Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது நிலமே எமக்கு வேண்டும்-மயிலிட்டி மக்கள் அமைச்சர் மங்களவிடம் எடுத்துரைப்பு

Featured Replies

எமது நிலமே எமக்கு வேண்டும்-மயிலிட்டி மக்கள் அமைச்சர் மங்களவிடம் எடுத்துரைப்பு
 
 
எமது நிலமே எமக்கு வேண்டும்-மயிலிட்டி மக்கள் அமைச்சர் மங்களவிடம் எடுத்துரைப்பு
எங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம். எங்கள் சொந்த நிலங்கள் மட்டுமே வேண்டும். எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நில மீட்புக்கான அந்தப் போராட்டத்தில் உயிரை விடவும் நாங்கள் தயாராக உள்ளோம் என மல்லாகம்-கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்று தெரிவித்துள்ளனர்.
28-8-2016%2011.8.27%203.jpg
எங்கள் நிலங்களை இனியும் விட மறுத்தால் பாராளுமன்றம் முன்பாகவும் வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்களை நடத்துவோம் எனவும் அந்த மக்கள் கூறியுள்ளனர்.
 
யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
28-8-2016%2011.8.26%201.jpg
எங்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கிறார்கள். எங்களுடைய கடலில் படையினர் மீன்பிடிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அன்றாடம் உணவுக்காக பழைய இரும்பு பொறுக்கி கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசின் எந்த உதவிகளும் வேண்டாம்.
 
ஒரு காலத்தில் இலங்கையின் கடலுணவு மொத்த தேசிய உற்பத்தியில் பெரும் பங்கை மயிலிட்டி மக்கள் பெற்றுக் கொடுத்திருந்தனர்.
 
இன்று எமது கடற்றொழில் வளங்களை இராணுவம் ஆக்கிரமித்து நிற்க நாங்கள் சிறிய குடிசைக்குள் அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1472362781_625.0.560.320.160.600.053.800.500.160.60.jpg
6 மாதங்கள் தாருங்கள். உங்களுடைய சகல இடங்களையும் விடுகிறோம் என கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி எம்மிடம் நேரில் தெரிவித்தார். ஆனால் அந்தக் கெடு முடிந்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
 
இதன்போது மயிலிட்டி பகுதி மக்களிடம் மீள கையளிக்கப்படுமா? என ஊடக வியலாளர்கள்  அமைச்சரிடம்   எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
 
மயிலிட்டி பகுதி மக்களிடம் மீள கையளிக்கப்படுவது தொடர்பாக நாங்கள் கல ந்துரையாடவேண்டும்.அதேபோல் பொருத்தமான வழிமுறைகளையும் நாம் தேடவேண்டும்.மேலும் மீனவர் சமூகங்களின் பிரச்சினைகளை நாங்கள் நன்றாக அடையாளம் கண்டிருக்கின்றோம்.
 
எனவே இராணுவம் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி மீனவர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/16830

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
எமது நிலமே எமக்கு வேண்டும்-மயிலிட்டி மக்கள் அமைச்சர் மங்களவிடம் எடுத்துரைப்பு
 
எமது நிலமே எமக்கு வேண்டும்-மயிலிட்டி மக்கள் அமைச்சர் மங்களவிடம் எடுத்துரைப்பு
 
எனவே இராணுவம் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி மீனவர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/16830

சனாதிபதி ஆணைமட்டும் போதாது, இராணுவத்தின் ஆணையும் வேண்டும். இப்படியே.... கடற்படையினரின் ஆணை, காவல்துறையினரின் ஆணை, பிக்குகளின் ஆணை, சிங்களமக்கள் ஆணை, அப்பப்பா புல்லரிக்கிறது. இதுவல்லவோ சனநாயகம். :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.