி ஓடிய பிரியங்களின் சமுத்திரம்.

savithri_Gemini2.jpg 

நேசத்தின் நீரோட்டத்தில் கல் எறிந்த பின் சாவித்ரியால் சும்மா இருக்க முடியவில்லை. கணவருடன்  கற்கண்டாக பேசி பேசி கனிந்த நெஞ்சம் கடைசியில் ரவுத்திரம் பழகியது. காணவே உக்கிரமாகி ரகளை உச்சம் தொட்டது.

தன்னை விட்டு விலகி நிற்கிற தலைவனைத் தண்டிப்பதாக எண்ணி, ஜெமினிக்கு தீராத அவமானத்தை அனைவரின் முன்பும் தேடித் தந்தார்.

ஜெமினி ஸ்டுடியோவில் சாந்தி நிலையம் ஷூட்டிங். தனிமைத் துயரில் மனம் குமுறிய  சாவித்ரி குடித்து விட்டுப் போய் அங்கே காதல் மன்னனுடன் தகராறில் ஈடுபட்டதாகச் செய்திகள் கசிந்தன. ஜெமினி-சாவித்ரியின் நிஜமான ரசிகர்கள் வேதனைப்பட்டனர்.

‘அப்பா அம்மா ரெண்டு பேருமே பார்க்க ரொம்ப அழகா இருக்கிறதிலே எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். ஜோடிப் பொருத்தம்னு சொல்லும் போதே அடையாளம் காட்டணும்னா அது ஜெமினி கணேசன் - சாவித்ரியாகத்தான் இருக்கும்.

இரண்டு இதயங்கள் ஒன்றை ஒன்று விரும்பினாங்க. காதலிச்சாங்க. அதனால ஏற்பட்ட உறவு இது. அப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டதே, குழந்தைகளிருக்கே, இவரோட நான் வாழறனே, என் வாழ்க்கைக்கு என்ன பாதுகாப்பு இருக்கும், உத்தரவாதம் இருக்கும்னு அம்மா நினைக்கலை.

அதே போல அப்பாவும் என் குடும்பத்துக்கும் இவளுக்கும் என்னத் தொடர்பு, இவளுக்கு ஆங்கிலம் கூட சரியாப் பேசத் தெரியாதேன்னு அம்மாவைப் பத்தி நினைக்கல.

இரண்டு பேரும் உண்மையான  காதலுக்காக  எமோஷனலா ஒன்றிப் போய்த்தான் ஏத்துக்கிட்டாங்க. வாழ்ந்தாங்க.

அந்த அளவு உணர்ச்சிவசப்பட்டதாலேதான் அவங்களுக்குள்ள விரிசலும் பிரிவும் வந்தது’. -விஜய சாமுண்டீஸ்வரி. 

praptham1.jpg 

பிராப்தம் வெளியாகி சரியாக ஓர் ஆண்டுக்குப் பின்னர், 1972 தமிழ்ப் புத்தாண்டு. கோலிவுட்டில் புகுந்த வீடு படம் மூலம் லட்சுமியின் மாமியாராக சாவித்ரியின் மறு பிரவேசம் நிகழ்ந்தது. அது அந்த ஆண்டின் மிகச் சிறந்த படம். சாவித்ரி நடிக்க புகுந்த வீட்டை உடனடியாக ஏவி.எம். தெலுங்கிலும் தயாரித்தது.

மயிலாப்பூர் ஏவிஎம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபம். ஜூலை 21.-1972. வெள்ளிக்கிழமை மாலை. புகுந்த வீடு 100வது நாள் வெற்றி விழா!

சாவித்ரி நெற்றியில் திருநீறு குங்குமம் துலங்க குடும்பப் பாங்காக, கழுத்தில் ரோஜா மாலையோடும் முகத்தில் மலர்ச்சிரிப்போடும் பரிசு பெற மேடை ஏறினார்.  கேடயம் வழங்கிய  விஐபி நடிகர் திலகம். தன் உடன் பிறவா தங்கையின் செகன்ட் இன்னிங்ஸ் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகையர் திலகத்தின் மகிழ்ச்சியை திரை உலகம் ஆச்சர்யத்துடன் நோக்கியது. புகுந்த வீடு கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே சமயம். வருமான வரி இலாகா சாவித்ரியின் இல்லத்திலிருந்து ஆறு லட்சம் ரூபாயைக் கைப்பற்றியதாகத் தகவல்கள் பரவின.

'பிரபல தமிழ் குணச்சித்திர நடிகையின் வீட்டில் ரெய்டா?’ எனப் பத்திரிகைகள் கிசுகிசு பாணியில் கேள்விக்குறி போட்டன. 

சாவித்ரி வீட்டில் இன்கம்டாக்ஸ் ஆபிஸர்ஸ் சோதனையிட்டது நிஜம் என்கிற கருத்தை ஆரூர் தாசும் பதிவு செய்துள்ளார்.

savitri_14326.jpg 

‘வரவு - செலவு கணக்கு சரியாகச் சமர்ப்பிக்கப்படாததால் நிறைய வருமானவரி விதிக்கப்பட்டதுடன் கூட, அன்றைய பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் ஏதோ தனிப்பட்ட காரணத்துக்காக, சாவித்ரியை காட்டிக் கொடுத்து அதனால் வருமான வரித்துறையினர்,  சாவித்ரியின் வீட்டைச் சோதனை போட்டு அவர் வைத்திருந்த மிச்சம் மீதி பணத்தையெல்லாம் சட்டப்படி எடுத்துக் கொண்டு போய்விட்டனர்.’

-------------------------------------------------------------------------------------

புகுந்த வீட்டைத் தொடர்ந்து சாவித்ரி நடித்தது 'பெத்த மனம் பித்து'. எஸ்.பி. முத்துராமனின் இரண்டாவது படைப்பு. 1973 தைத் திருநாள் வெளியீடு.

எஸ்.பி. எம். இயக்கி நூறு நாள் கொண்டாடிய முதல் படம் பெத்த மனம் பித்து. மலையாளத்திலிருந்து   அம்மா கேரக்டருக்காகவே தழுவப்பட்டது. சாவித்ரி ஒப்புக் கொண்டிருக்காவிட்டால்  ஒரு வேளை பெத்த மனம் பித்து தமிழில் வந்திருக்காதோ என்னவோ. படத்தின் ஜீவனே தாய் மீனாட்சியாக வரும் சாவித்ரிதான்.

பெத்த மனம் பித்து சாவித்ரியின் நடிப்புக்காகவே ஓடியது. வேறு பெரிய நட்சத்திரங்கள் யாரும் அதில் கிடையாது. சாவித்ரியால் முத்துராமன்  கூட ஹீரோவாக வெற்றி பெற்ற படம் அது. பிராப்தத்தில் அற்ப காசு, பணம் போயிற்றே தவிர, திறமை சாவித்ரியின் கூடவே தங்கி விட்டது கோலிவுட்டுக்குப் புரிந்தது.

ஜெமினி கணேசனின் இரண்டாவது வீடு புஷ்பவல்லி. 'மலேயா மாமியார்’ என்ற பெயரில் சொந்தப் படம் எடுத்து பல லட்சங்களை இழந்தார். நஷ்டத்தைச் சரிக்கட்டத் தன் மகள் பானு ரேகாவை மிகக் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு 1971ல்  இந்தியில் நட்சத்திரமாக்கினார்.

சாவித்ரியும் தன் மகள் விஜியை திரையில் அறிமுகப்படுத்துவார் என்பது சிலரது எதிர்பார்ப்பு.

‘என் மகள் விஜி வாங்கி வரும் மார்க்குகளைப் பார்த்தால் படிப்பிலும் அவள் அப்பா மாதிரிதான்.  ஒரு சமயம் டாக்டராகப் போகிறேன் என்பாள். மறு நிமிடம் வக்கீலாகப் போகிறேன் என்பாள்.

'சீதா’வில் நான் வக்கீலாகவும் 'சிரஞ்சீவி’யில் ( நீர்க்குமிழி-தெலுங்கு) டாக்டராகவும் வேஷம் போடும் போது அவள் நிஜமாகவே அப்படி வந்தால் அதைவிட எனக்கு சந்தோஷம் என்ன இருக்க முடியும்?

என் மகன் சதீஷ். ஒரே பையன் தானே அவனைச் செல்லம் கொடுத்து சாவித்ரி வளர்ப்பாளோ என்று நீங்கள் யூகித்தால் அது தவறு.

என் மகனை நான் ஆரம்பம் முதலே  கண்டிப்புடனும் கட்டுப்பாடுடனும் வளர்க்கப் போகிறேன். இவங்க அப்பா கணேஷ், அவங்க அப்பா-அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவர் அவங்க அம்மாவிடம் இருந்ததைப் போல இவனும் என்னிடம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இது என் ஆசைக்கனவு அல்ல. கவலை.

Savi_face.jpg 

சிவாஜிகணேசன், எஸ்.வி.ரங்காராவ், கே. பாலாஜி, ஏவி.எம். ராஜன், அஞ்சலிதேவி, பத்மினி, எம்.என். ராஜம், ராகினி, ஜமுனா, புஷ்பலதா, மனோரமா ஆகியோர் கலந்து கொள்ள, மூன்று வயது வரை விஜியின் பிறந்த நாள் விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடினோம்.’

என்றெல்லாம் பத்திரிகைகளில் பூரிப்புடன் எழுதிய நடிகையர் திலகம் திடீரென்று திடுக்கிடச் செய்யும் புதிய முடிவுக்கு வந்தார்.

 தனது மகள் விஜயசாமூண்டீஸ்வரிக்கு அவசரக்கல்யாணம் செய்து பார்க்கும் தீர்மானம் அவரை அரித்தது. நெல்லூரில் அனுமந்தராவ் என்பவரின் மகன் கோவிந்தராவை மணமகனாக, தனது சொந்தத்தில் பார்த்து விட்டார்.

விஜயசாமூண்டீஸ்வரி எட்டாவது படிக்கும் மாணவி. பதினைந்து வயது கூட பூர்த்தி ஆகவில்லை. மகன் சதீஷ்  பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு வாசித்துக்கொண்டிருந்தான். சதீஷ் வாயைத் திறந்தால் 'என்னடி ராக்கம்மாவும்’, ’தம் மேரே தம்மும்’ திரை கானமாக ஒலித்தன.

'மேஜராகாத மைனர் பெண்ணுக்கு மேரேஜா...?  விஜி தொடர்ந்து படிக்கட்டும். கல்யாணத்துக்கென்ன அவசரம் இப்போது..?’ என்றார் ஜெமினி. சாவித்ரியின் நோக்கம் தந்தைக்கு சரி என்று தோன்றவில்லை. அம்மாவின் பிடிவாதத்துக்கு  வழக்கம் போல் ஜெயம்.

டிசம்பர் 5, 1973ல் சாவித்ரியின் ஹபிபுல்லா சாலை இல்லத்தில் விஜிக்குத் திருமணம் என அறிவித்தார்.

தன்னை எந்த வீட்டிலிருந்து சாவித்ரி வெளியேற்றினாரோ... அங்கே சென்று, தன் ஆசை மகளின் கல்யாணத்தில் கலந்து கொள்ள  ஜெமினி கணேசனுக்கு விருப்பம் கிடையாது. இன்னொரு காரணம் சாவித்ரி குறித்த முகூர்த்த நாளில் அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்தாக வேண்டும். அங்கே கலை விழாவில் கலந்து கொள்வதாக முன்பே சம்மதம் சொல்லி, அதற்காக அத்தனை ஏற்பாடுகளும் தயார் என்கிற நிலை.

வேறு தேதியில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமே என்றார் ஜெமினி. மேடம் சாதாரணமாகவே பிடிவாதத் திலகம். சாவித்ரியா விட்டுக் கொடுப்பார்?

அப்பா ஜெமினியை ஏற்றிக் கொண்டு விமானம் காற்றில் பறந்தது. ஆனாலும் மனசு கேட்கவில்லை. டிசம்பர் நான்காம் தேதி. தென் ஆப்பிரிக்காவிலிருந்து அன்பு மகளுக்குத் தன் ஆசிர்வாதங்களை டெலிபோன் மூலம் தெரிவித்தார்.

எப்பேர்ப்பட்ட வைபவம்!  வாழ்நாளில் மீண்டும் வருமா? எத்தனை எத்தனை கனவுகளோடு விஜியின் கல்யாணத்துக்காக யோசித்திருப்பார் அப்பா ஜெமினி.

அத்தனையும் சாவித்ரி என்கிற அழகான அம்மா நடிகையால் காணாமல் போய் விட்டது.

கணவர் ஊரில் இல்லாவிட்டால் என்ன? அன்புள்ள அத்தானின் இடத்தில் அவரது தர்ம பத்தினி பாப்ஜியை அமர்த்தி, கல்யாணத்தை வெற்றிகரமாக நடத்தினார் நடிகையர் திலகம்.

பாப்ஜிக்குதான் வானத்தைப் போல அகன்று விரிந்து பரந்த,  எதையும் தாங்கும் இதயமாயிற்றே!

ஜெமினியைப் போல் சாவித்ரியும் தக்க சமயத்தில் அதை இரவல் வாங்கிக்கொண்டார். போனஸாக சாவித்ரியின் மகளுக்குத் தங்க நெக்லஸை கல்யாணப் பரிசாக அளித்தார் அன்னை பாப்ஜி.

1974 ஜனவரி முதல் வாரம். சென்னை திரும்பிய ஜெமினி மணமக்களுக்கு நேரில் வாழ்த்துகளைக் கூறினார்.

-----------------------

'நண்பனால் மட்டுமே எதிரியாக முடியும். உறவினர்கள் ஆரம்பம் முதலே பகைவர்களாக இருக்கிறார்கள்.’- பில் மார்ஷல்.

பில் மார்ஷலின் அந்தக் கருத்து யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, சாவித்ரியின் வாழ்க்கைக்கு மிக அற்புதமாக இலக்கணம் வகுத்தது.  அதைக் குறித்து சாவித்ரியே தன் மனம் திறந்து வேதனைகளைக் கொட்டியுள்ளார். (1972  ஜூலையில் அளித்த நேர்காணல்)

Mom_Sis.jpg 

‘எனக்கு முன் கோபமும் அவசர புத்தியும் உண்டு. குடும்பப் பொறுப்பு முழுவதையும் என் அம்மா கவனித்து வந்தார்கள். விலைவாசி தெரியாமல் அசட்டையாக வாழ்ந்தேன்.

விஜி, சதீஷோடு நானும் மூன்றாவது குழந்தையாகத் தாயின் மடியில் குதூகலமாகப் படுத்துக் கொள்வேன். அம்மா நான் சற்றும் எதிர்பாராத சமயத்தில் இறந்த பிறகு, மொத்த சுமையும் என் தலையில் விழுந்தது. எனக்கு ரிலேட்டீவ்சை விட ஃப்ரண்ட்ஸை அதிகம் பிடிக்கும். ஃப்ரண்ட்ஸூம் நிறைய பேர் கிடையாது.

'அடேயப்பா! சாவித்ரி இவ்வளவு சம்பாதிக்கிறாளே...! நமக்கு ஏன் உதவக் கூடாது என்று பேசக் கூடியவர்களாகவும் நினைப்பவர்களாகவும் எனது உறவினர்கள் இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதில் நான் படுகின்ற கஷ்டம் சொந்தக்காரர்களுக்குத் தெரியுமா...?

என் பணத்துக்காகவே என்னிடம் பழகுகிறவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாது.’

சொந்தக்காரர்களில் இரு வகையினர் உண்டு. ஒரு சாரார் அக்னி போன்றவர். இன்னொரு வர்க்கம் புதைகுழி போன்றது.

முகத்துக்கு நேராக மனத்தில் பட்டதைப் படபடவென்று கொட்டித் தீர்க்கும் எரியும் நெருப்பை நம்பலாம். ஆறுதல் என்கிறத் தண்ணீர் ஊற்றி அணைக்கலாம். அதுவும் முடியாத போது தாண்டி வரலாம். அந்த இடத்தை விட்டு ஓடிச் சீக்கிரம் தப்பித்து விடலாம்.

ஆனால் முகத்தில் கள்ளச் சிரிப்பும் உதடுகளில் கபடமான சர்க்கரைப் பேச்சும் நிறைந்த புதைகுழிகளை  எளிதில் அடையாளம் காணவோ நம்பவோ முடியாது. சாவித்ரியைச் சுற்றிலும் புதைகுழிகள் பொக்கிஷம் எடுக்கக் காத்திருந்தன. 

சாவித்ரியின் அச்சம் கூடிய விரைவில் நிஜமானது. அதைப் பற்றி ஆரூர்தாஸ்  தினசரி ஒன்றில் எழுதியவை:

‘வருமான வரி பாக்கி. அத்துடன் படம் எடுத்தது சம்பந்தமாக ஏற்பட்ட கடனுக்கான வட்டி செலுத்தத் தவறியது போன்ற காரணத்துக்காக சாவித்ரி பிரச்சனையில் சிக்கினார். அதனால், சாவித்ரி பார்த்துப் பார்த்து,  ஆசை ஆசையாகக் கட்டிய ஹபிபுல்லா சாலை பங்களா,  ஜப்தி செய்யப்படப் போவதாக அவர் வீட்டுக்கு எதிரிலேயே தெருவில் தண்டோரா போடப்பட்டது.

அதைக் கண்டு சாவித்ரி துன்பத்தில் துடித்தார். உடனே தன்னிடமிருந்த விலையுயர்ந்த நகைகளையெல்லாம் நான்கைந்து பாகமாகப் பிரித்துத் தனித்தனியாகக் கட்டிப் பெட்டியில் வைத்து, தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று நினைத்திருந்த நபர்களிடம் கொடுத்து வைத்தார்.

அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் - சென்னை அண்ணாநகரில் இருந்த அன்றைய பிரபல தெலுங்கு நடிகர், அவருடைய மனைவி. மற்றும் ஐதராபாத்திலிருந்த சாவித்ரியின் ரத்த உறவு கொண்ட பெண்ணும், அவருடைய கணவரும் ஆவார்கள்.

savithri_car.jpg 

சாவித்ரி ஐதராபாத்தில் தன் சொந்தப் பணத்தில் இரண்டு வீடுகள் வாங்கி அவர்களிடம் ஒப்படைத்து இருந்தார். அவற்றில் ஒரு வீட்டில் அவர்கள் வசித்துக்கொண்டு, இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை சாவித்ரிக்குக் கொடுக்காமல் அவர்களே அனுபவித்து வந்தனர்.

கஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக அந்த வீடுகளைத் திருப்பித் தனக்குக் கொடுக்கும்படி சாவித்ரி கேட்டதற்கு,  மறுத்து ஒரு வீட்டை மட்டும் சாவித்ரி பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்து விட்டு, மற்றொன்றை - பினாமி என்ற முறையில்  தனக்கே சொந்தமாக்கிக் கொண்டு நடிகையர் திலகத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்.

அந்த தெலுங்கு நடிகரும், அவரது மனைவியும், சாவித்ரி தியாகராய நகர் வீட்டை விட்டு அண்ணாநகருக்கு வந்து விட்டால்,  அவரைத் தாங்களே கவனித்துக் கொள்வதாகக் கூற, சாவித்ரி அதற்குச் சம்மதித்தார். அவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் வேறொரு வாடகை வீட்டைப் பார்த்து அதில் சாவித்ரியைக் குடி வைத்தனர்.

மகுடம் சூடாத மகாராணியாக தன் சொந்த மாளிகையில் வாழ்ந்து மகிழ்ந்த அந்த மாடப்புறா இப்பொழுது ஒரு சிறிய வாடகை வீட்டில் அல்ல,  கூட்டில் அடைப்பட்டது.

பின்னர்  அவர்களும் சாவித்ரி கொடுத்து வைத்திருந்த நகைகளைக் கையாடினார்கள்.

சாவித்ரி தி.நகர். ஹபிபுல்லா சாலை பங்களாவை விற்றுக் கடன்களை அடைத்து விட முடிவு செய்து கணவர் ஜெமினி கணேசனுக்குத் தெரிவித்தார்.

ஜெமினி வேறு எந்த ஒரு வழியும் இல்லாத நிலையில் விலை பேசி வீட்டை விற்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

சாவித்ரியின் அந்தக் கனவு மாளிகை கடனுக்காகக் கை விட்டுப் போனது. அத்துடன் அண்ணியைக் கவ்விக் கொண்டிருந்த கடனும் தீர்ந்தது.

நல்ல வேளையாக பிரதான - மெயின் பங்களாவின் மேலண்டைப் பகுதி மனை சாவித்ரியின் மகள் விஜியின் பெயரில் பத்திரப்பதிவு ஆகி, அதில் அமைந்திருந்த கட்டடம் சாவித்ரி கட்டியிருந்தாலும், மனை மகளின் பெயரில் இருந்ததால், அதில் யாரும் கை வைக்க  முடியவில்லை.’

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி - 21. கண்ணம்மா!

 

ஏவி.எம். என்னை வைத்து செல்லப்பிள்ளை படத்தை ஐந்து ஆண்டுகள் எடுத்தார்.

‘உனக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன் அம்மா! அதில் நீ தான் நடிக்க வேண்டும்’என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம் களத்தூர் கண்ணம்மா - சாவித்ரி.

சாவித்ரியின் மிக முக்கியமான வெற்றி முத்திரை களத்தூர் கண்ணம்மா. தாயான பிறகும் சாவித்ரிக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம்.  கண்ணம்மா பற்றி இத் தொடரில்  எதையும் இதுவரை நான் எழுதவில்லை. ஏனோ அதன் திரைக்கதையும் அதில் இடம் பெற்றப் பாடல்களும் சாவித்ரியின் வாழ்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல் காட்சி தருகின்றன.

‘அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தேன் எங்கு சென்றாளோ...
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே’

ஏ.எம். ராஜாவின் குரல் காற்றில் அலை மோதும் போதெல்லாம் அதில் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் சாவித்ரி குறித்த வலுவானதொரு சோகம் நெஞ்சை அழுத்துவதாகத் தோன்றும்.

மலரே மலரே நீ யாரோ வஞ்சனை செய்தவர் தான் யாரோ
உன்னைச் சூடி முடித்ததும் பெண் தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆனதும் அவளாலே பின் மண் மேடானதும் அவளாலே.
சினிமாவுக்காக எழுதப்பட்ட அந்தப் பாடலுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.

பிரிவுத்துயரை வலியுறுத்திக் கூற கண்ணதாசனின் நாவிலிருந்து கொட்டிய பல்லவிகள் மொத்தம் 58.  தெலுங்கு மொழி பேசும் டைரக்டர் பிரகாஷ்ராவுக்கு அதில் ஒன்றைத் தேர்வு செய்யும் அளவு தமிழறிவு கிடையாது. களத்தூர் கண்ணம்மாவை தொடக்கத்தில் இயக்கியவர் அவரே. பின்னர் ஏ. பீம்சிங் தொடர்ந்தார்.

58லிருந்து மிகச் சிறந்த எட்டு பல்லவிகளைக் கொண்டு முழுப்பாடல் உருவானது. எனக்குத் தெரிந்து  அனு பல்லவி, சரணம் எதுவுமின்றி பல்லவிகளால் நிரப்பப்பட்ட ஒரே  பாடல் ‘அருகில் வந்தாள்’ மாத்திரமே என்று நினைக்கிறேன்.

ஏவிஎம். ஸ்டுடியோ மாந்தோப்பு. களத்தூர் கண்ணம்மா ஷூட்டிங். ஜெமினியும் சாவித்ரியும் ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ’ என்று ஆனந்தமாக டூயட் பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு ஏவி.எம். சரவணன்  சென்றார்.

‘வாங்க சரவணன்... யார் இந்த பாலமுருகன்...? ’

‘டெய்சி ராணிக்குப் பதிலா அப்பச்சி இந்தப் பையனை ஓகே பண்ணிருக்காங்க. ’

நாயகன் - நாயகி இருவரும் வாஞ்சையோடு சூட்டிகையான கமலை முதன் முதலாகப் பார்த்தார்கள்.

kalathur-kannamma_b.jpg 

அப்படியோர் அழகு பாலகன் தங்களுக்கு இன்னும் வந்து பிறக்கவில்லையே...  ஏழுமலையான் இன்னமும் அந்த பாக்கியத்தை வழங்கவில்லையே என்கிற ஏக்கம் ஜெமினி- சாவித்ரியின் முகங்களில் மேக் அப்பை மீறி வெளிப்பட்டது.

‘உங்களுக்கும் பிடிச்சிருந்தா இவனையே படத்துல நடிக்க வைக்கலாமான்னு அப்பச்சி கேட்டாங்க. ’ என்றார் சரவணன்.

எஸ்.பி. முத்துராமனின் தோள்களில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கமல், நட்சத்திரத் தம்பதிகளுக்கு வணக்கம் சொன்னார்.

60களில் டெய்சி ராணியை விட்டால் சிறப்பாக நடிக்க அகில இந்தியாவிலும் வேறு சிறுமி இல்லை என்கிற நிலைமை. யார் பையனில் ஜெமினி - சாவித்ரி ஜோடி திகட்டத் திகட்ட அவளோடு நடித்திருந்தது.

டெய்சி ராணிக்கு மாற்றாக கமலைத் தேர்வு செய்யும் பொறுப்பும் கடமையும் ஏவி.எம். செட்டியார் மூலம்  அவர்களைச் சேர்ந்தது.

‘இந்தப் பொடியன் ஜோரா... நல்லா இருக்கானே. சாவித்ரி இந்தா உன் பிள்ளையை வாங்கிக்க. ’என்றவாறே ஜெமினி கை நீட்ட  கமல் எஸ்.பி. முத்துராமன் தோள்களிலிருந்து இடம் மாறினார். கமலை இடுப்பில் வைத்துக் கொண்டு ஜெமினியும் சாவித்ரியும் தனித் தனியே ஸ்டில் செஷனில் பங்கேற்றார்கள்.

gemini_kamal.jpg 

‘படிக்கிறியா...  ரைம்ஸ்லாம் சொல்வியா...?’ வண்ணக் கோலமாகப் பளிச்சிட்ட  துறுதுறு மழலையிடம் குசலம் விசாரித்தார்கள். அதற்காகவே காத்திருந்தாற் போல் உடனடியாக குட்டி கமல் அபிநயங்களோடு பாட ஆரம்பித்தார்.

Goosey Goosey Gardner
whither shall you wander
upstairs and downstairs
and in my lady's chambers

‘சமத்துக்குட்டி என் சர்க்கரைக் கட்டி’ என்று சாவித்ரி பரவசமாகி கமலை முத்தமிட்டார். உடனே ஜெமினி தமிழில் அந்த நர்ஸரி பாடலை பாடி ஆடினார்.

‘வாத்து வாத்து வாத்து
எங்கே போறே வாத்து
மேலே கீழே கீழே மேலே
துரைசானி அம்மா ரூம்லே! ’

தமிழ் சினிமாவில் ஜெமினி - சாவித்ரி ஏற்றி வைத்த இன்னொரு ஒளி விளக்கு கமல்ஹாசன்! களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினியை விட வலுவான ரோலும் விளம்பரமும்  தேசிய விருதும் கமலுக்குக் கிடைத்தது.

கமலுடனான நேசம் குறித்து சாவித்ரி-

‘நாம் பாடுவதையும் பேசுவதையும் அப்படியே இமிடேட் செய்யும் சாமர்த்தியம் கமலுக்கு உண்டு. அந்த மழலைப் பருவத்தில் என்னையும் அவரையும் மாமா - மாமி என்று கூப்பிட்டுக் கொண்டு ரொம்ப ஆசையாகப் பழகுவான்.

டான்ஸ் மாஸ்டராக இருந்த போதும் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கிய நேரத்திலும் என்னை அடிக்கடி வந்து பார்ப்பார். சிகப்பு ரோஜாக்களுக்காக பிலிம் ஃபேர் அவார்டு வாங்கிய சமயம் நான் அவரைப் பாராட்டினேன்.

என்னுடைய திரை உலக வாழ்க்கையில் என்னுடனே வளர்ந்து முன்னுக்கு வந்த ஒரு மகனாகவே கமலை எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. ’

ஏவி.எம்மின் களத்தூர் கண்ணம்மா சாவித்ரியின் அற்புத நடிப்புக்கான அட்சயப் பாத்திரம். அதில் நடிக்கும் போது நடந்த சம்பவங்கள் பற்றி எஸ்.பி. முத்துராமன்.

‘சாவித்ரி அம்மா வீட்லருந்து பர்ஸ்ட் கிளாஸ் சாப்பாடு தினமும் வரும். சாவித்ரி அம்மாவே தன் கையால  பரிமாறிடுவாங்க. ஹோம்லி அட்மாஸ்பியர் ஏவி.எம்ல இருக்கும். ’

அதுல ஒரு சீன். குழந்தை இறந்துட்டதாகச் சொல்லி அடக்கம் செய்துட்டதா சாவித்ரியோட அப்பாவா வர, எஸ்.வி. சுப்பையா டயலாக் பேசுவார்.

aiyaaa_gemini.jpg 

அப்ப சாவித்ரி, ‘எல்லாரும் குழந்தை பிறந்தா இனிப்பு தருவாங்க. நீங்க செத்த குழந்தைக்கு இனிப்பு கொடுங்கன்னு சொல்லி, அழுது சிரிச்சி எமோஷன் ஆகி மயக்கம் போட்டே விழுந்துட்டாங்க. ’

சாவித்ரிக்கு, செகன்ட் ரவுண்டில் கிடைத்த புதிய ஜோடி மேஜர் சுந்தர்ராஜன். சூரிய காந்தி, ஜக்கம்மா, மஞ்சள் குங்குமம், தாய்க்கு ஒரு பிள்ளை, வீட்டுமாப்பிள்ளை, அக்கரைப் பச்சை என சாவித்ரி நடித்தவை நன்றாக ஓடின.

மீண்டும் சாவித்ரிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அம்மா வேடங்களில் அவர் உச்சம் தொடலாம், இழந்ததை  ஓரளவு மீட்டு விடலாம் என்கிற நிலைமை.

ஆனால் சாவித்ரி தன் வெற்றிகளைத்  தக்க வைத்துக்கொள்ளவில்லை. நடிப்பை விட மதுவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார். எத்தனை குடித்தாலும் ஜெமினியை மறக்க முடியாமல் தவிப்பு கூடியது. இருதயத்தின் வெற்றிடம் அதிகரித்தது. மனத்துக்கு அரிதாரம் தேடி மாய்ந்து போனார்.

பட்டாம்பூச்சி படம் மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்ற கமலுக்கு  காதல் இளவரசன் பட்டம் கிடைத்தது. கமல் ப்ளே பாயாக கோலிவுட்டில் புகழ் பெற்ற நேரம்.

சாவித்ரி தொடர்ந்து குடித்து விட்டு வந்தாலும் பரவாயில்லை என்று,  முக்தா சீனிவாசன் மேஜரையும் சாவித்ரியையும்  நாயகன் - நாயகியாக நடிக்க வைத்துத் துணிச்சலாக உருவாக்கிய படம் அந்தரங்கம். கமலும் தீபாவும் அதில் கவர்ச்சி காட்டும் இளஞ் ஜோடிகள்.

கமல் முதன் முதலாக ‘ஞாயிறு ஒளி மழையில்’ என சொந்தக் குரலில் பாடிய படம். தீபா அதில் செக்ஸ் பாம் ஆக அறிமுகம் ஆனார். ஐம்பது நாள்களுக்கு மேல் ஓடியது. எமர்ஜென்சி காலத்தில்  1975ல் அதுவே அதிகம்.

மேஜருடன் நிழலாக இணை சேர்ந்த பின்னும் ஜெமினி கணேசனை  ‘இதயத்தில் நீ! ’ என்று  நெஞ்சுக்குள் நினைத்து உருகிக் கொண்டிருந்தார் சாவித்ரி. அதை நிருபித்தது சேலத்தில் நடைபெற்ற ‘அந்தரங்கம்’ சினிமா ஷூட்டிங்- லன்ச் பிரேக் நிகழ்வு.

சாவித்ரி கமலுக்கு நிஜமாகவே சோறு ஊட்டி விட்டார். நடிகையர் திலகத்தின் கண்கள் கலங்கின.

kamal_savi.jpg 

‘அப்பா மாதிரியே ஆயிடாதேடா. இப்ப ஒன்... டூ... த்ரி சொன்னா அப்பா வர மாட்டாருடா. ’ என்றார் சாவித்ரி.

களத்தூர் கண்ணம்மாவில் நான் உணவருந்தும் போது ஒன்... டூ... த்ரி... சொல்லுவேன். அப்போது கண்ணம்மாவுக்கு காதலன் ஞாபகம் வரும். படத்தில் ஜெமினி மாமா உருவம் தோன்றி மறையும். சாவித்ரி அம்மா அந்த ஒரு நிமிடம் கண்ணம்மாவாகி விட்டார்கள்.

என்னை கதி கலங்க வைத்த சம்பவம் அது!  -  ‘உறங்கும் உண்மைகள்’  முதல் அத்தியாயத்தில் கமல். (பொம்மை - ஜனவரி 1977)

சுழி!

ஏறக்குறைய  சாவித்ரியின் தனிமை வாழ்க்கையைப் பிரதி எடுத்தாற் போல் அமைந்த மலையாளச் சித்திரம் சுழி. பூனா திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்பு.

கணவரால் குடிக்கு அடிமையாகும் எஸ்டேட் அதிபர் எலிசெபத் வேடத்தில் சாவித்ரி. அவரது ஒரே பெண் ரோசி - சுஜாதா. அவள் ஒரு தொடர்கதை கவிதாவாக- சுஜாதா தமிழர்களுக்கு அறிமுகமாகாத காலம்.

மதுப்பழக்கத்தால் விதவைத் தாய் இளம் எஸ்டேட் மானேஜரிடம் தன்னை இழந்து மூன்று மாதம் முழுகாமல் இருக்கிறாள். அம்மாவின் சிநேகிதரான குடிகார மேனஜரைத் திருத்த மகளும் அவனிடம் கற்பைத் தொலைக்கிறாள். அம்மா சாவித்ரி தற்கொலை செய்து கொள்ள, மகள் சுஜாதா கடைசியில் கன்னியாஸ்திரி ஆகிறார்.

சுழியில் சாவித்ரி பங்கேற்ற ஆபாசமான படுக்கையறை, மற்றும் நீச்சல் குளக் காட்சிகள் சென்சார் போர்டை நெளிய வைத்தன. நடிகையர் திலகத்தின் முதல்  ஏ சினிமா,  தடை செய்யப்பட்ட முதல் தென் இந்தியப்படம் என்கிறப் புகழ் சுழிக்குக் கிடைத்தது.

‘நான் நடித்த ஒரே மலையாளப் படம் சுழி. அந்த கேரக்டர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. படம் வெளி வந்த போது சில ஷாட்டுகள் எனக்குப் பிடிக்காமலும் இருந்தன. அவற்றில் இருப்பது நானா என்று கூடச் சந்தேகமாக இருந்தது. ’-சாவித்ரி.

சாவித்ரி என்றால் சகலருக்கும் இளக்காரமாகி விட்ட சூழல். பட்டத்து யானை சோம பானச் சாக்கடையில் விழுந்து விட்டதே என்கிற அவமரியாதை!  சுழிக்குப் பிறகு அத்தகைய சூழ்ச்சிகள் அதிகமானது.

‘முதல்ல மஞ்சள் காமாலை வந்து இளைத்தேன். அடுத்து ஃப்ளூ ஜூரத்தால முன்னை விடத் துரும்பா போய் இருக்கேன். இளைச்சிப் போனாலும் சாவித்ரிக்கு என்னமோ வியாதின்னு ஒரு வதந்தியைப் பரப்பறாங்க. இந்த மாதிரி வம்பு கிளம்புற இடம் எது தெரியுமா ?

மாம்பலம் பாண்டிபஜார்தான். ரொம்ப மோசமான இடம்! ’

ஒரே நேரத்துல ஜூபிடரோட கற்புக்கரசி, தங்கப்பதுமை, அரசிளங்குமரி ஷூட்டிங் நெப்டியூன் ஸ்டுடியோல நடந்துருக்கு. எங்க செட்ல லைட்டிங் நடக்குது. ஆர்ட்டிஸ்டுக்கு வேலை இல்லன்னா பக்கத்து ஃப்ளோர் போவோம். அங்கே பப்பி- சிவாஜி அண்ணன் நடிச்சிட்டு இருப்பாங்க. அவங்க நடிக்கிறதை பார்த்துட்டு இருப்போம். ரொம்ப அற்புதமா இருக்கும்.

இப்ப அந்த மாதிரி பக்கத்துல நடக்கிற படப்பிடிப்புக்கு போனா, சாவித்ரி சான்ஸ் கேட்டு வந்து நிக்கிறான்னு நினைக்கிறாங்க.

ஒரு நாள் திடீர்னு  தயாரிப்பாளர் ஒருத்தர், ஸ்டன்ட் படம் ஒண்ணு எடுக்கப் போறேன்... நடிக்கிறீங்களா...? ன்னு கேட்டார். நானே முன் கோபக்காரி. எனக்குக் கோபம் வரக் கேட்கவா வேணும்!

‘என்னைப் பார்த்து இந்தக் கேள்வியை கேக்கறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? இந்த மாதிரி ரோலுக்கு விஜயலலிதா, ஜோதிலட்சுமி இருக்காங்களே... போட்டுக்குங்க என்று சொல்லி, ஒரு கப் காபி கொடுத்து அனுப்பி வைத்தேன். ’ சாவித்ரி.

பிரிவுக்குப் பின்னர் ஜெமினியைப் பற்றி சாவித்ரி, தன்னிடம் ஏதும் விசாரித்தது கிடையாது என்று ஆரூர் தாஸ் எழுதியிருக்கிறார்.

ஆனால் ஜெமினியால் வாழ்வு பெற்ற மேக் அப் மேன் சுந்தர மூர்த்தியின் கூற்று வேறு விதமாக உள்ளது.

‘சாவித்ரி எப்ப என்னைப் பார்த்தாலும் அய்யா எப்படி இருக்காரு...? ’ன்னு விசாரிப்பாங்க.  எனக் கூறியுள்ளார்.

திருமாலின்  பரி பூரண அருளாலேயே தனக்கொரு ஆண் வாரிசு அமைந்தது என்பது ஜெமினி -சாவித்ரியின் திடமான முடிவு. மகன் சதீஷ்  பிறந்த வைபவத்தைக் கொண்டாடும் விதமாக திருப்பதி ஏழுமலையானுக்கு கல்யாணம் செய்து கண் குளிர கண்டார்கள் காதல் மன்னனும் நடிகையர் திலகமும்.

தனது நேர்த்திக் கடனாக முப்பது பவுனில் பெருமாளுக்கு காசு மாலை செய்தார். அது எப்போதும் பாலாஜியின் தெய்வீக ஸ்பரிசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மூவாயிரம் ரூபாயை கோயில்  கட்டணமாக வழங்கினார் சாவித்ரி.  (ஆனந்த விகடன் 6.2.1966)

நடிப்போடு ஆத்ம சுத்தியுடன் பகவத் சேவையில் ஈடுபட்ட சாவித்ரியை விடாமல் சஞ்சலங்கள் துரத்தின. முக்தா பிலிம்ஸ் ‘அந்தரங்கம்’   வெற்றி பெற்றும் அடுத்த வாய்ப்பு வருடக் கணக்கில் வரவில்லை. காரணம் பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனம் அமுலில் இருந்தது. சென்சார் போர்டு கெடுபிடிகளை அதிகப்படுத்தியது.

இளையராஜாவின் இசையில் வெளியான அன்னக்கிளி, பத்ரகாளி தவிர, எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களும் எதிர்பார்த்த வசூலை பெற முடியாமல் போனது.

அரசியலை மட்டுமல்லாமல் சினிமாவையும் சீரழித்த கருப்பு ஆண்டு 1976.  அதன்  இறுதி மாதங்களில் சாவித்ரி  மேடையில் நடித்து வயிறு வளர்க்க வேண்டிய கொடிய வறுமையில் அவதியுற்றார்.

‘மனைவி அமைவதெல்லாம்’ பிரபல கதாசிரியர்  ‘தேவர் பிலிம்ஸ் மாரா’ எழுதிய நாடகம். சாவித்ரியுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் ஜெமினி மகாலிங்கம் (ஜெமினி கணேசனின் அந்தரங்கக் காரியதரிசி) ஜெமினி ராஜேஸ்வரி (நிறம் மாறாத பூக்கள் படத்தில் ‘சுதாகரு... சுதாகரு’ என ஹீரோவைத் துரத்தும் நடிகை) ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

‘வட்டத்துக்குள் சதுரம்’ மகரிஷியின் கதை. லதாவும் சுமித்ராவும் தோழிகளாக நடிக்க, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய படம். சாவித்ரி கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட எஸ்.பி.எம்.  ஒரு துணை நடிகையின் வேடத்தை சாவித்ரிக்குத் தர  முடிவு செய்தார்.

‘நாலு நாள் வேலை. எஸ்.பி. எம். நீங்க நடிக்கணும்னு விரும்பறார்’ என தயாரிப்பாளர் சாவித்ரியிடம் சொன்னார். ஷூட்டிங்கு வந்த உடனேயே அவருக்கு செக் கொடுத்தார்கள். சாவித்ரி அதை வாங்க மறுத்து பணமாகக் கேட்டார்.

அதைப் பெற்றுக் கொண்டவர் உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.

‘இந்தப் பணத்தை இப்ப நான் வாங்கலைன்னா நாளைக்கு என்னை நான் குடியிருக்கிற வீட்டை விட்டுத் துரத்தி இருப்பாங்க. சாமான்லாம் தூக்கி போட்டு இருப்பாங்க’ என்று தேம்பினார்.

http://www.dinamani.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சாவித்ரி - 22.என் உயிர்த் தோழி...!

 

‘ஆறாத காயா’ கன்னட மொழிச் சித்திரம் சாவித்ரி பங்கேற்ற கடைசி சினிமா. காக்கி நாடாவில் தொடங்கிய   கலைப் பயணம் கர்நாடகாவின் மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவில் பூர்த்தி ஆனது. சவுகார் ஜானகி   ஹீரோ சங்கர்நாக் உடன் நடித்தனர்.

சென்னை சின்மயா வித்யாலயாவில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிந்ததும், விடுமுறையில் அம்மாவுடன் அவுட்டோர் ஷூட்டிங்குக்குப் போய் இருந்தார் சாவித்ரியின் மகன் சதீஷ்.

மது ருசியின்  உச்சக்கட்டத் தேடல்கள். விஸ்கியும் ரம்மும் ஜின்னும் தராத போதை பட்டை சாராயத்தினால் கிடைக்கிறது என்கிற விபரீத கோட்பாடு. காலையில் ஆறு மணிக்கெல்லாம் பல் விளக்காமல்  குடிக்கத் துவங்கும் அளவு, போதையிலேயே வாழத் துடித்ததன் விளைவு...?

1980 மே 11. பெங்களூர் சாணக்யா ஹோட்டல் அறை. சாவித்ரிக்கு கண்கள் சொருகிய நிலையில் பிரக்ஞை அற்றுப் போனது.

‘ஒரு வாரமா ராப் பகலா ஷூட்டிங் இருந்ததால, அம்மா இன்ஸூலின்  போட்டுக்காம விட்டுட்டாங்க.  பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட  இஞ்ஜெக்ஷன்  போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம்  போக எழுந்தப்ப அம்மா வாயில நுரையோட,  நினைவிழந்து படுத்திருந்தாங்க.  இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை  அம்மாவுக்கு ‘கோமா’ வந்து, உடனே கவனிச்சதுல  சரியாயிருக்கு. இந்த முறை ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க.’ -  சதீஷ். 

hqdefault.jpg 

நிர்வாகம் சரோஜாதேவிக்கு  தகவல் தெரிவித்தது. சரோ அதிர்ச்சியின் துரத்தலில் ஓடோடி வந்தவர் உடனடியாக சாவித்ரியை பிரௌனிங் ஹாஸ்பிடலில் சேர்த்தார். ஜெமினி இந்தியாவிலேயே இல்லை. மலேஷியா சென்றவர் சீக்கிரத்தில் பெங்களூரூ திரும்பினார். மே 25. சாவித்ரி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.

நுங்கம்பாக்கம் வெலிங்டன் மருத்துவமனை சாவித்ரியை அரவணைத்தது.

சாவித்ரியின் வாழ்க்கையை பிராப்தத்துக்கு முன் பிராப்தத்துக்குப் பின் என காலம் கிழித்துப் போட்டு விட்டது. சினிமா தயாரிப்பில் ஈடுபடும் வரையில் சாவித்ரியின் உல்லாச உலகம் இதோ:

‘லலிதா, பத்மினி, ராகினி அப்போது திரை உலகில் ஒன்றாக மின்னிய சகோதரிகள்.  நான் அவர்களுடைய குடும்பத்தில் ஒருத்தியைப் போலப் பழகினேன். நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பிக்னிக் போவோம். பொழுது போக்காக பெங்களூரு போய் விட்டு வருவோம்.

லலிதா தான் எல்லாருக்கும் லீடர். அவர் சொன்னவாறே நாங்கள் அனைவரும் கேட்போம்.  ராகினிக்குக் குறும்பு அதிகம். ஏதாவது சொல்லி வேடிக்கையாக விளையாட்டுகள் செய்வார்.

பத்மினியும் நானும் ஸ்டுடியோவுக்கு வெளியிலும் நெருங்கிய தோழிகளாகப் பழகினோம்.  எங்களை இணைத்து வைத்த  ஒரு முக்கிய பொழுது போக்கு கிரிக்கெட்! நிதி உதவிக்காக அப்போதெல்லாம் வட இந்திய நட்சத்திரங்கள் சென்னைக்கு வந்து கிரிக்கெட் ஆடுவார்கள்.

நார்த்தில் திலீப் குமாரும், சவுத்தில் ஜெமினி கணேசனும் உண்மையாகவே நன்றாக ஆடுவார்கள்.  நாங்கள் கிளாமருக்காக ஆடியவர்கள்.

லலிதா, பத்மினி, ராகினி, நான், எம்.என். ராஜம் ஆகிய ஐந்து பேரும் எல்லா இடங்களுக்கும் ஒன்றாகவே சேர்ந்து போவது வழக்கம். டெலிபோனில் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக்  கொண்டு, என்ன மாதிரி புடைவை அணிந்து கொள்வது என்று தீர்மானம் செய்து கொண்டு, ஒரே அமைப்புடன் போவோம்.

சில சமயம் நகைகள் கூட ஒரே மாதிரி இருக்கும். அப்படி ஒருவரிடம் இல்லையானால், மற்றவர் கொடுத்துக் கொள்வதும் உண்டு. உடனே கடைக்குப் போய் வாங்கி அணிந்து கொள்வதும் உண்டு.

‘என்ன ? ஐந்து பேரும் சகோதரிகளைப் போல் இருக்கிறீர்களே...?’ என்று எங்களிடம் வந்து கேட்பார்கள்.  அவ்வாறு கேட்பவர்களுக்கு

‘ஆமாம்’ என்று பதில் சொல்லுவதில் எங்களுக்கும் ஒரே குஷி!’ 

சாவித்ரியின் சொற்களுக்கு சத்திய சாட்சியாக இன்றும் விளங்குகிறார் லிவிங் லெஜன்ட் எம். என். ராஜம்.  அத்தகைய கலகலப்பும் கொண்டாட்டமும் எதுவரையில் நீடித்தது...?

‘ஜெமினி - சாவித்ரியை நான் முதன் முதலில் சந்தித்தது சேலம் மாட்ர்ன் தியேட்டர்ஸில். ரத்தக் கண்ணீருக்குப் பின் மகேஸ்வரி ஷூட்டிங்கில் அவர்களோடு நடிக்கத் தொடங்கினேன். அதில் ஜெமினியின் இரண்டாவது மனைவி வேடம் எனக்கு.

எங்களை விடப் புகழிலும் செல்வாக்கிலும் பெரிய நடிகைகளாக அஞ்சலி, பானுமதி, கண்ணாம்பா ஆகியோர் இருந்தார்கள். சாவித்ரிக்கும் எனக்கும் ஒரே வயசு. நாங்க அப் கமிங் ஆர்ட்டிஸ்ட்டா சேர்ந்து பழக நிறைய சந்தர்ப்பம் கிடைச்சது.

தினந்தோறும் எங்களுக்கு ஷூட்டிங் இருக்கும். வாகினி, மெஜஸ்டிக் ஸ்டுடியோக்களில் தினமும் சந்தித்துக் கொள்வோம். சாவித்ரிக்கு உலகம் தெரியாது. சிறந்த நடிகை என்று பேர் வாங்கினாளே தவிர கள்ளங்கபடம்மில்லாமல் என் சகோதரியாகப் பழகினார்.

சாவித்ரி  முதல் நாள் இரவே என் அம்மாவிடம் ஃபோன் பேசி விடுவாள். ‘அம்மா, நானும் உங்க மாப்பிள்ளையும் சாப்பிட வரப்போறோம். எங்களுக்கு இன்ன இன்ன அயிட்டங்கள் சமைச்சு வைங்கன்னு’ சொல்லிடுவா.

நான் ஷூட்டிங் முடிஞ்சி வீட்டுக்குத் திரும்பறப்ப ஏதோ அவ ரெசிடென்ஸ்குள்ள நான் நுழையற மாதிரி வா ராஜம்னு வாயார வரவேற்பா. அப்படியொரு அன்யோன்யம்!

அப்ப தினசரி ஷூட்டிங் இருக்கும். ஓய்வே கிடையாது. அஞ்சலிதேவி நடிகர் சங்கத் தலைவியா வந்தாங்க. அவங்க கிட்டே போய் முறையிட்டோம் எங்களுக்கும் லீவு வேணும்னு. இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையா அறிவிச்சது அஞ்சலி அம்மாதான்.

savi.jpg 

ஒவ்வொரு செகன்ட் சன்டேவும் நாங்க ஒண்ணாவே ஊர் சுத்தப் போயிடுவோம். நாங்கன்னா நான், சாவித்ரி, பத்மினி, லலிதா, ராகினி, ராஜசுலோசனா - எங்களோட ஜெமினிகணேசனும் அவசியம் வருவாரு. சனிக்கிழமை ராத்திரியே  நீ இந்த அயிட்டம் சமைச்சு கொண்டா  நான் இதை எடுத்துட்டு வரேன். பப்பி இதைக் கொண்டு வரான்னு  பேசி வெச்சிக்கிட்டுப் படுப்போம்.

முதல்ல ராமாபுரத்துல எம்.ஜி.ஆர். தோட்டத்துக்குப் பக்கத்துல இருந்த பத்மினி கார்டனுக்குப் போவோம். அங்கே சீட்டு, கேரம், ஷட்டில் காக், இதெல்லாம் விளையாடுவோம். மதியம் எல்லா வீட்டுச் சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிப்போம்.  சாப்பிட்டுட்டு ஏதாவது ஒரு சினிமாவுக்குக் கிளம்புவோம். ஒரு சமயம் மினர்வா தியேட்டரில் ‘பவானி ஜங்ஷன்’ இந்திப் படம் பார்க்க மேட்னி ஷோ போயிட்டோம். இண்டர்வெல்ல எங்களைப் பார்த்துட்டு பெரிய கூட்டம் கூடிடுச்சி. போலீஸ் வந்து ரசிகர்கள் கிட்டயிருந்து எங்களைக் காப்பாத்தினாங்க.

‘இனிமேல் உங்கள மாதிரி பெமிலியர் ஆர்ட்டிஸ்ட்டுங்க, சினிமா பார்க்க வெளியில வந்தா எங்களுக்குத் தெரிவிச்சிட்டு வரணும்’ னு ஜெமினி கிட்ட போலீஸ்  கண்டிச்சி சொல்லிட்டாங்க.

ஃபிலிம் பார்த்துட்டு சாயங்காலம் பீச்சுக்குப் போவோம். அப்பலாம் மெரீனால இந்த அளவு கூட்டம் கிடையாது. ஜெமினி தன் டிரைவரை அனுப்பி எங்கெங்க என்னென்ன ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி வரச் சொல்வார். அத்தனையும் தின்னு  முடிச்சுட்டு ராத்திரி வீட்டுக்குப் போவோம்.இந்த மாதிரி வருஷக் கணக்கில் நடந்தது. இப்படியெல்லாம் சாவித்ரியோட சந்தோஷமா காலம் போனது. அவ பிராப்தம் எடுக்க ஆரம்பிச்ச சூழல்ல ஏனோ என்னையெல்லாம் விட்டு விலகிட்டா. ஃபோன் பண்ணாக் கூட எடுக்க ஆளிருக்காது. யாராவது எடுத்தாலும் அம்மா வீட்டில இல்லன்னு டக்குனு வெச்சிடுவாங்க. ஏதாவது பார்டியில் பார்த்தாலும் பேச மாட்டா. அவாயிட் பண்ணிடுவா.

‘என்ன சாவித்ரி ஏன் பேச மாட்டேங்கிற?’ன்னு கேட்டா  ‘ஒண்ணுமில்ல, அவசரமா  போறேன்’னு தள்ளிப் போயிடுவா. அவளுக்குக் கஷ்டம் வந்ததுன்னு தெரிஞ்ச நேரத்துல  நாங்க யாரும் கிட்ட இல்லாம போயிட்டோம். என்னதான் நெருங்கிப் பழகினாலும் சிலதைக் கேட்க முடியாது. அப்படியும் ஒரு முறை விஜயா நர்சிங்ஹோமில் அட்மிட் ஆயிருக்கான்னு கேள்விப்பட்டேன்.  உடனே சாவித்ரியைப் பார்க்கப் போனேன். அவளோட டாட்டர் விஜி மட்டும் உடன் இருந்தா. நிராதரவா இருந்தது சாவித்ரியோட நிலைமை. கிடைச்ச சான்ஸை வீணாக்காம நான் அவ கிட்ட மனசு விட்டுப் பேசினேன்.

mqdefault.jpg 

‘ஏன் சாவித்ரி இப்படி ஆயிட்டே?  நமக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கலாம். ஆனா குழந்தை குட்டின்னு ஆனவுடனே  அவங்களுக்காக அதையெல்லாம் தியாகம் செஞ்சிடனும்னு’, சொல்லும் போதே அழுதுட்டேன்.  அதைப் பார்த்து விஜியும்  அழ ஆரம்பிச்சா. ஆனா சாவித்ரி என்ன பண்ணா தன் வாட்சைப் பார்த்துட்டு என் முகத்தைப் பார்த்தா. அது என் மனசுக்குக் கஷ்டமாயிடுச்சி.  அப்புறம் நான் அங்கே நிக்கல. வந்துட்டேன். அதுக்குப் பிறகு அவளுக்கு ரொம்பவும் முடியாம வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாங்க. நான் போனேன். ஜெமினி கதறினார்.

‘சாவித்ரி, ராஜம்  வந்திருக்கா பாரு சாவித்ரி. கண்ணைத் திறந்து பாரு சாவித்ரி'ன்னார். நானும் அழுது ‘என்னைக் கண் திறந்து பார் சாவித்ரின்னேன். அசைவே இல்லாத கோமாவுக்குப் போயிட்டா. அவளை நான் கடைசியா பார்த்து பேசினப்ப ரொம்பவும் மெலிஞ்சு போயிருந்தா.  என்னைக் கட்டிப் பிடிச்சி அழுதா. ‘ராஜம்  எனக்கு பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. உங்கையால  செஞ்சு போடறியான்னு’ அழுது கிட்டே கேட்டா.

‘நீ ஒரு ஃபோன் பண்ணிட்டு வீட்டுக்கு வா சாவித்ரி. அவசியம் பிரியாணி செஞ்சி வைக்கிறேன்னேன்.’ எத்தனையோ முறை பிரியாணி செஞ்சேன். சாவித்ரி கிட்டேயிருந்து ஃபோனும் வரல. சாவித்ரியும் வரல.’ - எம்.என். ராஜம்.

சாவித்ரி கோமாவில் மயங்கிய  அண்ணா நகர் வீடு அளவில் மிகச் சிறியது.  கிழிந்த அழுக்கு சோபாக்கள். காற்றில் ஆடும் பழைய  திரைச்சீலைகளுடன்  நடிகையர் திலகத்தின் அன்றைய தேய்மானம் போலவே தோன்றியது.

தென்னகத்தின் ஒப்பற்ற நட்சத்திரக் குடியிருப்பு என்று  கோயிலில் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் தங்களின் சொந்த கூடாரமாக  கூடி குலைத்தன.

அண்ணா நகர் வீட்டில் அக்கறையுடன் சாவித்ரியைப் பாதுகாத்தார் ஜெமினி கணேசன். உடனிருந்து கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவரையும் வேலைக்கு அமர்த்தினார்.

‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என கண்ணதாசனால் பாடல் பெற்றப் பாசமலர் சருகாகி உலர்ந்து கிடந்தது. அந்த அவலத்தை என் வார்த்தைகளால் சொல்ல மாட்டேன். நேரில் கண்ட சிவசங்கரியை துணைக்கு அழைக்கிறேன்.

‘படுக்கையில் எலும்புச் சுருளாக அவர். ரொம்ப சூம்பிப் போன கை, கால்கள்... கறுத்துப் போன தோல்... மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி. மூடின கண்கள்;  மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய், மழமழவென்று வாரி இரட்டைப் பின்னலாகப் பின்னி, மடித்துக் கட்டப்பட்ட முடி, சிவப்புப் பொட்டு.

‘அம்மகாரு ச்சூடு... அம்மகாரு இக்கட ச்சூடு! மீ ப்ரெண்ட் ஒச்சுண்டாரு... ச்சூடும்மா என்று நர்ஸூம்  பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்ரி மெதுவாகக் கண்களைத் திறக்கிறார். உள்ளுக்குள்  என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும் அப்படியும் சுழற்றுகிறார்; மஞ்சள் ஏறிப் போன பற்களை ‘நக் நக்’ கென்று கடிக்கிறார்; அரை நிமிஷம் என்னை உற்றுப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி அமைதியாகிறார்.

ஹோ... சாவித்ரியா! இவரா!

கவனத்தை அறையின் மற்ற விவரங்களில் செலுத்துகிறேன். ஒரு பக்கமாக ஸ்ட்ரெலைஸ் செய்யும் பாத்திரம். ஒரு மேஜையில் காம்ப்ளான், ப்ரொடீனெக்ஸ், டானிக், மருந்துகள்... உடம்புப் புண்களைத் தவிர்க்க ’ஆல்ஃபாபெட்’ என்ற படுக்கையை உபயோகிக்கிறார்கள். இது குமிழ் குழிழான ரப்பராலான படுக்கை. மின்சாரத்தில் இயங்கி,  சிறு அலைகளை உண்டாக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உண்டாக்கி, நோயாளியின் உடம்பை ரணத்திலிருந்து காக்கிறது.

‘இந்தப் படுக்கை இல்லேன்னா அம்மகாரு நிலைமை மோசமா ஆகி இருக்கும்...’நாலு பேராய், பத்துப் பேராய் சாவித்ரி அபிமானிகள் யார் யாரோ வந்து, ஜன்னல் வழியாக சாவித்ரியைப் பார்த்து விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைப் பேரின் அன்புக்கும் பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் இருக்க வேண்டும். தனித்துத் தவிக்கும் பிள்ளைக்காகவாவது சாவித்ரி மயக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும்.’ (29.11.1981 ஆனந்தவிகடன்)

------------------

தங்கக் கொலுசு கால்களில் தவழத் தவழ கற்பகம் படத்தில் ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்’ பாடலில் சிருங்காரமாக நடித்தவர் சாவித்ரி.

1981 நவம்பரில்  தமிழ் சினிமாவின்  பொன் விழா!

வைத்திய உதவிகளுக்கும் வழியின்றி போன அவரது பரிதாப நிலையை கருத்தில் கொண்டு  பத்தாயிரம் ரூபாயை பொன் விழா கமிட்டி வழங்கியது. சாவித்ரி விஷயத்திலும் புரட்சித்தலைவர் தனது வள்ளல் தன்மையை நிருபித்தார். சாவித்ரிக்கான சிகிச்சை செலவுகள் முழுவதையும் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார் என நாட்டியப் பேரொளி பத்மினி கூறியுள்ளார்.

1981. கொடிய கோடையின் உக்கிரம் தீராத சித்திரை ஞாயிறு. வெப்பம் தீண்டாத காலையில்  ரிலாக்ஸாக குமுதம் வார இதழைப் புரட்டினர்  வாசகர்கள்.  62 ஆம் பக்கத்தில் கண் பதித்த இளைஞர்கள் கூக்குரலிட்டார்கள்.  

‘அம்மா...  கொஞ்சம் சீக்கிரம் வாயேன். காபியெல்லாம் அப்புறம் போடலாம். இங்க பார்... உன் ஃபேவரைட் ஆர்ட்டிஸ்ட்  சாவித்ரி பத்தி பிரார்த்தனை கிளப்லே உருக்கமா எழுதியிருக்கு.’

‘எங்கே காட்டு. புஸ்தகத்தை எங்கிட்ட கொடு. பாட்டியும் பார்க்கட்டும்.’ ஒட்டு மொத்த வீடும் தங்கள் வீட்டுத் துக்கமாக 62 ஆம் பக்கத்தில் ஆழ்ந்தன.

savithri_legend.jpg 

அதில் ஜெமினி - சாவித்ரி இரு கரம் கூப்பி வணங்கும் கருப்பு வெள்ளை படத்தோடு, ‘குமுதம் பிரார்த்தனை கிளப்’ அங்கத்தினர்களுக்கு ஜெமினி கணேசனின் வேண்டுகோளும் பிரசுரமாகி இருந்தது.

‘நடிகையர் திலகம் சாவித்ரியின் நிலை பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சூழ்நிலை காரணமாகவோ, விதி வசத்தாலோ  ஒரு வருடமாகியும்  இன்னும் நினைவு திரும்பாமல் பரிதாபகரமான கோமா என்ற உணர்வற்ற நிலையில் இருக்கிறாள்.

என்னால் இயன்ற வரையில் நானும் என் உதவியாளர்களும், மருத்துவர்களும், சில உறவினர்களும் சகல விதமான சிகிச்சைகளையும் செய்து பார்த்தாகி விட்டது. ஆயினும் பலனில்லை. எனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளையெல்லாம் நான் மறந்து விட்டேன். நாங்கள் முடி சூடா ராஜா ராணிகளாக இருந்த நல்ல நாள்களை நினைத்துதான், நான் இன்னும் என் மனச் சாட்சியால் உந்தப்பட்டு ஆவன செய்து கொண்டு இருக்கிறேன். ரசிகப் பெருமக்களுக்கும், சினிமா தொழிலில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேர்களுக்கும் சாவித்ரி பால் அன்பும், பாசமும், இணையற்ற அவள் நடிப்பில் மோகமும் உண்டென்பது உலகறிந்ததே. சாவித்ரியின் தற்போதைய நிலைமையும், நோயும் நீங்கி அவள் நிம்மதி அடைய, நல் உள்ளம் படைத்த நல்ல மனிதர்களை, நமக்கு அப்பாற்பட்ட  சக்தியிடம் வேண்டிக் கொள்ளும் படி, என் அருமை சகோதர சகோதரிகளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நாங்கள் யாரிடமும் பண உதவியோ, பொருள் உதவியோ கனவிலும்  எதிர் பார்த்ததில்லை. யாரும் தப்பர்த்தம் செய்து தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உண்மையான நண்பர்களும் வழிகாட்டிகளும் தான் தேவை.’ - ஜெமினி கணேசன்.

‘ரொம்பப்  பாவம் சாவித்ரி! காலையில ஏண்டா இதை படிச்சோம்னு இருக்கு. ஜெமினி கணேசனும் நல்ல மனுஷன் போலத்தான் தெரியுது. பொண்டாட்டியை கொலை செஞ்சு அவ சொத்தைக் கொள்ளையடிக்கிற புருஷனுங்களுக்கு நடுவுல, எல்லாத்தையும் இழந்து நிக்கிற சாவித்ரிக்காக, ஜெமினி கஷ்டப்படறது கடவுளுக்கே அடுக்காது.’

‘இனிமேலாவது சாவித்ரி கண் விழிச்சி ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழ்ந்தா எத்தனை நல்லாயிருக்கும்...!’

‘திருவிளையாடல்ல, சாவித்ரி பார்வதியா வந்து என்ன அற்புதமா சிவ பூஜை செய்வா. அந்த அம்பாள் தான் அவளைக் காப்பாத்தணும்.’

ஒரே த்வனியில் ஒவ்வொரு இல்லறத்திலும் ஒலித்த குரலில் தினுசு தினுசாக ஆதங்கம். தங்கள் அபிமான நடிகைக்கு விரைவில் குணமாகி விடாதா என்கிற நப்பாசையில் விளைந்த ஆற்றாமை.

மொழி. மதம், இனம், சாதி வித்தியாசங்களைக் கடந்து சாவித்ரி அன்றைய தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி ஆகி இருந்தார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சாவித்ரி - 23. நித்திரை!

 

1981. புனிதமான கிறிஸ்துமஸ் இரவு. தேவனின் வருகையைக் கொண்டாடிய மகிழ்ச்சியில் உலகம் அசந்து விழி மூடிய நேரம். 1954ன் 'ஜெய’ கார்த்திகையின் அர்த்த ராத்திரிப் பொழுதில் ஜெமினியிடம் அடைக்கலம் புகுந்தவர் சாவித்ரி. துன்மதி ஆண்டின் மார்கழியில் அண்ணாநகர் குடிலில் அநாதையாக நிராதரவான நிலையில்  உறக்கம் கலையாமலே விடை பெற்றுக் கொண்டார்.

ஜெமினி நினைத்திருந்தால் அங்கேயே  மயானத்தில் சாவித்ரியுடைய ஈமக்கடன்களுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம்.

ganesan_savi.jpg 

கர்த்தர் மட்டுமா பாவங்களைப் பொறுத்துக் கொள்கிறார். நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள தேவாலயத்தின் பின் புறத்தில் வசித்ததாலோ என்னவோ, கணேசனும் சாவித்ரியின்  தவறான நடவடிக்கைகளை  மன்னிப்பதில் அவர் ஒரு மகாத்மா என்றே நிருபித்தார்.

அதிகாலைக்குள் சாவித்ரியின் புகழ் உடல் ஜெமினியின் வீட்டை வந்து சேர்ந்தது. காதல் ஜோடியைத் தொலைத்துத் துடிதுடிக்கும் தலைவனைச் சுற்றி அவரது நேற்றுப்பூ புஷ்பவல்லி, இல்லத்தரசி பாப்ஜி ஆகியோரும் கதறி அழுதார்கள்.

சாவித்ரிக்கு அஞ்சலி செலுத்தத் தென்னகத் திரையுலகம் திரண்டு நின்றது.கணேசனின்  சொந்த இல்லத்தில் இருந்தே சாவித்ரியின் இறுதி யாத்திரை புறப்பட்டது. அதை நேரில் கண்ட  மனோரமா உள்ளம் நெகிழ்ந்து கூறியவை:

ஜெமினி கணேசன் மாதிரியான பிராமின் வீட்ல  அவ்ளோ சுலபமா அந்த மாதிரி இறந்தவர் உடலை உள்ளே கொண்டு வர முடியாது.

ஜெமினி ஸ்டுடியோ முதலாளி எஸ்.எஸ்.வாசன்  உடம்பையே அவரோட பங்களா வெளி வாசலில் பெஞ்சு மேல படுக்க வெச்சிருந்தாங்க.

சாவித்ரி அக்காவை வீட்டுக்கு உள்ளேயே மிக முக்கியமான கூடத்துல வெச்சிருந்தாங்க.

ஒரு மனைவிக்குத் தர வேண்டிய மரியாதையை உத்தரவாதத்தை ஜெமினி கொடுத்தார். அதை நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.’

பிராப்தத்துக்குப் பிறகு சாவித்ரியை நிர்கதியாக ஜெமினி தவிக்க விட்டு விட்டதாக கலைச் சமூகம் குற்றம் சாட்டியது. நடிகையர் திலகத்தின் வீழ்ச்சிகளுக்குக் காரணம் ஜெமினி எனப் பழி சுமத்தியது.

சாவித்ரி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து போனதைக் கண்டும் காணாமல் சுயநலமாக நடந்து கொண்டார் என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு ஏசினார்கள்.

பொல்லாதவர்கள் கூறும் பொய்களின் கனத்தை ஜெமினியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது அந்தரங்கத்தின் எல்லை தாண்டி அந்நியர்கள் அவதூறு பரப்பினர்.

கொடைக்கானல் ரெட்லின்ச் காதல் மாளிகை ஜெமினிக்கு சொந்தமான விலை மதிப்பற்ற சொத்து. ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை உள்ளிட்ட சினிமாக்களின் ஷூட்டிங் அங்கு நடைபெற்றுள்ளது. ஜெமினி தனது மகள்கள் கமலா- ரேவதி இருவரின் மேற்படிப்புக்காக மணிபால் போக நேர்ந்தது.

அப்போது ரெட்லின்ச் பங்களாவின் புதுமனை புகுவிழாவைவைச் சிறப்பாக முன்னின்று நடத்தித் தந்தவர் சாவித்ரி.

savi_2.jpg 

ரெட்லின்ச்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் பெரிய கட்டடம் அப்ஸர்வேட்டரி ரோட்டில் இருந்தது. அதன் பெயர் பினாபாணி. ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை ஜெமினி 55,000/- ரூபாய்க்கு  சாவித்ரி பெயரில் வாங்கினார்.

நிஜத்தில் நடந்தது என்ன என்று ஜெமினி கூறிய போது காலம் கடந்து விட்டது. நாம் புதிய நூற்றாண்டுக்கு வந்து விட்டோம்.  இருந்தாலும் அவரது வாக்குமூலம் மிக முக்கியமானது.

'என்னை  மனதார வாழ்த்தி, பினாபாணி வீட்டுச் சாவியைக் கொடுங்கள்.’ என  என் காலில் விழுந்து சாவித்ரி ஆசீர்வாதம் வாங்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதே சாவித்ரி அடுத்த ஆறேழு வருடங்களில் எனக்கு, வீட்டு வாசலைக் காட்டி வெளியேறச் சொன்னாள்.

அப்போது நான் துடிதுடித்துப் போனேன். நான் உயிருக்கும் மேலாகக் காதலித்து மணமும் புரிந்து கொண்டேன் சாவித்ரியை. எச்சரிக்கை உணர்வில் தொடர்ந்து படமெடுக்க வேண்டாமென்று நான் தடுத்தேன். தடையாக இருந்த என்னையே அவள் தூக்கி எறிய முற்பட்டாள். நல்ல வழியைச் சொல்லி எச்சரித்தேன். என்னை வீட்டை விட்டு வெளியே போகும் படி சாவித்ரி சொன்னாள்.

மொதல்ல சரஸ்வதி போயிடும். அப்புறம் லஷ்மி போயிடும். பின்னே சக்தி போயிடும். நீ ரொம்பக் கஷ்டப்படுவே’ என்று எச்சரித்து விட்டுத்தான் போனேன். நான் சொன்னது போல் ஒன்றன் பின் ஒன்றாக அவளை விட்டுப் போகத்தான் செய்தது.’

--------------

'சாவித்ரி 1981ல் சாகவில்லை. 1971ல் பிராப்தம் எடுத்த போதே செத்து விட்டாள். சிவாஜியின் தம்பி வி.சி.ஷண்முகம் கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கவே  சாவித்ரி அநேக இன்னல்களுக்கு ஆளானாள். ஷண்முகம் தான் சாவித்ரியை சாக அடிச்சது.’ என்றெல்லாம் ஜெமினி தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பொருமினார்.

savithri_gemini.jpg 

'பிராப்தம்’ - சிவாஜி கணேசனோடு அவள் சேர்ந்து நடித்து தயாரித்த படம். தோல்வியைக் கண்டது. மாளிகை மாதிரி இருந்த வீடு - நிலம்  எல்லாவற்றையும் இழந்தாள்.  உடல் நலம் கெட்டு நோய்வாய்ப்பட்டு படுக்கையிலும் விழுந்தாள்.  நடந்ததைப் பார்த்து நான் மனத்துக்குள் வேதனைப் படத்தான் முடிந்தது. ஏதும் செய்ய முடியவில்லை.

நினைத்ததைச் செய்ய தடை சொல்லும் போது தூக்கி எறிவதும் பிடிவாதம் பிடிப்பதும் குழந்தைத்தனம்.  ஆனால் வயதானவர்கள் அப்படி நடந்து கொண்டால்  அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.  சாவித்ரியின் நிலைமையும் அப்படித்தான் ஆனது.

சுற்றி இருப்போரின் பேச்சைக் கேட்டு  எடுப்பார் கைப் பிள்ளையாகச் செயல்பட்டாள்.  பிராப்தம் என்ற ஒரே படத்தில் தனக்கிருந்த வீடுகள் எல்லாவற்றையும் அடமானம் வைத்து இழந்தாள். ஹபிபுல்லா சாலையில் இருந்த மூன்று வீடுகளும் பறி போயின.  கொடைக்கானல் வீடு குழந்தைகள் பெயரில் இருந்தது. அதனால் அது மட்டும் தப்பித்தது.

பெண்கள் ஒருவருக்கொருவர் பாராட்டுவதே அதிசயம்!  மகளிரே நிர்வகித்த சங்கம் சாவித்ரிக்கு 'நடிகையர் திலகம்’ பட்டமளித்து கவுரவித்தது. ஆனால் கடைசி நாள்களில்  துணை இல்லாது, பண பலத்தை இழந்து படுக்கையில் விழுந்தது தான் மிச்சம்.

சாவித்ரியைப் பிரிந்து நான் துக்கப்பட்டேன். திரை உலகக் கலைஞர்கள் என்னைத் தேடி வந்து ஆறுதல் கூறியது நிஜம். ஆனாலும் பிரிவு தாங்காமல்  தூக்க மாத்திரை சாப்பிட்டேன். என்னைக் காப்பாற்ற ஓடி வந்தது டாக்டர் நண்பர்கள். ஆனால் சாவித்ரியை அந்த மருத்துவர்களால் கூடக் காப்பாற்ற முடியவில்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ் எனப் பல கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்த வந்தார்கள். சாவித்ரிக்குப் பிள்ளையாக சில படங்களில் நடித்த கமல் மட்டும் வரவே இல்லை.

சாவித்ரிக்குத் தாலி கட்டிய கையால் இறுதிச் சடங்கையும் செய்து அனுப்பி வைத்தேன். சாவித்ரி என்னை விட்டுப் பிரிய நினைத்தாலும் அவள் விட்டுப் போன கடமைகளை எல்லாம் நான் விட்டுக் கொடுக்காமல் செய்து முடித்தேன்.’ - ஜெமினி கணேசன். 

savithri_Gemini2.jpg 

திரையில் மனம் போல் மாங்கல்யம் கண்டு நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்தார்கள். பிராப்தம் அன்யோன்யமான அவர்களைப் பிரித்தது.

சினிமா  காமிராவின் தூரிகை நிழல்களில் ஜோதி மயமாக ஒளி வீசிய உன்னத காதல் ஜோடி. முதல் பதினைந்து ஆண்டுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து, அடுத்தப் பதினைந்து வருடங்களில் அதற்கான அன்பின் அடையாளங்களைத் தொலைத்தும் மறைந்ததே ஜெமினி-சாவித்ரியின்  நிஜ பிராப்தம்!

சாவித்ரி சவுபாக்யவதி. அவருக்கு விஜயவாடாவில் சிலை நிறுவி இருக்கிறார்கள். மறைந்த மகத்தான கலையரசிகளில்   தென் இந்தியாவிலேயே நடிகையர் திலகத்துக்கு மட்டுமே நினைவுச் சின்னம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திரையுலகில் வானமே எல்லையாக விஸ்வரூபம் எடுத்துச் சாதனைகளின் ஆகாயமாக விரிந்து பரந்த சாவித்ரி, வாழ்வின் மிச்சத்தில் அதல பாதாள சாராய சாக்கடைகளிலும் விழுந்து புரண்டார். துயரத்துக்கு வடிகால் தேட பெண்கள் அனைவரும் தாய் வீட்டைத் தஞ்சம் அடைவார்கள்.

சாவித்ரி நினைத்திருந்தால் பிராப்தம் தோல்விக்குப் பிறகு எஞ்சியுள்ளத் தன் சொத்துக்களை விற்று விஜயவாடாவுக்குச் சென்று ஆந்திர சகோதரர்களின் துணையோடு சுகமாக வாழ்ந்திருக்கலாம்.

அவர் நம் பண்பாட்டின் அடிச்சுவட்டில் ஏனோ புகுந்த வீட்டை மறக்காமல், காதலன் கணேசன்  சுவாசிக்கும்  சென்னை காற்றையே விசுவாசித்து வாழ்ந்து மறைந்தும் போனார்.

இந்தியாவில் தேவதாஸ்  இந்தியில் (கே.எல். சைகால்-ஜமுனா, திலீப் குமார்-சுசித்ராசென், ஷாருக்கான்-ஐஸ்வர்யாராய்  நடிப்பில்)மூன்று முறையும்,

தமிழில் 1937  மற்றும் 1953ல், தெலுங்கில் இரு தடவைகளும் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் இமாலய வசூலில் சிகரம் தொட்டது ஏ. நாகேஸ்வர ராவ்- சாவித்ரி நடிப்பில் வெளுத்து வாங்கிய தமிழ் - தெலுங்கு இரு மொழி தேவதாஸ் மாத்திரமே.

இன்றைய 'ஒக்கடு, ஸ்ரீமந்துடு-  புகழ் மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணாவும் அவரது துணைவி எலந்தப்பயம் புகழ் விஜய நிர்மலாவும் 1974ல் தேவதாஸ் படத்தைத் தெலுங்கில் வண்ணத்தில் தயாரித்து நடித்தார்கள். அதற்குப் போட்டியாக ஏ. நாகேஸ்வர ராவ் - சாவித்ரி நடித்த கருப்பு வெள்ளை தேவதாஸ் ரிலிசானது.

புதிதாக வந்த தேவதாஸ் படு தோல்வியைத் தழுவ, ஓல்டு தேவதாஸ் வழக்கம் போல் தூள் கிளப்பியது. நடிகையர் திலகத்தின் ஆற்றல் இளைய தலைமுறையினரையும் கவர்ந்தது. மீண்டும் மீண்டும் ஆந்திர ரசிகர்கள் தேவதாஸ் பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமூட்டினர்.

'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்!’ என நடிப்பில் என்றோ நிருபித்த சாவித்ரிக்குப் புகழ் கிரிடம் சூட்டுவது தமிழச்சிகளின் தலையாய கடமை!

அம்மா தலைமையிலான தமிழக அரசு 'நடிகர் திலகம் சிவாஜி’ பெயரில் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அதே போல் சாவித்ரியின் நினைவாகவும் புதிய பரிசு ஒன்றை அறிவிக்க வேண்டும். தமிழர்கள் நடிகையர் திலகத்துக்குக் கட்டாயம் செய்ய வேண்டிய மரியாதையாக அது காலமெல்லாம் நிலைத்திருக்கும்.

அது மட்டுமல்ல. மத்திய அரசில்  நர்கீஸ் பெயரில் ஆண்டு தோறும் அவார்டு தருகிறார்கள். சுதந்தரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் நடுவண் பரிசுகள் எதுவும் தமிழர்கள், தென் இந்தியர்கள் பெயரால் வழங்கப்படுவது கிடையாது. இதுதானா தேசியம்?

அங்கும் நமது எம்.ஜி.ஆர்., சிவாஜி, சாவித்ரி, பெயரால் விருதுகள் வழங்க தமிழக முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும்.

 நமது ஞாபகங்களின் தாலாட்டில் சாவித்ரி நிம்மதியாக, மிகத் தைரியமாக உறங்கிக் கொண்டிருக்கிறார். தனக்கு இணையான இன்னொரு நடிப்புச் சுரங்கம் யுகங்கள் தோறும் தேடினாலும், நிச்சயம் கிடைக்காது என்கிற நெஞ்சுறுதியின்  நிறைவில் நடிகையர் திலகம் தொடர்ந்து தூங்கட்டும்!

சாவித்ரி கோமாவில் விழுவதற்கு முன்பு மன நிறைவோடு வார இதழ் ஒன்றில்  ரசிகர்களிடம் கடைசியாக இதயம் திறந்து பேசியவை:

Savitri and gemini.jpg 

'நான் நினைத்துச் சாதிக்காத விஷயங்களே கிடையாது. எதிர்காலம் என்பது நமது கையிலா இருக்கிறது? பல ஆண்டுகளாக நான் கலைத்துறையிலேயே இருந்து விட்டேன். வாழ்வில் எத்தனையோ குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் கலையை விட்டு என்னால் அகலவே முடியாது.

நான் வளர்ந்தது கலையில். வாழ்ந்தது கலையில். வாழ இருப்பதும் கலையில் தான். அதே போல் நான்  கடைசியாக போவதும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

அரசன் அன்று காப்பான் தெய்வம் நின்று காக்கும்!’ என்பது  என்னைப் பொறுத்த வரையில் நிஜம்!

மனித உருவத்தில் இரக்கமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் இருந்து என்னை இன்னல்களுக்கு ஆளாக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் இருந்தாலும்,

நான் வணங்கும் தெய்வம் மனித உருவில் தான் என்னை ஆசீர்வதிக்கிறது என்று எண்ணும் போது, ஏதோ  சில நாள்கள் நான் பட்ட வேதனையெல்லாம் மறந்து போய் விடுகிறது.

எளிய வாழ்க்கையை மேற்கொண்டாலும் என் மனத்துக்கு ஒரு நிறைவும் அமைதியும் கிடைக்கிறது.

மலர்கள் மணம் வீசிய பிறகு வாடி மறைந்து விடுகிறது. பாசமலர் அப்படியல்ல. நாளாக நாளாக அதற்கு வாசம் அதிகம்.

உங்கள் உள்ளங்களில் நான் என்றென்றும் ஒரு பாசமலராகவே இருந்து மணம் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே என் ஆசை! ’- சாவித்ரி.

 

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.