Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மில். அமெரிக்க டொலருடன் முள்ளியவளைவாசி இந்திய கடற்பகுதியில் கைது!

Featured Replies

ஒரு மில். அமெரிக்க டொலருடன் முள்ளியவளைவாசி இந்திய கடற்பகுதியில் கைது!
 
 
ஒரு மில். அமெரிக்க டொலருடன் முள்ளியவளைவாசி இந்திய கடற்பகுதியில் கைது!
 
இந்திய – இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டில் அநாதரவாக இருந்த நிலையில் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர் ஒருவர் இந்திய பாதுகாப்புத்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  
 
 முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அருள் ஜெயரத்தினம் என்பவர் தமிழகத்தில் அரசியல் தஞ்சம் கோரி கடல் வழியாக சென்றவேளையே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
                                                                        
தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் பல மணி நேரமாக நிற்பதாக கடலோரக் காவல்படையினருக்கு மீனவர்கள தகவல் கொடுத்த நிலையில் நேற்று பிற்பகல் அங்கு சென்ற கடலோரகாவல்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்..
 
பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்றபோது கரையோர பொலிஸாரும்  மண்டபம் பொலிஸாரும் குறித்த அகதியை பொறுப்பேற்க மறுத்த நிலையில் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பின் ஒருவழியாக கரையோர பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1473827617_cc.jpg
பொலிஸாரின் விசாரணையில்   குறித்த நபர் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். 
 
20 வயது முதல் 40 வயது வரையிலான உடல் திடமான தமிழர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று விஷ ஊசி போட்டு கொலை செய்வதாக தகவல் கிடைத்ததால் உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி  தான் இலங்கை படகு மூலம் தனுஷ்கோடி வரும் வழியில் பாதியிலேயே மணல்திட்டில் இறக்கிவிட்டுச் சென்று விட்டதாக குறித்த நபர் தெரிவித்ததாகவும் கரையோர பொலிசார் தெரிவித்துள்ளனர். 
 
குறித்த நபரிடம் இருந்து  ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத் தாள் ஒன்றும், அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்  மண்டபம் அகதி முகாமில் குறித்த நபரின் சகோதரி இருப்பதாகவும் கூறினர்

http://onlineuthayan.com/news/17561

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியா சென்ற இலங்கையர் கைது 

 

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

adsa1.jpg

மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய குறித்த நபரை தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இந்திய ரூபாவில் ஒரு இலட்சம் மதிப்புடைய அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த அருள் ஜெயரத்னம் (42) என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் இந்திய பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/11296

  • தொடங்கியவர்

இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் விடுதலைப் புலிச் சந்தேக நபர் கைது

 

இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் விடுதலைப் புலிச் சந்தேக நபர் கைது



இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் மண்டபம் முகாம் உத்தியோகத்தர்கள் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


41 வயதான அருள் ஜெயரத்தினம் எனப்படும் ராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


இரகசியமான முறையில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் இந்த நபர் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச படையினர் சித்திரவதை செய்யக் கூடும் என்ற அச்சத்தினால் தாம் இவ்வாறு நாட்டை விட்டு தப்பியதாக ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135949/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் V ஒரு லட்சம் இந்திய ரூபாய்.

உதயன் V வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.