Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சாக்களின் திருகுதாளங்கள்! உரிமை கொண்டாடப்படாத பணமும் சொத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வங்களிலும், நிதி நிறுவனங்களிலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடி செய்யப்பட்ட பெரும் தொகையான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், அசையா சொத்துக்களும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விசாரணைகளில் கண்டறியப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிமை பாராட்ட எவரும் இல்லையெனவும் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சிலர் நபர்கள் மோசடி செய்த பணம் மற்றும் சொத்துக்களில் தற்போது உரிமையாளர்கள் இல்லாத பணம் மற்றும் சொத்துகளாக மாறியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

உரிமையாளர் இல்லாத பெருந்தொகை பணம் அண்மையில் அரசுடமையாக்கப்பட்டதை நாம் அறிவோம். கடந்த காலத்தில் எவருக்கும் உரிமையில்லாத பெருந்தொகை பணமும் சொத்துக்களும் இருந்துள்ளதை ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

உரிமையாளர் ஒருவர் இல்லாமல் எப்படி இந்த பணம் நாட்டில் இருந்தது?

சிலர் இந்த பணம் அவருடையது, இவருடையது என கூறுகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் அது தனது பணம் இல்லை என்று கூறுகிறார்.

அப்படியானால் இந்த பணமும் சொத்துக்களும் யாருடையது. எவருக்கும் உரிமையில்லாத பணமும் சொத்துக்களும் ஒரு நாட்டில் இருக்க முடியுமா?.

சட்டம் அமுலில் இருக்கும், வெளிநாடுகளுடன் தொடர்புகளையும் உடன்படிக்கைகளையும் கொண்டுள்ள ஒரு நாட்டில் எப்படி எவருக்கும் உரிமையில்லாத பணமும் சொத்துக்களும் இருக்க முடியும் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/114608

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் சொத்து என்றால்.... அரசுடைமையாக்க அவசரப் படுபவர்கள்,
மகிந்தவின், உரிமை கோரப்படாத சொத்துக்கள் என்றால்.... அரசுடைமையாக்க வேண்டியது தானே..... 
அதற்கு பயப் படுகிறார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.