Jump to content

நண்டு சமையல்


Recommended Posts

பதியப்பட்டது

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

1445581459-0154.jpg

நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் காரைக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

* நண்டு - 1 கிலோ
* புளிக்கரைசல் - 1 கப்
* பட்டை - 2
* பிரியாணி இலை -2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 2
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு:

* துருவிய தேங்காய் - 1 கப்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவற்றுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிய பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

* அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.

* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும், இப்போது சுவயான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.

http://tamil.webdunia.com/article/non-veg-recipes/good-tasty-karaikudi-crab-masala-115102300021_1.html

 

உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்

1443514986-3549.jpg

நண்டு சூப் மிகவும் சுவையான சூப், மேலும் இது உடலுக்கு நல்ல தெம்பு தருகிறது. ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும்.

தேவையான பொருட்கள்

நண்டு 200 கிராம்

மீன் 200 கிராம்

இறால் 200 கிராம்

கேரட் 4

வெங்காயம் 4

மிளகு 12

எண்ணெய் 1 குழிக் கரண்டி

உப்பு தேவையான அளவு.

செய்முறை

* முதலில் வெங்காயம், கேரட் இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும்.

*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும்.

* அதனுடன் நண்டு, மீன், இறால், கேரட்  ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

* தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

* காய்கறி மற்றும் நண்டு, மீன், இறால் வகைகள் நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும்.

* இப்பொழுது நண்டு, மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பரிமாறவும்.

* சூப்பில் ஒரு துண்டு நண்டு, மீன், இறால் வருமாறு பரிமாறலாம்.

http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/the-crab-soup-gives-strength-to-the-body-115092900050_1.html

  • 2 weeks later...
Posted

நண்டு ரசம்

1467962156-2551.jpg

 

தேவையான பொருட்கள்:
 
நண்டு - 10
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 1 
ரசப் பொடி - 3 தேக்கரண்டி
தக்காளி - 1 பெரியது
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு, எண்ணெய் - தாளிக்க


 செய்முறை:
 

நண்டை நன்கு சுத்தம் செய்து அம்மியில் வைத்து அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதனை வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.
 
பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
புளிக் கரைசலில், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, தட்டி வைத்திருக்கும் நண்டை ஓடுகள் இல்லாத அளவுக்கு அதனை வடிக்கட்டி கொள்ளவும்.
 
அடுப்பில் வானலி வைத்து அதில் எண்ணெய் விட்டு நன்றாகக் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். பிறகு காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி, மிளகாய்த் தூள், தனியாத் தூள்,  மிளகுத் தூள், ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் புளிக்கரைசலை சேர்க்கவும்.
 
தாளித்த நண்டு ரசம் பச்சை வாசனைப் போக நன்கு கொதித்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை தழைகளைப் போட்டு இறக்கவும்.
 
சுவையான நண்டு ரசம் தயார். இதனை சூடாக இருக்கும்போதே அப்படியே குடிக்கலாம். அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சளி பிடித்துருப்பவர்களுக்கு இதனை கொடுத்தால் சளி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

http://tamil.webdunia.com/article/non-veg-recipes/crab-rasam-116070800025_1.html

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27.9.2016 at 9:31 AM, Athavan CH said:

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

1445581459-0154.jpg

நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் காரைக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

ஒவ்வொரு உணவையும், என்ன கறியுடன் சாப்பிட வேண்டும் என்று... எழுதப்படாத விதி ஒன்று உள்ளது.

நண்டுக் கறிக்கு.... இட்லி, தோசை யுடன்  சாப்பிடுவதை  விட....
சோறுடன் சாப்பிடுவதே  சுவையானது. :)

  • 2 weeks later...
Posted

செட்டிநாடு நண்டு வறுவல்

செட்டிநாடு முறையில் சுவையான நண்டு வறுவல் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
 

தேவையான பொருட்கள் 
நண்டு – 5
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், தனியா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும்
நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.

http://www.tamilcook.com/2011/09/chettinad-crab-fry/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.