Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையில் அஞ்சலி

Featured Replies

வடமாகாண சபையில் அஞ்சலி
 
 

article_1475737276-IMG_1643.JPG

-எம்.றொசாந்த்

காலமான, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெகநாதனுக்கு வடமாகாண சபையில் இன்று  வியாழக்கிழமை (06)  அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1 ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்திரு்தார்.

அவருடைய இறுதிக் கிரியைகள்  இன்று வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண சபையின் மாதாந்த அமர்வும் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண சபையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக கறுப்புக்கொடியும் கட்டப்பட்டது.

அவருக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பகமாகியது.

article_1475737291-IMG_1649.JPG

article_1475737300-IMG_1651.JPG

article_1475737310-IMG_1644.JPG

http://www.tamilmirror.lk/183351/வடம-க-ண-சப-ய-ல-அஞ-சல-

  • தொடங்கியவர்
வடக்கு மாகாணசபை நேர்மையான தலைவரை இழந்து விட்டது - முதலமைச்சர்
வடக்கு மாகாணசபை நேர்மையான தலைவரை இழந்து விட்டது - முதலமைச்சர்
வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என இன்று புதன்கிழமை நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
தொடர்ந்து கூறுகையில்,
அன்ரனி ஜெகநாதன் அவர்களின் மரணச்செய்தி அறிவதற்கு முதல் நாள் அவருடன் வெளிநாட்டு பயனங்கள் பற்றியும், முல்லைத்தீவிற்கு இரட்டைவழி ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் உரையாடினேன். 
 
எனது வதிவிட அலுவலகத்தில் கூட இருந்து காரியாலய அலுவல்களை ஆற்றிவிட்டு சுகதேகியாக சென்ற இவரின் மரணச் செய்தி அதிர்சியாக இருந்தது. இச் செய்தி பொய்யாகக் கூடாதோ என்று எனது மனம் ஏங்கியது.
 
முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி ஜெகநாதன் ஆண்டான்டு காலமாக தமிழரசுக் கட்சியின் தூன்களாக செயற்பட்டு வந்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் செயற்பட்டு வந்தார். இவரின் தந்தை மரியப்பிள்ளை முல்லைத்தீவு பிரதேச சபைத் தவிசாளராக பணியாற்றினார். அவருடைய தந்தை இறந்ததும் சிறிய தந்தை பொறுப்பேற்று நாடாத்தினார்.
 
பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அன்ரனி ஜெகநாதன் நல்ல ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டார். எனக்கு அவரிடம் பிடித்த விடையம் அவரின் வெளிப்படையான தன்மை. தனது கருத்துக்களை ஓங்கி உரைத்து சரி பிழைகளை தன்னோடு இருப்பவர்களுக்கும் உணர்த்துவார்.
 
கடைசியாக அவரிடம் பிரித்தானிய நாட்டிற்கான பயன ஒழுங்குகள் பற்றியும் அங்கு நடைபெறவுள்ள கூட்டங்கள் பற்றியும் உரையாற்றிவிட்டு தனது கடவுச்சீட்டையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். 
 
வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது. அவருடைய பிரிவை தாங்காது இன்னலுறும் அவரின் குடும்பத்துடன் எமது கவலைகளை பகிந்து கொள்கிறோம். எனக் குறிப்பிட்டார்.

http://onlineuthayan.com/news/18588

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.