Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்கள் பள்ளியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு: கொந்தளிக்கும் கொழும்பு மக்கள்

Featured Replies

ஆண்கள் பள்ளியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு: கொந்தளிக்கும் கொழும்பு மக்கள்

புனித ஜோசப் கல்லூரியின் வெளியே இருக்கும் சுவரொட்டி

 

 காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் உருவாக்கியுள்ள அறிவிப்பு பலகை

இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார்.

இதனை பார்த்தவுடன், இக்கால அழகை விவரிக்கும் தரமற்ற பத்திரிகையின் பக்கம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை மன்னித்துவிடலாம்.

கொழும்பின் உயர்தர தனியார் பள்ளிகளில் ஒன்றான புனித ஜோசப் கல்லூரியில் அனைவரும் பார்க்க, வைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்பு பதாகையில் எந்த எழுத்துக்களும் இல்லை.

மாறாக, வேறுபட்ட உடைகளில் 16 பெண்களின் படங்களை கொண்டிருக்கும் அதில், பாதி படங்களுக்கு சரி என்ற அடையாளமும், மீதி பாதி படங்களுக்கு தவறு என்ற அடையாளமும் வழங்கப்பட்டிருப்பதை காணலாம்.

இது விபத்தாய், தற்செயலாக நிகழ்ந்தவிட்ட ஒன்றல்ல. கொழும்பில் இப்போது இது நாகரீகமும் அல்ல.

மாறாக, பெண்கள் இந்த பள்ளிக்கூடத்திற்குள் ஆசிரியர்களை சந்திக்க வரும்போது அல்லது தங்களுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட்டிச்செல்ல வரும்போது, என்ன உடைகளை அணியலாம், எவற்றை அணியக் கூடாது என்பதை விளக்குகின்ற அறிவிப்பு பலகை.

பாரம்பரிய சேலை அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உருவின்றி தயாரிக்கப்பட்ட ஆடை அணிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் ஆடைகள் போல தோன்றுபவை அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படாதவற்றில் வார் பட்டை மேலுடைகள், குட்டை பாவாடைகள்,மற்றும் கையில்லாத ஆடைகள் அடங்குகின்றன.

பள்ளி சுவரொட்டி

 

அறிவிப்பு பதாகையின் முதல் பார்வை தரமற்ற பத்திரிகையின் பக்கத்தை போல தோன்றும்

புனித ஜோசப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ஒரு படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய பிறகு இது பற்றிய கோபம் அனைவரையும் தொற்றிக் கொள்ள தொடங்கியது.

பள்ளியின் வளாகத்திற்குள் நுழைகின்ற பெண்கள் அணிந்து வர வேண்டிய கட்டாய ஆடை முறை பற்றி புனித ஜோசப் பள்ளியின் நிர்வாக ஊழியர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

“பள்ளிக்குள் அவர்கள் வர வேண்டும் என்றால், அவர்கள் பொருத்தமான ஆடை அணிந்திருக்க வேண்டும்” என்று அந்த ஊழியர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது புனித ஜோசப் பள்ளியில் மட்டுமே நடைபெறுவதில்லை.

கொழும்பிலுள்ள இன்னொரு தனியார் கல்வி நிலையமான புனித பீட்டர் கல்லூரி வாயிலின் வெளியே இது போன்றதொரு அறிவிப்பு இருப்பதாக இந்த கல்வி நிலையமே உறுதிப்படுத்தியிருக்கிறது.

“இது மாணவர்களுக்கான பள்ளி மட்டுமே. ஓர் அறிவிப்பு வைத்திருப்பதால், பெண்கள் எதை அணியலாம் எவற்றை அணியக் கூடாது என்பது பெண்களுக்கு தெரிந்திருக்கும்” என்று அலுவலக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு கட்டுப்படாத பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவார்கள்.

வயிற்று பகுதியை காட்டும் ஆடைகள் அணியலாமா?

இந்த சுவரொட்டிக்கு மறுமொழியாக அமைந்த பல பதில்கள் எல்லாம் கோபத்தை வெளிப்படுத்தின. “நல்லது... இப்போது நாம் சரியாக பின்னோக்கி செல்கிறோம்” என்றது ஒரு குறிப்பு.

இன்னொருவர் இதற்கு எதிர்ப்பை காட்டும் விதமாக எல்லா பெண் ஊழியர்களும், மாணவரின் பெற்றோரும் ”ஆண்களின் தேசிய மலேய அணியிலும் அல்லது நீச்சல் உடையிலும் வந்தால் எப்படி இருக்கும்” என்று பரிந்துரைத்தது.

“சர்வதேச பள்ளிகள்” உள்பட மற்ற பல பள்ளிகள் கைகளில்லாத ஆடைகளை அணிவதை தவிர்க்க சொல்வதாக சில பெற்றோர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பற்றி அவை பெரிய சுவரொட்டி வைப்பதில்லை என்கின்றனர்.

 

வயிற்றுப் பகுதியை காட்டும் ஆடைகள்

 சேலைகள் பெண்கள் உடலின் பல பகுதிகளை வெளிக்காட்டும்

வலது பக்கத்தி்ல் முதலாவதாக அனுமதிக்கப்பட்ட ஆடைகளின் வரிசையில் உள்ள பாரம்பரிய ஆடையான சேலை பெண்களின் வயிற்றுப் பகுதியை வெளிக்காட்டும்போது, வார் பட்டை உடைகள் மற்றும் கையில்லாத ஆடைகளை தடைசெய்திருப்பதன் முரண்பாட்டை பிறர் குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.

“ஜீன்ஸ் இல்லை? உடல் இறுக்க உடை இல்லை? கையில்லாத உடைகள் இல்லை? ஆனால், வயிற்றுப்பகுதியை வெளிகாட்டும் சேலைகளை அணியலாம். அது வயிற்று பகுதிளை வெளிக்காட்டுவதால் எப்பிரச்சனையும் இல்லை. வயிற்றுப் பகுதியை விட கைப் பகுதி ஆபாசமானது என்று யார் முடிவு செய்கிறார்கள்? அல்லது ஜீன்ஸை விட பேன்ட்டுகள்? என்று யார் தீர்மானிக்கிறார்கள்? நாம் வெப்பமண்டல நாட்டில் வாழ்கிறோம் என்று அவர்கள் உணர்கிறார்களா? மேலும், ஆண்களுக்கான இத்தகைய அறிவிப்பு பலகை எங்கே?“ என்கின்றனர் பலரும்.

இளம் தாய்மார் மற்றும் “பொருத்தமற்ற ஆடைகள்”

அரசால் நடத்தப்படுகின்ற ஆண்களுக்கான பள்ளிகளில் பெண்கள் நுழைகின்றபோது, சேலை கட்டுவது ஆடை முறையாக உள்ளது. புனித பீட்டர் மற்றும் புனித ஜோசப் போன்ற தனியார் பள்ளிகளில் அவ்வாறு கட்டாயப்படுத்துவது புதிய நிகழ்வாகும்.

16 ஆண்டுகளுக்கு முன்னர், நான் மாணவராக இருந்தபோது இலங்கையில் இத்தகைய வினோத அறிவிப்பு பலகைகள் ஏதுவும் இருக்கவில்லை. என்னுடைய தாய் என்னை சந்திக்க வரும் போதெல்லாம், தற்போது புதிய ஆடை முறையில் தவறான வரிசையில் உள்ள ஆடைகளான, முட்டி அளவு பாவாடை அல்லது அதை விட குட்டையானது உள்பட மேற்கத்திய உடையில் தான் வருவார்.

தங்களுடைய பள்ளிக்கு வருகின்ற பெண்களிடம், அவர்கள் எதை அணிய வேண்டும், எதை அணியக் கூடாது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று தெரியவில்லை.

கொழும்பு நகரில் மத்திய தர வர்க்கம் விரிவாகி வருவதால் அதிகரித்து வருகின்ற பிற்போக்கு மதிப்பீடுகள் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானால், இத்தகைய தனியார் பள்ளிகள் மிகவும் பாரம்பரிய பின்னணியை கொண்டிருப்போருக்கு இப்போது திறந்திருப்பது வெளிப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena

 

 நாகரீக கொழும்பு பெண்கள் பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்போில் இலங்கை ஜனாதிபதியும் ஒருவர்

2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த பிறகு, பிற்போக்கு மதிப்பீடுகளில் எழுச்சி தோன்றியிருப்பது உண்மை. அதிக தேசியவாத அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கொழும்பிலுள்ள நாகரீகப் பெண்களிடம் காணப்படும் குணநலன்களில் அதிருப்தி காணப்படுகிறது.

சில ரசிகைகளின் நடத்தையால் என்ரிக் இக்லெசியாஸ் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கசையால் அடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியதிலிருந்து இந்த அதிருப்தி எண்ணம் வெளிப்படுகிறது.

பல பெற்றோர் குறிப்பாக இளம் தாய்மார் ஆண்களின் பள்ளிகளுக்கு வருகின்றபோது பொருத்தமற்ற ஆடைகளை அணிந்து வருவதால் ஆடை முறை அவசியம் என்று தன்னுடைய பெயரை கூற விரும்பாத மகளிர் பள்ளி ஆசிரியை ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

என்ன அணிய வேண்டும்? எதனை அணிய கூடாது? என்று பெற்றோரிடம் எடுத்துச் சொல்லும் முறை எதிர்ப்புக்குரியது என்று தெரிவித்த அவர், இந்த சுவரொட்டியின் பின்னால் இருக்கும் காரணத்தை புரிந்திருப்பதாக கூறினார்.

.... மற்றும் மாணவர்களும் அவர்களின் ஹார்மோன்களும்

இலங்கையிலுள்ள பள்ளி மாணவர்கள்

 

 பெண்களிடன் இத்தகைய ஆடை வெளிப்பாடு இருந்தால், பெரிய மாணவாகளின் நடத்தைகளில் சிக்கல்கள் தோன்றலாம் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.

“எப்படியும் தனியாக பிரிக்கப்பட்டுவிடும் இந்த மாணவர்களில் பெரிய மாணவர்களுக்கு உள்ளேயும், இளம் தாய்மார்களோடும் நடத்தை சிக்கல்கள் தோன்றுகின்றன என்று அவர் கூறுகினார்.

இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதன் பின்னால் இருக்கும் நோக்கத்தை பலர் நியாயப்படுத்தி இருக்கின்றனர்.

“இது பற்றி என்னுடைய உளவியல் பார்வையிலான கருத்து தெரிவிக்க நான் வல்லுநர் இல்லை. ஆண்களின் பள்ளியில் 6000 மாணவர்ளோடு பணியாற்றி கிடைத்த என்னுடைய தனிப்பட்ட அனுபவம் இது“ என்று கூறுகிற ஃபவாஸ் முலாஃபர், “அடக்கிய, பொங்கி எழும் ஹார்மோன்களின் சக்தியை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதை தான் தன்னால் கூற முடியும்” என குறிப்பிடுகிறார்.

ஆனால் பெண்கள் பற்றிய ஏற்கெனவே பிற்போக்கான அணுகுமுறைகளாக இருப்பவற்றை எதிர்க்கின்ற முறை இதுவல்ல என்று பலரும் கூறினர். பிரச்சனை பெண்கள் எவ்வாறு உடை அணிகிறார்கள் என்பதில் இல்லை. ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதில் தான் பிரச்சனை உள்ளது.

ஓர் இளம் தாயான துஷாந்தி பொன்வீரா என்பவர் இந்த அறிவிப்பு “வருத்தம” அளிப்பதாக தெரிவித்தார்.

“அடுத்த தலைமுறையின் வழிகாட்டிகளாக நாம் நம்முடைய சிந்திக்கும் முறையை மாற்றாவிட்டால், எதிர்காலம் இருண்டதாகவே தோன்றுகிறது. இத்தகைய நிபந்தனைகள் எதுவுமே இல்லாத பள்ளியை தேர்ந்தெடுத்து விட்டால், இந்த நிபந்தனைகள் தொடரப் போவதில்லை என்று பொருளல்ல. இதுவே உண்மையான பிரச்சனை” என்று அவர் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37395210

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சட்டம் கொண்டுவந்தால் போச்சு

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
ஆள் பாதி ஆடை பாதி
ஆள் பாதி ஆடை பாதி
 
அப்பாடா கொஞ்ச நாள் சூடு பிடித்து பத்தரிகைகளுக்கும் தீனி போட்டு வந்த பள்ளி ஆடை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எதை அணிவது எதை அணியக்கூடாது என்பதை பாடசாலைகள் தீர்மானிக்க முடியாது. அப்படியான தீர்மானங்களை  பாடசாலை நிர்வாகம் எடுக்கவே முடியாது என்று கல்வி அமைச்சு அதிகாரபூர்வமாக விதித்த தடையுடன் இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கையின் பிரபல்யமான ஆண்களுக்கான ஒரு தனியார் கல்லூரியின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்தான் பிரச்சனைகளுக்கு முதல் அத்தியாயம் எழுதி வைத்தது. 
நாங்கள் உடுத்துவதை தீர்மானிக்க நீங்கள் யார் என்று பெரிய இடங்களில் கூப்பாடுகள்! .சேலைகளை உடுத்தலாம்  ஆனால் பாவாடைகள் கட்டக்கூடாது. கையில்லாத மேற்சட்டைகள் அணியக்கூடாது என்றெல்லாம் புதுவிதிகள். 
 
இது இலங்கைக்கு புதிய கதையல்ல.
 
பல அரச பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் தமக்கு திருப்தியில்லாத ஆடைகள் அணிந்து வந்ததை கண்டித்து அவர்களைத் திருப்பி அனுப்பியது பல தடவைகள் சம்பவத்திருக்கின்றது. 
கல்வி அமைச்சர் காரியவசம் சகல பாடசாலைகளுக்கும் சுற்றுநிருபம் அனுப்பியிருக்கின்றார். எந்தத் தாய்க்கும் ஒரு பாடசாலைக்கு வரும்போது எதை அணிய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். உலகம் நன்றாக மாறிப் போயிருக்கின்றது. நாமும் அதற்கு இசைவாக மாறவேண்டி உள்ளது என்று காரணம் காட்டி, பாடசாலை நிர்வாகம் பிள்ளைகளின் பெற்றோரின் ஆடை விடயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று தடையுத்தரவையும் பிறப்பித்துள்ளார். 
ஒரு வேலைக்குச் செல்லும் தாய் சீருடையோடு வந்து தன் பிள்ளையை பாடசாலையில் விட்டுச் செல்லலாம்.இன்னொரு தாய் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராக மேற்கத்தய ஆடையணிந்து வரலாம். 
இதைத்தான் அணிவது என்று எப்படி நாம் பெற்றோரை நிர்ப்பந்திக்க முடியும் என்று அமைச்சர் கேட்டுள்ளார். 
இந்த போஸ்டர் முதலில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிச் சுவரில்தான் ஒட்டப்பட்டது. பின்பு இதே சுவரொட்டி இன்னொரு பிரபல்ய ஆண்கள் கல்லூரியான புனித பீட்டர்ஸ் கல்லூரியில் ஒட்டப்ட்டது. மொத்தம் 16 போட்டோக்கள், பதினாறு வேறுபட்ட ஆடைகளுடனான பெண்களுடன் காணப்பட்டன. இதில் எதை அணியவேண்டும் என்பதற்கு போட்டோவுக்கு பக்கத்தில் சரி போடப்பட்டிருந்தது.
dress%20code%20act.jpg
இந்த நிகழ்வை கேலிபடுத்தி முகநூலிலும் எழுதியிருந்தார்கள்.
ஜீன்ஸ் வேண்டாம், இறுக்கமான லெக்கின்ங்ஸ் வேண்டாம். ஆனால் பெண்ணின் வயிற்றுப்பகுதியைக் காட்டும் சேலை ஓகே. நாம் வாழும் நாடு ஒரு வெப்பவலய நாடு என்பதை இவர்கள் அறிவார்களா? சரி பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும் அப்பாக்களுக்கு இந்த ஆடை விடயத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லையா என்று முகநூலில் யாரோ ஒருவர் எழுதியிருந்தார். 
பெண்கள் கல்லூரியொன்றில் கொழும்பில் கல்வி  கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் பீபீசிக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்கிறார்.
பல பெற்றோர்கள் குறிப்பாக இளம் தாய்மார்கள் பொருத்தமற்ற ஆடைகள் அணிந்து ஆண்கள் கல்லூரிகளுக்குள் நுழைகிறார்கள் என்று  குற்றஞ் சாட்டியுள்ளார்.
 
ஆள் பாதி ஆடை பாதி என்கிறார்கள். இது பெண்களுக்கே கூடுதலாகப் பொருந்துவது. உடுத்துபவர் அழகனாகவோ அழகியாகவோ இருந்தாலும், அவர் ஆடை அணிகலங்கள் அவருக்கு மேலும் அழகூட்டுவது இயல்பு. கிழிந்த கந்தலோடு வருபவரையும் அழகான ஆடை அணிந்து வருபவரையும் சற்றே நினைத்துப் பாருங்கள்.
 
அழகுக்கு அழகூட்டுபவைதான் ஆடை அணிகலன்கள்.
dress%20code.jpg
அரைகுறையான படிப்பும் ஆபத்து. அரைகுறையாக ஆடை அணிவதும் ஆபத்து. அரைகுறையாக ஒன்றை விளங்கி அதைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் நிச்சயம் பொல்லாப்பைக் கொண்டு வரும்.
 
பெற்றோர் இதைத்தான் அணிய வேண்டும் என்று இன்னொருவர் தடையுத்தரவு பிறப்பிப்பது கொஞ்சம் காட்டுமிராண்டித்தனமாகத்தான் தெரிகின்றது. ஆனால் ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தால் ஏனிந்த போஸ்டர்கள் முளைத்தன என்று தெரியவந்துவிடும். அந்த அளவுக்கு ஆராய்ச்சியை மேற்கொண்ட சிலரால்தான் இந்தப் போஸ்டர்கள் அச்சிடப்பட்டனவோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
 
நெருப்பு தணிக்கப்பட்டு விட்டாலும் எங்கோ இந்த விவகாரம் புகைந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது......
 

http://onlineuthayan.com/article/252

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.