Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய வங்கி தொடர்பில் மற்றுமொரு முறைப்பாடு! விசாரணை கோரி ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

Featured Replies

இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு பாரியளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு மிகவும் பாரியளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவிடமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

மத்திய வங்கி வரலாற்றில் மட்டுமன்றி இலங்கை அரச சேவை வரலாற்றில் இந்தளவு தொகை சம்பளம் உயர்த்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர்களின் சம்பளங்கள் 110 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 267000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துணை ஆணையாளர்களின் அடிப்படைச் சம்பளம் 107 வீதத்தினால் அதாவது 193000 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் சிற்றூழியர்களது சம்பளம் 81000 எனவும் இது அரசாங்க மருத்துவர் ஒருவரின் சம்பளத்தை விடவும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி சில ஆண்டுகளாக நட்டமடைந்து வரும் நிலையில் இவ்வளவு பாரியளவு தொகை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடமும், நிதி மோசடி விசாரணைப் பிரிவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றி ஓய்வு பெற்றுக்கொண்ட டபிள்யு.டி.ஏ.ஈ வீரசிங்க மற்றும் ஏ.ஜீ.ரத்னவீர ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/114755

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.