Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொழியுரிமையை வழங்கியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்தின் பின்னர் மொழியுரிமையை பிரதான இரண்டு கட்சிகளும் இணங்கி வழங்கியி ருந்திருந்தால் 30 வருடகால யுத்தமொன்று ஏற்பட்டிருக்கவே இருக்காது என்று உயர்கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 

கடந்த கால யுத்தத்தில் வெற்றிபெற்றவர் எவரும் இல்லை மாறாக அனைவரும் தோல்வி யையே சந்தித்திருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

 

திருகோணமலை கோணேசபுரியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில், உயர்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி மாணவர் விடுதி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையம் என்பன இன்று வெள்ளி க்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்படன.

 

திருகோணமலை வளாக முதல்வர் வி. கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, கிழக்கு பல்க லைக்கழக உப வேந்தர் ரி.ஜெயசிங்கம் மற்றும் பலர் கலந்த்துகொண்டனர்.

 

இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், கடந்தகால தவறுகளை உணர்ந்துள்ள இரு பிரதான கட்சிகளும் சுதந்திரத்திற்குப் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

“30 வருடகால யுத்தத்தில் எவரும் வெற்றிபெறவில்லை. போரில் அனைவருமே தோல்வி யுற்றுள்ளோம். இதனால் கடந்தகாலத்தை திரும்பிப்பார்த்து, எந்த இடத்தில் தவறி ழைத்திருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான காலம் உருவாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடத்தைப் பிடிக்கும் கட்சியும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதியும், பிரதமரும் கூறியிருந்தனர். நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் இருந்து இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து முயற்சிசெய்துவருகின்றன. தேசிய அரசாங்கம் என்பது அமைச்சுக்களை பகிர்ந்துகொள்ளும் முயற்சியல்ல. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து அரசாங்கமொன்றை அமைத்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். 

 

ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 ஆசனங்கள் கிடைத்தன. சந்திரிகா குமாரதுங்க 105 ஆசனங்களை வைத்துக்கொண்டே ஆட்சியை அமைத்திருந்தார். எனினும் தனியான அரசாங்கத்தை அமைத்து ஐந்து வருடங்களையும் கழித்துவிட்டு வெறுமனே திரும்புவதை விட சிறிதுகாலத்திற்காவது தேசிய அரசாங்கத்தின் ஊடாக நாட்டுப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு மிகுதிவைக்காமல் எம்மால் தீர்க்க முடியும் என்றால் அதுவே எமது பிள்ளைகளுக்கு வழங்க முடியுமான மிகப்பெரிய சொத்து என்று கருதுகிறேன்.

 

எமது மாணவ பருவத்தில் சட்டத்தரணி தொழிலுக்கு பிரவேசித்ததன் பின் பயங்கரவாதப் பிரச்சினைக்கு ஆளாகியிருந்தோம். எனினும் அடுத்த தலைமுறையை இந்தப் பயங்கரவாத நிலைமையிலிருந்து மீட்பதற்கே முயற்சிக்கின்றோம். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க நாடாளுமன்றில் தெரிவுக்குழுவொன்றை அமைத்திருக்கின்றோம். அனைத்து அரசியற்கட்சிகளும் இந்தக் கூட்டங்களுக்கு தமது முழுமையான பங்களிப்பை செய்கின்றன. இன்னும் சில மாதங்கள் செல்லும்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை வழங்க முடியும் என நம்புகிறேன்.

 

சுதந்திரம் பெற்று சிறிதுநாள் கழிந்து வேறு ஒரு நாட்டை எவரும் கோரவில்லை. 1959ஆம் ஆண்டுகளில் மொழியுரிமையை கோரினார்கள். அப்போது வேறே நாட்டையோ, பிரிவுகளையோ கோரவில்லை. அப்போது கோரியிருந்த மொழியுரிமையை பிரதான இரு கட்சிகளும் இணங்கி வழங்கியிருந்தால் யுத்தமொன்று ஏற்பட்டிருக்கவே இடமிருந்திருக்காது. இதுவே உண்மை. எனவே பிரதான இரு கட்சிகளும் கடந்தகால பிழைகளை உணர்ந்து நமது பலவீனமடைந்துள்ள நாட்டை உயிர்பிப்பதற்கு முயற்சித்து வருகின்றன” - என்றார்.

http://www.onlineuthayan.com/news/16487

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.