Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் : தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம்

Featured Replies

பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் : தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம்

 

பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வி­த­மான கரி­ச­னை­யு­மற்ற வகையில் 64 மாடி­களை கொண்ட தொடர்­மாடி குடி­யி­ருப்பில் எம்மை அடைத்து துன்­பு­றுத்­தவே அர­சாங்கம் விரும்­பு­கின்­றது என்று பம்­ப­ல­ப்பிட்டி தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் தெரி­வித்­தனர்.

81109019.jpg

இந்தக் குடி­யி­ருப்பு தொகு­தியை வர்த்­தக நட­வ­டிக்­கை­க­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக்­கொண்டு முதி­யோரையும் சிறு­வர்­க­ளையும் அநா­த­ர­வா­கவே பலரும் முயற்­சிக்­கின்­றனர். குறித்த விவ­கா­ரத்தில் உட­ன­டி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யிட்டு பிரச்­சி­னை­களை தீர்க்க முன்­வ­ர­வேண்டும் எனவும் அங்­குள்ள மக்கள் வேண்­டுகோள் விடுத்­தனர்.

குறித்த விடயம் தொடர்பில் பம்­ப­லப் பிட்டி குடி­யி­ருப்பு நலன்­புரி சங்கத் தலைவர் என்.ரகு­நந்தன், பம்­ப­லப்­பிட்­டியில் வசிக்­கின்ற சுமார் 300 குடும்­பங்கள் 10.5 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் பல தொகு­தி­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.

குறித்த மக்­களை தற்­போது புதிய வேலைத்­திட்­டத்­தின்கீழ் ஒரு ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குள் 64 மாடி­களை கொண்ட தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்குள் முடக்க வேலைத்­திட்டம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

இது மிகவும் மோச­மான நட­வ­டிக்­கை­யாகும். இரு தலை­மு­றை­க­ளுக்கு மேற்­பட்ட காலம் வாழ்ந்த மக்­களை எவ்­வி­த­மான தூர­நோக்­கு­மின்றி ஒரு ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குள் முடக்க நினைப்­பது மிகவும் வேத­னை­யான விட­ய­மாகும்.

மேலும் புதிய வீட­மைப்புத் திட்டம் மூல­மாக எங்­க­ளுக்­கான அடிப்­படை வச­திகள் எவையும் பூர்த்தி செய்­யப்­ப­டாது என்­பது எமக்குத் தெரியும். அவ்­வா­றி­ருக்கும் போது இத்­திட்­டத்தை ஆரம்­ பிப்­ப­தற்கு ஏன் இவ்­வாறு பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­கின்­றார்கள் என்­பது தெரி­யா­ம­லுள்­ளது.

கொழும்பு மாந­கர சபை மற்றும் தேசிய வீட­மைப்பு அதி­கா­ர­சபை போன்­ற­வற்றின் ஊடாக அடிக்­கடி அறி­வித்­தல்­களும் அனுப்­பப்­ப­டு­கின்­றனர். இவை எல்லாம் சட்­டத்­துக்கு முர­ணா­ன­வை­யாகும். குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளோம். பல அமைச்­சர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை மேற்­கொள்ள நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டும் எவையும் பய­ன­ளிக்­க­வில்லை. இந்த நிலம் எங்­க­ளுக்குச் சொந்­த­மா­னது.

எங்­க­ளது உரித்­தின்றி எங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க முடி­யாது. குறித்த புதிய வீட­மைப்புத் திட்டம் மூலம் சுமார் 1098க்கும் மேற்­பட்ட மக்கள் பெரும் பாதிப்­ப­டைவர். முழு மை­யான எங்­க­ளது அடை­யா­ள­மாக உள்ள இந்­நி­லத்தை சூறை­யாட முயற்­சிக்க வேண்டாம்.

சிறு­வர்­களும் முதி­யோருமே அதி­க­மாக இக்­கு­டி­யி­ருப்பில் உள்­ளனர். அவர்களால் புதிய குடியிருப்பில் வாழ்வதென்பது மிகவும் கடினமாகும். இது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இந்த நிலப்பரப்பில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிகின்றோம். அப்படியாயின் அதற்கு ஏன் எங்களது குடியிருப்பை தேர்ந்தெடுத்தார்கள்? இவற்றுக்கெல்லாம் கூடிய விரைவில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/11223

  • தொடங்கியவர்

பம்பலப்பிட்டி தொடர்மாடி விவகாரக் கூட்டம் பிசுபிசுத்தது
 
12-09-2016 08:52 AM
Comments - 0       Views - 130

article_1473650815-2.JPG-ப. பிறின்சியா டிக்சி

பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட விவகாரம் தொடர்பில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கவுள்ள மகஜருக்கு கையொப்பங்களைத் திரட்டிக்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம், எவ்விதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் கடும் வாக்குவாதங்களுடன் நிறைவடைந்தது.

பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட நலன்புரிச் சங்கத்தினரால், சனசமுக நிலைய மண்டபத்தில் இந்தக் கூட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் கட்டப்படவுள்ள 60 மாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குச் செல்வதற்கு விரும்பவில்லை என்பதனையே, கூட்டத்தில் பங்கேற்ற பலர் சுட்டிக்காட்டினர். இன்னும் சிலர், 60 வருடங்கள் பழமைவாய்ந்த கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்துக்குச் செல்வதையே விரும்பியிருந்தனர்.

எனினும், புதிய கட்டடத்துக்குச் செல்வதற்கு விருப்பமில்லை என்பதை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜரொன்றை அனுப்புவதற்கான கையெழுத்தைப் பெற்றுக்கொள்ளல், இந்த விவகாரம் தொடர்பில் நலன்புரிச் சங்கத்தினால் முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கையை நாடுவதாயின் அதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, நேற்றையக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

எனினும், கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர், மகஜரில் கையொப்பமிடுவதற்கு மறுத்துவிட்டனர். இன்னும் சிலர், தங்களுடைய வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கோரிநின்றனர்.

இந்தப்பிரச்சினை பொதுப் பிரச்சினை என்பதனால், வீடுகளுக்குச் சென்று கையொப்பங்களைப் பெறுவது உசித்தமற்றது என்று ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர். இதனால், இந்த விடயத்தில்  கருத்து முரண்பாடுகள் தோற்றின.

மாலை 4. 15க்கு ஆரம்பமான கூட்டம், எவ்விதமான இணக்கப்பாடும் இன்றி மாலை 5.30க்கு நிறைவடைந்தது.

சுமார் 300 குடும்பங்கள் வசித்து வரும் பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 60 மாடிகளைக்கொண்ட கட்டடத்தைக் கட்டுவதற்கு அமைச்சரவை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று  அங்கிகாரமளித்திருந்தது. இந்நிலையில், அந்தப் புதிய கட்டடத்தில் குறித்த தொகை மக்கள் குடியமர்த்தப்படுவர் என்று, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சரத் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட விவகாரம் தொடர்பில், செய்தி சேகரிக்கச் சென்றிருந்த டெய்லி மிரர் பத்திரிகையின் பெண் ஊடகவியலாளர், அங்கிருந்த பெண்ணொருவரால் மிரட்டப்பட்டார்.

பம்பலப்பிட்டி விவகாரம் தொடர்பிலான கூட்டம், பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட நலன்புரிச் சங்கத்தினரால், சனசமுக நிலைய மண்டபத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை நடத்தப்பட்டது. இதுதொடர்பிலான செய்திகளைச் சேகரிக்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு அழைப்பிதழும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் அதனை ஒலிப்பதிவு செய்துகொண்டனர்.

இதன்போது, கூட்டத்துக்கு வருகைதந்திருந்த குறித்த தொடர்மாடியை வசிப்படமாகக் கொண்ட பெண்ணொருவர், 'உன்னை யார் வரச்சொன்னது', 'ஒலிப்பதிவை அழி', 'எங்களுடைய விடயங்களில் தலையிடுவதற்கு நீங்கள் யார்?' உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு மிரட்டியுள்ளார். எனினும், அங்குசென்றிருந்த ஊடகவியலாளர்கள் நிலைமையை மிக நிதானமாக அவதானித்துவிட்டு அங்கிருந்து திரும்பிவிட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/181659/பம-பலப-ப-ட-ட-த-டர-ம-ட-வ-வக-ரக-க-ட-டம-ப-ச-ப-ச-த-தத-#sthash.QUP7Ys32.dpuf
On 12/9/2016 at 11:27 AM, நவீனன் said:

சுமார் 300 குடும்பங்கள் வசித்து வரும் பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 60 மாடிகளைக்கொண்ட கட்டடத்தைக் கட்டுவதற்கு அமைச்சரவை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று  அங்கிகாரமளித்திருந்தது.

கொழும்பில் தமிழர்களின் கலாச்சார மையமாக திகழும் இடத்தை அழிப்பதே இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் மாபெரும் திட்டம்.

"நல்லாட்சி" என்ற பெயரில் ரணில்-மைத்திரி தலைமையில் தொடர்கிறது மிக மோசமான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம்.

ஒட்டுண்ணிகள் சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன், மனோகணேசன் என்ன செய்கிறார்கள்?

On 12/9/2016 at 11:08 AM, நவீனன் said:

கொழும்பு மாந­கர சபை மற்றும் தேசிய வீட­மைப்பு அதி­கா­ர­சபை போன்­ற­வற்றின் ஊடாக அடிக்­கடி அறி­வித்­தல்­களும் அனுப்­பப்­ப­டு­கின்­றனர். இவை எல்லாம் சட்­டத்­துக்கு முர­ணா­ன­வை­யாகும். குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளோம். பல அமைச்­சர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை மேற்­கொள்ள நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டும் எவையும் பய­ன­ளிக்­க­வில்லை. இந்த நிலம் எங்­க­ளுக்குச் சொந்­த­மா­னது.

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் கோத்தபாய, தினேஷ் குணவர்தன போன்றவர்களால் திட்டமிடப்பட்ட தமிழரை நசுக்கும் திட்டத்தை "நல்லாட்சி" என்ற பெயரில் ரணில்-மைத்திரி தலைமையில் தொடர்கிறது மிக மோசமான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம்.

5 பிரதான பாடசாலைகள், 3 முக்கிய வணக்கத் தலங்கள் சூழந்த பகுதியில் வர்த்தக மையம் அமைக்க நினைப்பது சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி முயற்சி.  

ஒட்டுண்ணிகள் சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன், மனோகணேசன் என்ன செய்கிறார்கள்?

இவர்களுக்கு வாக்களித்த மக்கள் கைவிடப்பட்டுள்ளனர்.

புதிய குடியிருப்புகளுக்கு பேராசைப்படும் சபலத் தமிழர்கள் தமது வாழ்வை இழந்து போவது உறுதி.

  • தொடங்கியவர்
பம்பலப்பிட்டி தொடர்மாடி விவகாரத்தில் நடுங்கும் அத்திபாரம்
 
14-09-2016 11:51 AM
Comments - 0       Views - 15

article_1473834615-By-line.jpgarticle_1473834628-1.jpgarticle_1473834636-2.jpgarticle_1473834643-3.jpgarticle_1473834651-4.jpgarticle_1473834659-5.jpgarticle_1473834666-6.jpgarticle_1473834673-7.jpgarticle_1473834681-8.jpgarticle_1473834688-9.jpgarticle_1473834701-2.JPG

- See more at: http://www.tamilmirror.lk/181853/பம-பலப-ப-ட-ட-த-டர-ம-ட-வ-வக-ரத-த-ல-நட-ங-க-ம-அத-த-ப-ரம-#sthash.ba3z6TOt.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.