Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் மண் அகழ்வால் யாழில் கரையோர பகுதிகள் பாதிப்பு

Featured Replies

தொடரும் மண் அகழ்வால் யாழில் கரையோர பகுதிகள் பாதிப்பு
 
 
தொடரும் மண் அகழ்வால் யாழில் கரையோர பகுதிகள் பாதிப்பு
யாழ்ப்பாணம் உதயபுரம், அரியாலை பகுதிகளில் தொடரும் சட்டவிரோத மண்அகழ்வால் அப்பகுதி கிராமங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
 
இது பற்றி தெரியவருவதாவது
 
யாழ்ப்பாண கரையோர கிராமங்களான உதயபுரம், அரியாலை பகுதிகளில் கடற்கரை மண் அதிகளவில் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் நீர் சிறந்த குடிநீராகவும் காணப்படுகின்றது. 
 1472969476_a1.jpg
இருப்பினும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் குறித்த பிரதேசங்களில் தொடர்ந்து மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்;. இதனால் அப் பிரதேசத்து வளம் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. 
 
உதயபுரப்பகுதியிலுள்ள அரச, தனியார் காணிகளில் மண் அகழப்பட்டமையால் மண் மேடுகள் பள்ளங்களாய் மாறியுள்ளன. கரையோரமண் அகழ்வால் கடல் நீர் மக்களின் குடியிருப்பை நோக்கி நகரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சுத்தமான குடிநீர் உள்ள பகுதியாகிய இப்பகுதிகளில் கடல் நீர் குடிநீருடன் கலந்து வருகின்றது. குடிநீர் உவர்த்தன்மை அடைவதனால் வருங்காலத்தில் அப்பகுதி குடியிருப்பிற்கு உகந்ததல்லாத இடமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மண் அகழ்வாளர்களால் அப்பகுதி மக்கள் தாக்கப்படுவதும் , வேகமாக ஓடும் உழவு இயந்திரங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 
 
எனவே குறித்த பிரதேசங்களை வருங்காலங்களில் பாதுகாக்கும்படி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

http://onlineuthayan.com/news/17143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.