Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டு மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு-யாழ்.வந்த கடற்றொழில் அமைச்சர் உறுதியளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கடற்பரப்பில் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்தார். வடக்கிற்கு இரு நாள் விஜயம் மேற்க்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இன்று காலை 10.30 மணியளவில் குடாநாட்டு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் யாழ் செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

அமைச்சருடனான இந்த சந்திப்பில் குடாநாட்டு மீனவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துக்கூறினர். குறிப்பாக, குடாநாட்டுக் கடலில் மேற்;கொள்ளப்படும் இழுவைப்படகுத் தொழில் முற்றுமுழுதாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறினார் ஏனெனில், உள்ளுர் இழுவைப்படகுகளை வைத்தே இந்திய இழுவைப் படகுகளும் எமது கடற்பகுதியில் அத்துமீறி நுழைகின்றன என்றும் குறிப்பிட்டனர். 

 

மேலும், மீனவர்கள் தெரிவிக்கையில் கடலட்டை, சங்கு என்பவற்றைப் பிடிப்பதையும் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். ஏனெனில், கடலட்டை பிடிப்பதனால் கடல் வளங்கள் முற்றாக அழிவடைவதாகவும் இதனால் தாம் பட்டினிச் சாவை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், உள்ளுர் மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் யாழ் குடாநாட்டில் 12 கடலட்டை பிடிக்கும் நிறுவனங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். 

 

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது போல் மீனவர்களாகிய தமக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென தெரிவித்தனர். மேலும், இந்திய மீனவ படகுகளால் பாதிக்கப்பட்ட உபகரணங்களுக்கு நஷ;டஈடு வழங்க வேண்டுமெனவும், எரிபொருள் மானியம் சீரான முறையில் வழங்கப்பட வேண்டுமெனவும்,தம்பாட்டிப் பகுதியிலுள்ள கடற்படை முகாமினை அகற்ற வேண்டுமெனவும், வெற்றிலைக்கேணி, புங்குடுதீவு, அனலைதீவு, மாமுனை, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் உள்ள துறைமுகங்களை புனரமைத்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர். 

 

தொண்டைமானாறு நன்னீர் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 1330 குடும்பங்களுக்கு நஷ;டஈடு வழங்க வேண்டும், ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமற் வெடி மூலம் மீன்பிடித்தல் போன்றவற்றால் கரை வலை தொழில் பாதிப்படைவதாகவும் மீனவ சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 

இவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் அமரவீர: 

 

உள்ளுர் இழுவைப் படகுகள் தொடர்பில் அடுத்த மாதம்  செபரெம்பர் 25ஆம் திகதிக்குள் தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார். மேலும் பாரிய பிரச்சினையாக இந்திய இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதுவரை சுமார் 130 ஆழ்கடல் இழுவைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகுகள் இதுவரையிலும் விடுவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். நாம் எமது நாட்டின் மீனவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே செயற்படுகின்றோம். ஆயினும் இந்திய இழுவைப்படகுகள் விடயத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் உரிய கவனம் எடுத்தே செயற்பட முடியும் என தெரிவித்தார்.

 

மேலும், அத்துமீறும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர், மத்திய அமைச்சர்கள், தமிழக மாநில அமைச்சர்கள் ஆகியோருடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். முதற்கட்டமாக செப்ரெம்பர் மாதம் 8ஆம் திகதி இந்திய மத்திய கடற்தொழில் அமைச்சருடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய மீனவ குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் விசேட கவனம் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். 

 

மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தினை மிக விரைவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, இரணைமடு போன்ற பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

 

யாழ்.  மாவட்டத்தில் துறைமுகங்களையும் நங்கூரமிடும் துறைகளையும் நவீன முறையில் கட்டியெழுப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இதன்பிரகாரம் காரைநகரில் 280 மில்லியன் ரூபாய் செலவில் உருவாகவுள்ள படகுத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பருத்தித்துறை, குருநகர் போன்ற பகுதிகளில் படகுத்துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. பருத்தித்துறை 7000 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள துறைமுகம் இலங்கையில் மிகப்பெரிய துறைமுகமாக இருக்குமெனவும் தெரிவித்தார். 200 மில்லியன் ரூபாய் செலவில் குருநகர் படகுத்துறைமுகம் விருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளன. மேலும் யாழ் குடாநாட்டில் 17 படகு இறங்கு துறைகள்  4 நங்கூரமிடும் துறைகள என்பன அமைக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார். 

 

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 150 ஆழ்கடல் இழுவைப்படகுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனெனில் சர்வதேச கடலில் மீன்பிடிப்பதன் மூலம்  அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் அந்த மாவட்டம் வளர்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

 

மேலும், யாழ் மாவட்டத்தில் 12 கடலட்டை நிறுவனங்கள் இயங்குவதாகவும் அவற்றுக்கான அனுமதி கடந்த அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டதாகவும் அந்த அனுமதியை ரத்து செய்வதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

 

இந்தக் கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், எம்;.கே. சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட்; கூரே, அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் மற்றும் குடாநாட்டு மீனவ சமூகப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.     

http://www.onlineuthayan.com/news/16560

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.