Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து அணியின் 44 ஆண்டு கனவு நிறைவேறுமா?

Featured Replies

இங்கிலாந்து அணியின் 44 ஆண்டு கனவு நிறைவேறுமா?

 

160824133202_england_v_pakistan_-_1st_on

 கோப்புப் படம்

ஆரம்ப காலங்களில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து அணி ஆடும் விதம் சிறப்பாகவும், நிதானமாகவும் இருந்தது.

நிதானமாக ஆடி, விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் இறுதி கட்டத்தில் நன்கு அடித்தாடுவது என்ற முறையை பின்பற்றி, 1992-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.

 

150209131137_1992_icc_world_cup_trophy_6

 1992 உலக கோப்பை இறுதி ஆட்டம்

24 ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற இந்த இறுதி போட்டி தகுதி தான், இங்கிலாந்து அணியின் மிகப் பெரிய வெற்றியாக பல ஆண்டுகளுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் கடந்த 23 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளும் இங்கிலாந்து அணியை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், முயல் - ஆமை கதை போல எளிதில் முந்திச் சென்றன.

மற்ற நாடுகள், ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் பாணி, அவர்களும், இங்கிலாந்து அணியும், வெவ்வேறு விளையாட்டுகளை விளையாடுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியது எனக் கூறலாம்.

 

160403163435_england_cricket_512x288_get

 கோப்புப் படம்

புள்ளி விவரங்களை மட்டுமே சார்ந்திருந்தது இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முன்னணி சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான், தான் விளையாடிய காலகட்டத்தில், இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டிகளில் 239 ரன்கள் எடுத்து விட்டால், அப்போட்டிகளில் 72% ஆட்டங்களில் இங்கிலாந்து வென்று விடும் என்று எங்கள் அணியினர் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது என்று தெரிவித்தார்.

110719091151_swann_466x350_agency_nocred

 

 முன்னணி சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான்

இது குறித்து அவர் கூறுகையில், ''கொழும்பில் இலங்கைக்கு எதிரான 2011 உலக கோப்பை காலிறுதி ஆட்டத்தில், எங்களின் திட்டப்படி பேட்டிங் செய்து, 229 ஓட்டங்களை எடுத்தோம். 115 பந்துகளை சந்தித்த ஜொனாதன் டிராட், 86 ஓட்டங்கள் எடுத்தார். எல்லாம் அருமையாக இருந்தது'' என்று கூறிய ஸ்வான், மேலும் தொடர்கையில், '' ஆனால், நாங்கள் நிர்ணயித்த இலக்கினை இலங்கை அணி 39.3 ஓவர்களிலேயே எடுத்து வெற்றி வாகை சூடியது'' என்று தெரிவித்தார்.

ஆனால், இதை விட ஒரு மோசமான நிலையை இங்கிலாந்து அணி 2015 ஒரு நாள் உலக கோப்பையின் போது சந்தித்தது. வங்கதேசத்துடன் நடந்த போட்டியில் தோல்வியுற்ற இங்கிலாந்து அணி, 2015 உலக கோப்பையை விட்டு வெளியேறியது.

 

160908115502_englandcricket2_512x288__no

 2015 உலக கோப்பையை விட்டு வெளியேறிய இங்கிலாந்து

முன்னாள் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான இயான் போத்தம், இப்போட்டி முடிவினை மிகவும் பரிதாபகரமானது என்று குறிப்பிட்டார்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடாதது மற்றும் புள்ளி விவரக் கணக்குகளை அதிகமாக சார்ந்திருந்தது ஆகியவை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த, 2015 ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை அதிகமாக பாதிப்படையச் செய்தது.

160316180515__englands_captain_eoin_morg 

2015 உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் பங்களிப்பு

எதிரணி போட்டி நடந்த இடம் முடிவு வித்தியாசம்
நியூசிலாந்து உள்ளூர் வெற்றி 3-2
ஆஸ்திரேலியா உள்ளூர் தோல்வி 2-3
பாகிஸ்தான் வெளிநாடு வெற்றி 3-1
தென் ஆப்ரிக்கா உள்ளூர் தோல்வி 2-3
இலங்கை உள்ளூர் வெற்றி 3-0
பாகிஸ்தான் உள்ளூர் வெற்றி 4-1

2015 ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு பின்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து அணியின் வெற்றி சதவீதம் 1.75. இதை விட சிறந்த வெற்றி சதவீதத்தை உலக சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா மட்டுமே பெற்றுள்ளது. அதன் வெற்றி சதவீதம் 2.13 ஆகும்.

இது எவ்வாறு நிகழ்ந்தது?

2015 உலக கோப்பைக்கு பின்னர், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய வீரர்களால் இங்கிலாந்து அணி ஒரு ஓவரில் 6.33 என்ற ரன் சதவீத விகிதத்தை பெற்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது பேட்டிங்கை வலுவாக்கி கொண்டது.

160330161558_englands_jason_roy__640x360  ஜேசன் ராய்

இது மற்ற அனைத்து நாடுகளையும் விட சிறந்த ரன் சதவிகிதமாகும்.

இதே காலகட்டத்தில், உலக அளவில் ஆறு மட்டையாளர்கள் மிக விரைவாக ஒரு நாள் போட்டிகளில் 500 ஓட்டங்களை பெற்றனர்.

இதில் ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் அடங்குவர்.

160816225919__ben_stokes_640x360_getty_n  பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணி கற்றுக் கொண்ட பாடங்கள்

இங்கிலாந்து அணியால் ஒரு நாள் போட்டிகளில் சாதிக்க முடிந்ததற்கு முக்கிய காரணமே, அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு முறைகளில் புதுமையை புகுத்தியது மட்டுமல்ல, தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்கள் விளையாடியதும் தான்.

160908115337_englandcricket1_640x360_get 

தற்போது உலகின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக விளங்கும் இங்கிலாந்து அணி, ஒரு உலக அளவிலான போட்டி தொடர் தற்போது தொடங்கினால், நிச்சயம் போட்டி தொடரை வெல்லக்கூடிய ஓர் அணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த கோடைக்காலத்தில் இங்கிலாந்தில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை அல்லது 2019-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடக்கவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி தொடருக்காகவோ இங்கிலாந்து அணி காத்திருக்க வேண்டும்.

160204132447_england_south_africa_cricke  

தனது தற்போதைய ஆட்ட பாணியை இங்கிலாந்து தொடர்ந்து மேற்கொண்டால், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து தனது வெற்றிகளை நிச்சயம் தக்க வைத்துக் கொள்ளும்.

ஒரு வேளை, 2019 கோடை காலத்தில் நடக்கவுள்ள உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஒரு நாள் கிரிக்கெட்டின் மிகப் பெரிய பரிசான ஒரு நாள் கிரிக்கெட் கோப்பையை, இங்கிலாந்து கேப்டன் பெறலாம். இதன் மூலம், உலக கோப்பை வெற்றி என்பதற்கான இங்கிலாந்தின் 44 வருட காத்திருப்பு முடிவுக்கு வரக்கூடும்.

http://www.bbc.com/tamil/sport/2016/09/160908_england_cricket

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.