Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு மட்டம் உயர்வடைந்து செல்கிறது மருத்துவர் மைதிலி:-

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு மட்டம் உயர்வடைந்து செல்கிறது மருத்துவர் மைதிலி:-

 

கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு மட்டம்  உயர்வடைந்து செல்கிறது மருத்துவர் மைதிலி:-



2012 ஆம் ஆண்டு கணிப்பின் படி இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம் போசாக்கு மட்டத்தில் கடைசி மாவட்டமாக காணப்பட்டது.  ஆனால் தற்போது அதிலிருந்து முன்னேறிச் செல்கிறது. இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது இருந்தும் மாவட்டத்தின் போசாக்கு மட்டத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மைதிலி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை 09-09-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் போசாக்கு  தொடர்பான தேசிய வேலைத்திட்ட முன்னேற்ற பரிசீலனை கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் தனியே வைத்திய துறையை மட்டும் சார்ந்தது அல்ல.   விவசாயதுறை, மீன்பிடி துறை, கல்வித்துறை, ஊடகத்துறை என பல்துறைகளின் இணைந்த ஒரு குழு வேலைத்திட்டம்  இங்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படும் போதே போசாக்கு மட்டத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில்  அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற ஒரு சூழல் நிலவுகிறது எனவும் தெரிவித்த அவர், இலங்கையை பொறுத்தவரை ஜந்து வயதிற்குட்பட்ட 0.2 மில்லியன் சிறுவர்கள் வயதிற்கேற்ற வளர்ச்சி இன்றியும், 0.3 மில்லியன் சிறுவர்கள் வயதிற்கேற்ற நிறையின்றியும், சுமார் 4 மில்லியன் மக்கள் தாதுபொருள் ஊட்டச் சத்துக் குறைவாலும், மூன்றில் ஒரு பெண் அதிக எடையுடனும் காணப்படுவதாக 2012 புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர் காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் கிராம மட்டம், பிரதேச செயலக மட்டம், மாவட்டம் மட்டம் என அனைத்து நிலைகளிலும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மருத்துவா் மைதிலி வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், திட்டப்பணிப்பாளர் மோகனபவன், பிரதேச செயலாளர்கள், சுகாதார துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135784/language/ta-IN/article.aspx

புலப்பெயர் புண்ணியவான்கள் தென் இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கரை அழைக்காமல் விட்டு இவர்களுக்கு ஏதாவது செய்யலாமே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.