Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த சாய்பாபா, காரிலிருந்து இறங்கி வீல் சேரில் அமர்ந்து, முதல்வரின் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்."

எனக்கு இந்த செய்தியிலை சுவாரசியமாய் பட்டது இதுதான். யார் யாருக்கு எல்லாம் நோய்களை மாற்றியதாக கதைவிட்டார்கள். கடைசியிலை மூப்பு ஆனனானப்பட்டவரையும் ஆட்கொண்டு விட்டது. இவரும் ஒரு மனிதர்தான் என்ற வகையில் சந்திப்பில் தவறில்லை. ஏன்தான் அந்த மனிசி காலிலை விழுந்து கருணாநிதிக்கு சங்கடத்தை ஏற்படுத்திச்சோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தி.க தோன்றி நாத்திகம் பேச என்று ஆரம்பித்தார்களோ அன்று பிடித்தது தமிழ்நாட்டுக்கு சனி. கடவுள் பயம் ஒன்று எல்லோரிடமும் இருந்தது என்று ஈ வே.ரா பெரியார் ராமர் சிலைக்கு செருப்பால் அடித்து காட்டினாரோ அன்றிலிருந்து மக்களுக்கு பயம் போய்விட்டது. கடவுளாவது ஒன்றாவது எனநினைக்கஆரம்பித்தார்கள் அதன் பின்தான்தமிழ்நாட்டில் ஆரம்பித்தது கொலை கொள்ளை வழிப்பறி பதுக்கல் கலப்படம் பித்தலாட்டம் மற்றும் அனைத்தும். ஆன்மீகம் கண்டிப்பாக மக்களுக்கு தேவை

ஆகா என்ன தத்துவம் ..

ஈ.வே.ரா. எண்டால் யாரெண்டே தெரியாத வடநாடு அமைதிப்பூங்காகத்தானே இருக்குது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் ஆன்மிகம்... பாபாவின் கம்யூனிஸம்!

இதோ, பரபரவென நடந்து முடிந்துவிட்டது சத்ய சாய்பாபா & கருணாநிதி சந்திப்பு. பழுத்த பகுத்தறிவுவாதியான கருணாநிதியை அவரது வீட்டுக்கே போய் சாய்பாபா சந்திப்பார் என்று நாலு நாட்களுக்கு முன் யாராவது சொல்லியிருந்தால், அதை யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

போனார்... பார்த்தார்... அன்பைப் பொழிந்தார்... முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் குனிந்து கால் தொட்டு வணங்கியபோது கனிவோடு ஆசீர்வதித்தார். அதை முதல்வரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

p1gc1.jpg

சென்னையின் தாகம் தீர்க்கும் கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தை முழுமைப்படுத்து வதற்காக 200 கோடி ரூபாய் வரை சத்யசாயி அறக்கட்டளையிலிருந்து பாபா தந்ததற்குப் பாராட்டி நடந்த விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றார் கருணாநிதி. அடுத்து, சென்னையின் அழகைக் கெடுக்கும் கூவத்தையே, சென்னை நகரின் அழகுச் சின்னமாக மாற்றிட, தயங்காமல் பாபாவிடம் நிதி உதவி கேட்டார்.

‘‘1,000 கோடி ரூபாய் இருந்தால் மட்டும் கூவம் சுத்தமாகிவிடாது. இதற்காக மத்திய அரசு பல நூறு கோடி ரூபாயைத் தமிழகத்துக்குத் தந்திருக்கிறது. கடந்த ஆட்சியின்போது மட்டும் 188 கோடி ரூபாய் கூவத்துக்காகச் செலவிடபட்டதாக சட்டசபையிலேயே அறிவிக்கப் பட்டது. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று முக்கிய நீர்வழித் தடங்களை கழிவு நீராக்கி வைத்திருக்கின்றன தொழிற்சாலைகள். யாரிடம் பணம் வாங்கி கூவத்தைச் சுத்தப் படுத்தினாலும், மீண்டும் கழிவு நீரை அதிலேயே விட்டால் எல்லாப் பணமும் விரயம்தான். மறுசுழற்சி முறையில் நீரை தொழிற் சாலைகள் சுத்தப்படுத்து வதை கட்டாயப்படுத்து வதும், நீர்வழித் தடங்களை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்பு களை நீக்குவதும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்கும். அதுவரை பாபாவாலும் கூட கூவத்தைக் காப் பாற்ற முடியாது’’ என்கிறார் தமிழகப் பொதுப் பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.எஸ்.குப்புராஜ்.

இந்தியாவே நன்கு அறிந்த நாத்திகவாதியும் உலகம் முழுவதும் பிரபலமான ஆத்திகவாதியும் ஒரு மேடையில் பரஸ்பரம் பாராட்டிக்கொள்ளும்போது... இருதரப்பு நம்பிக்கை கொண்டவர்களுக்கு என்னவிதமான நெருடல்கள் எழுந்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி அந்த விழா மேடையிலேயே அதற்குப் பொருத்தமான ஒரு விளக்கம் தந்தார்

‘‘கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா என்பது பிரச்னை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நான் நடக்கிறேனா என்பதுதான் பிரச்னை. நான் அப்படி நடந்துகொண்டால் கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்!" என்பதுதான் அந்த விளக்கம்.

சாய்பாபா மட்டுமல்ல... சில நாட்களுக்கு முன் ஜக்கி வாசுதேவ் அமைப்பின் சார்பில் நடந்த மரக் கன்றுகள் நடும் விழாவுக்கு முதல்வர் கருணாநிதி முழுமனதாக ஆதரவு தந்தார். தன் வீட்டு வாசலிலேயே அவர்கள் மரக்கன்று நடுவதற்கு மகிழ்ச்சிகரமான ஒத்துழைப்பை அளித் தார். அடுத்தடுத்து ஜக்கியின் Ôஇஷா யோகாÕ அமைப்பு நடத்தப்போகும் பொதுச் சேவைத் திட்டங்களுக்கு அரசின் முழு ஒத்துழைப்பு உண்டென்று சொல்லியிருக்கிறாராம்.

கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்.

p2md5.jpg

"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?" என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.

"ஆன்மா என்பது மனம்... அந்த ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்தும் துறைதான் ஆன்மிகம். அதற்கு மேல் அதற்கு நான் அர்த்தம் பார்க்கவில்லை. மக்கள் சேவைக்கு ஆன்மிகம் என்று ஒரு பெயர் இருக்குமானால், அது எனக்கு ஒவ்வாத ஒன்றல்ல..!" என்றும் சொன்னாராம் முதல்வர்.

முதல்வருக்கு மிக நெருக்கமானவர்கள் இந்த ஆன்மிக விளக்கம் குறித்துச் சொல்வதோடு, ÔÔதுறவியான பாபா கிட்டத்தட்ட கம்யூனிஸத் தைதானே பின்பற்று கிறார்?ÕÕ என்கிறார் கள். "இருப்பவனிட மிருந்து எடுத்து இல்லாதவனுக்குக் கொடுப்பதுதான் கம்யூனிஸம். 'பணக் காரர்களே! நீங்கள் சினிமாவுக்கும் பொழுது போக்குக்கும் செலவழிக்கும் பணத்தை ஏழைகளுக்காகச் செலவிடுங்கள்' என்றுதான் நன்றி அறிவிப்பு விழா மேடையில் பாபா சொல்லியிருக்கிறார். அவரது அறக் கட்டளையே, உலகம் முழுவதும் உள்ள பெரும் செல்வந்தர்களைப் பக்தர்களாகப் பெற்று, அவர்கள் மூலம் வரும் நன்கொடைகளை வைத்துதான் ஏழைகளுக்குச் சேவை செய்து வருகிறது" என்று தி.மு.க. தரப்பிலிருந்தே உற்சாகமாக விளக்கம் தருகிறார்கள்.

p2axd3.jpg

சரி, மாறுபட்ட - முரண்பட்ட இந்த இருவரின் சந்திப்பு பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

முதல்வரின் பகுத்தறிவு வாரிசான கவிஞர் கனிமொழி சொல்லும்போது, 'தன்னிலிருந்து நேர் எதிரான மாற்றுக் கருத்து கொண்ட ஒருவருடன் அப்பா மேடை ஏற ஒப்புக்கிட்டதே எனக்கு முதல் ஆச்சர்யம். நானும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு இதுவரை போனதில்லை. வேடிக்கை பார்க்கலாமேனு போனேன். பாபா கோபாலபுரம் வந்தபோது நான் போகலை. அவங்க ரெண்டு பேரும் பேசினது பத்தி மத்தவங்க பரவசமா சொன்னப்ப, ‘ஐயோ, மிஸ் பண்ணிட்டோமே’னு நினைச்சேன்.

நிகழ்ச்சியில் எனக்கு வேறு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் வாசல்ல நின்னு எல்லாரையும் வரவேற்கிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பாபாவின் பக்கத்தில் சகஜமாக சாய்ந்து உட்காராமல், ஸீட் நுனியில் பவ்யமாக உட்காருகிறார். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியோ எல்லார் முன்னாலேயும் பாபாவின் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறார். இரண்டு மாநில கவர்னர்கள், மூன்று மாநில முதலமைச்சர்கள், பல மத்திய, மாநில அமைச்சர்கள்னு மொத்த இந்தியாவோட அதிகாரமட்டமும் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி அது. பெரும்பாலான வி.ஐ.பி&க்கள் பேசும்போதே பரவசத்தில் குரல் உடைஞ்சு பேசுறாங்க.

ஓர் ஆன்மிகவாதிக்கு இவ்ளோ செல்வாக்கு இருக்குதேன்னு வியந்தேன். அவ்ளோதான்! ‘உடனே கனிமொழிக்குக் கடவுள் நம்பிக்கை வந்தாச்சு’னு யாரும் நினைச்சுட வேண்டாம். அப்படி வந்தா, ஒளிக்காம ஊரைக் கூட்டி அதையும் சொல்வேன். கவலையேபடாதீங்க!’’ என்று வெளிப்படையான வார்த்தைகளில் பேசுகிறார் கனிமொழி.

பாபாவுக்கான பாராட்டு விழாவில் நன்றியுரை நிகழ்த்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர்.

‘‘நான் பாபாவை முதன்முறையாகப் பார்த்ததே அந்த விழாவில்தான். சௌகார் ஜானகி மூலமாகத்தான் பாபாவின் அற்பு தங்கள் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். என் மருமகன் உட்பட பல நெருங்கிய உறவினர்கள் பாபாவின் தீவிர பக்தர்கள். நேர்ல போய்ப் பார்த்ததில்லைன்னாலும் பாபாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சென்னை மக்களின் நன்மைக்கு அருள்கரம் நீட்டிய பாபாவுக்கு நன்றி தெரிவிக்கிற நிகழ்ச்சியில் நன்றியுரை சொல்ல முடியுமான்னு என்னிடம் வந்து கேட்டதும், ரொம்ப சந்தோஷத்தோட ஒப்புக்கிட்டேன். அவரை நெருக்கமா பார்த்த பிரமிப்பு இன்னும் தீரலை’’ என்று உருக்கமாகப் பேசினார் பாலசந்தர்.

அதிருத்ர யக்ஞம்!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்திருக்கும் பாபாவைத் தரிசிக்க 40 ஆயிரத் துக்கும் அதிகமான மக்கள் குவிந்தார்கள். சென்னை, திருவான்மியூரில் உள்ள இராமச் சந்திரா மெடிக்கல் சயின்ஸ் மைதானத்தில் உலக நன்மைக்காக ‘அதிருத்ர யக்ஞம்’ என்கிற யாகம் வளர்க்கிறார் சாய்பாபா.

‘‘காலையில் 4 மணிக்குத் தொடங்குகிற யக்ஞத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கிறோம். அதற்காக இரவு 12 மணிக்கே குழந்தைகளுடன் வந்து, கொட்டுகிற பனியில் காத்துக்கிடக்கிறார்கள் மக்கள். 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 11 நாள் நடைபெறுகிற இந்த யக்ஞத்தில் கலந்துகொள்கிற எல்லா பக்தர்களும் பசியாற வேண்டும் என்பதற்காக ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருக் கும் இரண்டு ரூபாய்க்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்கிறார்கள் விழா ஏற்பாடுளைக் கவனிக்கும் பாபாவின் ‘சேவாதள’ அமைப்பினர்!

அப்போதே முன்வந்தார்! ஆனால்...

ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்தில் குடிநீர், குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தது. அதனால் அந்தப் பகுதி மக்கள் பல்வேறு வகை யிலும் பாதிக்கப்பட்டனர். அதைக் கேள்விப்பட்ட சாய்பாபா, உடனே அந்த மாநில முதல்வருடன் பேசி அந்த மாவட்ட மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்.

சுமார் 60 கி.மீ. தூர பரப்பளவில் தற்போது பாபாவின் குடிநீர் சப்ளை நடக்கிறது. அதை முன்னுதாரணம் காட்டித்தான், சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஏதேனும் பங்களிப்பு செய்ய விரும்புவதாக முன்பு முதல்வ ராக இருந்த ஜெயலலிதாவிடம் சாய்பாபா தரப்பில் சொல்லப்பட்டதாம். நோ ரியாக்ஷன்! அதோடு அந்த எண்ணத்தை அப்போதைக்குக் கைவிட்டார் பாபா. பிறகு, ஆட்சி மாறியவுடன் உதவி செய்ய மறுபடி முன்வந்தாராம்!

பெருமிதத்தில் துரைராஜ்!

மாநகர போலீஸ் இணை கமிஷனர் துரைராஜ் மீது பாபாவுக்குத் தனி அன்பு!

சாய்பாபா முன்பெல்லாம் வருடா வருடம் கொடைக்கானலில் ஒய்வெடுக்க வருவார். அப்போது திண்டுக்கல் எஸ்.பி&யாக இருந் தவர் துரைராஜ். அந்த வகையில், பாபா வுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்து கொடுத்திருக்கிறார். அப் போதிலிருந்தே துரைராஜை சாய்பாபாவுக்கு தெரியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஜனவரி 19&ம் தேதியன்று சென்னை விசிட்டுக்காக விமானத்தில் வந்தார் சாய்பாபா. அப்போது துரைராஜ், விமான நிலையப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சாய்பாபா விமானத்திலிருந்து இறங்கியதும், அவருக்கு மிக அருகில் போய் துரைராஜ் நிற்க... அருகில் அழைத்து, அவர் கையைப் பற்றியபடி நடந்திருக்கிறார் சாய்பாபா. சிலிர்ப்பும் சந்தோஷமும் பெருமிதமுமாக இருக்கிறார் துரைராஜ்.

சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சென்னை சாலிகிராம சிறுவன் அரவிந்த்தின் கொலையைத் துப்பறிந்து, குற்றவாளிகளை உடனடியாக மடக்கியவர் இவர்தான்!

vitatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.