Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தான் விதைத்த இனவாதத் தீயால் இடர்படும் ரணில்..!

Featured Replies

சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியை எரித்து இனவாதத்தைக் கக்கி அதற்கு வித்திட்டவர் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மாவடி இந்து இளைஞர் மன்றக் கலைவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து இங்கு கருத்துரைத்த சரவணபவன்,

2000ஆம் ஆண்டளவில், நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து, அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா தீர்வுப் பொதியை முன்வைத்திருந்தார். இதனை அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது.

எதிர்த்தது மாத்திர மல்ல அதனை தீ மூட்டி எரித்தனர். அவர்கள் இனவாதத் தீயையும் அன்று மூட்டி கொழுந்து விட்டெரியச் செய்தனர். சிங்கள மக்களை உசுப்பேற்றினார்கள்.

ரணில் விக்கிரமசிங்க அன்று கக்கிய இனவாதம் இன்று அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கின்றது. அன்று தீர்வுப் பொதியை முன்வைத்த சந்திரிகா அம்மையாரின் நெறிப்படுத்தலில், தீர்வுப் பொதியை எதிர்த்து எரித்த ரணில் விக்கிரமசிங்க இன்று இணைந்து தயாரிக்கின்றார். இவ்வாறு தயாரிக்கப்படும் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக இனவாதத் தீ தெற்கிலே மோசமாகப் பரப்பி விடப்பட்டிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்க அன்று விதைத்த விதை இன்று அவருக்கு எதிராகவே விருட்சமாக மாறியிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு அன்று தீர்வுத் திட்டம் கிடைத்திருந்தால், தமிழ் மக்கள் பலவற்றை இன்று இழந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது.

இன்று அரசு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகின்றது. இவர்கள் தாமாக மனம் உவந்து இவற்றைச் செய்வதாக எண்ண வேண்டாம். இதற்கு எல்லாம் மூலகாரணம் சர்வதேச அழுத்தம். சர்வதேச அழுத்தம் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதால்தான் இலங்கை அரசு இதனைச் செய்து முடிக்க எண்ணியிருக்கின்றது. போராட்டம் காரணமாகவே சர்வதேச அழுத்தம் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழர் பிரச்சினையை உலகறியச் செய்தது எமது விடுதலைப் போராட்டம்தான். அந்தப் போராட்டம் விட்டுச் சென்ற அழுத்தமே, இன்று சர்வதேச சமூகத்தின் அழுத்தமாக இலங்கை அரசுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

http://www.tamilwin.com/politics/01/116366

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.