Jump to content

அதிசய உணவுகள் - 12: கிரீன் டீ ஐஸ்கிரீம்!


Recommended Posts

அதிசய உணவுகள் - 12: கிரீன் டீ ஐஸ்கிரீம்!

 

 
ஜப்பானிய ‘ஓனிகிரி’.
ஜப்பானிய ‘ஓனிகிரி’.

‘சுத்தமான, சுவையான உண்மையான உணவு என்பது பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அல்லது பைகளில் வருவதில்லை. அவை பூமியில் இருந்து, கடலில் இருந்து, வயலில் இருந்து அல்லது பண்ணையில் இருந்து வருபவை!’ - சூசன் சோமர்ஸ்

உலக வரைபடத்தில் சுண்டைக் காய் அளவு இருக்கும் நாடான ஜப்பான், 2020 ஒலிம்பிக் போட்டியைத் தன்னுடைய தலைநக ரான டோக்கியோவில் அரங்கேற்ற இருக்கிறது. 51 வருஷங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த கவுரவம் அந்த நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது.

டோக்கியோவின் ‘ஷிபுயா’ மாகாணத் தில் 10 பாதைகளில் வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அந்த இடத்தில் சிக்னல் விழும்போது, குறுக்கே நடந்து செல்லும் பாதையில் ஒரே சமயத்தில் 2,500 பாதசாரிகள் ஒவ்வொரு முறையும் கடந்து செல்வார்கள். இதை ஓர் உணவகத்தின் மேல் மாடியில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அடடா… சுறுசுறுப்பான தேனீக்களின் கூட்டம்! ஒன்றோடு ஒன்று இடித்துக் கொள்ளாமல், தோளோடு தோள்கள் உரசிக்கொள்ளாமல் சில நொடிகளில் சாலையைக் கடந்து அவரவர் இலக்குகளை நோக்கி செல்வதைக் கண்டு ஆச்சரியத்தில் முழ்கினேன்.

அளவில் அந்த நாடு சிறிதாக இருந்தால் என்ன? அதன் சுறுசுறுப்பு பெரிதாக இருக்கிறதே! ‘முர்த்தி சிறுசு… கீர்த்தி பெருசு’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்!

அந்தத் தேடல்

உணவகத்தின் உள்ளே, அந்த ஜப்பானிய அன்பருக்குக்குப் பின் னால் பலி ஆடுகளைப் போல பயந்துகொண்டே சென்றோம். என் னுடைய கண்கள் வெளிநடப்பு வாயில் எங்கே இருக்கிறது என்று தேடியது. எதாவது எக்குத்தப்பாக நம் டேபிளுக்கு வந்தால் ஒட்டம் எடுக்கத்தான் அந்தத் தேடல்.

இரண்டு நடுத்தர அளவுள்ள கிண்ணங்களில் கொதிக்க கொதிக்க சூப் போன்ற திடத்தில் நூடூல்ஸ் மிதக்க ஓர் உணவு வந்தது. ‘‘இதன் பெயர் சோபா (soba). இது பக் கோதுமையினால் ஆன நூடுல்ஸ்… சாப்பிட்டுப் பாருங்கள்’’ என்றவுடன் தயக்கத்துடன் ஒரு ஸ்பூன் எடுத்துச் சுவைத்தேன்.

‘‘சிவா, உண்மையாகவே நன்றாக இருக்கிறது’’ என்று சொல்லி தலையை நிமிராமல் சாப்பிடத் தொடங்கினேன். பலவிதமான சாஸுகள் சேர்க்கப்பட்டு செய்யப்பட்டிருந்த அந்த சோபாவே பின் நாட்களில் என்னுடைய முக்கிய உணவாக மாறிப்போனது.

கிறங்க வைக்கும் சுவை

டெம்புரா (tempura) என்று மாவில் தோய்தெடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கப்பட்ட இறால்கள் சுவையில் என்னை கிறங்க வைத்தன. இந்த வகையில் பலவிதமான காய்கறி களையும் மொறு, மொறு என்று பொரித்துத் தருகிறார்கள்.

சோபாவைப் போலவே, யுடான் என்று கோதுமையினால் செய்யப்பட்ட நூடூல்ஸ் சூப்புகளும் கிடைக்கிறது. பக் கோதுமை என்றால் வெள்ளாவியில் வைக்கப்பட்ட கோதுமையாம். இத னால்தான் சோபா நூடூல்ஸ் அவ்வளவு மென்மையாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

‘‘இது எங்க ஊர் ஓனிகிரி (onigiri) சுவைத்துப் பாருங்கள்’’ என்றவுடன் பிளேட்டில் ஆவி பறக்க முட்டைகளைப் பொரித்து எடுத்ததைப் போன்று வந்த வஸ்துகளை சந்தேகத்துடன் உற்று நோக்கினேன். ‘‘சிவா, இவை எந்த ஜந்துவின் முட்டைகளோ தெரியவில்லை’’ என்று முனகினேன். என் கணவரும் திரு திரு என்று முழிக்க, ‘‘பயப்படாதீங்க. இவை எல்லாம் ரைஸ் பால்ஸ். அதாவது சோற்று உருண்டைகள்’’ என்றார். வேக வைத்த அரிசியை உருட்டி அதனுள்ளே வெள்ளரிக்காய், பிளம் துண்டுகள், தக்காளித் துண்டுகளை வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால், அல்லது கிரில் (grill) செய்து கொடுத்தால் அதுவே ஓனிகிரி.

இப்படி சோற்று உருண்டைகளின் உள்ளே அடைபடும் பொருட்கள், இறால், பன்றி கறி, மாட்டிறைச்சி, ஆக்டோபஸ் என தேவைக்கேற்ப மாறும்.

‘‘இந்த நாசுவை (Nasu) ஓனி கிரிக்கு சைடுடிஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் அந்த ஜப்பானிய அன்பர். நம்ம ஊர் கத்திரிக்காயைப் பதமாக தீயில் வாட்டி, சாஸில் தோய்த்து எடுத்தால் அதுதான் நாசு டிஸ்.

‘‘அப்பாடி! வயிறு நிறைந்துவிட்டது. ஜப்பானுக்கு வந்த இரண்டு நாட்களில் இன்றுதான் வயிறு முட்ட சப்பிட்டோம். மிகவும் நன்றி!’’ என்றார் என் கணவர்.

ஒரு நீண்ட உரை

‘‘அடடா, கிரீன் டீ ஐஸ்கிரீம் சாப்பிடாமல் எப்படி உங்கள் சாப்பாடு முழுமை அடையும்? உங்களுக்கு ஒன்று தெரியுமா? நவம்பர் 14-ம் தேதி 2009-ம் ஆண்டில் எங்கள் நாட்டுக்கு யு.எஸ். பிரெசிடெண்ட் பாரக் ஒபாமா வந்தார். டோக்கியோவின் சண்டோரி ஹாலில் வெளிநாட்டு கொள்கைகளைப் பற்றி பேசும்போது, சிறுவயதில் தன் தாயாருடன் ஜப்பானுக்கு வந்ததைப் பற்றியும், அப்போது கடற்கரை நகரமான காமகூராவில் கிரீன் டீ ஐஸ்கிரீம் சாப்பிட்டதையும், அது மிகவும் சுவையானதாக இருந்ததையும் நினைவுகூர்ந்தார். அதுமட்டும் அல் லாமல் அந்த சமயத்தில் பிரதம மந்திரியாக இருந்த யுகியோ ஹடோயமா வரவேற்பு விருந்தில், ஒபாமாவுக்கு கிரீன் டீ ஐஸ்கிரீமை டெசர்ட்டாக பரிமாற செய்ததற்காக நன்றி கூறினார்” என்று ஒரு நீண்ட உரையை ஆற்றி முடித்தார் நண்பர்.

நாங்களும் கிரீன் டீ பவுடரினால் செய்யப்பட்ட ஐஸ்கிரீமை சாப்பிட்டோம். ஒபாமாவைப் போலவே எங்கள் மனதிலும் நாக்கிலும் அதன் சுவை பதிந்துப்போனது.

a1_3013706a.jpg

‘சோபா’ நூடுல்ஸை சுவைக்கும் சாந்தகுமாரி

இந்த அனுபவங்களுக்குப் பிறகு ஜப்பானில் இருந்த நாட்களில் வயிறு காயாமல் சாப்பிடக் கற்றுக் கொண்டோம். உணவு விடுதிகளுக்கு செல்வதற்கு முன்னால், அதன் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி கேஸுகளில் அன்றைக்கு விற்கப்படும் உணவு வகைகளைப் பொம்மைகளாக செய்து வைத்திருப்பதை பார்த்து, வேண்டியதை ஆர்டர் செய்து... வேண்டாததை ஒதுக்கக் கற்றுக் கொண் டோம்.

குசிமோனோ (kushimono) என்று தாமரைத் தண்டுகள், காளான்கள், பலவிதமான காய்கறிகளை வறுத்து குச்சிகளில் குத்திக் கொடுக்கிறார்கள். டல்கன் (dalkon) என்று முள்ளங்கிகளை வேகவைத்துத் துருவி, சாலட்டாகவும் ஊறுகாய்களாகவும் தருகிறார்கள். மாமி (mame) என்று சோயா பீன்ஸ்கள், பீன்ஸ் கொட்டைகள் வறுவலாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடக் கொடுக்கிறார்கள். பீன் தயிரில் தயாரிக்கப்படும் டோபுவோடு கடல் பாசி, காய்கறிகள் கலந்து சாலட்டாக கிடைக்கிறது. யமிமோ (yamimo) என்ற ஜப்பானிய கருணைக்கிழங்கு, நம்ம ஊரு உருளைக்கிழங்கும், பூசணிக்காயும் கிடைக்கிறது. எப்படி என்றால் வறுத்து, வேகவைத்து, பச்சையாக துருவி, தூவப்பட்டு. ‘‘வாவ்!’’ என்று கூவத் தோன்றுகிறது அல்லவா! மரக்கறி உண்பவர்களும் தைரியமாக ஜப்பானை வலம் வரலாம்!

- பயணிப்போம்….

http://tamil.thehindu.com/opinion/blogs/அதிசய-உணவுகள்-12-கிரீன்-டீ-ஐஸ்கிரீம்/article9118277.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப்  களத்தை விட்டு வெளியேறினார். ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது. 'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/198229
    • ஆஸி. மண்ணில் 7 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சர்வதேச ஒருநாள் முதலாவது வெற்றி (நெவில் அன்தனி) அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை சகலதுறைகளிலும் விஞ்சிய பாகிஸ்தான் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. அவுஸ்திரேலிய மண்ணில் 7 வருடங்களின் பின்னர்  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஈட்டிய  முதலாவது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது. மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நான்கு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் 5 விக்கெட் குவியல், ஷஹீன் ஷா அப்றிடியின் துல்லியமான பந்துவீச்சு, சய்ம் அயூப், அப்துல்லா ஷபிக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 35 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 5  விக்கெட்களையும்  ஷஹீன் ஷா அப்றிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. சய்ம் அயூப் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 122 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பெற்று பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தன் பலனாக அவுஸ்திரேலியா சிரமப்படாமல் வெற்றியை ஈட்டிக்கொண்டது. பாபர் அஸாம் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: ஹரிஸ் ரவூப் https://www.virakesari.lk/article/198227
    • அணித்தலைவருடன் முறைத்துக்கொண்டு ஆட்டத்தின் நடுவே மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் அல்ஜாரி ஜோசப் - இரண்டு போட்டித்தடை அணித்தலைவர் சாய்ஹோப்புடன் முரண்பட்டுக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு இரண்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிஜ்டவுனில் இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நான்காவது ஒவரில் அணித்தலைவரின் களதடுப்பு வியூகம் குறித்து திருப்தியடையாத அல்ஜாரி ஜோசப், தனது எதிர்ப்பை வெளியிட்டமை காணமுடிந்தது. அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜோர்டன் ஹோக்சினை ஆட்டமிழக்கச்செய்தார், எனினும் அவர் அதனை கொண்டாடவில்லை. அந்த ஓவர் முடிவடைந்ததும், அணித்தலைவருக்கு அறிவிக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்றார். இதன் காரணமாக பத்து வீரர்களுடன் மேற்கிந்திய அணி ஐந்தாது ஓவர் பந்து வீசியது. எனது அணியில் இவ்வாறான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என மேற்கிந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டரன்சமி தெரிவித்துள்ளார். நாங்கள் நண்பர்களாக பழகுவோம், ஆனால் நான் கட்டியெழுப்ப விரும்பும் கலாச்சாரத்தில் இது ஏற்றுக்கொள்ளமுடியாது, என அவர் தெரிவித்துள்ளார். ஆறாவது ஓவரில் மீண்டும் ஜோசப் மைததானத்திற்குள் வந்தார் எனினும் 12 ஓவர் வரை அவர் பந்து வீசவில்லை, அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் பந்து வீசியவர் மீண்டும் மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஐந்து ஓவர்கள் பந்து வீசினார் - பத்து ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். மேற்கிந்திய தீவுகள் அணி பின்பற்றும் விழுமியங்களுடன் அல்ஜாரி ஜோசப்பின் நடத்தை ஒத்துப்போகவில்லை என மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவத்திற்காக அல்ஜாரி ஜோசப் மன்னிப்பு கோரியுள்ளார் - கிரிக்கெட் மீதான எனது வேட்கை என்னை ஆக்கிரமித்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198186
    • நெதர்லாந்து தலைநகரில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்கள் மீது தாக்குதல் - பலர் கைது நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் பலமுறை தலையிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்து பிரதமர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளார். இஸ்ரேலியர்களிற்கு எதிரான மோசமான வன்முறையை தொடர்ந்து நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. பெருமளவு பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும் இஸ்ரேலியர்கள் தாக்கப்பட்டனர் என ஆம்ஸ்டெர்டாம் மேயரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய லீக் போட்டிகளிற்காக இஸ்ரேலின் மக்காபி டெல் அவியின் இரசிகர்கள் நெதர்லாந்திற்கு சென்றிருந்தனர். இந்த தாக்குதல் தொடர்பில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் - போட்டிக்கு முன்னதாகவே  மக்காபி டெல் அவியின் இரசிகர்களிற்கும் பாலஸ்தீனிய ரசிகர்களிற்கும் இடையில் மோதலும் குழப்பமும் காணப்பட்டது பலர் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய கழகத்தின் ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளை கிழித்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198182
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.