Jump to content

அதிசய உணவுகள்- 9: பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ்


Recommended Posts

அதிசய உணவுகள்- 9: பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ்

 

 
  • பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ்
    பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ்
  • சுகிஜி’ வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் நண்டுகள்
    சுகிஜி’ வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் நண்டுகள்

சூரியன் எழும்புகின்ற நிலம்’ என்ற பெருமையைக் கொண்டது ஜப்பான். கிழக்கு ஆசியாவின், தீவு நாடான இது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. ‘உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த நாடா இது?’ என்று பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானை ஒடுக்க, போரில் தோல்வியைத் தழுவச் செய்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி சர்வ நாசத்தை விளைவித்தது. பல ஆயிரக்கணக் கான கட்டிடங்கள் தரைமட்டமாயின. கண் இமைக்கும் நேரத்தில் மக்கள் பஸ்பமாகி, சாம்பல் குவியல்களாக மாறினர்.

கலங்கியதா ஜப்பான்? ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிர்த்தெழுந்தது. எப்படி? தேனீக்களைப் போல, கால நேர அளவு கோடுகளைத் தாண்டி உழைத்து, தானும் நிமிர்ந்து, ஊரையும் உயிர்ப்பித்து, நாட்டின் மானத்தையும் உலகளவில் காத்திட்ட ஜப்பானிய மக்கள் இருக்கிறார்களே, வேறு என்ன வேண்டும்! உழைப்பு, உழைப்பு, உழைப்பு இதுதான் ஜப்பானிய மக் களின் தாரக மந்திரமாக இன்றளவும் இருக்கிறது.

ஜப்பானின் தலைநகரமான டோக் கியோவில் காலடி எடுத்து வைத்த மறுநொடியில் இருந்து அந்த நாட்டின் வளர்ச்சியைக் கண்டு அசந்துபோனேன். வானுயர்ந்த கட்டிடங்கள், மோனோ ரயில்கள், புல்லட் டிரெயின்கள், மக்கள் நடந்து செல்லும் சாதாரண நடை பாதைகள் கூட கிரானைட் கற்களை ஆடையாக அணிந்திருந்தன.

ஜப்பானில் நான் கண்டவற்றைப் பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், ஜப்பானியர்களின் உண வுப் பழக்கங்களைப் பற்றி முதலில் சொல்லப் போகிறேன். உலகிலேயே மிக நீண்ட ஆயுள் உடையவர்களாக ஜப்பானியர்கள் திகழ்கிறார்கள். புரோட்டீன் சத்துமிக்க மீன் வகைகளை அவர்கள் அதிகளவில் உண்பது இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அலுவலகத்துக்குச் செல்பவர்கள், பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் பிள்ளைகள் என அனைவரும் பகல் உணவுக்காக (Bento) பென்டோவைச் சுமந்துகொண்டு போவார்கள். பென் டோக்கள் என்பது டிபன் பாக்ஸ்களாகும். இவற்றில் அரிசி சாதம், மீன் மற்றும் வேக வைத்த அல்லது ஊறு காயாகப் போடப்பட்ட காய்கறிகள் இருக்கும்.

நாட்டின் மொத்த மக்களுமே மீன் விரும்பிகள் என்பதால் அதிக அளவில் மீன்களைப் பிடிப்பது அவசியமாகிறது. ஒரு வருடத்துக்கு ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களின் எடை 12 மில்லியன் மெட்ரிக் டன். இதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரப் படகுகளின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும்.

நான் ஒரு விநாடி மூச்சை விடவும் மறந்துபோனேன்! எங்களுடைய வழி காட்டி சொன்னார்: ‘‘இதற்கே வாயைப் பிளந்தால் எப்படி? ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவின் (Tsukiji) ‘சுகிஜி’ மீன் அங்காடிக்குள் நுழைந்தீர்கள் என்றால் கண்களையும் இமைக்க மறந்துவிடுவீர்கள்’’ என்றவர் தொடர்ந்து சொன்னார்:

‘‘அலாரம் வைத்து சரியாக காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து விடுங்கள். ஒரு நாளைக்கு தூக்கத்தை தியாகம் செய்தால், உலகிலேயே மிகப் பெரியதும், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும் ‘சுகிஜி’ அங்காடியைக் கண்ணாரக் கண்டு, வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவங்களைப் பெறலாம்!’’

‘‘ஏன் அவ்வளவு சீக்கிரம் எழுந் திரிக்கணும்?’’ என்றேன்.

‘‘அதிகாலையில் சென்றால்தான் (Tuna) டியுனா மீன்களை ஏலம் விடுவதைப் பார்க்கலாம். இந்த ஏலம் 5.30 மணிக்குத் தொடங்கிவிடும். மொத்தம் 120 நபர்களை, ஒரு குழுவுக்கு 60 நபர்கள் வீதம் இரண்டு குழுவாகப் பிரிப்பார்கள். ஒரு குழு 5-25 மணியில் இருந்து 5.45 வரை நடக்கும் ஏலத்தை பார்க்கலாம். அடுத்த குழு 5.50 மணியில் இருந்து 6.10-க்குள் நடக்கும் ஏலத்தை பார்க்கலாம். ஒரு ஏலம் என்பது 30 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். ஆகவே, சீக்கிரம் கிளம்புவதே உசிதம்’’ என்று வழிகாட்டி முடித்துக் கொண்டார்.

1935-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘சுகிஜி’ மீன் அங்காடிக்கு அது தோன்றிய இடத்தின் பெயரையே வைத்தார்கள். மொத்தம் 56 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு, 1,200 மீன் விற்கும் சிறிய கடைகளை தன்னகத்தே அடக்கியுள்ளது. இங்கே மொத்தம் 480 வகையான கடல்வாழ் உயிரினங்கள் விற்கப்படுகின்றன. திமிங்கலத்தின் மாமிசமும் அழகாக வெட்டப்பட்டு விற்கப்படுகிறது.

5 மில்லியன் பவுண்ட் கடல் உணவு (இதனுடைய மதிப்பு 28 மில்லியன் டாலர்கள்) தினந்தோறும் விற்கப் படுகிறது. மொத்தம் 60 ஆயிரம் வேலையாட்களையும் 32 ஆயிரம் வாகனங்களையும், அதாவது லாரிகள், கூண்டு வண்டிகள், வேகன்கள் (wagon), டரண்ட் டிரக்ஸ் (turrent trucks) என்று செயல்படும் ‘சுகிஜி’ மீன் அங்காடியின் செயல்பாட்டை நேரில் பார்ப்பது என் றால் சும்மாவா? எவ்வளவு அரிய சந்தர்ப்பம்! தூக்கத்தை தூரத் தள்ளி, ஆவலை கண்களில் ஏந்தி புறப்பட்டோம்.

ஒரு காலத்தில் ஜப்பானியர்கள் மீன் பிடிக்கும் இயந்திரப் படகுகள் மூலம் தங்கள் கடல் பகுதிகளிலும் மற்ற நாடுகளின் கடல் பகுதிகளிலும் தன்னிச்சையாகச் சென்று மீன் பிடித்தனர். இதனால் உலகிலேயே டியுனா மீன்களைப் பிடிப்பதில் முதன்மையான இடத்திலும், சால்மன் மீன்களைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி யான இடத்திலும் ஜப்பான் இருந்தது. அதனால், ஜப்பானிய மக்களுக்குத் தேவையான மீன்களை வழங்குவதில் அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

ஆனால், 1970-ல் திடீர் என்று கட லோரப் பகுதியில் இருந்த நாடுகள் எல்லாம் தங்கள் கரைப் பகுதியில் இருந்து கடலுக்குள் 370 கி.மீ தூரத் துக்கு மீன் பிடிக்க தனி உரிமை வேண்டி அதில் வெற்றியும் அடைந்தன. ஜப்பானிய மீனவர்களால் முன்போல் மற்றவர் கடல் பகுதியில் சென்று மீன் பிடிக்க முடியவில்லை. அதனால் பிடிக்கப்படும் மீன்களின் அளவு குறைந்தது. நாட்டுக்குத் தேவையான மீன்களை ஜப்பான் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங் கியது. நாங்கள் பார்க்கச் சென்று கொண்டிருக்கும் ‘சுகிஜி’ மீன் அங்காடி யில் அவர்கள் கடல் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட டியுனா மீன்களையும், விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களையும் கொண்டுவந்து குவிக் கிறார்கள்.

அலஸ்காவில் இருந்து நண்டுகள், கொரேசியா, ஸ்பெயினில் இருந்து டியுனா மீன்கள், ஆஸ்திரேலியா, பெரு என்று பட்டியலும் நீள்கிறது. மீன் வகைகளும் கூடுகிறது.

ரயில் பிடித்து, இறங்கி, ஐந்து நிமிட நடைக்குப் பின் ‘சுகிஜி’ அங்காடியின் நுழைவாயிலை அடைந்தோம். அங்காடியின் வெளிச்சுற்றுக் கடைகளில் அருமையான மீன் உணவு வகைகள் கிடைக்கும் என்று வழிகாட்டி சொல்லி இருந்ததால், இரண்டு பிஸ்கட்டுகள், ஒரு குவளை ஹாட் சாக்லேட் பானத்தோடு கிளம்பிவிட்டேன். ‘சுகிஜி’ மீன் அங்காடியில் என் கண் முன்னே விரிந்த காட்சிகள், உண்ட உணவுகள் இன்றளவும் என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.

- பயணிப்போம்.

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

food_2988540a.jpg

வறுத்த டியுனா மீனை சாப்பிடும் சாந்தகுமாரி

http://tamil.thehindu.com/opinion/blogs/அதிசய-உணவுகள்-9-பேக்-செய்யப்பட்ட-ஆக்டோபஸ்/article9039941.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

நாட்டின் மொத்த மக்களுமே மீன் விரும்பிகள் என்பதால் அதிக அளவில் மீன்களைப் பிடிப்பது அவசியமாகிறது. ஒரு வருடத்துக்கு ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களின் எடை 12 மில்லியன் மெட்ரிக் டன். இதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரப் படகுகளின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும்.

ப்ஃஆஆ ஜப்பானினிலையே இவ்வளவெண்டால் உலகத்திலை பிடிக்கிற மீன் தொகையை கணக்குப்பார்த்தால் அங்கை போய் நிக்கும் போலை கிடக்குtw_astonished:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நீங்கள் சொன்னது புரிந்தது. ஆனால்... விளங்காத மாதிரி, நூல் விட்டுப் பார்த்தேன். 😂
    • "வெளியுறவுக் கொள்ளை"? என் கண்பார்வை பிரச்சினையா அல்லது இந்த இடிவிழுவார் இவ்வளவு முக்கியமான ஆவணத்தில் கூட தமிழைச் சரிபார்க்கவில்லையா?
    • பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ? தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கமளித்தார்.   இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,   தபால் மூல வாக்களிப்பும், வாக்கு சீட்டு விநியோகமும் நிறைவடைந்துள்ளன. வாக்கு சீட்டுக்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.    சகல பிரசார நடவடிக்கைகளும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் அமைதி காலமாகும். இக்காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது.   அத்தோடு வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இம்முறை இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.    பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும். ஏனைய 19 மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும்.   வாக்களிக்கும் போது தாம் தெரிவு செய்யும் கட்சி சின்னத்துக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு அருகில் புள்ளடியிட வேண்டும். அவ்வாறு புள்ளடியிடப்படாத வாக்குசீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.    அதன் பின்னர் தமது விருப்பத்தெரிவான வேட்பாளரது இலக்கத்துக்கு புள்ளடியிட வேண்டும். ஒரு வாக்களருக்கு மூன்று விருப்பத் தெரிவுகள் உள்ளன.   வேட்பாளர்களது இலக்கங்கள் அடங்கிய பெயர் பட்டியல் இம்முறை வீடுகளுக்கே விநியோகிகப்பட்டுள்ளது. எனவே அதில் தாம் வாக்களிக்கவுள்ள வேட்பாளர்களது எண்களை தெளிவாக அவதானிக்க முடியும்.    மேலே தெரிவு செய்யப்படும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும். மாறாக ஒரு கட்சியை தெரிவு செய்து, பிரிதொரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது.   அவ்வாறான வாக்கு சீட்டுக்கள் நிராகரிக்கப்படும். அதே போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்குகளும் நிராகரிக்கப்படும். மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும் என்றார்.  https://www.virakesari.lk/article/198181
    • விஜய்க்கு... அவரின் மனைவி, பிள்ளைகள் கூட வாக்குப் போட முடியாதாமே...  🤣
    • பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவு வலுவாக உள்ளது. மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை பெற முடிந்துள்ளது. எங்களிடம் குறுகிய கால கொடுப்பனவுகள் மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஓய்வூதியம் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கு நமது செலவினங்களில் பெரும் சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கேற்பவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும். புத்தாண்டில் பாடசாலை தொடங்கும் போது, பாடசாலை மாணவர்களுக்கு, குறிப்பாக அப்பியாச புத்தகங்களுக்கு நிவாரணம் தருவோம் என நம்புகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்…” என்றார். https://thinakkural.lk/article/311899
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.