Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு கட்சி தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பாக உருவாக்கப்பட்டது அல்ல - கி. துரைராஜசிங்கம்

Featured Replies

இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பாக உருவாக்கப்பட்டது அல்ல. அது மனிதர்களின் மனித உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 173வது ஜெயந்தி தின நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கே.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

காந்தியின் காலத்தில் வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. வெள்ளையர்களை நாகரிகமான முறையில் வெளியேற்றவேண்டும் என்ற கருத்துகளை காந்தி கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அந்த காலத்தில் தேசிய காங்கிரசில் தீவிர போக்குடையவர்களும் இருந்தனர். சுபாஸ்சந்திரபோஸ், நேதாஜி போன்றவர்கள் வெள்ளை காரர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டுமானால் அவர்களுக்கு எதிரியாக இருந்த பிரான்ஸ் உடன் நட்புக்கொள்ள வேண்டும் என்று கோரினார்கள்.

ஆங்கிலேயரினால் நாங்கள் அடிமை படுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்களினால் தரப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை அன்றாட விடயங்களில் கொண்டுள்ளோம். ஆனால் அவர்கள் செலுத்தும் அதிகாரங்களை மட்டும் இங்கிருந்து அகற்ற வேண்டும்.

அந்த அகற்றுதலானது அவர்களை புரியவைத்து அகற்றவேண்டும் என்பதே காந்தி கண்ட விடயம். இதுவே ஒரு சமூதாயத்தினை கையாள்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய விடயம் ஆகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

“சட்டத்தை வெறுப்பது என்பது சட்டத்தினை திருத்துவதாக இருக்க வேண்டும்” என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார். சட்டத்தினை திருத்துவது என்பது அந்த சட்டத்தினை ஆக்கியவர்களுக்கு அது பிழை என்பதற்கான நியாயத்தை விளக்கி அதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தற்போது அரசியலாக இருந்தாலும், தொழிற்சங்கமாக இருந்தாலும் இனம்,வர்க்கம், கொள்கை சார்ந்ததாகவே இருந்துவருகின்றது.

நாங்கள் இன்று 21ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். எங்களது நடைமுறைகள் தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன, மொழி என ஏதாவது ஒரு அடிப்படையில் எமது உரிமையினை நிலை நிறுத்திக்கொள்வது என்பது அறிவுபூர்வமான ஒரு செயற்பாடாக அமைந்திட முடியாது என்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அவ்வாறு என்றால் அது மனித உரிமை சார்ந்ததாக இருக்கவேண்டும். அதுதான் இன்று வழங்கப்படும் வரைவிலக்கணமாகும். அதனையே நாகரிகம் சார்ந்த உலகம் செய்கின்றது. அது இல்லாத காரணத்தினாலேயே போர், போராட்ட சம்பவங்கள் நிகழ்கின்றது என கூறியுள்ளார்.

அடிப்படை மனித உரிமை எனும் போது அந்த உரிமைகள் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும் அந்த விடயம் நோக்கி எங்கள் செயற்பாடுகள் செல்ல வேண்டும்.

இலங்கை தமிழரசு கட்சி, இலங்கை தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பாக உருவாக்கப்பட்டது அல்ல. மனித அடிப்படை உரிமைகள் மறுக்கப்படதை தொடர்ந்தே உருவானது என கூறினார்.

பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதனால் வடகிழக்கில் அரசியல் செய்யும் தமிழரசு கட்சி எந்தவித பாதிப்பினையும் எதிர்கொள்ளமாட்டாது. வாக்கு என்ற அடிப்படையில் தந்தை செல்வா அதனை நோக்கவில்லை என தெரிவித்துள்ளார்

மனிதனின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகின்றது. அதற்கு எதிராக செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டார். ஆனால் அதனை நாங்கள் வேறுவிதமாக பயன்படுத்தியுள்ளோம்.அதற்கு காரணமும் நியாயமும் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/events/01/119633?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.