Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா மாவட்ட நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சி!

Featured Replies

 

sivamohan-1.png

வவுனியா நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.

இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் துணைபோவதாக சந்தேசம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியாவில் தற்போது நகரசபை செயலாளராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

அவரை அப்பதவியிலிருந்து அகற்றி தமிழரல்லாத சிங்கள அல்லது முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் விடுதிகளுடன் கூடிய மூன்று மாடிகளைக் கொண்ட சத்திரசிகிச்சை வைத்தியசாலை ஒன்றை வவுனியா போதனா வைத்தியசாலை அருகில் அமைப்பதற்காக நகரசபையிடம் அனுமதி கோரியிருந்தார்.

எனினும் வைத்தியசாலையின் கழிவகற்றல் முறையில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, அதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை. முறையான கழிவகற்றல் முறையை மேற்கொண்டால் மாத்திரமே அதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் தனக்கான அனுமதி வழங்காததை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் நகரசபை செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக லஞ்சம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, இவர்கள் இருவரும் பதவி விலகும் இடத்து அவர்கள் இருவருக்கும் பதிலாக சிங்கள அல்லது முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

http://thuliyam.com/?p=39379

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எந்தக் கட்சியின் உறுப்பினர் என்ற விபரத்தையும் இங்கே குறிப்பிட்டால் நல்லது.

சிவமோகன் EPRLF( சுரேஷ் )மூலமாக 2013இல் முல்லைத்தீவில் இருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படடார் .அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் கிடைக்கவில்லை ,அங்கு இருப்பது வேலைக்கு ஆகாது என்றபடியால் ,2015இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் EPRLF மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.தற்போது தமிழரசு கட்சிக்கு தாவ ,மாவையிடம் விண்ணப்பித்திருக்கின்றார் .விண்ணப்பம் துசிபிடிக்கின்றது ? இவரது இரண்டு பெண் பிள்ளைகள் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் ,மற்றவர் ரஸ்யாவிலும் மருத்துவம் படிக்கின்றார்கள் .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.