Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் மந்திராலோசனை நடத்திய மஹிந்த! சிக்கலில் மாட்டிய சிரேஷ்ட அமைச்சர்

Featured Replies

மலேசியாவுக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்ச்சையில் சிக்கியுள்ள போதிலும், தனது குடும்பம் சார்ந்த நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவருடன் நிதி மோசடிகளை மறைக்கும் திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மலேசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே மஹிந்த சென்றிருந்ததாக கூறப்பட்டது.

அரசாங்கத்தின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நிதி பங்களிப்பாளரான அமைச்சர் தயாகமகே மற்றும் அவரது மனைவி ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தயா கமகே மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபட்டமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

மலேசிய தூதுவரின் வீட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு பின்னணியில் பாரிய அரசியல் கொடுக்கல் வாங்கல் ஒன்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி ஒப்பந்தங்களை தயா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷர்களின் ஊழல் மற்றும் மோசடி வெளியே வருவதனால் தயா கமகேவுக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி ஊழல் மோசடிகளை முடி மறைக்க வேண்டும் என இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மஹிந்த அரசாங்கத்தினால் தனக்கு சொந்தமான செவனகல சீனி தொழிற்சாலை பறிக்கப்பட்டதாக தயா கமேகே முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதன் ஊடாக அவர்களுக்குள் காணப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களின் நிலை உறுதியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/117159

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதை மறைக்கத்தான் புலிபயங்கரவாதிகளின் தாக்குதல் நாடகமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.