Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை தேவையின்றி பீதியடையச் செய்ய வேண்டாம் விமல் வீரவன்சவிற்கு, மல்வத்து பீடாதிபதி ஆலோசனை

Featured Replies

மக்களை தேவையின்றி பீதியடையச் செய்ய வேண்டாம் விமல் வீரவன்சவிற்கு, மல்வத்து பீடாதிபதி ஆலோசனை

 

மக்களை தேவையின்றி பீதியடையச் செய்ய வேண்டாம் விமல் வீரவன்சவிற்கு, மல்வத்து பீடாதிபதி ஆலோசனை




மக்களை தேவையின்றி பீதியடையச் செய்ய வேண்டாம் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.


உத்தேச அரசியல் சாசனம் தொடர்பில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவோ பொய்யான பிரச்சாரங்களையோ செய்ய வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் எவ்வித யோசனைகளும் உள்ளடக்கப்படாது என ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள காரணத்தினால் ஜே.என்.பி கட்சி உறுப்பினர்கள் தேவையின்ற அச்சமடையத் தேவையில்லை எனவும், மக்களை குழப்பத் தேவையில்லை எனவும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


புதிய அரசியல் சாசனம் நாட்டை பிளவுபடுத்தும் என ஜே.என்.பி.யினர் மல்வத்து பீடாதிபதியிடம் தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135942/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விமலைவிடவும் கேவலமாகச் செயற்படும் பிக்குகளையும் அழைத்துத் தேரர் இந்த அறிவுறுத்தலை வழங்கவேண்டும். :unsure: 

  • தொடங்கியவர்
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தேவையற்ற சந்தேகம் வேண்டாம்- விமலுக்கு மல்வத்த மகாநாயக்கர் அறிவுரை
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தேவையற்ற சந்தேகம் வேண்டாம்- விமலுக்கு மல்வத்த மகாநாயக்கர் அறிவுரை
 
புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகம் செய்ய முன்னர், சந்தேகமான அறிவிப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மல்வத்த அஸ்கிரி மகாநாயக்க தேரரை அறிவூட்டும் நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச நேற்று கண்டி தலதா மாளிகைக்குச் சென்று கலந்துரையாடியுள்ளார். இதன்போதே மகாநாயக்க தேரர் இதனைக் கூறியுள்ளார்.
1473832842_ww.jpg
எமக்குள்ள அனுபவத்தின்படி, உத்தேச அரசியலமைப்பு யோசனை நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும். அதனை தாமதிக்காமல் அறிவிப்பது எமது கடமையாகும் என மகாநாயக்க தேரரிடம் விமல் வீரவங்ச எடுத்துக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளிக்கையில் தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
புதிய அரசியலமைப்பில் நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு யோசனையும் இடம்பெற மாட்டாது என ஜனாதிபதியும், பிரதமரும் உறுதி பட தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்கையில் தேவையற்ற பயம் அவசியமற்றது எனவும் மகாநாயக்க தேரர் விமல் வீரவங்ச வுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

http://onlineuthayan.com/news/17567

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.