Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் ஐயனார் வழிபாட்டுக்குரிய தொல்பொருள் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

மன்னாரில் ஐயனார் வழிபாட்டுக்குரிய தொல்பொருள் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

 

மன்னாரில் ஐயனார் வழிபாட்டுக்குரிய தொல்பொருள் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் – கட்டுக்கரைக்குளம் மற்றும் குருவில் பகுதிகளில் ஐயனார் வழிபாட்டுக்குரிய தொல்பொருள் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழக தொல்லியல் சிறப்புக்கலை மாணவர்களினால், மன்னார் – கட்டுக்கரைக்குளம் மற்றும் குருவில் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் பரமு. புஸ்பரட்ணத்தின் தலைமையில் 25 பேர் அடங்கிய பல்கலை மாணவர்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த முதலாம் திகதி முதல் இன்று வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போதே, 6 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டுக்குரிய வழிபாட்டு முறைக்கான ஆதாரப்பூர்வ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

http://newsfirst.lk/tamil/2016/09/மன்னாரில்-ஐயனார்-வழிபாட்/

  • தொடங்கியவர்

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த அடையாளம்: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

 
 அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள்

மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படுகின்ற, அகழ்வாராய்ச்சியொன்றில், 1400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஸ்பரட்னம் கூறுகின்றார்.

  அகழ்வாராய்ச்சியில்

அவருடைய தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்கள் இந்த ஆய்வகழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அகழ்வாராய்ச்சியில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஒன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கின்றது. இதற்கான தொன்மைச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இது பெரும்பாலும் குளத்துக்கு உள்ளேயும், நாங்கள் ஆய்வு செய்த இடத்திற்கு அப்பாலும் இந்தச் சான்றுகளுக்கான அடையாளப் பொருட்கள் காணப்படுகின்றன என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.

மூன்று மீட்டர் நீள அகலம் கொண்ட மூன்று குழிகள் அகழ்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில்  

இந்த ஆய்வின் மூலம் புதிய வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

  அகழ்வாராய்ச்சியில்

மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மாதோட்டம் துறைமுகத்தில் இருந்து அனுராதபுரத்தின் புராதன இராசதானிக்கு அடைக்கப்பட்டிருந்த வீதியோரத்தில் இந்தக் குடியிருப்புக்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

இந்த அகழ்வாராய்ச்சிக்கு மத்திய கலாசார நிதியம், தொல்லியல் மரபுரிமைப் பிரிவு, சுற்றுச் சூழல் பிரிவு ஆகியன யாழ் பல்கலைக்கழகத்தின்; பொறுப்பில் அனுசரணை வழங்கியிருக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில்  

இந்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும், தொல்லியல் மரபு நிலையத்தைப் பராமரிப்பதற்குமாக மன்னார் மாவட்டத்திற்கு மத்திய கலாசார நிதியம் அடுத்த ஆண்டுக்கென ஒரு மில்லியன் ரூபா நிதியொதுக்கியிருப்பதாக யாழ் மாவட்ட மத்திய கலாசார நிலைய அதிகாரி லக்ஸ்மன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் மரபுரிமை நிலையங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக மத்திய கலாசார நிதியம் 150 மில்லியன் ரூபா நிதியை அடுத்த ஆண்டுக்கென ஒதுக்கியிருக்கின்றது என்றார் லக்ஸ்மன்.

அகழ்வாராய்ச்சியில்  

மன்னார் கட்டுக்கரை குளத்தின் அகழ்வாராய்ச்சியில் ஐயனார் வழிபாடு செய்யப்பட்ட இடம் அல்லது ஐயனார் கோவில் ஒன்று அமைந்திருந்தமைக்கான அடையாளங்கள் இந்த அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில்  

இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள யானைகள், காளைகள் போன்றவற்றிற்குக் கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் காணப்படாதவைகளாக இருக்கின்றன. ஐயனார் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ள மதுரையில்கூட இந்த வகையான மணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த வகையில் இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்ந்திருப்பது தெரியவந்திருக்கின்றது என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37398547

தமிழ் பகுதிகள் எங்கும் பரவலாக 3000-5000 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தொல்பொருள் எச்சங்கள் பல காணப்படுகின்றன.

இவை வெறும் பத்திரிகை அறிக்கையாக இல்லாமல், முறையான அறிவியல் அறிக்கையாக ஆவணப்படுத்தபட வேண்டியது தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் கடமை. இனியாவது இவர்கள் தங்களுக்குள் புடுங்குபடுவதில் நேரத்தை வீணாக்குவதை தவிர்த்து தமது இனம் சார்ந்த கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.