Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமார் இறந்ததை நம்பவே முடியவில்லை ஜி.வி பிரகாஷ்; - போய் வா என் தம்பி.. சீமான் கண்ணீர் அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகை உலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்ப முடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர்.

நா. முத்துக்குமாரின் மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும் டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவருடன் பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும் சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.

Can't believe this #namuthukumar is no more ...He's written more than 200 songs in my films A huge loss May god give strength to his family

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நா. முத்துக்குமாருடன் நெருக்கமாக பழகி வந்தவர். இருவரது கூட்டில் வெளியான பாடல்கள் பல சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. முத்துக்குமாரின் மறைவு குறித்து பிரகாஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்ப முடியவில்லை. எனது படங்களில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு கடவுள்தான் பலம் தர வேண்டும் என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

Shocked n saddened to know the untimely demise of lyricist Na.Muthukumar. He will be missed. RIP

நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள டிவிட்டில், அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும் சோகமாக இருக்கிறது. மிக மிக அவசரமான மரணம் இது. அவரை அத்தனை பேரும் மிஸ் செய்வோம்.

It sure is shocking to hear the demise of national award winning lyricist Na Muthukumar. We have lost another good soul

நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நம்முடன் இல்லை என்பது அதிர்ச்சி தருகிறது. ஒரு நல்ல ஆத்மாவை நாம் இழந்துள்ளோம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

Sad and shocking to hear the Demise of lyricist #NaMuthukumar. My deep condolences to his family and friends.. May his soul RIP..

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிர்ச்சி தருகிறது. பெரும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Its very shocking to know the news of Na Muthukumar sir death. My condolences to his family. We miss you sir, Let his soul RIP

நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், நா. முத்துக்குமார் சாரின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல்கள். அவரை அனைவரும் மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார்.

I cannot believe Na.Muthukumar is no more. Too young to die. God give his family strength. What a loss! Sad sad day.

நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்பவே முடியவில்லை. சாகும் வயதா இது. கடவுள் அவரது குடும்பத்துக்குப் பலம் தரட்டும். மிகப் பெரிய இழப்பு. மிக மிக சோகமான நாள் இன்று என்று வேதனையை வெளியிட்டுள்ளார்.

It is a terrible, terrible loss to the industry. Too soon.Na Muthukumar

பாடகி சின்மயி வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு மிகப் பெரிய மிக மோசமான இழப்பாகும் இது. மிக மிக துரிதமான மரணம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

God what's happening in the industry another big loss #NaMuthukumar sir passed away shocked whata talented lyric writer #RIPnamuthukumar

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு இன்னொரு மிகப் பெரிய இழப்பு. அவரது மரணச் செய்தி அதிர்ச்சி தருகிறது. என்ன ஒரு திறமையான பாடலாசிரியர் என்று கூறியுள்ளார்.

It's really heart breaking to hear the sudden demise of Na.Muthukumar sir. May his soul rest in peace & all strength to his family .!

நடிகர் அதர்வா வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே சுக்கு நூறாக நொறுங்குவது போல உள்ளது. நா. முத்துக்குமார் சாரின் மரணத்தை நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்துக்கு அனைத்துப் பலமும் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார் அதர்வா.

போய் வா என் தம்பி.. தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்.. நா. முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளவரை, மொழி உள்ளவரை முத்துக்குமாரும் நிலைத்திருப்பார் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார் சீமான்.

சீமான் இயக்கிய வீர நடை படம் மூலமாகத்தான் பாடலாசிரியராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நா. முத்துக்குமார். அன்று தொடங்கிய அவரது பாட்டு வரிசை நிற்காமல் தொய்வில்லாமல் தமிழ் நெஞ்சங்களை தாலாட்டி வந்தது. இன்று நின்று போய் விட்டது.

முத்துக்குமார் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்ற செய்திகேட்டு ஆழ்ந்த மனத் துயரில் சிக்கித் தவிக்கிறேன். என் தம்பி முத்துக்குமார் தமிழ்த் தேசிய இனத்தின் மாபெரும் இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களை தன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும் திறமையாளன்.

என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கிய ‘வீரநடை' திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம் செய்யத்தூண்டியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்து விளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.

அரசியல் களத்தில் நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்து அழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்று தமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்று மறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான் அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின் படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.

என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில் நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும் கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

என்றென்றும் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன் ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிற கனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன் என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்.

போய் வா என் தம்பி!இம் மொழியுள்ளவரைஉன் கவி இருக்கும்.தமிழ் உள்ளவரை நீயிருப்பாய் என்று தனது அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/cinema/01/114157

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.